Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்!


யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய 'லைக்கா' நிறுவனத்தின் சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை நடத்தும் இலவச வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரான சுபாஷ்கரனின் லைக்கா மொபைல் நிறுவனம் தமிழ் சினிமா துறையிலும் இறங்கியது. ஆனால் சிங்கள ராஜபக்சே குடும்பத்தினரின் தொழில் கூட்டாளியான லைக்கா நிறுவனம் தமிழகத்தில் கால்பதிக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை லைக்கா தயாரித்ததால் அப்படம் வெளியாவதில் கடும் பிரச்சனையும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ந் தேதி இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/srilanka/rajinikanth-attend-lyca-function-at-jaffna-277650.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Nathamuni said:

யாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்!

சர்ச்சைக்குரிய அறக்கட்டளைக்கு விளம்பரம் தேவை.

அதற்கு கூட்டம் தேவை.கூட்டத்திற்கு வியாபாரப்பொருள் ரஜனி தேவை.

சூப்பர் ஸ்டார் அவர்கள் ஈழத்தமிழர் நலன் கருதி எந்திரன் 2 (2.0) இலவசமாக நடித்து கொடுக்கின்றாராம்.tw_tounge_xd:

  • கருத்துக்கள உறவுகள்

0.2 ஆக 2.0 ..? 

ரஜினிக்கு அரசியல் தெரியாது என்று நாம் நினைத்தால் .. !! நாம் அடுத்தவீட்டு சுவற்றில் முட்ட தேவையில்லை .. !! நாமலே குட்டி சுவற்றை கட்டி..  நம்மையே அதில் மோதவிடுவதுதான் ரஜினி ஸ்ரைல் ..!!  இப்போ அவரின்ட படம் ரிலீஸ் ரைம்!  இப்போ காசு கொடுத்து போஸ்டர் அடிக்க சொல்லுவார் .. !!

velam2.jpg

 

"தமிழ்(கன்னட)" நாட்டின் தெய்வமே!! தமிழகத்தை ஆள வா!! இப்படிக்கு "தமிழக மக்கள்" (ஹோல் சேல் ரைட்ஸ்!! )..கபாலவலி (கபாலி) என்ற வெற்றி படத்தை கொடுத்த பிறவு ஏதாவது பரப்பரப்பை கிளப்பித்தானே ஆகணும்..?? அடுத்த படத்திற்கு..! ரெல் மீ..! :cool:

velam.jpg

டிஸ்கி :

உண்மையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா..?

kumari.jpg

 

குமாரி பேபி : போன வாரம்தான் ரெண்டு புரோக்கர் வந்து என்னை பொண்ணு கேட்டாங்க இப்பத்தான் 21 முடிஞ்சு 22 ஆரம்பமாக போகுது ..!அதுக்குள்ள என்ன அவசரம் ??  இன்னும் 2 வருசம் போகட்டும் என்று திருப்பி அனுப்பி போட்டேன்..!

செந்தில் : அது ஏன் மாமா ரெண்டு வருசம் ..?

கவுண்டமணி : சங்கு ஊதறதிற்கு ..!! :cool:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் ரஜனிக்கு என்ன அலுவல்???ரஜனியைக் கூப்பிட்டு லைக்கா தன் அறக்கட்டளைக்கு விளம்பரம் தேடலாம்.
வன்னியில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதை விடுத்து யாழ்ப்பாணத்தில் ஏன்?ரஜனியின் படத்தை லைக்கா தயாரிக்காமல் இருந்து இந்த விழாவுக்கு கூப்பிட்டால் ரஜனி வருவாரா?தமிழ் மக்கள் உரிமைகளைப் பற்றிச் சிந்திக்காமல் சினிமா போதையில் வைத்திருப்பதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத்தூதரகத்தின் கடைக்கண் பார்வை இல்லாமல் இது நடக்காது.வெகு விரைவில் யாழ்ப்பாணத்து மக்கள் ராமரையும் குரங்கையும் தங்கள் குல தெய்வமாக கும்பிடச் செய்வதற்கான அறிகுறிதான் இது,

 

ரஜனிகாந்த் ஒரு நடிகர், உலகில் உள்ள அனேகமான சினிமா கலைஞர்கள் போன்றே பணம் வாங்கி நடிக்கும் நடிகர். அத்துடன் பல இலட்சக்கணக்கான ரசிகர்களை  உலகம் முழுதுமாகக் கொண்டவர். ஆயிரம் வாக்குறுதி கொடுத்து விட்டு அதிகாரத்துக்கு வந்து பல ஆயிரம் கோடி ஊழல் செய்யும் அரசியல்வாதி அல்ல. அவர் யாழ்ப்பாணம் வரவிருப்பின் தாராளமாக வந்து தன் ரசிகர்களை/ ரசிகைகளை மகிழ்விக்கட்டும். அவ் நிகழ்வை லைக்கா நடத்துகின்றது எனில் தாரளமாக நடத்தட்டும். லைக்காவின் திரைப்படங்கள் அனைத்தும் புலம்பெயர் நாடுகளில் திரையிடப்படும் போது அமைதி காத்தவர்கள் இப்பவும் அமைதி காத்துக்கொள்ளுங்கள்.

மரண வியாபாரி மோடி வருவது பிரச்சனை இல்லை. ரப்பர் ஸ்டாம்பாக இருந்த தலையாட்டி பொம்மை அப்துல் கலாம் வருவது பிரச்சனை இல்லை. எண்ணற்ற சாத்திரகாரர்களும் இயேசு ஜீவிக்கின்றவர்களும் வருவது பிரச்சனை இல்லை. அதிக வட்டிக்கு கடன் கொடுத்து மக்களின் நிம்மதியைக் கெடுத்த பல வங்கிகள் / நிதி நிறுவனங்கள் வருவது பிரச்சனை இல்லை. எயார் ரெல் போன்ற யுத்தத்திற்கு நேரடியாக ஆதரவு கொடுத்த நிறுவனங்கள் வருவதும் பிரச்சனை இல்லை. ஆனால் ஈழத்தமிழருக்கு எந்த கெடுதலும் செய்யாத ரஜனிகாந்த் வருவதுதான் பிரச்சனை என்றால் பிரச்சனை உண்மையில் யாருக்கு இருக்கு என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

அத்துடன், நடிகர்கள் வந்தால் யாழ்ப்பாண மக்கள் சினிமா மோகத்துக்குள் சிக்கிவிடுவார்கள் என்று சொல்வதே யாழ்ப்பாண மக்களை மட்டம் தட்டி கேவலப்படுத்தும் கருத்தாகத்தான் பார்க்க முடிகின்றது. கோடை காலம் வந்தாலே போதும் எத்தனை தமிழ் நடிகர்கள்/ நடிகைகள் புலம்பெயர் நாடுகளுக்கு வருகின்றனர். எத்தனை சினிமா நிகழ்ச்சிகள் இங்கு நிகழ்கின்றது. ஆயினும் எவரும் புலம்பெயர் இளைய சமூகம் சினிமா மாயைக்குள் சிக்க போகின்றது என எவரும் சொல்வதில்லை. ஆனால் யாழ்ப்பாண / தாயக மக்கள் மட்டும் சிக்கி விடுவார்கள் என்று சொல்வது அவர்கள் மீது எத்தகைய பார்வையை இவர்கள் சொல்கின்றவர்கள் வைத்து இருக்கினம் எனக் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிசோ சின்னனோ யார் யாழ் வந்தாலும் களுவி ஊத்துவம்.அது ரஜினியாகா இருந்தாலும் சரி செந்திலாக இருந்தாலும் சரி.:unsure:

யாழ். வருகிறார் ரஜினி
 

article_1490247854-Untitled-1.jpgலைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையினால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.  

வவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம், புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக, ஞானம் அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி, யாழ். நகரில் நடைபெறவுள்ளது. விழாவில் நேரில் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு வீடுகளை ரஜினிகாந்த் வழங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

- See more at: http://www.tamilmirror.lk/193588/ய-ழ-வர-க-ற-ர-ரஜ-ன-#sthash.nsyrL876.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி ரஜனி சொந்தச்செலவில் வீடுகள் கட்டி திறப்பு எடுத்துக்குடுக்க போறாரோ இல்லாட்டி நானும் ஈழத்தமிழர் விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறேன் எண்டு மேடைப்பேச்சுக்கு வலு சேர்க்க போறாரோ?

ஏனெண்டால் இப்ப இந்தியாவிலை கொஞ்சப்பேருக்கு ஈழத்தமிழர் எண்ட சொல்லு தேவைப்படுதெல்லே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனிக்கு தமிழகத்தில் சரிந்திருக்கும் தன் செல்வாக்கை நிமிர்த்தவும். ஈழத்தமிழர்களிடையே எந்திரன் 2.0ஐ விளம்பரப்படுத்தவும் இந்த விஜயம் தேவைப்படுகின்றது, கூட்டமைப்புக்கும் நல்லாட்சி அரசிற்க்கு இலங்கையில் பாலும் தேனும் ஓடுகின்றது என வெளி உலகத்திற்க்கு காட்ட இது தேவைப்படுகின்றது.

வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளை ரஜனி எப்படி யாழில் இருந்து திறப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்

எவர்.. எந்த, ரூபத்தில்.... யாழ்ப்பாணத்துக்கு  வந்தாலும்,  தாங்கும்  மண் அது.
யாழ்ப்பாண மண்ணை மிதித்த.... அசின், அப்துல் கலாம் எல்லாம் காணமல் போய்விட்டார்கள்.
அடுத்து... ரசனி,  வந்து..... உலக்கை  தமிழரை காப்பாற்றுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனியின் வருகைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு!

 
1200.jpg
ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணம்
வருகின்றார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில் அந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சரும் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என தெரியவருகின்றது.

தமிழ்த் தேசிய உணர்வுகளை மழுங்கடித்து சினிமா மோகத்திற்குள் ஈழத்தமிழர்களை தள்ளுவதன் ஊடாக அவர்களின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடிப்பதற்கு முதலமைச்சர் ஒருபோதும் துணைபோகமாட்டார் என முதலமைச்சு வட்டாரங்களிலிருந்து தமிழ்கிங்டொத்திற்கு அறியக்கிடைக்கின்றது.

ஐ.நா தீர்மானம்,காணாமல் போனோர் பிரச்சனை,எழுக தமிழ் எழிச்சி ஆகியவற்றை மழுங்கடிக்கும் நோக்குடன் காலம் பார்த்து காத்திருந்த சக்திகள் சினிமாவில் பிரபலமான ஒருவரை அழைப்பதன் ஊடாக தமது கைங்கரியத்தை ஆரம்பித்து வைப்பதற்கு தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ரஜனிக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் இவ்வாறான நகர்வுகளை மோற்கொள்ளும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதையும் இங்கு சுட்டிக்காட் விரும்புகின்றோம்.

ஏற்கனவே இந்த வீடமைப்பு திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் முன்னாள் ஜெனாதிபதி சந்திரிக்காவும் விமானம் மூலம் வவுனியா வந்து அடிக்கல் நாட்டியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடிக்கல் நாட்டியது சந்திரிக்கா என்பதைவிட  இந்த வீட்டுத்திட்டம் வவுனியா சின்னஅடம்பனில் கட்டப்பட்ட வீடுகளை கையளிப்பதற்கு எதற்காக யாழ்ப்பாணத்தில் அந்த நிகழ்வுகளை செய்ய முற்பட்டுள்ளார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேவேளை ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் கடும் எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மே பதிக் ஏழு இயக்கத்தின் தலைவர் திருமுருகள் காந்தி ஆகியோர் பகிரங்கமாக ரஜினி யாழ்ப்பாணம் செல்லக்கூடாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
image-34c03fe21dcb89de46f01a31fa562a96f5
 
IMG_8780.jpg

தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தால் நல்லது என ஈபி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டங்களை பல்வேறு இடங்களில் முன்னெடுத்துள்ள நிலையில், 150 வீடுகளை கையளிப்பதற்காக மாத்திரம் வர வேண்டிய அவசியம் என்ன என்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.tamilkingdom.com/2017/03/CV47.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன்

 

Rajinikanth3

“இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதுடன், இந்திய ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையினால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம், புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக, ஞானம் அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி, யாழ். நகரில் நடைபெறவுள்ளது.

விழாவில் நேரில் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு வீடுகளை ரஜினிகாந்த் வழங்கி வைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வுள்ளனர்.

இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்புடைய நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வதால் இந்த நிகழ்ச்சி மீது அதிக கவனம் குவிந்துள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, இலங்கைக்குச் செல்லவேண்டாம். லைக்காவுடனான தனது நட்பைப் திரைப்படத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும். இன அரசியல் சர்ச்சையில் ரஜினி சிக்கிக்கொள்ள வேண்டாம். ரஜினியை வைத்து லைக்கா நிறுவனம், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை” என்று கூறியுள்ளார். (ஸ)

 

Rajinikanth3

http://www.dailyceylon.com/119741

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

“இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகிந்தவிடம் நீ வந்து போனியே  பண்ணி பயலே அப்ப  எங்கே போனது இவனெல்லாம் ஒரு ...........................tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

ரசினிகாந்த் வவுனியா பயணம் ரத்து !

(தொலைக்காட்சியில் செய்தி ஓடுகிறது)

இலங்கை பயணம் திடீர் ரத்து; ரஜினி முக்கிய வேண்டுகோள்

rajinikanth

இலங்கை பயணத்தை திடீரென ரத்து செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், "நான் அரசியல்வாதி அல்ல; மக்களை மகிழ்விக்கும் கலைஞன்; இந்த பயண விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை பயண விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோர் என் பயணத்தை ரத்து செய்யக் கோரினர். அதை முழுமனதாக ஏற்க முடியாவிட்டாலும், அன்பு வேண்டுகோளை ஏற்கிறேன் என அறிக்கை.

http://www.vikatan.com/news/tamilnadu/84561-rajinikanth-cancels-sri-lanka-trip-after-pressure-from-political-parties.html

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் - ரஜினிகாந்த் வேண்டுகோள்

தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் - ரஜினிகாந்த் வேண்டுகோள்
 
இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு  வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து  இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா  நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான  ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து  வந்தன.

3CBEA399-A566-41D4-848C-6D682DFE26DE_L_s

இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த  வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்  உள்ளிட்ட பலரும் ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

இதுகுறித்த பதில் தெரிவித்துள்ள ரஜினி, எனது நண்பர் திருமாவளவன் தன்னிடம் இலங்கை செல்ல வேண்டாம் என்று  வற்புறுத்தியதாலும், வைகோ நேரிடையாகவே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாலும், வேல்முருகன் தனது  நண்பர் மூலம் தன்னை தொடர்பு கொண்டு அரசியல் சூழ்நிலைகளை விவரித்ததாகவும் இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளேன்  என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கூறிய காரணங்களை என்னால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும்,  அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன்.

22683A3B-CE4A-49B2-9F60-4D9B465B452C_L_s

மேலும் எனது பயணத்தை இலங்கையில் புனிதப்போர் செய்த மக்களை காணும் நோக்கத்தில் செல்ல இருந்தேன். அதே நேரத்தில்  கடலில் மீன்பிடிக்கும் எனது மீனவ சகோதரர்களுடைய உயிர்ப்பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபர் சிறிசேனவுடன் பேச இருந்ததாவும்  தெரிவித்துள்ளார்.

மேலும், நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், அன்பு சகோதரர் திருமாவளவன் சொன்னது போல மக்களை மகிழ்விப்பது  என்னுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த  புனிதப்போர் பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதனை அரசியலாக்க வேண்டாம் என்று அன்புடனும்,  உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/25152849/1075972/Rajnis-decision-about-going-to-Srilanka.vpf

 

 

 

தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக நாசூக்காக சீறிய ரஜினி.. அறிக்கையில் கறார்!

 

 சென்னை: அரசியல்வாதிகளுக்கு கறாராக ஒரு பதிலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு எதிராக முதல் முறையாக ரஜினி சீறியதாகவும் இதை பார்க்க முடியும். இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

 

கறார் அறிக்கை

இதனை ஏற்று தனது பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்வதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஒரு விஷயத்தை ரஜினி மிகவும் கறாறாக கூறியுள்ளார். இனிமேலும் இப்படிப்பட்ட கோரிக்கைகளை என்னிடத்தில் வைத்துவிடாதீர்கள் என்பதுதான் அது.

 

சீற்றம்

சக நண்பரும், நடிகருமான கமல்ஹாசனை போலன்றி, இதுவரை அரசியல்வாதிகளுக்கு எதிராக சீற்றமான கருத்துக்களை முன் வைக்காதவர் ரஜினிகாந்த். ஆனால் இந்த அறிக்கையில் நாசூக்காக இனிமேல் என்னிடம் எதையும் வலியுறுத்த வேண்டாம் என குறிப்பிட்டு குட்டு வைத்துள்ளார் ரஜினி.

 

அன்பு வேண்டுகோள்

அறிக்கையில் உள்ள அந்த வரிகள் இவைதான்: இத்தருணத்தில் மதிப்புக்குரிய எனது அருமை நண்பர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஊடகங்களின் மூலமாகவும், மதிப்புக்குரிய வைகோ அவர்கள் தொலைபேசி மூலமாகவும், மதிப்புக்குரிய வேல்முருகன் அவர்கள் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். 

 

தவிர்க்கிறேன்

அவர்கள் சொன்ன காரணங்களை முழு மனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன். இச் சமயத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

 

அரசியலாக்காதீர்கள்

நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். திருமாவளவன் அவர்களே சொன்னதைப்போல மக்களை மகிழ்விப்பது தான் எனஅனுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து அவர்களை மகிழ வைத்து அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/though-rajini-cancelled-his-visit-srilanka-he-express-displeasure/slider-pf228767-277923.html

 

 

 

என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி

 

 சென்னை: தனது இலங்கைப் பயணத்தின்போது, அதிபர் மைத்திரி பால சிறிசேனாவிடம் தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்துப் பேச விரும்பினேன். ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பால் பயணத்தை ரத்து செய்துள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்வோரின் முகத்திரையைக் கிழித்துள்ளார் ரஜினி.

 

அவரது அறிக்கையின் ஒரு பகுதியில், "இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவைச் சந்திக்க நேரம் கேட்டு, சந்தித்து, ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரைப் பணயம் வைத்து, வேறு எந்தத் தொழிலுமே தெரியாததால் கடலில் போய் மீன் பிடிக்கும் என்னுடைய மீனவ சகோதரர்களின் உயிரைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை சிறைப்பிடித்து வைக்கும் சம்பவங்களை பத்திரிகைகளில் படிக்கும்போது நெஞ்சம் துடிக்கிறது.

அதைப் பற்றி என்னளவில் அவருடன் இதற்கு ஒரு சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணியிருந்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் ஒரு மகத்தான கலைஞன். மக்கள் மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கு உலகறிந்தது. நிச்சயம் அவரது வார்த்தைகளுக்கு இலங்கை அரசு செவிசாய்க்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதைக் கெடுத்த அரசியல்வாதிகள் அம்பலப்பட்டு நிற்கிறார்கள், ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்தானதன் மூலம்.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-s-plan-find-solution-tamil-fishermen-issues-277922.html

  • கருத்துக்கள உறவுகள்

17505347_1375188582542485_75842348422292

  • கருத்துக்கள உறவுகள்

17498753_732750013573452_911411214250637

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி வரவில்லையென்றால் மட்டும் என்ன வித்தியாசமாக நடந்துவிடப்போகின்றது. 2009 இல் ஈழத்தில் நடந்துகொண்டிருந்தது அப்பட்டமான இனப்படுகொலை என்று தெரிந்துகொண்டுதான் இந்த சர்வதேசம் (ஆதாவது ரஜினியைப் பயன்படுத்தி இலங்கையில் பாலும் தேனும் ஓடுகின்றது என்று ஏமாற்ற நினைக்கும் அதே சர்வதேசம்) நடப்பதெல்லாம் நண்மைக்கே என்று கைகட்டிக்கொண்டு இருந்தது.  கண்முன்னே நடந்துகொண்டிருந்த இனக்கொலையை சர்வதேச அமைப்புகளின் சாட்சிகளினூடு தெரிந்துகொண்டு கூட கண்களை இறுக மூடிக்கொண்டிருந்த சர்வதேசம், இன்றைக்கு ரஜனியைக் கொண்டு இலங்கையும் இந்தியாவும் செய்ய நினைத்திருக்கும் நாடகத்தை நம்பி அப்படியயே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நற்சான்றுப் பத்திரம் கொடுத்துவிடும் என்று நம்புவோமாக. 

ரஜனி வரவில்லையென்றால், இலங்கையில் தேனும் பாலும் ஓடுகின்றதென்கிற இலங்கையினதும் இந்தியாவினதும் நாடகத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிவிடுமா? இல்லையென்றால், ஏன் இந்தக் கொதிப்பு?

 

நடந்தவையெல்லாம் சர்வதேசத்தின் அனுசரணையுடன், இந்தியாவின் ஆதரவுடனேயே இலங்கையால் நடாத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதில் யாருக்கு யார் நாடகம் ஆடுவது, யாருக்கு யார் நற்சான்றுப் பத்திரம் கொடுப்பது.

 

லைக்கா ஒரு வியாபார நிறுவனம், ரஜினி ஒரு வியாபாரி. இருவருக்கும் பணம் சேர்க்கும் ஆவல், ஆகவே செய்கிறார்கள். இவர்களின் வியாபார கொண்டாட்டத்தை, இலங்கைத் தமிழர்கள் பார்த்தால் பார்த்துவிட்டுப் போகட்டும், இதில் என்ன வந்தது?

 

 

'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!' தலைவருக்கு ஒரு வேண்டுகோள்.

தலைவாநீ ஈழம் செல்.

உன் வருகைக்காக எம் தமிழினம் அங்கே ஏக்கத்தோடு காத்திருக்கிறது. இலங்கை அரசு தரும் உனக்கான மரியாதையால் நம் மீனவனுக்கும் நல்லகாலம் பிறக்கலாம்.

A fans letter to Rajinikanth

 

வாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னவர் தாங்கள்தானே?

ஈழத்தைக் காண இனியொரு வாய்ப்பு வருமோ வராதோ!

வந்த வாய்ப்பு எவர் தந்திருந்தால் என்ன? பயன்பெறுபவர் நம் தமிழினம்தானே? நீங்கள் செல்லவில்லை என்றால், நீங்கள் அன்று விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் சிங்களனுக்குப் பயந்து செல்லவில்லை என ஒரு கும்பல் கிளம்பத்தான் போகிறது.

உங்கள் ஈழத்துப் பயணம் ஜப்பானிலும் பேசப்படும்... கவனிக்கப்படும்! அவர்களின் ஆதரவும் அந்த மக்களுக்குக் கிடைக்கக் கூடும்.

ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டுகிறேன் உங்களை ஈழம் செல்லக்கூடாது எனத் தடுப்பவர்கள் யார் யார்?

 

அவர்களுக்கு மக்கள் இங்கே தேர்தல்களில் அளிக்கும் வாக்கு என்ன? வரிசை என்ன? மரியாதை என்ன என்பதைக் கவனித்தால் பூஜ்யம் என்ற விடைதான் கிடைக்கும்.

 

தமிழக மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்படும் இந்த இயக்கங்களும், அதன் தலைவர்களும் சொல்வதைத் தாங்கள் மட்டும் ஏன் சட்டைசெய்யவேண்டும்? தமிழகமே எட்டி உதைக்கும் இவர்களின் வார்த்தைகளை எட்டி மிதித்துவிட்டு, தாங்கள் ஈழம் நோக்கி முதல் அடியை எடுத்துவையுங்கள்.

அந்தச் செய்தி எட்டுத்திக்கும் பரவட்டும். உங்களை எதிர்ப்பவர்களுக்கும் உங்கள் புகழின் உச்சம் எத்தகையது, அதன் எல்லை எத்தனை நாடுகள் கடந்து பரந்து விரிந்துள்ளது என்பது நன்றாகவே தெரியும்.

உங்களின் வானுயர்ந்தப் புகழ் எம்மக்களுக்கு, மன்னிக்கவும், உங்கள் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்மை தரும், பல நாடுகளின் கவனத்தை அவர்களை நோக்கி ஈர்க்குமென்றால், அந்தப் புகழை நீங்கள் பயன்படுத்த எவன் உத்தரவுக்கும் செவிசாய்க்கத் தேவையே இல்லை.

இவர்களின் வெட்டிக் கூச்சல் இங்கிருப்பவனுக்கே சோறுபோடாது, ஈழத்திற்கா விடிவைத் தேடித்தரப் போகிறது?

நீங்க கிளம்புங்க... உங்க எண்ணப்படி செய்ங்க. மக்கள் ஆதரவு கண்டிப்பாக உண்டு . மக்கள் வேறு மடையர்கள் வேறு என்பதை உணர்ந்த தாங்கள் நிச்சயமாக இலங்கை செல்லவேண்டும்.

இப்படிக்கு

உங்கள் ரசிகனல்ல மாணவன். -

கார்த்திகேயன் எம்கே #தலைவா_ஈழம்_செல்_எதிர்ப்புகளை_வெல்



Read more at: http://tamil.filmibeat.com/news/a-fans-letter-rajinikanth-045418.html

அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினி இலங்கை பயணம் ரத்து - லைக்கா

ரஜினிகாந்தின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து, லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Lyca

லைக்கா நிறுவனம் சார்பில் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை, அங்குள்ள தமிழர்களுக்கு வழங்குவதற்காக, ரஜினி வருகின்ற ஏப்ரல் 10-ம் தேதி இலங்கை செல்வதாக இருந்தது. இந்நிலையில், இதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் ரஜினி இலங்கை செல்லக் கூடாது என்று கூறி வந்தனர். இதையடுத்து, ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து லைக்கா நிறுவனம் தற்போது, விளக்கமளித்துள்ளது. அதில், 'தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினியின், இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுயலாபத்திற்காக சிலர் பரப்பும் வதந்திகளை, அரசியல்வாதிகள் ஆதரிக்கின்றனர். அரசியல்வாதிகளும் வதந்திகளை பரப்புவதாக சந்தேகம் எழுந்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் எதுவும் செய்யவில்லை. 

எங்களது திட்டத்தில் எந்த நோக்கமும் இல்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் வீடுகளை கட்டிக்கொடுக்கிறோம். ரஜினியின் வருகையின்போது மேலும் பல நலத்திட்டங்களை தொடங்க இருந்தோம். இதில், ரஜினிகாந்துக்கு தர்மசங்கடமான நிலை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சேவுடன் எங்களுக்கு தொழில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்தி. எங்களது தொழில் போட்டியாளர்களும் கட்டுக்கதைகளை பரப்பினர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அரசியல் தலைவர்களை பாராட்டுகிறோம். ஆனால், இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும், ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் திட்டமிட்டபடி, ஏப்ரல் 10-ம் தேதி தமிழர்களுக்கு வீடு வழங்கப்படும்' என்று கூறியுள்ளது.

http://www.vikatan.com/news/world/84595-lyca-slams-tn-politicians-on-rajinikanth-srilanka-visit-canceled-issue.html

இலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்தது சரியா?

 
 

இலங்கையில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் பயனாளிகளுக்கு வழங்கும் விழாவிற்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவுக்கு செல்லவிருந்த ரஜினிகாந்த் தனது பயணத்தை ரத்துசெய்துள்ளதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.

ரஜினிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் வாழ்வுரிமைக் கட்சி, ம.தி.மு.க. மற்றும் பாமக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக ரஜினி தெரிவித்திருந்தை அந்த கட்சிகள் வரவேற்றுள்ளன.

ஆனால், இலங்கையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம், ரஜினியின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்று பிபிசி தமிழிளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ''இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு வழங்கும் விழாவில் பங்கேற்க இவர் ஏன் மறுக்கவேண்டும். இந்த முறை தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு எதிர்காலத்தில் தனது பயணத்தைத் தடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது முறையல்ல,'' என்றார்.

தனது திரையுலக அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளவும், புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தங்களது படங்கள் விற்பனையில் ஏற்படும் பாதிப்பதை தடுக்கவே ரஜினி இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தனபாலசிங்கம் குற்றம் சாட்டுகின்றார்.

''சமீபத்தில் வைரமுத்து இலங்கைக்கு வந்திருந்தார். பல திரையுலகினர் வந்துள்ளனர். இங்கு ரஜினி ஒரு நிகழ்வில் பங்குகொள்வதால் அடுத்த நாள், இலங்கை அரசு, தமிழர்களின் விவகாரத்தில் அனுகூலமான நடவடிக்கை எடுத்துவிட்டதாக உலகில் யாரும் ஏமாந்துபோக மாட்டார்கள்'' என்றார்.

ரஜினிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ஞானி, `எப்போதும் போல ரஜினியின் அரசியல் முடிவுகளில் குழப்பம் இருபப்பத்தைத்தான் இந்தச் செயல் காட்டுகிறது' என்றார்.

வவுனியா விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு

''தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை காட்டிக்கொள்ளவதற்காக இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. ரஜினி தனது நிலையை முன்னிறுத்துவதற்குப் பதிலாக சில காரணங்களை அடுக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை,'' என்றார்.

இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்

ரஜினி தனது கடிதத்தில் குறிப்பிட்டது போல மீனவர் பிரச்சனை , போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து இலங்கை அரசிடம் பேசியிருந்தால் அதைப் பல மக்களும் வரவேற்றிருப்பார்கள் என்றார் ஞானி.

http://www.bbc.com/tamil/india-39393806

  • கருத்துக்கள உறவுகள்

அடேடே ரஜனி அரசியல் பேசவில்லை. அவரது அறிக்கையில் மைத்திரியைச் சந்தித்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக செல்ல விருந்தேன் என்று சொல்கிறாரே. எதிர்ப்பைக் கண்டு அஞ்சி பயணத்தை ரத்துச் செய்தவர் இப்ப மாவீரர் ,மீனவர் பிரச்சினை என்று கதை விடுறார்.கருணாநிதியைப் போல அவரை பக்கத்தில் வைத்து  அரசியல் செய்ய வெளிக்கிட்ட சம்பந்தர் கூட்டமைப்பு பாடு தான் ஏமாற்றம்.

ரஜினிகாந்தின் தாயக பயணத்தை தடுக்கும் குழப்பவாதிகளை எச்சரிக்கும் விடுதலைப் புலிகள்

லைகா பவுண்டேசன் மற்றும் நடிகர் ரஐினிகாந்தின் ஈழத்து வருகை தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

ஞானம் பவுண்டேசன் தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகளையும் நடிகர் ரஐினிகாந்தின் தாயகத்து வருகை பற்றியும் விமர்சிப்பவர்களுக்கு இதுவொரு முற்றுப்புள்ளி.

தாயகத்தை பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரின் அக்கறையின் பிரகாரம் தாயகத்தில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு அரசுக்கு இணையான வகையில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தின் தனிப்பட்ட கவனத்தினால் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று 150 வீடுகளை கட்டிக்கொடுக்கப்படுகின்றது. இந்த வீடுகளை கட்டி முடிப்பதற்கு என்று சுமார் 22 கோடி வரையில் நிதி ஒதுக்கப்பட்டு குறித்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேலைத்திட்டம் எதுவித பிரச்சாரங்களும் இன்றி முன்னெடுக்கப்பட்டு நிறைவுக்கு வருகின்ற நிலையில் அத்திட்டம் தொடர்பில் பலரும் பல சர்ச்சைக்குரிய முறையிலும், வேதனையை ஏற்படுத்தக்கூடிய முறையிலும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறித்த வீட்டுத்திட்டம் கையளிப்பு மற்றும் அந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து நடிகர் ரஐினிகாந்த் சென்று கலந்து கொள்ளுவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் வேலைத்திட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

புலம்பெயர் நாடு சென்றாலும், தாயகத்தில் உள்ள மக்களின் நலனில் அக்கறை கொண்டு தனது தாயகப்பற்றை எதுவித பிரச்சாரங்களும் அற்ற நிலையில் வெளிப்படுத்தும் ஞானம் பவுண்டேசன் முன்மாதிரியான பல வேலைத்திட்டங்களை தாயகத்தில் முன்னெடுத்து வருகின்றது.

தாயகத்திலிருந்தும் சரி, தமிழகத்தில் இருந்தும் சரி, பலவகையான விமர்சனசங்கள் முன்வைக்கப்பட்டு ஞானம் பவுண்டேசன் இன்று தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருள் ஆகிவிட்டது. தாயகத்தில் அரசு செய்து கொடுத்திருக்க வேண்டிய வேலைத்திட்டங்களை இந்திய அரசோ அன்றி தாயகத்து தமிழ் மக்கள் மீது அன்பு வைத்திருப்பதாக காட்டிக்கொள்ளும் தாயகத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியுமோ அன்றி தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு கட்சியுமோ முன்னெடுக்காத நிலையில், ஞானம் பவுண்டேசன் முன்னெடுத்துள்ளது. எனவே இந்த சிறந்த பணியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம்.

ஞானம் பவுண்டேசன் மீதும் அந்த நிறுவனத்தின் தொடர்பால் நடிகர் ரஐினிகாந்த் தாயகம் செல்வ பற்றியும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் தங்களின் குற்றச்சாட்டை முன்வைக்க எதுவித முகாந்திரமும் இல்லாத நிலையில் தங்களின் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பொருத்தமற்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தாயகத்தில் எங்கள் உறவுகள் பொருத்தமற்ற வீட்டு வசதிகள் இன்றி கடுமையான இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகையில், ஞானம் பவுண்டேசன் மீது முன்வைக்கும் இம்மாதிரியாக விமர்சனங்கள் இனத்தின் மீது பற்று வைத்துள்ள ஒரு சிறந்த சமூக சேவக நிறுவனம் மீது சேறு அள்ளிப்பூசும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இன்று ஞானம் பவுண்டேசன் மீது குற்றம் கூறும் ஒவ்வொரு நபர்களும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இம்மக்களுக்கு என்று எவ்வகையான நல்ல காரியங்களை செய்துள்ளனர் என்றும், எவ்வளவு தூரம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர் என்றும் சுய ஆய்வு செய்து கொள்ளல் சிறப்பானதாக இருக்கும்.

இது தொடர்பில் தமிழகத்தில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையவை அல்ல என்றும் நாம் எடுத்துரைக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரினால் தமிழ் மக்களுக்கு என்று எதுவித முன்னோடியான வேலைத்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத தொல் திருமாவளவன் எதன் அடிப்படையில் ஞானம் பவுண்டேசன் மீது தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார் என்றும் நாம் ஐயம் எழுப்பியுள்ளோம்.

!தமிழின விடுதலை மீது பற்று வைத்துள்ளவர் என்று தமிழ் மக்களுக்கு காட்டிக்கொள்ளும் திரு தொல் திருமாவளவன், தமிழ் மக்களுக்கும் அன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் எதுவித உதவிகளும் செய்ததில்லை. மேலும் திருமாவளவன் மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை முடக்கும் வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கைகள் விடுவதனையும், முற்றாக தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

விசேட அணி

தமிழீழ விடுதலைப்புலிகள்

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/statements/01/140419?ref=lankasri-home-dekstop

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா விசேட அணிக்கெல்லாம் Letter Head தேவைப்படுகிறது.

விசேட அணி அல்லிராசா சுபாசுக்கும், ஞானம் பவுன்டேசனுக்கும் ரசனிக்கும் கழுவுறதை விட்டுட்டு அங்குள்ள போராளிகளுக்கு கழுவலாமே... !

சர்வதேச அளவில் அறியப்பட்ட உந்த ஞானம் பவுண்டேசனை ஒரு ஆயிரம் பேருக்கு தெரியுமா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.