Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 02:27.14 AM GMT ]
sampanthan_002.jpg
ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்தது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவா இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போது இலங்கை மீண்டும் சர்வதேச கௌரவத்தை பெற்றுள்ளது.

எனவே இது தொடர்பாக அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதான நியாயமான விசாரணை நடத்தப்படுவதன் ஊடாக மட்டுமே இலங்கை தனது கௌரவத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நாம் அனைவரும் இலங்கையர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இனத்துவ ரீதியில் தனித்துவமானவர்கள். அதன் காரணமாக தமிழர்களுக்கு தனியான பிரதேச சுயாட்சி வேண்டும். அதற்கு ஈடான அதிகாரத்தை ஏனைய சிங்களப் பகுதிகளுக்கும் வழங்குவதில் தவறில்லை.

அந்நியர் இந்நாட்டை ஆக்கிரமிக்க முன்னர் இந்நாட்டு கண்டி ராஜ்ஜியம், கரையோர ராஜ்ஜியம், தமிழர் ராஜ்ஜியம் என மூன்று தேசங்களாக ஆளப்பட்டிருந்தது. 1833ம் ஆண்டு ஆங்கிலேயர் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே தேசமாக மாற்றி அமைத்தனர்.

அதன் பின்னர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படும் போது தமிழரின் நாடும் சிங்களவரின் கையில் கையளிக்கப்பட்டுவிட்டது. அதனையே இப்போது நாங்கள் திருப்பிக் கேட்கின்றோம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் மூலமாக நாங்கள் தொடர்ந்தும் சிங்களவருடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றோம் என்றும் ஆர். சம்பந்தன் தனது நேர்காணலில் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmuyCSYSWfo6G.html

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவும் இடைக்கிடை ஞானம்பெற்று உலகத்திற்கு அருள்வாக்கு நல்குகின்றார். சிங்கக்கொடியைத் தூக்கியபோது தமிழர் கொடியையும் சேர்த்துத் தூக்கியிருந்தால் நாங்களும் சிங்களவருடன் சேர்ந்துவாழ விரும்பும் செய்தியை உலகமும் கண்டு வியந்து ஏற்றிருக்கும். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உருவான பின்னர் தான் சம்பந்தன் வரலாற்றுப் புத்தகத்தை சும்மா தட்டிப் பார்த்திருக்கிறார். அதுதான் படிச்சது உடன ஞாபகம் வந்திட்டுது.. எடுத்து விட்டிருக்கிறார். இப்படி பலதை எடுத்து விடுவார்.. பின்னர்.. பின்கதவு ஆசாமிகள் குழையடிச்சு.. எல்லாத்தையும் மறக்கப் பண்ணிடுவினம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன மாயமோ, மந்திரமோ?  இருந்தாப்போல இப்படி ஒரு அதீத ஞானம். புல்லரிக்குது.

56 minutes ago, nedukkalapoovan said:

விக்கி ஐயா இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உருவான பின்னர் தான் சம்பந்தன் வரலாற்றுப் புத்தகத்தை சும்மா தட்டிப் பார்த்திருக்கிறார். அதுதான் படிச்சது உடன ஞாபகம் வந்திட்டுது.. எடுத்து விட்டிருக்கிறார். இப்படி பலதை எடுத்து விடுவார்.. பின்னர்.. பின்கதவு ஆசாமிகள் குழையடிச்சு.. எல்லாத்தையும் மறக்கப் பண்ணிடுவினம். :rolleyes:

முதலாவது இதில் சாம்  ஐயாவின்  யுக்தி விளங்கவில்லை ,சிங்களவனிடம் கீட்டால் செருப்பால் அடிப்பான் என்று தெரியும், அதனால் தான்  வடிவேலு ஸ்டைலில் ஆங்கிலீயனை இழுத்து பிள் ளிக்கு  வலிக்காமல் அடிகீறார்,

அதை விட நீங்கள் மேற்கொண்டு வாசிக்கவில்லையா நாடு இப்ப தலை நிமிர்ந்து நிக்குதாம்,

  • கருத்துக்கள உறவுகள்

அடித்துப் பிடிக்க முடியாத நாட்டைக் கேட்டுப் பிடிக்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ ? ஆனாலும், உண்மையான ஆசைதான். 

ஆனால், அந்தக் காலத்தையெல்லாம் தாண்டி எமது சரித்திரம் எங்கேயோ போய்விட்டது. முடிந்தால் இருப்பதையாவது பாதுகாத்துக்கொள்வதுதான் சரி. 

சிங்களவர் மனதில் உண்மையான மாற்றம் வரும் வரை எதுவுமே சாத்தியமில்லை. அவன் தருவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஏனென்றால் அவன் எதையுமே தரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, கறுப்பி said:

ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்

உங்கை எல்லாரும் நீந்த வெளிக்கிட்டு இடையிலை தாண்டு போச்சினமாம்.... இப்பதான் கரையிலையிருந்து நீந்த வெளிக்கிடுறாராம் ஐயா ஈழத்துகருணாநிதி சம்பந்தன்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் ......
யாதார்த்த பணியாரம் சுடுறவர்களுக்கு நேற்றும் இன்றும் லீவோ ?? 

5 hours ago, Maruthankerny said:

யாழ்களத்தில் ......
யாதார்த்த பணியாரம் சுடுறவர்களுக்கு நேற்றும் இன்றும் லீவோ ?? 

இதையே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தால் இங்க நடக்குறதே வேறை. போனவன், வந்தவன், புலம் பெயர்ந்தோன், புலி  என்று எல்லோரையும் திட்டி ஒரு வழி செஞ்சிருப்போம். ஆனால் என்னப்பா செய்ய நம்ம சம்பந்தன் ஐயா சொல்லிப்புட்டாரே. .......

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சிங்கக்கொடியைத்தூக்கினார்

சிறீலங்காவின் சுதந்திரநாளுக்கு போனார்...

தமிழீழம் கேட்கவே மாட்டம் என்றார்

குளப்பக்கூடாது அபிவிருத்தி வேண்டாம் தீர்வு தான் வேண்டும் என்றார்

இப்ப எங்க நாட்டை ◌தாங்க என்கிறார்

பழைய அப்புக்காத்தாக சிங்களவனை மோட்டுச்சிங்களவன் என்று நினைக்கிறார் போலும்

எல்லாத்தையும் கோர்த்து சிங்களம் தமிழர் தலையில் அரைப்பதற்கு இவரே  றோட்டுப்போட்டுக்கொடுக்கிறார்....

நாட்டில் ஏதாவது நல்லது நடந்திடுமோ என்று முன்னாள்கள் பயப்பிடுவது  தெரிகின்றது .

நீங்கள் பயப்பட தேவையில்லை சிங்களவன் எதையும் உடனே தூக்கி தரப்போவதில்லை .

படிப்படியாக வருவதுதான் மாற்றம் அதற்கான ஒரு சூழ்நிலை உருவானதே மிகப்பெரியவிடயம் .

இப்போ அந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு அரசியல் மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் நன்றாகவே தெரிகின்றது .

நிரந்தர தீர்வு  கிடைக்க பலவருடங்கள் எடுக்காலாம் ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் இரு தரப்புகளும் பயணிப்பதே சந்தோசம் தருகின்றது .

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரசியலில் மாற்றங்கள் கொண்டுவரமுடியாது இன்றைய நிலையில் அப்படியான நடவடிக்கைளில் மைத்திரி ரணில் அரசு இறங்கினால் மகிந்தா அண்ட் கோஷ்டியை மீண்டும் ஆட்சிக்கொண்டுவரவே வழி வகுக்கும் .

நாட்டில் இருக்கும் எமது மக்களும் அரசியல்வாதிகளும் புலம் பெயர்ந்த பெரும்பான்மையானவர்களும் இந்த நம்பிக்கையுடனேயே இருக்கின்றார்கள் ஆனால் " முன்னாள்கள் " எம்மால் முடியாமல் போனாதால்  இனி எவராலும் கூடாது என்று எப்படியாவது குழப்பிவிடவேண்டும் என்று வெகுமுனைப்பாக இருக்கின்றார்கள் .

நாட்டில் மக்கள் வெகு தெளிவாக இருந்தது கடந்த தேர்தலில் தெரிந்தது ஆனால் புலம்பெயர்தேசங்களில் இருக்கும் முன்னாள்கள் இன்றும் தங்களிடம் இருக்கும் ஊடகங்ககள் மூலம்  முடிந்தவரை தீர்வை குழப்பமுயற்சித்துக்கொண்டே இருக்கின்றார்கள் .

நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மிக விரைவில் இவர்களை முற்றுமுழுதாக  கணக்கில் எடுக்காத அளவிற்கு இட்டு சென்றுவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள்கள் குழப்புவதால்தான் 2016இல் சறுக்கும் போல இருக்கு ....
இல்லாட்டி சென்ற தைபொங்கலுக்கே தீர்வை வைத்து பொங்கி இருக்கலாம்!

அரசியல் தலைமைகள் வலு யதார்த்தமாக செயல்படுகிறார்கள் 
இருமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது...
ஆள் சாக அதோடு முற்றாக தீர்வு வரும் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, arjun said:

இப்போ அந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு அரசியல் மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் நன்றாகவே தெரிகின்றது .

நிரந்தர தீர்வு  கிடைக்க பலவருடங்கள் எடுக்காலாம் ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் இரு தரப்புகளும் பயணிப்பதே சந்தோசம் தருகின்றது .

அந்த நிரந்தர தீர்வு பலவருடங்கள் கழித்து வரும் வேளையில்  தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை உள்ளடக்கியதாகவே இருக்கும். அப்போது சர்வதேசத்திற்கும் அது சரியாகவே இருக்கும்....

இப்பவே பாலும் தேனும் என்பவர்கள்..........வேண்டாம் சொல்லவே தேவையில்லை :cool:

  • கருத்துக்கள உறவுகள்

2016க்குள் சிங்களவர் ஏதோ தமிழருக்கு அவித்து கொட்டப்போவதாக சிலர் அவித்தார்கள். இப்ப பல காலம் எடுக்குமாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, kalyani said:

2016க்குள் சிங்களவர் ஏதோ தமிழருக்கு அவித்து கொட்டப்போவதாக சிலர் அவித்தார்கள். இப்ப பல காலம் எடுக்குமாம். 

அது தான் அவையும் நாடு கேட்கத்தொடங்கியிருக்கீனம்..

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஸ்காரர் போனது போனது தான் இனி வரயே போகினம் என்று சிங்களம் இனியும் நினைத்தால் முட்டாள்த்தனம்.

அதே பிரிட்டிஸ்காரர், அதே தமிழருக்காக 'பாசமுடன்', அமெரிக்காவின் பின்னனியுடன் வாழைப்பழத்தில் ஊசி ஏறுற மாதிரி உள்ள வருவது தெரியாவிடில் அதுவும், சம்பந்தர், இப்ப சிலேடையாக சொல்லும் போதும் புரியாவிட்டால் அதுவும் முட்டாள்தனம்.

எல்லாப் புகழும், சீனா பின்னால் போன மகிந்தருக்ே!

என்னது? எப்படி வருவினம் என்பவர்களுக்கு: நவீன காலனித்துவம் 21ம் நூறண்டுக்கு உரிய வகையில், தாமே வந்தாள்வதல்ல, தமக்கு சார்பான உள்ளூர் கோஸ்டிகளை பதவியேற்க வைத்து, சார்பில்லாதவர்களை, கவிழ்த்து விடுவது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 2/15/2016 at 4:22 PM, arjun said:

நாட்டில் ஏதாவது நல்லது நடந்திடுமோ என்று முன்னாள்கள் பயப்பிடுவது  தெரிகின்றது .

நீங்கள் பயப்பட தேவையில்லை சிங்களவன் எதையும் உடனே தூக்கி தரப்போவதில்லை .

படிப்படியாக வருவதுதான் மாற்றம் அதற்கான ஒரு சூழ்நிலை உருவானதே மிகப்பெரியவிடயம் .

இப்போ அந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு அரசியல் மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் நன்றாகவே தெரிகின்றது .

நிரந்தர தீர்வு  கிடைக்க பலவருடங்கள் எடுக்காலாம் ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் இரு தரப்புகளும் பயணிப்பதே சந்தோசம் தருகின்றது .

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரசியலில் மாற்றங்கள் கொண்டுவரமுடியாது இன்றைய நிலையில் அப்படியான நடவடிக்கைளில் மைத்திரி ரணில் அரசு இறங்கினால் மகிந்தா அண்ட் கோஷ்டியை மீண்டும் ஆட்சிக்கொண்டுவரவே வழி வகுக்கும் .

நாட்டில் இருக்கும் எமது மக்களும் அரசியல்வாதிகளும் புலம் பெயர்ந்த பெரும்பான்மையானவர்களும் இந்த நம்பிக்கையுடனேயே இருக்கின்றார்கள் ஆனால் " முன்னாள்கள் " எம்மால் முடியாமல் போனாதால்  இனி எவராலும் கூடாது என்று எப்படியாவது குழப்பிவிடவேண்டும் என்று வெகுமுனைப்பாக இருக்கின்றார்கள் .

நாட்டில் மக்கள் வெகு தெளிவாக இருந்தது கடந்த தேர்தலில் தெரிந்தது ஆனால் புலம்பெயர்தேசங்களில் இருக்கும் முன்னாள்கள் இன்றும் தங்களிடம் இருக்கும் ஊடகங்ககள் மூலம்  முடிந்தவரை தீர்வை குழப்பமுயற்சித்துக்கொண்டே இருக்கின்றார்கள் .

நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மிக விரைவில் இவர்களை முற்றுமுழுதாக  கணக்கில் எடுக்காத அளவிற்கு இட்டு சென்றுவிடும் .

மேலுள்ள திரியில் சம்பந்தன் ஐயா விட்ட அறிக்கைக்கு பதில் எழுதிறதுக்கு ஏன் வீணா புலம்புகிறீர்கள். திருப்பி திருப்பி சொல்லிறம் விசைப்பலகையை தட்டும் பொது கை விரலுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பை கழட்டி விடாதைங்கோ என்று.

7 minutes ago, Eppothum Thamizhan said:

மேலுள்ள திரியில் சம்பந்தன் ஐயா விட்ட அறிக்கைக்கு பதில் எழுதிறதுக்கு ஏன் வீணா புலம்புகிறீர்கள். திருப்பி திருப்பி சொல்லிறம் விசைப்பலகையை தட்டும் பொது கை விரலுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பை கழட்டி விடாதைங்கோ என்று.

உங்களுக்கு  சிலருக்கு அது விளங்காது என்று  தெரியும் .

41 minutes ago, arjun said:

உங்களுக்கு  சிலருக்கு அது விளங்காது என்று  தெரியும் .

இந்த சூழ்நிலையில் சம்பந்தனின் இந்த கருத்து தமிழ் மக்களை களி திண்ண வைக்கும் செயல் அன்றி ஒரு தந்திரமும் இல்லை ....விக்கி அவர்களை நினைத்து பயம் ....அவ்வளவுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, arjun said:

உங்களுக்கு  சிலருக்கு அது விளங்காது என்று  தெரியும் .

திரிக்கு திரி திரிக்க மட்டும் தெரியும் 
வேறெதுவும் தெரியாது என்பதும் எல்லோருக்கும் தெரியும். 

தலைவர் சிங்களவர் தேவர்கள் என்றாலும் 
ஆ ஊஒ என்று கைய தூக்குறது 

தேவலைகள் என்றாலும் ஆ ஊ என்றது 

இந்த லட்சணத்தில் யாதர்த்த பணியாரங்கள் அதுவேறு.

என்னது 
இப்படி 
என்று வகுத்து வாழ்பவன்தான் மனிதன்! 

திரிச்சு வாழ்பவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை 
திரிச்சுட்டு .....ஒரு ஓரமா அவர்கள் தாமகவே திரிஞ்சு போவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

மேலுள்ள திரியில் சம்பந்தன் ஐயா விட்ட அறிக்கைக்கு பதில் எழுதிறதுக்கு ஏன் வீணா புலம்புகிறீர்கள். திருப்பி திருப்பி சொல்லிறம் விசைப்பலகையை தட்டும் பொது கை விரலுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பை கழட்டி விடாதைங்கோ என்று.

எப்பவாவது அப்படி நடந்ததுண்டா?

உங்களுக்கு என்னாச்சு...

"நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மிக விரைவில் இவர்களை முற்றுமுழுதாக  கணக்கில் எடுக்காத அளவிற்கு இட்டு சென்றுவிடும் . "

இந்த ஒற்றைவரி உங்களுக்கான பதில்தான் .

ஆழ்ந்த அனுதாபங்கள் ,விரைவில்  நான் கூட உங்களுக்கு பதில்  எழுதாத காலம் வந்துவிடும் .

மூடிய கதவிற்கு பின்னால் நின்று கத்திக்கொண்டு இருக்கவேண்டியதுதான் 

1 hour ago, Eppothum Thamizhan said:

திருப்பி திருப்பி சொல்லிறம் விசைப்பலகையை தட்டும் பொது கை விரலுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பை கழட்டி விடாதைங்கோ என்று.

அப்பு ராசா, இதைத்தானே பலரும் திருப்பி திருப்பி திருப்பி சொல்லுறம் உங்களுக்கு.

மக்கள் வெகு தெளிவு. வாலாட்ட முடியாது - ஒட்ட நறுக்கிட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு மேலே கிங் காங் அளவில்  எழுதி இருக்கும் 
தலைப்பே கண்ணுக்கு தெரியவில்லை ......

  • கருத்துக்கள உறவுகள்

வேறு யார் கேட்டாலும் சிங்களவன் கொடுக்க மாட்டான்.
சம்பந்தர் கேட்டால் மட்டும் தான் சிங்களவன் கொடுப்பான்.
அது தான் கேட்டுக்கொண்டே .....இருக்கின்றார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.