Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தீர்வு – இரா.சம்பந்தன்!

Featured Replies

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தீர்வு - இரா.சம்பந்தன்!

அடுத்த ஆண்டு தீபாவளித் தினத்திற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றை வழங்கிவைக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில், தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று இரவு தேசிய தீபாவளிப் பண்டிகை நடைபெற்றது.

இதில் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வினிடையில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகையாகும் என்று குறிப்பிட்டார்.

இதனை நல்லுள்ளத்துடன் வரவேற்பதாகவும், தற்போதைய நல்லாட்சியில் எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது என்றும் கூறினார்.

அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை தமக்கிருக்கிறது எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறினார்.

http://thuliyam.com/?p=46385

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் சம்பந்தர் ஐயா

இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்....

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழரசுக் கட்சி சின்னாபின்னம் ஆகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, போல் said:

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழரசுக் கட்சி சின்னாபின்னம் ஆகிவிடும்.

உன்மையாவா ??:unsure:

முதலில்  தமிழர்கள் தமக்கு பிரச்சனை  வந்தால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட வேண்டும். ஆனால் நாம் செய்யும் பிழை என்னவென்றால்  எதுக்கெடுத்தாலும்  சிங்கள அரசுக்கு எதிராக போராடுவது. இவங்களும்  அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சிங்களவன்  மீது பழியை போட்டு விட்டு தப்பி விடுகிறார்கள்.

10 minutes ago, முனிவர் ஜீ said:

உன்மையாவா ??:unsure:

பொறுத்திருந்து பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

பொறுத்திருந்து பாருங்கள்!

நான் ஏற்கனவே சொன்னது தானே இவர்கள் மீதுள்ள பற்று கொஞ்சம் கொஞ்சமாக தள்ர்கிறது  இவர்கள் இருந்தும் பலன் இல்லை என்று கன்பேர் சொல்வதை என் காதால் கேட்றேன் தினம் தினம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

நான் ஏற்கனவே சொன்னது தானே இவர்கள் மீதுள்ள பற்று கொஞ்சம் கொஞ்சமாக தள்ர்கிறது  இவர்கள் இருந்தும் பலன் இல்லை என்று கன்பேர் சொல்வதை என் காதால் கேட்றேன் தினம் தினம் 

சரியப்பா

அப்போ யார் நிரப்புவது?????

14 minutes ago, விசுகு said:

சரியப்பா

அப்போ யார் நிரப்புவது?????

27 minutes ago, Dash said:

முதலில்  தமிழர்கள் தமக்கு பிரச்சனை  வந்தால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட வேண்டும். ஆனால் நாம் செய்யும் பிழை என்னவென்றால்  எதுக்கெடுத்தாலும்  சிங்கள அரசுக்கு எதிராக போராடுவது. இவங்களும்  அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சிங்களவன்  மீது பழியை போட்டு விட்டு தப்பி விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்  சில காலத்துக்கு தங்களை விட்டால் தமிழருக்கு வேறு வழியில்லை என்பது

தமிழரசுக்கட்சிக்கு நன்கு தெரியும்

என்ன இருந்தாலும் படித்தவர்கள் இல்லையா?

இந்த மாதிரி  விடயங்கள் அத்துப்படி........

  • கருத்துக்கள உறவுகள்

14906929_1931211447106104_89856329355117

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தீர்வு - இரா.சம்பந்தன்!

அடுத்த ஆண்டு தீபாவளித் தினத்திற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றை வழங்கிவைக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=46385

என்ன சார் எந்த ஆண்டென்று சொல்லவே மாட்டீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சார் எந்த ஆண்டென்று சொல்லவே மாட்டீங்களா?

தீர்வு எதுக்கு எண்டே சொல்லாத....
மகா அரசியல்வாதி நம்ம சம்மந்தன் ஐயா!

அவர் இருக்க பயம் ஏன் ?

தமிழ் மக்களுக்கு தீர்வு !

  • கருத்துக்கள உறவுகள்

2016 முடிவு நெருங்குதில்ல.. அடுத்த தீபாவளிக்கு முடிவு தொலைவில்ல.. ஐயா... எனி அப்படித்தான் பேசி ஆகனும்.

அப்பவே சொன்னம் உந்தக் குடுகுடுப்பை கும்பலை நம்ப வேணான்னு. தமிழன் தலைவிதி அது... நம்பிக் கெடுவது. எல்லாரும் நம்ம வைச்சே கெடுப்பாங்கள். தமிழன்.. சொந்தமா.. எனி போராடவும் முடியாது.. துணிந்து எதிர்க்கவும் முடியாது. நம்பிக் கெட்டு சீரழிய வேண்டியான். தமிழனின் முடிவை ஜெகத்தில்.. இவங்கள்.. ஆரம்பிச்சு வைச்சிட்டு தான் கட்டை ஏறுவாங்கள். தமிழகத்தில் கொஞ்சம்.. இஞ்ச கொஞ்சம். போக வேண்டிய நேரத்திலும் போகாமல் இருந்து கொண்டு.. நம்ப வைச்சுக் கழுத்தறுப்பைதையே அரசியலாக்கிக் கொண்டு...இது தான் உவைட சட்டாம்பி.. சாணக்கியம். வெறுவாய் சப்பிகள். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Athavan CH said:

அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை தமக்கிருக்கிறது எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

மேற்கோள் காட்டப்பட்ட தகவலுக்கு என்னால் சாதாரண வார்த்தைகளால் பதிலளிக்க முடியாமல் உள்ளது. அது யாழ்களத்திற்கும் அழகல்ல.
நான் இங்கே யாழ்களத்தில் தேடுவது ஒரு இரு வருடங்களுக்கு முன் அந்த கோஷ்டிகளுக்காக வாயால் இரத்தம் வருமளவிற்கு வாதாடிய குருட்டு சிங்கங்களை.....:cool:

உதுகள் எதுக்கும் சரிவராது எண்டு படிச்சு படிச்சு சொன்னம் கேட்டீங்களா!!!!!!

நல்லதை சொல்ல வெளிக்கிட புலி.....பிரபாகரன்.......வடலி கேசு....பள்ளிக்கூடம் போகாததுகள்.......பங்கர்......உலக அறிவு இல்லாததுகள்.......உலக அரசியல் தெரியாததுகள்....எண்டு பட்டம் கட்டிப்போட்டு.....நாலு சுவருக்குள் கூனிக்குறுகி கணணி முன் அமர்ந்திருக்கும் செலுட்டு சிங்கங்களே இப்போது வந்து பதில் சொல்லுங்கள்.

நூறுநாள் எண்டுச்சினம்.....
லெக்சனுக்கு பிறகு எண்டுச்சினம்....
வருச கடைசியிலை எண்டுச்சினம்.....
இப்ப அடுத்த தீபாவளிக்கிடையிலை பம்மல் சமந்த்துக்கு வெளிச்சம் தெரியுமாம்.

**** tw_angry:

12 hours ago, குமாரசாமி said:

***...tw_angry:

ஒண்டை மறந்து போட்டியல்  முள்ளிவாய்க்காலை காட்டி பயமுறுத்தியமை.

  • கருத்துக்கள உறவுகள்

தன்ர இயலாமையை, நம்பிக்கை என்கிற சொல்லில் போட்டு  மறைத்து, தன் பிழைப்பைத் தொடருகிறார்  பாவம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:
9 hours ago, குமாரசாமி said:

புலி.....பிரபாகரன்.......வடலி கேசு....பள்ளிக்கூடம் போகாததுகள்.......பங்கர்......உலக அறிவு இல்லாததுகள்.......உலக அரசியல் தெரியாததுகள்....எண்டு பட்டம் கட்டிப்போட்டு.....

உண்மை தானே? முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் முடித்து விட்டார்களே?

  1.  உலக அரசியல் தெரியாததுகள்
  2. உலக அறிவு இல்லாததுகள்
  3. பள்ளிக்கூடம் போகாததுகள்

உண்மை உறைக்கிறதா?

  • தொடங்கியவர்

இன்று போய் நாளை வா - பிள்ளையார் அடுத்த தீபாவளிக்கு சரிவரும் - சம்பந்தர்

12229.jpg

சிவன் ஆலயமாக இருந்தாலும் முதலில் விநாயகனுக்கே பூஜையும் தீபாராதனையும் நடைபெற வேண்டும் என்பது பூஜா விதி.

இந்த நடைமுறைக்கு காரணம் என்ன என்பதைக் கூறமுற்பட்டால் அதற்கு இவ்விடம் போதாது மட்டுமன்றி பொருத்தமும் இல்லை எனலாம்.

ஆனாலும் விநாயகனுக்கு ஒரு சிறப்பு உண்டு. சனீஸ்வரன் இன்றுவரை அணுக முடியாதவராக இருப்பவர் விநாயகர்.

இதற்கு ஒரு கதை. கடவுளர் அனைவரையும் தன் பார்வையால் கஷ்ரப்படுத்தியவன் சனீஸ்வரன். ஆனால் விநாயகனை மட்டும் அவனால் தீண்ட முடியவில்லை.

விநாயகனைத் தீண்டும் பொருட்டு சனீஸ்வரன் அவரிடம் செல்கிறான். விநாயகனோ சனீஸ்வரா! இன்று போய் நாளை வா என்று சொல்லி விடுகிறார்.

விநாயகன் கூறியபடியே சனீஸ்வரன் நாளை செல்கிறார். விநாயகனின் வாசலில் சனீஸ்வரா! இன்று போய் நாளை வா என்று எழுதப்பட்டிருந்தது.

சனீஸ்வரன் திரும்புகிறான். விநாயகன் எழுதிய இன்று போய் நாளை வா என்ற வாசகம் இன்று வரை சனீஸ்வரனை அலைக்கும் என்று நம்பலாம்.

விநாயகனின் அறிவுடமை தன்னைத் தீண்ட வந்தவனுக்கே அலைச்சலைக் கொடுப்பதாக அமைந்துவிட்டது.

அறிவுடையார் செயல் உயர்வானது என்ற  காரணத்தாலும் தனக்கு மேல் தலைவன் இல்லாத் தலைவன் என்பதாலும் விநாயகனுக்கு முதலில் பூசை வழிபாடு என்ற நியமம் பொருத்துடையதாகும்.

சரி, இன்று போய் நாளை வா என்று விநாயகன் கூறியதை இங்கு எடுத்துரைப்பதன் நோக்கம் என்ன என்பது உங்களின் கேள்வியாக இருக்கலாம்.

அந்தக் கேள்விக்கான பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்ட தேசிய தீபாவளி பண்டிகையில் சம்பந்தர் ஆற்றிய உரையில், அடுத்த தீபாவளிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.

கூடவே தற்போதைய நல்லாட்சியில் எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

நல்லது சம்பந்தர் ஐயா ஆற்றிய தீபாவளி உரை முன்பு நாம் கூறிய பிள்ளையார் - சனீஸ்வரன் தொடர்புபட்ட கதைதான். 

ஆம், 2016 டிசம்பர் 31ஆந் திகதிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்று உறுதிமொழி வழங்கியவர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் அவர்கள்.அவரின் உறுதிமொழியை நம்பி தமிழ் மக்கள் நாட்களை எண்ணுகின்றனர். 

இந்த எண்ணலுக்குள் என் சொந்த ஊருக்குப் போகமுடியும்; வருடக் கணக்கில் சிறையில் அடைபட்டிருக்கும் என் மகனுக்கு விடுதலை கிடைக்கும்; காணாமல்போனவர்களின் துன்பத்துக்கு ஒரு முடிவு காணப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகளாக மேலெழுந்து  நிற்கின்றன.

இந்நிலையில் அடுத்த தீபாவளிக்குள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று சம்பந்தர் கூறியிருக்கிறார் எனில், அடுத்த தீபாவளியிலும் அடுத்த தீபாவளி என்று சொல்வதில் அவருக்கு கடினம் இருக்க மாட்டாது.

ஆக, பிள்ளையாரைத் தொட்டுவிட வேண்டும் என்று நினைத்த சனீஸ்வரனுக்கு இன்று போய் நாளை வா என்று கூறிய பிள்ளையார் போல்,
அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று சம்பந்தர் கூற அதை நம்பி ஒவ்வொரு தீபாவளிக்கும் காத்திருக்கும் பரிதாபத்தில் தமிழ் மக்கள். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12229&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Athavan CH said:

அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று சம்பந்தர் கூற அதை நம்பி ஒவ்வொரு தீபாவளிக்கும் காத்திருக்கும் பரிதாபத்தில் தமிழ் மக்கள். 

தமிழ் ஈழம் வந்த கதை தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7 hours ago, Jude said:

உண்மை தானே? முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் முடித்து விட்டார்களே?

ஒரு/ இரு நாடுகள் தங்கள் அரசியல் சுயநலனுக்காக  கண்மூடித்தனமாக செய்ததை புளகாங்கிதத்துடன் சொல்லும் உங்களைப்போன்றவர்கள்  இருக்கும் வரை தமிழினத்திற்கு விடிவு வரப்போவதில்லை..

70/60 வருடங்களாக தமிழ்தலைவர்களின் ஒவ்வொரு பெருநாள் வாழ்த்துக்களும் தவணைமுறை வாழ்த்துக்களாகவே இருக்கின்றது. இவர்களினால் முடிந்ததும் அதுதானே.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தீபாவளிக்குள் நீங்கள் காணுங்கள் ஆனால் அடுத்த தேர்தலில் நாங்கள் ரணிலுக்கு அல்ல்லது மகிந்தவுக்குத்தான் வாக்களிபம் என திருவாளர் பொதுசனம் சொல்லுது காரணம் தீர்வை நாங்கள் நேரடியாவே பெற்றுக்கொள்கிறோம் இடைத்தரகர்கள் தேவையில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

அடுத்த தீபாவளிக்குள் நீங்கள் காணுங்கள் ஆனால் அடுத்த தேர்தலில் நாங்கள் ரணிலுக்கு அல்ல்லது மகிந்தவுக்குத்தான் வாக்களிபம் என திருவாளர் பொதுசனம் சொல்லுது காரணம் தீர்வை நாங்கள் நேரடியாவே பெற்றுக்கொள்கிறோம் இடைத்தரகர்கள் தேவையில்லை

உது தான் நடக்கப் போகுது.உங்களுக்கு பச்சை போட என்னிடம் இல்லை .முடிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா தான் சாக முதல் தீர்வு வரும் என்று சொல்லிவிட்டால் ஓருத்துரும் கேள்வி கேட்க ஏலாது;. சம்பந்தர் ஐயா சொல்லுங்கோ!!!இதுதான் நல்ல ஐடியா!!!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

தமிழ் ஈழம் வந்த கதை தான்.

1977 இல் "அடுத்த தேர்தல் சுதந்திர தமீழீழத்தில் தான்" என்றதைத்தானே சொல்கிறீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.