Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்'

Featured Replies

'தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்'
 
article_1450693824-aaaaaaa.jpg-எம்.றொசாந்த்

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும். ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் திங்கட்கிழமை (21) தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், நாடாளுமன்றம் ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சபையாக எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மாற்றப்படவுள்ள சூழ்நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை உருவாக்க வேண்டிய கடமை தமிழ்த் தலைமைகளிடம் காணப்படுகின்றது.

இத்தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்கள் மத்தியில் வைத்து சரியானாதா அல்லது பிழையானதா என்று ஆராயவேண்டும். அதனைவிடுத்து, கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல் ஒன்று அல்லது இரண்டு பேர் தாங்கள் விரும்பியவாறு அரசாங்கத்துடன் பேசுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் தலைவிதி ஒரிருவரின் கைகளில் இல்லை. இதனை சம்பந்தன் சரியாக கையாண்டிருந்தால் தமிழ் மக்கள் பேரவை உருவாகவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.

மேலும்,இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமானது, பொதுமக்கள், புத்திஜீவிகள் மற்றும் ஆலோசகர்களின் கருத்துக்கமைய உருவாக்கப்பட்டு, அதனை முன்வைப்போம். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவும் முன்வைக்கப்படலாம். அதனையே தமிழ் மக்கள் பேரவை செய்கின்றது.

நல்ல விடயங்கள் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்படவேண்டும். இந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல. கூட்டமைப்புக்கு எதிரானது என்ற தோற்றப்பாட்டையும் கொடுப்பது அர்த்தமற்ற செயற்பாடு ஆகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம் மாத்திரமின்றி, தற்போது இளைஞர்கள் மத்தியில் பரவும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழித்தல், கல்வியில் பின்தங்கியிருக்கும் வட மாகாணத்தை முன்னேற்றுதல், சுகாதாரத்தை மேம்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் இந்த அமைப்பால் மேற்கொள்ளப்படும்.

அமைப்பின் மீது சாயம் பூசுதல் அல்லது தேவையான வியாக்கியானங்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/162059/-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE-#sthash.iD7r44vB.dpuf
17 minutes ago, நவீனன் said:
 
அமைப்பின் மீது சாயம் பூசுதல் அல்லது தேவையான வியாக்கியானங்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதல்ல நீங்க உங்க அமைப்பை பற்றி கூறியிருந்தால் தேவையில்லாத வியாக்கியானம் வந்திருக்காதே.

எது எப்படியோ, எந்த அமைப்பையும் யாரும் ஆரம்பிக்கலாம் ஆனால் எல்லா அமைப்புக்களின் கருத்துக்கும் காது கொடுக்கவேண்டும் என்று கூட்டமைப்புக்கு என்ன நிர்ப்பந்தம்?

அவ்வாறான சந்தர்ப்பத்தில் இது தர்க்கமாக ஆரம்பித்து குழப்பமாக முடியாதா?

ஏற்கனவே உலமெல்லாம் இருக்கும் இவ்வாறன தமிழ் அமைப்புகளை நிங்கள் ஏன் உளவாங்க கூடாது?

இது இமானுவேல் அடிகளாரின் அரசியல் முயற்சிக்கு எதிரானதா? 

மக்கள் பேரவை உருவாகி சூடு ஆற ஆற ஆற முதல் ஒரு சிலர் வெருண்டு வெகுண்டு சீறி மருங்கி மயங்கி கருத்து கருத்தா அள்ளி அள்ளி அள்ளிக் கொட்டுகின்றனர். இதுதானோ அந்தப் பேரவையின் பலம் ..?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒன்று அல்லது இரண்டு பேர் தாங்கள் விரும்பியவாறு அரசாங்கத்துடன் பேசுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் தலைவிதி ஒரிருவரின் கைகளில் இல்லை. 

சம்பந்தரும், சுமந்திரனும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே. 

1 hour ago, nunavilan said:

சம்பந்தரும், சுமந்திரனும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே. 

இருவருக்கும் மக்களின் ஆனையும் கட்சிகளின் ஏகமனதான ஆதரவும் உண்டு இதை விட அவகளிட்கு யாரின் கை அசைவு தேவை_____-

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, bismar said:

இருவருக்கும் மக்களின் ஆனையும் கட்சிகளின் ஏகமனதான ஆதரவும் உண்டு இதை விட அவகளிட்கு யாரின் கை அசைவு தேவை_____-

இது சும்முக்கு பொருந்தும்  ""யார்  ஓட்டுப்போடுகிறார்கள்  என்பதைவிட  யார்  ஓட்டை  எண்ணுகிறார்கள் என்பது தான் முக்கியம்”, Malala Yousafzai
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, bismar said:

இருவருக்கும் மக்களின் ஆனையும் கட்சிகளின் ஏகமனதான ஆதரவும் உண்டு இதை விட அவகளிட்கு யாரின் கை அசைவு தேவை_____-

மக்களின் ஆனையை வைத்து சாப்பாடு போடுவது கஸ்டம் தான்.:grin:
பல கட்சிகள் சேர்ந்தது தான் கூட்டமைப்பு. எல்லோரையும் கட்சியில் சேர்த்து விட்டு ஒரு சிலர் முடிவு எடுப்பதற்கு பெயர் ஜனநாயகமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பழைய நினைவுகள் வந்துது துலைக்குது. முந்தி ஏகப் பிரதிநிதிகள்  என்ற சொல்லைக் எங்கையோ கேள்விப்பட்டு இருக்கிறன்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பேரவையின் தேவை பலகாலத்துக்கு முன் உணரப்பட்டாலும்.. சம் சும் கும்பலின் தான்ந்தோன்றித்தன சிங்கள விசுவாச அரசியல் அதனை துரிதமாகச் சாத்தியப்படுத்திட்டுது.. என்பது தான் யதார்த்தம். எல்லாம் நன்மைக்கே..!

சம் சும் கும்பல் செத்தாலும் கூட்டமைப்பை விட்டுப் போகாது. அதுக்குத் தெரியும்.. கூட்டமைப்பை விட்டுப் போனால்.. தாங்களும் சங்கரி மாதிரி அரசியல் அனாதைகள் தான் என்பதை. தமிழரசுக் கட்சியை பழிவாங்கினம் என்றால் இப்ப கூட அது கூட்டமைப்பை விட்டுப் போய் அரசியல் செய்யலாம். ஏன் புலிகள் வழிகாட்டிய கூட்டமைப்பில் குந்திக்கிட்டு இருக்கனும்.. புலிகளைத் திட்டிக்கொண்டு.

அந்த வகையில்.. கூட்டமைப்பில் இருந்து கொண்டு தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்துவதையும்.. தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு பின்கதவு பதவிச் சுகங்களை சிங்களத்திடம் கேட்டு வாங்கி அனுபவிப்பதையுமே இவர்கள் செய்ய விளைவார்கள். அந்த வகையில்.. இவர்களின் திருகுதாளங்களை கட்டுப்படுத்த.. ஒரு அமைப்பு நிச்சயம் தேவை. அந்த அமைப்பு இதற்கு அப்பாலும் தமிழ் மக்களின் நலனுக்காகவும்.. நீண்ட கால குறுகிய கால திட்டங்கள் வகுத்துச் செயற்படுவதும் அவசியம். வெறும் அமைப்பை உருவாக்கிட்டு குந்திக்கிட்டு இருப்பது மக்களை பாதுகாக்காது.

குறித்த தமிழ் மக்கள் பேரவை தனது அமைப்பு விரிவாக்கத்தை இலங்கை எல்லை தாண்டி அமைத்துக் கொள்வதும் அதன் ஸ்ரத்தன்மைக்கும் மக்கள் நம்பகத்தன்மைக்கும் வினைத்திறனான செயற்பாட்டிக்கும் உதவும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தாயகத்திலிருந்து வந்த அரச செயலாளருடன் பேசியபோது

அவர் சொன்னது

முன்பெல்லாம் கட்டளை வரும்

சொல்லிப்போட்டு வர வேலை முடிந்திருக்கும்

இப்ப

கேள்விகளும் கதைகளும் ஆராய்ச்சிகளும் கருத்துப்பரிமாற்றங்களும் நடக்குதே தவிர

செயல்கள் எதுவுமில்லை

ஐனநாயகத்தின் கூடாத பக்கமிது என்றார்.

ஏக பிரதிநிதித்துவம்  செயல்களுக்குத்தேவை தான்.

ஆனால் ஐனநாயகவழியில் தரப்பட்ட ஏகபிரதிநிதித்துவத்தை

 கூட்டமைப்புக்கு கொடுக்கப்பட்ட காலத்தில் அதை பயன்படுத்தாது

 மக்களது நம்பிக்கையற்ற ஒரு சிலரின் ஏகபிரதிநிதித்துவமாக மாற்றியது தான் இன்றைய சிக்கல்களுக்கும் விரிசல்களுக்கும் காரணம்.

Edited by விசுகு

32 minutes ago, விசுகு said:

அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த அரச அதிபருடன் கதைத்தேன் :rolleyes: அலுவல்கள் மெதுவாக நடந்தாலும் எவ்வளவு சந்தோசமாக வேலை செய்கின்றோம்

முன்பு எட்டாம் வகுப்பு படித்த பொடி துவக்குடன் வந்து இப்படி செய் அப்படி செய் என்று எமக்கே ஓர்டர் போடும் .மனுசருக்கு இப்பதான் நிம்மதியாக இருக்கின்றார்கள் .

43 minutes ago, விசுகு said:

 மக்களது நம்பிக்கையற்ற ஒரு சிலரின் ஏகபிரதிநிதித்துவமாக மாற்றியது தான் இன்றைய சிக்கல்களுக்கும் விரிசல்களுக்கும் காரணம்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் நட நடந்த தேர்தலில் மக்களுகளால் தெரிவு செய்யப்பட்டவர்களை மக்களின் நம்பிக்கை அற்றவர்கள் என்று சொல்லும் அர்த்தம் என்ன? 

அப்போ நம்பிக்கையை பெற்றவர்கள் என்று நீங்கள் சொல்வது நிராகரிக்கப்பட்டவர்களையா?

விளக்கமாக சொன்னால் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, arjun said:

அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த அரச அதிபருடன் கதைத்தேன் :rolleyes: அலுவல்கள் மெதுவாக நடந்தாலும் எவ்வளவு சந்தோசமாக வேலை செய்கின்றோம்

முன்பு எட்டாம் வகுப்பு படித்த பொடி துவக்குடன் வந்து இப்படி செய் அப்படி செய் என்று எமக்கே ஓர்டர் போடும் .மனுசருக்கு இப்பதான் நிம்மதியாக இருக்கின்றார்கள் .

எனக்கு உதுதான் கடுப்பாகிறது. 

10 minutes ago, வாலி said:

எனக்கு உதுதான் கடுப்பாகிறது. 

காலை ஒன்பது முப்பதற்கு தினமும் சக்தி டி வி செய்தியில் போரால் பாதிக்கபட்ட ஒரு குடும்பத்தை பேட்டி காணுவார்கள் .

உறவுகள் ,உடமைகள் அனைத்தயும் இழந்து இன்று யாருமற்று கையறு நிலையில் அவர்கள் படும் அவலங்கள் சொல்லிமாளாது.கடந்த இருபதுவருட போரால் இன்றும் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவில் தான் .

போர் என்பது மனித குலத்திற்கே  எதிரான ஒரு செயல் அதன் தாக்கத்தை உலகெங்கும் இன்றும் கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம் .போருக்கு பயந்து புலம்பெயர்ந்த  நாம் மிக நிம்மதியாக இருந்துகொண்டு அந்த போர்காலத்தில் நடந்தவற்றை  மெச்சிக்கொண்டு இருக்கமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, bismar said:

இருவருக்கும் மக்களின் ஆனையும் கட்சிகளின் ஏகமனதான ஆதரவும் உண்டு இதை விட அவகளிட்கு யாரின் கை அசைவு தேவை_____-

இந்த இருவருக்கு மட்டுமல்ல கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட எல்லா உறுப்பினருக்கும் மக்களின் ஏகமனதான ஆதரவு உண்டு. எனவே ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும்போது எல்லோருடைய கருத்துகளும், ஆலோசனைகளும் உள்வாங்கப்படவேண்டும்.

1 hour ago, arjun said:

அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த அரச அதிபருடன் கதைத்தேன் :rolleyes: அலுவல்கள் மெதுவாக நடந்தாலும் எவ்வளவு சந்தோசமாக வேலை செய்கின்றோம்

முன்பு எட்டாம் வகுப்பு படித்த பொடி துவக்குடன் வந்து இப்படி செய் அப்படி செய் என்று எமக்கே ஓர்டர் போடும் .மனுசருக்கு இப்பதான் நிம்மதியாக இருக்கின்றார்கள் .

எந்த அரச அதிபர் எண்டு சொல்லுங்கோவன். ஏனென்றால் 1995க்கு பின் யாழ்பாணத்தில் துவக்கு கொண்டுபோய் வெருட்ட புலிகள் இல்லையே. அரச கட்டுப்பாட்டில் எல்லோ இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

காலை ஒன்பது முப்பதற்கு தினமும் சக்தி டி வி செய்தியில் போரால் பாதிக்கபட்ட ஒரு குடும்பத்தை பேட்டி காணுவார்கள் .

உறவுகள் ,உடமைகள் அனைத்தயும் இழந்து இன்று யாருமற்று கையறு நிலையில் அவர்கள் படும் அவலங்கள் சொல்லிமாளாது.கடந்த இருபதுவருட போரால் இன்றும் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவில் தான் .

போர் என்பது மனித குலத்திற்கே  எதிரான ஒரு செயல் அதன் தாக்கத்தை உலகெங்கும் இன்றும் கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம் .போருக்கு பயந்து புலம்பெயர்ந்த  நாம் மிக நிம்மதியாக இருந்துகொண்டு அந்த போர்காலத்தில் நடந்தவற்றை  மெச்சிக்கொண்டு இருக்கமுடியாது. 

போருக்கு பயந்து புலம்பெயர்ந்த நாம் மிக நிம்மதியாக இருந்துகொண்டு அந்த போர்காலத்தில் நடந்தவற்றை மெச்சிக்கொண்டு சிலரும் திட்டிக்கொண்டு சிலரும் காலத்தை போக்குவதை விடுத்து ஆக்கபூர்வமாக அந்த மக்களுக்கு எதாவது செய்யமுடியுமா என்பதைப்பற்றி விவாதிப்பம் எண்டுதானே சொல்லுறம்.கேட்கமாட்டன் எண்டு ஒற்றைக்காலில நின்றால் எண்ணத்தை செய்யிறது.tw_cookie:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

1- அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த அரச அதிபருடன் கதைத்தேன் :rolleyes: அலுவல்கள் மெதுவாக நடந்தாலும் எவ்வளவு சந்தோசமாக வேலை செய்கின்றோம்

2- முன்பு எட்டாம் வகுப்பு படித்த பொடி துவக்குடன் வந்து இப்படி செய் அப்படி செய் என்று எமக்கே ஓர்டர் போடும் .மனுசருக்கு இப்பதான் நிம்மதியாக இருக்கின்றார்கள் .

1 - நான் சொன்னது அலுவலகங்களில் 

அங்கு வந்தால் மக்கள் பணத்தில் வேலை செய்பவர்கள் அரசு கொடுத்த மக்களுக்கான வேலையை செய்யணும்.

நீங்க சொல்வது சந்தோசமாக.....?

அதை வீட்டில் வைத்திருக்கட்டுமே...

2 - எந்த வயதில்? எதற்காக போராடப்போனீர்கள்? என்ற தெளிவு உங்களிடமிருந்தால் இந்தக்கேள்விக்கு நான் பதில் தொல்லவேண்டியதில்லை...

2 hours ago, Sooravali said:

நான்கு மாதங்களுக்கு முன்னர் நட நடந்த தேர்தலில் மக்களுகளால் தெரிவு செய்யப்பட்டவர்களை மக்களின் நம்பிக்கை அற்றவர்கள் என்று சொல்லும் அர்த்தம் என்ன? 

அப்போ நம்பிக்கையை பெற்றவர்கள் என்று நீங்கள் சொல்வது நிராகரிக்கப்பட்டவர்களையா?

விளக்கமாக சொன்னால் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும் தான்.

மக்களுக்கு இதுவரை முழுமையான நம்பிக்கை வராதவர்கள்....

இப்ப புரியுதா என்று சொல்லுங்கள்.

மற்றும்படி

மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் என்பது மட்டும்

ஒருதேர்தலில் வாக்குகளை பெறுவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாம் வகுப்பு படித்த பெடியோ,பத்தாம் வகுப்பு படித்த பெடியோ.பெடி என்ன படித்திருக்கு என்பதை விட,என்ன சொல்லுது என்பது தான் முக்கியம்...எட்டாம் வகுப்பு படித்த பெடி சொல்லி நாம் என்ன கேட்பது என்ட ஈகோ தான் எல்லாத்திற்கும் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, arjun said:

காலை ஒன்பது முப்பதற்கு தினமும் சக்தி டி வி செய்தியில் போரால் பாதிக்கபட்ட ஒரு குடும்பத்தை பேட்டி காணுவார்கள் .

உறவுகள் ,உடமைகள் அனைத்தயும் இழந்து இன்று யாருமற்று கையறு நிலையில் அவர்கள் படும் அவலங்கள் சொல்லிமாளாது.கடந்த இருபதுவருட போரால் இன்றும் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவில் தான் .

போர் என்பது மனித குலத்திற்கே  எதிரான ஒரு செயல் அதன் தாக்கத்தை உலகெங்கும் இன்றும் கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம் .போருக்கு பயந்து புலம்பெயர்ந்த  நாம் மிக நிம்மதியாக இருந்துகொண்டு அந்த போர்காலத்தில் நடந்தவற்றை  மெச்சிக்கொண்டு இருக்கமுடியாது. 

இதை அர்ஜுன் அண்ணா நாங்களும் கிழமைக்கு 4 பார்ட்டி , 10 படம், களியாட்டம், கோலாட்டம் என்று என்று இங்கிருந்து செய்துகொண்டு சொல்வதில் எந்த ஞாயமும் இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

எட்டாம் வகுப்பு படித்த பெடியோ,பத்தாம் வகுப்பு படித்த பெடியோ.பெடி என்ன படித்திருக்கு என்பதை விட,என்ன சொல்லுது என்பது தான் முக்கியம்...எட்டாம் வகுப்பு படித்த பெடி சொல்லி நாம் என்ன கேட்பது என்ட ஈகோ தான் எல்லாத்திற்கும் காரணம்

இதில் ஈகோ ஒண்டும் இல்லை ரதி அக்கா, எட்டாம் வகுப்பு படிச்ச பெடி ஏஎல்க்கு வகுப்பெடுக்க முடியாது. இருப்பதுதான் அகப்பையில் வரும். அவனவன் தன்னைத்தானே அறிந்துகொள்ளவேண்டும். "கையில துவக்கிருந்தால் கம்பசுக்குப் போகேலாது" இது புதுமொழி!

  • கருத்துக்கள உறவுகள்

வயது கூடினால் அறிவு கூடும் என்று அர்த்தமில்லை. சிலருக்கு அனுபவம் கூடும். சிலருக்கு அதுவும் கூடாது.

வயதால் மூத்தவர்கள் அறிவிலித்தனமாகக் கதைப்பதையெல்லாம் கேட்டு நடக்கவேண்டியதில்லை. மேலும் புரட்சிகளும், அதிகார மாற்றங்களும் இள வயதினரால்தான் முன்னெடுக்கப்படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஊரில் இருந்து வந்த தாயகப் பற்றாளைரைச் சந்தித்தேன்.அவர் சொன்னார் 60 வருடமாக அரசியல்தான் கதைத்துக் கொண்டு இருக்கிறார்களே ஒளிய யாழில் உள்ள களிவு நீர் அகற்றல் திண்மக் களிவகற்றல் குடி நீர் பிரச்சனை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்று ஆதங்கப் பட்டார். :rolleyes:

13 minutes ago, Sasi_varnam said:

இதை அர்ஜுன் அண்ணா நாங்களும் கிழமைக்கு 4 பார்ட்டி , 10 படம், களியாட்டம், கோலாட்டம் என்று என்று இங்கிருந்து செய்துகொண்டு சொல்வதில் எந்த ஞாயமும் இருப்பதாக தெரியவில்லை.

எம்மவருக்கு பல விடயங்களில் குழப்பங்கள் இருக்கு ,பல விடயங்களுக்கு தெளிவாக என்னால் பதில் எழுத முடியும் ஆனால் எழுதித்தான் என்ன இவர்கள் கேட்க போகின்றார்களா என்பதுதான் பலநேரம் எனது நிலைப்பாடு .எனவே அவர்கள் நிலையில் இருந்துதான் நானும் பதில் எழுதவேண்டும் 

உதரணத்திற்கு மேலே நான் எட்டாம் வகுப்பு படித்த பெடி என்று போட்டா உதாரணதிற்கு வந்திருக்கும் பதில்களை பார்த்தால் விளங்கும் .

ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் ஒரு எட்டாம் வகுப்பு படித்த பொடி  போய் நீர் இப்படித்தான் வேலை செய்யவேண்டும் என்று என்றால் யார் அதை ஏற்றுகொள்வார்கள் ,அது முதல் சரியா ?அவருக்கு முதல் அந்த அறிவு இருக்கா ? இதற்குள் கொண்டுவந்து  ஈகோவை புகுத்துகின்றார்கள். ஆனால் துவக்குடன் போனால் மட்டும் அது சாத்தியம்  .அதைத்தான் நான் இங்கு எழுதினேன் .அது விளங்கும் நிலையில் இவர்கள் இல்லை .இப்படித்தான் இங்கு மல்லு கட்டுகின்றோம் .

நாங்கள் உண்ணாவிரதம் இருந்து மக்களுக்கு உதவி செய்யும் தியாகிகள் இல்லை .எமது புலம் பெயர் வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துக்கொண்டு முடிந்தால்  நாட்டில் இருப்பவர்களுக்கும் எதையாவது செய்ய நினைக்கின்றோம் . 

அது கூட செய்யாதவர்களும் ,அப்படி ஒரு நினைவே இல்லாதவர்களும், உதவிசெய்கின்றேன் என்று அதில் பாதியை முழுங்கியவர்களும் தான் அதிகம் .

பொதுமக்களுடன் வேலை செய்திருந்தால் பல விடயங்கள் புரிய வாய்ப்பிருக்கும் .கடந்த ஞாயிறு கூட யாழ் இந்து கல்லூரி கூட்டத்தில் சூப்பர் சிங்கர் திவாகர் .சோனியாவை கூப்பிட்டது பிழை வீண் செலவு என்று வாயை திறந்து வாங்கி கட்டிகொண்டது நான் தான் .ஒரு சிறிய செய்பவதற்கு கூட பெரிய அளவில் காசை செலவழித்து அவர்களை மகிழ்ச்சி படுத்தி அதில் வரும் மிச்சத்தில் தான் உதவி செய்ய வேண்டிகிடக்கு .

அதைவிட பாடசாலை நேரடியாக சில வன்னியில் இருக்கும் கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்கின்றது அதற்கு ஒரு ஸ்பொன்சர் எடுக்க நாங்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது அதுவும் யாழ் இந்து மாணவர்கள் பலர் மில்லியனர் ஆக இருக்கின்றார்கள் .

எழுதினால் கனக்க எழுதலாம் ஆனால் உள்ளதையும் கெடுத்து குட்டி சுவராக்க நான் விரும்பவில்லை . 

4 hours ago, சுவைப்பிரியன் said:

அண்மையில் ஊரில் இருந்து வந்த தாயகப் பற்றாளைரைச் சந்தித்தேன்.அவர் சொன்னார் 60 வருடமாக அரசியல்தான் கதைத்துக் கொண்டு இருக்கிறார்களே ஒளிய யாழில் உள்ள களிவு நீர் அகற்றல் திண்மக் களிவகற்றல் குடி நீர் பிரச்சனை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்று ஆதங்கப் பட்டார். :rolleyes:

சுற்றாடலை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் விடயத்தில் தாயகத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்தவரும்  பல்கலை கழக பட்டபடிப்பு முடித்தவரும் ஒரே ரகம் தான்.

அண்மையில் இந்த தகவல்கள் கிடைத்தன அதை இணைக்கிறேன், உந்த சுரேஸ் தனக்கு எம்பி நியமனம் கிடைக்காத காண்டுவில் கண்டபடி அறிக்கை விடுறார். தன்னை ஒரு தேசியவாதியாக காட்ட முயகிறார். 

தமிழ்த் தேசியப் பேரவையை தோற்றுவிப்பது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், இன்னும் சில தரப்புக்களும்  2010 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆர்வம் காட்டின. அதற்கான முன் முனைப்புக்கள் 2012ஆம் ஆண்டில் அதிகமாகின. அதன்போக்கில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அழைப்பின் பேரில் 2013ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் ஆகியன சந்திப்பொன்றை நடத்தின.

தமிழ்த் தேசியப் பேரவை என்கிற அமைப்பினைத் தோற்றுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டவில்லை. அதை, தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

எனினும், கூட்டமைப்புக்குள் இருந்து அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் பேரவை உருவாக்கத்துக்குப் பெரும் ஆதரவு அளித்தார். சுமார் 6 மணித்தியாலங்கள் நீண்ட இந்த இழுபறிகளின் பின், வேண்டா வெறுப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியப் பேரவையின் உருவாக்கம் தொடர்பிலான விடயத்துக்கு இணங்கினார்.

இதன்பிரகாரம், தமிழ்த் தேசியப் பேரவையை தோற்றுவிப்பது தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் சிவில் சமூக அமையம் சார்பில் சட்டத்தரணி வி.புவிதரன் மற்றும் சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரனும் நியமிக்கப்பட்டிருந்

முழுமையாக படிக்க - See more at: http://www.tamilmirror.lk/162210#sthash.j08ULJcT.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.