Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள்

Featured Replies

வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது  : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள்

கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் களனி, வெல்லம்பிட்டிய, கொலனாவ, சேதுவத்த உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.

வீடுகள், வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வீடுகளை மூழ்கியிருந்த வெள்ளம் வற்றியுள்ளது.

தனது சிறிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிய வீடுகள் சேர்த்த சொத்துக்கள் ஆவணங்கள் வாகனங்கள் என அனைத்தும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றன.

இவற்றில் ஒன்றை கூட மீள பாவிக்க முடியாத நிலைக்கு இந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.IMG_0509.jpgIMG_0514.jpgIMG_0521.jpgIMG_0519.jpgIMG_0527.jpgIMG_0532.jpgIMG_0539.jpgIMG_0548.jpgIMG_0553.jpgIMG_0564.jpgIMG_0567.jpgIMG_0571.jpgIMG_0573.jpgIMG_0581.jpgIMG_0597.jpgIMG_0598.jpgIMG_0604.jpgIMG_0607.jpgIMG_0621.jpgIMG_0625.jpgIMG_0639.jpgIMG_0649.jpgIMG_0651.jpgIMG_0673.jpgIMG_0676.jpgIMG_0677.jpgIMG_0681.jpgIMG_0688.jpgIMG_0700.jpgIMG_0702.jpgIMG_0710.jpgIMG_0724.jpgIMG_0727.jpgIMG_0732.jpgIMG_0745.jpgIMG_0749.jpgIMG_0752.jpg

http://www.virakesari.lk/article/6774

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் களனி, வெல்லம்பிட்டிய, கொலனாவ, சேதுவத்த உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.

வீடுகள், வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வீடுகளை மூழ்கியிருந்த வெள்ளம் வற்றியுள்ளது.

தனது சிறிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிய வீடுகள் சேர்த்த சொத்துக்கள் ஆவணங்கள் வாகனங்கள் என அனைத்தும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றன.

இவற்றில் ஒன்றை கூட மீள பாவிக்க முடியாத நிலைக்கு இந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/6774

இதை விட  அகோரங்களும் அவலங்களும் அசிங்கங்களும் மனதை உருக்கும் சம்பவங்களும் வன்னியில் நடந்தனவே........அப்போது எங்கடா போனீங்க????

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் உயிர்கூட எடுக்கப்பட்டு அனாதைகள் ஆக்கப்பட்டனர்...அதனுடன் ஒப்பிடும்போது....

Edited by alvayan
சொற்பிழை

7 hours ago, குமாரசாமி said:

http://www.virakesari.lk/article/6774

இதை விட  அகோரங்களும் அவலங்களும் அசிங்கங்களும் மனதை உருக்கும் சம்பவங்களும் வன்னியில் நடந்தனவே........அப்போது எங்கடா போனீங்க????

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்  

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அவ்வளவாக மனம் நெகிழ்ந்து விடவில்லை!

ஏதோ நேபாளத்தில் மண்சரிவு பார்த்தது போல இருக்கு!

அந்த அளவுக்கு எனது மனம் ரணமாகிப் போய் விட்டது!

இவர்களுக்கு உதவ..இந்தியாவும்..சர்வதேசங்களும் எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளன!

அவை உதவட்டும்!

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

அவர்கள் ஒரு நாளும்...நாணப் போவதில்லை, பெரியார்!

சுனாமிப் பேரழிவிலும், முள்ளி வாய்க்கால் பேரழிவிலும் நாணதவர்கள்...இனி நாணினால் என்ன அல்லது நாணா விட்டால் என்ன? எல்லாமே எம்மைப் பொறுத்தவரை ஒன்று தான்!

2 hours ago, புங்கையூரன் said:

அவர்கள் ஒரு நாளும்...நாணப் போவதில்லை, பெரியார்!

எமது பக்கத்தில் இருந்து, எந்த விதமான நன்னயமும் இல்லாதபோது,  அவர்கள் நாணுவதற்கு வழியேது! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெரியார் said:

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்  

எவ்வளவு அடிச்சாலும்  தாங்குகிறானே... ரொம்ப நல்லவன்டா தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெரியார் said:

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்  

உங்களைப்போன்ற பெரியவர்களின் நன்னயங்களுக்கு என்ன நடந்தது...? அவர்கள் ஏன் நாணவில்லை...??

1 minute ago, Paanch said:

உங்களைப்போன்ற பெரியவர்களின் நன்னயங்களுக்கு என்ன நடந்தது...? அவர்கள் ஏன் நாணவில்லை...??

நாணுகிறார்கள்.  நாணிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நாணுவது, நமது செயலில், மனிதாபிமானத்தில் தங்கி இருக்கிறது.

இறுகிய மனங்கள், ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.

24 minutes ago, பெரியார் said:

நாணுகிறார்கள்.  நாணிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நாணுவது, நமது செயலில், மனிதாபிமானத்தில் தங்கி இருக்கிறது.

இறுகிய மனங்கள், ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.

பம்முகின்றார்கள் பம்மிக்கொண்டிருக்கின்றார்கள்,

பம்முவது தமிழனின் அனுதாபத்தை தேட

தமிழனின் இழகிய மறக்கும் மனதை நன்றாக அறிந்து பாவிக்க தொரிந்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெரியார் said:

எமது பக்கத்தில் இருந்து, எந்த விதமான நன்னயமும் இல்லாதபோது,  அவர்கள் நாணுவதற்கு வழியேது! 

உண்மை தான்!

ஏதாவது தேவைப்படும்போதெல்லாம் அவர்கள் நாணுவார்கள்!

அல்லது அவர்களுக்காக நம்மவர்கள் நாணுவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெரியார் said:

நாணுகிறார்கள்.  நாணிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நாணுவது, நமது செயலில், மனிதாபிமானத்தில் தங்கி இருக்கிறது.

இறுகிய மனங்கள், ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.

உங்களது இன்றைய கருத்து.....
இந்த மாதத்தின், சிறந்த நகைச்சுவையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. 
வாழ்த்துக்கள்... பெரியார்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெரியார் said:

நாணுகிறார்கள்.  நாணிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நாணுவது, நமது செயலில், மனிதாபிமானத்தில் தங்கி இருக்கிறது.

போர்க்குற்ற விசாரணை முழுவதும் கிடப்பில் போடப்படும்வரை  நாணுவார்கள் 
பிறகு இருக்கு ஒரு கறுப்பு யூலையும் ,தர்கா நகரும் ...புதிதாக சகோதர்கள் என்னும்  ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் 
..வயிற்றில் புளி கரைக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாதிப்புக்களுக்கு பலவகை இழப்பீடுகளும்.. காப்புறுதிகளும் உண்டு.

எம் மக்களுக்கோ.. இடிச்சவன்.. செல் அடிச்சவன்.. டாங்கியை போட்டு உழுதவன்.. கிபீர் மிக் சுப்பர் சொனிக் என்று அடிச்சவன்.. மல்ரி பரலால் அழிச்சவன்.. பொஸ்பரஸ் குண்டால் எரிச்சவன்.. தந்த இழப்பீடு என்ன.. ஆக்கிரமிப்பும் அவலமும் மட்டும் தான்.

இதில்.. எல்லாம் நெகிழாத சிங்களவன்.. எனித்தான் நெகிழப் போறான்.. என்று சிலர் கனவு காணச் சொல்கிறார்கள். கனவே உலகம். வாழ்வு எப்போதும்.. கனவில் வாழ முடியாதது.tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இராணுவத்தை சுடாது போயிருந்தால் 
இராணுவம் மீது செல் அடிக்காது போயிருந்தால் 

தமிழருக்கு அது நடந்திருக்குமா ?

அவர் எவளவு பெரியவர் படிச்சவர் சொல்லுறார் 
இவர்கள் விரண்டாவாதம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

பொறுமை என்பதற்கும் ஒரு எல்லை உண்டு! 

  • கருத்துக்கள உறவுகள்

பூமி உருவாகாமல் விட்டிருந்தால்..

வளிமண்டலம் உருவாகாமல் விட்டிருந்தால்..

தண்ணி ஆவியாகாமல் விட்டிருந்தால்..

தாழமுக்கம் உருவாகாமல் விட்டிருந்தால்..

மழை பெய்யாமல் விட்டிருந்தால்...

ஏன் சிங்கமும் மனுசனும் கலவி கொள்ளாமல் விட்டிருந்தால்..

இப்படிப் பெய்த மழைக்கு சிங்களவன் என்ற இனம்.. பாதிக்கப்பட்டிருக்க மாட்டாதில்ல.

இது அந்தப் பெரியவரையும் கடந்த மெய்யியல் சிந்தனை. இது.. எப்படி இருக்கு. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nedukkalapoovan said:

.

ஏன் சிங்கமும் மனுசனும் கலவி கொள்ளாமல் விட்டிருந்தால்..

இது.. எப்படி இருக்கு. tw_blush:

நல்லாயிருக்கு ....ஆனால்   அது நடக்க காரணம் புலி தானே.....:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nedukkalapoovan said:

ஏன் சிங்கமும் மனுசனும் கலவி கொள்ளாமல் விட்டிருந்தால்..

Cb6b7-hWwAIy-8M_zpsg7amisrh.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம் பார்த்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு. மனிதாபிமானம் என்பது பாதிக்கப்பட்ட ஒருவனிடம் இருந்தே வரும். மனிதாபிமானம் என்று கூறுபவன் இல்லாதவனிடம்  இருந்து உள்ளதையும் பறித்தெடுக்க  பாவிக்கும் சொல். மனிதாபிமானம் பார்த்தவன் வாழத்தெரியாமல் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு பிச்சைப் பாத்திரம் ஏந்தியதுதான் இன்றைய வரலாறு. வாங்கியவன் வாங்குமட்டும் அவனை பாவித்துவிட்டு பேனாக்குச்சி போல்  தூக்கி எறிந்துவிட்டு அவன்மேல் மிதித்துக்கொண்டு  போய்க்கொண்டிருக்கிறான்.  அவன் மற்றவருக்கு   காட்டிய மனிதாபிமானம் அவன் விழுந்தபோது, அவனுக்கு மற்றவர்களால்  காட்டப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

பலரின் பின்னோட்டங்களை பார்க்க சிரிப்பு வந்துவிட்டது .

மனிதம் என்பது இனம் மதம் சாதி எல்லாம் கடந்து வருவது 

தமிழர்களுக்கு  ஒரு பிரச்சனை என்று வரும்போதே நாட்டை விட்டு ஓடியவர்கள் இவர்கள் இவர்களிடம் மனிதாபிமானத்தை யார் எதிர்பார்த்தார் .

முள்ளிவாய்கால் காலத்திலேயே வெட்காவுடன் ஊர்வலத்திற்கு போய் வீடு திரும்பி முழுக்கோழி முழுங்கிய  ஆட்கள் எங்கட ஆட்கள் .யுத்தம் முடிய சேர்த்த பணத்திற்கு இப்பவும் நடுத்தெருவில் நின்று அடிபடுகின்றார்கள் .கேவலம் கெட்டதுகள் .

இவர்கள் எமது இனத்தில் ஒரு சிறிய பகுதி என்பது மட்டும் ஒரு ஆறுதல் .இவர்களை தாண்டிதான் எங்களின் பயணம் இன்றும் தொடருது 

நீங்கள் மட்டும் நாட்டில்தானே இருந்தனியள்.  மனிதம் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். காலக்கொடுமை. உங்கள மாதிரியான ஆக்களை எமது இனத்தில் மிகமிக குறைவாக படைத்த ஆண்டவனுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்கள் மட்டும் நாட்டில்தானே இருந்தனியள்.  மனிதம் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். காலக்கொடுமை. உங்கள மாதிரியான ஆக்களை எமது இனத்தில் மிகமிக குறைவாக படைத்த ஆண்டவனுக்கு நன்றிகள்.

இப்படியான ஆட்களை... வைத்துக் கொண்டு, 30 வருடமாக போராடிய.... 
தமிழ் ஈழத்தின் நிரந்தர தேசியத் தலைவர் பிரபாகரன் எவ்வளவு திறமைசாலி.
நானும்... உங்களுடன் சேர்ந்து, அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்கின்றேன். sFun_bowing

13 hours ago, Paanch said:

உங்களைப்போன்ற பெரியவர்களின் நன்னயங்களுக்கு என்ன நடந்தது...? அவர்கள் ஏன் நாணவில்லை...??

10 hours ago, nedukkalapoovan said:

பூமி உருவாகாமல் விட்டிருந்தால்...............இப்படிப் பெய்த மழைக்கு சிங்களவன் என்ற இனம்.. பாதிக்கப்பட்டிருக்க மாட்டாதில்ல.

பூமி உருவாகாமல் இருந்திருந்தால், மனிதன் ஏது?

10 hours ago, Maruthankerny said:

புலிகள் இராணுவத்தை சுடாது போயிருந்தால் 
இராணுவம் மீது செல் அடிக்காது போயிருந்தால் 

தமிழருக்கு அது நடந்திருக்குமா ?

முள்ளிவாய்க்கால் என்ற ஊரே பெரும்பாலான தமிழருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா

தலைப்பு என்ன??

ம்ம்ம்

எனக்கும் உலகத்தின் ஒரு மூலையில் எங்கோ நடந்தது போலத்தான் இருந்தது....

அவ்வளவு தரம் எதிர்பார்த்து

எதிர்பார்த்து

விட்டுக்கொடுத்து

இறங்கிப்போய்

நாங்களே மேலும் மேலும் உதவி.....

மரத்துப்போய்ச்சு...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நிலவு காலம் 
நிலவு காலத்தில் மட்டும்தான் இப்படியா ?

அல்லது முற்றாக முற்றி 
முளுகாலமும் இப்பிடித்தான் இருக்குமா ?

நாட்டு நிலவரம் 

வெள்ள தண்ணி பங்கருக்குள் இறங்கியதால் 
பல குப்பைகள் சில தசாப்தங்கள் கடந்து மேல் எழும்பி இருக்கிறது 

மேலே இருக்கும் படங்களில் 
ஒரே குப்பையாக இருக்கிறது !!

8 minutes ago, Maruthankerny said:

இப்போது நிலவு காலம் 
நிலவு காலத்தில் மட்டும்தான் இப்படியா ?

அல்லது முற்றாக முற்றி 
முளுகாலமும் இப்பிடித்தான் இருக்குமா ?

நாட்டு நிலவரம் 

முளுகாலம் என்றால் என்ன?

எல்லாக் காலங்களையும் சொல்கிறீர்களா?

வெள்ளம் உள்ள காலத்தில், நிலைமை வேறு. 

வெள்ளம் வடிந்தபின், உள்ள நிலைமை வேறு. 

வெள்ளம் வடிந்தபின், மக்களின் இயல்பான சகஜ நிலை மாறுவதற்கு சில காலம் பிடிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.