Jump to content

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?  

51 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

Posted

குமாரசாமி அண்ணா, போல், மீரா, வாத்தியார்,

நீங்கள் எல்லாம் உலகில் என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் கருத்துக்கள் கூறுகின்றீர்களா அல்லது உலகில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அங்கே தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெறும் விடயங்கள் மட்டும் எல்லாம் நேர்த்தியாக, நீதி, நேர்மையின்படி நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? 

பிச்சைக்காரர்கள், அடிமைகளாக உள்ளவர்களுக்கு எஜமான்கள் எறிகின்ற எலும்புத்துண்டுகளும் இல்லையென்றால் ஜீவனோபாய போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது?

1990ம் ஆண்டு நாம் இடம்பெயர்ந்தபோது சொந்தவீடு இல்லை, வருமானம் இல்லை, ஆதரிக்க எவரும் இல்லை. அரசாங்கம் கொடுத்த நிவாரணப்பொருட்களும் கிடைத்திருக்காவிட்டால் வேறுவழி இல்லாமல் இயக்கத்தில் இணைவதே ஒரேயொரு தீர்வாய் அமைந்து இருக்கும்.

நாம் இடம்பெயந்து நட்டாற்றில் கைவிடப்பட்டதற்கு யார் காரணம் என்ற தர்க்கம் தேவையில்லை. ஆனால், அங்கே கடைசியில் கைகொடுத்தது கப்பல்களில் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப்பொருட்களே. அரிசியில் கல்லை மண்ணை கலந்து அனுப்பினாலும் அதை ஏற்றுக்கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை.

இது ஓர் உதாரணம். இந்தக்கோணத்திலேயே நான் பொருத்துவீடுகளை பார்க்கின்றேன். இங்கே இருந்து நாங்கள் எதுவும் கதைக்கலாம், எழுதலாம். ஆனால், கடைசியில் அங்கே அரசாங்கம் என்ன செய்கின்றதோ அதுதான் யதார்த்தம். தமிழர்கள் வந்தேறு குடிகள் என்று பாடத்திட்டத்தில் அச்சிடப்பட்டால் பரீட்சை வரும்போது வந்தேறு குடிகள் என்று மறுமொழி எழுதினால்தான் புள்ளி. எங்கள் கெட்டித்தனத்தை காட்ட நினைத்தால் முட்டைதான் வரும். அரசாங்கம் சொல்வதுதான் வேதவாக்கு. முரண்டுபிடித்தால் இழப்பு அங்கே வாழும் மக்களுக்குத்தான்.

ஒவ்வொரு திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தும்போதும் எவ்வளவோ தில்லுமுள்ளுக்கள் நடக்கின்றன. அரசியல்லாபம் பார்ப்பவனே அரசியல்வாதி. வியாபாரத்தில் இலாபம் பார்ப்பவனே வியாபாரி. தமக்கு லாபம் இல்லாமல் எவருமே எதிலும் இறங்கமாட்டார்கள். நாங்கள் பொருத்துவீட்டு விசயத்தில் அதிபுத்திசாலிகளாக எங்களை காட்டிக்கொள்ள முயன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்கள் கிடைக்காதவண்ணம் விசயங்களை இழுத்தடிப்பதாகவே எனக்குப்படுகின்றது.

வெறும் அரிசியை பெற்றுக்கொண்டு கஞ்சியை மட்டும் செய்து குடிக்கக்கூடியதாக உள்ள நிலமையில் நாங்கள் இட்லி, சாம்பார் கிடைத்தால்தான் உண்போம் அல்லது உண்ணாவிரதம் செய்வோம் என்பதுபோல் இருக்கின்றது உங்கள் பலரின் வாதம். 

பொருத்துவீட்டில் ஏதாவது விபத்துக்கள், இடர்ப்பாடுகள் எதிர்காலத்தில் வந்தால் அதற்கு பதில்கூறவேண்டிய தார்மீககடமை அந்ததிட்டத்தை உருவாக்கி செயற்படுத்துபவர்களுக்கு உள்ளது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் உண்மையான ஜனநாயக விழுமியங்கள், நீதி, நேர்மை உள்ள ஆட்சியில். அவை இல்லாத இடத்தில் எதுவுமே நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் நடக்கப்போவது இல்லை.

அலைவரும்போதே தலைமுழுகு!

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கலைஞன் said:

நீங்கள் எழுதியதை மீண்டும் வாசியுங்கள். 

சிங்கள பகுதியில் அறிமுகப்படுத்தப்படாத பொருத்து வீடு தமிழருக்கு கொண்டு வரும்போது அதில் உள்ள சிக்கல் விளங்கவில்லையா? 

90ம் ஆண்டு நீங்கள் மட்டும் இடம்பெயரவில்லை ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள், கப்பலில் வந்த உணவை நீங்கள் மட்டுமல்ல இலட்சக்கணக்கான மக்களும் உண்டார்கள் புலிகளும் உண்டார்கள்.

அரசாங்கம் மக்களுக்காக உருவாக்கப்பட்டதே தவிர அரசாங்கத்திற்காக மக்கள் அல்ல. மக்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு அடிமைகள் எனும் தொனியில் எழுதியுள்ளீர்கள்,

ஆயுத போராட்ட கால சூழ்நிலைகளும் தற்போதைய சூழ்நிலைகளும் ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, விசுகு said:

இந்த வீடுகள் கிடைப்பதற்கு 

முதலாவது நிபந்தனை

சொந்தமாக காணி  உள்ளவராக இருக்கணும் என்பது அல்லவா??

ஓம் ஆனால் சில இடங்களை  தெரிவுசெய்து தான் அமுல் படுத்த உள்ளார்கள் 

On 1/10/2017 at 3:40 PM, MEERA said:

ஜீ பத்து இலட்சத்தில் கட்டக்கூடிய கல் வீட்டிற்கு பதிலாக ஏன் 21/25 இலட்சத்தில் பொருத்து வீடு?

இந்த பொருத்து வீடு திட்டம் ஒன்றரை வருடங்களாக இழுபடுகிறது. கல் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எத்தனை வீடுகள் கட்டி முடிந்திருக்கும் ?

அதே போல் தான் இந்த பொருத்து வீட்டு பிரச்சினையும் கன காலத்து இழுபடப்போகிறது என நினைக்கிறேன் மீரா ஒரு வேளை இது கூட கிடைக்காமல் போகலாம் யார் கண்டது  

16 hours ago, வாத்தியார் said:

வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் என்று தான் முதலாவது தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆனால் எப்படியான வீடுகளை அமைப்பது என்று இந்த இரும்பு வீட்டுத் திட்டத்தை   கொண்டு வந்தது சுவாமி நாதன்  தான்.

அப்போதிலிருந்தே பல அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் ஐயா சுவாமி நாதன் தான்  இந்த மிட்டலின் பழைய இரும்புகளுக்கு விலை பேசியவர்.  மக்களுக்காக வீடுகளோ? அல்லது
துருப்பிடிக்கும் இரும்புகளை   விலை பேசி எம் மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றனரா? 

இங்கே ஆதாயம் இல்லாமல் அரசியல் செய்வது யாரும் இல்லை சகோ உதாரணம் வட கிழக்கில் கொண்டுவரப்பட்ட சாராய பார்களுக்கு அனுமதி யார் எடுத்து கொடுத்தது என்று விசாரித்தால் .........................எல்லாம் அவனுக்கே வெளிச்சம்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, இணையவன் said:

பசித்தவனைப் பட்டினி போடுவதை விட எதையாவது உண்ணக் கொடுக்கலாம் என்ற கோட்பாட்டில் பொருத்து வீடுகளை ஆதரிக்கலாம். ஏனென்றால் நாம் வெளிநாட்டில் இருந்து வீரம் பேசுவதை விட வேறெதையும் சாதிக்கப் போவதில்லை.

இதே நிலப்பாடுதான் எனதும்  அந்த சனம் தினம் தினம்  போராடிக்கொண்டிருக்கிறது   வானம் பார்த்த பூமியில் நாளைக்கு யார் இருப்பார் யார் இல்லையென்று தெரியாது  வீடு என்ற பெயரில் வாழ்ந்து விட்டு போகட்டும் இனியும் இவர்களால் இலங்கையில் இருக்கும் விலைவாசிகளுக்கு சொந்த வீடு கட்டலாம் அல்லது கட்டாமல் போகலாம் . ஓடு 50 ரூபா ஒன்று சீமெந்து பெயருக்கேற்றால் போல மிச்சுயி, நிப்போன் , மண்  கடல்மண் இல்லை ஆற்றுமண்  மழைபெய்தால் மண் இல்லையென்றால் வேலை நின்று விடும் கடல் மண் ஏற்ற முடியாது , சின்ன கொங்றீட் கற்கள்  டிப்பர் வாகனத்தை பொறுத்து , பெரிய கருங்கள் ஒரு லோடு 6000 - 9000 

Posted
15 hours ago, இணையவன் said:

பசித்தவனைப் பட்டினி போடுவதை விட எதையாவது உண்ணக் கொடுக்கலாம் என்ற கோட்பாட்டில் பொருத்து வீடுகளை ஆதரிக்கலாம். ஏனென்றால் நாம் வெளிநாட்டில் இருந்து வீரம் பேசுவதை விட வேறெதையும் சாதிக்கப் போவதில்லை.

இதை சொல்லி நான் அடி வாங்கினது போதாது என்று நீங்களுமா?:grin:

Posted

தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பு நிகழ்ச்சி நிரலால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட 300 நாதியற்ற மக்கள் பட்டினி இருக்கிறார்கள்.

அவர்களின் பசியைத் தீர்க்க 2,100 ரூபா பணம் கிடைத்துள்ளது. அந்தப் பணம் அந்த மக்களை திட்டமிட்டு அழித்த கும்பலில் இருந்து விலகி நல்லவர்கள் வேடம் போட்டுள்ள ஒரு குழுவினரின் கைகளில் கிடைத்துள்ளது.   

முன்னர் தொடர்ச்சியான இனவழிப்பில் ஈடுபட்டு தற்போது நல்லவர் வேடம் போட்ட குழுவில் நீண்டகாலம் ஒட்டியிருக்கும் ஒருவர், பட்டினி இருக்கும் ஒருவருக்கு 21 ரூபா படி, 100 பேருக்கு இதுவரை யாருக்கும் பரீட்ச்சயமற்ற புதுவித சாப்பாட்டுப் பொட்டலங்களை வழங்க முன்வந்துள்ளார்.

முன்னர் சமைத்து கெட்டுப்போன பழைய சாப்பாடுகளை மீள அவித்து புதுவித முறையில் தயாரித்த ஒரு திடீர் சாப்பாட்டுப் பொட்டலாமே 21 ரூபா படி வழங்கப்பட உள்ளது. இந்த திடீர் சாப்பாட்டுப் பொட்டலத்தை ஆய்வுசெய்த, அந்த பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், உணவு நிபுணர்கள் என அனைவரும் இது மக்களின் உடல் நலத்துக்கு கேடானது என ஒரே குரலில் அறிவித்துவிட்டனர். மேலும் அவர்கள் இந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக உண்டுவந்த மிகவும் ஆரோக்கியமான, பாரம்பரிய, சத்துமிக்க சாப்பாட்டுப் பொட்டலத்தை 9 ரூபா படி வழங்குவது நல்லது எனவும் அறிவித்துவிட்டனர்.

அதுமட்டுமல்ல 9 ரூபா மட்டுமே செலவாகும் மிகவும் ஆரோக்கியமான, பாரம்பரிய, சத்துமிக்க சாப்பாட்டுப் பொட்டலத்தை வழங்குவதன் மூலம் 100 பேருக்கு பதிலாக 233 பேரின் பட்டினி நீங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.  

யாரும் எதிர்பாராத விதமாக அந்த இனவழிப்பில் ஈடுபட்டு தற்போது நல்லவர் வேடம் போட்ட குழுவில் உள்ள பலரும் இந்த திடீர் சாப்பாட்டுப் பொட்டலம் பட்டினி இருக்கும் மக்களுக்கு உகந்ததல்ல எனக் கூறிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியுற்ற அந்த  இனவழிப்பில் ஈடுபட்டு தற்போது நல்லவர் வேடம் போட்ட குழுவில் நீண்டகாலம் ஒட்டியிருக்கும் ஒருவர், நீண்ட காலத்தை சாமர்த்தியமான கடத்திய பின்னர், தற்போது மீண்டும் அந்த உடல் நலத்துக்கு கேடான சாப்பாட்டுப் பொட்டலாமே தரப்படும், தேவையானவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.  

மக்களின் உடல் நலத்துக்கு கேடுவிளைவிக்கும் என பலராலும் , குறிப்பாக அந்த மக்களுடன் வாழும் பலரும் கூறிய பின்னரும், அந்த மக்களின் உடல் நலத்துக்கு கேடான திடீர் சாப்பாட்டுப் பொட்டலாமே பட்டினி இருக்கும் 100 பேருக்கு வழங்கப்பட வேண்டும் என அதுபற்றிய எந்த அனுபவமும் இல்லாத ஒரு சிலர் கூறிவருகின்றனர்.

மக்களுக்கு மிகவும் ஆரோக்கியமான, பாரம்பரிய, சத்துமிக்க சாப்பாட்டுப் பொட்டலம் என நடைமுறையில் நிரூபிக்கப்பட்ட சாப்பாட்டுப் பொட்டலமே பட்டினி இருக்கும் 233 பேருக்கு வழங்கப்பட வேண்டும் என அதை அனுபவரீதியாக  நன்கு அறிந்த இன்னொரு தரப்பினர்  கூறிவருகின்றனர்.

இது தான் தற்போதைய நிலை!

Posted

பொருத்து வீடுகள் என்பன கல் வீடுகள் அளவுக்கு தரமற்றவை என்பது உண்மைதான். ஆனால் கல் வீடுகள் என்பன கூட தரமற்ற கட்டுமான வகையில் அடங்குபவைதான். ஆகவே நீண்டகால நோக்கில் நாம் இது குறித்து சிந்தித்து விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, கலைஞன் said:

குமாரசாமி அண்ணா, போல், மீரா, வாத்தியார்,

நீங்கள் எல்லாம் உலகில் என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் கருத்துக்கள் கூறுகின்றீர்களா அல்லது உலகில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அங்கே தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெறும் விடயங்கள் மட்டும் எல்லாம் நேர்த்தியாக, நீதி, நேர்மையின்படி நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? 

பிச்சைக்காரர்கள், அடிமைகளாக உள்ளவர்களுக்கு எஜமான்கள் எறிகின்ற எலும்புத்துண்டுகளும் இல்லையென்றால் ஜீவனோபாய போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது?

இதில்  கருத்தாளர்களில் சிலரை மட்டும் குறிப்பிட்டு எழுதுவது சரியா என தெரியவில்லை

காரணம்

அதே மண்ணில்

அதே சூழலில் வாழும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்

அனைத்து தலைவர்களும்

இதை எதிர்த்துள்ளனர்

ஒருவர் கூட ஆதரித்தது போல் தெரியவில்லை (அமைச்சரைத்தவிர)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இதில்  கருத்தாளர்களில் சிலரை மட்டும் குறிப்பிட்டு எழுதுவது சரியா என தெரியவில்லை

காரணம்

அதே மண்ணில்

அதே சூழலில் வாழும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்

அனைத்து தலைவர்களும்

இதை எதிர்த்துள்ளனர்

ஒருவர் கூட ஆதரித்தது போல் தெரியவில்லை (அமைச்சரைத்தவிர)

தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதிகளையே மக்கள்  தூக்கியெறிய முன்வந்து இருக்கிறார்கள்  அண்ணே  இவங்கள்  இருந்கும் என்ன பலன் இல்லாவிட்டால் இன்னும் மக்களுக்கு சலுகைகள் கிடைக்கலாம் 

ஆதரித்தால் சுவாமி நாதனிடம் காசு வேண்டினால் என்றும் பேசுவாங்க  நாக்குத்தானேtw_blush:  

பொருத்து வீடு மட்டும் கேட்டவர்கள் பெற்றுக்கொள்ளட்டும்  மற்றவர்கள் இருக்கலாம் கல் வீட்டுக்காக   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, முனிவர் ஜீ said:

தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதிகளையே மக்கள்  தூக்கியெறிய முன்வந்து இருக்கிறார்கள்  அண்ணே  

இவங்கள்  இருந்கும் என்ன பலன் இல்லாவிட்டால் இன்னும் மக்களுக்கு சலுகைகள் கிடைக்கலாம் 

ஆதரித்தால் சுவாமி நாதனிடம் காசு வேண்டினால் என்றும் பேசுவாங்க  நாக்குத்தானேtw_blush:  

பொருத்து வீடு மட்டும் கேட்டவர்கள் பெற்றுக்கொள்ளட்டும்  மற்றவர்கள் இருக்கலாம் கல் வீட்டுக்காக   

எல்லோருமா????????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐந்து பேர் யாத்திரை செய்யும் நிலையில்.... அவர்களின் உணவுப் பொருட்கள் முடிந்து விட்டன.

கையில் பணம் மட்டுமே இருக்கின்றது. அதுவும் அந்த யாத்திரையால் திரும்பும் வரை அந்தப் பணத்தினூடாகவே அனைத்தையும் சமாளிக்க வேண்டும்.
அடுத்த  ஊரை  அடைந்த நேரம் சரியான பசி எடுத்துவிட்டது.
எப்படியாவது அந்தப்பசியை தீர்த்து விட்டே  அப்பால் நகரும் நிலை.

அப்போது அவர்களின் கண்களில் ஒரு உள்ளூர்க்காரரின் கடையும் (அவர்களுக்குத் தேவையான சகல மளிகைப் பொருட்களும் வாங்கக் கூடிய )பொருட்களின் விலையைப் பார்த்தால் யாத்திரை முடிந்து திரும்பும் வரை செலவழித்து மிகுதியாக  சிறு தொகையும் மிஞ்சும்.
 
அதனருகே   ஒரு ஆடம்பரமான விலையுயர்ந்த சாப்பாட்டுக் கடையும் இருந்தது. அந்தக் கடையின் சாப்பாட்டின் விலையைப்பார்த்தால் கையிருப்பு மிஞ்சாது அன்றே முழுவதும் செலவாகிவிடும்.   

இன்னொரு பக்கத்தில் இலவசக் குடி நீர் தாங்கியும் தெரிந்தது.

இப்போது இங்கே பலபேர் அந்தச்  சாப்பாட்டுக்கு கடையிலேயே சாப்பிட்டு... அந்த நேரத்துப் பசியைதீர்த்துவிட்டு..... அடுத்த நாட்களில் எங்காவது பிச்சை எடுத்து மிகுதிக் காலத்தைக் கழிக்கலாம் என்கின்றனர்.
வேறு யாராவது தெரிந்தால் கூறுங்கள் இந்த நிலையில் அந்த மனிதர்கள் எதை எப்படித் தெரிவு செய்தால் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, விசுகு said:

எல்லோருமா????????

எல்லோரும் இல்லை  

அது போல் தான் பொருத்து வீடும்  கல் வீடு தேவையில்லையென்ற மக்கள்  
 இருக்க, ஒதுங்க ஒரு  ம்றைவான இடம்   40,50 பேர் லைனில் நிற்க கக்கூசிக்கு  நின்ற சனத்தின் நிலமை தெரியாதவர்களாக இருக்குறோம் மேலும் பெண்கள் குளிக்க நிற்கிற நிலை யெல்லாம் நாம் யோசிக்க வேணும் அதுக்கு ஒரு ம்றைப்பு தேவை ...........................இனியும்  எழுத வில்லை  என்னாவது நடக்கட்டும் 

Posted
33 minutes ago, முனிவர் ஜீ said:

எல்லோரும் இல்லை  

அது போல் தான் பொருத்து வீடும்  கல் வீடு தேவையில்லையென்ற மக்கள்  
 இருக்க, ஒதுங்க ஒரு  ம்றைவான இடம்   40,50 பேர் லைனில் நிற்க கக்கூசிக்கு  நின்ற சனத்தின் நிலமை தெரியாதவர்களாக இருக்குறோம் அண்ண   அதைஅனுபவிச்சவனு(ளு) க்கே தெரியும்  இனி எழுதல்லை ..............

புரியவிலலை முனிவர். யாரைக் குறறம் சாடடுகிறீர்கள். நீங்கள் கூறிய அந்த நிலமை தெரியாதவர்களாக நாட்டை ஆளும் ஜனநாயக அரசாங்கமும். தமிம் மக்கள் பிரதிநிதிகளும் இருககிறார்கள் என்று கூற வருகிறீகளா முனிவர்ஜீ.

Posted
8 hours ago, ஜீவன் சிவா said:

இதை சொல்லி நான் அடி வாங்கினது போதாது என்று நீங்களுமா?:grin:

ஜீவன், தமிழர் உரிமையை இங்கிருந்து போராடி மீட்போம் என்ற வாதத்தில் 50 வீதம் கூட தனிப்பட்ட முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. பாதிப்படைந்த மக்களுக்கு உதவி செய்வதைச் சிங்களம் தடுக்கிறது என்ற காரணத்துக்குள் நாங்கள் ஒழிந்து கொள்வோமானால் உதவி செய்யவே முடியாத நாங்கள் எவ்வாறு விடுதலையை இங்கிருந்து பெற்றுக் கொடுக்க முடியும் ? அதற்காக முயற்சி செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. முயற்சியில் ஈடுபட்டே ஆகவேண்டும். போலி இல்லாமல் முயற்சி செய்பவர்கள் செய்யட்டும்.

பொருத்து வீடு கட்டும் திட்டத்தை எதிர்ப்பவர்கள் இதற்கு மாற்றீடான யதார்த்தமான திட்டங்களை முன்வைத்தால் பாராட்டலாம். அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் இப்படி எழுதினேன்.

அது தவிர, நேரடியாக இல்லாவிடினும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தில் தாயகத்தில் வாழும் மக்கள் பணத்தை மட்டும் இங்கிருந்து எதிர்பார்க்க முடியாது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் பெற்றுள்ள அறிவியல் மற்றும் அனுபவவத்தின் மூலம் தாயகத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரையும் ஆலோசகளையும் வழிகாட்டலையும் செய்வதற்கு உரிமை உடைவர்களாகிறார்கள். இந்தக் கருத்துக் கணிப்பின் நோக்கமும் அதுவே என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

6 hours ago, இசைக்கலைஞன் said:

பொருத்து வீடுகள் என்பன கல் வீடுகள் அளவுக்கு தரமற்றவை என்பது உண்மைதான். ஆனால் கல் வீடுகள் என்பன கூட தரமற்ற கட்டுமான வகையில் அடங்குபவைதான். ஆகவே நீண்டகால நோக்கில் நாம் இது குறித்து சிந்தித்து விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். :unsure:

என்னைப்பொறுத்தவரை கல்வீடு தரமாக கட்டுகிறார்கள் என்று கூறவில்லை. 
எத்தனையோ குடியேற்ற திட்டங்களையும் மாதிரி கிராமங்களையும் உருவாக்கிய சிங்கள அரசு சீமேந்திலெலான பலமான வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது. இன்றும் புதியது போலவே இருக்கின்றது.
பொருத்து வீடுகள் ஜேர்மனியிலும் இருக்கின்றது.அதன் தரமும் விலையும் மிகக்குறைவு. பெரும்பாலான மக்கள் அதனை விரும்புவதுமில்லை.காரணம் போகப்போக வரும்.

வீடு என்பது நாம் தினசரி பாவிக்கும் உடைகள் இல்லையேல்.....வீட்டில் பாவிக்கும் தொலைக்காட்சியோ அல்லது சமையலுக்கு பாவிக்கும் பாத்திரங்களோ அல்ல..

நான் எனது சந்ததி என்ற அடிப்படையில்தான் வீடு கட்டுவார்கள். 

பட்டு வேட்டி வாங்கும் சமாச்சாரமல்ல வீடும் வாழ்க்கையும்.

ஒரு பிரச்சனையை மூடி மெழுக பார்க்கிறார்கள்.....

Posted
On 1/10/2017 at 5:10 AM, MEERA said:

ஜீ பத்து இலட்சத்தில் கட்டக்கூடிய கல் வீட்டிற்கு பதிலாக ஏன் 21/25 இலட்சத்தில் பொருத்து வீடு?

இந்த பொருத்து வீடு திட்டம் ஒன்றரை வருடங்களாக இழுபடுகிறது. கல் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எத்தனை வீடுகள் கட்டி முடிந்திருக்கும் ?

வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வடமாகாணத்திலிருந்து 97ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன் வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தில் பொருத்து வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்தேவைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு வீடுகள் அவசரமாக இருக்கின்ற போதும் தற்போது வரையில் அத்தேவை பூரணமாக நிறைவு செய்யப்படவில்லை.

ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலில் வடக்கு மக்களின் அவசர தேவையான வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்காக 65ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டதை அறிமுகப்படுத்தினோம்.

இந்த பொருத்து வீட்டுத்திட்டத்தை அரசியல்வாதிகளே எதிர்க்கின்ற நிலையில் அத்திட்டத்தை வழங்குமாறு 97ஆயிரம் கோரிக்கைகள் அரசாங்க அதிபர்கள் ஊடாக எனக்கு கிடைத்துள்ளன.

அதனைக் கவனத்திற் கொண்ட நாம் முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தில் 22ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்தை விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டங்கள் மக்களின் அவசர கோரிக்கைகளின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவு ள்ளது.

முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த பொருத்து நவீன வீட்டுகளை அமைக்கும் திட்டத்தில் வீடொன்றுக்கான செலவீனம் 21லட்சத்திலிருந்து 5 இலட்சம் குறைக்கப்பட்டடு 16 லட்சமாக கணிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்து வீடுகளை மக்கள் விரும்புகின்றார்கள். அவர்களுக்கு வீட்டுத்தேவையென்பது அவசரமாக உள்ளது. ஆகவே அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இடமளிக்க வேண்டும்.

மாறாக அரசியல் காரணங்களுக்காக எதனையும் குழப்பக்கூடாது.எது எவ்வாறாயினும் மக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்காக எமது அரசாங்கம் வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.

http://www.tamilwin.com/property/01/125346

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, tulpen said:

புரியவிலலை முனிவர். யாரைக் குறறம் சாடடுகிறீர்கள். நீங்கள் கூறிய அந்த நிலமை தெரியாதவர்களாக நாட்டை ஆளும் ஜனநாயக அரசாங்கமும். தமிம் மக்கள் பிரதிநிதிகளும் இருககிறார்கள் என்று கூற வருகிறீகளா முனிவர்ஜீ.

இல்லை பாஸ் சனம் அங்க குந்தி இங்க குந்தி  காலைக்கடன் கழிக்க லைனில் நிற்கும் , பெண்கள் குளிக்க இன்னும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் அதற்கு இந்த  டப்பா வீடு கொஞ்சம் மறைப்பாக இருக்கும் தானே என்ற  ஒரு நிலைப்பாடு தான் நான் இந்த வீட்டுத்திட்டத்தை  எதிர்க்கிறேன் தான் ஆனால்  பல் குத்த சிறு துரும்புதான் உதவும் என்பார்கள் அது போல  தான் வீடே இல்லாதவர்களுக்கு இது உதவட்டுமே

நாவற்குழியில் சிங்கள மக்களுக்காக  அமைக்கப்படும்  வீட்டுத்திட்டம் இதை ஏன் நம்ம செம்புகள் கண்டு கொள்ள , தடுக்க வில்லை 

இந்த வீடு சீமெந்து கல்லால் ஆனது  இன்றை பத்திரிகையில் இருந்து 

20170112_133259.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, முனிவர் ஜீ said:

50 தான் சிங்களவருக்கு 200 தமிழருக்கு, 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதோ நாங்கள் வீடில்லாதவர்களுக்கு வீடுகளை வழங்கக்கூடாது என்று கருத்து எழுதுவது போல் பலரும் நினைக்கின்றனர்.
செய்யும் உதவிகளை செவ்வன செய்யுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.

Posted

இரண்டு கேல்விகள் உள்ளது

1. பொருத்து வீடு நல்லதா கூடாதா? 

கூடாது; காரணம் இதற்கு பாவிக்கும் கூரையும், சுவற்றுக்கு பாவிக்கும் பொருற்கள். இவற்றை வல்லுனர்கள் தான் நிர்னகிக்க வேண்டும்

2. மக்கள் இவற்றை வேண்ட வேனுமா இல்லையா?

வீடு இல்லாத மக்கள் தான் முடிவெடுப்பார்கள்; குளப்பாமல், வல்லுனர்களின் கருத்துடன் இந்த வீடுகள் கூடாது என்று மக்களுக்கு சொல்வோம், மக்கள் முடிவு எடுக்கட்டும்/எடுப்பார்கள். அடுத்தது சேரி மக்களாக வாழப்போகிறார்களா என்பது அங்குள்ள மக்களே முடிவெடுக்கட்டும், இது நல்லது இல்லை என்று அவர்களுக்கு சொல்வோம்.

மற்றபடி,
20/30 வருடங்கள் நிண்டுபிடிக்குமா இல்லையா (இந்த பிரச்சனை 20/30 வருடம் போனாலும் முடியாது), பராமரித்தல் (கல்வீடு கட்டிக்குடுத்தா அவுடி காரா கொண்டுவந்து விடப்போறார்கள், வசதி இருந்து கொண்டு வேண்டும் சில பேர்கள் விடுவார்கள்), ஆபத்து (மின்சாரத்தால் வருவது எல்லா விதமான வீட்டிலும் வரலாம், மரம் முறிந்தால் உடையும் 40/50 வருடங்களின் பின்னர் தான் அது நடக்கும், சோலைகளிலா கட்ட போகிறார்கள்-எந்த காணிகளில் கட்டுவது என்று வடமாகண சபைதான் பதில் சொல்ல வேண்டும்)

நாங்கள் ஒன்று செய்யலாம்

யாழில் இருந்து 100 நல்ல உள்ளங்கள், ஏலாத மக்களை அவமானப்படுத்தாமல், வரும் 5 வருடங்களில் CAD $ 5000 வருடத்தக்கு பங்களிப்பு செய்து (எல்லோராலும் முடியும் என நினைக்கிறேன்), அந்த அந்த ஊரில் உள்ள கட்டிடம் கட்டுபவர்களை கொண்டு, NO BIG CONTRACTORS, சிறிய மாற்றங்கள் செய்ய கூடிய ஒரே மாதிரியான வடிவமைப்புடன் (படம் ஒன்று தான் கீற வேண்டி வரும்) கட்டி கொடுப்போம்.

தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்வது யாழின் பொறுப்பு.

100 பேர்கள் 1000 மாக மாறும் இரண்வது வருடத்தில்

கதைக்காமல் செய்வோம். 

இதை எழுதும் போது காசு என்னிட உள்ளதா இல்லையா என்று தடுமாறவில்லை, என்னால் முடியும்.

எழுத்து பிழையிருந்தால், முடிந்தால் சொல்லவும்

பின் குறிப்பு
100*5*5000 = CAD$ 2,500,000 என்று CALCULATE செய்து TENSION ஆகாதேங்கோ

உனை நீ அறி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Knowthyself said:

அடுத்த ஐந்து வருடங்களுக்கு..... எனது  நிலைமை பிள்ளைகளுக்குச் சீதனம் சேர்ப்பதில் தான் உள்ளது. ஐரோப்பா வந்து.... நல்ல நிலைமையில் இருந்தாலும்.... இப்போதும் சீதனம்   என்ற எங்கள் கலாச்சாரம் மாறவில்லை.ஆளுக்கு முப்பது நாற்பது என்று கேட்கின்றார்கள்.tw_blush:
அந்தக் கடமைகள் முடிந்ததும்..... உங்கள் திட்டம் அப்போதும் இருந்தால் சேர்ந்து கொள்கின்றேன்.

அதுவரை இலங்கை அரசின் இந்தத் திட்டம் சரியான வழியில் மக்களை சென்றடைய எங்கள் கோரிக்கைகளை முன்வைப்போம்.

Posted
1 hour ago, வாத்தியார் said:

புரட்சி வெடிக்கட்டும்

80 ஆயிரம் 5 வருடத்தில் உங்களால் சேர்க்க முடியுமானால்

உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் என்றால்,
25 ஆயிரத்தை இதற்கு கொடுத்து, மிகிதி 55 இல் கல்யாணத்தை செய்யலாம், வீட்டுடன், 5 குடுப்பத்தில இருந்து உங்களுக்கு SUPER மருமகன்கள் கிடைக்கலாம், அவர்களுக்கே 55 யும் பகிர்ந்து கொடுக்கலாம்.

மனம் நோகும்படி எழுதவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Knowthyself said:

நாங்கள் ஒன்று செய்யலாம்

யாழில் இருந்து 100 நல்ல உள்ளங்கள், ஏலாத மக்களை அவமானப்படுத்தாமல், வரும் 5 வருடங்களில் CAD $ 5000 வருடத்தக்கு பங்களிப்பு செய்து (எல்லோராலும் முடியும் என நினைக்கிறேன்), அந்த அந்த ஊரில் உள்ள கட்டிடம் கட்டுபவர்களை கொண்டு, NO BIG CONTRACTORS, சிறிய மாற்றங்கள் செய்ய கூடிய ஒரே மாதிரியான வடிவமைப்புடன் (படம் ஒன்று தான் கீற வேண்டி வரும்) கட்டி கொடுப்போம்.

தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்வது யாழின் பொறுப்பு.

100 பேர்கள் 1000 மாக மாறும் இரண்வது வருடத்தில்

கதைக்காமல் செய்வோம். 

இதை எழுதும் போது காசு என்னிட உள்ளதா இல்லையா என்று தடுமாறவில்லை, என்னால் முடியும்.

எழுத்து பிழையிருந்தால், முடிந்தால் சொல்லவும்

பின் குறிப்பு
100*5*5000 = CAD$ 2,500,000 என்று CALCULATE செய்து TENSION ஆகாதேங்கோ

உனை நீ அறி

1-  விசுகு

2-

Posted
53 minutes ago, விசுகு said:

1-  விசுகு

2-  உனை நீ அறி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பொருத்து வீட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்.

30 வருடத்திற்கு முன் இந்த மக்கள் எங்கே வாழ்ந்தார்கள்?போரைக் காரணம் காட்டி இந்த மக்களை விரட்டியடித்த அரசு போர் முடிந்த பின்பும் அவர்களை மீளவும் குடியமர்த்தாமல் எலி வளை என்றாலும் தனி வளை என்று பரந்து வாழ்ந்த மக்களை ஒரு சிறு நிலப் பரப்புக்குள் அடக்கி ஆள நினைப்பது ஏன்?

தமிழ் மக்களின் காணிகளைக் மீளவும் கொடுக்க மறுக்கும் இந்த அரசு சிங்கள மக்களின் வீடுகளில் ஒரு அறையைக் தன்னும் வலுக்கட்டாயமாக தனதாக்க முடியுமா?  
 
இன்று முகாம்களில் வாழும் மக்கள் காய்ந்த மாடு கம்பில் வீழ்ந்தது போல் எது கிடைத்தாலும் சரி என்று தான் சொல்வார்கள்.

1995 இல் இருந்து தமிழரின் கலை கலாச்சாரங்களை தகர்ப்பதற்காக பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கும் அரசு முன்னர் இராணுவத்தை வைத்து பகிரங்கமாகவே நடாத்திக் கொண்டிருந்தது.இன்று போர்முடிந்த பின் இராணுவம் தலையிட்டால் பிரச்சனை என்று ஒரு தமிழனை வைத்தே காய் நகர்த்துகிறது.

இன்று சில நிலப் பரப்புக்குள் இந்த மக்களை வாழ விட்டுவிட்டு நாளை இந்த மக்கள் இருந்த பெரும் நிலங்களை என்ன செய்யப் போகிறார்கள்?அந்த நிலங்களில் நாளை சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றும் போது ஏல்லோரும் மெளனமாகவே இருப்பார்கள்.

சரி நாவற்குழியில் 50 வீடுகள் சிங்களவருக்கும் 200 வீடுகள் தமிழருக்கு எனும் போது சந்தோசப்படுகிறோமே இந்த 50 வீட்டுக்கும் எந்த ஒரு சிங்கள மகனும் தானாக பணம் கொடுத்து வீடு வாங்கி வரவில்லை.அரசாங்கமே  பெரும் பணம் செலவு செய்து கடைந்தெடுத்த ஆட்களை கொண்டு வந்து குடியமர்த்துகிறது.(சிங்கள மக்கள் தாமாகவே செலவு செய்து வீட்டை வாங்கினால் சந்தோசம்).கொஞ்ச
காலத்தில் இந்த மக்களின் தொல்லை தாங்கமுடியாமல் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஒவ்வொருவராக காணாமல் போய்விடுவார்கள்.

ரதி கேட்டது போல் யாழில் எழுதி என்ன நடக்கப் போகிறது? என்ன கொஞ்சம் மிளகாயும் பொல்லுகளும் வைத்திருக்கு விளையாட்டைக் காட்டுவோம் உறவுகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.