Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டன் விபத்தில் தமிழ்ப் பெண் மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
லண்டன்- மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தி என்ற பெண்  நடுத்தர வயதுடையவர் எனவும், அண்மையிலேயே ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு குடியேறியனார் எனவும் தெரியவந்துள்ளது.

லண்டன்- மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தி என்ற பெண் நடுத்தர வயதுடையவர் எனவும், அண்மையிலேயே ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு குடியேறியனார் எனவும் தெரியவந்துள்ளது.

   

உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றியுள்ளார். லண்டனில் இன்று காலை வீதியில் செல்வோரை தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்புகார் சூழ்ந்த காலநிலை காணப்பட்டது. குறித்த பெண் பாதசாரிகளின் நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் என விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்த போதிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திலேயே சுகந்தி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார், விபத்து நடந்த மிச்சம் - லண்டன் வீதி மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

london-acci-110316-seithy%20(1).JPG

 

 

london-acci-110316-seithy%20(2).JPG

http://www.seithy.com/breifNews.php?newsID=153229&category=TamilNews&language=tamil

நேற்றைய செய்தி ... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

456135677suganthi.jpg

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஆசிய இனத்தவர்களும் கறுப்பினத்தவர்களும் சாலை விதிகளை மதிப்பது குறைவு. லண்டன் ஏலவே சந்து பொந்து வீதிகளால் ஆனது. வாகன நெரிசல் உள்ள நகரம். அங்கு இந்தச் சாலைவிதியை மீறுவோரால்.. வாகன ஓட்டுனர்கள் படும்பாடு பாதசாரிகளுக்கு விளங்காது.

மக்கள் சாலைவிதிகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். இன்றேல் உடனடி தண்டம் அற விட வேண்டும். அதே வாகனச் சாரதிகளுக்கும் கொண்டு வரப்பட்டால் அன்றி.. இப்படியான அநியாயச் சாவுகளை நிறுத்துவது கடினம்.

ஆழ்ந்த இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

 Croydon இல் இருந்து  Tooting   செல்லும் பஸ் என நினக்கின்றேன். அடிக்கடி இந்த பாதையால் பயணித்துள்ளேன். மிச்சம் ஓர் ஒடுக்கலான வீதி. பனிக்காலத்தில் பாத‌சாரிகள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.
 


ஆழ்ந்த இரங்கலகள்! 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் நீங்கள் குறிப்பிடுவது 264 பஸ். சம்பவம் நடைபெற்றது 355 பஸ். 

பாதுகாப்பான கடவையில் றோட்டை கடக்காமல்  தான் வேலை செய்யும் கடையை திறப்பதற்காக றோட்டிற்கு குறுக்காக ஓடியிருக்கிறார். பஸ்உம் வேகமாக வந்துள்ளது பொலிசார் 50/50 என்று சொல்லியுள்ளனர்.

 

12 minutes ago, colomban said:

 Croydon இல் இருந்து  Tooting   செல்லும் பஸ் என நினக்கின்றேன். அடிக்கடி இந்த பாதையால் பயணித்துள்ளேன். மிச்சம் ஓர் ஒடுக்கலான வீதி. பனிக்காலத்தில் பாத‌சாரிகள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.
 


ஆழ்ந்த இரங்கலகள்! 

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் லண்டனிலிருந்து நான் வாழும் நாட்டுக்கு எனது உறவினர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள் பக்கத்துநாடான எஸ்தோனியாவுக்குப் போயிருந்தோம் லண்டன் குறூப் நடுவீதியில் இறங்கி நடக்கத்தொடங்கிவிட்டார்கள் போலீஸ்வாகனத்தில் வந்து ஓரமாக அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதையில் நடக்கவும் என அறிவுறுத்திவிட்டுப் போனவர்கள் என்னநினைத்தார்களோ தெரியாது  மறுபடியும் திரும்பிவந்து கடவுச்சீட்டு வீசா இவைகளைப் பரிசோதித்தார்கள். அதோட விடையம் முடியவில்லை

எனது மனைவி இலங்கைக் கடவுச்சீட்டுக்காரி பிள்ளைகளும் நானும் புலம்பெயர் நாட்டின் கடவுச்சீட்டு பிள்ளைகளது கடவுச்சீட்டுகள் காலவதியாகிவிட்டது, ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை ஆனால் மனைவியார் கடவுச்சீட்டை மாத்திரம் எடுத்து வந்திருந்தார் அத்துடன் நிரந்தர வதிவிட உரிமைக்கான அத்தாட்சி அடங்கிய அட்டையைக் கொண்டுவரவில்லை போலீஸ்காரன் அவரது கடவுச்சீட்டில் பெயர் இலங்கை முகவரி தவிர மேலதிக விபரம் எதுவுமே இல்லை அன்று ஞாயிற்ருக்கிழமைவேறு வானில ஏத்திட்டான் பிறகு என்ன நினைத்தானோ தெரியாது துறைமுகத்தில கொண்டுவந்து இறக்கிவிட்டான்,

ஆகவே மக்களே லண்டனிலோ அன்றேல் வேறெங்கேயோ லண்டன்காரருடன் பிறர் போவதாகவிருந்தால் அவதானமாக இருக்கவும்.

உலகில் உள்ள நகரங்களிலேயே லண்டன்போன்ற வசதிகள் அனைத்தும்கொண்ட நகரம் எங்கேயும் இல்லை, ஆனால் புலம்பெயர்தேசத்தவர்களால் அங்குள்ள வசதிகள் அனைத்தையும் புரிந்துகொண்டு அயலவனது உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்புக்கொடுத்து வாழும் பக்குவம் இன்னமும் எம்மிடத்தில்கூட வரவில்லை.

கவனயீனமும் இப்பெண் வேலைசெய்யும் தமிழ்க்கடை முதலாளியது அடுத்தவரை அடிமைப்படுத்தும் மனப்பாங்குமே இவரது இறப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

மிகவும் கவலையான செய்தி இறந்தவர் ஆத்மா வீடுபேறடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Elugnajiru said:

இப்பெண் வேலைசெய்யும் தமிழ்க்கடை முதலாளியது அடுத்தவரை அடிமைப்படுத்தும் மனப்பாங்குமே இவரது இறப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

என்ன அடிப்படையில் இதனை கூறுகிறீர்கள் ????

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்.

இதுதான் சான்சு எண்டு சந்தடி சாக்கில லண்டன் காரருக்கு நல்ல கல்லெறி விழுகுதுடுடோய்? 

ஏதோ மற்ற நாட்டில் எல்லாம் விபத்து நடப்பதில்லை என்பது போலவும் எல்லோரும் 100% சாலை விதிகளை மதிப்பது போலவும்.

லண்டனிலும் பேமெண்ட் இருக்குப் பாருங்கோ, இங்க எல்லோரும் பெமெண்ட் இருக்க ரோட்டில இறங்கி நடக்கிறேல்ல.  இது வெகு அரிது. ஒன்று ரெண்டு மொக்கிடாசுகள் அப்படிச் செய்யலாம்.

நான் நினைக்கிறேன் எழுநாயிறின் தெரிஞ்சாக்கள் எதேனும் ஆபிரிக்க காட்டில் இருந்து வந்த கூட்டமோ தெரியாது. அதுதான் நடுரோட்டில நடந்திருக்கீனம். 

ரோட்டு குரொஸ் பண்ணும் போது குடியேறிகள் இருக்கும் வெம்பிளி, சவுத்தோல், ஈஸ்ட்காம், குரைடன் பக்கங்களில் குறுக்க மறுக்கப் பாய்வார்கள்தான். என்ன செய்வது பரவணிக் குணம். 

தவிரவும் பெடெஸ்ரியன் குரிசிங்கில் தான் கட்டாயம் வீதியை கடக்க வேண்டும் என்பதல்ல. அதில் கடப்பது பாதுகாப்பானது. அவ்வளவே.

இல்லாவிட்டால் வீதியில் 250 மீற்றருக்கு ஒரு குரொசிங் வைக்க வேண்டி இருக்கும்.

புகார் காலநிலை, விண்டர் இருட்டு, பஸ்சும் வேகமாய் ஓடியிருக்கு, இந்த பெண்ணும் கவனக் குறைவாய் இருந்திருக்கலாம்.

இங்கே நடந்திருப்பதுக்கு என்ன பெயர் தெரியுமா, ஆக்சிடெண்ட். விபத்து. Accidents do happen. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி...கோஷான்!

எனக்கும்  லண்டன் பேவ்மேன்ருகளில நடக்கிற போது புல்லரிக்கும்!

அவ்வளவு பெரிய பேவ்மேந்து!

இப்ப காரும் நிப்பாட்டலாமாம்... மெய்யே?

23B9DE4400000578-2860526-image-m-16_1417

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்....!

பாதசாரிக் கடவைகளில் கடப்பதுதான் பாதுகாப்பானது. பனிப் புகாருக்குள் மிகுந்த அவதானம் தேவை.மக்கள் வீதிகளில் இறங்கி நடப்பதும் தப்பு, அப்படியே வாகனங்களும் நடைபாதையின் மீது ஏறிப்போய் இடிப்பதும் தப்பு....!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

விளக்கத்துக்கு நன்றி...கோஷான்!

எனக்கும்  லண்டன் பேவ்மேன்ருகளில நடக்கிற போது புல்லரிக்கும்!

அவ்வளவு பெரிய பேவ்மேந்து!

இப்ப காரும் நிப்பாட்டலாமாம்... மெய்யே?

23B9DE4400000578-2860526-image-m-16_1417

http://www.theleader.com.au/story/3022715/highway-watch-jaywalkers-put-children-and-themselves-at-risk/#slide=3

படமும் கதையும் இணைத்திருக்கிறேன் வாசித்துப் பயனடையவும்.

அவுஸ்ரேலியே போல் ஒரு கண்டத்தில் 24 மில்லியன் மக்கள் வாழும், கடந்த 50 வருடத்தில்தான் தார் ரோட்டையே கண்ட புதிய நாடு இல்லை யூகே. சிட்னியில் குற்றவாளிகள் போய் இறங்க முன்னமே, மெல்பேர்னில் அபோர்ஜினிகள் பன்றி வளத்துக்கொண்டிருந்த போதே இங்கே இருக்கும் சிறுநகரங்கள் கூட நகரமயாமாகிவிட்டன. ஆகவே குறுகலான தெருக்கள் நகர்-உள் (இன்னர்சிட்டி) பகுதியில் உண்டு.

அப்படியான இடங்களில் குறிப்பிட்ட மட்டுப்படுத்த பட்ட விதிகளுக்கு அமைய பெமெண்டில் பார்கிங் செய்ய அனுமதிக்கப் படும். இது 60 களில் இருந்தே புழக்கத்தில் இருக்கு. மீறி கண்ட கண்ட இடத்தில் பெமெண்டில் நிறுத்தினால் £120 அழவேண்டி வரும்.

கொஸ்டாவில் போய் ஒரு கோப்பி குடிக்க 4 தரம் கணக்குப் பார்க்கும் அவுசீஸ், தலையைச் சுத்தி விழ வேண்டியான் ?

Edited by goshan_che
எழுத்துப்பிழை

ஆழ்ந்த அனுதாபங்கள், இறந்த பெண்ணின் கணவரினதும் பிள்ளைகளதும் பரிதாப நிலையை கடந்து தேவையற்ற விசர் கதைப்பது பொருத்தமற்றது. 

 

.................................

 

Edited by நியானி
சம்பந்தமற்ற வரி நீக்கம்

19 hours ago, MEERA said:

என்ன அடிப்படையில் இதனை கூறுகிறீர்கள் ????

7 மணிக்கு ஓரிரு நிமிடம் தாமதமானாலும் விடியோவில் பார்த்து விட்டு சத்தமிடும் முதலாளி இன்று கடும் பணிபுகார்  என்று சொல்லிசமாளிக்க தெரியாத ஒரு அப்பாவி தமிழ் பெண் மீது கண்டபடி கல் எறியக்கூடாது .

மூன்று பிள்ளைகளை வைத்து கொண்டு வேலைக்கு செல்வது ஐரோப்பாவில் அதுவும் விடிகாலையில் 7 மணிக்கு எவ்வளவு கஷ்ட்டம் என்பது அனுபவிப்பவர்களுக்கு புரியும் .

Edited by spyder12uk

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நிறுவனத்திலும் வேலைக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். உங்களுக்கு விடிகாலை 7 மணிக்கு வேலைக்கு போவது கஷ்டம் என்றால் 8/9 மணிக்கு வேலைக்கு போங்கள். அதற்காக தமிழ் முதலாளி என்றவுடன் குற்றம் சுமத்தாதீர்.

 

2 hours ago, spyder12uk said:

7 மணிக்கு ஓரிரு நிமிடம் தாமதமானாலும் விடியோவில் பார்த்து விட்டு சத்தமிடும் முதலாளி இன்று கடும் பணிபுகார்  என்று சொல்லிசமாளிக்க தெரியாத ஒரு அப்பாவி தமிழ் பெண் மீது கண்டபடி கல் எறியக்கூடாது .

மூன்று பிள்ளைகளை வைத்து கொண்டு வேலைக்கு செல்வது ஐரோப்பாவில் அதுவும் விடிகாலையில் 7 மணிக்கு எவ்வளவு கஷ்ட்டம் என்பது அனுபவிப்பவர்களுக்கு புரியும் .

 

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பெண்...ஆத்மா சாந்தியடையட்டும்.

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

http://www.theleader.com.au/story/3022715/highway-watch-jaywalkers-put-children-and-themselves-at-risk/#slide=3

படமும் கதையும் இணைத்திருக்கிறேன் வாசித்துப் பயனடையவும்.

அவுஸ்ரேலியே போல் ஒரு கண்டத்தில் 24 மில்லியன் மக்கள் வாழும், கடந்த 50 வருடத்தில்தான் தார் ரோட்டையே கண்ட புதிய நாடு இல்லை யூகே. சிட்னியில் குற்றவாளிகள் போய் இறங்க முன்னமே, மெல்பேர்னில் அபோர்ஜினிகள் பன்றி வளத்துக்கொண்டிருந்த போதே இங்கே இருக்கும் சிறுநகரங்கள் கூட நகரமயாமாகிவிட்டன. ஆகவே குறுகலான தெருக்கள் நகர்-உள் (இன்னர்சிட்டி) பகுதியில் உண்டு.

அப்படியான இடங்களில் குறிப்பிட்ட மட்டுப்படுத்த பட்ட விதிகளுக்கு அமைய பெமெண்டில் பார்கிங் செய்ய அனுமதிக்கப் படும். இது 60 களில் இருந்தே புழக்கத்தில் இருக்கு. மீறி கண்ட கண்ட இடத்தில் பெமெண்டில் நிறுத்தினால் £120 அழவேண்டி வரும்.

கொஸ்டாவில் போய் ஒரு கோப்பி குடிக்க 4 தரம் கணக்குப் பார்க்கும் அவுசீஸ், தலையைச் சுத்தி விழ வேண்டியான் ?

உங்கள் படமும் கதையும் பார்த்தேன்.. கோஷான்!

உண்மையில் புளங்காகிதம் அடைந்தேன்! நன்றி..!

சில விசயங்கள்..கூகிள் மூலம் படிக்க முடியாது ! நேரில் போய் தான் அறிந்து கொள்ள முடியும்!

நம்ம நாட்டில 'Princess Highway', 'Hume Highway' என்று பெரிய பேரெல்லாம் வைக்கிறது வழக்கம் தான்!

ஆனால் அவை எல்லாம் நீங்கள் நினைக்கிற அளவுக்கு..எல்லா இடங்களிலும் High Way  ஆக இருப்பதில்லை! அதனால் தான் சில இடங்களில் மக்கள் வீதியை கடந்து போவதுமுண்டு!

மிகவும் பெரிய பாதைகளை Free Way  என்று அழைப்பதுண்டு. அவற்றில் 110 KM  வரையில் போகலாம்! மிகப்பெரிய கண்டம் என்ற படியால் தூரங்கள் மிகவும் அதிகம்!

லண்டனில் பத்து வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருக்கிறேன்! எனவே குச்சொழுங்கை எல்லாம் கிட்டத் தட்ட அத்துபடி எண்டு வையுங்கோவன்!

நான் கோப்பி, தேநீர் போன்றவை அருந்துவதில்லை! எனவே கோப்பிப் பிரச்சனை இன்னும் வரவில்லை!

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் துபாயில் ..ஒட்டகத்தில் பயணம் செய்தார்கள் என்று அவர்களைப் பார்த்து வெள்ளைக்காரன் எழுதுவது போல உங்கள் கதை போகின்றது!

கொஞ்சம் வேகம் இருந்தால்...எங்கையும் குறுக்கால் போகலாம்!

skynews.img.600.372.jpeg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.