Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார் விபூசிகா! - வழக்குகளும் வாபஸ்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vipoosika-release-260315-200-seithy.JPG

மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் விபூசிகாவை அவரது தாயார் ஜெயக்குமாரியிடம் ஒப்படைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், இன்று உத்தரவிட்டார். அத்துடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விபூஷிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த பயங்கரவாத குற்ற வழக்கை பயங்கரவாத பிரிவினர் வாபஸ் பெற்றுகொண்டனர்.

   

அதேவேளை, என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார். மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோதே விபூசிகா இவ்வாறு கூறினார்.

 

அவர் தொடர்ந்து கூறுகையில், எனது அம்மாவை பிணையில் எடுப்பதற்காக பாடுபட்ட சட்டத்தரணிகள், என்னை சரியான முறையில் வழிநடத்திய சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், மகாதேவா சைவச்சிறுவர் இல்லம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்றார்.

 

விபூசிகாவுக்கு தற்போது முதலாம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருவதால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையில் அவரை சிறுவர் இல்லத்தில் தங்க வைத்து அதன் பின்னர் தாயாருடன் அனுப்புவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றதாக, கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி எஸ்.விஜயராணி தெரிவித்தார்.

 

vipoosika-release-260315-seithy%20(1).JP

 

 

 

 

vipoosika-release-260315-seithy%20(3).JP
 

 

 

சிறுமியின் முகத்தில்தான் எவ்வளவு சந்தோசம். 
 
நல்ல விடயம்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிறுமியும் தாயும்.. மேற்கு நாட்டு தூதரங்களூடாக ஏன் அரசியல் தஞ்சம் கோரக்கூடாது. பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து ஏன் இந்தச் சின்னப்பிள்ளை தன் எதிர்காலத்தை பாழடிக்கனும். 

 

உண்மையான அரசியல் தஞ்ச தகுதி வாய்ந்த இவர்கள் எல்லாம் ஊரில் இருந்து கஸ்டப்படுறாங்க. போலிங்க... இங்க அசைலம் அடிச்சு.. பெனிபிட் எடுத்து.. ஊர் போய் சோ காட்டுதுங்க.  :icon_idea:

சந்தோசம் .

அவர்களுக்காக பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி்

சந்தோசம் .

எனக்கு இதைப்பார்த்ததும் மேலும் சந்தோஷம் 

மிகவும் மகிழ்வான செய்தி! இச்சிறுமியை தாயுடன் இணைத்து வைக்க உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இச்சிறுமியை தாயுடன் இணைத்து வைக்க உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

 

 சிறுமியின் முகத்தில்தான் எவ்வளவு சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்பவா போறீங்கள்
புது அரசாங்கம் தமிழர் மீது காட்டும் அன்புக்கு அளவேயில்லை.
தமிழருக்கு ஒரு தீர்வு இந்த ராசாங்கத்தாலை மட்டுமே கிடைக்கும்.
மைத்திரியின் நூறு நாள் திட்டம் நன்றாக வேலை செய்கின்றது.
தாயுடன் சேர்ந்து வாழ மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்த குழந்தைக்கு என் ஆசீர்வாதங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான.... செய்தி. :)

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி..!

தாயாரை சிறிதுகாலம் சிறையில் போட்டதும் அவரது முன்னைய பயங்கரவாதச் செயல் மறைந்துவிட்டது. அதனால் வழக்கை மீளப்பெற்றுக்கொண்டார்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயும் சேயும் சேர்ந்தது சந்தோஷம்... அவர்களின் விடுதலைக்காகப் பணீயாற்றியவர்களுக்கு நன்றிகள்...!

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிறுமியும் தாயும்.. மேற்கு நாட்டு தூதரங்களூடாக ஏன் அரசியல் தஞ்சம் கோரக்கூடாது. பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து ஏன் இந்தச் சின்னப்பிள்ளை தன் எதிர்காலத்தை பாழடிக்கனும்.

உண்மையான அரசியல் தஞ்ச தகுதி வாய்ந்த இவர்கள் எல்லாம் ஊரில் இருந்து கஸ்டப்படுறாங்க. போலிங்க... இங்க அசைலம் அடிச்சு.. பெனிபிட் எடுத்து.. ஊர் போய் சோ காட்டுதுங்க. :icon_idea:

இல்லை, நெடுக்கர்.

இதன் மறுபக்கம் மேல் நாடுகளின் அழுத்தம் இருக்கிறது.

நாட்டின் பிரச்சனையை தீர்த்து விட்டால், அகதி வருகையை நிறுத்த முடியும் என நினைக்கிறார்கள்.

இரு பெரிய கட்சிகள் அமைத்த தேசிய அரசாங்கம், இலங்கை வரலாறில் இல்லாதது.

சந்திரிகா, ரனில் உடன் அவர்களுடன் இணங்கிப் போகக் கூடிய மைத்திரி. இவர்கள் தீர்வு தராவிடின், நாடு பிரியும் நிலை ஏதுவாகும்.

மகிந்தா மீண்டும் அரசியலுக்கு வர முயன்றால், குடும்ப உறுப்பினர்கள் கம்பி எண்ணுவார்கள்.

:D

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்வான செய்தி!

இச்சிறுமியை தாயுடன் இணைத்து வைக்க உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்!!!

 

 

படி தாயே
வாழ்க வளமுடன்.....
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, நெடுக்கர்.

இதன் மறுபக்கம் மேல் நாடுகளின் அழுத்தம் இருக்கிறது.

நாட்டின் பிரச்சனையை தீர்த்து விட்டால், அகதி வருகையை நிறுத்த முடியும் என நினைக்கிறார்கள்.

இரு பெரிய கட்சிகள் அமைத்த தேசிய அரசாங்கம், இலங்கை வரலாறில் இல்லாதது.

சந்திரிகா, ரனில் உடன் அவர்களுடன் இணங்கிப் போகக் கூடிய மைத்திரி. இவர்கள் தீர்வு தராவிடின், நாடு பிரியும் நிலை ஏதுவாகும்.

மகிந்தா மீண்டும் அரசியலுக்கு வர முயன்றால், குடும்ப உறுப்பினர்கள் கம்பி எண்ணுவார்கள்.

:D

 

அண்மையில்.. ஒரு குடும்பத்தை மத்திய இலண்டனில் வைத்தியசாலையில் சந்திக்கக் கிடைத்தது. அவர் இராணுவம் பிடித்துத் தாக்கியதில்.. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில்... இங்கு வந்துள்ளார். அவரால் அதிக நேரம் நிற்க முடியாது. அந்தளவுக்கு பலத்த உள்த்தாக்கங்களுடன் கூடிய சித்திரவதையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். வெளியில் சாதாரண ஆள் போல் தெரிவார். பிரித்தானியா அவர் இங்கு வருவதற்கு உதவி செய்துள்ளது. குடும்பமும் இங்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிரித்தானிய அரசே குடியிருப்பையும் வழங்கியுள்ளது. 

 

இந்தச் சிறுமி மீதும் சர்வதேச கருசணை உள்ளது. அதனை அவரின் எதிர்காலம் அமைதியாக இருக்க பாவிப்பது நல்லது. அங்கிருந்து பல்வேறு அழுத்தங்களோடும் அச்சுறுதல்களோடும் அச்சிறுமியால் எப்படி வழமையான வாழ்வை வாழ முடியும்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சொல்வதோடு நானும் ஒத்துப் போகிறேன்.

ஆனால் யூகே சட்டத்தில் - யூகே பூகோள எல்லைக்கு வெளியே அசைலம் கேட்க வசதியில்லை. அடாத்தாக தூதரகத்துக்குள் புகுந்தால் முடியும்.

ஆப்கானில் ஈராக்கில் மொழிபெயர்பாளராய் பணி புரிந்தோர்கு ஒரு ஸ்பெசல் ஸ்கீம் கொடுத்தார்கள்.

http://www.bbc.co.uk/news/uk-22620207

நீங்கள் குறிப்பிட்ட கேஸ் எந்தவகை சட்டத்தில் சாத்தியம் எண்டு யோசிக்கிறேன். பிடி படுகுதில்லை.

சில வேளை யூகேயுக்காக சில உளவு வேலைகளில் ஈடுபட்டவராய் இருக்கக் கூடும். ஊகம்தான் அடிக்க வரவேண்டாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மருத்துவச் சான்றுகளோடு தான் தொடர்ந்து தேடப்படுவது குறித்த ஆதாரங்களோடு உயர் ஸ்தானிகராலயத்தை நாடியதாகவே குறிப்பிட்டுள்ளார். 

 

அப்படி அரசியல் புகலிடம்.. கொடுக்கப்பட்டவர்கள் உண்டு. அது உண்மையான அரசியல் புகலிடக்காரர்களுக்கு மட்டுமே வெற்றி அளிக்கும். போலிகள் நாட்டுக்கு வெளிய வந்து ஐநா விதிகளுக்குள் சுழிச்சு சுத்தி அடிச்சால் உண்டு.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நாட்டுக்கு வெளியே வைத்து அசைலம் கொடுக்க சான்சே இல்லை. போலியோ, காலியோ சட்டம் ஒண்டுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்காக பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி் .........

  • கருத்துக்கள உறவுகள்

What is the difference between diplomatic, territorial and political asylums?

 

Diplomatic asylum differs from territorial asylum in the place where is it requested. Diplomatic asylum is requested in diplomatic missions, while territorial asylum can be requested within the borders of the state that is asked to grant asylum.  A few terms, such as political asylum, are used interchangeably for both diplomatic and territorial asylums.

 

http://www.diplomacy.edu/blog/frequently-asked-questions-about-diplomatic-asylum

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மருத்துவச் சான்றுகளோடு தான் தொடர்ந்து தேடப்படுவது குறித்த ஆதாரங்களோடு உயர் ஸ்தானிகராலயத்தை நாடியதாகவே குறிப்பிட்டுள்ளார்.

அப்படி அரசியல் புகலிடம்.. கொடுக்கப்பட்டவர்கள் உண்டு. அது உண்மையான அரசியல் புகலிடக்காரர்களுக்கு மட்டுமே வெற்றி அளிக்கும். போலிகள் நாட்டுக்கு வெளிய வந்து ஐநா விதிகளுக்குள் சுழிச்சு சுத்தி அடிச்சால் உண்டு. :icon_idea::)

இலங்கையில் உள்ள ஒருவருக்கு அகதி அந்தஸ்து கொடுத்தால் அவர் எந்த கடவுச்சீட்டு உடன் கட்டுநாயக்கா ஊடாக வெளியேறுவது.

நெடுக்கர் நான் நினைக்கிறேன் நீங்கள் குறிப்பிடும் நபர் இலங்கையிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டில் UNHCR ஊடாக அகதி அந்தஸ்திற்கு விண்ணப்பித்திருக்கிறார். அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன் UNHCR தம்முடன் ஒப்பந்தமுள்ள நாடுகள் சிலவற்றிற்கு இவரது விபரங்களை அனுப்பி இவரை உங்கள் நாட்டிற்கு ஏற்றுக்கொள்கிறீர்களா என கேட்டிருக்கின்றது. பிரித்தானியாவும் இவரை ஏற்றுள்ளது.

இதே மாதிரியான ஒழுங்கிலேயே வேலுப்பிள்ளை மனோகரனும் டென்மார்க் வந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள ஒருவருக்கு அகதி அந்தஸ்து கொடுத்தால் அவர் எந்த கடவுச்சீட்டு உடன் கட்டுநாயக்கா ஊடாக வெளியேறுவது.

நெடுக்கர் நான் நினைக்கிறேன் நீங்கள் குறிப்பிடும் நபர் இலங்கையிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டில் UNHCR ஊடாக அகதி அந்தஸ்திற்கு விண்ணப்பித்திருக்கிறார். அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன் UNHCR தம்முடன் ஒப்பந்தமுள்ள நாடுகள் சிலவற்றிற்கு இவரது விபரங்களை அனுப்பி இவரை உங்கள் நாட்டிற்கு ஏற்றுக்கொள்கிறீர்களா என கேட்டிருக்கின்றது. பிரித்தானியாவும் இவரை ஏற்றுள்ளது.

இதே மாதிரியான ஒழுங்கிலேயே வேலுப்பிள்ளை மனோகரனும் டென்மார்க் வந்தார்.

 

இங்கிருந்து திருப்பி அனுப்பட்ட சிலரையே.. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பிரிட்டன் தானே அழைத்த நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. விசேட ஏற்பாடுகளோடு அவர்கள் பிரிட்டனுக்கு திரும்பி அழைக்க வேண்டிய நிர்ப்பந்தங்களும்.. நீதிமன்றத் தீர்ப்புகளால் உருவாகி இருந்த நிகழ்வுகள் உள்ளனவே.

 

ஒருவருக்கு அதி உச்ச அச்சுறுத்தல்.. மற்றும்.. தொடர் அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில்.. அது நிரூபிக்கும் பட்சத்தில்.. பிரிட்டன் அகதிஅந்தஸ்து கொடுத்து அழைத்து வந்த நிகழ்வுகள் உள்ளன. சில மனித உரிமை அமைப்புக்களின் சிபார்சும் இதற்கு உதவி இருக்கலாம். 

 

பொது நடைமுறைகளில் இல்லாத விசேட நடைமுறைகளுக்குள் இவை வரும். இதற்கு தகுதி அடைபவர்கள் வெகு சிலராகவே இருப்பர்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் நாளைக்கு ஒருவருடன் கதைத்துவிட்டு எழுதுகிறேன். நீதிமன்ற தீர்ப்பு சற்று வித்தியாசமானது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். நீங்களும்.. உறுதிப்படுத்திச் சொல்வது.. விபூசிகா போன்ற அப்பாவிகள் தொடர் அச்சுறுத்தல் மத்தியில் அந்த நாட்டில் இருப்பதை விட பாதுகாப்பாக வெளியேற உதவினால்.. நன்றாக இருக்கும்.  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.