Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒத்துக் கொண்டார்.. சோல்ஹீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

எப்பவும் ஒன்றை மட்டும் ஒரு பக்கமாகவே விமர்ச்சிப்பவருக்குப் பெயர்.. நடுநிலைவாதியல்ல. புத்திசுவாதினமற்ற நிலை. நீங்கள் 2009 க்குப் பின் புலிகளின் எந்தச் சரியை இனங்காட்டி.. எந்தத் தவறை விமர்ச்சித்திருக்கிறீர்கள். முழுக்க உங்களின் சொந்தப் புத்தியில் படும்.. அநியாயக்கருத்துக்களை தான் விதைக்கிறீர்கள். இவை விமர்சனமா...?!

ஏன் புலிகள் மட்டும் தான் எமது போராட்ட வீழ்ச்சிக்கு காரணமா.. வேறு எதுவுமே இல்லையா.. அவற்றை நீங்கள் விமர்ச்சிக்காமல்.. இனங்காணாமல் தவிர்ப்பது ஏன்..?!

இப்படியான தலைப்புக்களாவது உங்கள் கண்ணில் படுகுதா..??/!

சும்மா போங்கண்ணே.. பகிடி விடாமல். நாங்கள் உங்களை எல்லாம் துரோகி.. மண்ணாங்கட்டின்னு சொன்னா.. எங்களுக்கு தான் அசிங்கம். நீங்களே ஒரு கருத்தை எழுதிட்டு நீங்களே உங்களை துரோகின்னு சொல்லுறாங்கன்னு.. தமிழ் தேசியத்தை வைச்சு.. உங்களுக்கு ஒரு போர்வை போத்திக்கிறதுக்கு ஏன் இவ்வளவு முண்டி அடிக்கிறியள். உங்களுக்கு ஒரு அடையாளம் தேவைப்படுகுது. அதுக்கு குத்திமுறியறியளே தவிர.. புலிகளை பற்றி விமர்ச்சிங்க உங்களுக்கு புலிகள் பற்றி என்ன ஆய்வறிவு இருக்கு. அல்லது அனுபவ அறிவிருக்கு.. முதல்ல அதைச் சொல்லுங்க.

உங்களின் விமர்சனம்.. அப்படித்தானே அண்ணே இருக்கு.. ராஜீவு புனிதர். புலிகள் தப்பு. சோனியா வல்லவர்.. அம்மன். புலிகளையே முடிச்சிட்டார். இப்படி சொல்லுற உங்களிட்ட.. வேறு என்ன வடிவில் அண்ணே பதில் வைக்கிறது. அப்படி சொன்னா.. அது துரோகமுன்னாண்ணே உங்க அகராதியில் விளக்கம் கொடுத்து வைச்சிருக்கீங்க.

நீங்கள் எழுதினா அது விமர்சனம். உங்கள் எழுத்தில உள்ள கோமாளித்தனத்தை எழுதினா.. அது.. துரோகமாண்ணே. என்னவோ போங்க. 

என்ன முன்னம் புலிகள் வெல்லும் போது விசில் அடிச்ச நீங்களே... இப்ப.. பிளேட்டை மாத்திப் போட்டு.. முதுகு சொறிவதுதான் கேவலமாக உள்ளது. உங்களை நீங்களே தான் காட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. அவ்வளவும் தான்tw_tounge:tw_blush:

நன்றி தம்பி நெடுக்கு...

எனது  நேரத்தை மீதப்படுத்தியமைக்கும் 

நான் எழுத வந்ததை அப்படியே எழுதியமைக்கும்....

  • Replies 103
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ராசீவ் காந்தியை யார் கொலைசெய்தார்கள் என்பதை யாருமே அறியமுடியாது. இது தமிழர்களுக்கு தனிநாடு ஒன்று கிடைத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமெடுத்துச் செயல்படும் இந்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியே ராசீவ்காந்தி கொலை.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ராஜீவ் கொலை தான் புலிகளின் அழிவுக்கு காரணம் இல்லை  என்று எடுத்துக்கொண்டாலும்   ....இக்கொலை உருவாக்கிய அதிர்வுகள் அதிகம் 
இது ஈழத்தமிழரை முற்றாக தமிழகத்திலிருந்து  பிரித்தது ...தார்மீக ஆதரவினை கூட போராட்டத்திற்கு தந்தவர்கள் கூட இதற்க்கு பிறகு புலிகளுக்கு  ஆதரவு தர தயங்கினர் ....குறிப்பாக தமிழர் தவிர்த்த மற்றைய இந்திய  இனங்களிடம் இது போய் சேர்ந்த வடிவம் வேறு (IPKF நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட ராஜீவ் கொலை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் -நேரடி அனுபவம் )
அதனை இந்திய ஊடகங்கள் சரியாக கையாண்டன ....பிரதமராக இருந்த இந்திரா கொல்லப்பட்டதையும் ராஜீவ் கொல்லப்பட்டதையும் அவர்களுக்கு ஏற்ற முறையில் கையாண்டனர் . கொல்லப்படும்போது இந்திரா பிரதமர் ராஜீவோ முன்னால் பிரதமர் ...தற்போது கூட ராஜிவை இந்திய பிரதமர் ராஜீவ் என்றே அழைக்கிறார்கள் அரசியல் ரீதியாக இதனை துருப்புச்சீட்டாக இந்தியா பயன்படுத்துகிறது  அதனாலேயே பற்றரி வாங்கி கொடுத்தவரும் ஜெயிலில் காய்கிறார் ....முற்று முழுதாக நாங்கள் அடித்து நொறுக்கப்பட நாம் பல காரணங்களை கூறினாலும் ...இந்தியா ஒரு சாட்டு கூறியாவது தப்பித்துவிட இது ஒன்று மட்டுமே போதும்  ......கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் ....இரு நாட்டு பிரதமர்களை போட்டு தள்ளிய ஒரே தீவிரவாத இயக்கம் என்ற பெயராவது கிடைக்காமல் போயிருக்கும் 

அக்னி !
ஆயுத போராட்டமே தொடங்காது போயிருந்தால் ...
ஆக கூடி சிங்களவர்களால் தமிழருக்கு என்ன நேர்ந்திருக்கும் ?

இதுக்கு நீங்கள் என்ன பதிலை தருவீர்கள் ?

பிள்ளை பிரவசத்தின் போது தாய் இறந்துபோனால் 
வேறு ஆசுபத்திரி போயிருக்கலாம் என்பதில் தொடங்கி ...
இந்த கல்யாணமே தேவையற்றது அவளுக்கு என்ற இடம் வரை 
அடுக்கிக்கொண்டு போகலாம்.

பிள்ளை பிரவசத்தின்போது எத்தனையோ தாய்மார்கள் இறந்து போகிறார்கள் 
அதனால் பெண்கள் பிள்ளையே பெறுவதில்லை என்று முடிவு கொண்டிருந்தால் 
இன்று எனக்கும் உங்களுக்கும் இங்கே தட்டிகொண்டிருக்கும் தேவையே இருந்திருக்காது 
நாங்கள் பிறந்திருக்கவே மாட்டோம்.  
அதையும் தாண்டியதுதான் வாழ்க்கை போராட்டம்.

ஓவரு தடையும் 
ஓவரு தடங்கலும் 
தாண்டவேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தந்து 
அவர்கள் ஒரு நாளில் 24 மணி நேரமும் எதோ ஒரு சவாலுடன் போராடிக்கொண்டுதான் 
இருந்தார்கள். அதற்குள் இருந்து பார்த்தால்தான் ஒரு விடயத்தை புரிய முடியும்.

30 வருட போரை ஒரு பந்தியில் எழுதுவது என்றால் 
அதைதான் வேதாந்தம் என்பது.

இன்று புலிகளை விமர்சிப்பவர்களுக்கு அடியும் தெரியாது முடியும் தெரியாது 
எதோ தட்டச்சு தெரியும் என்பதால் தட்டி விட்டு போகிறார்கள்.

83 கலவரம் இப்போதும் இனபடுகொலை என்றுதான் ஐ நா வில் பதிவில் இருக்கு.
அப்போது இலங்கை மீது கூடிய அழுத்தம் பல மட்டங்களில் இருந்தது.

சென்னை கொழும்பு விமான குண்டு தாக்குதல் முயற்சி 
மாலைதீவு முற்றுகை முயற்சி  (புளொட்)
பாலஸ்தீனியர்கள் ஜெர்மனியில் வைத்து இஸ்ற்றேல் விளையாட்டு வீரர்களை கொன்ற பின்பும் 
பாலஸ்தீனத்திட்கு பயிட்சிக்கு போனதை 
பரடிசிட்கு போன மாதிரி பறையடித்து திரிந்துதான் 
அன்றைய ஜே ஆர் நியாய வாதி ஆக்கபட்டர் 
அப்போதே பாகிஸ்தான் முகவர் ஊடாக புலிகள் அமெரிக்க ஆயுதங்களை வாங்கி இருக்கிறார்கள் 
அமெரிக்கா கண்ணை மோடிகொண்டு கொடுத்திராது இவர்கள் என்ன ஆயுதங்களை 
கொள்வனவு செய்ய முயற்சி செய்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கவே 
அவர்கள் லீக் பண்ணி இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். 
அப்போதே அமெரிக்கா தளம் இறங்கி இருக்கிறது 

கடந்த 30 வருடமாக உள்ளூர் அரசியல் பல பல மாறுதல்களை 
கொண்டிருந்த அதே சமயம் சர்வதேச பார்வையிலும் அப்படி பல மாறுதல்கள் 
வந்துதான் இருக்கிறது.
இதயெல்லாம் கடந்து பயணிக்க வேண்டிய போராட்டமே புலிகள் உடையது.

அமெரிக்க சார்வு நிலை எடுக்க புலிகள் 
ஈரானில் இருந்து போகும் சீனா எண்ணை கப்பல்களை 2000யிரத்தில் தாக்கி இருக்கலாம் 
என்று நான் சொல்லமுடியும் 

அதை சாட்டாக வைத்தே அமெரிக்காவும் சீனாவோடு சேர்ந்து 
புலிகளை போட்டு தள்ளி இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம் 

இதுதான் நடந்திருக்கும் என்று எதை சொல்வது ?

கிழக்கு தீமோர் விடுதலை அவர்கள் கிறிஸ்தவர்கள் 
இந்தோனேசியாவில் ஒரு கிறிஸ்தவ தமக்கு சாதகமான ஒரு நாடு 
மேற்கு உலகிற்கு தேவை என்பதால்தான் கிடைத்தது என்று 
உலகின் எல்லா அரசியல் தளத்திலும் ஒரு கருத்து உண்டு.

யுகோசிலோவியாவில் அப்படி நடக்கவில்லையே ?
மேற்கு முஸ்லீம்களுக்கு சார்பாக அல்லவா இருந்தது. 

எல்லா வினைக்கும் ஒரு  எதிர்வினை உண்டு 
அதை யாரும் மறுப்பதற்கு இல்லை 
ராஜீவ் காந்தி கொலை ஒரு தாக்கத்தை உண்டுபண்ணும் 
என்பது புலிகளுக்கு தெரியாது இருக்கவில்லை 
அதையும் தாண்டி பயணிக்க வேண்டிய கட்டாய தேவைதான் அவர்கள் 
உடையாதாக இருந்தது. 

நீலன் திருச்செல்வத்தை பலமுறை கண்டித்து எச்சரிக்கை செய்து வந்தார்கள் 
இவர்கள் முதல்முறையே சுடாத காரணத்தால் 
அவர் நினைத்து இருந்தார் தான் ஒரு கொம்பு 
இவர்கள் கடைசி வந்தாலும் தன்னை சுட மாட்டார்கள் 
சும்மா இப்படி எச்சரிக்கை செய்துகொண்டு மட்டும் இருப்பார்கள் என்றுதான் 
ஆடிக்கொண்டு இருந்தார்.
ஒரு புள்ளியில் அவரை சுட்டுவிட்டு நகரவேண்டிய தருணம் அவர்களுடையாதாக இருந்தது. 

ராஜீவ் காந்தியையும் சோனியாவையும் ஒன்றாக போட்டு தள்ளி இருந்தால் 
நிலைமை வேறாக இருந்திருக்கும்  என்றும் சொல்லி கொள்ளலாம் 
இல்லை என்றும் சொல்லி கொள்ளலாம்.

முதாளித்துவ வர்க்க ஆதிக்கம் என்பதன் கை உலகம் பூராக 
பரவி கொண்டே இருக்கிறது 
ஈழத்தில் போரின் பெயரால்  1.5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் 
இந்தியாவில் அதைவிட மேலாக கொன்றிருக்கிறார்கள் வடிவம் வேறு.
இந்தியா இப்போ கத்தி தீட்டி கொடுப்பதில்தான் கவனமாக இருக்கிறது.
மேல் வர்க்க பணத்தாசை அந்த அளவில் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிந்தகதை. இதில் கருத்தெழுதி எமக்குள் மோதுவதை தவிர வேறு எந்தபலனும் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழரசு said:

எல்லாம் முடிந்தகதை. இதில் கருத்தெழுதி எமக்குள் மோதுவதை தவிர வேறு எந்தபலனும் இல்லை.  

இது எல்லாம் முடிந்தகதை அல்ல. இந்திய அரசின் திட்டத்தின்படி ராசீவ் காந்தியை கொன்றுவிட்டு அதனை புலிகளே செய்தார்கள் என்று தமிழர்களையே ஏற்றுக்கொள்ளும் படி மிகவும் நுட்பமாகச் செயல்பட்டுள்ளார்கள். அதனைத் தமிழர்களும் ஏற்றுக்கொண்டதுதான் கவலைக்குரியது முக்கியமாகத் தமிழர்களுடைய இந்தத் தவறான எண்ணம் மாறவேண்டும். 

ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமி தொடர்பு.  
Posted On at at 10:02 by Mike https://www.blogger.com/email-post.g?blogID=3126732001968993535&postID=2576904530137813886https://www.blogger.com/post-edit.g?blogID=3126732001968993535&postID=2576904530137813886&from=pencil
ஊரை அடிச்சு உலையில போட்டு ஓகோன்னு வாழ்ந்த சாமி இன்று வசமா மாட்டறான். மக்களே இந்த அயோக்கிய பயலை விடாதிர்கள். கோர்டில் ஏற்றி உண்மயை உலகுக்கு சொல்லி இவனை மரண மேடையில் ஏற்றுங்கள்.

ராஜீவ் கொலையில் நடந்த சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் சந்திராசாமி - சுப்ர மணியசாமி இருவர் மீதும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ராஜீவ் கொலையில் - தமிழகத் தலைவர்களைத் தொடர்புபடுத்தி மிரட்டி வந்தவர் சுப்ரமணியசாமி. இந்த பார்ப்பனரே - ராஜீவ் கொலையில் சந்தேகத்துக்கு உரியவர். ஜெயின் கமிஷன் - சுப்ரமணியசாமி மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. 
ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்ரமணியசாமி பற்றி கூறப்பட்டிருப்பது என்ன? இதோ சில பகுதிகள்: 

1995 ஜூன், ஜூலையில் சந்திராசாமியும், சுப்ரணியசாமியும் லண்டனுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களில் லண்டன் பயணத்தின் நோக்கம் குழப் பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்து கிறது. 

காலிஸ்தான் விடுதலைப் படையைச் சார்ந்த ஜெக்ஜித்சிங் சவுகான் என்பவர் - அகாலிதளம் கட்சியைச் சார்ந்த சேவா தாஸ் என்பவரிடம் ராஜீவ் காந்தியைக் கொல்லத் திட்டம் இருப்ப தாகக் கூறி இருக்கிறார். இதை சேவா தாஸ் என்பவர் ஜெயின் கமிஷன் முன் தெரிவித்தார். லண்டனில் உள்ள சவுகான் வீட்டில் - தீவிரவாதிகள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் நடந்தது என்றும், அதில் இந்தக் கொலைத் திட்டம் பற்றி கூறப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நிலையில் - சவுகானை அப்ரூவராக மாறும்படி வலியுறுத்தவே சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் லண்டன் சென்றார்களா என்று, கமிஷனில் கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயின் தனது அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு சுப்ரமணியசாமிக்கு எதிராக சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். 

கமிஷன் முன்பு சுப்ரமணியசாமி நடந்து கொண்ட முறையையும் கமிஷன் குறை கூறியுள்ளதோடு, பல தேவை யான பொருத்தமுள்ள கேள்விகளுக்கு, சுப்ரமணியசாமி பதிலளிக்க மறுத்து விட்டதால் உண்மையைக் கண்டறிய அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் 8-வது பகுதியில் 231-வது பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

If would appear that consistant and persistant effort is there on his (Subramania samy) part not to answer the questions which are most relevant in order to find out the truth (jain commission report vol. viii-page 231)

இந்தப் பின்னணியில் - சுப்ரமணிய சாமி பற்றி அவரது கட்சிச் செயலாளராக இருந்த வேலுசாமி என்பவர் ஜெயின் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தையும் குறிப்பிட வேண்டும். 

வேலுசாமி அளித்த சாட்சியம்: 

1991 மே 24-ம் தேதியோடு தமிழகத் தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருந்தது. அதற்கு 3 நாட்களுக்கு முன்பு மே 31-ம் தேதி ராஜீவ் திருப்பெரும் புதூரில் கொலை செய்யப்பட்டார். 

மே 19-ம் தேதி தில்லியிலிருந்து தமிழகம் வந்த சுப்ரமணியசாமி திருப்பெரும்புதூர் பகுதிக்குத்தான் சென்றார். திருப்பெரும்புதூர் வழியாக நாங்கள் காஞ்சிபுரம் சென்று, பகல் உணவை முடித்துக் கொண்டு வாலாஜா பாத்துக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு, மீண்டும் காஞ்சிபுரம் திரும்பி கூட்டம் பேசிவிட்டு, பிறகு திருத்தணி, பள்ளிப்பட்டுக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு வேலூர் திரும்பினோம். 

அடுத்த நாள் 20-ம் தேதி சேலம், ஆத்தூர் சென்றுவிட்டு நான் விடை பெற்று திருச்சி சென்றுவிட்டேன். அடுத்து 21-ம் தேதி காலை சுப்ர மணியசாமி, விமானம் மூலம் டில்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். 21-ம் தேதி பகலில் டில்லியில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எனவே, அதை முடித்துக் கொண்டு 22-ம் தேதி சென்னை வந்து திருச்சி வழியே மதுரைக்குச் செல்கிறேன் என்று என்னிடம் சுப்ரமணியசாமி பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். 

21-ம் தேதி இரவு தான் ராஜீவ் கொலை செய்யப்படுகிறார். அன்று சுப்ரமணியசாமி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. 21-ம் தேதி காலையில் அவர் திட்ட மிட்டபடி டில்லி செல்லவில்லை. அவரின் அன்றைய அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவே இருந்தன. அன்று, அவர் யாரை யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களும் ரகசியமாகவே இருக்கின்றன. 21-ம் தேதி காலை அவர் சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடென்ட் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். சென்னையில் அவர் ஏன் மர்மமாகத் தங்கினார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தன் கட்சியின் நெருங்கிய தோழர்களுக்குக் கூட தெரிவிக்காமல் அவர் தில்லி பயணத்தை ரத்து செய்தது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது. 

நான் 21-ம் தேதி காலை - தில்லிக்கு சுப்ரமணியசாமியின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண் டேன். அவர் சென்னையில்தான் இருப்பார் என்று அவரது மனைவி கூறினார். பிறகு கட்சிப் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். சுப்ரமணியசாமி எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. 

21-ம் தேதி காலை தில்லிக்கு விமானம் மூலம் புறப்படப் போவதாகக் கூறிய சுப்ரமணியசாமி அன்று காலையில் தில்லி பயண டிக்கெட்டை ரத்து செய்தார். பிறகு சென்னையி லிருந்து பெங்களூருக்கு திருப்பெரும் புதூர் வழியாக காரில் செல்ல வேண்டிய அவசியமென்ன? இதைத் தனது முக்கியத் தோழர்களுக்குக்கூட தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? 

பெங்களூரில் யாரைச் சந்திக்க அவர் அவசரமாகப் போனார்? ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பெங்களூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டிருக்கலாம். ராஜீவ் கொலைக்குப் பிறகு கூடி அவர்கள் பெங்களூர் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கலாம். இந்த நிலையில் பெங்களூருக்கு யாரையோ அவசர மாகச் சந்திக்க சுப்ரமணியசாமி சென்றிருக்கிறார். 

அப்போது சுப்ரமணியசாமி மத்திய அமைச்சர். அமைச்சர் பதவிக்குரிய பல்வேறு வசதிகள் அவருக்கு உண்டு. மே 21-ம் தேதி அவருக்காக செய்யப் பட்ட ஏற்பாடுகள் என்ன? பாது காப்புக்காக செய்யப்பட்ட வசதிகள் என்ன? இது பற்றிய ஆவணங்களை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜெயின் கமிஷன் பெற வேண்டும். 

21-ம் தேதி இரவு 10.25 மணிக்கு நான் சுப்ரமணியசாமி வீட்டுக்குத் தொலை பேசியில் பேசினேன். அப்போது ராஜீவ் கொலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. யாருக்குமே எதுவுமே தெரியாது. 23-ம் தேதி அவரது திருச்சிப் பயணத்தை உறுதி செய்து கொள்ளவே நான் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், மிக சர்வ சாதாரணமாக, ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியைச் சொல்லத்தானே போன் செய்தீர்கள்? என்றார். நான் அதிர்ந்து போனேன். வெளி உலகத்துக்குத் தெரியாத தகவல் - இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது? 

சிறிது நாட்கள் கழித்து - அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த திருப்பெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகரை நலம் விசாரிக்க நானும் சாமியும் போனோம். மரகதத்துக்குத் துளி காயம் கூட ஏற்படவில்லை. மரதகம் அம்மாள் பாசாங்கு செய்வது போலவே எனக்குத் தோன்றியது. 

மரகதம் பற்றி பேச்சு எடுத்தபோது - அறையில் சொல்கிறேன் - நிறைய விஷயம் இருக்கு என்றார் சாமி. திருப் பெரும்புதூரில் - பொதுக் கூட்டத் துக்குத் தேர்வு செய்த இடம் மரகதத்துக்கேத் தெரியாது. அவருக்கே தெரியாமல் சிலர் தேர்வு செய்து விட்டனர். அது சதிகாரர்களுக்குச் சாதகமாகிவிட்டது என்றார் சாமி. இந்த அளவுக்குத் துல்லியமான தகவல்கள் சாமிக்கு எப்படித் தெரிந்தன? 

பிரதமர் சந்திரசேகருக்குத் தெரியும் முன்பே எனக்கு ராஜீவ் மரணச் செய்தி தெரிந்துவிட்டது என்று சுப்ரமணியசாமி கூறியிருப்பதை கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- என்று சுப்ரமணியசாமியுடன் மிக நெருக்கமாக உடனிருந்த திருச்சி இ.வேலுசாமி தனது சாட்சியத்தில் கூறி இருக்கிறார். 

ஜெயின் கமிஷன் முன்பு தரப்பட்ட இந்த சாட்சியமும் கமிஷன் தந்துள்ள பரிந்துரையும் சுப்ரமணியசாமி மீது விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. 

முப்பது வருடங்களாக நாங்கள் பலர் சொன்னதை 

"இப்ப பாலசிங்கம் ஒப்புகொண்டார் "என்று எரிக் சொல்கையும் சொன்னார் என்று வேறு தலைப்பில் அடிபடுகின்றோமே தவிர வேறொன்றுமில்லை .

யாழிலேயே ஆயிரம் தடவைகளுக்கு மேல் நான் எழுதி களைத்த விடயம் இது .

  • கருத்துக்கள உறவுகள்

 இந்திய அழிவுப்படைக்காலத்தில் ஒருநாள் அந்தக்கிராமத்தில் உள்ள அனைவரையும் அருகில் உள்ள கோவிலுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டது. மூன்று சிறிய குழந்தைகளுடன், முறையே 5, 3, 1வயது நிரம்பியவர்கள் இளம் தாயொருவர் தனியாக வாழ்ந்து வந்தார். கணவர் வெளிநாட்டில், குடும்பத்தை எதிர்த்து நடந்த திருமணத்தால் உறவினர் யாருமில்லை. பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு கோவிலுக்குப் போவதற்கும், தனியாகப் போகாமல் சேர்ந்து போவதற்கும் தெருவின் மறுமுனையில் இருக்கும் தன் நண்பியை கூட்டி வருவதற்காக பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு உள் ஒழுங்கை வழியாக வேகமாக நடந்து சென்ற போது அழிவுப்படை வைத்த வெடியில் அந்தத் தாய் அந்த இடத்திலேயே இறந்து விட்டார். வெடிச் சத்தம் கேட்ட பயத்தில் யாருமே வெளியில் வரவில்லை. எதுவும் அறியாத குழந்தைகள் தாய்க்காக பசியோடு காத்திருந்தார்கள். மாலையில் அயலவர்கள் கூடி சடலத்தை எடுத்தார்கள். எதுவும் புரியாத குழந்தைகள் அநாதைகளானார்கள். இதையறிந்த சமய ஸ்தாபனம் ஒன்று அவர்களை பொறுப்பெடுத்துக் கொண்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இன்னும் எவ்வளவோ உண்டு. ஒரு ராஜீவ் காந்திக்காக எவ்வளவு உயிரை பலி கொண்டது பொம்பிளை முசோலினி. அது மேல் வர்க்கம் என்ற படியால் இப்படி ஒரு வக்காலத்து. நியாயம் கற்பிக்கிறோம். பாதிக்கப்பட்ட எமக்கு அப்படி செய்திருக்கலாம்இப்படிச் செய்திருக்கலாம் , என்றொரு விளக்கம். புலிகள் போரை நிறுத்தியிருந்தால் சிங்களவன் தமிழின அழிப்பை நிறுத்தியிருப்பான், என்று சில மேதாவிகள் சொல்வதைப்பார்த்தால், எதை வைத்து இப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. எம்மை நாம் ஏமாற்றவோ அல்லது சிங்களவனை குளிர வைக்கவோ, அவன் செய்தவைகளை நியாயப்படுத்தவோ நாமே எதையாவது எழுதி சில பெயர்களையும் சூட்டி, மற்றவர்களை மட்டந்தட்டி மகிழலாமே ஒழிய அது உண்மையாகாது. ராஜீவை கொல்ல புலிகள் திட்டம் போட்டிருக்கலாம். ஆனால் செய்தவன் யாரோ, பழிசுமந்தது  புலிகள். தண்டிக்கப்பட்டதும், படுகிறதும் அப்பாவி தமிழர்.

ராஜீவைக் கொன்றது தவறு என்பது எப்போதும் வாதம் இல்லை வேணுமானால் அது ஒரு புத்திசாலித்தனமான அல்லது ராஜதந்திரமான காரியம் இல்லை. ஒரு செய்தியாளர் சந்திப்பில்  யார் கொன்றது என்ற கேள்விக்குப் பதிலாக ஏன் கொல்லப்பட்டார் என்று யோசியுங்கள் என்று பாலசிங்கம்  சொல்கின்றார். குமரப்பா புலோந்திரன் திலீபன்அன்னை பூபதி என்னும் ஆயிரமக்கள் படுகொலைகளின் ஊடாக அக்கலகட்டத்தில் அது ஒரு துன்பியல் சம்பவம். இக்கலத்தில் அதை தவறு என்று வதிடுவதே தவறு. தவிர எந்தப் பிரயோசனமும் இல்லை.

ராஜீவை கொல்லாமல் விட்டிருந்தால் தமிழீழம் அமைய இந்தியா வழிவகுத்திருக்கும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ராஜீவுக்கு பதிலாக இந்தியப் படைகளுக்கு எதிரான போர் தமிழர்களை அழிப்பதற்கான காரணப்பொருளாக இருந்திருக்கும்.

ராஜீவைக் கொல்வதற்கு ஆயிரம் காரணங்கள்ஆக்காலகட்டத்தில் இருந்திருக்கின்றது. இருந்தும் அது துராநோக்கில் ராஜதந்திரம் ஆகாது என்பதை காலம் கடந்து புரிய நேரிடுகின்றது தவிர தவறென்றால் காரணங்கள்அனைத்தும் பொய்யாகிவிடும்.

தவறு என்றால் அது சொல்கைம் என்ற வஞ்சகத்தை வன்னிக்குள் விட்டது ஒன்றுதான். சமாதானதூதுவர் என்று வந்து தமிழர்களின் வாழ்வை நாசமாக்கிய பின் இப்போது தனது நயவஞ்சகத்தைநியாயப்படுத்த இந்தசமாதான தூதுவர் நேற்றைய சமாதானப்படைகளை அனுப்பியவரின் கொலையை தவறு என்றும் அதனால் தான் தமிழர்கள் அழிந்தார்கள் என்றும் தன்னை நியயப்படுத்துகின்றார்.  நேற்று ராஜீவால் அழிந்தோர்கள் அவரைக் கொன்றார்கள் ஏனெனில் அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்ட காலம் அது இன்று உங்கள் நயவஞ்சத்தால் அழிந்தவர்கள் உங்களது நயவஞ்சக வர்த்தைகளை யேசுநாதரின் அப்பம்போல் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றார்கள் ஏனெனில் அடிமைத்தனத்துக்கு எதிரான விடுதலைப்போராட்டம் இப்போது இல்லை. இன்றைய அடிமை த்தனத்திலிருந்துவெளிவர முயலாதவர்கள் அதற்கு நேற்றைய தவறை காரணம் கற்பிக்கின்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சண்டமாருதன் said:

நன்றி ஐயா...

  • கருத்துக்கள உறவுகள்

என்னது ராஜீவ் காந்தி செத்துட்டாரா??????

இப்படி இருக்கு இங்கே சிலரின் பதிவு.

ராஜீவ் காந்தி ஒரு அப்பாவியா? இல்லை

அவரால் இன்னல் எமக்கு நேர்ந்ததா? ஆம்

ராஜீவை உயிரோடு விட்டிருந்தால் ஈழம் சாத்தியப் பட்டிருக்குமா? இல்லை

அவரை கொன்றது சரியா?  ஆம் ஏனெனில் அவர் எமக்குச் செய்த அநியாயத்துக்குப் பதிலடி மற்றும் அவர் இருக்கும் வரை தமிழ் ஈழம் சாத்தியப் படாது.

ராஜீவை கொல்லுவதால் ஈழம் சாத்தியப் படுமா? இல்லை ஏனெனில் ஈழத்தை ஆதரிப்பதில்லை என்பது இந்தியாவின் கொள்கை முடிவு. ராஜீவ், நரசிம்மராவ் யார்வந்தாலும் இது மாறாது. ராஜீவ் கொலையால் இந்த கொள்கை முடிவு மேலும் உறுதியாகியது.

அப்போ ராஜீவை கொன்றது மொக்குத்தனமா? நிச்சயமாக.

புலிகள் கொல்லவிலையாமே? இதை புலிகளே சொல்லவில்லை. பிரபாவிடம் ராஜீவ் கொலைக்கு மன்னிப்புப் கேட்பீர்களா? என்ற போது அவர் நாம் கொல்லவில்லை என்றோ நிரபராதிகள் என்றோ சொல்கவில்லை. துன்பியல் என்றே சொன்னார். அவர்கள் கொல்லாத போது மறுக்கத் தயங்குவானேன்?

புலிகள் மட்டுமா கொன்றார்கள்? இல்லை. சந்திரசாமி, சு சாமி இன்னும் பலர் சேர்ந்தே திட்டமிட்டனர். கொல்லும் காண்டிராக்ட் புலிக்கு வழங்கப் பட்டது. இதை தெரியாமல் புலியும் அதில் ஈடுபட, ஆதாரங்களுடன் புலியை மாட்டிவிட்டு மற்றயோர் தப்பிவிட்டனர். 

அப்போ ராஜீவ் காந்தி கொல்லப் பட்டிருக்காவிட்டால்? பெரிய மாற்றம் வந்திராது. நீண்ட நோக்கில் புலியை அழித்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். மக்கள் இந்தளவு அழியாமல் புலியை அழித்திருப்பார்கள். அதை விட வேறு எதையும் சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலைக்குள் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி, மரகதம் சந்திரசேகர் இவர்களுடைய பெயர்களும் ஏன் அடிபட்டது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேபோல யாசர் அபாத் ராஜீவை எச்சரித்த நிகழ்வும் உண்டு. இதைப் போல அவிழ்க்கப்படாத மிடிச்சுகள் இன்னும் நிறையவே உள்ளன. ஆகவே, இதை ஏதோ ராஜீவ் ஈழத்தில் கொலை செய்தார்.. அதற்கு புலிகள் பழிவாங்கி விட்டார்கள் என்கிற அளவில் சுருக்கிவிட வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த முக்கியமான நிகழ்விலும் conspiracy theories நிறைய இருக்கும் தான். ஆனால், கோசான் சொன்னது போல ஏன் புலிகளிடம் இருந்து மறுப்பு வரவில்லை என்பதே புலிகள் இதில் விரும்பி ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டி நிற்கிறது.விளைவுகள் இதையொட்டித் தான் இருக்குமேயொழிய யார் யாரோ புத்தகம் எழுதி விற்கப் பாவிக்கும் conspiracy theory இனால் அல்ல!  

ராஜீவை கொன்று இருக்கவிட்டால் தமிழ் ஈழம் கிடைத்திருக்குமா என்று யார் சொன்னார்கள் ?ஆனால் இன்றைய இந்த நிலைக்கு எமது இனம் கடைசிவரையும் வந்திராது .

இந்திய படைகள் இலங்கையில் செய்த அராஜகத்திற்கு அவரின் கொலை நியாயம் என்பவர்கள் இன்று தமிழ் இனம் இந்த அழிவுக்கும் இன்றைய இழி நிலைக்கும் அது ஒரு பெரிய காரணம் என்பதை இலகுவில் மறந்துவிடுகின்றார்கள் .இனமே அழிந்தாலும் பரவாயில்லை நடு தெருவில் நின்றாலும் பரவாயில்லை எதையும் செய்வோம் என்று சிந்திப்பவர்களுக்கு எதையும் விளங்கபடுத்தமுடியாது 

ராஜீவை புலிகள் கொல்லவில்லை என்பவர்களுக்கு பதில் எழுதவே தேவையில்லை .

"ராஜீவைக் கொல்வதற்கு ஆயிரம் காரணங்கள்ஆக்காலகட்டத்தில் இருந்திருக்கின்றது. இருந்தும் அது துராநோக்கில் ராஜதந்திரம் ஆகாது என்பதை காலம் கடந்து புரிய நேரிடுகின்றது தவிர தவறென்றால் காரணங்கள்அனைத்தும் பொய்யாகிவிடும். "

காலம் கடந்து புரிய ? அண்ணைக்கு என்ன நடந்தது .

கொலை நடந்த அன்றே புரிந்த விடயம் அது,  இன்று அது பற்றி பேசுகின்றோம் ,அது கூட விளங்கவில்லையா ?

ஆயிரம் இல்லை அம்பதினாயிரம் காரணங்கள் இருந்தாலும் ராஜீவை கொன்றது பிழைதான் .

சில பிழைகளில் இருந்து வெளியில் வந்துவிடலாம் ஆனால் இது எக்காலமும் எம்மால் வெளியில் வரமுடியாத வரலாற்று பிழை .

இன்று கொலையாளிகளை விடுதலை செய்யுங்கோ என்று கெஞ்சுவதும் அகதி முகாம்களில் நடப்பவற்றை பார்த்து இந்தியாவை திட்டியும் எதுவும் ஆகப்போவதில்லை ,

ஆனால் இவை எல்லாவற்றையும் விட ராஜீவை போட்டனாங்கள் என்ற பெருமை முக்கியம் .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆத்திர மிகுதியிலோ அல்லது பழிவாங்கும் நோக்கிலோ மட்டுமே ராஜீவை போட்டார்கள் என்று நான் சொல்லவில்லை.

ஆனால் தமது இருப்புக்கு/தமிழ் ஈழக் கொள்கைக்கு ரஜீவ் எதிரி எனவே அவரைப் போடவேண்டும் கூடவே எங்கிருந்தோ யாரோ பணமும் தருகிறார்கள் ஒரு கல்லில் 2 மாங்காய், போட்டுவிட்டு தப்பி விடுவோம் என்று நம்பி போட்டிருக்கிறார்கள்.

இது முற்றுமுழுதான ஒரு மாபியா முறை டீலிங். இதே போல் ஒரு மாங்காய் அடித்தலைத்தான் எமில் காந்தன் மூலமும் 2005 இல் நடத்த வெளிக்கிட்டு மூக்குடைந்தார்கள்.

எல்லா கொலைக்கும் கொலையாளி ஒரு நியாயம் வைத்திருப்பார். புலிகளை பொறுத்த மட்டில் ஏன் என் மட்டில் கூட ராஜீவுக்கு நடந்தததை, ஒரு தனிமனிதனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் பிரபாவின் இடத்தில் நானிருந்து இந்த கொலையை நடத்தி இருப்பேனா? ஒரு போதும் இல்லை.

ஏனென்றால் ஒரு நலிய இனத்தின் எதிர்காலம் என்கையில் இருக்கையில் அப்படி முடிவெடுக்க முடியாது.

Edited by goshan_che

16 minutes ago, goshan_che said:

இந்த இனம் இப்படியே அழிந்து விடுமோ அல்லது அடிமையாய் தான் காலம் காலமாக இருக்குமோ என்ற சந்தேகம் வர வர அதிகமாகின்றது .எள்ளளவும் யதார்த்தமாக சிந்திக்காமல் கனவிலும் பொய்யிலும் புரட்டிலும் காலத்தை ஓட்ட நினைத்தால் கடைசியில் அதுதான் நடக்கும் போலிருக்கு ,

நல்லவேளை திலீபன் ,பூபதி ,குமரப்பா ,புலேந்திரனை ராஜீவ் சுட்டார் என்று எழுதாமல் விட்டார்கள் .

அனைத்து இயக்கங்களும் கூட்டணியும் இலங்கை -இந்திய ஒப்பந்தை ஆதரித்தது போல புலிகளும் ஆதரித்து இருந்தால் இவை எதுவுமே நடந்திருக்க சாத்தியம் இல்லை 

அனைத்து தவறுகளையும் தமது மடியில் கட்டி வைத்துகொண்டு மற்றவனை நோக்கி எப்படித்தான் கை காட்டுகின்றார்களோ என்று புரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, arjun said:

உண்மை. இந்திய ராணுவ கொடுமைகளை கண்டவன் எனும் வகையில் இந்தியா மீதும் மண்டையன் குழு வகையறாக்கள் மீதும் எனக்குத் தீரா ஆத்திரம் இருப்பினும், அந்த கொடுமை நடக்க புலிகள் எப்படி காரணியாய் அமைந்தார்கள் என்பதையும் நான் மறப்பதில்லை.

இதேதான் முள்ளிவாய்காலிலும் நடந்தது. இனப் படுகொலை செய்யவும் துணிந்த அரசு என்று தெரிந்தே புலிகள் அந்த அபாயத்துள் மக்களை தள்ளினார்கள்.

எல்லாம் இந்த பாழாய்ப் போன " நாடு சுடுகாடாய் போயினும், நான் மட்டுமே மிஞ்சினும், தனிநாடு கண்டே தீருவேன்" என்ற அகங்காரத்தின் வெளிப்பாடே. இது வெளிதோற்றத்துக்கு கொள்கை உறுதி போல தெரிந்தாலும் இது ஒரு விட்டுக் கொடாத்தன்மையே. 

ஒருவகை அகந்தை செருக்கு மனநிலை. மனநோய். கிட்லருக்கும் இது இருந்தது.

பிரபா இந்தியாவை முண்டினார் - அழிந்தார்- தமிழரும் அழிந்தனர்.

கிட்லர் ரஸுயாவை முண்டினார் -அழிந்தார் - ஜேர்மனியும் அழிந்தது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, arjun said:

இந்த இனம் இப்படியே அழிந்து விடுமோ அல்லது அடிமையாய் தான் காலம் காலமாக இருக்குமோ என்ற சந்தேகம் வர வர அதிகமாகின்றது .எள்ளளவும் யதார்த்தமாக சிந்திக்காமல் கனவிலும் பொய்யிலும் புரட்டிலும் காலத்தை ஓட்ட நினைத்தால் கடைசியில் அதுதான் நடக்கும் போலிருக்கு ,

நல்லவேளை திலீபன் ,பூபதி ,குமரப்பா ,புலேந்திரனை ராஜீவ் சுட்டார் என்று எழுதாமல் விட்டார்கள் .

அனைத்து இயக்கங்களும் கூட்டணியும் இலங்கை -இந்திய ஒப்பந்தை ஆதரித்தது போல புலிகளும் ஆதரித்து இருந்தால் இவை எதுவுமே நடந்திருக்க சாத்தியம் இல்லை 

அனைத்து தவறுகளையும் தமது மடியில் கட்டி வைத்துகொண்டு மற்றவனை நோக்கி எப்படித்தான் கை காட்டுகின்றார்களோ என்று புரியவில்லை .

எனக்குப் புரிகிறது! மேலே ரகுவைப் போட்டுத் தாக்கியிருப்பதில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது! "நாம் முன்னர் விசிலடித்திருந்தால் இப்ப வந்து விமர்சனம் வைக்கக் கூடாது" என்ற தொனி வெளிப்பட்டிருக்கிறது! விசிலடிப்பவன் அப்படியே இருக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்புத் தான் இந்த முரண்டு பிடிப்புக்குக் காரணம்.

"The body" என்று ஒரு ஆங்கிலப் படம் பார்த்தீர்களா அர்ஜூன்? இயேசுக் கிறிஸ்துவின் உடலை ஒரு அகழ்வாராய்ச்சியாளர் கண்டு பிடித்து விடுகிறார் இயேசு தன் உடலோடு பரலோகம் எய்தினார் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை என்பதால், இந்தக் கண்டு பிடிப்பு கிறிஸ்தவத்திற்கு அச்சுறுத்தலான கண்டு பிடிப்பு. அந்தக் கண்டு பிடிப்பை மறைக்க எல்லாம் செய்து பார்க்கிறார்கள். முடியவில்லை. இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு பாதிரியார் கோயில் உச்சியில் இருந்து குதித்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்! கிறிஸ்தவத்தின் உண்மையான அடிப்படை இயேசுவின் உடலில் அல்ல என்ற செய்தியுடன் படம் முடிகிறது. இங்கே புலிகள் மீதும் புலிகளின் தலைமை மீதும் விசுவாசம் கொண்டோரின் நிலையும் இது போன்ற மனநிலை தான் என நம்புகிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ragunathan said:

புலிகள் விட்ட தவறுகளில் மிகப்பெரிய தவறு, 2009 இல் எமது தாயகவிடுதலைக்கான போராட்டத்தை ஒட்டுமொத்தமாக காவுகொடுக்கக் காரணமான தவறு, தமிழர்களை ஏதிலிகளாக, மற்றையவன் தருவதை அண்ணாந்து பார்த்துப் பிச்சை ஏந்தும் இடத்திற்கு விட்டுச் சென்ற தவறு. 

ஒரு விடுதலைப் போராட்டம் எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்கு நாம் ஒரு உதாரணம். அதைத்தவிர எமது போராட்டத்தினால் நாம் கண்டது எதுவென்றால், சத்தியமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள்.

புலிகள் விட்ட மிகப்பெரிய தவறு தமிழ்ச்செல்வனை அரசியல் துறை பொறுப்பாளராக நியமித்ததுதான். மற்றயது ஏதாவது  ஒரு பெரிய நாட்டுடன் (இந்தியா தவிர்ந்த) நட்புறவு பேணாதது. போர்நிறுத்த காலத்தில் சீனாவிலிருந்து வந்த உயர்தர பிரமுகர்களை தலைவரை சந்திக்கவிடாமல் தடுத்ததும் இதே தமிழ்செல்வன்தான்.
ரகுநாதன், அவர்கள் போராடாமல் விட்டிருந்தாலும் நாம் மற்றவன் தருவதை அண்ணாந்து பார்த்து பிச்சை எடுக்கும் நிலையில் தான் இன்றும் இருந்திருப்போம். என்ன இவ்வளவு உயிரிழப்புகள் வந்திராது.

புலிகள் ஒரு கொள்கைக்காக போராடச்சென்றார்கள். அதிலிருந்து அவர்களால் மாறமுடியவில்லை. அதனால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் அந்நிலையிலிருந்து மாறி ஒரு அரசியல் தீர்வுக்கு போய் சாதாரண வாழ்வை வாழ்ந்திருந்தால் எமது சனம் என்ன சொல்லியிருக்கும். தனித்தமிழீழம் என்று கூறி எமது பிள்ளைகளை காவுகொடுத்துவிட்டு இவர்கள் மட்டும் சொகுசாக வாழ்கிறார்கள் என்று நிச்சயமாக தலைவர் மீது பழிபோட்டிருப்பார்கள்தானே. இனியும் அதைப்பற்றி கதைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுவதைவிட பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்து அவர்களை ஒரு சகஜமான நிலைக்கு கொண்டுவருவதைப்பற்றி கருத்தாடலமே.

கொஞ்சம் திருத்தி தமிழனுக்காக எவன் போராட புறப்பட்டாலும் முடிவு இதுதான் என்பதற்கு புலிகளின் போராட்டம் ஒரு உதாரணம்.

16 hours ago, goshan_che said:

ரகு பார்த்துக் கொண்டே இருங்கள், உங்கள் மனைவி, ஒன்றுவிட்ட சித்தப்பா, ஒன்று விட்ட சித்தப்பாவின் மூன்றாம் தாரத்தின் பக்கத்து வீட்டுக் காரர், இப்படி யாராவது ஒருத்தரை சிங்களவர் என்று இனம் கண்டு, சும்மா போட்டு வாங்கப் போகிறார்கள் உங்களை.

இப்போ லைக் போட்டிருப்பவர்களும் கூட ?

திரிக்கு சம்பந்தமில்லாமல் கருத்தெழுதுபவர்களை நிர்வாகம் தூக்கினால்தான் ஆரோக்கியமான கருத்தாடல்கள் யாழில் இடம்பெறும்.

15 hours ago, goshan_che said:

இல்லை முதலில் சிங்களவன், பின் மலையாளி, பின் நாயக்கன், பின் ஹிந்தியன், பின் நோர்வேகாரன், பின் பிராமணன் பின் திராவிட ஏஜெண்ட்.

இப்படி படிப்படியாகத்தான் உங்கள் பட்டம் பதவி உயர்வுகள் நடக்கும்.

அவசரப் படாதேயும்.

இங்கை கன சனத்திற்கு பதில் கருத்தெழுத மேல்தட்டில சரக்கில்லை. மற்றவனின் கருத்துக்கு உடுக்கையடிப்பதே வேலையாய்ப் போச்சு.சுரனைகெட்ட ஜென்மங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2009 தமிழ் மக்கள் இன அழிப்பை சந்தித்த பின்.. மகிந்தவோடு சிநேகிதம் கொண்டு.. 2010 இல் சொறீலங்காவுக்கு போன அமிர்தலிங்கத்தின் மனைவி...

புலிகள் செய்த தவறு.. அவர்களின் ஆட்சியின் போது அரசாங்கத்தோடு தீர்வு தேடாதது தான் என்றதாக அண்மையில் வாசித்த.. பிபிசியின் ஒரு பதிவில் இருந்தது. (அம்மையாரின் சாதனையாக அதனை இணைத்த போது அதனை களவாடி விட்டார்கள். tw_blush:)

அந்த அம்மையார் இதே தவறை ஏன் தனது கணவர் செய்தார்.. 1950களில் இருந்து கேள்வி கேட்டுப் பார்த்தாவோ தெரியாது. 

ஆனால் புலிகள் எதையாவது மக்களுக்கு செய்வாங்கள் என்ற எதிர்பார்ப்பு துரோகிகளிடம் கூட இருந்துள்ளது.

இருப்பினும்.. யாழுக்கு வரும் சிலதுகளுக்கு அந்த சிந்தனை கூட இருந்ததில்லை. அப்படி இருக்கும் போது எப்படி உருப்படியா சிந்திக்குங்கள்.  கருத்து வைக்குங்கள். அதுகளுக்கு தெரிஞ்சது ஒன்றிரண்டு. அதை திருப்பி திருப்பி வடிவேல் பாணியில் எழுதி நகைச்சுவை பண்ணிக்கிட்டு கோமாளிகளாகவே வலம் வருதுங்க. tw_blush::rolleyes:

நல்ல முதுகு சொறிதல்களும் நடக்குது. அதுக்கு என்று ஒரு நாலு திரியுது இப்ப யாழில்.. வேலை மிணக்கட்டு. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

உங்கள் கருத்திற்கு நன்றி அக்னி,

புலிகளை மட்டுமே தவறென்று நான் சொல்லவில்லை. புலிகள் சிந்திக்காமல் எடுத்த மகா முட்டாள்த்தனமான முடிவான ரஜீவைக் கொல்வதென்பது (நெடுக்காலபோவானின் கருத்தில், ஒரு வெடிப்பு ) எமது போராட்டத்தை 2009 அழிக்கக் காரணமாயிற்று என்றுதான் நினைக்கிறேன்.

தமிழினத்தை புலிகளைப்போல் எவரும் உயர்த்தவுமில்லை, தாழ்த்தவுமில்லை.

ரஜீவ் என்ன புனிதரா?? இல்லையே இந்திய ஆக்கிரமிப்புப் படைய எமது தாயகத்துக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படவும், பல பெண்கள் கற்பழிக்கப்படவும் காரணமாக இருந்தவர். 1991 இல் அவர் மீண்டும் பதவிக்கு வந்தால், மீண்டும் படையை அனுப்புவார் என்று பயப்பட்ட நாம் அவரைக் கொன்றோம் என்றால், 2009 இல் படையை நேரில் அனுப்பாமலேயே அவரது விதவை மனைவி அங்கிருந்து எம்மைக் கருவறுத்தாள். 

இலங்கைக்கு ராணுவ தளபாட உதவி, செய்மதி உதவி, கடற்படையின் காவல், புலிகளின் கப்பல்கள் மீதான தாக்குதல், சர்வதேச அழுத்தங்களிலிருந்து இலங்கையைப் பாதுகாத்து முற்றான ஒரு அழித்தொழிப்பு யுத்தத்தை தங்குதடையின்றி நடத்த உதவியமை...இப்படிப் பல. இவற்றுக்கு காரணம் என்ன ? ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். அதுதான் தனது கணவரைப் புலிகள் கொன்றது. 

ரஜீவ் கொல்லப்பட்டது மே 1991 இல், முள்ளிவாய்க்கால் நடந்தது 2009 இல். இடைப்பட்ட 18 வருட காலத்தில் எவர் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும், காங்கிரஸ் கட்சியின் தலமைப் பதவி சோனியாவினதும், அவரது குடும்பத்தினதும் கைக்கு வந்தது - மகிந்த இலங்கையில் ஆட்சிப் பீடமேறிய அதே காலத்தில்த்தான். இரு வேறு காரணங்களுக்காக புலிகளை முற்றாக அழிக்கக் காத்திருந்த மகிந்தவும் சோனியாவும் கூட்டாகச் சேர்ந்து அழித்து முடித்தார்கள். 

மீண்டும் மீண்டும் இதுபற்றிக் கதைத்து பலரைக் காயப்படுத்த வேண்டாம். இத்துடன் முடிக்கிறேன்.

ரகு, ராஜிவ்காந்தி கொல்லப்படப்போவது பற்றி பல காங்கிரஸ் தலைவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது என்பது இந்தியாவால் மூடிமறைக்கப்பட்ட உண்மை, சரியான விசாரணை நடந்திருந்தால் அதன் பின்புலங்கள் பல வெளிப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, nedukkalapoovan said:

அந்த அம்மையார் இதே தவறை ஏன் தனது கணவர் செய்தார்.. 1950களில் இருந்து கேள்வி கேட்டுப் பார்த்தாவோ தெரியாது. 

ஆனால் புலிகள் எதையாவது மக்களுக்கு செய்வாங்கள் என்ற எதிர்பார்ப்பு துரோகிகளிடம் கூட இருந்துள்ளது.

இருப்பினும்.. யாழுக்கு வரும் சிலதுகளுக்கு அந்த சிந்தனை கூட இருந்ததில்லை. அப்படி இருக்கும் போது எப்படி உருப்படியா சிந்திக்குங்கள்.  கருத்து வைக்குங்கள். அதுகளுக்கு தெரிஞ்சது ஒன்றிரண்டு. அதை திருப்பி திருப்பி வடிவேல் பாணியில் எழுதி நகைச்சுவை பண்ணிக்கிட்டு கோமாளிகளாகவே வலம் வருதுங்க. tw_blush::rolleyes:

tw_thumbsup: tw_thumbsup: tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா,இலங்கை,இந்தியா ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றிருந்தால் இந்தியப் படைக்ள் வந்திருக்காது.ராஜீவையும் கொன்றிருக்கத் தேவையில்லை.இது தானே உங்கள் கருத்து...அந்த ஒப்பந்தத்தில் எமக்கு சாதகமான என்ன விடயங்கள் விடயங்கள் இருக்குது என சொல்லுங்கள் பார்ப்போம்...பத்தோட,பதினொன்றாய் அவர்கள் தாறதை ஏற்றிட்டு பேசாமல் அடிமையாய் இருந்திருக்க வேண்டும். அதைத் தானே சொல்கிறீர்கள்.

இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் சும்மா ஒரு பேய்க் காட்டலுக்குத் தான். அதில் ஒன்றுமே அவன் தரப் போறதில்லை.அந்த ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் நீங்கள் சொன்ன மாதிரி மு.வாய்க்கால் என்ட பேரழிவு ஒரே அடியாய் ஏற்பட்டு இருக்காது தான்...ஆனால் இப்ப இருக்கிறதை விடவும் கேவலமாய்,அடிமையாய் தான் தமிழர்கள் அங்கே வாழ்ந்த்து கொண்டும்,அழிந்து கொண்டும் இருப்பார்கள்...யுத்தத்தில் இருந்து மீண்ட இனம் என்ட படியால் சர்வதேச பார்வை எம் பக்கம் இருப்பதால் அபிவிருத்தி,மண்ணாங்கட்டி என்று ஏதோ செய்கிறார்கள்.

இந்தியா,எம்மை அழித்ததிற்கு காரணம் இந்தியப் படைகள் ஊரில் இருக்கும் போது அவர்களுக்கு புலிகள் கொடுத்த அடி...தெற்காசியாவில் தாங்கள் யார் என மற்றவர்களுக்கு பாடம் படிப்பிக்க வேண்டும்.அத்தோடு புலிகளையும் பலி வாங்க வேண்டும் என்று நினைத்தது செய்து முடித்தது.மற்றப்படி ராஜீவ் கொலை என்பதெல்லாம் சொல்ஹேம் போன்றவர்களது சதி...நோர்வே,சொல்ஹேம் போன்றோர் பேச்சு வார்த்தை,ம்ண்ணாங்கட்டி என்று தலையிட்டு இருக்காவிடின் எமது நிலைமையே வேறாகி இருந்து இருந்திருக்கும்.

ஒரு வேளைஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகளும் ஏற்று ஆயுதத்தை மெளனித்த பின்,ஜேஆர் ஒப்பந்த்ததை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொன்னால் என்ன செய்திருப்பீர்கள்( அப்பவும் மோட்டுப் புலிகள் ஏன் தான் ஆயுதத்தை கீழே போட்டவர்கள் என திட்டுவீர்கள்]...உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.நீங்கள் இங்கே ஹாயாய் இருக்கிறீங்கள்.அனுபவிக்கப் போறது ஊரில் இருக்கும் மக்கள் தான்

உங்களை பொறுத்த வரைக்கு ராஜீவ் கொலைக்காக புலிகளை,இந்தியா பழி வாங்கும் எனத் உங்களுக்குத் தெரியும்...புலிகளை விடுங்கள் அவர்கள் அழிந்து போக வேண்டும் எனத் தானே நீங்களும் விரும்பினீர்கள்.அந்த மக்களை காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்திருக்கலாம் தானே!...முடிந்ததா உங்களால்? இல்லைத் தானே!

ஒன்று நட‌ந்து முடியும் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு,நடந்து முடிந்த பின் நான் சொன்ன மாதிரியே நடந்திட்டு பார்த்தியா என சொல்வது மிகவும் கேவலம் கெட்ட செயல்...இந்தியன் ஆமி செய்த அட்டூழியங்களை பார்த்த ஒவ்வொரு தமிழனும்,ராஜீவ் இறந்த செய்தி கேட்டு சந்தோசப்பட்டான்...அப்படி சந்தோசப்பட்ட ரகு இன்டைக்கு புலிகள் தோத்தவுடன் அது பிழை எனச் சொல்கிறார்.புலிகள் இந்த யுத்தத்தில வென்றிருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ???

ஒன்றை விமர்சிப்பது இனி மேல் இப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாது என்பதற்க்காகத் தான். புலிகளே அழிந்த பின் இந்ந சம்பவத்தை விமர்சிப்பதில் என்ன பயன்?...சர்வதேசத்திற்கும்,இந்தியாவுற்கும்,சொல்ஹேமுக்கும் அவ்வளவு மக்களை கொன்றோழித்ததிற்கு காரணம் வேண்டும். அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் ராஜீவ் கொலை....இதற்கு சில தமிழர்களும் தெரிந்தோ/தெரியாமலோ துணை போவது வேதனை

  • கருத்துக்கள உறவுகள்

அஹ்றிணையில் விளித்தல், தாறுமாறாகத் திட்டல் அதுக்கு "தம்ஸ் அப்" காட்டி ஏற்றி விட ஒரு சிலர், இது தான் எமக்குத் தேவை! கருத்துகளுக்கு மூலக் கொதியைத் தவிர வேறெதும் பதிலாக இல்லாமல் இருப்பதே தேசிக்காய்களின் பெரிய வீக்னெஸ்! அந்தப் பலவீனத்தை இப்படி வெளிக்கொண்டு வந்து விட்டாலே பாதி வெற்றி தான்!tw_blush:

அப்ப நான் வாறன்! வெள்ளி இரவுப் பார்ட்டிக்காகக் கொஞ்சம் தயாராக வேணும்! (வயிற்றுப் புண் உள்ளோருக்கு அல்கஹோல் கூடாது! சோ..சொறி! யூ அர் நொற் இன்வைரட்!:cool:)  

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரதி said:

அர்ஜீன் அண்ணா,இலங்கை,இந்தியா ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றிருந்தால் இந்தியப் படைக்ள் வந்திருக்காது.ராஜீவையும் கொன்றிருக்கத் தேவையில்லை.இது தானே உங்கள் கருத்து...அந்த ஒப்பந்தத்தில் எமக்கு சாதகமான என்ன விடயங்கள் விடயங்கள் இருக்குது என சொல்லுங்கள் பார்ப்போம்...பத்தோட,பதினொன்றாய் அவர்கள் தாறதை ஏற்றிட்டு பேசாமல் அடிமையாய் இருந்திருக்க வேண்டும். அதைத் தானே சொல்கிறீர்கள்.

இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் சும்மா ஒரு பேய்க் காட்டலுக்குத் தான். அதில் ஒன்றுமே அவன் தரப் போறதில்லை.அந்த ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் நீங்கள் சொன்ன மாதிரி மு.வாய்க்கால் என்ட பேரழிவு ஒரே அடியாய் ஏற்பட்டு இருக்காது தான்...ஆனால் இப்ப இருக்கிறதை விடவும் கேவலமாய்,அடிமையாய் தான் தமிழர்கள் அங்கே வாழ்ந்த்து கொண்டும்,அழிந்து கொண்டும் இருப்பார்கள்...யுத்தத்தில் இருந்து மீண்ட இனம் என்ட படியால் சர்வதேச பார்வை எம் பக்கம் இருப்பதால் அபிவிருத்தி,மண்ணாங்கட்டி என்று ஏதோ செய்கிறார்கள்.

இந்தியா,எம்மை அழித்ததிற்கு காரணம் இந்தியப் படைகள் ஊரில் இருக்கும் போது அவர்களுக்கு புலிகள் கொடுத்த அடி...தெற்காசியாவில் தாங்கள் யார் என மற்றவர்களுக்கு பாடம் படிப்பிக்க வேண்டும்.அத்தோடு புலிகளையும் பலி வாங்க வேண்டும் என்று நினைத்தது செய்து முடித்தது.மற்றப்படி ராஜீவ் கொலை என்பதெல்லாம் சொல்ஹேம் போன்றவர்களது சதி...நோர்வே,சொல்ஹேம் போன்றோர் பேச்சு வார்த்தை,ம்ண்ணாங்கட்டி என்று தலையிட்டு இருக்காவிடின் எமது நிலைமையே வேறாகி இருந்து இருந்திருக்கும்.

ஒரு வேளைஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகளும் ஏற்று ஆயுதத்தை மெளனித்த பின்,ஜேஆர் ஒப்பந்த்ததை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொன்னால் என்ன செய்திருப்பீர்கள்( அப்பவும் மோட்டுப் புலிகள் ஏன் தான் ஆயுதத்தை கீழே போட்டவர்கள் என திட்டுவீர்கள்]...உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.நீங்கள் இங்கே ஹாயாய் இருக்கிறீங்கள்.அனுபவிக்கப் போறது ஊரில் இருக்கும் மக்கள் தான்

உங்களை பொறுத்த வரைக்கு ராஜீவ் கொலைக்காக புலிகளை,இந்தியா பழி வாங்கும் எனத் உங்களுக்குத் தெரியும்...புலிகளை விடுங்கள் அவர்கள் அழிந்து போக வேண்டும் எனத் தானே நீங்களும் விரும்பினீர்கள்.அந்த மக்களை காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்திருக்கலாம் தானே!...முடிந்ததா உங்களால்? இல்லைத் தானே!

ஒன்று நட‌ந்து முடியும் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு,நடந்து முடிந்த பின் நான் சொன்ன மாதிரியே நடந்திட்டு பார்த்தியா என சொல்வது மிகவும் கேவலம் கெட்ட செயல்...இந்தியன் ஆமி செய்த அட்டூழியங்களை பார்த்த ஒவ்வொரு தமிழனும்,ராஜீவ் இறந்த செய்தி கேட்டு சந்தோசப்பட்டான்...அப்படி சந்தோசப்பட்ட ரகு இன்டைக்கு புலிகள் தோத்தவுடன் அது பிழை எனச் சொல்கிறார்.புலிகள் இந்த யுத்தத்தில வென்றிருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ???

ஒன்றை விமர்சிப்பது இனி மேல் இப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாது என்பதற்க்காகத் தான். புலிகளே அழிந்த பின் இந்ந சம்பவத்தை விமர்சிப்பதில் என்ன பயன்?...சர்வதேசத்திற்கும்,இந்தியாவுற்கும்,சொல்ஹேமுக்கும் அவ்வளவு மக்களை கொன்றோழித்ததிற்கு காரணம் வேண்டும். அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் ராஜீவ் கொலை....இதற்கு சில தமிழர்களும் தெரிந்தோ/தெரியாமலோ துணை போவது வேதனை

நன்றி ரதி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.