Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே இணைத்த காணொளியை தயாரித்தவர் 2010 இல் இதற்காக கைது செய்யப்பட்டார்.

 

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Sasi_varnam said:

ஈழப் பிரச்சினையை நான் இதற்குள் செருக விரும்பவில்லை. காரணம் இதற்கு எங்கள் இதய தெய்வங்கள்,
அரசியல் சாணக்கியர்கள்  சம்பந்தர், சுமந்திரர், தேரர் போன்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற பெருத்த நம்பிக்கை எனக்குண்டு.

Cf0kwqSUIAARXK4%20df_zpshuntxhw2.jpg

காலத்திக்கு ஏற்ப இதய தெய்வங்கள் இடம் மாறிவிட்டார்கள் போல :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Mani Senthil
8 hrs · 
 

முடிவற்ற கதை ஒன்றின் முற்றுப்புள்ளி..
---------------------------------------------------------------

எங்களுக்கு முன்னால் பாம்பு வால் போல நீண்டிருந்த அந்த கோடைக்கால தார்ச்சாலைகள் இரக்கமற்றவை..

ஏற்கனவே நடையாய் நடந்து சோர்ந்திருந்த என் தம்பிகளின் கால்கள் ஒய்விற்காக கெஞ்சிக் கொண்டிருந்த வேளையில் தான் ..எங்கள் அணியில் நின்றிருந்த ஓட்டுப் போடும் வயதே வராத அந்த 17 வயது இளைஞன் சொன்னான்.. “ அண்ணே...போகலாம்..இன்னும் மூன்று தெருக்கள் மீதம் இருக்கின்றன..”

எங்களுக்கு முன்னால் ஏசி வாகனங்களில் விரைந்துக் கொண்டிருந்த பணக்கார, அதிகார வேட்பாளர்கள் எங்களை கிண்டலாக பார்த்ததை விட பாவமாக பார்த்ததுதான் அதிகமாக இருந்தது..

ஏனெனில் அவர்கள் மக்களைப் பற்றி அறிந்திருந்தார்கள்.. மக்களின் விலையைப் பற்றி தெரிந்து இருந்தார்கள்.
.................

நாங்கள் நம்பினோம். கருத்துக்களை சொன்னால் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என இக்காலத்திலும் நம்பினோம். மக்களின் ஆழ் மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் அற உணர்வு விலையற்றது என நம்பினோம்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஜெயலலிதா அடித்த கொள்ளைகளை காட்டிக் கொண்டிருந்த வேளையில் தான்.. ஜெயா தொலைக்காட்சியில் கலைஞரும், அவரது குடும்பமும் அடித்த கொள்ளைகளை காட்டிக் கொண்டிருந்த வேளையில் தான்..

இந்த இருவரையும் அம்பலப்படுத்த வியர்வை வழியும் முகத்தோடு..முச்சந்தியில் கத்தி திரிந்த எங்களை அடுத்த 5 ஆண்டு யாரும் எளிதில் மறந்து விட முடியாது..

நாங்கள் தெருவாய் தெருவாய் அலைந்த அலைச்சல்களை விட, சூடும் வெயிலில் வியர்வை ஆறாய் கொப்பளித்து சோர்ந்த சோர்வை விட... நாங்கள் களைத்திருப்பது மக்களின் அறமற்ற பணம் சார்ந்த வாக்கு அரசியலை எண்ணிதான்..

ஒருவர் சொன்னது போல..இது என்ன காமராஜ்,கக்கன் காலமா..?? ஜெயலலிதா, கருணாநிதி காலம்.

ஓட்டை விற்ற மக்கள் அடுத்த 5 ஆண்டு வாய் மூடி,கண் பொத்தி, காதுகள் சாத்தி வாழ பழகி இருந்தவர்கள்..இதுவும் கடந்து போகும் என வாழ தொடங்கி விட்டார்கள். அவர்களை விலைக்கு வாங்கிய நவீன அரசர்கள் வழக்கம் போல கொள்ளையடிப்பதில், சுரண்டி கொழுப்பதில் மும்முரமாக தயாராகி விட்டார்கள்.

நாங்கள்...???

அதே கருப்புச்சட்டையோடு, அதே வியர்வையோடு, அதே பிரபாகரனோடு, அதே ஆவேசத்தோடு , அதே உரத்தக் குரலோடு எங்களுக்கு முன்னால் பூதாகரமாய் நிற்கிற அரசதிகாரத்தின் முடியை குலுக்குகிற முடிவோடு நிற்கிறோம்.

முடிவற்ற இந்த கதை என்றாவது ஒரு முற்றுப்புள்ளியில் நிற்கும்.

அந்த நம்பிக்கையில் தான் வற்றாமல் நாங்கள் தொடர்கிறோம்.

நாம் தமிழர்.

- மணி செந்தில்

13227414_10154284589697074_2256716700269

 

 

29 minutes ago, இசைக்கலைஞன் said:

எங்களுக்கு முன்னால் பாம்பு வால் போல நீண்டிருந்த அந்த கோடைக்கால தார்ச்சாலைகள் இரக்கமற்றவை..

ஏற்கனவே நடையாய் நடந்து சோர்ந்திருந்த என் தம்பிகளின் கால்கள் ஒய்விற்காக கெஞ்சிக் கொண்டிருந்த வேளையில் தான் ..எங்கள் அணியில் நின்றிருந்த ஓட்டுப் போடும் வயதே வராத அந்த 17 வயது இளைஞன் சொன்னான்.. “ அண்ணே...போகலாம்..இன்னும் மூன்று தெருக்கள் மீதம் இருக்கின்றன..”

எங்களுக்கு முன்னால் ஏசி வாகனங்களில் விரைந்துக் கொண்டிருந்த பணக்கார, அதிகார வேட்பாளர்கள் எங்களை கிண்டலாக பார்த்ததை விட பாவமாக பார்த்ததுதான் அதிகமாக இருந்தது..

காரிண்ட விலை 70 லட்சமாம். அம்மா வீதியில கடை வைத்திருக்கிறாவாம், சுத்திவர சீருடையில பத்து பதினான்கு பேர் - அப்புறம் எப்படி இப்படி.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் படம் எடுத்துச் சம்பாதித்ததைக் கூட அனுபவிக்க முடியாது போல. பாவம் பிரபாகரனையும் புலிக் கொடியையும் தூக்கின நேரத்துக்கு பெரியார் இராமசாமியையும் ராஜீவ் காந்தியையும்.. சோனியாவையும்.. காங்கிரஸையும் காவிச் சுமந்திருந்தா இப்ப செல்வச் செழிப்போடு வாழ்ந்திருக்கலாம். இங்கு சிலதுங்க பலத்த ஆதரவு வெளியிட்டு மகிழ்ந்திருக்குங்கள். பிழைக்கத் தெரியாத மனுசனா இருக்காரே சீமான். tw_warning:

சீமான் பிரச்சாரங்களின் போது மகிழுந்து பாவித்ததாகத் தெரியவே இல்லை. வியர்வை மழையில் நனையக் கட்டது தான் அதிகம். மேலுள்ள காணொளிகள் சாட்சி. tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

 

காரிண்ட விலை 70 லட்சமாம். அம்மா வீதியில கடை வைத்திருக்கிறாவாம், சுத்திவர சீருடையில பத்து பதினான்கு பேர் - அப்புறம் எப்படி இப்படி.

அது சீமானின் சொந்த சம்பாத்தியம். அதை கட்சிக்காக செலவிட எதிர்பார்க்க முடியாது. நான் மேலே பதிந்திருந்தது வழக்கறிஞர் மணி செந்திலின் பதிவு. 234 தொகுதிகளிலும் போட்டியிட்டவர்கள் அவர்களுக்கு இருந்த குறைந்தபட்ச வசதிகளைக் கொண்டுதான் செய்தார்கள். மணி செந்தில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

சீமான் படம் எடுத்துச் சம்பாதித்ததைக் கூட அனுபவிக்க முடியாது போல. 

எந்தப் படம் அது?:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 2009 இல் காங்கிரஸ்காரர்கள் சீமானின் காரை எரித்துவிட்டார்கள். அதன்பிறகு இயக்குனர் பாலா உதவி செய்து இந்தக் காரை தவணை முறையில் வாங்கியுள்ளார். இதை நான் நாம் தமிழர் கட்சிக்காரர்களின் பதிவுகளில் இருந்து எடுத்தேன். (இயக்குநர் பாலாவிடம் சீமான் ஒரு சமயத்தில் உதவி கேட்டபோது 20 லட்சத்தை எடுத்து காலால் மிதித்துப்போட்டு கொடுத்தாராம். இதை அவரே சொன்ன காணொளி யூடியூபில் உள்ளது. அவ்வளவுதான் அவர் பணத்துக்கு கொடுக்கும் மரியாதை என்றார்.)

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பிச்சைக்காரன் வேசத்தில் போய் வோட் கேட்டால் மக்கள் ஏமாத்து தனக்கு வோட் போடுவினம் என்று நினைச்ச்சார்.மக்கள் வைச்சிட்டினம் ஆப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கிட்டு சாமாதான திட்டத்தோடு இலங்கைக்கு கப்பலில் போகும்போது கப்பலை இந்தியா அழித்துவிட்டதால் சாமாதான திட்டமும் அதோடு எரிந்து போச்சு என்று புலிகள் சொன்னார்கள் ஏனோ அது நினைவு வந்து தொலையுது .

  • கருத்துக்கள உறவுகள்

மானத் தமிழன், வீரத் தமிழன் விலை போய்விட்டான்' - கொந்தளித்த சீமான்

seemanlong.jpg

தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை. 'அடுத்த தேர்தல் நமக்கானது' என ஆதரவாளர்களை தேற்றிக் கொண்டிருக்கிறார் சீமான். 

சட்டசபை தேர்தல் முடிவுகளை, தனது ஆலப்பாக்கம் வீட்டில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் சீமான். பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஐந்தாவது இடம், ஆறாவது இடம் என நிலவரம் போய்க் கொண்டிருக்க, கலவரத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், ' பல தொகுதிகளில் இரண்டாவது இடம் வருவோம் என எதிர்பார்த்தேன். மக்கள் ஏமாற்றிவிட்டார்கள்' என நொந்து போனார்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
64400_thumb.jpg

தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளுக்காக சட்டசபையில் எங்களது குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். DMK's voice in the assembly will be fast and majestic, says StalinDMK's voice in the assembly will be fast and majestic, says Stalin | சட்டசபையில் தி.மு.க.வின் குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும்! -ஸ்டாலின் நம்பிக்கை - VIKATAN

இதுபற்றி நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், " தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றதும் கொந்தளிப்பின் உச்சிக்கே போய்விட்டார் சீமான். ' மானத் தமிழன், வீரத்தமிழன் இப்படி செய்துவிட்டான்' எனக் கோபப்பட்டார். நேரம் செல்லச் செல்ல, எங்களுக்கு அவர் ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிட்டார். 

கொஞ்சம் செருமலோடு பேசத் தொடங்கிய சீமான் ' முப்பது வருஷமாக சாதியைச் சொல்லி கட்சி நடத்துகிற ராமதாஸ், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார். ஐம்பது ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான வைகோ, நம்மைவிடவும் குறைந்த ஓட்டுக்களைத்தான் வாங்கியிருக்கிறார். எண்பது ஆண்டு பாரம்பர் கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட நாம் வாங்கிய ஓட்டை வாங்கவில்லை. 8.3 சதவீத ஓட்டை வைத்திருந்த விஜயகாந்துக்கு 2.3 சதவீதம்தான் வாக்கு கிடைச்சிருக்கு. அவருக்கு ஆந்திரா கிளப் உள்பட பல தொழிலதிபர்கள் பணம் கொடுத்தார்கள். எந்தப் பணபலமும் இல்லாமல்தான் தேர்தலை எதிர்கொண்டோம். இப்பதான் களத்துக்குள்ள வந்திருக்கோம். இந்தத் தேர்தலை முயற்சி மற்றும் பயிற்சி என்ற அடிப்படையில்தான் எதிர்கொண்டோம். 

மானத் தமிழன், வாங்கின காசுக்கு விசுவாசமா ஓட்டுப் போட்டிருக்கான். நாம என்ன பண்ண முடியும்? தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தைக் கொட்டி வேலை பார்த்தார்கள். நாம் உண்டியல் குலுக்கி தமிழனிடம் கையேந்தி நின்னோம். நமக்கு ஒரு சதவீதம் கொடுத்திருக்கான். நமக்கு இன்னமும் வயசு இருக்கு. அடுத்த தேர்தலை வலிமையோடு சந்திப்போம். 2021-ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும். தம்பிகள் யாரும் சோர்வடைந்துவிட வேண்டாம். தேர்தலை எதிர்கொண்ட ஓராண்டிலேயே நம்மை ஒரு சதவீதம் பேர் ஆதரித்திருக்கிறார்கள். பணபலம் எதுவுமில்லாமல் நமக்குக் கிடைத்த வெற்றி இது. இந்த வாக்கு சதவீதத்தை இன்னும் உயர்த்தப் பாடுபடுவோம்' என எங்களை உற்சாகப்படுத்தினார்" என்றார். 

'நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று' என தேர்தல் களத்தில் களமாடிய சீமானின் தம்பிகளுக்கு இந்தத் தேர்தல் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. 

-ஆ.விஜயானந்த்

http://www.vikatan.com/news/tamilnadu/64399-seeman-gets-angry-over-tn-assembly-election-result.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=3287

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின் முடிவு தோல்வியடைந்தவர்களுக்கு மட்டுமே
அதிர்ச்சியைத்தரவில்லை. வாக்களித்த அனைவருமே அதிர்ந்து போயிருக்கிறார்கள்! 
அனைவருக்குமே அதிர்ச்சி என்றால் இயந்திரம் தானாகவே வாக்களித்துக்கொண்டதாத் தெரியவில்லை.
ஒவ்வொரு தேர்தலின் முடிவினாலும் 25 ஆண்டுகாலங்கள் தமிழகம் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. 
வாழ்க நம் மக்கள்!
வாழ்க தமிழகம்!
வாழ்க மக்களாட்சி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Karthik
24 mins · 
 

'ஜெயிக்குற கட்சிக்குத்தான் ஓட்டு போடணும். இல்லன்னா ஓட்டு வேஸ்ட் ஆயிடும்'

படித்தவன், படிக்காதவன் என்ற பேதமில்லாது
95 % தமிழக மக்களின் எண்ணவோட்டம் இதுதான்.

'ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வா இருந்தாதான் இலவசப்பொருட்களும், நலத்திட்டங்களும் நம்ம ஊருக்கு வரும்' என்பதுதான் மக்களின் மனநிலையாக இருக்கும்போது தேர்தல் முடிவுக்குப் பின்னர் தஞ்சாவூருக்கும், அரவக்குறிச்சிக்கும் தேர்தலை அறிவித்ததே ராஜேஷ் லக்கானி செய்த அடி முட்டாள்தனம். இப்போது புத்திசாலித்தனமாக(!) அடுத்த மாதத்திற்கு தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார்கள் அதிமேதாவிகள்.

தேர்தல் முடிவு தெரிந்ததால் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் மக்கள் பெரும்பான்மையாக வாக்கு செலுத்துவார்கள். இதற்கு என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

அரவக்குறிச்சிலயும், தஞ்சாவூர்லயும் தேர்தல் நடத்துறதுக்குப் பதிலா இரண்டு தொகுதியையும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் டெண்டர் விற்றலாம். எதுக்கு மக்களை வேகாத வெயில்ல அலைய வச்சுக்கிட்டு?

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்... அண்ணன், பெற்றது.... வெற்றி.
தமிழக்தில்... ஏழாவது கட்சி அவனது கட்சி தான்.
அதற்குப் பின்..... எட்டுக் கட்சி இருக்கு.
இது சீமானுக்கு,   வியர்வை.... சிந்திய வெற்றி.

கட்டுமரம் பாவம்.... இன்னும் சில ஆண்டுகள் சக்கர நாற்காலியில் சுத்தி வந்து மண்டையை போட்டாலும், 
"மரீனா பீச்சில்..."  நினைவாலாயம்   அமைக்க,  ஜெயலலிதா சம்மதிக்க மாட்டார்.
கள்ளர் கூட்டம்... கிழவனை வைத்து,  பிளான் பண்ணினதே....  அதுக்குத்தான்.

அறிஞர்  அண்ணா, எம். ஜி. ஆர். அவர்களின் சமாதிக்கு பக்கத்தில்.....
"கட்டு மரத்துக்கும்,  ஒரு சமாதி கட்டுவம்"  என்று தான்... குடும்பமே... "நமக்கு நாம்" என்று களத்தில் இறங்கியது.
இது.... இனி... இந்த... ஜென்மத்தில் நடக்காது.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

எந்தப் படம் அது?:rolleyes:

மாயாண்டி குடும்பம்..

மாதவன் நடித்த தம்பி... இப்படிப் பல இருக்குண்ணே.

உந்த இன்னொருவில கிடந்து சேறு பூசிக்கிற நேரம்.. சினிமா பக்கமும் வாசிக்கிறது. tw_blush:

1 hour ago, தமிழ் சிறி said:

கட்டுமரம் பாவம்.... இன்னும் சில ஆண்டுகள் சக்கர நாற்காலியில் சுத்தி வந்து மண்டையை போட்டாலும், 
"மரீனா பீச்சில்..."  நினைவாலாயம்   அமைக்க,  ஜெயலலிதா சம்மதிக்க மாட்டார்.
கள்ளர் கூட்டம்... கிழவனை வைத்து,  பிளான் பண்ணினதே....  அதுக்குத்தான்.

அறிஞர்  அண்ணா, எம். ஜி. ஆர். அவர்களின் சமாதிக்கு பக்கத்தில்.....
"கட்டு மரத்துக்கும்,  ஒரு சமாதி கட்டுவம்"  என்று தான்... குடும்பமே... "நமக்கு நாம்" என்று களத்தில் இறங்கியது.
இது.... இனி... இந்த... ஜென்மத்தில் நடக்காது.
 

கட்டுமரம் சரி.. அதன் கட்சியும் சரி.. ஈழத்தமிழர் பற்றி தேர்தல் நேரத்தில் வாயே திறக்கல்ல.

ஜெயலலிதா.. மீண்டும்.. ஈழத்தமிழர் நலனுக்காக ஓரிரு வரியாவது பேசி இருக்கிறார். பதிலுக்கு வடக்கு முதல்வரும் வாழ்த்தனுப்பி இருக்கிறார். 

கட்டுமரம் கவுண்டது எவ்வளவோ நல்லம்.

இப்ப எதிர்கட்சி ஆனதே கட்டுமரம் கூட்டத்துக்கு கப்பியாமில்ல. முடியல்ல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

------

கட்டுமரம் சரி.. அதன் கட்சியும் சரி.. ஈழத்தமிழர் பற்றி தேர்தல் நேரத்தில் வாயே திறக்கல்ல.

ஜெயலலிதா.. மீண்டும்.. ஈழத்தமிழர் நலனுக்காக ஓரிரு வரியாவது பேசி இருக்கிறார். பதிலுக்கு வடக்கு முதல்வரும் வாழ்த்தனுப்பி இருக்கிறார். 

கட்டுமரம் கவுண்டது எவ்வளவோ நல்லம்.

இப்ப எதிர்கட்சி ஆனதே கட்டுமரம் கூட்டத்துக்கு கப்பியாமில்ல. முடியல்ல. tw_blush:

"கவிண்டு..... விழுந்தாலும், மீசையில... மண் படேல்லை"  எண்டு... 
கட்டு மரக் கோஸ்டி... பீலா  விடுறாங்கள். அதை... நம்பாதீங்க, நெடுக்ஸ்.  Smiley

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:
Karthik
24 mins · 
 

'ஜெயிக்குற கட்சிக்குத்தான் ஓட்டு போடணும். இல்லன்னா ஓட்டு வேஸ்ட் ஆயிடும்'

படித்தவன், படிக்காதவன் என்ற பேதமில்லாது
95 % தமிழக மக்களின் எண்ணவோட்டம் இதுதான்.

'ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வா இருந்தாதான் இலவசப்பொருட்களும், நலத்திட்டங்களும் நம்ம ஊருக்கு வரும்' என்பதுதான் மக்களின் மனநிலையாக இருக்கும்போது தேர்தல் முடிவுக்குப் பின்னர் தஞ்சாவூருக்கும், அரவக்குறிச்சிக்கும் தேர்தலை அறிவித்ததே ராஜேஷ் லக்கானி செய்த அடி முட்டாள்தனம். இப்போது புத்திசாலித்தனமாக(!) அடுத்த மாதத்திற்கு தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார்கள் அதிமேதாவிகள்.

தேர்தல் முடிவு தெரிந்ததால் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் மக்கள் பெரும்பான்மையாக வாக்கு செலுத்துவார்கள். இதற்கு என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

அரவக்குறிச்சிலயும், தஞ்சாவூர்லயும் தேர்தல் நடத்துறதுக்குப் பதிலா இரண்டு தொகுதியையும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் டெண்டர் விற்றலாம். எதுக்கு மக்களை வேகாத வெயில்ல அலைய வச்சுக்கிட்டு?

இந்த சனநாயக விரோதச் சூழலில் இருந்து மக்களை அவர்களின் சிந்தனைகளை எப்படி வெளிக்கொணர்வது.. நாட்டின் அரசியலை தீர்மானிப்பது என்பது தமது தேசம்.. தமது எதிர்காலம் பற்றிய தீர்மானம் என்பதை எப்படி மக்கள் உணர வைப்பது.. இது பற்றித்தான் இப்போது அதிகம் சிந்திக்க வேண்டி இருக்கிறது. மாறாக இலவசம்.. பணம்.. கட்சி.. சின்னம்.. தேர்தல் திணைக்களம்.. பணநாயகம் என்று புலம்பிக் கொண்டிருப்பது.. மக்களை மந்தைகளாக்கி வைச்சிருப்பவர்களுக்கே கூடிய ஆதாயம் அளிக்கும்.tw_warning:

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு 2009 இற்கு முன்னர் பிரச்சாரத்திற்காக பாரிய தொகை வழங்கப்பட்டது உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
தோற்றுப்போன ஜெயலலிதா: ஓட்டை உடைசல்கள் வழியே மீண்டும் பதவியேற்கிறார்: த.தே.பே.
 
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 44.34 விழுக்காடு (1,79,83,168) வாக்குகள் பெற்ற அ.தி.மு.க., தற்போது அதிலிருந்து 4 விழுக்காடு சரிந்து, 40.8 விழுக்காடு வாக்குகளே  பெற்றுள்ளார். பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படாத செயலலிதா, ஓட்டை உடைசல்கள் வழியே தற்போது மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் க.அருணபாரதி கூறியுள்ளார். 
 
தோற்றுப்போன செயலலிதாவும் “மாற்று” அரசியல் முழக்கமும்..! என்ற தலைப்பில் க.அருணபாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், 
 
சனநாயகத்தின் முதன்மைக்கூறு என போற்றப்பட்டே, தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறே, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கானத் தேர்தலும் நடைபெற்றது.
 
சனநாயக அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதென்றால், அவர் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது தற்போது நடைபெறும் தேர்தலின் அடிப்படை விதி! ஆனால், உண்மையில் இங்கு இதுதான் நடக்கிறதா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி!
 
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் மொத்தம் 5.77 கோடி பேர் (5,77,33,574). அதில், தேர்தலில் பங்கேற்றவர்கள் 4.28 கோடி பேர் (4,28,73,674). அதாவது, மொத்தமுள்ள வாக்காளர்களில் 74.26 விழுக்காட்டினர் மட்டுமே தேர்தலில் பங்கேற்றனர். இவையெல்லாம் நாம் அறிந்த செய்தி தான். அறிந்து கொள்ளாத இன்னொரு செய்தியும் இருக்கிறது!
 
தேர்தலில் வாக்களித்த 4.28 கோடி பேரில், முதலமைச்சர் செயலலிதா மீதுள்ள வெறுப்பால் - செயலலிதா ஆட்சியில் தொடர வேண்டாம் என்ற முடிவின் பேரில், தாங்கள் விரும்பிய வேறு கட்சிகளுக்கும், எந்தக் கட்சிக்கும் வாக்கில்லை என நோட்டாவுக்கும் வாக்களித்த மக்களின் எண்ணிக்கை சற்றொப்ப 2.56 கோடி (2,55,90,775). அதாவது 59.2 விழுக்காட்டினர்!
 
ஆனால், “செயலலிதாவே ஆட்சியில் தொடர வேண்டும்” என வாக்கு அளித்தவர்களோ, 1.76 கோடி பேர் தான் (1,76,17,060). அதாவது, 40.8 விழுக்காட்டினர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 44.34 விழுக்காடு (1,79,83,168) வாக்குகள் பெற்ற அ.தி.மு.க., தற்போது அதிலிருந்து 4 விழுக்காடு சரிந்து, 40.8 விழுக்காடு வாக்குகளே  பெற்றுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
 
இப்படி, “பெரும்பான்மையினரின் தேர்வு” என்ற பெயரில், சிறுபான்மை வாக்குகள் வாங்கிய ஒருவரால், தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் பதவியில் அமர முடியும் என்பது  மீண்டும் ஒருமுறை நம் கண்முன்னேயே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
அவ்வழியிலேயே, இந்தத் தேர்தலில் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படாத செயலலிதா, ஓட்டை உடைசல்கள் வழியே தற்போது மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். போகட்டும்! 
 
தமிழ்நாட்டு உரிமைகளை இந்திய அரசின் காலடியில் வைக்கப் பயன்படும் அடிமைப் பதவிக்கு, பெரும்பான்மை வாக்கு வாங்கினால் என்ன - சிறுபான்மை வாக்கு வாங்கினால் என்ன? இரண்டும் ஒன்றுதான்!
 
ஆனால், போலி சனநாயகத்துடன் நடத்தப்படும் - அதிகாரமற்ற இந்த சட்டப்பேரவைக்கானத் தேர்தலில், பணபலமிக்க திராவிட அரசியல் கட்சிகளை வீழ்த்திவிட முடியும் என்றும், “மாற்று அரசியல்” என்ற பெயரிலும், தேர்தல் அரசியல் களத்தில் கடுமையாக உழைத்த நம் நண்பர்கள் பலர் தோற்றுள்ளது வருத்தத்தையேத் தருகிறது. 
 
அணு உலைக்கு எதிரானப் போராட்டத்தில் முதன்மைப் பங்காற்றிய முனைவர் சுப. உதயக்குமார், பொதுநல வழக்குகளில் அறியப்பட்ட டிராபிக் இராமசாமி, மணல் கொள்ளைக்கு எதிரான போராளித் தோழர் பிரபாகரன் என, தேர்தலுக்கு வெளியே உழவர் போராட்டம் - மணல் கொள்ளை எதிர்ப்பு - மதுக்கடை எதிர்ப்பு - சூழலியல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சிக்கல்களில் போராடிய பலரும், தேர்தல் அரசியலின் இன்றைய யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல், நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். எனப் பல்வேறு கட்சிகளின் சார்பில் பல தொகுதிகளில் போட்டியிட்டுத் தோற்றுள்ளனர்.     
 
உண்மையான சமூக மாற்றத்திற்குப் போராடுபவர்கள், தேர்தல் அரசியலில் சிக்கிச் சீரழியக் கூடாது என்பதே எங்கள் விருப்பம் – எம் கோரிக்கை! ஏனெனில், உண்மையான மாற்று, இதற்கு வெளியில்தான் இருக்கிறது.
 
கொள்கைகள் பேசி – தேர்தல் களத்தில் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கிட முடியாது. ஏனெனில், இன்றையத் தேர்தல் களம் என்பதே, ஆதிக்க சக்திகள் நம்மை நாமே வீழ்த்திக் கொள்ள உருவாக்கப்பட்ட ஏற்பாடுதான்! ஆங்கிலேயர்கள் இதை அறிமுகப்படுத்தினர். அவர்களுக்குப் பின் நம்மை ஆண்டுகொண்டிருக்கும் ஆதிக்க இந்தியத்தேசியவாதிகள் இதை கடைபிடிக்கின்றனர்.
 
அன்னா அசாரே போன்ற ஊழல் எதிர்ப்புத் தன்னார்வளர்களை, முனைவர் உதயக்குமார் போன்ற சூழலியல் செயல்பாட்டாளர்களை, மாவோயிஸ்ட்டுகளை எனப் பலரையும் – அவர்களது போர்க்குணமிக்கப் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் விதமாக, எம்மோடு “சனநாயகப் பாதையில்” - தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என இந்திய அரசு சவால் விடுவது, தற்செயலானதல்ல!
 
சீரழிந்த நிலையிலுள்ள தேர்தல் அரசியலின் எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல், தேர்தல் அரசியல் சகதிக்குள் சிக்குபவர்கள், தமது (முழு) ஆற்றல் அனைத்தையும் தேர்தலில் செலவிட்டு, பணபலமிக்க எதிரிகளிடம் தோற்றுப்போய், அந்த விரக்தியின் காரணமாக  சோர்வுற்று - பொது வாழ்விலிருந்தே விலகிக் கொள்ளும் அபாயத்தை நோக்கித் தள்ளப்படுவர். இதுவே, இன்றைய வருந்தத்தக்க மெய்நடப்பு!
 
மக்களுக்கான உண்மையான களம், தேர்தல் அரசியலுக்கு வெளியே இருக்கிறது! அதை வளர்த்தெடுப்பதே, இன்றையத் தலையாயக் கடமை – தலையாயத் தேவை!  
 
“மாற்று அரசியல்” என்பது தேர்தல் அரசியலில் பதவி வெல்வதில் கிடையாது. “மாற்று அரசியல்” என்பது வெறும் ஆளை மாற்றும் – ஆட்சியாளர்களை மாற்றும் அரசியல் கிடையாது அது, மக்களிடையே உருவாக்கப்பட வேண்டிய புதிய எழுச்சி - புதிய மறுமலர்ச்சி - புதிய போக்கு! அதை தேர்தல்களின் மூலம் வென்றெடுக்க முடியவே முடியாது.
 
அடுத்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா – பணம் கிடைக்குமா – பதவி கிடைக்குமா என எதிர்ப்பார்ப்பவர்களை சேர்த்து வைத்துக் கொண்டு, “மாற்று அரசியல்” – “இலட்சிய அரசியல்” என்றெல்லாம் பேசினால், அது தோல்வியில்தான் முடியும்.
 
கொஞ்சம் கொஞ்சமாக இந்தியத்திடம் உரிமைகளை இழந்துவரும் தமிழ்நாட்டுக்கு, தற்போதையத் தேவை, புதிய முதல்வரோ – புதிய மாநில அரசோ அல்ல! பதவி – பணம் – விளம்பரம் – இவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு இலட்சியத்திற்காக களத்தில் நிற்கத் துணியும் இலட்சக்கணக்கான இளைஞர்களே, இன்றைய தேவை!
 
அவர்களை உருவாக்குவது – வழிநடத்துவது ஒன்றே எதிர்காலத் தமிழ்ச் சமூகத்திற்குப் பயனளிக்கும் செயல். அதுவே மாற்று அரசியல்! அந்தப் பாதையில் உருவாகும் இலட்சிய மனிதர்களே மாற்று அரசியலின் அடிப்படை அலகு! அவர்களே நம் இலக்கு!
 
இது நீண்ட நெடிய காலமெடுக்கும் கடினமான செயல்தான்! இருப்பினும் வேறு வழியில்லை! தனிநபர் தொடங்கி பெரும் அரசியல் கட்சிகள் – ஆட்சியாளர்கள் வரை, புரையோடிப் போயிருக்கும் பிழைப்புவாத மனநிலையை விரட்ட,, இலட்சியத்தை நோக்கி சமூகத்தை உந்தித்தள்ளும் மாற்று அரசியல் சக்திகளே இன்றைக்குத் தேவை!
 
இத்தேர்தலில் வாக்களிக்க மறுத்தோர் இடையேயும் “யாருக்கும் இல்லை” என நோட்டாவில் பதிவு செய்தோரிடையேயும் இதற்கான மாற்று முயற்சிகள் தொடங்கினாலே போதும்! அதுவே எதிர்காலத்தில் மாற்று ஆற்றலாக வளர வாய்ப்புள்ளது.
 
இவற்றையெல்லாம் உணர்ந்து, தமிழ் மக்களை போராட்டக் களங்களுக்கு அணிதிரட்டும் அடிப்படைப் பணிகளில் நாம் ஈடுபடுவோம்! அதுவே இச்சமூகத்தை மாற்றும்! 
 
  • கருத்துக்கள உறவுகள்

goshan_che

 

வைகோ அவருக்கு என்று ஒரு கொள்கை இருக்கா , அவரின் அரசியல் சரிவுக்கு அவரே தான் காரணம் , அவர் கூட்டனி வைக்காத கட்சி எது , நீங்க எல்லாம் அண்ணன் சீமானை விமர்சிக்கிறீர்களே , நீங்கள் விரும்பும் ஆட்களை படு கேவலமாய் விமர்சிக்க பல ஆதாரம் இருக்கு என்னிடம் , வைகோ வாயில் இருந்து வெளியில் வருவது நடிப்பு நாடகம் பொய் , கருணாநிடியோடு நிக்கும் போது கருணாநிதியை புகழ்  பாடுவது  , பிறகு ஜெயாவிடம் வந்தா பிறகு சகோதரி என்று புகழ்ந்து தள்ளுவது , அன்மையில் ஒரு காணொளி பார்த்தேன் வெளிப்படையாய் சொல்லி இருந்தார் ,தமிழ் தேசியம் பேசி கொண்டு புது எதிரி வாரான் திராவிடர்கள் ஆகிய நாம் ஒன்றாய் நிக்க வேனும் என்று , 7நியுஸ் தொலைக் காட்சி விவாதத்தில் நேயர் கேட்ட கேள்விக்கு வைகோ என்று அழைக்கபடும் சைக்கோ பச்சை பொய்யை மக்கள் முன்னால் சொன்னார் , இவர தூக்கி பிடிக்க யாழில் கொஞ்சப் பேர் ஹா ஹா வாழ்க வளமுடன் 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேர் காத்துகொன்டு இருக்கிறீர்கள்........................................

 

FpP8l.jpg

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில்,தொகுதிக்கு 10லச்சம் சேர்த்து முடிஞ்ச கையோட தொலைக்காட்சிக்கு நேற்று உண்டியல் வைச்சிட்டாங்க:grin:

  • கருத்துக்கள உறவுகள்
  1. நந்தன்

    அண்ணா ஏன் சும்மா புரளியை கிளப்பிறிங்க , 
    அணணன் சீமான் வெளிப்படையாய் நம் உறவுகளிடம் வெளிப்படையாய் சிறு உதவியை கேட்டார் தேர்தலின் போது வாகனத்துக்கு பெற்றோல் அடிக்க மற்றும் தேர்தல் தேவைக்காக மக்களிடத்தில் கொஞ்சம் உதவுங்க என்று வெளிபடையாய் கேட்டார் , ஆனால் நீங்கள் ஒரு தொகுதிக்கு பத்து லச்சம் குடுத்தார்கள் என்பது உங்களின் கட்டுக் கதை மற்றும் இது ஒரு பொய் புரளி என்று புரிந்து கொள்ள முடியுது , முடிஞ்சா உதவுங்க விருபம் இல்லாட்டி வில‌கி போங்க , மற்றவர்களை தேவை இல்லாமல் கொச்சைப் படுத்த வேண்டாம் , நடக்காததை நடந்தது என்று சொல்ல வேண்டாம் , அவரை விரும்பும் மக்கள் அவருக்கு கண்டிப்பாய் உதவுவார்கள் , உங்களுக்கு உதவ விருப்பம் இல்லாட்டி பேசாமைய்  இருங்க , அந்த நாள் தொட்டு இந்த நாள் வரை உங்களின் வெட்டிக் கதையும் ஒன்றுக்கும் உதாவத கருத்தையே யாழில் பதிவிடுறீங்கள் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.