Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணை

Featured Replies

எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் முழுக்கை நீல நிற மேலங்கியுடன், மெல்லியதேகமும் நிமிர்ந்த பார்வையும் கொண்ட அவனின் கண்களை உற்று நோக்கினேன். எனது தேடலுக்கு எந்தவித பலனும் இல்லாமல் அவனது கண்கள் இருந்தன.

மெல்லிய நீல வர்ண பூச்சுடன் இருந்த ஒரு தனியறையில் என்னையும் அவனையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அவற்றில் 50 வீதத்துக்கும் அதிகமாக மௌனமே பதியப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு காவலர்கள் விசாரணை முடிவுக்காக அசைவின்றி காத்திருந்தார்கள்.

"நான் அதை செய்யவில்லை" என்பதை தவிர அவனிடம் இருந்து வேறு எந்த பதிலும் எனக்கு உருப்படியாக கிடைக்கவில்லை. 

அம்மான் கரும்புலிகளுக்காக ஆற்றிய உரையை பொதுவெளி இணைய பாவனையில் இருந்த ஒரு கணினியில் தரவேற்றம் செய்திருந்த குற்றத்திற்கான சந்தேகத்தின்  பெயரில் அவனை கைது செய்திருந்தார்கள். அந்த துறை சார் நிர்வாகத்தில் துணைப்பொறுப்பாளர் இவன். 

அவன் புலம்பெயர் நாட்டில் இருந்து போராளியாக தன்னை இணைத்து கொண்டவன். அவனது குடும்பமே இயக்கத்துக்காக பல்வேறு பணிகளில் செயற்பட்டு கொண்டிருந்தார்கள். அவனது குடும்பத்தின் மீதிருந்த நம்பிக்கையும், மதிப்பும் அவன் அந்த குற்றத்தை செய்திருப்பதற்கான வாய்ப்புகளை மழுங்கடித்திருந்தன.

இருந்தாலும் விசாரணை அனைவருக்கும் பொதுவானது.

இதே சம்பவத்தில்,  இவனது பொறுப்பாளர் கைது செயற்பட்டு, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், தண்டனைக்காக பாலம்பிட்டி களமுனைக்கு அனுப்பப்படிருந்தான். களமுனையில் விழுப்புண் அடைந்த நிலையில் அவன் அனுப்பிய கடிதம் எங்களை வந்து சேரும் போது அவன் வீர மரணத்தை தழுவி இருந்தான். அவனது கடிதம், மற்றும் கணினி துறைசார் வல்லுநர்களின் ஆராய்ச்சிக்கு பிறகே குற்றவாளியாக இவன் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தான்.

 பொறுப்பாளர்- துணை பொறுப்பாளர்களுக்கு இடையே இருந்த ஈகோ, தன்னைவிட கல்வியறிவில், துறைசார் அறிவில் குறைந்த ஒருவன் தன்னைவிட  உயர்பதவியில் இருந்ததை ஒப்புக்கொள்ள மறுத்த மனதினால் எழுந்த வினையே இவனை அப்படி ஒரு காரியத்தை செய்ய தூண்டி இருந்ததாக முன்னைய விசாரணையாளர்கள் அறிக்கை என் முன்னே இருந்தது. 

இவன் தான் அந்த குற்றத்தை செய்திருந்தான் என்பதை கணினியே காட்டி கொடுத்த விண்டோஸ் log அறிக்கையும் சேர்த்தே இணைத்திருந்தார்கள். 

முழு அறிக்கையையும், சான்றாக கிடைத்த விண்டோஸ் log கோப்பையும் அவனிடம் கொடுத்தேன். வாசித்து முடித்த பின்னரும் அவன் கண்களில் எந்தவித சலனமும் இல்லை. 

எதற்காக இப்படி செய்தாய்.? உன்னால் ஒரு அருமையான போராளி தணடனை பெற்று களத்தில் காவியமானது கூட உன் மனதை சுடவில்லையா.? நான் ஐந்தாம் முறையாக அவனிடம் கேட்டேன்.

மீண்டும் அதே பதில் நான் இதை செய்யவில்லை. உண்மையில் அவன்தான் குற்றவாளி என்று நீக்கமற உறுதி செய்திருந்தாலும் அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை அவனது ஈகோ தின்று விட்டு இருந்தது.

இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. உனக்கான தண்டனையை நாளை இறுதி செய்வோம் என்று கூறிவிட்டு எழுந்தேன். பயம் அவன் கண்களில் லேசாக தெரிந்தது. காட்டி கொள்ளாமல் மேசையில் இருந்த குவளையில் தண்ணீரை மென்று குடித்தான்.

வெளியே வந்த நான், காவலர்களிடம் அவனது கழுத்தில் இருக்கும் சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு, 1-9 முகாமின் தனியறையில் காவலில் வைக்கும்படி கூறினேன். ஏனைய போராளிகள் அவனது முகத்தை காணாமல் இருக்க முகமூடி அணிவிக்கும்படி கூறினேன். 

அம்மானிடம் சென்று விசாரணை  முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டு, இது எந்த வித தேச துரோக நடவடிக்கையும் இல்லை என்று தெளிவுற விளக்கினேன், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவனது போராடடத்துக்கான பங்களிப்பு, குடும்ப பங்களிப்பை கருத்தில் கொண்டு  வேறு துறைக்கு மாற்றி விடுதலை செய்வது என்று முடிவு எடுத்திருந்தோம். இரவை தாண்டி இருந்தமையால் காலையில் அவனிடம் சொல்லி விடுதலை செய்ய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டு விடைபெற்றேன்.

அந்த அதிகாரி அதிகாலையிலேயே விடுதலை முடிவோடு 1-9 முகாமின் தனி அறையை திறந்தபோது, வாயிலே சயனைட் வில்லையுடன் அவனது உடலில் இருந்து உயிர் நிரந்தர விடுதலை பெற்று இருந்தது.

அவன் அருகே இருந்த அந்த ஒற்றை காகிதத்தில், "நான் அதை  செய்யவில்லை செய்தவனை கண்டுபிடியுங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எஞ்சி இருந்தது.

அந்த வாக்கியம் என் போன்ற எத்தனையோ விசாரணையாளர்களின்  பல நாள் தூக்கத்தை தொலைத்திருந்தது. 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு...  இந்த கட்டளை நிறைவேற்றப்படவில்லை என நினைக்கிறேன். tw_anguished:

ஒரு பாரிய அமைப்பை கட்டி காப்பதும் லேசல்ல ...பொறுப்புக்களை சுமப்பதும் லேசல்ல...
இம்மாதிரியான நிகழ்வுகள் எம்மை புடம் போட்டு, தேவையான பட்டறிவுகளை நாம் பெற்றிருந்தால் ...
இவர் போன்ற பல நிரபராதிகளின் ஆத்மாக்கள்  சாந்தியடையட்டும்...

Edited by Sasi_varnam

சரி, பிழை பின்னர், ஆனால் உங்களைப்போல் மற்றவர்களும் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் பகலவன். 

  • தொடங்கியவர்
On 03/10/2016 at 6:13 PM, Sasi_varnam said:

சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு...  இந்த கட்டளை நிறைவேற்றப்படவில்லை என நினைக்கிறேன். tw_anguished:

ஒரு பாரிய அமைப்பை கட்டி காப்பதும் லேசல்ல ...பொறுப்புக்களை சுமப்பதும் லேசல்ல...
இம்மாதிரியான நிகழ்வுகள் எம்மை புடம் போட்டு, தேவையான பட்டறிவுகளை நாம் பெற்றிருந்தால் ...
இவர் போன்ற பல நிரபராதிகளின் ஆத்மாக்கள்  சாந்தியடையட்டும்...

உண்மைதான் சசி அண்ணா. ஒருவித அலட்சியம் ஒரு உயிரை விலையாக கொடுக்க வைத்துவிட்ட்து.

On 03/10/2016 at 7:11 PM, கலைஞன் said:

சரி, பிழை பின்னர், ஆனால் உங்களைப்போல் மற்றவர்களும் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் பகலவன். 

அனுபவத்துக்கு அப்பால் சில விடயங்களை சொல்லாமல் விட  அதே  எங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது.

 

சசி அண்ணா, கலைஞன் வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

 

விருப்பளித்த நுணாவிலான்,சுவி அண்ணா, வந்தியதேவன், ஜீவன், நவீனனுக்கும் நன்றிகள்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

சே....வாசித்த நமக்கே மனக்கிலேசம் வருகிறது. உங்களுக்கு எப்படி இருக்கும்.

நீங்கள் ஒரு உன்னத நோக்குக்காக செயல்பட்ட போது செய்த கடைமை அது.

கீதா உபதேசத்தை நினைவில் கொள்ளுங்கள்.

கடமையை செய் பலனை எதிர்பாராதே.

  • தொடங்கியவர்

மிக்க நன்றி கோசான். நீங்கள் களத்தில் அதுவும் என் திரியில் எழுதியது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்தும் எழுதவேண்டும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பல சம்பவங்கள் நடந்திருக்கலாம்.
போராட்டத்திலிருந்து மக்களை ஒதுக்கி வைத்ததும்
இப்படியான நிகழ்வுகள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகலவன்! உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சார் கோசான் அவர்கள்! திண்ணையைலிருந்து நடுவீட்டுக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு...பகலவன்!

நீண்ட காலங்களின் பின்னர் நகைச்சுவை கலக்காத உங்கள் பதிவொன்றை வாசித்தேன்! 

கண்ணில் நீர் சுரக்க வைக்கின்ற பகிர்வு!

கீதோபதேசம் வெளிப்படையாகப் பார்க்கும் போது....நல்லது போலத் தெரியும்!

ஆனாலும்..அது வருணாச்சிரம தர்மத்தை வாழவைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது!

கடமையைச் செய்...பலனை எதிர்பாராதே என்பது சரி..! எனினும் அந்தக் கடமைகளை வரையறுப்பது..வருணாச்சிரம தர்மம் தானே!

சூத்திரனைப் பார்த்து...நீ உனது கடமையைச் செய்...அதைச் செய்வதன் மூலம்..உனது ' கர்மா' கழுவப்படுகின்றது!

அடுத்த பிறவியில் நீ ஓர் உயர்ந்த வர்ணத்தில் பிறப்பாய் என்று அவனுக்கு ஆறுதல் கூறுவது தான் கீதை!

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3.10.2016 at 5:53 PM, பகலவன் said:

 

அம்மானிடம் சென்று விசாரணை  முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டு, இது எந்த வித தேச துரோக நடவடிக்கையும் இல்லை என்று தெளிவுற விளக்கினேன், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவனது போராடடத்துக்கான பங்களிப்பு, குடும்ப பங்களிப்பை கருத்தில் கொண்டு  வேறு துறைக்கு மாற்றி விடுதலை செய்வது என்று முடிவு எடுத்திருந்தோம். இரவை தாண்டி இருந்தமையால் காலையில் அவனிடம் சொல்லி விடுதலை செய்ய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டு விடைபெற்றேன்.

அந்த அதிகாரி அதிகாலையிலேயே விடுதலை முடிவோடு 1-9 முகாமின் தனி அறையை திறந்தபோது, வாயிலே சயனைட் வில்லையுடன் அவனது உடலில் இருந்து உயிர் நிரந்தர விடுதலை பெற்று இருந்தது.

அவன் அருகே இருந்த அந்த ஒற்றை காகிதத்தில், "நான் அதை  செய்யவில்லை செய்தவனை கண்டுபிடியுங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எஞ்சி இருந்தது.

அந்த வாக்கியம் என் போன்ற எத்தனையோ விசாரணையாளர்களின்  பல நாள் தூக்கத்தை தொலைத்திருந்தது. 

பாவம்.... அவன், அவசரப் பட்டு விட்டான். 

7 hours ago, வாத்தியார் said:

இப்படிப்பல சம்பவங்கள் நடந்திருக்கலாம்.
போராட்டத்திலிருந்து மக்களை ஒதுக்கி வைத்ததும்
இப்படியான நிகழ்வுகள் தான்.

போராட்டத்தில் இருந்து மக்களை ஒதுக்கி வைத்தது மட்டுமல்ல ஒட்டுமொத்த போராட்டத்தை சிதைத்த மையப்புள்ளியும் இந்த விசாரணைதான். புலிகளின் கட்டுமானத்தையும் அகநிலைப் பலத்தையும் புலநாய்வுத்துறைக்கு முன் புலநாய்வுத்துறைக்குப் பின் என்று பிரிக்கலாம். முன்னரான காலத்தில் போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் எதிரியாக இருந்தது சிங்கள இராணுவமே. சவால் என்பது சிங்கள இராணுவமே. பின்னரான காலத்தில் ஐ என்ற புலநாய்வுத்துறைக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டது. யாரை எந்த நேரத்தில் உள்ளே தள்ளுவார்கள். அடுத்து யார் என்பதே சிந்தனையாக இருந்தது. எதிரி மீதான அச்சம் இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து. அவ்வளவு துராத்திற்கு பல தளபதிகளும் போராளிகளும் விசாரணைக்கு உட்படுத்தபப்பட்டனர். இதில் 98 வீதமும் சந்தேகம் என்பதே அடிப்படையாக இருந்தது. பத்து பதினைத்து வருடமாக பல விழுப்புண்களை அடைந்து போராடியவர்களின் விசாரணையில் அவர்களின் உழைப்போ தியாகமே சிறிதளவேனும் மதிக்கப்படாமல் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது புலிகளின் மன உறுதி மனோ பலத்தின் மீது ஆப்பாக இறங்கியது. புலிகளின் அழிவுக்கான பாதை இதனால் திறக்கப்பட்டது. புறநிலையில் புலனாய்வுத்துறையின் நடவடிக்கைகள் குறிப்பாக அரசியல் படுகொலைகள் இலங்கை தலைநகர்  மீதான தாக்குதல்கள் அனைத்தும் சர்வதேசத்தின் ஒட்டுமொத்தமாக போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அழிப்பதற்கு வளிகோலியது. ஒரு புலநாய்வுத்துறை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு புலிகளின் புலநாய்வுத்துறையை விட உதாரணம் உலகில் வேறு இல்லை. அகநிலையிலும் புற நிலையிலும் மிக மோசமான தற்கொலைக்கு ஒப்பான வகையில் இயங்கிய ஒரு பிரிவு. ஒரு அமைப்பின் உள்கட்டமைப்பை பலப்படுத்தவும் உள் கட்டமைப்பு மீதான புறநிலைத் தாக்குதலை தடுக்கவும் சர்வதேச ஆதரவை சிதையாமல் தக்கவைக்கவும் பொறுப்பான ஒரு பிரிவு அதற்கு எதிராக அனைத்தையும் செய்தது என்பது ஒட்டுமொத்த அழிவின் பின்னே உணரப்படுகின்றது. சிலரால் அது கூட என்னும் முடியவில்லை.

எதிரிகளுடன் போராடி பின்னர் இந்த சந்தேக விசாரணையின் சித்திரவதைக்குள் வருடக்கணக்கக போராடி மீளவும் எதிரிகளுடன் போராடிமடிந்த ஜெயம் லோறன்ஸ் தேவன் போன்ற தளபதிகளும் நூற்றுக்கணக்கான போரளிகளும் அவர்களது வலிநிறைந்த வாழ்வும் தியாகங்களும் பேரினவாதத்தினதும் மையவாதத்தினதும் கோரமுகத்தை எப்போதும் சுட்டிக்காட்டும். 

  • தொடங்கியவர்

கருத்துக்களையும் கதைசார் உங்கள் எண்ணங்களையும் பதிந்த வாத்தியார், குமாரசாமி அண்ணா , புங்கை அண்ணா, தமிழ்சிறி அண்ணா,  சண்டமாருதன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

விருப்பளித்த தமிழினி, நந்தன், புத்தன் உங்களுக்கும் நன்றிகள் பல.

இன்னும் சில மனதை அரிக்கும் சம்பவங்களை எழுதலாமா விடலாமா என்ற போராடத்திலேயே எழுதினேன்.

சுய விமர்சனம், புலிகள் மீதான மதிப்பு, மனிதாபிமானம், இரகசிய காப்பு சத்தியப்பிரமாணம், இனி எக்காலத்திலும் வெளிவரா உண்மைகள், தியாகங்கள், இழப்புகள், அவர்கள் குடும்பமே அறியா மறுபக்கங்கள், இப்படி எல்லாமே சேர்த்து என்னை குழப்புவதால் எழுதுவதா விடுவதா என்று தெரியா மனநிலையில் இருக்கிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பகலவன் said:

 

சுய விமர்சனம், புலிகள் மீதான மதிப்பு, மனிதாபிமானம், இரகசிய காப்பு சத்தியப்பிரமாணம், இனி எக்காலத்திலும் வெளிவரா உண்மைகள், தியாகங்கள், இழப்புகள், அவர்கள் குடும்பமே அறியா மறுபக்கங்கள், இப்படி எல்லாமே சேர்த்து என்னை குழப்புவதால் எழுதுவதா விடுவதா என்று தெரியா மனநிலையில் இருக்கிறேன்.

 

 

?

  • கருத்துக்கள உறவுகள்

சுய விமர்சனம் - இது உங்களுக்கும் எங்களுக்கும் தேவைப்படுவதாய் உணர்ந்ததாலேதான் நீங்கள் எழுதவே தொடங்கினீர்கள். அந்த தேவை இருக்கும் வரை எழுதத்தானே வேண்டும்.

புலிகள் மீதான மதிப்பு -பொய்யான பிரமிப்பில் கட்டியெழுப்பபட்ட மதிப்பு கதைகளுக்கு நல்லாயிருக்கும், வரலாற்றில் இருந்து பாடம் படிக்க உதவாது. இதே தப்பு இன்னொரு வடிவில் இனியும் நடவாதிருக்க, உண்மைகள் பேசப்படல் அவசியம்.

இரகசிய காப்பு சத்தியப்பிரமாணம் -இப்போ யாரையும் அந்த சத்தியபிரமாணம் காக்காவில்லை. அப்படி ஒரு ரகசியத்துக்கான தேவையும் இல்லை. இன்றைக்கும் காக்க வேண்டியரகசியங்கள் இருக்கிறன. அவை எவை என்பதையும், அவற்றை ஏன் வெளியிடக்கூடாது என்பதையும் யாரும் உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டிய நிலையில் நீங்கள் இல்லை.

மனிதாபிமானம், இனி எக்காலத்திலும் வெளிவரா உண்மைகள், தியாகங்கள், இழப்புகள், அவர்கள் குடும்பமே அறியா மறுபக்கங்கள் - என்ன கட்டத்தில் அவர்களின் பிள்ளைகள் இறந்து போனார்கள் என்ற தெளிவே இல்லாமல் அவர்களின் குடும்பங்களை இருட்டில் வைப்பதில் எங்கே இருக்கிறது மனிதாபிமானம். இங்கே இறந்து போனவன் என் சகோதரனாக இருப்பின் உங்கள் ஆக்கம் எனக்கு ஒரு முடிவை (closure) தந்திருக்கும்.

வர்ணாசிரமத்தை திணித்ததோ இல்லையோ, யாமறியோம், அது இந்த திரியில் ஆராயப்படும் பொருளும் அல்ல. ஆனால் வாழ்வில் சில தொழில்களை செய்பவர்களுக்கு குறிப்பாக ஏனையோரின் வாழ்கை பற்றிய முடிவை எடுக்கும் தொழில் செய்பவர்களுக்கு, "கடமையையை செய் பலனை எதிர்பாராதே" என்பது ஒரு coping strategy. (அது கண்ணன் கீதையில் சொன்னதாய் இருந்தா என்ன அண்ணன் போதையில் சொன்னதாய் இருந்தா என்ன, மெசேஜ்தான் முக்கியம்).

ஆகவே கடமையை செய்யுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பகலவன்..

எப்படி எத்தனையோ.....????

முடிந்தவரை எழுதுங்கள்

இன்னொரு நன்றியும் கோசானை களத்தில்  இறக்கியதற்கு...

இவ்வாறான மரியாதை  குறைந்து  விட்டது   அல்லது  தனக்கு அவமானம்  ஆகி  விட்டது  என அஞ்சி சிலர்  அவசர  முடிவுகள்  எடுத்தது உண்டு .

யாழ்  மாவட்ட  தளபதி செல்வராஜ்  அண்ணையின் பஜிரோ வாகனத்தை  ஒரு இளநிலை  தளபதி  வேகாம  ஓடி  தடுமாறி  பனையுடன்  மோதி  சிதைந்து  போனது  ,ஆள்  காயம்  இல்லை  ஏதே தப்பிட்டார்  வாகனத்தை  பார்த்த  தளபதி  கோவத்தில்  இறங்கடா  பங்கரில  என சொன்னதுக்கு  உள்ளே  இறங்கி  குப்பிய  கடித்து  விட்டார் அந்த  இளநிலை  தளபதி ...

இறுதியில்  போராளி நிலை  கூட  அறிவிக்காது  ஒரு பொதுமகனாக  அவரின்  உடல் வீட்டுக்கு  கொடுக்கபட்டது  இனிமேல்  இவ்வாறு  எவரும்  ஈடுபட  கூடாது  என்னும் சுற்றறிக்கையுடன் .

இப்படி  பார்க்க  போனால்  தளபதி  ஜெயம் போன்றவர்கள்  உறுதியின் உச்சம்  எனலாம் ....தொடருங்கள்  உங்கள்   அனுபவங்களை பகலவன் .

 

  • கருத்துக்கள உறவுகள்

"ஜெயத்தான் றோவின் ஆள்" என்று முன்னாள் போராளி ஒருவர் எழுதியதாகவோ கூறியதாகவோ ஞாபகம். 

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தில் கட்டிய சயனைட் வில்லை எதிரியிடம் பிடிபடாமல் இரகசியத்தை காப்பாற்ற என்ற கொள்கை, அவசரக் காரணங்களுக்காக வாழ்வை அழிக்க பல போராளிகளுக்கு உதவியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் பலியான போராளியின் சயனைட் வில்லை ஒழுங்காக அகற்றப்பட்டிருக்கவில்லை. அதுவும் ஒரு ஒழுங்குப் பிரச்சினை. காணொளியை யார் பொதுவெளியில் விட்டது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் இருந்திருக்கும் என்றுதான் கருதுகின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா சுகன் நல்ல பதில் கொடுத்தீர்கள்...எதற்கெடுத்தாலும் அரசியற் துறை மீது பழி போடுவது புலனாய்வுத் துறையின் வேலை,புலனாய்வுத் துறை மீது பழி போடுவது அரசியற் துறையின் வேலை.

மொத்தத்தில் ஈகோ,பதவி துஸ்பிரயோகம்,ஆணவம்,இறுமாப்பு போன்ற பல காரணங்களால் ஒரு அமைப்பே அழிந்து போனது.

சுதந்திரத்திற்காக போராடுமொரு அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் புலிகள் தான் உதாரணம். இருக்க கூடாது என்பதற்கும் புலிகள் தான் உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன் நல்ல தொரு பகிர்வு ஒரு பெயரில் ஏற்பட்ட குளறுபடியால் ஒருவர் கூட சாவடைந்தார் அவசரமான அநியாய சாவுகள் கொஞ்சம் அதிகமாகதான் நடந்தது ஆனாலும் அதுவும் நன்மைக்கே என்று கடந்து சென்றதுதான் மிஞ்சிய வலி ஒன்று 

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், காலம் கடந்தும் நினைவுகளை விட்டு அகலாதவனின் இழப்பை பகிர்ந்துள்ளீர்கள். நேற்று முன்தினம் மீண்டும் வாசித்தேன். மனம் அமைதியை இழந்து அந்த மனிதனை நினைவில் கொள்கிறது. 

அவலம் என்பதா கவனயீனம் என்பதா? இல்லை காலம் என கடந்து செல்லவா? 

போன உயிர் போனதுதான். அந்த உயிர் ஆத்ம அமைதி பெறட்டும். 

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

"ஆசை ஆசையாக தாய்நாட்டுக்கு போராட வந்து செய்யாத குற்றத்துக்கு தண்டனை" . இன்னும் எத்தனை?? .  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.