Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்! - கஜேந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்! - கஜேந்திரகுமார்
[Wednesday 2015-08-19 19:00]
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதுடன் அதனுடன் இணைந்து செயற்படவும் தயாராக இருகப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இன்று மதியம் யாழ் ஊடக மையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் -

நடந்து முடிந்த தேர்லில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எமக்கு எதிராக எத்தனையோ பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் பலத்த சவாலின் மத்தியில் இந்த தேர்தலில் நாம் போட்டியிட்டோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டை தொவித்துக் கொள்கின்றோம். தேர்தல் காலத்தில் கூறும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி எதனையும் செய்யவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஆனாலும் கூட தேர்தல் முடிவடைந்த பின்னர் நடைபெறவுள்ள செயற்பாடுகளின் அடிப்படையிலேயே எது தொடர்பாகவும் முடிவுக்கு வர முடியும்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எமக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய நிதியுதவியின் மூலம் தான் நாம் மனிதாபிமான உதவிகளை செய்து வந்துள்ளோம். அவர்களுடைய உதவியும் ஆதரவும் தொடர்ந்தும் எமக்கு இருக்க வேண்டும். தமிழ் தேசம் என்பது வெறும் உள்ளூரில் உள்ளவர்களை மட்டும் கொண்டது அல்ல. இது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியதாகும். தமிழ் தேசியவாதம்தான் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கின்றது. தமிழ் தேசியம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம்.

எந்தவோரு சந்தர்ப்பத்திலும் வேறு இனத்தவர்களின் அடையாளத்தை அழிக்கவோ அன்றி சிதைக்கவோ நாம் முயலவில்லை. அதனைப்போல எமது தேசியத்தையும் கலாசாரத்தையும் யாரும் அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்கவும் முடியாது. நாம் என்றும எமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். எனவும் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வராஜா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சட்டதரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=138570&category=TamilNews&language=tamil

நல்ல முடிவு 

அந்த? புலம் பெயர்ந்தவர்கள் தான் எமது அரசியலில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சேர்க்க வேண்டுமென நினைத்திருந்தால் முன்பே சேர்த்திருப்பார். தேர்த்தல் வெற்றிக்கு பின்னர் சேர்பார் என நினைக்கவில்லை. ஒற்றுமை இன்மையால் ஒரு ஆசனத்தை இழந்ததை இரு கட்சியினரும் சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு பயன்கிடைக்கக் கூடிய வலுவான நிபந்தனைகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திப்பது நல்ல விடயம். இருந்தாலும்.. கூட்டமைப்புக்கு பதில் கூற வேண்டிய அளவுக்கு நெருக்கடியான அரசியல் கருத்துருவாக்கம் செய்யும் அளவிற்கு த.தே.ம.மு திகழ்ந்தமை அதன் இருப்பின் வெற்றியே.

1987-90 களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி உருவாக்கம் பெற்ற போதும் அவர்கள் தேர்தலை சந்திக்கவில்லை. மாறாக ஈரோஸோடு கூட்டுச் சேர்ந்து அன்று இந்திய வல்லாதிக்கம் திணிக்க முனைந்த அரைகுறை தீர்வுகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி.. சிறீலங்கா பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்களிடம் அமோக வெற்றி பெற்றார்கள். 

எனவே ஈபிடிபி போன்ற நாசகார ஆயுத அமைப்புக்கள் மாற்றுக்குழுக்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்பு அரசியலை சிதைக்க முனைப்புக் காட்ட அனுமதிக்காமல்.. த.தே.ம.முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சீர்படுத்தக் கூடிய தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய ஒரு வலுவான எதிரணியாக இருப்பதும் நல்லதே. அது தமிழ் மக்களுக்கு இன்று அவசியம். அதுவே சம் சும் கும்பலின் எதேச்சதிகாரப் போக்கிற்கு தடையாகவும் தமிழ் மக்களின் நலன் நோக்கி த.தே.கூ சிந்திக்கவும் செயற்படவும் தூண்டும். சர்வதே அளவில்.. த.தே.கூவிற்கு மாற்றீடான ஒரு தலைமையா த.தே.ம.மு பார்க்கப்படுவதும் நல்லதே. அந்த இடத்தை டக்களின் மற்றும் ஒட்டுக்குழுக்களுக்கு விட்டுக்கொடுப்பது ஆபத்தாக முடியும். :)

  • கருத்துக்கள உறவுகள்
சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்!

நீங்க எவருடனும் சேரவேண்டியதில்லை

ஒழுங்காக

மக்களுக்கு தேவையானதை

மக்கள் விருப்பு வெறுப்புக்களை அறிந்து இயங்கப்பாருங்கள்

தேர்தலிலிருந்து எதையாவது படிக்கப்பாருங்கள்

இவரை ஏன் கூட்டமைப்பு  மீண்டும் சேர்க்க வேண்டும்/??     குமார் பொன்னம்பலத்தையே புலிகள் சேர்க்கவில்லை  இவரை ஏன் கூட்டமைப்பு சேர்க்க வேண்டும்/ இவர் ஒரு சீட் ஆவது  வெற்றி பெற்று இருந்தாலவது சேர்ந்து செயற்படுவோம் என கேக்கலாம்  . ஒரு சீட் வெற்றி பெற்ற  டக்கிளசுக்கு  இருக்கிற உரிமை கூட இவருக்கு  இல்லை.............  விரும்பினால் அடுத்த தேர்தலில்  வென்ற பின் கேக்கட்டும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முடிவு 

அந்த? புலம் பெயர்ந்தவர்கள் தான் எமது அரசியலில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள் .

அப்ப நீங்கள் யார்????

ஓ.... நீங்கள் எல்லாம் புலன் பெயர்ந்தவர்கள் என்பதை மறந்து விட்டேன். சாரி.....மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

NM Perera எனும் நிதி அமைச்சர் முன்னர் இருந்தார்.

ஒரு முறை sales tax என்னும் புதிய வரி ஒன்றினை அறிவித்தார்.

அவ்வளவுதான், தெருவில், இளனி, அன்னாசி, கடலை யாபாரம் செய்பவர்கள் எல்லாம் குழம்பி விட்டார்கள். ஏனெனில் sales என்பதும் tax என்பதும் அவர்களுக்கு இலகுவாக புரிந்தது.

இதனால் அவர்களும் இணைந்த பெரும் போராட்டம் நடக்க, அரண்டு போன நிதி அமைச்சர் அதனை வாபஸ் வாங்கினார்.

சரியாக மூன்று மாதம் கழித்து, business turnover tax எனும் பெயரில் மீண்டும் அறிமுகம் செய்தார்.

அது பெரிய இடத்து சங்கதி, நமக்கு இல்லை என்று, இம்முறை தெரு வியாபாரிகள், போராட வில்லை. 

ஆனால், நிதி அமைச்சர் நோக்கம் நிறைவேறியது.

அது போல சமஷ்டி என்ற வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தை பாவிக்க வேண்டும். மேலும் வடக்கு, கிழக்குக்கு எது கொடுத்தாலும், அதையே தெற்கு, மேற்குக்கு கொடுத்து விட்டால், பிரச்சனை முடிஞ்சுது. 

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் யாருடனும் சேரத்தேவையில்லை சம்பந்தன் ஐயா வாக்குத்தந்திட்டார் 2016ல் தீர்வைப்பெறுத்தருவம் எண்டு. அதுக்குப் பிறகு யாருக்கும் அரசியல் தேவையில்லை, வெறும் முன்னேற்றத்துக்கான திட்டமிடல்கள் மட்டுமே. 2016ல் தீர்வு அதன்பின்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மிக்சி தாறன் கிரண்டர் தாரன் எல்லாம் இலவசமாக என இரண்டாம் கட்ட அரசியலைச் செய்யலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

NM Perera எனும் நிதி அமைச்சர் முன்னர் இருந்தார்.

ஒரு முறை sales tax என்னும் புதிய வரி ஒன்றினை அறிவித்தார்.

அவ்வளவுதான், தெருவில், இளனி, அன்னாசி, கடலை யாபாரம் செய்பவர்கள் எல்லாம் குழம்பி விட்டார்கள். ஏனெனில் sales என்பதும் tax என்பதும் அவர்களுக்கு இலகுவாக புரிந்தது.

இதனால் அவர்களும் இணைந்த பெரும் போராட்டம் நடக்க, அரண்டு போன நிதி அமைச்சர் அதனை வாபஸ் வாங்கினார்.

சரியாக மூன்று மாதம் கழித்து, business turnover tax எனும் பெயரில் மீண்டும் அறிமுகம் செய்தார்.

அது பெரிய இடத்து சங்கதி, நமக்கு இல்லை என்று, இம்முறை தெரு வியாபாரிகள், போராட வில்லை. 

ஆனால், நிதி அமைச்சர் நோக்கம் நிறைவேறியது.

அது போல சமஷ்டி என்ற வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தை பாவிக்க வேண்டும். மேலும் வடக்கு, கிழக்குக்கு எது கொடுத்தாலும், அதையே தெற்கு, மேற்குக்கு கொடுத்து விட்டால், பிரச்சனை முடிஞ்சுது. 

கனக்க யோசிக்கத் தேவையில்லை. முதலில் வடக்கையும் கிழக்கையும் இணைந்த ஒரு மாகாணமாக ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்.

சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்!

நீங்க எவருடனும் சேரவேண்டியதில்லை

ஒழுங்காக

மக்களுக்கு தேவையானதை

மக்கள் விருப்பு வெறுப்புக்களை அறிந்து இயங்கப்பாருங்கள்

தேர்தலிலிருந்து எதையாவது படிக்கப்பாருங்கள்

அண்ணை தொடக்கத்தில் இருந்து நான் கூறிவந்தேன்.....மாற்றம் தேவைதான்......ஆனால் கஜே கோஸ்டி சரிவராதெண்டு......

தூய தமிழ் காங்கிரசாய் செ.கஜேந்திரன் மற்றும் பத்மினி இன்றி உருப்படியான கொள்கையுடன் தேர்தலில்நின்றிருந்தால் 1 ஆசனம் நிச்சயம் கிடைத்திருக்கும்.

விரைவில் இவர் பெட்டி கழட்டுவார்.....கூட்டமைபுடன் இணையமுழுவிருப்பம்....கூட்டமைப்பு இவரை இணைக்காது 

ஆகமொத்தத்தில் புதிதாய் ஒரு உருப்படியான கட்சியை உருவாக்க முடியாது 

எல்லோரும் இணைந்து கூட்டமைப்பின் மீள் கட்டமைப்புக்கு ஒரு உந்துதலை குடுப்பதே ஒரே வழி.

அன்பான புலத்து மக்களே,

உங்களிடம் ஒரு கேள்வி

த தே ம முவை ஆதரித்தீர்கள் சரி.....அதில் வேட்பு கேட்டவர்களில் மூவரை தவிர வேறு யாரையும் உங்களுக்கு தெரியுமா?

அப்போ மக்கள் எப்படி வாக்கு போடுவார்கள்?

தெரிந்த சோம்பேறிக்கழுதைகளுக்கு போடவேண்டிய நிலைமை 

இது தான் நியம் 

கூட்டமைப்பில் சிறந்த இளைஞர் அணி உருவாகப்படவேண்டும்....இதுவே காலத்தின் தேவை.....

முடிந்தவரை முயற்சிப்போம்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பில் சிறந்த இளைஞர் அணி உருவாகப்படவேண்டும்....இதுவே காலத்தின் தேவை.....

முடிந்தவரை முயற்சிப்போம்  

ஐயோ...ஐயோ....உந்த இளைஞர் அணி நினைப்பு சம்பந்தன் கோஷ்டி இருக்கும் வரைக்கும் வேண்டவே வேண்டாம்.......:shocked:

77 80களிலை இளைஞர் அணி அணி எண்டு கத்திக்கத்தியே எல்லாத்தையும் நாசமறுத்துப்போட்டு...:(

இப்ப ஒண்டும் தெரியாதமாதிரி ஒற்றைக்கரை  போட்ட வெள்ளைவேட்டியோடை திரியினம்....:mellow:

இதுக்கை வேட்டியை கட்டிக்கொண்டு கிரிக்கெட் சேக்கஸ் வேறை...என்ரை கடவுளே..  :cool:

suma_zpsocmvgygt.jpg

Edited by குமாரசாமி
சொல்லேலாது

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கை வேட்டியை கட்டிக்கொண்டு கிரிக்கெட் சேக்கஸ் வேறை...என்ரை கடவுளே

சா. வேட்டி கட்டாமை ஆடினா சகிக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

கிறிக்கட் ஆடுவதுக்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும். அது கனவான்களின் விளையாட்டு. புரியாதவர்களுக்கு அது சேர்க்கஸ் தான்!:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிக்கட் ஆடுவதுக்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும். அது கனவான்களின் விளையாட்டு. புரியாதவர்களுக்கு அது சேர்க்கஸ் தான்!:grin:

அப்பா சுமந்திரன் அந்தக்காலத்து அப்புக்காத்துக்கள் மாதிரி  றோயல் பேமிலி எண்டு சொல்ல வாறீங்களோ :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கஜன் கூட்டமைப்பில் சேர இருந்த வாய்ப்புக்களை எல்லாம் தவறவிட்டு விட்டு இப்ப யோசிக்கிறார்.

இதுக்க "கடும் நிபந்தனையுடன்" சேர வேண்டும் என புலத்தில் இருந்து கூசாமல் காமெடி வேற.

A rose is still a rose by any name என்பர். 

சமஸ்டி என்ற பதமும், ஒற்றையாட்சி என்ற பதமும் இல்லாத தீர்வு ஒன்றை எட்டுவோம் என ஏலவே சம், சும், மைதிரி, ரணில், சந்திரிக்கா, மங்கள சிங்கப்பூரில் வைத்து உடன்படிக்கை செய்துள்ளார்களாம்.

இதை தெரிந்து கொண்டே விக்கி துள்ளினாராம்.

சயிக்கிளுக்கு ஏற்கனவே சீட் இருப்பதால் தான் மக்கள் வேறு சீட் கொடுக்கவில்லையாம் 

இதுக்கை வேட்டியை கட்டிக்கொண்டு கிரிக்கெட் சேக்கஸ் வேறை...என்ரை கடவுளே

சா. வேட்டி கட்டாமை ஆடினா சகிக்காது. 

 நாலு விக்கற் 

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க யோசிக்கத் தேவையில்லை. முதலில் வடக்கையும் கிழக்கையும் இணைந்த ஒரு மாகாணமாக ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்.

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதானால், தென்மாகாணத்தையும் ஊவாவையும் இணைகிறோம், மேல் மாகாணத்துடன் சப்ரமுவா மாகாணத்தை என்ற ரீதியில் போனால் அலுவல் சிம்பிள்.

கஜன் கூட்டமைப்பில் சேர இருந்த வாய்ப்புக்களை எல்லாம் தவறவிட்டு விட்டு இப்ப யோசிக்கிறார்.

இதுக்க "கடும் நிபந்தனையுடன்" சேர வேண்டும் என புலத்தில் இருந்து கூசாமல் காமெடி வேற.

A rose is still a rose by any name என்பர். 

சமஸ்டி என்ற பதமும், ஒற்றையாட்சி என்ற பதமும் இல்லாத தீர்வு ஒன்றை எட்டுவோம் என ஏலவே சம், சும், மைதிரி, ரணில், சந்திரிக்கா, மங்கள சிங்கப்பூரில் வைத்து உடன்படிக்கை செய்துள்ளார்களாம்.

இதை தெரிந்து கொண்டே விக்கி துள்ளினாராம்.

யாரு யாருக்கு கண்டிசன் போடுறது?

இதை கேட்டு சிரிக்காமல் பதிலளிப்பது கூட்டமைப்புக்கு கஸ்டம்தான்.

கஜன் கூட்டமைப்பில் சேர இருந்த வாய்ப்புக்களை எல்லாம் தவறவிட்டு விட்டு இப்ப யோசிக்கிறார்.

இதுக்க "கடும் நிபந்தனையுடன்" சேர வேண்டும் என புலத்தில் இருந்து கூசாமல் காமெடி வேற.

கொஞ்ச காலத்துக்கு முதல்மாவையை கூப்பிட்டு கண்டிசன் போட்டு கையெழுத்து போடு என்று ஒரு புலிவால் கூட்டம் காமடி பண்ணிச்சே. ஒரு வேளை இவர்கள் அந்த குரூப்பை சேர்ந்தவர்களோ?

கொஞ்ச காலத்துக்கு முதல்மாவையை கூப்பிட்டு கண்டிசன் போட்டு கையெழுத்து போடு என்று ஒரு புலிவால் கூட்டம் காமடி பண்ணிச்சே. ஒரு வேளை இவர்கள் அந்த குரூப்பை சேர்ந்தவர்களோ?

இந்த தற்குறிகள் அப்பிடித்தான்.

கூட்டமைப்போடு இணக்க அரசியலாமோ?

வாங்கோ அனால் வந்து இருக்கிறதையும் குளப்பலாம் எண்டால் வராமல் இருப்ப்தே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதானால், தென்மாகாணத்தையும் ஊவாவையும் இணைகிறோம், மேல் மாகாணத்துடன் சப்ரமுவா மாகாணத்தை என்ற ரீதியில் போனால் அலுவல் சிம்பிள்.

நாதம்...நீ எங்கேயோ இருக்க வேண்டிய ஆள்..!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை தொடக்கத்தில் இருந்து நான் கூறிவந்தேன்.....மாற்றம் தேவைதான்......ஆனால் கஜே கோஸ்டி சரிவராதெண்டு......

தூய தமிழ் காங்கிரசாய் செ.கஜேந்திரன் மற்றும் பத்மினி இன்றி உருப்படியான கொள்கையுடன் தேர்தலில்நின்றிருந்தால் 1 ஆசனம் நிச்சயம் கிடைத்திருக்கும்.

விரைவில் இவர் பெட்டி கழட்டுவார்.....கூட்டமைபுடன் இணையமுழுவிருப்பம்....கூட்டமைப்பு இவரை இணைக்காது 

ஆகமொத்தத்தில் புதிதாய் ஒரு உருப்படியான கட்சியை உருவாக்க முடியாது 

எல்லோரும் இணைந்து கூட்டமைப்பின் மீள் கட்டமைப்புக்கு ஒரு உந்துதலை குடுப்பதே ஒரே வழி.

அன்பான புலத்து மக்களே,

உங்களிடம் ஒரு கேள்வி

த தே ம முவை ஆதரித்தீர்கள் சரி.....அதில் வேட்பு கேட்டவர்களில் மூவரை தவிர வேறு யாரையும் உங்களுக்கு தெரியுமா?

அப்போ மக்கள் எப்படி வாக்கு போடுவார்கள்?

தெரிந்த சோம்பேறிக்கழுதைகளுக்கு போடவேண்டிய நிலைமை 

இது தான் நியம் 

கூட்டமைப்பில் சிறந்த இளைஞர் அணி உருவாகப்படவேண்டும்....இதுவே காலத்தின் தேவை.....

முடிந்தவரை முயற்சிப்போம்  

வணக்கம் தம்பி

இது எனது உங்களது தனிப்பிரச்சினையன்று

தமிழரின் கனவுகள் தியாகங்கள் அடிப்படை மனிதகுலநீதிகள் சம்பந்தமானது.

அந்தவகையில் உங்களது எழுத்துக்களை கவனித்தே வருகின்றேன்

ஏன் எனது கருத்துக்களிலும் வழிமுறைகளிலும் சில மாற்றங்களை உங்களைப்போன்றவர்களின் எழுத்துக்கள் கொண்டு வந்தன.

இதை இங்கு சொல்வதில் எந்தவித வெட்கமுமில்லை என்க்கு.

பொதுக்காரியங்கள் சார்ந்து எனது தம்பிகளிடம் கனக்க படித்துள்ளேன். படித்து வருகின்றேன்.

அந்தவகையில் தான்

மாற்றம் தேவை என எழுதி வந்த நான் என்றுமே அந்த மாற்றத்துக்கான பிரதியீடு ததேமமு என்று எழுதாததற்கு காரணம் உங்களுடைய எழுத்துக்கள்.  இதுதான் சரியான மாற்றுக்கருத்தாக இருக்கணும் என்று உங்களது கருத்துக்கு எழுதியதாக ஞாபகம்.

இளைஞர்கள் உங்களை நாம் நம்புகின்றோம்

நீங்கள் தான் வழி நடாத்தணும்.  அதைக்காலம் உணர்த்தணும்.

ஆனால் தமிழக அரசியலையும் அதன் தலைவர்களையும் அவர்களைத்தெரிவு செய்யும் மக்களையும் இழக்காரமாக பார்க்கும் நாம்

சிறீதரனை முதல் இடத்தில் வைத்துள்ளோம். அங்கே தான் எமது இளைஞர்களின் குனிவும் தெரிவும் ஏமாற்றமாக உள்ளது.

என்னைப்பொறுத்தவரை

சிறீதரன் ஒரு கருணாநிதி.

கயேந்திரகுமாருக்குப்பதிலாக கருணாநிதி தான் உங்கள் தெரிவா சகோதரா......???:(:(

இதற்காகவா இவ்வளவும்........???:(:(

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.