Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவரால் கொலை செய்யப்பட்ட கனடா வாழ் ஈழத் தமிழ்ப் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

563029_412753228814439_769276122_n.jpg

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ? அனுஜா 2011ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சிவலோக நாதன் என்பவரை மணம் முடித்துள்ளார். அப்போது அனுஜாவுக்கு 21 வயதும் சிவலோக நாதனுக்கு 27 வயதுமாக இருந்தது. பெண் வீட்டார் சுமார் 50,000 ஆயிரம் கனேடிய டாலர்களை செலவு செய்து இத் திருமணத்தை நடத்தி வைத்தனர். இதற்கு முன்னதாக அனுஜாவுக்கு இந்த சிவலோக நாதன் யார் என்றே தெரியாது.

திருமணமாகி முதல் மாதத்திலேயே வீட்டி வாடகை கட்டவில்லை என்ற காரணத்தால், வீட்டை இழந்த சிவலோகநாதன், அனுஜாவின் பெற்றோர் வீட்டின் கீள் பகுதியில் குடிபுகுந்துள்ளார்கள். அடிக்கடி கோபப்படும் சிவலோகநாதன், அனுஜாவை பார்த்துப் பாராமல் அடிப்பது வழக்கம். கன்னத்தில், தலையில் , மற்றும் முதுகுப் பகுதியில், இவர் அனுஜாவைத் தாக்கியுள்ளார். ஒரு சமயம் பாக்சிங் அடிப்பது போல அனுஜாவின் முகத்தில் கைகளால் குத்தி காயப்படுத்தியுள்ளார். நிலத்தில் வீழ்ந்த அனுஜாவின் தலைமுடியை பிடித்து அவரை தூக்கி மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் பொலிசார் இப் பிரச்சனையில் தலையிடவேண்டி வந்தது. சுமார் 3 தடவை பொலிசார் சிவலோகநாதனைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

ஆனால் அவர் திருந்தியபாடாக இல்லை. ஒவ்வொரு முறையும் பொலிசார் சிறையில் அடைக்கும்போது, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று அயலவர்கள் அட்வைஸ் பண்ணுவார்களாம். இதனால் மனமிரங்கிய அனுஜா, தானே சென்று அவர்மேல் உள்ள குற்றங்களை எல்லாம், நிராகரித்து அவரை பலதடவை சிறையில் இருந்து விடுவித்துள்ளார். இருப்பினும் அவர் இறுதியாகக் கைதுசெய்யப்பட்டவேளை, அவர் பிணையில் செல்ல நீதிபதி அனுமதிக்கவில்லை. இதேவேளை அவர் மீது தாம் எந்தக் குற்றத்தையும் சுமத்த விரும்பவில்லை என்று அனுஜா தெரிவித்துள்ளார்

இருப்பினும் சில குற்றங்களுக்கு, பாதிக்கப்பட்ட நபர் மறுத்தால் கூட குற்றவாளியை நீதிமன்றில் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க முடியும். இவ்வாறு ஒரு நடவடிக்கையை எடுக்கவே கனேடியப் பொலிசார் விரும்பியுள்ளார்கள். இதனை அனுஜா ஆட்சேபித்தும் உள்ளார். இந் நிலையில் சில தினங்களுக்கு முன்னர், பெற்றோர் வீட்டின் கீள்ப் பகுதியில், கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அவர் சடலமாக காணப்பட்டுள்ளார். பிணையில் வெளியே வந்த, கணவர் சிவலோக நாதன் அனுஜாவை கொலைசெய்துள்ளார். கழுத்தை வெட்ட பாவிக்கப்பட்ட கத்தி முதல் அனைத்து தடையங்களையும் கண்டுபிடித்துள்ளார்கள் பொலிசார். சிவலோகநாதனே இக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 28 வயதாகும் இச் சந்தேக நபர் தற்போது கனேடியப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். -

எல்லாத் திருமணங்களும் இவ்வாறு முடிவதில்லை ! ஆனால் திருமணம் என்று வரும்போது தமக்கு பிடித்த, அல்லது நன்கு தெரிந்த ஒருவரை எமது பிள்ளைகளுக்கு மணம் முடித்து வைப்பது நல்லதல்லவா ? யார் என்றே தெரியாத நபர் ஒருவரை திடீரென்று எவ்வாறு மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறீர்கள் ? முன் பின் தெரியாத நபர் ஒருவரை நம்பி 21 வருடம் அன்பாக வளர்த்த பெண் பிள்ளையை எவ்வாறு அனுப்பிவைக்கிறீர்கள். அனுஜாவுக்கு நடந்த கொடுமை இனியும் ஈழத் தமிழர் மத்தியில் தொடரக்கூடாது. தமிழ் பெற்றோர்கள் இதனை ஒரு முன்னுதாரணமாக எடுப்பது நல்லதல்லவா ?

நன்றி – வல்லவன்

http://www.canadamirror.com/canada/6624.html#sthash.pH0KgnVm.jBjg1xdK.dpbs

இப்படியான திருமணங்களால் பெண்கள் பாதிக்கப்படுவதை கண் முன்னாலேயே பார்க்கிறோம். எம் சொந்தங்களை கேட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பர். எப்பவும் துன்புறுத்தலுக்கு மத்தியில் சேர்ந்து வாழவே வற்புறுத்துவார். புலம் பெயர் தேசங்களில், சில நேரங்களில் கணவனின் கொடுமையால் அல்லது நடத்தையால் பெண் தன்னையும் தான் பெற்ற செல்வங்களையும் அழிக்க நேரிடுகிறது. ஆனால் வெளி நாட்டு நீதித்துறை, மன அழுத்தம் என்று தீர்ப்பு சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியர்,

இலட்சத்தில், ஒன்றுக்கு, இப்படி மண்டைப் பிழை கோளாறு இருக்கும்.

எத்தனையோ எச்சரிக்கை சமிக்கைகள் கிடைத்தும், விலகிக் கொள்ளாமல், அதுவும் கனடா நாட்டில், தொடர்ந்து அந்த ஆளுடன் இருக்க வேண்டும் என தீர்மானமாக இருந்தது பாரிய தவறு.

அவர், முறைப்பாடுகளை withdrew பண்ண, அழுத்தம் கொடுத்த, அயலவர்கள், அவரது உறவினர்கள் கொலை குற்றச் சாட்டில் தண்டிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் சொல்லுவார்கள்..

"என்ன செய்வது.. அவ போக வேணும் எண்டு விதி இருந்திருக்கு.."

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  திருமணம் என்பதில் பிரச்சினையில்லை

 

நான் எனது உறவுகளிடம் சொல்வது

ஆணோ பெண்ணோ

தன் மானத்தைவிட்டு எவரும் வாழவேண்டியதில்லை...

ஒருவர் அடிக்கின்றார் என்றால் ஒருமுறை மட்டுமே பொறுத்துக்கொள்ளலாம்

அது ஆத்திரத்தில்

அவசரத்தில்

அறிவுகெட்டு எடுக்கப்பட்ட முடிவு என்பதை அவருக்கு உணர்த்தி

அதுவே கடைசிமுறை என்பதைப்புரிய வைக்கணும்

இந்தப்புரியவைத்தல் முடியாதபோது

அல்லது தோல்வி காணும்போது 

ஒன்றாக வாழத்தேவையில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டவங்கள அப்பாவி என்று நம்பும் பெண்கள் தான் இப்படி அநியாயமாக தம் வாழ்வை சீரழித்துக் கொள்கின்றனர்.

 

கலியாணம் என்ற ஒரு வெட்டி..சடங்கு காவு கொள்ளும் உயிர்கள் தான் எத்தனை எத்தனை..?!  :(  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமாகி முதல் மாதத்திலேயே.... வீட்டு வாடகை கட்ட முடியாத, சிவலோக நாதனுக்கு... எதுக்கு கலியாணம்.
இந்தக் கலியாணத்தை பேசி வைத்த.... புரோக்கரை.... கட்டி வைத்து, உதைக்க வேணும்.
கள்ள புரோக்கர், சாதகத்தை கொண்டு வந்தால்.... மாப்பிளையைப் பற்றி, தீர விசாரிக்காமல்...

தமது மகளின் வாழ்வை பாழாக்கிய... பெற்றோரும் குற்றவாளிகள்.
ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த பெண், தாய், தந்தையர், மகனின் ஸபொன்சர் மூலம் வர, வயது அதிகமானதால், அவ்வாறே வரமுடியாமல், ஏஜன்சி மூலம் மலேசியாவில் 18 மாதம் இருந்து, கனடா வந்து சேர்ந்தார்.

கல்யாணம் கட்டி, இரு பயல்கள். அவருக்கு தண்ணிப் பழக்கம். தனது உழைப்பு மட்டுமல்லாது, அந்தப் பெண் உழைப்பையும், அடித்து, பயமுறித்தி, பறித்து குடிப்பார்.

அவருக்கு, ஊரிலிருக்கும் நினைப்பு.

பொறுத்துப் பார்த்தார். கடைசியில் பொலீசை அழைத்தார். மிஞ்சியவர் கெஞ்சினார். அது வரை கண்டு கொள்ளாத அவரது உறவுகள், 'பாசத்துடன்', வந்து, என்ன இருந்தாலும் 'புரிசன்' தானே என்று பாடத் தொடங்க, அந்தப் பெண் மிக உறுதியாக நின்றதால், அவர் deport பண்ணப்பட்டார்.

அங்கு, வெவசாயம் செய்கிறாராம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டறிந்து விரும்பி தமது இஷ்டப்படி கல்யாணம் முடிக்கும் போது நல்லதோ கெட்டதோ தனியாக அவர்களே அதற்க்கு பொறுப்பாகிறார்கள். கல்யாணம் பேசி செய்யும்போது இந்த சுமை பெற்றோர்கள் உறவினர்கள் தரகர்கள் என்று ஒரு பெரிய கூட்டத்தையே சாருகிறது. அது தவிர நன்றாக இருந்து நிர்முலமாகி போன கல்யாணங்கள் இரு பக்கங்களிலும் உண்டு. கனடாவில் அனுஜாவின் விவகாரமும் இதுபோன்ற ஒன்றே. அனுஜா தனது கணவன் சொல்லிலும் செயலிலும் ஒரு நோயாளிக்கான அறிகுறிகளுடன் இருப்பதை அறிந்து அதற்க்கான உதவிகளை நாடாமல் தவிர்த்துக்கொண்டது ஏன் என்று புரியவில்லை. சிவலோகநாதன் முன்பிருந்தே ஒரு மன நோயாளியாக இருந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. நீதிமன்றமோ போலீசாரோ வேறு அரச உதவி நிலையங்களோ அதை கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. அனுஜாவின் குடும்பதினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்தனங்களுக்கு இரங்கல்கள் தேவையா...??? :(  :(  :(

இது பழைய செய்தி இப்ப ஏன் மீண்டும் வந்திருக்கு என்று தெரியவில்லை .

இந்த சம்பவம் நடந்தது 2012 ம் ஆண்டு .......இப்போது அல்ல. :o

எப்போது நடந்திருந்தாலும் சிவலோகநாதனை விட மனம் நலம் குறைந்தவர் அனுஜா தான்.... :unsure: கணவர் இவவின் முகத்தில குத்துச்சண்டை பழகுவாராம் இவ அவரை காவல்துறையிடம்

இருந்து மீட்டுவருவாம். :mellow:  சென்டிமென்டுக்கும் ஒரு அளவு வேண்டாம்????? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவம் நடந்தது 2012 ம் ஆண்டு .......இப்போது அல்ல. :o

எப்போது நடந்திருந்தாலும் சிவலோகநாதனை விட மனம் நலம் குறைந்தவர் அனுஜா தான்.... :unsure: கணவர் இவவின் முகத்தில குத்துச்சண்டை பழகுவாராம் இவ அவரை காவல்துறையிடம்

இருந்து மீட்டுவருவாம். :mellow:  சென்டிமென்டுக்கும் ஒரு அளவு வேண்டாம்????? :wub:

 

ம்

இது தான் வேண்டும் பெண்களிடம்.......

நிறுத்து

அடுத்தது நிறுத்தடா.... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்

இது தான் வேண்டும் பெண்களிடம்.......

நிறுத்து

அடுத்தது நிறுத்தடா.... :)

பெண்கள் செய்ய நினைத்தாலும், சூழ உள்ளவர்கள் விடுவார்களா? மற்றும் ஊரில் இருந்து வரும் பெண்கள் தங்கள் குடும்ப சூழ் நிலை காரணமாக வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய செய்தி இப்ப ஏன் மீண்டும் வந்திருக்கு என்று தெரியவில்லை .

அர்ஜுன், இது பழைய செய்தி என்றாலும், வாழும் புலத்தில், சில பெண்கள் விட்டில் பூச்சிகளாக ஏமாறுவது நடந்து கொண்டே இருக்கிறது.

நானறிய ஒருவர் ஷ்கண்டிநேவேன் நாட்டில் இருந்து போய் கலியாணம் செய்து போட்டு, ஆண்டுகள் பல சென்றும் பெண்ணை கூப்பிடவில்லை, உறவினர்கள் முயற்சி செய்து பார்த்தனர். இறுதியில் அந்தப் பெண்ணே, என்னால் அங்கு போய் வாழ முடியாது என்று சொல்லி விட்டுது. ஆனால் எங்கள் மரபு என்று சொல்லி அந்தப் பெண்ணுக்கு வேறு கலியாணம் செய்து வைக்க முயலவில்லை, அந்தப் பெண்ணும் அதை விரும்பவில்லை. இப்படி பட்ட ஆட்களை நம்பி அங்கு அந்தப் பெண் போய் இருந்தால், பல இன்னல்களை சந்திக்க நேர்ந்திருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எல்லாத் திருமணங்களும் இவ்வாறு முடிவதில்லை ! ஆனால் திருமணம் என்று வரும்போது தமக்கு பிடித்த, அல்லது நன்கு தெரிந்த ஒருவரை எமது பிள்ளைகளுக்கு மணம் முடித்து வைப்பது நல்லதல்லவா ? யார் என்றே தெரியாத நபர் ஒருவரை திடீரென்று எவ்வாறு மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறீர்கள் ? முன் பின் தெரியாத நபர் ஒருவரை நம்பி 21 வருடம் அன்பாக வளர்த்த பெண் பிள்ளையை எவ்வாறு அனுப்பிவைக்கிறீர்கள். அனுஜாவுக்கு நடந்த கொடுமை இனியும் ஈழத் தமிழர் மத்தியில் தொடரக்கூடாது. தமிழ் பெற்றோர்கள் இதனை ஒரு முன்னுதாரணமாக எடுப்பது நல்லதல்லவா ?

 

 

காதலித்து கலியாணம் செய்தவர்கள் எல்லோரின் வாழ்க்கையும் நிலைத்ததுமில்லை.
 
பழகிப்பார்த்து கலியாணம் செய்தவர்களின் வாழ்க்கையும் தொடர்ந்ததுமில்லை.
 
கண்முன்னே பல சம்பவங்கள் உதாரணக்களாக நடந்துகொண்டிருக்கின்றது.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்களோட பிளேனை பரகோகம் கொண்டுபோன ஜேர்மனி விமானிக்கும் 28 வயத சொச்சமாம். பெண்டாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த உந்தப்பெடிக்கும் 28 வயதாம். இனி 28 எட்டு வயசு பெடிகளைக்கண்டால் கொஞ்சம் உசாராய்த்தான் இருக்கவேணும் போல. தம்பிமார் உங்க ஆரும் 28 வயசு ஆட்கள் இருக்கிறீங்களோ? எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்குத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சையும் ஒராள் வாழ்க்கையிலை கலியாணம் கட்டக்கூடாது எண்டு.......... தையக்க தையக்க எண்டு துள்ளிக்குதிக்கிறார்....அவருக்கும் 28டை தட்டுமெண்டு நினைக்கிறன்... :D  :lol:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சையும் ஒராள் வாழ்க்கையிலை கலியாணம் கட்டக்கூடாது எண்டு.......... தையக்க தையக்க எண்டு துள்ளிக்குதிக்கிறார்....அவருக்கும் 28டை தட்டுமெண்டு நினைக்கிறன்... :D  :lol:

அவருக்கு 28 கண்டம் தான்டியிட்டது   கு .சமியண்ணெய். 

பெண்கள் செய்ய நினைத்தாலும், சூழ உள்ளவர்கள் விடுவார்களா? மற்றும் ஊரில் இருந்து வரும் பெண்கள் தங்கள் குடும்ப சூழ் நிலை காரணமாக வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்

 

இது கனடா கலியாணம்!! 50 ஆயிரம் டொலர் செலவு செய்தவைக்கு என்ன குடும்ப சூழ்நிலை?!!  :o

அவருக்கு 28 கண்டம் தான்டியிட்டது   கு .சமியண்ணெய். 

 கண்டம் எண்டு கொண்டெம் பண்ணாதீங்கோ.. அவர் பம்மாத்து!!  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் செய்ய நினைத்தாலும், சூழ உள்ளவர்கள் விடுவார்களா? மற்றும் ஊரில் இருந்து வரும் பெண்கள் தங்கள் குடும்ப சூழ் நிலை காரணமாக வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்

 

சில சிக்கல்களை  தீர்க்கப்போன அனுபவமுண்டு....

பெண்களை  எவ்வாறெல்லாம்  ஒருவரால் கட்டிப்போடமுடியும் என்பதை அறிந்தபோது

உலகத்தின் மீதே வெறுப்பு வந்ததுண்டு... 

அந்தப்பெண்களின் அன்பு தான் காரணம்

அதை சரியாகப்புரிந்த ஆண்களின் கொடூர சிந்தனைகளையும்  கொடூர அடக்கமுறைகளையும்  கண்டவன்.

 

அவர்களை என்ன செய்தாலும் எப்படி வைத்திருந்தாலும் தன்மீதுள்ள அன்பாலும்

இவரது மதிப்பு சார்ந்தும் வெளியில் சொல்லமாட்டார்கள் என்ற பரீட்சையில் தேறிவிட்டால் போதும்

ஆட்டம் தொடங்கிவிடும்...

 

எத்தனையோ ஆயிரம் பேர் இவ்வாறு இன்றும் இருக்கிறார்கள்

உண்மையில் அந்தப்பெண்கள் நிமிர்ந்து ஒரு சொல் சொல்லிவிட்டால் தற்கொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை இவர்களுக்கு...

ஆனாலும் அதற்கும் கடைசி மருந்து ஒன்றை வைத்திருக்கிறார்கள்

எந்தவித தயக்கமும் இன்றி பெண்ணின் காலில் அப்படியே விழுந்துவிடுவார்கள்

பெண் அமைதியானதும் மீண்டும் ஆரம்பிக்கும்....

 

இதையும் தாண்டி ஒருவருட நாலாம்மாடி வாழ்க்கையிலிருந்து ஒருவர் 3 மாதக்குழந்தையுடன் வெளியில் வந்தார்.

அவரை வெளிநாட்டிலுள்ள பெற்றோரிடம் அனுப்பும் பொறுப்பு என்னிடம் வந்தது.

குழந்தைக்கு எதுவித பத்திரங்களுமில்லை

எனவே  காவல்த்துறையிடம் அறிவித்தே செல்லவேண்டியநிலை...

முதலில் காவல்த்துறைக்கு வர சம்மதிக்காதவர் ஒருவாறு வேறு வழியில்லை என்ற பல மணி போராட்டத்தின் பின் சம்மதித்தார்...

காவல்த்துறை வாசல்வரை வந்தவர்

எனது கையைப்பிடித்தபடி அழத்தொடங்கிவிட்டார்

அவரைப்பற்றி ஒன்றுமே காவல்த்துறையிடம் சொல்லாதீர்கள் என....

அவரைப்பற்றிச்சொல்லாமல் பிள்ளையைக்கொண்டு போக அனுமதி தரமாட்டார்கள் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கமாட்டேன் என்றுவிட்டார்.

பின்னர் பெற்றோரிடம் பல ஆயிரம்  செலவளித்து களவாக அனுப்பி வைத்தேன்...

அன்றிலிருந்து இவ்வாறான பெண்களின் கதையைக்கேட்டாலே 

அனுதாபத்துக்கு பதிலாக ஆத்திரம் தான்வரும்.. :(  :(  :(

இப்படியான பெண்கள் ஊரில் பிறந்து ஓரளவு வயதுவரை அங்கே இனசனங்களுடன் வளர்ந்தவர்களாக இருப்பார்கள்!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஊரில் இருந்து அம்மம்மா அப்பாப்பா தாத்தா பாட்டிமாரை
வெளி நாடுகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்.
அவர்களுடன் பல மூடத்தனமான கொள்கைகளும் இங்கு வந்து விடுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேக பேர் வளி, ஊரில் உள்ள வசதியான ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இவர்களின் சந்தோசம் பல நாள் நீடிக்கவில்லை, இந்த மனுஷனுக்கு எதற்கும் சந்தேகம் பெண்ணின் தகப்பனில், சகோதரங்களில்; இப்படி பலரில் சந்தேகப்பட்டு பெண்ணையும் சூழ்ந்திருந்தவையும் இன்னல்களுக்கு ஆளாக்கினார். பெண்ணின் குடும்பம் ஏலாக் கடைசியில் விவாகரதிக்கு முடிவு செய்து வக்கீலின் உதவியை நாடியது, வக்கீல் இவரது கடந்த கால அயோக்கியத்தனங்களை கிளறி (முன்பு ஒரு பெண்ணை ஏமாத்தினது உட்பட), அதை நீதிமன்றிலும் சமர்பித்தார். (இதற்கிடையில் பெண்ணிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது). நீதிமன்றத்தில் கிடைத்த அவமானம் தாங்க மாட்டாமல் இந்தாள் ஐரோப்பிய நாடொன்றிக்கு தஞ்சம் கோரி ஓடி ஒழித்தார். வழக்கு அப்படியே நின்றது, நாட்டுப் பிரச்னை காரணமாக நீதிமன்ற செயற்பாடுகளும் ஸ்தம்பித்தது. காலங்கள் ஓடியது, சிறுவர்களாக இவற்றை எல்லாம் பார்த்து வளர்ந்த பெண்ணின் இரு சகோதரர்கள் 7,8 வருடங்களில் ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஒரு நாள் அவர்களில் ஒருவன் இந்தாளை அடையாளம் காண முடியாத பிச்சைக்கார கோலத்தில் கண்டான். தொழில் இல்லை, அரச பணத்தில் வாழ்கை. அங்கு ஒழுங்கா வாழ முடியாதவன், ஐரோப்பாவில் வாழ முடியுமா? ஒழுக்கம் என்பது பெற்றோரின் வளர்ப்பு, கிடைக்கும் ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சூழ உள்ள சொந்தங்களின் உதவியுடன் கிடைப்பது. ஐரோப்பியாவின் தனிமை இந்தாளை மன நோயாளி ஆக்கியது.

பெண்ணின் சகோதரன் தனது சிறு வயது அத்தானுக்கு பணம் மாதா மாதம் அனுப்பி, இறுதியில் ஆளை ஊருக்கு, இவரின் உறவினர்கள் வசம் அனுப்பி வைத்தான். அங்கு இவரின் மகள் 11 ஆண்டுகள் தகப்பன் முகம் தெரியாத பிள்ளையாக வளர்ந்தாள். இவரது உறவினர்கள் இவரை குடும்பத்துடன் சேர்த்து வைப்பதற்கு முயன்று வெற்றியும் கண்டனர். பெண் எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும் தாய் தந்தையரின் வற்புறுத்தலுக்கு பின் சம்மதித்தாள்.

இவரின் நோயை அடையாளம் கண்டு மனநோய் வைத்திய சாலையில் அனுமதித்து, சுகதேகியாக வெளியே வந்தார். பின்பு இரு குழந்தைகள் பிறந்து வளரும் நேரத்தில், இவரது மன நோய் திரும்பவும் வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மாற்றி வந்து , சில காலங்களில் மரணமானார்.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஒரு பெண்ணை எவ்வளவு துன்புறுத்த முடியுமோ அவ்வளவு துன்புறுத்தி, இறுதியில் அந்தப் பெண்ணின் தயவால் சில காலங்கள் மனிதனாக வாழ்ந்தார். இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் எங்கள் வாழ்கை முறை , கலாச்சாரம், உற்றார்-உறவினர், தகுந்த ஆலோசனை இன்மை, சமூகக் கட்டமைப்பு இப்படி பல காரணிகள் ஒரு பெண்ணின் வாழ்வைத் தீர்மானிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த பெண், தாய், தந்தையர், மகனின் ஸபொன்சர் மூலம் வர, வயது அதிகமானதால், அவ்வாறே வரமுடியாமல், ஏஜன்சி மூலம் மலேசியாவில் 18 மாதம் இருந்து, கனடா வந்து சேர்ந்தார்.

கல்யாணம் கட்டி, இரு பயல்கள். அவருக்கு தண்ணிப் பழக்கம். தனது உழைப்பு மட்டுமல்லாது, அந்தப் பெண் உழைப்பையும், அடித்து, பயமுறித்தி, பறித்து குடிப்பார்.

அவருக்கு, ஊரிலிருக்கும் நினைப்பு.

பொறுத்துப் பார்த்தார். கடைசியில் பொலீசை அழைத்தார். மிஞ்சியவர் கெஞ்சினார். அது வரை கண்டு கொள்ளாத அவரது உறவுகள், 'பாசத்துடன்', வந்து, என்ன இருந்தாலும் 'புரிசன்' தானே என்று பாடத் தொடங்க, அந்தப் பெண் மிக உறுதியாக நின்றதால், அவர் deport பண்ணப்பட்டார்.

அங்கு, வெவசாயம் செய்கிறாராம். :D

எனக்கு அவர் கெட்டவர் மாதிரி தெரியவில்லை ...
மிகவும் நல்லவராக தெரிகிறார்.
 
அவருக்கு இன்னொருவருடன் சேர்ந்து வாழ்தல் என்றால் என்ன என்று தெரியாது.
அவரை  சேர்ந்து வாழ சொன்னவர்கள்தான் குற்றவாளிகள். 
 
தென்னைமரம் நல்ல மரம் நாம் பரம்பரையாக வைக்கும் மரம் 
அதற்காக அதை இங்கு வைக்க முடியுமா ?
 
எதை எங்கு வைக்கிறோம் என்பதுதான் பிரச்சனை.
 
எதுவுமே செய்யாது இருப்பவரை ......
நல்ல பிள்ளை என்றும்.
 
எதையாவது முயற்சித்து தோல்விகண்டவரை 
இவர் உதவாதவர் 
 
என்றும் நம்பும் சமூகம்தான் பிரச்னைக்கு உரியது.
எமது சமூகம் நல்லவர் என்று சொல்லும் ஒருவரை ...... அவர் என்ன நல்லது செய்தார் என்று கேட்டால்.
அவர் ஒன்றுமே செய்வதில்லை அதுதான் நல்லவர் என்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.