Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சொரிலன்காவில் பாலும் தேனும் ஓடுது எனும் கனவில் இருப்பவர்களுக்கு.

அவர்களுக்கு இங்கிலிஷ் புரியாது. தெரிஞ்ச எல்லாம்.. சிங்கள ஆமிக்காரனின் பாசை மட்டும் தான். tw_blush:

வெள்ளை ஆங்கிலத்தில் பேசினால் சரிதான் ,

2 hours ago, ராசவன்னியன் said:

"அடி உதவுவதுபோல அண்ணன், தம்பி கூட உதவமாட்டார்கள்.." என்ற சொல்வழக்கு இங்கே உண்டு..

அதுபோல சிங்களன் ரவுண்டு கட்டி போட்ட போடுல "ஐயோ.. எங்களுக்கு எதுவும் வேண்டாம், நீ கொடுக்குறதை கொடு, இல்லை கொடுக்காட்டாலும் பரவாயில்லை.. நாங்கள் பொத்திக்கிட்டு வாழுறோம்"

இதுவே இலங்கையில் இன்றைய யதார்த்தம்..! தமிழர்களின் துயரமான கையறு நிலை!!

தமிழ் நாட்டு தமிழர்கள் போல நினைத்து விட்டீர்கள் போல எப்படி அடிச்சாலும் உணர்சி அவர்களுக்கு வராது ,

சிங்களவனுக்கு எம்மை பற்றி நன்கு தெரியும் எப்பவும் பொத்திக்கொண்டு இருக்கமாட்டார்கள் என்று .

கொடுக்கிறதை வாங்கிகொண்டு இருப்பம் என்றால் செல்வா தொட்டு இன்று சம்பந்தர்வரை பிரச்சனை நீளாது .

இன்றைய இலங்கை யதார்த்தம் உங்களுக்கு தெரிந்தது போல கற்பனையில் எல்லாம் எழுதக்கூடாது .

புலிகள் அந்த கையறு நிலையில் தம்முடன் இருந்தவர்களுக்கு கொண்டுவந்தாலும் புலிகளைவிட வேறு அமைப்புகளும் தமிழர்களும் நாட்டில் இருகின்றார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு தலைப்பில கனடாவில வெள்ளைக்காரன் பண்ணுறது நியாயமுன்னா ஏன் சொறீலங்காச் சிங்களவன்.. இனப்படுகொலை செய்வது தப்பு என்று... கேட்டிச்சினம்..

இங்க என்னாடான்னா... இங்கிலிஷ்காரன் சொல்லிட்டா எல்லாம் உண்மையோ என்றினம்..

புலிகள் கையறுந்து போனார்கள் மற்றவர்கள் சொறீலங்கா தேசிய நீரோட்டத்தில் கலந்து மொத்த தமிழினத்தையும் காட்டிக்கொடுக்கும் கருவறுக்கும்..ஆயுத சோர அரசியலை முன்னெடுக்கிறார்கள்.. இதைச் சொல்ல சிலருக்கு மனசே இல்லை. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

வெள்ளை ஆங்கிலத்தில் பேசினால் சரிதான் ,

இதே வெள்ளையுடன் லொபி பண்ணுவது என்று காசை கரியாக்கி டெல்லியில் சுத்துமாத்து பண்ண அடிமட்டதோழர்கள் வெறும் சோறு சாப்பிட வைத்த புண்ணியவான் கதைக்கிறார்.

ஒபாமா ,கமரூன் ,பான் கி மூன் இப்படியானவர்களுடன் கதைத்தால் ஓகே அல்லது டெல்கியில் இருக்கும் இந்திய இலங்கை சம்பந்தமாக அரசியல் செய்பவர்களுடன் கதைத்தாலும் எதுவும் ஆகும் .அதைதான் செய்தோம் 

அதைவிட்டு வெள்ளை என்றதிற்காக கண்டவர்கள் நிண்டவர்களுடன் கதைத்து ஆகப்போவது எதுவுமில்லை .

நாடு கடந்த அரசும் நாலு வெள்ளைகளுடன் அலைகின்றார்கள் .

முப்பது வருடத்திற்கு முதல் நாங்கள் செய்ததை இப்ப என்றாலும் தொடங்கியதற்கு வேணுமென்றால் நன்றி சொல்லலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

..புலிகள் அந்த கையறு நிலையில் தம்முடன் இருந்தவர்களுக்கு கொண்டுவந்தாலும் புலிகளைவிட வேறு அமைப்புகளும் தமிழர்களும் நாட்டில் இருகின்றார்கள் 

இருந்து என்ன பயன்? இந்த 7 வருட காலத்தில் ஏதாவது அசைக்க முடிந்ததா..? .50களில் இருந்த நிலையை விட மோசமான நிலையே இப்போது.. !

நான் உங்களின் நிலையை சொன்னால் தமிழ்நாட்டை ஒப்பீடு செய்வது திறம் என நினைக்கிறீர்கள்..தமிழ்நாடு தளம் மட்டும் உங்கள் அனைத்து இயக்கங்களுக்கும் இல்லையென்றால் அப்பொழுதே சிங்களன் நசுக்கியிருப்பான்..

காலமெல்லாம் ஒண்டியிருந்து அடைக்கலம் கொடுத்த தமிழ்நாட்டையே ஏளனம் பேசும் உங்கள் குணம் நன்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, ராசவன்னியன் said:

ராசவன்னியன்! உறைக்க உரக்க சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் சோரம் போனவர்களுக்கு இதெல்லாம் புறக்குடத்தில் ஊற்றிய தண்ணீர் போன்றது.

அடைகலம் கொடுத்து பின்னர் செய்த அநியாங்கள் இப்ப புத்தகமாக வருகின்றது ,

அகதிமுகாம்களில் .சிறப்பு முகாம் என்ற போர்வையில் ராஜீவ் கொலை கைதிகள் நிலை இந்த கேடு கெட்ட தமிழ் நாட்டிற்கு வந்ததே பிழை.

ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவது என்று எப்போதோ பெரியார் சொல்லிவிட்டார்  கடைசி நாங்கள் அதை உடைக்க போராடினோம் போராடுகின்றோம் ஆனால் உங்காளால் அது முடியாது எங்களுக்கும் அது பழக்க பட்டுவிடும் என்ற சிந்தனையே பிழையானது .அது உங்களுக்கானது மட்டுமே எங்களுக்கு அல்ல .

.

இதற்குள் வைகோ ,சீமான் செய்யும் கூத்துக்கள் .பாரதி தமிழ் நாட்டு புலவனா என்று சந்தேகம் வருகின்றது .

இன்று நாடு இருக்கும் நிலை அங்கு நடக்கும் பாடசாலை கிரிக்கெட் மாட்சகள் ,அதைவிட பல நிகழ்வுகளை பார்த்தாலே விளங்கும் .

சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து விட்ட உங்களில் பிழை பிடித்து ஆகப்போவது எதுவுமில்லை .

****************************

எல்லாம் அனுபவம் தந்த பாடம் தான் . 

Edited by நியானி
அநாகரிகமான சொல்லாடல் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

அடைகலம் கொடுத்து பின்னர் செய்த அநியாங்கள் இப்ப புத்தகமாக வருகின்றது ,

அகதிமுகாம்களில் .சிறப்பு முகாம் என்ற போர்வையில் ராஜீவ் கொலை கைதிகள் நிலை இந்த கேடு கெட்ட தமிழ் நாட்டிற்கு வந்ததே பிழை.

ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவது என்று எப்போதோ பெரியார் சொல்லிவிட்டார்  கடைசி நாங்கள் அதை உடைக்க போராடினோம் போராடுகின்றோம் ஆனால் உங்காளால் அது முடியாது எங்களுக்கும் அது பழக்க பட்டுவிடும் என்ற சிந்தனையே பிழையானது .அது உங்களுக்கானது மட்டுமே எங்களுக்கு அல்ல .

.இதற்குள் வைகோ ,சீமான் செய்யும் கூத்துக்கள் .பாரதி தமிழ் நாட்டு புலவனா என்று சந்தேகம் வருகின்றது .

இன்று நாடு இருக்கும் நிலை அங்கு நடக்கும் பாடசாலை கிரிக்கெட் மாட்சகள் ,அதைவிட பல நிகழ்வுகளை பார்த்தாலே விளங்கும் .

சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து விட்ட உங்களில் பிழை பிடித்து ஆகப்போவது எதுவுமில்லை .

****************************

எல்லாம் அனுபவம் தந்த பாடம் தான் . 

அதை ஞானம் நீங்கள் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்குமுன் யோசித்திருக்கோணும்..இங்கே குழப்பம் விளைவிக்குமுன் ஆராய்ந்திருக்கணும்..

சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் எந்த நாட்டவனும் தட்டிக்கேட்பான்.. அதையே தமிழகமும் செய்தது.. நீங்கள் உள்நாட்டில் சக தமிழனுக்கு சந்ததி சந்ததியாக மீள முடியாதளவிற்கு செய்ததைவிடவா தமிழ்நாடு உங்களுக்கு தீங்கு இழைத்துவிட்டது?

உங்களுக்கு இனி ஏதாவது சலுகைகள் கிடைத்தால், அது புலிகளின் உதயத்தால்,அவர்கள் விட்டுச் சென்ற பயத்தால் வருமே தவிர, உங்களின் சோரம்போகும் அரசியலால் நிச்சயம் எப்போதும் அல்ல..

திரியின் தலைப்பைவிட்டு விலகுவதால் நிறுத்திக்கொள்கிறேன்.

நன்றி!

Edited by நியானி
மேற்கோள் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பேசுகின்ற வெள்ளை யார் என்று தெரியாமையால் தான் எல்லாம். 

கிரிக்கெட் மட்சும் களியாட்டங்களும் ஒரு நாட்டின் நிலமையை வெளிக்காட்டுகிறது என்று இருக்கிறதே சுத்தம். 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் உள்நாட்டில் சக தமிழனுக்கு சந்ததி சந்ததியாக மீள முடியாதளவிற்கு செய்ததைவிடவா தமிழ்நாடு உங்களுக்கு தீங்கு இழைத்துவிட்டது?

அருமையான கேள்வி ராஜவன்னியன். அருமை அருமை

சிங்களவனோடு வாழலாம் ஆனால்‍‍‍‍     ------------------------      தெமலுவோடு ஒரு போதும் வாழ முடியாது.

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுடன் வாழலாம் தெமலுவோடு வாழ முடியாதுதான்.

14 minutes ago, colomban said:

அருமையான கேள்வி ராஜவன்னியன். அருமை அருமை

சிங்களவனோடு வாழலாம் ஆனால்‍‍‍‍     ------------------------      தெமலுவோடு ஒரு போதும் வாழ முடியாது.

* எங்களுக்கும் ----------- போட்டு எழுத முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

அதை ஞானம் நீங்கள் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்குமுன் யோசித்திருக்கோணும்..இங்கே குழப்பம் விளைவிக்குமுன் ஆராய்ந்திருக்கணும்..

சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் எந்த நாட்டவனும் தட்டிக்கேட்பான்.. அதையே தமிழகமும் செய்தது.. நீங்கள் உள்நாட்டில் சக தமிழனுக்கு சந்ததி சந்ததியாக மீள முடியாதளவிற்கு செய்ததைவிடவா தமிழ்நாடு உங்களுக்கு தீங்கு இழைத்துவிட்டது?

உங்களுக்கு இனி ஏதாவது சலுகைகள் கிடைத்தால், அது புலிகளின் உதயத்தால்,அவர்கள் விட்டுச் சென்ற பயத்தால் வருமே தவிர, உங்களின் சோரம்போகும் அரசியலால் நிச்சயம் எப்போதும் அல்ல..

திரியின் தலைப்பைவிட்டு விலகுவதால் நிறுத்திக்கொள்கிறேன்.

நன்றி!

பச்சை குத்த பச்சை இல்லை ...
இப்படியான பதில் கருத்துகளுக்கு பச்சை குத்தி வரவேற்கும் எண்ணமும் இப்போது இல்லை.

****************************

Edited by நியானி
அநாகரிகமான கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

சொரிலன்காவில் பாலும் தேனும் ஓடுது எனும் கனவில் இருப்பவர்களுக்கு.

பிறகென்ன ...வெள்ளை கதைத்து விட்டார் ...இனி எங்கட பக்கத்திலே ஒரு இராணுவம் கூட இருக்காது ...எல்லோரும் காட்சட்டை பிய்யுமளவுக்கு 
அனுராதபுரத்தை தாண்டிக்கொண்டு ஓடப்போகினம் ...மைத்திரியும் எல்லா பேரினவாத சக்திகளும் பயந்து போய் தமிழர்களுக்கு  நிபந்தனையற்ற உடனடி தீர்வினை தயாரிக்கினம்.....அவிங்கள் கதைச்சிப்போட்டு அதை வைத்து ஒரு  Ph.D யும் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள் 
நீங்க ....?....போங்கப்பா போய் புள்ளை குட்டிகளை படிக்க வையுங்க 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஹி ...ஹி ...இப்போதும் நாங்கள் கூறுவது நிலைமை முன்பை விட பரவாயில்லை என்பதையே ...தப்பே நடக்கவில்லை என்று யாரும் கும்மியடிக்கவில்லை.....ஐயாவும் அறிக்கையை விட்டுவிட்டு படுத்து தூங்கவேண்டியது தான் .....ஒரு மண்ணும் நடக்காது ...இங்கே பிறந்தவர்கள் இங்கே தான் வாழவேண்டியவர்கள் ....வாழ்ந்து தான் ஆகவேண்டும் ...இரண்டு பேய்களில் நல்ல பேய் எது  என்று பார்த்து குடும்பம் நடத்தவேண்டியது தான் எங்களிடம் இருக்கும் ஒரே தெரிவு ....அதை விட்டு இது ஒரு உருப்படாத நாடு என்று கூவிக்கொண்டு கடலில் விழலாம்,கழுத்தை வெட்டி சாகலாம்  ...சிங்களவன் , முஸ்லிம்கள்  தவிர இதனால் வேறு ஒருவருக்கும் ஒரு பிரயோசனமும் இல்லை....சும்மா சப்பை கட்டு கட்டாமல் உங்களால் முடிந்தால் இங்கிருக்கும் எல்லா தமிழர்களையும் வெளி நாட்டிற்க்கு எடுத்துவிடுங்கள் ...புண்ணியமாக போகும்      

இது தான் நான் சொல்லும் தீர்வு. இங்கும் பல இடங்களில் எழுதி உள்ளேன்.போறவர்களையும் போக விடாமல் அங்கு உள்ளவர்களையும் அங்கு தொடர்ந்து வாழ ஊக்குவிக்கமால் செய்து போட்டு பின்பு யாருக்கு தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை யாரும் வெளிநாட்டுக்கு எடுத்து விடத் தேவையில்லை.. சிங்களவன் (சிங்கள இராணுவமும் அதன் கூலிகளும்) தமிழர்களின் நிலத்தில் இருந்து வெளியேறி தமிழன் தமிழன் நிலத்தை அவன் விருப்பப்படி ஆளவிட்டலே போதும். மிச்சம் தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள். வெளில எடுக்கிறதா.. அங்கேயே இருக்கிறதா என்பதை.

தமிழர்கள் சிங்களவனுக்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை என்பதை உலகம் அறியனும்.. அதுவும் இத்தனை பெரிய இனப்படுகொலைகளை சிங்களவனின் கையால் சந்தித்த தமிழன்.. அதனை உலகிற்கு உணர்த்தத் தவறின்.. தமிழன் இலங்கைத் தீவில் தலைநிமிர வழியே இல்லை. ஏன் இந்தப் புரிதல் இன்றி சிலர் சோரம் போதலையே முதன்மைத் தீர்வா வைச்சிருக்கினம். அவைக்கு முடிஞ்சது அது போல. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விக்கி ஐயா மீது குற்றம் சாட்டுபவர்களிடம் ஒரு  கேள்வி

ஒரு மாநிலத்தின் முதல்வராக

அந்த மாநிலத்தின் அதிகாரம் எவ்வாறு உள்ளது என்பதை அவரைத்தவிர வேறு எவர் தமது மக்களுக்கு சொல்லமுடியும்???

தமது மக்கள் வேறு மாநிலத்தவரால் தாக்கப்பட்டபோது

பாதிக்கப்பட்டவரை புறந்தள்ளி

நீதியை புறந்தள்ளி தாக்கியவர்களை தமது ?? இராணுவம் பாதுகாத்தது என்பதை 

அவரைத்தவிர வேறு எவர் தமது மக்களுக்கு சொல்லமுடியும்???

அப்படி அவர் சொன்னால் சோறு போடும் வேலை கிடக்கு

அதை மட்டும் பார்க்கவும் என்று சொல்வது எவ்வாறு நீதியாகும்???

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

அருமையான கேள்வி ராஜவன்னியன். அருமை அருமை

சிங்களவனோடு வாழலாம் ஆனால்‍‍‍‍     ------------------------      தெமலுவோடு ஒரு போதும் வாழ முடியாது.

வணக்கம் கொழும்பான்,
உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இன்னும் ஒரு சக தமிழ் அன்பரும் உங்களை பார்த்து, உங்கள் உறவுகளை பார்த்து இப்படிதான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்...

"பர தெமழுவோடு வாழ முடியாது என்று" 
பின் குறிப்பு. - இதில் எதற்காக இந்த இந்த டாஷ்    டாஷ்   போட்டு எழுதுகிறீர்கள். 
நீங்கள் சொல்லவந்ததை நேரடியாக சொல்லுங்கள்.

சக தமிழர் குறித்து உங்களுக்கு மிகுந்த விசனம் இருக்கலாம் ஆனால் பொது வெளியில் இப்படி கொட்டாதீர்கள்.
இன்னும் ஒரு திரியில் கூட கொட்டஹெனா பகுதி இப்போது யாழ்பாணத்து தமிழர் வந்தவுடன் சீரழிந்து போய்விட்டது என்று எழுதி இருந்தீர்கள். இப்படி இன்னும் சில திரிகள்..

முதலில் நீங்கள் நெஞ்சை நிமிர்த்தி, தமிழராக பிறந்ததை எண்ணி பெருமை கொள்ளுங்கள். 
உங்களை சுற்றி இருந்தவர்கள், பெரியவர்கள் உங்களை இப்படி ஆக்கி விட்டார்கள் என்பது பெரும் துரதிஸ்டமே. 

நான் பிறந்தது கண்டியில், ஆரம்ப கல்வி கற்றது சிங்களத்தில், பிறகு பயின்றது இஸ்லாமிய கல்வி சூழலில் 
எனக்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன யாழ்பாணத்தில் நான் சந்தித்த தனி மனிதர் சார்ந்த கோபங்கள். அனால் ஒருபோது அவர்கள் தவறுக்கு என் இனத்தை பலி சுமத்த முடியாது.

தயவு செய்து, இதை உங்களை தாக்கி எழுதுகிறேன் என நினைக்க வேணாம். தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.  

எனக்கும் நிறையவே ஆதங்கங்கள் இருக்கின்றன கொழும்பான்...

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

பிறகென்ன ...வெள்ளை கதைத்து விட்டார் ...இனி எங்கட பக்கத்திலே ஒரு இராணுவம் கூட இருக்காது ...எல்லோரும் காட்சட்டை பிய்யுமளவுக்கு 
அனுராதபுரத்தை தாண்டிக்கொண்டு ஓடப்போகினம் ...மைத்திரியும் எல்லா பேரினவாத சக்திகளும் பயந்து போய் தமிழர்களுக்கு  நிபந்தனையற்ற உடனடி தீர்வினை தயாரிக்கினம்.....அவிங்கள் கதைச்சிப்போட்டு அதை வைத்து ஒரு  Ph.D யும் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள் 
நீங்க ....?....போங்கப்பா போய் புள்ளை குட்டிகளை படிக்க வையுங்க 

அவர் என்ன சொல்கிறார் என்று விளங்கி இருந்தால் மேற்சொன்ன கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கின இருந்து வீரவசனம் பேசி உசுப்பேத்தல் செய்த ஆக்கள் மன்டயபோடும் வர இலங்கையில் எந்த ஆட்சி வந்தாலும் இப்பிடித்தான் மாரித்தவக்கை மாதிரி இங்கின இருந்து கத்தவேன்டியதுதான். யதார்த்தம் விளங்காத விசுக்கோத்துக்கள். இதுகளுக்கு இது ஒரு என்ரெரெய்ன்மென்ற். அங்க இருக்கிறவனுக்கு பிள்ளை குட்டி எதிர்காலம் என்டு அது அவனுக்கு வாழ்க்கை.அவன் யதார்த்ததோடு வாழப்பழகிட்டான். இதுகளின்ர பிள்ளைகுட்டியல் அங்க போகவா போயினம்? வாழவா பொயினம்? ஒரு மாச லீவில போய் ஆத்தாடி வெக்கையா இருக்கென்டு நெளிக்கிற கூட்டமெல்லோ.

On 4/12/2016 at 9:28 PM, arjun said:

பாவம் விக்கியர் புலம்பெயர்ந்தவர்கள் விரித்த வலையில் விழுந்து நாட்டு அரசியலை தொலைத்துவிட்டார் ,

இனி மெல்ல குமாரின் சயிக்கில் கரியரில் ஏறிக்குந்தவேண்டியத்துதான் 

அதுக்காக சம்பந்தன் மாதிரி பிச்சை எடுக்க சொல்லுவதா ....

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2016 at 6:45 PM, Sasi_varnam said:

வணக்கம் கொழும்பான்,
உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இன்னும் ஒரு சக தமிழ் அன்பரும் உங்களை பார்த்து, உங்கள் உறவுகளை பார்த்து இப்படிதான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்...

"பர தெமழுவோடு வாழ முடியாது என்று" 
பின் குறிப்பு. - இதில் எதற்காக இந்த இந்த டாஷ்    டாஷ்   போட்டு எழுதுகிறீர்கள். 
நீங்கள் சொல்லவந்ததை நேரடியாக சொல்லுங்கள்.

சக தமிழர் குறித்து உங்களுக்கு மிகுந்த விசனம் இருக்கலாம் ஆனால் பொது வெளியில் இப்படி கொட்டாதீர்கள்.
இன்னும் ஒரு திரியில் கூட கொட்டஹெனா பகுதி இப்போது யாழ்பாணத்து தமிழர் வந்தவுடன் சீரழிந்து போய்விட்டது என்று எழுதி இருந்தீர்கள். இப்படி இன்னும் சில திரிகள்..

முதலில் நீங்கள் நெஞ்சை நிமிர்த்தி, தமிழராக பிறந்ததை எண்ணி பெருமை கொள்ளுங்கள். 
உங்களை சுற்றி இருந்தவர்கள், பெரியவர்கள் உங்களை இப்படி ஆக்கி விட்டார்கள் என்பது பெரும் துரதிஸ்டமே. 

நான் பிறந்தது கண்டியில், ஆரம்ப கல்வி கற்றது சிங்களத்தில், பிறகு பயின்றது இஸ்லாமிய கல்வி சூழலில் 
எனக்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன யாழ்பாணத்தில் நான் சந்தித்த தனி மனிதர் சார்ந்த கோபங்கள். அனால் ஒருபோது அவர்கள் தவறுக்கு என் இனத்தை பலி சுமத்த முடியாது.

தயவு செய்து, இதை உங்களை தாக்கி எழுதுகிறேன் என நினைக்க வேணாம். தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.  

எனக்கும் நிறையவே ஆதங்கங்கள் இருக்கின்றன கொழும்பான்...

மன்னிக்கவும் சசி எனது எழுத்து யாரையும் புண்படுத்தியிருந்தால்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

மன்னிக்கவும் சசி எனது எழுத்து யாரையும் புண்படுத்தியிருந்தால்

நீங்களும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் கொழும்பான்.
உங்கள் இந்த புறிவு பிடித்திருக்கிறது. நிறைய கருத்தாளர்களால் இப்படி சட்டென்று மன்னித்து விடுங்கள் என்று எழுத முடிவதில்லை. நாங்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று. ஒரு தாய் பிள்ளைகள்.
மீண்டும் உரையாடுவோம். tw_thumbsup:

On 13/04/2016 at 9:15 PM, Sasi_varnam said:

எனக்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன யாழ்பாணத்தில் நான் சந்தித்த தனி மனிதர் சார்ந்த கோபங்கள். அனால் ஒருபோது அவர்கள் தவறுக்கு என் இனத்தை பலி சுமத்த முடியாது.

தயவு செய்து, இதை உங்களை தாக்கி எழுதுகிறேன் என நினைக்க வேணாம். தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.  

எனக்கும் நிறையவே ஆதங்கங்கள் இருக்கின்றன கொழும்பான்...

1 hour ago, colomban said:

மன்னிக்கவும் சசி எனது எழுத்து யாரையும் புண்படுத்தியிருந்தால்

25 minutes ago, Sasi_varnam said:

நீங்களும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் கொழும்பான்.
உங்கள் இந்த புறிவு பிடித்திருக்கிறது. நிறைய கருத்தாளர்களால் இப்படி சட்டென்று மன்னித்து விடுங்கள் என்று எழுத முடிவதில்லை. நாங்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று. ஒரு தாய் பிள்ளைகள்.
மீண்டும் உரையாடுவோம். tw_thumbsup:

அழகான ஆரோக்கியமான உரையாடல்

kiss and thank you smiley

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.