Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளால் சகோதரிகள் கடத்தப்பட்டனர் கடத்தப்பட்டவர்களின் சகோதரி சாட்சியம்:- குளோபல் தமிழ் செய்தியாளர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் சகோதரிகள் கடத்தப்பட்டனர் கடத்தப்பட்டவர்களின் சகோதரி சாட்சியம்:- குளோபல் தமிழ் செய்தியாளர்:-

12 டிசம்பர் 2015
Bookmark and Share
 

 

புலிகளால் சகோதரிகள் கடத்தப்பட்டனர் கடத்தப்பட்டவர்களின் சகோதரி சாட்சியம்:- குளோபல் தமிழ் செய்தியாளர்:


யாழில் கடந்த 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் தனது இரு சகோதரிகளும் கடத்தப்பட்டதாக  அவர்களின் சகோதரி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அந்த சாட்சியமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

மானிப்பாய் வீதி ஓட்டுமட பகுதியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 2ம் மாதம் 22ம் திகதி விடுதலைப்புலி உறுப்பினர் நசீர் என்பவரின் தலைமையில் வீடு புகுந்த ஒரு குழுவினர் எனது தங்கைகளான வாமதேவன் இந்திராதேவி (கடத்தப்படுகையில் வயது 22) மற்றும் வாமதேவன் சுதாதேவி (கடத்தப்படுகையில் வயது 15) ஆகியோரை கடத்தி சென்றனர். அதன் பின்னர் தகவல் இல்லை.

ஆனால் நாம் சில நாட்களுக்கு முன்பாக சாத்திரம் கேட்ட போதும் எனது இரு சகோதரிகளும் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என சாத்திரம் பார்த்தவர் கூறுகின்றார்.

எனவே எனது இரு சகோதரிகளும் இன்னமும் உயிருடன் தான் இருகின்றார்கள் என நம்புகின்றேன் என தெரிவித்தார்

 

www.globaltamilnews.net

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் தங்கள் படைக்குக் கட்டாய ஆட்சேர்ப்பை வெளிப்படையாகவே செய்ததை அங்குள்ள மக்களும் தெரிவித்துள்ளனர். படையில் சேர்ப்பதற்குக் கடத்தப்பட்டார்கள் என்பதை இந்தப் பதிவுதான் தெரிவித்துள்ளது.:shocked:

அலன் தம்பதிகளைக் புலிகள் கடத்தினார்கள் என்ற செய்தி உண்மைபோல் பலகாலம் உலாவியது. புலிகள் அவர்களைக் கடத்தவில்லை என்ற உண்மை வெளிவர நீண்ட நாட்கள் எடுத்தது.:(

அலன் தம்பதிகளை யார் கடத்தினார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரிய வரவர நீண்ட நாட்கள் எடுத்தது என்றுதான் நினைக்கின்றேன் .

புலிகள் ஆட்களை கடத்துவது என்ன புதிதா ? 

பொறுப்பாளர்களுக்கு வீட்டு வேலை செய்யவே பலர் இருந்தார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலன் தம்பதியை கடத்தினது லலித் அத்துலத்முதலி  tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உண்மைகளும் வரவேண்டும்தான். ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழு இறுதிப்போரில் நடந்தவற்றை முழுமையாக வெளியே வராமல் பார்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள் என்றுதான் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி எல்லா உண்மைகளும் வரும். ஹிந்தியப் படைகள் அதன் ஒட்டுக்குழுக்கள் செய்தவை.. செம்மணியில் போட்டுப் புதைச்சது.. வவுனியாவில் புளொட் புதைச்சது.. மட்டில் கருணா புதைச்சது.. புளொட் மோகன் புதைச்சது.. முஸ்லீம் ஊர்காவல் கும்பல் கொன்றது.. சிங்கள அரச படைகள் கொன்றது.. ஹிந்தியப் படை கொன்றது.. மண்டையன் குழு வெட்டினது.. வரதராஜப்பெருமாள் போட்டது.. பத்மநாபா போட்டது.. ஈ என் டி எல் எவ் போட்டது... நடத்திய படுகொலைகள்.. இவை எல்லாம் வருமா..??!

இதுவரை கிளாலியில் சிங்களக் கடற்படை செய்த கொடூரத்தின் போது கடலோடு போன உறவுகள் பற்றி ஒருத்தரும் பேசல்ல.

இதில் புலிகள் இல்லாத காலத்தில்.. புலிகள் கடத்தினர் என்று வரும் முறைப்பாடுகள்.. இந்த விசாரணைக் கமிஷனின் முன் போகும் ஆட்களில் அப்பாவி மக்கள் தவிர பிற தூண்டல்காரர்கள் தொடர்பில் சந்தேகம் எழுகிறது. இது உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இத்தோடு இது எத்தனையாவது விசாரணைக்குழு கடந்த 6 ஆண்டில்..??!

ஐநா மூவர் விசாரணைக்குழுவை அதன் அறிக்கையை விமர்சித்த ரணில் - மைத்திரி அமைக்கும் இந்த விசாரணைக்குழு மட்டும் எப்படி நீதியாகச் செயற்படும்.. இங்கு சாட்சியம் வழங்குபவர்கள் எல்லோரும் நீதியாகவே செயற்பட என்ன உத்தரவாதம் உள்ளது..??!

Edited by நியானி
நீக்கப்பட்ட கருத்துக்கான பதில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

புலியைக் குறை சொன்னால் புளட்டை உள்ளுக்குள் கொண்டு வாறாது வழமையாய் போய் விட்டது

ஒரு வேளை சுரேஸ் பிரேமசந்திரனுக்கு  இது சம்பந்தமான அதிக விபரங்கள் தெரிந்து இருக்க வாய்புள்ளது...  1990 களின் நடுப்பகுதியில்  அசோகா கொட்டலிலும் புல்லுக்குளம் கரையினிலும்  27 பெண்களின் உடல்கள் பொலித்தீன் பைகளால் சுற்றி தாட்டு இருந்ததை கிண்டி எடுத்தார்கள்...  இந்திய இராணுவ காலங்களில் அந்த இடத்தில் இருந்த முகாமுக்கு  சுரேஸ் பிரேமச்சந்திரனே பொறுப்பாக இருந்தார்... 

காணாமல் போய் 25 வருடங்கள் கடந்த நிலையில் அந்த சகோதரிகள் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சியே... 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்.. காத்து அதேபோல்.. ஓட்டுமடம் சந்தி ஈ என் டி எல் எவ் -  ஹிந்தியப் படை முகாமில் இருந்து பெண்களின் எலும்புக்கூடுகள்.. ஆடைகள் மீட்கப்பட்டிருந்தன. இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர்.

இன்று அவை எல்லாம் புலிகள் கடத்திக் கொன்றதாகின்றன. மீள மீள விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்படுவதன் நோக்கமே.. தமிழ் மக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளின் நீதித்தன்மையை அழிப்பது தான். சிங்களம் திட்டமிட்டே இவற்றைச் செய்கிறது. அதனால் தான் இப்ப அதிக சந்தேகங்கள் முளைக்கின்றன.

அதுவும் சிங்களம் தன் இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை இல்லாமல் செய்வோம் என்ற வெளிப்படையான தொனியோடு முன்னெடுக்கும் இப்படியான விசாரணைகளும்.. வரும் ஊடகச் செய்திகளும்.. சிங்களத்தின் முதன்மை நோக்கத்தை நிறைவேற்றுவதை குறியாகக் கொண்டிருக்கிறதே தவிர தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கனும் என்ற எண்ணம் அங்கிருப்பதாகத் தெரியவில்லை.

ஐநா மனித உரிமை அமைப்பு மேற்கொண்ட கள அறிக்கையில் பக்கச்சார்பின்மை அதிகம் இருந்த போதிலும் அதில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களைக் கூட முன்னெடுக்க முனையாமல் மீள மீள விசாரணைக் கமிஷன்கள் அமைப்பதன் நோக்கம் காலத்தை இழுத்தடிப்பதும்.. இராணுவம் மீதான அதன் துணைக்குழுக்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கூடிய அளவு புலிகள் மீதாக்கினால்.. இல்லாத புலிகள் மீது நடவடிக்கைகள் அவசியம் இல்லை.. எல்லாமே நீர்த்துப்போய் விடும் என்ற நோக்கமே தெரிகிறது.

இதற்கு சிங்களத்தால் ஹிந்தியத்தால்..சர்வதேசத்தின் பக்கச்சார்ப்பு அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

On 08.12.2015 at 3:08 PM, தமிழரசு said:

வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு வடகிழக்கு மாகாணங்களுக்கு வரக்கூடாது. வந்தால் நாங்கள் சத்தியாகிரக போராட்டங்களை நடத்துவோம், ஆணைக்குழுக்கு செருப்பால் அடிப்போம் என வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணமல்போனவர்களின் உறவுகள் கூறியிருக்கின்றனர்.

இன்றைய தினம் மேற்படி காணாமல்போனவர்களின் உறவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவை புறக்கணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியிருந்தனர்.

குறித்த கூட்டத்தின் பின்னர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவுகள் நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே உறவுகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

மேற்படி காணாமல்போனவர்களின் உறவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளபோது தற்சமயம் ஆணைக்குழுமுன் சாட்சியம் அளிப்பவர்கள் எவர்?????அளிக்க வைப்பவர்கள் யார்????? எங்கோ உதைக்கிறது!!!! 

Edited by Paanch

சுரேஷ் முதல் கருணா வரை எத்தனை கொலைகாரர் இருந்தாலும் புலியில பிடுங்க நினைப்பவர்கள் பற்றிதான் சிரிப்பு வருகுது.

புலிகள் செய்த குற்றத்துக்கு சொறிலங்காவும் சர்வதேசமும் தண்டனை குடுத்துவிட்டதாக 2009ல் கொக்கரித்தவர்கள் திருப்பி ஏன் இல்லாத புலியை இழுக்குறீங்கள் எண்டு தான் நான் கேட்கிறேன் 

 

6 hours ago, arjun said:

அலன் தம்பதிகளை யார் கடத்தினார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரிய வரவர நீண்ட நாட்கள் எடுத்தது என்றுதான் நினைக்கின்றேன் .

புலிகள் ஆட்களை கடத்துவது என்ன புதிதா ? 

பொறுப்பாளர்களுக்கு வீட்டு வேலை செய்யவே பலர் இருந்தார்கள் 

 

அன்று ... மக்கள் யுத்ததுக்கு போய், கொட்டன் தடிகளோடு இருந்ததுகளுக்கு ... சிங்கப்பூரிலிருந்து பாரிய கொள்கலனில் அடக்க முடியாமல் .. நாலு பிஸ்ரலுகளை ஏற்றி அனுப்ப ... அதை தமிழக துறைமுகத்தில் இந்திய சுங்க பிரிவு தடுத்து வைக்க ... வீறு கொண்டெழுந்து, அப்போது இருந்த தமிழக டிஐஜியின் மகளை கடத்தி ... தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்க புறப்பட்டு ... துண்டை காணோம் துணியை காணோம் என லலித் அத்துலத்முதலியின் காலில் வீழ்ந்த வீராதிவீரர்கள்!

நேற்று .. வவுனியாவில் ... சிங்கள ஆமி கட்டுப்பாட்டு பகுதிக்குள் சுழன்றடித்த மக்கள் போராட்ட வீரர்கள் .. தலைவனுக்காக ... மன்னாரில் வெளிநாட்டுக்கு ஆட்களை ஏற்றியவரின் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) அழகான மனைவியை கடத்திச்சென்று உபசரசரித்ததுகள்!

... இன்னும் எத்தனை கூத்துக்கள் வேண்டும்?

... பூனையாம் கண்ணை மூட்டீட்டு .. பாலை குடிக்குமாம் ... நினைக்குமாம் ... பூலோகம் இருண்டு கிடக்குதெண்டு! .. ம்ம்ம்ம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

புலியைக் குறை சொன்னால் புளட்டை உள்ளுக்குள் கொண்டு வாறாது வழமையாய் போய் விட்டது

கூட்டமைப்பை குறை சொல்ல புலியை உள்ளுக்கை கொண்டுவாறது கண்ணுக்கு தெரியல?
சிங்களவனை குறை சொல்ல புலியை உள்ளுக்கை கொண்டுவாறது பார்வைக்கு படல?
இந்தியாவை குறை சொல்ல புலியை உள்வாங்கிறது  காந்தவிழிக்கு காட்சியளிக்கல?

2 hours ago, ரதி said:

புலியைக் குறை சொன்னால் புளட்டை உள்ளுக்குள் கொண்டு வாறாது வழமையாய் போய் விட்டது

புளொட்டை உள்ளுக்குள் இழுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை ,

நாங்களே புளொட் ஒரு கொள்ளைகூட்டமாக மாறிவிட்டது என்று எமது உயிரை பணயம் வைத்துதான் முடிந்தவரை உடைத்தனாங்கள் வெளியில் வந்தும் அதே கருத்தை முடிந்தவரை பரப்பினோம் .சில மாதங்களுக்கு முன்னர் ஒரு புத்தகவெளியீட்டில் சேர்ந்து போராட போன இயக்கத்திற்கே பயந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிவரவேண்டிய  நிலை தான் பலருக்கு என்று பேசினேன் ,

இதே போல ஈபி யில் இருந்தர்களும் இந்திய படையுடன் தாங்கள் சேர்ந்து இயங்கிய காலத்தை தமது இருண்ட காலம் என்றும் மண்டையன் சுரேஷ் ஒரு கொலைகாரன் என்றும் அவர்களே சொல்லுகின்றார்கள்.ஏனெனில் அரசியல் தெரிந்தவர்களும் இயக்கத்தை விட இன  விடுதலை தான் முக்கியம் என்று தெரிந்தவர்கள் அவர்கள் .

புலிகளில் இருந்த சிலரும் தமது இயக்கம் செய்த கொலைகளை ,கொள்ளைகளை, கட்டாய ஆட்பிடிப்பை பிழை என்று  ஒத்துகொள்ளுகின்றார்கள் ,

ஆனால் நாட்டில் போராட்டம் என்றவுடன் வெளிநாடு ஓடிவந்து புலி கொடி பிடித்தவர்கள் புலிகளை எதுவித பிழையும் விடாதவர்கள் என்பதும் மட்டுமல்ல தேவாரம் பாடுவதும்  மாற்று இயக்கங்களை அனைத்து குற்றங்களும் செய்த துரோகிகள் என்பதும் தொடர்கின்றது .

விஜேய் பட விசிலட்டிசான் குஞ்சுகளுக்கு நல்ல படமோ கெட்ட படமோ என்று அக்கறையில்லை விஜெயிக்கு கட் அவுட் கட்டி பால் அபிசேகம் செய்வது மாதிரிதான் இவர்கள் நிலைபாடும் .இவர்கள் அரசியல் அறிவு சொல்லிவேலையில்லை வெடிவெடிக்க வேண்டும் குண்டு வெடிக்க வேண்டும் நாலு பேர்கள் சாக வேண்டும் இவ்வளவுதான் இவர்களது அரசியல் .

அவர்களை சொல்லியும் பிழையில்லை சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, arjun said:

ஆனால் நாட்டில் போராட்டம் என்றவுடன் வெளிநாடு ஓடிவந்து புலி கொடி பிடித்தவர்கள் புலிகளை எதுவித பிழையும் விடாதவர்கள் என்பதும் மட்டுமல்ல தேவாரம் பாடுவதும்  மாற்று இயக்கங்களை அனைத்து குற்றங்களும் செய்த துரோகிகள் என்பதும் தொடர்கின்றது

புலிகள் பிழையே விடவில்லை என்று யாராவது கூறியதை ஆதாரத்துடன் இணையுங்கள். 

7 minutes ago, குமாரசாமி said:

புலிகள் பிழையே விடவில்லை என்று யாராவது கூறியதை ஆதாரத்துடன் இணையுங்கள். 

புலிகள் விட்ட பிழைகளை நீங்கள் பட்டியல் போடுங்கள்,

அப்படி புலிகள் செய்யவில்லை என்று இங்கு பலர் எழுதியதை அதற்கு கீழே இணைக்கின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

புலிகள் பிழையே விடவில்லை என்று யாராவது கூறியதை ஆதாரத்துடன் இணையுங்கள். 

புலிகளே அதன் தலைமைகளே..பகிரங்கமாக ஏற்றுக் கொண்டது தான் அவர்களின் தவறுகளை. இங்கு சிலர் தாங்கள் சொல்வது எல்லாம் புலிகளின் தவறு என்று நீங்கள் நம்பனுமாம்.. மற்றவர்கள் எல்லாம் அதை விடக் குறைவா தவறு செய்த ஆக்களாம்.. என்று இவை அடம்பிடிப்பதையும் நம்பனுமாம். இங்குளூடிங் சொறீலங்கா இராணுவம்.. ஹிந்திய இராணுவம்.. ஒட்டுக்குழுக்கள்.. துணை இராணுவக் குழுக்கள்.... அதாவது புளொட் கூலிக்கொலைக் கும்பல் உட்பட.

அந்த வில்லங்கத்தில தான் இங்க சுத்தி திரியுது ஒரு குரூப். எல்லாம் ஒரு வியாதி தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் பெரும்பாலான விசாரணைகளில் இராணுவமும் அதனுடன் சேர்ந்து இயங்கிய குழுக்களும் தான் தமது உறவுகள் காணாமல் போனதுக்கு காரணம் என பலர் சாட்சியம் அளித்து இருந்தனர். இது புலிகள் மீது குற்றம் சுமத்தும் ஒரு சாட்சியம். இதனால் புலிகளின் பெயருக்கு மேலதிகமாக பாதிப்பு எதுவும் வராது. காரணம் புலிகள் பயங்கரவாதிகள் என்று பெரும்பாலான நாடுகளால் அறிவிக்க பட்ட நிலையிலேயே அழிந்து போனார்கள். அதனிலும் மோசமான பாதிப்பு அவர்களின் பெயருக்கு வர இனியும் வாய்ப்பில்லை. புலிகளை பயங்கரவாதிகள் அல்ல என்று நிருபிக்க பலரும் முயற்சி செய்தும் அதனை சாத்தியமாகாமல் போகச்செய்த கலாச்சாரத்தை புலிகளின் தீவிர ஆதரவாளர்களிடம் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த களத்தில் எழுதும் சிலரும் அதற்கு உதாரணமாக இருக்கிறார்கள். இவர்களின் பங்களிப்பால் உலக வரலாற்றில் புலிகளுக்கு பயங்கரவாதிகள் என்ற பெயர் என்றும் நிலையாகி போகும் சாத்தியமே அதிகம். இல்லை தாம் அதற்கு காரணம் அல்ல நீங்கள் தான் காரணம் என்று அவர்கள் பொங்கி எழுவார்கள். ஆனால் விளைவு ஒன்று தான். உலக வரலாற்றில் புலிகளின் இடமே அது.  முடிந்தால் இவர்கள் புலிகளை உலக வரலாற்றில் பயங்கரவாதிகள் அல்ல விடுதலை போராளிகள் என்று இடம்பெற செய்யலாம் - ஆனால் இவர்களால் அது முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கொலைகாரர், கொள்ளைக்காரர், கட்டாய ஆட்பிடிப்புக்காரர். எங்களுக்காக. எங்கள் குடும்பங்களில் சிலர் இன்னும் பிழைத்திருக்கிறோம். அவர்கள் குடும்பத்தையே விடுதலைக்காக காவு கொடுத்திருக்கிறார்கள். போராளிகள் தங்கள் குடும்பத்துக்காக எதையும் சேர்த்து வைக்கவில்லை. கண்ணீரையும், தொல்லைகளையும், துயரத்துக்காக அழமுடியாத நிலையையும் தான் விட்டுச் சென்றார்கள். சரி, தங்களையாவது சரியாகக் கவனித்தார்களா? சேத்துத் தண்ணியையும், மழைத்தண்ணியயும், உப்புத்தண்ணியையும் குடித்து ஒழுங்கான, சுத்தமான சாப்பாடு, நித்திரை இல்லாமல் எங்களுக்காக வாழ்ந்தவர்கள்.
ஒருநாள் எனது நண்பன் புலிகளின் காம்புக்கு ஏதோ அலுவலாக போனபோது மதிய நேரமாகி விட்டதால் தங்கள் சாப்பாட்டில் அவனுக்கும் கொடுத்திருக்கிறார்கள். அவன் அதை சாப்பிடவே இல்லையாம். உப்பு, புளி சரியாக இல்லை, சோறு அரை அவியல், சோற்றில் கல், பேப்பர் இணைக்கும் கம்பி (ஸ்ரேப்பிளர்  கிளிப்) மீனில் செதில், என்று சொல்லி வருந்தினான். ஒரு நேரம் சாப்பிட முடியாமல் அவன் குறைப்பட்டான். வாழ்ந்த நாட்களெல்லாம் அதையே அனுபவித்து வாழ்ந்த அவர்களும், அவர்களின் வாழ்வும் எங்களுக்கு மதிப்புக்குரியவைதான். ஊர்ந்து போகும் எறும்பும் தான் சாகுமட்டும் போராடித்தான் சாகிறது. சிலந்தி கூட ஏழு முறை விழுந்து எழும்பித்தான் தனக்குரிய வலையை அமைக்கிறது.

  1. தன்னம்பிக்கை அற்றவர்கள், கஸ்ரப்படாமல் பலன் அனுபவிக்க நினைப்பவர்கள், வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தான் சதா புலி வாந்தி எடுக்கிறார்கள். வாயால விடுதலை எடுக்கப் போனவைக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
  2. ஒருவர் உயிருடன் இருக்கும்போது விமர்சிப்பது ஆரோக்கியமானது. அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளவும், தங்கள் பக்க நியாயத்தை வெளிப்படுத்தவும் முடியும். ஒருவர் மாண்ட பின் விமர்சிப்பது அநாகரிகமானது.
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனின் சட்டியில் நிறைய இருக்கிறதாய் ஒரு நினைப்பு. PLOTE  பிழை செய்தது அதனால் உடைத்துவிட்டு வெளியே வந்து விவேக அரசியல் கருத்துகளை முன்வைப்பதாக கூறுகிறீர்கள் அதையே புலி ஆதரவாளர் செய்தால் மட்டும் ஏன் குறை கூறுகிறீர்கள். புலிகள் பிழையே விடவில்லை என்று யாராவது சொன்னால் அது அறிவிலித்தனம். ஆனால் எந்த கருத்தாடல் வந்தாலும் அது புலிகளால் தான் நடந்தது அதுதான் எல்லோரையும் முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் விட்டது என்று கூறுவது **********

Edited by நியானி
சில வரிகள் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணா புலிகள் செய்தது பிழை என்று அவர்கள் எழுதினால், இல்லை அவர்கள் செய்தது சரி என்று உங்களுக்குப் பட்டால்,அல்லது தெரிந்தால் அதை சரி என நிறுவ முற்பட வேண்டும்.அல்லது உங்களுக்கு புலிகள் செய்தது பிழை என்று தெரிந்து இருந்தும் எதிராளியோட மல்லுக் கட்ட நினைப்பதால் தான் தேவையில்லாமல் அவர்கள் செய்தது சரியா,இவர்கள் செய்தது சரியா என்று நீங்கள் எழுதப் போக அது புலிகள் செய்ததை ஒத்துக் கொண்டதோடு இல்லாமல்,புலிக்காக கதைக்கும் நீங்களே புலியை மேலும் அவமானப்படுத்தியதாகி விடும்.

நான் பார்த்த வரைக்கும் புலிக்கு எதிராக கதைப்பவர்களை விட‌,ஆதரவாக கதைப்பவர்கள் தான் புலியை அதிக அவமானத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.
ஒருவர் புலியைப் பற்றி எழுதினால்,அந்தக் கருத்து உங்களுக்குப் பிடிக்கா விட்டால் பேசாமல் விலகிப் போனால் அந்தத் திரி நீளாது. புலி மேல் உள்ள அபிமானத்தால் வீம்புக்கு கதைக்கப் போய் உங்களையும் தாழ்த்தி, புலியையும் தாழ்த்துகிறீர்கள்.

இது புலிக்கு மட்டுமல்ல பொதுவாக எல்லாத்துக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நாங்கள் புலிகள் செய்தது பிழை என்று தெரிந்து இருந்தும் எதிராளியோட மல்லுக் கட்ட நிற்ப்பதில்லை, அப்படி செய்வது மடைத்தனம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் எதற்கு எடுத்தாலும் அது புலிகளால்தான் வந்தது அதாலதான் முள்ளிவாய்க்காலில் எல்லோரும் அழிந்தார்கள் என்று **** தாங்க முடியேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ரதி நாங்கள் புலிகள் செய்தது பிழை என்று தெரிந்து இருந்தும் எதிராளியோட மல்லுக் கட்ட நிற்ப்பதில்லை, அப்படி செய்வது மடைத்தனம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் எதற்கு எடுத்தாலும் அது புலிகளால்தான் வந்தது அதாலதான் முள்ளிவாய்க்காலில் எல்லோரும் அழிந்தார்கள் என்று **** தாங்க முடியேல்ல.

 யாழில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சமகால திரிகளில் போய் தேடி வாசித்து விட்டு வந்து உங்களால் மற்ற தீவிர புலி ஆதரவாளர்கள் சார்பில் இதைச் சொல்ல முடிகிறதா என்று பாருங்கள்! தவறுகளே நடக்கவில்லை என்ற நிலையில் இருந்து இப்போது அதைப் பற்றி ஏன் பேச வேண்டும்  என்ற நிலையில் வந்து நிற்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

"ஆமி பிடித்துக் கொண்டு போய் வல்லுறவு செய்து விடாமல் இருக்க புலிகள் கடத்தினார்கள்" என்று கிரியேட்டிவாக விளக்கம் கொடுப்பீர்கள் என்று நினைத்தேன்! அவர்களை நம்பவில்லை என்று சிம்பிளாக முடித்து விட்டீர்களே!

நான் நினைத்தேன் நீங்கள் வந்து வாசித்துவிட்டு ......

 

முன்பு அங்கு  இருந்திருந்தாலும் ......
இப்போ புலம்பெயர்ந்துவிட்டதால் எதையும் கூற முடியாது

 

அங்கிருக்கும் மக்கள் அல்லது
1990இல் யாழ்பாணம் என்ன நிறம் என்று தெரியாத சுமந்திரன் (அல்லது 58 ஆயிரம்தான் ) எதுவும் சொல்ல முடியும் என்று ஆக்கபூர்வமாக எழுதுவீர்கள் என்று.

 

பார்த்தால் புலிப்பாய்ச்சல் பாய்கிறீர்கள்......

அர்ஜுன் அண்ணா, இங்கு பலர் .. ஆடு நனையுதாம், ஓவென்று ஓநாய் .. .. அழுகின்றனர்! .. அவர்களோ முதலில் தங்களால் கடத்தி கொல்லப்பட்ட ந்ம் ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள் தொடர்பாக உண்மைகளை இங்கு கூறுவார்களா??? ... ஓடு வந்து விட்டோம் என கதை அளக்க வேண்டாம் ... காலம், கனடா/பிரான்சு/லண்டன் பாஸ்போட்டுக்களால் தப்பி விட்டனர்! ... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.