Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்

Featured Replies

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்

3legi_PTI.JPG

"ச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இது சட்டத்தின் வழிப்பட்ட தீர்ப்பல்ல. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின்  அடிப்படையில் தீர்ப்பு சொல்லாமல், குத்துமதிப்பாக, பஞ்சாயத்து  செய்வது போல் இத்தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. கர்நாடகாவின் நீலிக்கண்ணீரை கண்டு மனம் உருகி, தமிழ்நாட்டிற்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர்  தந்தால் போதும் என்ற ரீதியில் உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பு," என தமிழக விவசாயிகள் கவலைப்பட்டுக்கொண்டிருக்க... அந்த தண்ணீரை கூட திறந்து விடக்கூடாது என அடம்பிடிக்கிறது கர்நாடகா.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஆகஸ்ட் இறுதிக்குள் காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி நீரை கர்நாடக அரசு வழங்காததையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் “தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி நீரை செப்டம்பர் 5ம் தேதி முதல் அடுத்த 10 தினங்களுக்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளது.

1Pro_PTI.JPG

கர்நாடகாவில் பதற்றம்

தமிழகத்திற்கு சட்டப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நீரை நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றதற்காக  இரண்டு நாட்களாக பற்றி எரிந்துகொண்டிருக்கிறது கர்நாடகம்.  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்பதற்காக சாலை மறியல், கடையடைப்பு என  கர்நாடகத்தினர் கையிலெடுத்திருக்கும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பதவி விலக சொல்கிறார்கள்... தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கொளுத்துகிறார்கள்... பிரதமர் மோடிக்கு எதிராகவும் போராடுகிறார்கள்... உச்சநீதிமன்றத்தை சாடுகிறார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது துவங்கிய இந்த போராட்டம், தண்ணீர் திறப்பதாக அறிவித்ததில் உச்சம் பெற்றிருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினரும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினரும் தெடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தண்ணீர் திறந்து விடுவதாக அறிவிப்பு வெளியிட்ட அன்று, மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாண்டியா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

10rally2_EPS.jpg

வாகன போக்குவரத்து நிறுத்தம்

மாண்டியாவை சேர்ந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் ஆகியோரின் உருவப்படங்களையும் கொளுத்தினார்கள். அப்போது உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷம் போட்டபடி கிருஷ்ணராஜ சாகர் அணையை நோக்கி பேரணியாகச் சென்றதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மைசூருவில் காவிரியில் இறங்கி போராட சென்ற விவசாயிகளை போலீஸார் தடுத்ததால் இரண்டு விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். அணையில் குதித்து தற்கொலை செய்வோம் என மிரட்டினார்கள். அதுமட்டுமல்லாது சாம்ராஜ்நகர், ராம்நகர், பெங்களூரு ஆகிய இடங்களிலும் பெரும் போராட்டம் வெடித்தது.

போராட்டத்தால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும்  உடனடியாக நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து கர்நாடகாத்திற்கு இயக்கப்பட்ட அனைத்துப் பேருந்துகளும் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்துப்போனார்கள். தமிழக பதிவுஎண் கொண்ட லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களும் கூட முன்னெச்சரிக்கையுடன் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.  உச்சகட்டமாக பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் தமிழ்த் திரைப்படங்களைக்கூட  திரையிடக்கூடாது என கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த...  உடனடியாக தமிழ்த்திரைப்படங்களின் காட்சி ரத்து செய்யப்பட்டன.

9block_PTI.JPG

அச்சத்தில் கர்நாடகா வாழ் தமிழர்கள்

கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 9ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 700-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த போராட்டத்தால் கர்நாடகவாழ்  தமிழர்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.  “காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசின் முடிவுக்கு கர்நாடக தமிழர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது எங்களை வேதனைக்குள்ளாக்குகிறது பெங்களூரு,கோலார் தங்கவயல்,மாண்டியா, உள்ளிட்ட இடங்களில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள் தமிழ் அமைப்பினர்.

கனத்த இதயத்துடன் தண்ணீர் திறக்கப்படுகிறது என்று இரங்கல் அறிவிப்பைப்போலத்தான் கர்நாடக முதல்வர் சித்தராமையா  தண்ணீர் திறப்பு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதை கூட கர்நாடக மக்கள் அதை ஏற்பதாக இல்லை.  மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்ததால், உடனடியாக அவசர அமைச்சரவை கூட்டம் மற்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டார் சித்தராமையா. அதில், நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், குமாரசாமி உட்பட அனைத்துக்கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

160907180400_cauvery1_640x360__nocredit.

தண்ணீர் திறப்பு ஏன்? - சித்தராமையா

கூட்டத்தின் முடிவில் சித்தராமையா, ‘‘கர்நாடகாவில் இந்த ஆண்டில் பருவமழை பொய்த்ததால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இருப்பினும் ஆகஸ்ட் மாதம் இறுதிவரை தமிழகத்துக்கு காவிரியில் 33 டிஎம்சி நீரை வழங்கி இருக்கிறோம். கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாததால் தமிழகத்துக்கு கூடுதலாக நீர் தர முடியாத சூழல் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம். கர்நாடகாவின் அனைத்து சிரமங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை மதிக்கும் வகையில் தமிழகத்துக்கு காவிரி நீரை முறைப்படி திறந்துவிட்டுள்ளோம். அதேபோல, கர்நாடக விவசாயிகளுக்கும் பாசனத்துக்கும், குடிநீருக்கும் காவிரி நீரை திறந்துவிட முடிவு செய்துள்ளோம். எனவே கர்நாடக மக்கள் எதற்கும் கவலைப்படாமல், பொறுமையாக இருக்க வேண்டும்.  இது தொடர்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்," என்று மக்களுக்கு பதில் அளித்துள்ளார். இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் நிச்சயம் மத்திய அரசிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

4men_PTI.JPG

என்ன செய்யப்போகிறது தமிழகம்?

உண்மையில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பெரும் பாதிப்பை சந்திப்பது தமிழகம் தான். பங்கீடு அடிப்படையில் தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. சட்டப்படி கொடுக்க வேண்டிய அளவில் இருந்து மிக குறைந்த அளவு தண்ணீரை தான் திறக்கச்சொல்லி இருக்கிறது. ஆனால் உரிய நீரை திறக்கக் கோரி தமிழகத்தில் மக்கள் திரள் போராட்டங்கள் நடக்கவில்லை... அனைத்துக்கட்சி கூட்டங்கள் கூட்டப்படவில்லை. சட்டத்துக்கும், விதிகளுக்கும் புறம்பான போராட்டத்தை கர்நாடகாவில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடத்தி வருகின்றன. அதற்கு மக்கள் பெருமளவில் திரள்கிறார்கள். சட்ட விதிகளுக்குட்பட்டு, நம் உரிமைகளை கேட்டு பெற தமிழக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைவதாக தெரியவில்லை.
இன்றும் கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்கிறது. ரயிலை மறிக்கிறார்கள். பஸ்சை அடித்து உடைக்கிறார்கள். தமிழ்  சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்கிறார்கள். ஆனால் நாம் இதையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. செய்யவும் கூடாது. ஆனால் நம் கோரிக்கையை, நம் தேவையை நாம் ஒரே குரலில் எழுப்ப வேண்டும். முதலில் அதற்கு நாம் தயாராக வேண்டும்.

http://www.vikatan.com/news/india/68135-karnataka-protest-against-release-of-cauvery-water-to-tamil-nadu.art

  • தொடங்கியவர்

14188176_579058922277014_476660742470403

சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்

எங்க பார் அதே நினைப்பு...

மக்களது அவலங்களுக்குள்ளும்

அரசியல் பேசவும்

பழி உணர்வுகளை கொட்டவும் சிலரால் மட்டுமே முடியும்...

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துருக்கள் சிங்களம் போலவே இருக்கக் காரணம் என்ன? Rolleyes.gif

 

 

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14184335_925204484252389_4066342024605443377_n.jpg?oh=1c91a7ee8645af656bc69bef76045c2d&oe=5884FD10

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, அஞ்சரன் said:

சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .

இன்னும்.....இன்னும் மேலை எதிர் பார்க்கிறம்.....உண்மையிலையே நீங்க ஒரு சிற்பி மாதிரி.. free laughing emoticon

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

14222104_848290538603975_836850545612988

14203272_1402409786440226_36078203439673

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படி   புடுங்குப்பட்டால்   எப்போது இந்தியா வல்லரசு ஆகும்? 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழகம் கொந்தளித்து சிலர் உயிர்த்தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு எத்தகய இடர்கள் ஏற்பட்டாலும் ஈழத்தில் அதற்கான எந்தச் சலனமும் ஏற்படுவதில்லையே. ஏன்? எதற்காக.......??

9 minutes ago, Paanch said:

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழகம் கொந்தளித்து சிலர் உயிர்த்தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு எத்தகய இடர்கள் ஏற்பட்டாலும் ஈழத்தில் அதற்கான எந்தச் சலனமும் ஏற்படுவதில்லையே. ஏன்? எதற்காக.......??

ரொம்ப சிம்பிள் 

அதுதான் நம்ம டிசைன் 
மாத்தவா முடியும்

தமிழக தமிழர்களை விட்டுவிடுவோம்.
எமது மலையக தமிழருக்கு
என்ன செய்தோம்.

6 hours ago, குமாரசாமி said:

இன்னும்.....இன்னும் மேலை எதிர் பார்க்கிறம்.....உண்மையிலையே நீங்க ஒரு சிற்பி மாதிரி.. free laughing emoticon

ஒரு  தலைவரை  காப்பாற்ற  முடியவில்லை  இப்ப  இருக்கும்  தலிவரையும்  கொடுத்துப்போட்டு  தமிழின  தலைவருக்கு  நாங்க  எங்க  போறது  என்ற   பயம்  தான்  சாமி .

  • கருத்துக்கள உறவுகள்

ரிவிவ் பெட்சன் போட்ட பிறகு கண்டம்ட் பெட்டிசன்  போட முடியுமா.. ஈழதோழர்கள் விளக்கதிற்காக .. ஒருவன் கோர்ட்டில் மீண்டும் மறுபரிசிலனை செய்யுங்கள்  என்பது ரிவிவ் பெட்சன் .. நீதிமன்ற ஆணையெ ஒருவன் மதிக்க மறுக்கிறான் என்பது கண்டம்ட் ஆப்த  கோர்ட்டு ..கிந்திய அரசியல் அமைப்பு சட்ட அமைப்பு படி ரிவிவ் பெட்டிசன் போட்ட பிறகு  கண்டம்ட் ஆப்த கோர்ட் வழக்கை போட முடியாது.. அதாவது கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு தண்ணிர் திறந்து விடவில்லை என்றால் . நீங்க ஏன் ரிவிவ் பெட்சனுக்கு போறீங்க முதலில்யே  .கண்டம்ட ஆப் த கோர்ட் ( நீதி மன்ற அவமதிப்பு )  போகணும்.. தவிச்ச தமிழன் வாயிக்கு முதலில்  தண்ணி அப்புறம் மீதி ....! சில அடிப்படை கூட தெரியாதா உங்களுக்கு எல்லாம் ..? இதெல்லாம் அரசியல் ... ஏன்டா நீஙக் எல்லாம் பி.எ.பில் .. எம் . ஏ. பில்  .. படிச்சிருக்கீங்க ...  ஜல்லிகட்டு வழக்கு வரும் போது பீட்டா கூட்டா அமைப்பின்  5   வழக்கு அறிஞர்களெல்லாம் திறமையாக வாதிடும் போது  தமிழ்நாட்டின் சார்பில் வாதம் செய்யும் வழக்கறிஞர எங்கே ? என்று ஜட்ஜ் கேட்ட போது... தூங்கி கொண்டு இருந்த வழக்கறிஞர  தண்ணீர் தெளித்து எழுப்பி கூட்டி வந்தால் என்ன வாதிடுவார்..?ஜல்லிகட்டு போய்விட்டது!!!!    அம்மாவை  கவுரவம் பட ஸ்டையில் எதிரும் புதிருமாக  நின்று வாதாடி  வெளியே கொண்டுவருவதற்கு  பாடுபட்ட பெருமக்கள் .. இதற்கும் வாதாட வேண்டியதுதானே..? ஏன் இப்படி ஒரு வழக்கு தொடர்ந்ந்தால் உடனே  தீர்ப்பு வந்துவிடும்  அது வேணாம்  நம்ம அரசியல் ரம்மிக்காக நாங்க ஜெயிச்சுட்டோம் நாங்க ஜெயிச்சுட்டுட்டோம்  என்னால் முகத்தை கழுவதற்கு தண்ணீர் இதோ வந்து விட்டது பார் .. உங்க .. கழுவதற்கு இதோ தண்ணீர் உண்மையில் இது 15 டி.எம்.சி எதற்குமே ???


டிஸ்கி:


 இதற்கு ஒரே தீர்வு  இந்த இரண்டு திருட்டு கழங்களின் பிடியில்  இருந்து விடுபட்டு உண்மையான தமிழன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அதுவும்  சட்ட நுணுக்கங்கள் தெரிந்த ..யாருக்கும் விலை போகாத ... மக்களுக்காக....தமிழன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்

டிஸ்கிக்கு டிஸ்கி :

தனிபட்ட முறைய்யில் என்னை தாக்க விரும்பும் பெருமக்கள் .. ஏதோ 6/2 (1+2) = ? மாதிரி  குதர்க்கமாக  குதரவேண்டாம் ... பல கில்மாக்கல் எனக்கும் தெரியும்  e=mc*2  தனிபட முறையில் மின்னஞ்சல் அனுப்பவும் ...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, அஞ்சரன் said:

ஒரு  தலைவரை  காப்பாற்ற  முடியவில்லை  இப்ப  இருக்கும்  தலிவரையும்  கொடுத்துப்போட்டு  தமிழின  தலைவருக்கு  நாங்க  எங்க  போறது  என்ற   பயம்  தான்  சாமி .

vadivelu happycrying GIF - vadivelu happycrying tamil GIFs  உதை கேட்டதோடை எனக்கு ஆனந்தகண்ணீர் ஆறாய் ஓடுது..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அஞ்சரன் said:

சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .

மகிழ்ச்சி வாழ்க  வளமுடன்
இந்தப்பிரச்சனைக்கும் நம்ம தலைவர் தான் வரணுமா 

23 hours ago, குமாரசாமி said:

vadivelu happycrying GIF - vadivelu happycrying tamil GIFs  உதை கேட்டதோடை எனக்கு ஆனந்தகண்ணீர் ஆறாய் ஓடுது..

நீங்க  சொன்னதை  தானே  நானு  எழுதின  பிறகு  எதுக்கு  பீல்  பண்ணிட்டு .

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2016 at 11:07 PM, Paanch said:

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழகம் கொந்தளித்து சிலர் உயிர்த்தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு எத்தகய இடர்கள் ஏற்பட்டாலும் ஈழத்தில் அதற்கான எந்தச் சலனமும் ஏற்படுவதில்லையே. ஏன்? எதற்காக.......??

அதை யாழிலும் காணலாம்தானே? :)

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

அதை யாழிலும் காணலாம்தானே? :)

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனாலும் உறவுகளான தமிழர்கள் யாழ்கள கருத்துகளில் மட்டுமன்றி திண்ணையிலும் கிளர்ந்தெழுந்ததைக் கண்டோமல்லவா. :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ராசவன்னியன் said:

அதை யாழிலும் காணலாம்தானே? :)

எதை அடிப்படையாக கொண்டு கொந்தளிக்க சொல்கிறீர்கள் வன்னியரே ....?
இறங்கி சில நிமிடத்தில் தமிழ்நாட்டு தமிழனிடமிருக்கும் திராவிடன்,தென்னிந்தியன் மற்றும்  இந்தியன் எட்டிப்பார்த்துவிடுவான் .
பிறகென்ன செய்வது ...நாங்கள் இந்தியர்கள் எங்கள் அரசியலை நாங்களே பார்த்துகொள்வோம் என்று பாடமெடுக்க தொடங்கிவிடுவினம் 

இந்த நிலையை அவர்களே விரும்பி வரவழைத்து கொண்டபின்னர் என்ன செய்வது ....பரிதாபப்படத்தான் முடியும். ஈழத்தமிழர் மீது அடிமைத்தனம் திணிக்கப்பட்டது 
தமிழ்நாட்டு தமிழர்களுக்கோ தமக்கென்று ஒரு தகுதி வாய்ந்த அரசை நிறுவும் ஜனநாயக பொதுவெளியை வைத்துகொண்டே இலவசங்களுக்கும் பணத்திட்க்கும் டாஸ்மாக்கிட்க்கும் சோரம் போய் தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுகொண்டிருக்கின்றனர்... 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி என்றால் ஏதாவது நடக்கும்

ஆட்சியை அண்டை மாநிலக்காரர்களிடம் கொடுத்துவிட்டு நல்லது நடக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அதை யாழிலும் காணலாம்தானே? :)

 

புரிதல் இல்லாத ஒருசிலரால் (தமிழகம், ஈழம், மலேசியா, கனடா எங்கினும்) அவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.. பெரும்பான்மையோர் விளக்கம் தரும்போது ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

14237479_365400737182015_920527568519949

14344893_365400767182012_277313857269475

14324417_365400930515329_425668501509946

14311263_365400997181989_533361505980601

14249974_365401043848651_607506610105234

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.