Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை வெள்ளத்தில் பலியானவர்கள் எத்தனை பேர்?

Featured Replies

சென்னை வெள்ளத்தில் பலியானவர்கள் எத்தனை பேர்?

     சென்னையின் பல இடங்களில் வெள்ளத்தில் நனைந்த வீட்டுப்பொருட்கள் குப்பைகளாக குவிந்துள்ளன

 சென்னையின் பல இடங்களில் வெள்ளத்தில் நனைந்த வீட்டுப்பொருட்கள் குப்பைகளாக குவிந்துள்ளன

கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்யாத நிலையில், நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பப் போராடிவருகிறது.

டிசம்பர் 2ஆம் தேதியன்று சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தின் காரணமாக, தற்போதும் அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளும் தாம்பரம், முடிச்சூர், வடசென்னையின் பல பகுதிகளும் இன்னமும் பாதிப்பிலிருந்து மீளாமலேயே காட்சியளிக்கின்றன.

பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து ஐந்து நாட்களுக்கு மேலான நிலையிலும் மின் விநியோகம் சீரடையவில்லை. அந்தப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரின் காரணமாகவே, தற்போது அங்கு மின் இணைப்புக் கொடுக்க முடியாத நிலை இருப்பதாக மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

  வெள்ளத்தில் மூழ்கி பாழான பல லட்சம் பெறுமான வாகனங்கள் வெறும் பழைய இரும்பாக மாறிய அவலம்

 வெள்ளத்தில் மூழ்கி பாழான பல லட்சம் பெறுமான வாகனங்கள் வெறும் பழைய இரும்பாக மாறிய அவலம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரின் பல பகுதிகளில் அரசு அதிகாரிகளோ, உள்ளாட்சி நிர்வாகிகளோ வரவில்லை என்ற கோபம் தென்படுகிறது.

மிகவும் பாதிக்கப்பட்ட சூளைப் பள்ளம் போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள், குப்பைகள் அகற்றப்படாத காரணத்தால், சரும நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததால், நாசமான பொருட்கள் அனைத்தும் சாலைகளில் கொட்டப்பட்டுவருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய திறந்தவெளிக் குப்பை மேடாக தற்போதும் காட்சியளிக்கின்றன.

இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வத் தொண்டர்களும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்களை வழங்கிவருகின்றனர்.

  ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய வீட்டு உபயோகப்பொருட்கள் பலவும் பழுதாகிக் கிடக்கின்றன  ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய வீட்டு உபயோகப்பொருட்கள் பலவும் பழுதாகிக் கிடக்கின்றன

ஆனால், உதவிகளை அளிக்கச் செல்லும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சில பிரச்சனைகளையும் சந்தித்துவருகின்றன. பல இடங்களில் முதல்வரின் படத்துடன் உதவிகளை அளிக்கச் சொல்லி வற்புறுத்தல்கள் இருப்பதாகவும் வேறு சில இடங்களில் உள்ளூர் அரசியல்வாதிகள் தாங்கள்தான் அந்த உதவியை அளிப்போம் எனக் கூறுவதாகவும் இம்மாதிரியான உதவிப் பணியில் ஈடுபட்டிருக்கும் கேர் அண்ட் வெல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ராம் பிபிசியிடம் கூறினார்.

இருந்தபோதும் இந்த வெள்ளத்தில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு இதுவரை முழுமையான தகவல் எதையும் வெளியிடவில்லை. தமிழக முதலமைச்சர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கும் நிதி உதவி குறித்த அறிவிப்புகளின் மூலமே இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுவருகிறது.

சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் விரைவில் தெரிவிப்பதாகவும் கூறினர்.

இதுபோன்ற முந்தைய நிகழ்வுகளில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக அரசு விரிவான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் ஜி.சி. சேகர்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி

தமிழகம் புதுச்சேரியில் வெள்ளம் பாதித் த பகுதிகளை இன்று பார்வையிட்டுச் சென்றார்.

இதற்கிடையில், தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/india/2015/12/151208_chennai

  • தொடங்கியவர்

தமிழக வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன ? இன்னும் தகவல் இல்லை

151203020840_chennai_floods_624x351_reut

கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று சென்னை நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமான தகவல்கள் இதுவரை தமிழக அரசால் முழுமையாக வெளியிடப்படவில்லை.

டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பிந்தைய மழை - வெள்ளத்தில் சென்னை, கடலூர் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த இரு நகரங்களிலும் மழை - வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

இந்தச் சூழலில் முதலமைச்சர் அறிவிக்கும் நிவாரணத் தொகைகளின் மூலமாகவே உயிரிழப்புகள் தொடர்ந்து கணக்கிடப்பட்டுவருகின்றன.

2ஆம் தேதியிலிருந்து இன்றுவரை முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் நிவாரண அறிக்கைகளின் படி, உயிரிழந்த 107 பேரின் உறவினர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அறிக்கைகளில், நவம்பர் மாதம் பெய்த மழையில் உயிரிழந்தவர்களுக்கும் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் மட்டும் இந்த வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் கேட்டபோது, அவர் இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிப்பதில் இருப்பதன் சிக்கல்கள் குறித்தும் தன்னால் பேச முடியாது என்றும் நிவாரண உதவி குறித்த செய்தியை மட்டுமே தெரிவிக்க முடியும் என்றும் பிபிசியிடம் கூறினார்.

இந்த வெள்ளத்தின் காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் தனித்தனிச் சம்பவங்களில் பலர் உயிரிழந்திருக்கும் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. பல்வேறு மாவட்டங்களில், மழை வெள்ளம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 29 பேரின் உறவினர்களுக்கு தமிழக முதல்வர், நிவாரண உதவியை அறிவித்திருக்கும் நிலையில், இம்மாதிரியான அறிவிப்புகள் பல நாட்களுக்கு தொடரும் என்றே தெரிகிறது.

http://www.bbc.com/tamil/india/2015/12/151209_tnfloods

தமிழகத்தில் வெள்ளம் எண்டு ஏன் நாங்கள் ஆகக் கத்திக் கொண்டு திரிகிறோம்?? தமிழகத்தில் இவ்வளவு தமிழனும் இருக்கக்தக்கதாகத் தானே 2009/மே இல் எமது தாயகத்தில் இன அழிப்பு நடந்தது..... :rolleyes:

எங்கு வெள்ளம் வந்தாலும் கவலைக்குரிய விடயம் தான்.. ஏன் இவர்கள் மட்டும் தான் மனிதர்களா??

Edited by மீனா

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மீனா said:

தமிழகத்தில் வெள்ளம் எண்டு ஏன் நாங்கள் ஆகக் கத்திக் கொண்டு திரிகிறோம்?? தமிழகத்தில் இவ்வளவு தமிழனும் இருக்கக்தக்கதாகத் தானே 2009/மே இல் எமது தாயகத்தில் இன அழிப்பு நடந்தது..... :rolleyes:

எங்கு வெள்ளம் வந்தாலும் கவலைக்குரிய விடயம் தான்.. ஏன் இவர்கள் மட்டும் தான் மனிதர்களா??

தமிழனாக இருக்கத்தேவையில்லை

ஆனால் மனிதராக...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்கள் எமக்காக கவலைப்படவில்லைத்தான். அதற்காக அவர்கள் பாணியில் நாமும் இருந்தால் அவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்?

  • கருத்துக்கள உறவுகள்

இதே தமிழகத்தைதான் ஈழத்திற்காக அத்தனை இயக்கங்களும், ஈழத்தவர்களும் காலம் காலமாக தஞ்சம் கொள்ள பயன்படுத்திக்கொண்டனர். இதே தமிழர்களைத்தான் மலையகத்தின் குடியுரிமையில் முதுகில் குத்தினீர்கள்..

உங்களுக்கெல்லாம் நல்ல மனசப்பா, நன்றி மறத்தல் நன்றன்று..!

GOOD BYE..!

Edited by ராசவன்னியன்

10 hours ago, மீனா said:

தமிழகத்தில் வெள்ளம் எண்டு ஏன் நாங்கள் ஆகக் கத்திக் கொண்டு திரிகிறோம்?? தமிழகத்தில் இவ்வளவு தமிழனும் இருக்கக்தக்கதாகத் தானே 2009/மே இல் எமது தாயகத்தில் இன அழிப்பு நடந்தது..... :rolleyes:

எங்கு வெள்ளம் வந்தாலும் கவலைக்குரிய விடயம் தான்.. ஏன் இவர்கள் மட்டும் தான் மனிதர்களா??

மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம் மீனா. இதே சென்னையிலும் தமிழகத்திலும் தான் எமக்காக தமது உயிரை கொடுத்தவர்கள் வாழ்ந்தார்கள்..அவர்களின் குடும்பத்தினர் வாழ்கின்றனர். தீக்குளித்தவர்கள் தவிர எமக்காக போராடி சிறை சென்று வாழ்க்கையை துலைத்த பலர் வாழ்கின்றனர். தவிர அவர்கள் எமக்காக அழவில்லை அதனால் நாம் அவர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பது மனிதாபிமானமற்ற ஒரு எண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மக்களை பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடியும்........அரசியல் தூரநோக்கற்ற தன்மை ..சாதிய,சமயப்பிளவுகள் ..சினிமா மனநோய் ...அடிமை வாழ்க்கையில் விருப்பம்.....ஓட்டை விற்பது ....எதற்கெடுத்தாலும் இலவசம் என்றால் அதன் பின் ஓடுவது 
இதன்  ஒட்டுமொத்த விளைவே இந்த இழப்புகள் .....ஆனால் இவர்கள் இன்னும் திருந்துவதாக தெரியவில்லை .....மிகவிரைவிலே கலைஞர் ஆட்சியை பிடித்து (அவரது )மக்களுக்கு நல்லது செய்வார்  
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இதே தமிழகத்தைதான் ஈழத்திற்காக அத்தனை இயக்கங்களும், ஈழத்தவர்களும் காலம் காலமாக தஞ்சம் கொள்ள பயன்படுத்திக்கொண்டனர். இதே தமிழர்களைத்தான் மலையகத்தின் குடியுரிமையில் முதுகில் குத்தினீர்கள்..

உங்களுக்கெல்லாம் நல்ல மனசப்பா, நன்றி மறத்தல் நன்றன்று..!

GOOD BYE..!

அட போங்க வன்னியன் சார்...
உங்கள்  ஊரில இருக்கிற சில வெத்து வெட்டுகள் (உதாரணம் சோ, எஸ் வீ சேகர், சுப்ரமணிய ஸ்வாமி கோஷ்டி போல எங்க ஊரிலும் ஒரு கொஞ்ச பேர் இருப்பார்கள் தானே. 
இதை எல்லாம் இந்த காதால் எடுத்து ....சீய் ...சீய்  எடுக்காமலே மற்றக் காதால் விட்டுவிடவேணும்.
அதுவே அனைவருக்கும் ஷேமம் !!!
   
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை ராமாவரத்தில் உள்ள டி.எல்.எஃப். வளாகத்தில் வெள்ளம் வடியாத நிலையில் மின் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஐ.டி நிறுவனங்களுக்கு நுழைய ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தாயிரம் பணியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கும் போரூர் சிக்னலுக்கும் நடுவே அமைந்திருக்கிறது டி.எல்.எஃப். ஐ.டி. பார்க். புறநகரில் பெய்து முடித்த மழையின் பெரும்பகுதி, டி.எல்.எஃப்.பின் சரிபாதியை மூழ்கடித்துள்ளது. டி.எல்.எஃப் வளாகத்தில் 160 ஐ.டி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது; 10 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.கடந்த நவம்பர் 30ம் தேதியும் டிசம்பர் 1ம் தேதியும் பெய்த கனமழையும், அடையாறு ஆற்றின் வெள்ளநீரும் கீழ் தளங்களை மூழ்கடித்துள்ளது. வளாகத்தில் 3 அடித்தளங்களை மழை நீர் மூடியுள்ளதால் நீரை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 தளத்திலும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மழை வெள்ளம் புகுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது. ஊழியர்களின் கதி என்ன? 1/6 ஊழியர்களின் கதி என்ன? அங்குள்ள 7 மாடியிலும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வரையில் பாதுகாப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தன. மூன்று தரைத் தளங்களில் (பேஸ் மெண்ட்) சில துணை நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்நிலையில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் இந்த வளாகத்துக்குள் என்ன சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. புஃட் கோர்ட், கேன்டீன், நூற்றுக்கணக்கான கால் சென்டர்கள் என்று தரை தளத்தில் இயங்குகின்றன. ஒரு நாளின் எந்த நேரமும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் இந்த வளாகத்துக்குள் இருந்தவர்களின் கதி என்னவானது என்பது தெரியவில்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-dlf-it-park-basement-parking-flooded-241914.html

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மீனா போல ஆதங்கம் இருக்கின்றது ஆனால் அரசியல் வாதிகள் விடும் பெரிய தவறுகளுக்கு மக்கள் என்ன செய்யமுடியும் ? 2009 இல் முடிந்தவரைக்கும் போராடினார்கள் அதனை அங்குள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக கொலைஞர் குடும்பத்தினர் தமக்கு சாதகமாக்கினார்கள் இதனால் எமது மக்கள் அழிக்கப்பட்டார்கள். 

அவர்களுக்காக ஏதும் செய்யாவிட்டாலும் அவர்களைக்காக்க மனிதாபிமானம் உள்ளவர்களாய் பிரத்திக்கலாம் அல்லவா 

10 hours ago, ராசவன்னியன் said:

இதே தமிழகத்தைதான் ஈழத்திற்காக அத்தனை இயக்கங்களும், ஈழத்தவர்களும் காலம் காலமாக தஞ்சம் கொள்ள பயன்படுத்திக்கொண்டனர். இதே தமிழர்களைத்தான் மலையகத்தின் குடியுரிமையில் முதுகில் குத்தினீர்கள்..

உங்களுக்கெல்லாம் நல்ல மனசப்பா, நன்றி மறத்தல் நன்றன்று..!

GOOD BYE..!

19 hours ago, மீனா said:

தமிழகத்தில் வெள்ளம் எண்டு ஏன் நாங்கள் ஆகக் கத்திக் கொண்டு திரிகிறோம்?? தமிழகத்தில் இவ்வளவு தமிழனும் இருக்கக்தக்கதாகத் தானே 2009/மே இல் எமது தாயகத்தில் இன அழிப்பு நடந்தது..... :rolleyes:

எங்கு வெள்ளம் வந்தாலும் கவலைக்குரிய விடயம் தான்.. ஏன் இவர்கள் மட்டும் தான் மனிதர்களா??

அன்புள்ள ராச வன்னியன் அவர்களே....... இத்திரியில் காணப்படும் கீழ்த்தரமான கருத்துக்களை கண்டுகொள்ளாமல். தொடர்ந்து இணைந்திருங்கள். யாரோ போராட தாங்கள் நல்லா இருக்கவேணும் என்ற கீழ்த்தர சிந்தனையுடையவர்கள் தான் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர். 

மீனா, உங்களுக்கு மனசென்று ஒன்றும் இல்லையா?

நிர்வாகத்திற்கு,

சந்தர்ப்பம் பார்த்து ஓவ்வொரு கள உறுப்பினர்களுக்கும் செய்யப்படும் இந்த கீழ்த்தரமான விடையங்கள் நிர்வாகத்தால் வரவேற்கப்படுகின்றதா? 

 மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் துயரங்களில் யாழ் இணையமும் பங்குகொள்கின்றது என முகப்பில் போடப்பட்டிருக்கின்றது. ஆனால் உள்ளே பார்த்தால் வேறு மாதிரி இருக்குது.

அரசியல்வாதிகளின் செயல்களுக்காக தமிழகமக்களை வசை பாடியிருப்பது........தூசனம் பாவித்த மாதிரி தெரியவில்லையா? 

11 hours ago, ராசவன்னியன் said:

இதே தமிழகத்தைதான் ஈழத்திற்காக அத்தனை இயக்கங்களும், ஈழத்தவர்களும் காலம் காலமாக தஞ்சம் கொள்ள பயன்படுத்திக்கொண்டனர். இதே தமிழர்களைத்தான் மலையகத்தின் குடியுரிமையில் முதுகில் குத்தினீர்கள்..

உங்களுக்கெல்லாம் நல்ல மனசப்பா, நன்றி மறத்தல் நன்றன்று..!

GOOD BYE..!

என்னா சார் இது...? 

வடக்கு முதலமைச்சரின் கருத்தை கவனியுங்கள் ஐயா...  இதை விட்டு போட்டு குஞ்சு குறுமானுக்காக எல்லாம் இரத்த அழுத்ததை ஏத்தி கொண்டு..

நாங்கள் இன்னும் முத்துக்குமாரனை மறக்கவில்லை...  அவன் ஏற்றி விட்ட தீயை  இண்டைய திராவிட தலைமை கொழுந்து விட்டு எரியவிடாமல்  தண்ணீர் ஊற்றி அணைச்சதை கவலையோடு கவனிக்கவும் தவறி இருக்கவில்லை...  அதையும் மீறி இளைஞர்கள் அயர்சி இல்லாமல் போரடியதையும் பார்த்தோம்... 

வடக்கு முதல்வர் சொன்னது போல காவிரியின் காட்டாற்று வெள்ளத்தை தடுக்க நாட்டு மக்கள் எல்லாம் முனையும் போது அவர்களுக்கு புட்டு அவித்து கொடுத்த செம்மணல் செல்வியின் கையறு நிலையிலேயே ஈழத்தமிழினம் இருக்கிறது... 

கடந்த இரண்டு நாட்கள் சிலராக சேர்ந்து தெரிந்த பலரிடம் உதவி கேட்டு நிதியாக பெற்று கொடுத்து அனுப்ப முயல்கிறோம்...  எங்களுக்கு தெரியும் அது தேவைகளுக்கு எதிராக வெறும் சோழப்பொரி எண்று... எண்றாலும் ஒரு வகை திருப்தி...  அவ்வளவுதான் சொல்ல முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைப்பிரித்து குளிர் காயும் கயமத்தனங்களுக்கு பலியாகாதீர்கள் ராசவன்னியன்.......

யாழில் ,

உலகில் நடந்த பல இயற்கை அனர்த்தங்களில் மக்கள் அழிவுகளை பார்த்து இவர்களும் எங்கள் அழிவிற்கு காரணமானவர்கள் என்று குதூகலித்த மனிதாபிமானிகள் தான் இன்று முதலை கண்ணீர் வடிகின்றார்கள் .

மனிதாபிமானம் என்றால் சிங்கள பொதுமக்கள் இறந்தாலும் வரவேண்டும் ,

இங்கு பலருக்கு இருப்பது மனிதாபிமான வேசம் .தங்கள் தேவைக்கு எப்படியும் வேஷம் போடுவது இவர்களுக்கு கை வந்த கலை .

இயற்கை,மனிதர் உருவாக்கும்  அனர்த்தத்தில் எங்கு அப்பாவி பொதுமக்கள்  இறந்தாலும் அவர்கள் அஞ்சலி செலுத்தப்பட வேண்டியவர்களே .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, arjun said:

யாழில் ,

உலகில் நடந்த பல இயற்கை அனர்த்தங்களில் மக்கள் அழிவுகளை பார்த்து இவர்களும் எங்கள் அழிவிற்கு காரணமானவர்கள் என்று குதூகலித்த மனிதாபிமானிகள் தான் இன்று முதலை கண்ணீர் வடிகின்றார்கள் .

மனிதாபிமானம் என்றால் சிங்கள பொதுமக்கள் இறந்தாலும் வரவேண்டும் ,

இங்கு பலருக்கு இருப்பது மனிதாபிமான வேசம் .தங்கள் தேவைக்கு எப்படியும் வேஷம் போடுவது இவர்களுக்கு கை வந்த கலை .

நன்றாய் சொன்னீர்கள் அர்ஜுன் 
தமிழகத்தில்  இயற்கை அனர்த்தத்தினால்  ஏற்பட்ட மக்கள் அழிவுகளை பார்த்து உங்கள் சகபாடிகள், வாரிசுகள்  இவர்கள்  எங்கள் அழிவிற்கு காரணமானவர்கள் என்று இன்று குதூகலிக்கிறார்கள்.
நீங்கள் அப்படி நினைக்கவில்லை என்று தான் நான் நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்

அல்லல்படும் மக்களுக்கு உதவி புரியாவிட்டாலும், ஆறுதல் வார்த்தைகள்கூட சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழர்களாக மதிக்காவிட்டாலும் சக மனிதர்களாகவாவது மதிக்கவேண்டும். அதுகூட இல்லாத கல்மனம் கொண்டு, காயப்படுத்துவதன் மூலம் வெறும் வன்மத்தைத்தான் சிலர் காட்டுகின்றார்கள். இவர்கள் முள்ளிவாய்க்காலில் மக்கள் அவலப்பட்டபோதும், அழிந்தபோதும் அவற்றையும் வெறும் செய்திகளாகத்தான் பார்திருப்பார்கள்.

எனக்கு நேரத்திற்கு நேரம் முகம் மாற்றி வேஷம் போட தெரியாது .

திண்ணையில் முதலிலேயே அனுதாபங்களை தெரிவித்து இருந்தேன் ,

இங்கு பலர் இந்த துள்ளு துள்ளுவது சென்னை மக்களுக்காக இல்லை யாழில் இருக்கும் கோஸ்டி பிரச்சனை.

இந்த இடைவெளியில் தமது சயிக்கிலை  ஓட பார்க்கின்றார்கள் .ஆழ்ந்த அனுதாபங்கள் .

image-1283217dc3136a6dd1413eb778f6a96d011bab9686bcc15bbd4d93ced4f82f0f-V.jpg

இங்கும் சிலர் இருக்கினம் இவனைப்போல

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, arjun said:

எனக்கு நேரத்திற்கு நேரம் முகம் மாற்றி வேஷம் போட தெரியாது .

திண்ணையில் முதலிலேயே அனுதாபங்களை தெரிவித்து இருந்தேன் ,

இங்கு பலர் இந்த துள்ளு துள்ளுவது சென்னை மக்களுக்காக இல்லை யாழில் இருக்கும் கோஸ்டி பிரச்சனை.

இந்த இடைவெளியில் தமது சயிக்கிலை  ஓட பார்க்கின்றார்கள் .ஆழ்ந்த அனுதாபங்கள் .

அர்ஜுன் அண்ணா, உங்கள் கடைசி பதிவில் உண்மை இல்லை.
திரியை முதலில் இருந்து வாசியுங்கள், தவிர வன்னியனின் இன்னும் ஒரு திரியையும் வாசியுங்கள்.
அனுதாபம் தெரிவிப்பவர்கள் ஆத்மார்த்தமாகதான் அதை செய்கிறார்கள் அல்லது அனுதாபப்படுகிரார்கள்.
கோஸ்டியாக வந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல விஷம் ஏற்றுவோருக்குதான் அந்த பதில்கள்.
தமிழகத்தை ஆடல் , பாடல் "எண்டர்டெய்ன்மண்ட்" இற்கு மட்டுமே கருவேப்பிலையாக நாம் பாவிக்கவேணும் என்று யாழில் சொன்னவர்களே  இந்த "கோஷ்டி" தானே. 

அவர்கள் எடுக்கும் சினிமா வேணும் காலைமுதல் இரவுவரை பார்க்கிறதுக்கு அவர்கள் எடுக்கிற சீரியல் வேணு,ம் நாட்டுக்கு போக முடியாமல் அவர்கள் இடத்தில் தான் உங்கள் திருமணமும் நடந்திருக்கலாம் அவர்களுக்கு கஸ்டம் எனு‌ம் போது அதற்காக வருத்தம் தெரிவிக்க கூட முடியல இல்லை?

even malayalis  the way they like Chennai.. 

"வாழ்க்கை வெட்டி பிடிப்பதல்ல   கூட இருப்பவனை கட்டிபிடிப்பதுக்கே" எனும் தத்துவத்தை புரிய வைத்த சென்னைக்கு எண்று நண்றி எண்று தன் உணர்வை  சொன்னார்...   தமிழனின் உணர்வை புரிந்து கொண்ட மலையாளி...

சில தமிழர்க்கு மட்டும் இது புரிவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
On 9.12.2015 at 6:52 PM, மீனா said:

தமிழகத்தில் வெள்ளம் எண்டு ஏன் நாங்கள் ஆகக் கத்திக் கொண்டு திரிகிறோம்?? தமிழகத்தில் இவ்வளவு தமிழனும் இருக்கக்தக்கதாகத் தானே 2009/மே இல் எமது தாயகத்தில் இன அழிப்பு நடந்தது..... :rolleyes:

எங்கு வெள்ளம் வந்தாலும் கவலைக்குரிய விடயம் தான்.. ஏன் இவர்கள் மட்டும் தான் மனிதர்களா??

வெள்ளம் ஓய்ந்தாலும் வெள்ளத்தால் ஏற்பட்ட அவலங்கள் தீரவில்லை.
பனையாலை விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பதுபோல இப்படி ஒரு கருத்து.

யாழ் களம் முகப்பில் காட்டுவது  போலி வேடம் என்று   இந்தக்கருத்து  உறுதி செய்கின்றதா?  இந்தக்கருத்து  உறுதி செய்கின்றதா?
யாழ் களம் தமிழக உறவுகளின் வருகையை மட்டுப்படுத்த முயற்சிக்கின்றதா ?
என்ற கேள்விகளைத்தான்  தான் இந்தக்கருத்து  ஏற்படுத்துகின்றது

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, வாத்தியார் said:

வெள்ளம் ஓய்ந்தாலும் வெள்ளத்தால் ஏற்பட்ட அவலங்கள் தீரவில்லை.
பனையாலை விழ்ந்தவனை மாத ஏறி மிதிப்பதுபோல இப்படி ஒரு கருத்து.

யாழ் களம் முகப்பில் காட்டுவது  போலி வேடம் என்று   இந்தக்கருத்து  உறுதி செய்கின்றதா?  இந்தக்கருத்து  உறுதி செய்கின்றதா?
யாழ் களம் தமிழக உறவுகளின் வருகையை மட்டுப்படுத்த முயற்சிக்கின்றதா ?
என்ற கேள்விகளைத்தான்  தான் இந்தக்கருத்து  ஏற்படுத்துகின்றது

வாத்தியார், யாழ்கள முகப்பில் இருக்கும் கருத்து யாழ்கள உறுப்பினர் எல்லோரினதும் ஒரே கருத்தாக இருக்கவேண்டுமென்பதில்லைத் தானே! இந்த நிமிடம் வரையாழ் களத்தில் இருக்கும் தமிழக உறவுகள் ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய உதவி என்ன? அதே போன்று யாழ்கள உறவுகள் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு ஆற்றிய உதவி என்ன? சும்மா இரத்தம் சதை எலும்பு எண்டு மாய்மாலம் காட்டுவதில் என்ன பிரயோசனம் இருக்கின்றது? http://www.yarl.com/forum3/topic/164144-தமிழினிக்கு-உதவுங்கள்-உறவுகளே/?do=findComment&comment=1150436 இந்தத் திரியில் உடையார் கேட்ட கேள்வி 17 மணி நேரமாக இருக்கின்றது எவராவது பதிலளித்தார்களா?உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் வெள்ளம் வந்து கொஞ்ச மக்கள் செத்துப் போனார்கள். அதற்காக ஒரு சின்ன அனுதாபப் பட்டு விட்டுப் போகலாம். அதற்காக பெரிசா அலட்டிக்கவேண்டியது இல்லை. முடிஞ்சால் உடையாரின் வேண்டுதலுக்கு யாரவது பதிலளிக்கலாம்!

Edited by வாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.