Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ ; தீயை கட்டுபடுத்தும் முயற்சிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு)

Featured Replies

கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ ; தீயை கட்டுபடுத்தும் முயற்சிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு)

 

கிளிநொச்சி பொது சந்தை தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேத விபரம் பற்றி சரியாக கணிக்கப்படவில்லை. எனினும் குறித்த தீயினால் 40 இற்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

14359161_1088567024542321_64827034810389

மேலும் குறித்த தீயை அனணப்பதற்காக தீயைணைப்பு வாகனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில்  கடை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த தீயணைப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரமுடியவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

14368921_2113394285551365_66079201381767

14368921_2113394285551365_66079201381767adsasd1.jpg14333843_1100050520079325_15862710369256

http://www.virakesari.lk/article/11421

 

கிளிநொச்சியில் தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் சந்தை பகுதியில் இருந்த 50 க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசம் ... ..

  • தொடங்கியவர்

14364790_1057465284303251_20066670998338

14264852_1057465317636581_30988866877214

14292268_1057465337636579_56845924083966

கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ பலகோடிகள் எரிந்து நாசம்:

16 செப்டம்பர் 2016
Bookmark and Share
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:

கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ  பலகோடிகள் எரிந்து நாசம்:

கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து  அழிந்துள்ளன.

 
இது தொடர்பில் தெரியவருவதாவது
 
இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளன.
 
தீ பிடித்து  எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலீஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
 
இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டு வரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்
 
எற்கனவே யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்   மீள் குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது சில காலம் அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தி;த்த வேளை  தாங்கள் 2009 க்கு முன் சந்தை இயங்கிய (தறபோது சந்தை உள்ள பிரதேசம்) பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது சந்தை பகுதி மீட்கப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு  வழங்க்கபட்ட நிலையில் ஏனைய  வியாபார துறைகளுக்கு தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்க்கப்பட்டது. இ;ந்த குறித்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளது.
 
கிளிநொச்சி நகரத்தில் சில வருடங்களுக்கு முன் தனியார் புடவை கடை ஒன்று தீயினால் எரிந்து அழிந்த போது கரைச்சி பிரதேச சபையினரிடம் தீ அணைப்பு படை ஒன்றின் அவசியம் குறித்து பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது  ஆனால் அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை. கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை இருந்திருக்குமாயின் ஒரு  சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
மேலும் ஒரு வருடதிற:;கு என வழங்கப்பட்ட குறித்த தற்காலி கொட்டில்களில் வியாபாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் கடந்த மாதம் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தருமாறு  பல தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136040/language/ta-IN/article.aspx

Update கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ : பலகோடி பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசம்

Published by Priyatharshan on 2016-09-17 00:42:04

 

(எஸ். என்.நிபோஜன்)

 

 

கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து  அழிந்துள்ளது.IMG_6063.JPG
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும்  இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது.IMG_6165.JPG இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாசமகியுள்ளன.
தீ பிடித்து  எரியத் தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலீஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. IMG_6116.JPGஇருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்கிகளும் இணைந்து  தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டன. இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.IMG_6180.JPG
இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது.IMG_6127.JPG தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்.யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்   மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது சில காலம் அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேளை  தாங்கள் 2009 க்கு முன் சந்தை இயங்கிய (தறபோது சந்தை உள்ள பிரதேசம்) பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது சந்தை பகுதி மீட்கப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு  வழங்க்கபட்ட நிலையில் ஏனைய  வியாபார துறைகளுக்கு தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்க்கப்பட்டது. குறித்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளது.

கிளிநொச்சி நகரத்தில் சில வருடங்களுக்கு முன் தனியார் புடவை கடை ஒன்று தீயினால் எரிந்து அழிந்த போது கரைச்சி பிரதேச சபையினரிடம் தீ அணைப்பு படை ஒன்றின் அவசியம் குறித்து பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது.  ஆனால்  அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை.  கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை  இருந்திருக்குமாயின் ஒரு  சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் ஒரு வருடதிற்கு என வழங்கப்பட்ட குறித்த தற்காலி கொட்டில்களில் வியாபாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் கடந்த மாதம் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தருமாறு  பல தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/11422

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைக்கும், இறைவனுக்கும்  தமிழன் மேல் தீராத கோபம் போலுள்ளது. தொடர்ந்து அழிவுகளும், இழப்புகளும்.மீண்டெழுந்து  முன்னேற முயன்றும் முடியாமலுள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, satan said:

இயற்கைக்கும், இறைவனுக்கும்  தமிழன் மேல் தீராத கோபம் போலுள்ளது. தொடர்ந்து அழிவுகளும், இழப்புகளும்.மீண்டெழுந்து  முன்னேற முயன்றும் முடியாமலுள்ளதே.

நாமெல்லாம்.... அப்பாவி பிராணிகள். எமது... அரசியல் வியாதிகளும் அப்படித்தான்,  சோத்து மாடுகள்.
முக்கிய இடத்தில், சந்தை எரிந்தவுடன்.... அதனை தீயணைத்து, புதிய கட்டிடம் கட்டும்  போது.... 
யாருக்கு... அந்தக் கடை கிடைக்கும்?   இருந்து... பாருங்கள்.....  இது, திட்டமிட்ட  செயல்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
கிளிநொச்சி சந்தையில் 100இற்கும் மேற்பட்ட கடைத் தொகுதிகள் தீயில் எரிந்து நாசம்.கோடிக்கணக்கில் சொத்தழிவு
கிளிநொச்சி சந்தையில் 100இற்கும் மேற்பட்ட கடைத் தொகுதிகள் தீயில் எரிந்து நாசம்.கோடிக்கணக்கில் சொத்தழிவு
கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று  வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 100இற்கும் மேற்பட்ட கடைத்தொகுதிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் பாரிய சொத்தழிவுகளும் ஏற்பட்டுள்ளன.
 
இது தொடர்பில் தெரியவருவதாவது
17-9-2016%209.9.2%206.jpg
நேற்று இரவு ஒன்பது மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் பழக் கடைகள், புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளன.
17-9-2016%209.9.5%203.jpg
தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நீர்த்தாங்கி மூலம் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
 
இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ  புடவைக் கடைகளையும் அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. 
17-9-2016%209.9.38%205.jpg
எற்கனவே யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது சில காலம் அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேளை தாங்கள் 2009 க்கு முன் சந்தை இயங்கிய (தறபோது சந்தை உள்ள பிரதேசம்) பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது சந்தை பகுதி மீட்கப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு வழங்க்கபட்ட நிலையில் ஏனைய வியாபார துறைகளுக்கு தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்க்கப்பட்டது.
17-9-2016%209.9.24%204.jpg
இந்த குறித்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளது.
 
கிளிநொச்சி நகரத்தில் சில வருடங்களுக்கு முன் தனியார் புடவை கடை ஒன்று தீயினால் எரிந்து அழிந்த போது கரைச்சி பிரதேச சபையினரிடம் தீ அணைப்பு படை ஒன்றின் அவசியம் குறித்து பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது ஆனால் அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை.
 
கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை இருந்திருக்குமாயின் ஒரு சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
17-9-2016%209.9.47%202.jpg
மேலும் ஒரு வருடதிற்கு என வழங்கப்பட்ட குறித்த தற்காலி கொட்டில்களில் வியாபாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் கடந்த மாதம் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தருமாறு பல தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

http://onlineuthayan.com/news/17699

  • தொடங்கியவர்
கிளிநொச்சியில் பாரிய தீ ; 5 இராணுவத்தினர் காயம் (VIDEO)
 
 

கிளிநொச்சி பொதுச் சந்தையில்,வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து  அழிந்துள்ளன.

 தீயை கட்டுப்படுத்த முயன்றவர்களில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது

நேற்றிரவு , 8.30 க்கும் ஒன்பது மணிக்கும்  இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. 

இதனால் பல கோடி ரூபாய்  பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளன.

தீ பிடித்து  எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலிஸ், நீர்த்தாங்கி மூலம் தீ அணைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்துக்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளன. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்துக்கும். மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்

 ஏற்கெனவே யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்   மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது சில காலம் அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேளை  தாங்கள் 2009 க்கு முன் சந்தை இயங்கிய (தறபோது சந்தை உள்ள பிரதேசம்) பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது சந்தை பகுதி மீட்கப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு  வழங்க்கபட்ட நிலையில் ஏனைய  வியாபார துறைகளுக்கு தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்க்கப்பட்டது.

இ;ந்த குறித்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளது. கிளிநொச்சி நகரத்தில் சில வருடங்களுக்கு முன் தனியார் புடவை கடை ஒன்று தீயினால் எரிந்து அழிந்த போது கரைச்சி பிரதேச சபையினரிடம் தீ அணைப்பு படை ஒன்றின் அவசியம் குறித்து பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது  ஆனால்  அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை. 

கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை  இருந்திருக்குமாயின் ஒரு  சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் ஒரு வருடதிற்கு என வழங்கப்பட்ட குறித்த தற்காலி கொட்டில்களில் வியாபாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் கடந்த மாதம் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தருமாறு  பல தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

article_1474086368-kilinochi-fire-%283%2

-எஸ்.என்.நிபோஜன்

- See more at: http://www.tamilmirror.lk/182036/க-ள-ந-ச-ச-ய-ல-ப-ர-ய-த-இர-ண-வத-த-னர-க-யம-VIDEO-#sthash.x2gTrQfE.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்தான் தீயை அணைத்தனாங்கள்  ஆகவே எமது பிரசன்னம், சேவை  இந்த வடமாகாண மக்களுக்கு தேவை. அவர்கள் எங்களது சேவையை விரும்புகிறார்கள். நாங்கள் அவர்களை பாதுகாக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

 

14364790_1057465284303251_20066670998338

 

14292268_1057465337636579_56845924083966

கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ பலகோடிகள் எரிந்து நாசம்

 

IMG_6116.JPG

இந்த தீக்கு  முன்னான செய்திகள் ஆராயப்படணும்

அதெநேரம் தீக்கு பின்னான விளைவுகளும்

திட்டங்களும் ஆராயப்படணும்

மெல்ல மெல்ல மேலெழும் எம் மக்கள் மீதான இவ்வாறான அழிவுகளை

வெறும் தீ என எடுத்துக்கொள்ளும்படியான சூழ்நிலை அங்கில்லை..

பெரும் வல்லூறுகளும் கழுகுகளும் 

முதலைகளும் ஏப்பமிட வட்டமிட்டபடி..........

  • தொடங்கியவர்

உதவிகளை எதிர்பார்க்கும் தீயினால் நிர்க்கதியான கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகள்

 


(எஸ்.என்.நிபோஜன்)
கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து கருகி, சாம்பல் மேடாக காட்சியளிக்கின்ற நிலையில் தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுச் சந்தை வியாபாரிகள் உதவி எதிர்பார்த்துள்னர்.IMG_6203.JPG
புடவை, அழகுசாதனம் காலணிகள் கடைகளில் 60 க்கும் மேற்பட்ட கடைகளும், அனைத்து பழக்கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. IMG_6198.JPGஒரு கடையில் ஏற்பட்ட தீ படிப்படியாக அனைத்து கடைகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு  தங்கள் கண் முன்னே எரிந்துகொண்டிருப்பதனை அவதானித்த கடை உரிமையாளர்கள் செய்வதறியாது கதறி அழுத காட்சிகள் எல்லோரையும் கண் கலங்க வைத்தது.IMG_6199.JPGதீ ஏற்பட்டு சிறுதி நேரத்தில் பொலிஸ் நீர்த்தாங்கியும் அதன் பின்னர் கரைச்சி பிரதேச சபையின் நீர்த்தாங்கியும்  சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயற்சி எடுத்த போதும் கட்டுக்கடங்காத தீச் சுவாலையை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்கிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்த போதும் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.IMG_6206.JPG
இந்த நிலையில் பொது மக்களும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
தீ ஏற்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் இராணுவ தீ அணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. IMG_6211.JPGஅத்தோடு கனரக வாகனம் மூலம் தொடர்சசியாக இணைக்கப்பட்டிருந்த கடைத் தொகுதியின் ஒரிடத்தில் இடிக்கப்பட்டு தீ ஏற்பட்ட பகுதிக்கும் ஏனைய பகுதிக்குமான தொடர்பு தூண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தீ தொடர்ந்தும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கிளிநொச்சி பொதுச்சந்தையில் உள்ள அனைத்து பழ வியாபார கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துவிட்டன.IMG_6215.JPG
இந்த நிலையில்  மறுமுனையில் கடை உரிமையாளர்களால் உடைக்கப்பட்டும் திறக்கப்பட்டும் பொருட்கள் வெளி எடுத்துவரப்பட்டது. அப்போது  உதவிக்கு வந்த பலரும் கடைகளின் உள்ளே இருந்த பொருட்களை வெளியேகொண்டு சென்று பல இடங்களிலும் குவித்த நிலையிலும் பொருட்களுக்கு மேல் நீர்த்தாங்கிகள் வாகனங்கள் எறி கடந்து சென்ற நிலையில்  அவையும் விற்பனைக்கு உதவாத நிலையில் சேதமடைந்துள்ளன. IMG_6217.JPGஇதேவேளை, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட திருடர்களும் பொருட்களை திருடிச் சென்றுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ அனர்த்தம் காரணமாக பல கோடி ரூபா சொத்தழிவு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம்வரை  சரியான மதிப்பீட்டு விபரங்கள் மேற்கொள்ளப்படவில்லை. கரைச்சி பிரதேச சபையினர் அதற்கான பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் அனைவருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன்கள் மற்றும் மொத்த வியாபாரிகளிடம் கடன்கள் உண்டு. இதனை  தவிர வியாபாரத்திற்காக அடகு வைத்த நகைகள் என  மிகப்பெரும் சுமைக்குள் வாழக்கின்றனர்.

14369870_10209233581014175_4689544221791

இந்த நிலையில் ஏற்பட்ட தீ அவர்களது  வாழ்கையை எரித்து விட்ட தீயாகவே அமைந்துள்ளதென வியாபாரிகள் தலையில் கைவைத்து கதறுகின்றனர். கிளிநொச்சி சந்தை வியாபாரிகளின் தற்போதைய கோரிக்கையாக சந்தைக்கான நிரந்தர கட்டடம், வங்கிகள்,  நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களை  அரசு விசேட ஏற்பாடு மூலம் தள்ளுபடி செய்தல், அல்லது வட்டியை இரத்துச் செய்தல், காலத்தை நீடித்தல், வியாபாரிகள் வழமைக்கு திரும்பும் வரைக்கும் விசேட நிதி ஒதுக்கீடு மூலம் வாழ்வாதார உதவிகள், கிளிநொச்சி நகரத்திற்கு ஒரு தீ அணைப்பு வாகன வசதியை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் முன் வைக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு  முன் அமைந்திருந்த  தனியார் புடவைக் கடை ஒன்று தீ பற்றி எரிந்து போது தீ அணைப்பு வாகனம் கிளிநொச்சியில் இல்லாத காரணத்தினால் கடை முற்றுமுழுதாக எரிந்து அழிந்தது.

14322428_10209233581294182_1352875905822

யாழ்ப்பாணத்தில் இருந்து தீ அணைப்பு வாகனம் வருவதற்கு முன் வியாபாரம் நிலையம் முற்றாக அழிந்து விட்டது. அதன் போது கிளிநொச்சியில் பலராலும் கிளிநொச்சிக்கான தீ அணைப்பு வாகனம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் அது தொடர்பில் எவரும் கவனத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது சந்தையில் ஏற்பட்ட தீ மீண்டும் குறித்த தேவையை வலியுறுத்தியுள்ளது. தீ அணைப்பு வாகனம் கிளிநொச்சியில் இருந்தால் அது குறித்த நேரத்திற்குள் சம்வப இடத்திற்கு விரைந்திருந்தால் நிலைமை இந்தளவுக்கு விபரீதமாக மாறியிருக்கிறாது என்று வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

14292489_10209233580174154_7315150966841
தற்போது  கிளிநொச்சி சந்தையை  பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மஸ்தான், தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோர் இன்று காலை சென்று பார்வையிட்டுள்ளனர் . மேலும் பல அரசியல் தரப்புகள் பார்வையிட வருகைதரவுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/article/11439

  • தொடங்கியவர்

கிளிநொச்சி பொதுச் சந்தையை காவுகொண்ட தீயினால் 125 கடைகளில் 225 மில்லியன் ரூபா அழிவு

 

கிளிநொச்சி பொதுச் சந்தையை காவுகொண்ட தீயினால் 125 கடைகளில் 225 மில்லியன் ரூபா  அழிவு




நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக 125 கடைகளில் 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என கரைச்சி பிரதேச சபையின்  ஆரம்ப கட்ட மதிப்பீட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.



இந்த தீ விபத்தில் 66 கடைகள் முழுமையாக எரிந்து அழிந்துள்ள நிலையில், 59 கடைகள் பகுதிகயளயில் எரிந்து அழிவடைந்துள்ளது. இதில் 24  புடவை கடைகள் முழுமையாகவும் 34 புடவை கடைகள் பகுதியளவில் அழிவடைந்துள்ளன. மேலும் அழகுசாதன கடைகளில் 20 கடைகள் முழுமையாகவும், 25 கடைகள் பகுதியளவிலும் எரிந்துள்ளன.  அத்தோடு 22 பழ வியாபார கடைகளும் முற்றாக எரிந்துள்ளன.



தீயினால் அழிவுக்குள்ளான கடை உரிமையாளர்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் படி 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136062/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலை தரும் விடையம். கடைகள் பலகைகளினால் அடிக்கப்பட்டவை. அரசாங்கத்தினால் ஒழுங்காக கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு fire alarm /smoke detector / fire extinguisher போன்றவை பொருத்தப்பட்டிருந்தால் இந்த இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

12 hours ago, நவீனன் said:

இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்துக்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளன. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்துக்கும். மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்

இராணுவத்தினர் அச்சுவேலியில் தேர் இழுத்திருக்கக்கூடாது, காங்கேசன்துறையில் வீடு கட்டியிருக்கக் கூடாது, கிளிநொச்சியிலும் தீயை அணைக்க உதவி இருக்கக் கூடாது.

இராணுவத்தினர் சமுதாயத்தில் இப்படியான சேவைகளை செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகாலத்தில் இராணுவம் சேவையில் ஈடுபடுத்தப்படுவது வழமை ஆனால் தேர் இழுப்பதற்கும் வீடுகட்டுவதற்கும் கைதிகளை வைத்து தோட்டம் செய்து சந்தையில் மரக்கறி விற்பதற்கும் அல்ல.

இராணுவத்தை குறைத்து தீயணைப்பு படையினரை அதிகரிக்க வேண்டும். 

4 hours ago, ஜீவன் சிவா said:

இராணுவத்தினர் அச்சுவேலியில் தேர் இழுத்திருக்கக்கூடாது, காங்கேசன்துறையில் வீடு கட்டியிருக்கக் கூடாது, கிளிநொச்சியிலும் தீயை அணைக்க உதவி இருக்கக் கூடாது.

இராணுவத்தினர் சமுதாயத்தில் இப்படியான சேவைகளை செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

 

மிக மிக சோகமான கண்ணீரை வரவழைக்கும் சம்பவம்.

கடையொன்றில் கவனயீனமாக இருந்ததால் இந்த பேரிழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த கடைக்கு அன்று வந்து சென்ற வெளியாரின் சதிவேலையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்குவது மிக அவசியமான ஒன்று.

வட மாகாணத்தில் சாவகச்சேரி, கிளிநொச்சி, ஊர்காவற்துறை, நெல்லியடி, மாங்குளம், முருங்கன்  முதலிய ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தது 2 தீயணைப்பு அணிகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டியது பொறுப்புள்ள அரசின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒருவர், முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும்  முடிச்சுப் போட முயற்சிக்கிறார். இராணுவம் வரமுதல் எங்கட நாட்டில தீ வரேல்லை, வந்தாலும்  அணைக்க யாருமில்லாமல் எல்லாமே எரிந்து அழிந்தது, நல்லவேளை இப்ப ஆமிக்காரன் இருந்தபடியால் காப்பாற்றிப்போட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இங்கு ஒருவர், முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும்  முடிச்சுப் போட முயற்சிக்கிறார். இராணுவம் வரமுதல் எங்கட நாட்டில தீ வரேல்லை, வந்தாலும்  அணைக்க யாருமில்லாமல் எல்லாமே எரிந்து அழிந்தது, நல்லவேளை இப்ப ஆமிக்காரன் இருந்தபடியால் காப்பாற்றிப்போட்டான்.

அவரவர் அவரவர் அறிவுக்கு உட்பட்டு சிந்திக்கிறார்கள் 

யாழில் நியூ மார்க்கெட்டில் பொம்பர் அடித்து இப்படி சில கடைகள் 
எரிந்தன ....... அங்கு ஒரு கடையில் ஒரு முஸ்லீம் சிறுவன் வேலைக்கு இருந்தான் 
அவன் முதலாளிக்கு (தமிழர்) விசுவாசமாக இருந்திருக்கவேண்டும் .....

கடைகள் எரிந்து புகை மேல் எழும்போது நாம் எல்லோரும் வேடிக்கை 
பார்க்கவே ஓடினோம் ..... அவன் விசுவாசத்தில்தான் வந்திருப்பான் என்று நினைக்கிறேன் 
அவன் வரும்போது கடை முற்றாக எரிந்துவிட்டது .
அவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சொன்னான் ....
அல்லா காத்தது சுவர் எரியவில்லை என்று !
முதலாளி அல்லா  ******தது  என்று அவனை அடித்து விட்டார்.

அந்த சிறுவனுக்கு கடை இருக்கிறதுதானே இனி பொருட்களை வாங்கி போட்டால் 
வியாபாரம் செய்யலாம் என்று தோன்றி இருக்கும்.
முதலை இழந்த முதலாளிக்குத்தான் அவன் பட்ட கஷ்ட்டம் தெரியும்.

கிளிநொச்சி மக்கள் இந்த நிலையில் கிடப்பதே ............. வேண்டாம் !

11 hours ago, ஜீவன் சிவா said:

இராணுவத்தினர் அச்சுவேலியில் தேர் இழுத்திருக்கக்கூடாது, காங்கேசன்துறையில் வீடு கட்டியிருக்கக் கூடாது, கிளிநொச்சியிலும் தீயை அணைக்க உதவி இருக்கக் கூடாது.

இராணுவத்தினர் சமுதாயத்தில் இப்படியான சேவைகளை செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

இப்படிப்பட்ட ஒரு கேவலமான கீழ் தரமான ஒரு கருத்து என் நீக்கவில்லை என்பதை நிர்வாகம் விளக்கம் தருமா??

60 கடைகள் என்றால் 60 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அதை தனது சுய இலாபத்துக்காக பயன்படுத்து இவர் தனது மனா எவ்வளவு கோரமானது வெளிஊடுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரிய இழப்பு.உடனடியாக அரசும் அரசு சாரா அமைப்புக்களும் உதவ வேண்டும்.எதிர் காலத்தில் தேவையான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

83/84 இல் பருத்தித்துறையில் கடைத்தொகுதிகளை எரித்தது இதே இராணுவம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, MEERA said:

83/84 இல் பருத்தித்துறையில் கடைத்தொகுதிகளை எரித்தது இதே இராணுவம் தான். 

அது அப்ப இது இப்ப........அதை மறந்தோம் மன்னிச்சோம்......இதை பாராட்டுவோம் ,புகழுவோம் ...tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் உள்ள கடைகள்,சின்னக்கடை,பெரிகடை சந்தைகள் ,யாழ் பொதுசன நூலகம் எல்லாம் எரித்தது இதே சிறிலங்கா இராணுவம்தான். இன்று இரராணுவம் கிளிநொச்சியில் தீயணைக்க உதவியதற்காக அவர்கள் செய்த  போர்க்குற்றங்களை மறந்து மன்னித்துவிடலாம் என்ற நிலைக்கு சிலர் வந்திருப்பதையிட்டு என்ன சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள், சிங்களவனை மன்னித்து ஏற்றுக்கொள்வதில், கடவுளாகி றொம்ப நாளாச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.