Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் சி.வி’

Featured Replies

’குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் சி.வி’
 Comments - 0 Views - 20

தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி, மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அவர், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு, இன்று (16) அவர் அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, "இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்தமை, ஊழல், பண மோசடி, மற்றும் இலஞ்சத்துக்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடே ஆகும். முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த போது, அதற்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர்.  

தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் "அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டார்" என்று சொன்னதை எவரும் மறந்திருக்க முடியாது.

எமது வற்புறுத்தலின் காரணமாகத் தான் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த வேளையிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசனுக்கு எதிராக மட்டுமே இருந்தன. அப்படியிருந்தும் அவரை பாதுகாக்கும் முகமாகவே எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக் குழுவினரை முதலமைச்சரே தனியாக தேர்ந்தெடுத்து நியமித்தார். இறுதியில் ஐங்கரநேசன் மட்டுமே ஊழல் பண மோசடி மற்றும் இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார்.

அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்த குழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது. மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்த போதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார். 2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின் தான் மாகாண சபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார்.

இதன் போதெல்லாம் ஊழலையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் எடுத்த இம்முயற்சிகளுக்கெதிராக எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கெதிரான நடவிடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் அதில் நாம் தலையிட மாட்டோம் என்றும் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம். 

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றவாளிகளை காப்பாற்றும் தனது முயற்சியை இவ்வேளையில் வேறு விதமாக முன்னெடுத்தார். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்த்து அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்கம் செய்யும் தனது யோசனையை முன் வைத்தார்.

குற்றவாளிகளையும் குற்றங்களிலிருந்து விடிவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வதென்பது குற்றங்களை நீர்த்துப் போகப்பண்ணி குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும். தனது இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தவிர்த்து மற்றைய கட்சித் தலைத்தலைவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தியிருந்தார். இதை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் வினவிய பின்னர் தான் காலம் தாழ்த்தி சேனாதிராஜாவுடனும் பேசினார். ஊழலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு கூறியிருந்தார்.

நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது. இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்  இரா. சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார்.

ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக குற்றவாளிகளாக க் காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்று, இரா. சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் கூறிய கருத்துக்கு மறு நாள் மாகாண சபை உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் அறிந்த பின் பதிலளிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் அப்படிச் செய்யாமல் அடுத்த நாள் மாகாண சபையிலே தன்னுடைய தீர்ப்பை வழங்கினார்.

நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது. அதனால் தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம். ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்தத் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இதுவே எமது உண்மையான நிலைப்பாடாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/குற்றவாளிகளைக்-காப்பாற்ற-முயல்கிறார்-சி-வி/150-198769

  • Replies 55
  • Views 3.1k
  • Created
  • Last Reply

சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது?

குற்றவாளிகள் நால்வரையும் காப்பாற்றும் முயற்சியையே சுமந்திரன் - மாவை - சம்பந்தன் - சிவஞானம் - ஸ்ரீதரன் கும்பல் செய்தது.

நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றே சம்பந்தன் முதலமைச்சரிடம் கேட்டதாக முதலமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டார்.

மேலும் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய இருவரையும் மேலதிக விசாரணைகளுக்கு வசதியாக ஓய்வில் செல்லும்படி கேட்கும் உரிமை முதலமைச்சருக்கு உண்டு!

ஊழலுக்கு எதிராக செயல்படுவது உண்மை என்றால் அந்த ௨ அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அவர்கள் பதவி விலகும்படி சுமந்திரன் - மாவை - சம்பந்தன் - சிவஞானம் - ஸ்ரீதரன் கும்பல் கேட்டுக்கொள்ளாதது ஏனோ?

எனவே சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது!

சரி சுமந்திரன் சொல்வது உண்மை என்றால், இப்போதாவது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மீது சுமந்திரன் - மாவை - சம்பந்தன் - சிவஞானம் - ஸ்ரீதரன் கும்பல் என்ன நடவடிக்கை எடுக்க சொல்கிறார்கள்? ஏன் அதுபற்றியும் ஒரு அறிக்கைகூட வெளிவரவில்லை?

எனவே சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது!

சரி சுமந்திரன் சொல்வது உண்மை என்றால், ஊழல் குற்றவாளிகளை பதவிநீக்கம் செய்யும்படி கோரி பிரேரணை சமர்பிக்காமல், முதலமைச்சரை நீக்கும்படி அந்த ஊழல் குற்றவாளிகளுடன் சேர்ந்து ஆளுநரிடம் கோரியது எதற்காக?

எனவே சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

சரி சுமந்திரன் சொல்வது உண்மை என்றால், ஊழல் குற்றவாளிகளை பதவிநீக்கம் செய்யும்படி கோரி பிரேரணை சமர்பிக்காமல், முதலமைச்சரை நீக்கும்படி அந்த ஊழல் குற்றவாளிகளுடன் சேர்ந்து ஆளுநரிடம் கோரியது எதற்காக?

இந்த கூட்டம்விக்கியர எதிர்க்க எதிர்க்க அந்தாள் அசுரபலம் கூடிக்கொண்டு போவதும் நன்மைக்கே தமிழர்களுக்கு . 

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

குற்றம் காணப்பட்ட அமைச்சர்களைப் பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சி - சுமந்திரன்

சுமந்திரன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகுற்றம் காணப்பட்ட அமைச்சர்களைப் பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சி - சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வட மகாண சபை உறுப்பினர்கள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ''ஊழல், பண மோசடி மற்றும் லஞ்சத்துக்கு எதிரான தீவிரமான செயற்பாடே ஆகும்'', என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.

வட மாகாண சபையில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசில் நிலவும் நெருக்கடி தொடர்பாக சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை தாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு, ``ஆதாரமற்றதும், உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்`` என்று கூறியிருக்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தபோது, முதல்வர் விக்னேஸ்வரன் ``தனக்கு நெருக்கமானவரான`` ஐங்கரநேசனுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டார் என்று சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

''அறிக்கை மறைப்பு''

அதன் பிறகு அவையில் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி, ஏகமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள் என்று கூறும் சுமந்திரன், அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அடுத்த நாளே, ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும், ``அவர் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்`` என்றும் முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.

குற்றச்சாட்டுகள் ஐங்கரநேசனுக்கு எதிராகவே இருந்த அந்த நிலையில், எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது என்று கூறிய சுமந்திரன், இது ஐங்கரநேசனை பாதுகாக்குமுகமாகத்தான் என்று குற்றம் சாட்டினார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-40300309

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் துள்ளிக் குதிப்பதை பார்க்க,  விக்கினேஸ்வரன் அவர்களுக்கெதிராக சதியில் சுமந்திரன் தான் முன்னிலையில் இருக்கின்றார் என்பது சாதாரண மக்களுக்கே விளங்கும்.

முதலமைச்சருக்கான மக்களின் ஆதரவையும் அவரின் அரசியல் வளர்ச்சியையும் கண்டு  பொறாமை கொண்டு செய்யப்பட்ட சதியே இது என்பதும் மக்களுக்குத் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த போது, அதற்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர்.  

தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் "அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டார்" என்று சொன்னதை எவரும் மறந்திருக்க முடியாது.

அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

முற்று முழுதான உண்மை

ஐங்கரநேசனை பற்றி எவ்வளவு காலமாக
செய்தி வருகின்றது
சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரம் தொடக்கம்
பல பல விடயங்களில்
இதுவரை இவர் செய்த ஊழல் பற்றி
பல தகவல்கள் வந்தும்
விக்கி ஐயா வாயை மூடிக்கொண்டு
தான் இருந்தவர்.

பாலியல் லஞ்சம்
பெற்றார்கள் என்று குற்றம் சாடடப்படடவர்கள்
மீது கூட எந்தவித நடவடிக்கையும்
எடுக்காமல் மவுனம் காத்தவர்
விக்கி ஐயா

5 hours ago, நவீனன் said:
 
இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்த குழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது. மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்த போதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார். 2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின் தான் மாகாண சபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார்.

முற்று முழுதான உண்மை.

உதயன் இந்த விடயத்தை பிரசுரித்து இருக்கா விட்டால்

விக்கி ஐயா  விசாரணை குழுவை கூட அமைத்து

இருக்க மாட்டார்

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சுமந்திரன் துள்ளிக் குதிப்பதை பார்க்க,  விக்கினேஸ்வரன் அவர்களுக்கெதிராக சதியில் சுமந்திரன் தான் முன்னிலையில் இருக்கின்றார் என்பது சாதாரண மக்களுக்கே விளங்கும்.

முதலமைச்சருக்கான மக்களின் ஆதரவையும் அவரின் அரசியல் வளர்ச்சியையும் கண்டு  பொறாமை கொண்டு செய்யப்பட்ட சதியே இது என்பதும் மக்களுக்குத் தெரியும்

இதனோடு இவர்களின் சந்தர்பாவாத அரசியலுக்கும் இடையூறாக இருப்பதும் ஒரு கரணியமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:
 
குற்றவாளிகளையும் குற்றங்களிலிருந்து விடிவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வதென்பது குற்றங்களை நீர்த்துப் போகப்பண்ணி குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும். .

நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது. இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்  இரா. சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார்.

நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது. அதனால் தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம். ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்தத் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர்.

சுமந்திரன் சரியாகத்தானே

சொல்கின்றார்.
சுய சிந்தனை என்ற ஒன்று

இருக்கின்றவர்களுக்கு
இக்  கேள்விகலில் உள்ள நியாயத்தன்மை புரியும்

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொல்வதெல்லாம் சுத்தப் பொய். விக்கிக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவைக்கண்டு நிலைகுலைந்துபோன சுமந்திரன் குதியாய் குதிக்கிறார். விக்கியருக்கு ஐங்கரநேசன் வேண்டப்பட்டவர் நெருக்கமானவர் அதனால் விக்கியர் அவரை காப்பற்ற விசாரணை அறிக்கையை மறைத்து வைத்தார் என்பதில் எதுவித நியாமுமில்லை. வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய நடந்த விசாரணை ஒன்றின் அறிக்கையை அப்படி மறைத்து வைப்பது இலகுவான காரியமில்லை.

சுமந்திரன் குறிப்பிடுவதுபோல் விக்கி ஒரு மோசடியான நபர் என்றால் விக்கியர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தானே உருவாக்கிய விசாரணைக்குழு தானே என்று அவர்கள் மட்டத்திலேயே தனக்கு வேண்டியபடி அறிக்கையை தயாரிக்கும்படி செய்திருப்பார். மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர் சுமந்திரன் இங்கு எவருக்கும் காதுகுத்தவேண்டியதில்லை. ஐங்கரநேசன் விக்கிக்கு வேண்டப்பட்டவரென்றால் சுமந்திரன் திரு சம்பந்தனுக்கு எப்படிப் பட்ட நெருக்கமோ? நீங்க சொல்றீங்களா இல்லை நானே சொல்லவா?

குற்றவாளிகள் என இனங்காணப்பட்டவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு விக்கி ஐயாவுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று சொல்லிவிட்டு பின்னர் அவரின் செயல்பாடுகளில் தலையிட்டு குறைசொல்வது எப்படி நியாயமாகும். நாம் இங்கு ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். விக்கியவர்கள் குற்றவாளியாக காணப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்ககமுடியும் ஆனால் அவர்கள் செய்த குற்றத்திற்கு தீர்ப்பு வழங்கமுடியாது. சுமந்திரனின் நிலைப்பாடு உடனடியாக குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதாகும். சுமந்திரனின் அறிக்கையில் இருந்து புரிவது எனனவென்றால் விக்கிக்கு வைக்கப்பட்ட செக்மேட்டில் சுமந்திரனுக்கும் பங்குண்டு. விக்கியர் எங்கு திரும்பினாலும் வெட்டக்கூடியதாக செக்மேட் வைக்கப்பட்டிருந்ததும். புரிகிறது.

விக்கியர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தாலும் அல்லது அவர்களை தப்பிக்கவைத்தாலும் இரண்டுக்கும் விக்கியரை பொறுப்பாளியாக்கி புகுந்து விளையாடி தங்கள் விரோதத்தை தீர்த்து விக்கியரை வீட்டுக்கனுப்ப திட்டம் தீட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது. ஆனால் இவங்களெல்லாம் கிட்னியை பாவிச்சுதான் யோசிப்பாங்கள் போல இருக்கு. அதனால்தான் மக்கள் சக்தியை கணக்கெ டுக்க தவறிவிட்டார்கள். நாள் போக்கில் விக்கியர் உயர்ந்து படிப்படியாக சுமந்திரனுக்கு மட்டுமல்ல சம்பந்தனின் அரசியல் இருப்பையும் கேள்விக்குறியாக்குவார் என்பது திண்ணம். மக்கள் ஆதரவு எப்பவும் நம்ப பெரிய "தம்பி"க்குத்தான் தெரிஞ்சுக்கிங்க.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

சுமந்திரன் சரியாகத்தானே

சொல்கின்றார்.
சுய சிந்தனை என்ற ஒன்று

இருக்கின்றவர்களுக்கு
இக்  கேள்விகலில் உள்ள நியாயத்தன்மை புரியும்

அப்படியா?? அப்ப உங்களுக்கு எப்படி புரிஞ்சது? நீங்கள் சுமந்திரண்ட செம்புத்தூக்கி என்பது தெளிவா தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

19059761_1966027213644172_78712261635710

19106058_1966027210310839_13012633424585

2 hours ago, வைரவன் said:

சுமந்திரன் சரியாகத்தானே

சொல்கின்றார்.
சுய சிந்தனை என்ற ஒன்று

இருக்கின்றவர்களுக்கு
இக்  கேள்விகலில் உள்ள நியாயத்தன்மை புரியும்

காசுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு வேலிதாண்டிய சுமந்திரன், கதிர்காமர் போன்றவர்களின் பரம்பரைகளுக்கு என்ன சுயசிந்தனை  இருக்கப் போகுது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

காசுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு வேலிதாண்டிய சுமந்திரன், கதிர்காமர் போன்றவர்களின் பரம்பரைகளுக்கு என்ன சுயசிந்தனை  இருக்கப் போகுது?

அப்படி வேலி தாண்டி
உங்கள் வீட்டுக்குள்ளும்
உங்கள் பரம்பரையின் வீட்டுக்குள்ளும்
வந்தமையால் உங்களுக்கு
தெரிந்து இருக்கு.

தகவலுக்கு நன்றி

1 hour ago, Eppothum Thamizhan said:

அப்படியா?? அப்ப உங்களுக்கு எப்படி புரிஞ்சது? நீங்கள் சுமந்திரண்ட செம்புத்தூக்கி என்பது தெளிவா தெரியுது.

ஊழலுக்கு எதிராக
ஒன்றும் செய்யாமல்
துணை நின்று
சம்பந்தப்பட்டவர்களுக்கு
எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பின்
வேறு வழியின்றி
விசாரணை குழு அமைச்ச்சு
அதில் வந்த அறிக்கையையும் மறைச்சு
பிறகு உதயன் வெளியிட்ட பின்
குற்றம் சாட்டப்படாதவர்கள் மீதும்
நடவடிக்கை எடுக்கும் விக்கி ஐயாவுக்கே
நீங்கள் சொம்பு தூக்க வெட்கப்படாத போது
நான் சம் /சும்  இற்கு தூக்குவதை இட்டு
கவலைப்பட போவதில்லை ராசா

8 minutes ago, வைரவன் said:

அப்படி வேலி தாண்டி
உங்கள் வீட்டுக்குள்ளும்
உங்கள் பரம்பரையின் வீட்டுக்குள்ளும்
வந்தமையால் உங்களுக்கு
தெரிந்து இருக்கு.

தகவலுக்கு நன்றி

சங்கதியை அரைகுறையாக விளங்கிக்கொள்வதுவும் காசுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு வேலிதாண்டிய சுமந்திரன், கதிர்காமர் போன்றவர்களின் பரம்பரைகளுக்கு இருக்கும் விலைபோன சுயசிந்தனைப் போன்று தான் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மக்களுக்காக முதலமைச்சர் இவ்வளவு காலம் செய்த நல்லவையை பட்டியலிடுங்கோ பார்ப்போம்...இங்கு கண பேர் சுமத்திரன் மேல் உள்ள கடுப்பினால் சீவியை தூக்கி தலையில் வைக்கினம்.
 
ஒரு முன்னால் நீதிபதி தன்னோடு லஞசம் வாங்குபவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார் என்டால் அவரது நீதிபதியாக இருக்கும் போது எவ்வளவு விளையாட்டு விட்டு இருப்பார்....நிமலன் யார்? இவரது இரத்த உறவு தானே!...நிமலனை அவுசில் இருந்து கூப்பிட்டு உந்தப் பதவியை குடுத்தது யார் சுமத்திரனா?
 
வடகு மாகண சபைக்கு என்டு வந்து நிதியில் அரைவாசியை இவரும் இவரோடு சேர்ந்தவர்ளும் அடிக்க மிச்ச நிதி திரும்பி போய் விட்டது...மற்றவர்களை மீறி இவரால் செயற்பட முடியா விட்டால் பிறகு முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்...படிக்காத பிள்ளையானைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டும்.
 
பதவிக்காகவும்,காசுக்காகவும் தான் உந்த பதவியில் இருக்கிறார்...உவரை உந்தப் பதவியில் அமர்த்தின ச்ம்மந்தனையும்,கூட்டமைப்பையும் பிஞ்ச செருப்பாலே அடிக்கோனும்.tw_angry:
 
  • கருத்துக்கள உறவுகள்

ரதி உந்த பிஞ்ச செருப்பால அடிப்பது கொஞ்சம் ஓவரா தெரியல்லியா... :)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வைரவன் said:

சுமந்திரன் சரியாகத்தானே

சொல்கின்றார்.
சுய சிந்தனை என்ற ஒன்று

இருக்கின்றவர்களுக்கு
இக்  கேள்விகலில் உள்ள நியாயத்தன்மை புரியும்

அதுமட்டுமா புரியுது ............??

என்ன என்னவோ எல்லாம் புரியுது.

நாய் ஏன் வாவ் ... வாவ் என்கிறது 
பூனை ஏன் மியாவ் .... மியாவ்  என்கிறது 
என்பதெல்லாம் 
அவற்றை பிராணிகளாக வைத்திருக்கும் தமிழர்களுக்கு புரியாதா என்ன ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:
வடக்கு மக்களுக்காக முதலமைச்சர் இவ்வளவு காலம் செய்த நல்லவையை பட்டியலிடுங்கோ பார்ப்போம்...இங்கு கண பேர் சுமத்திரன் மேல் உள்ள கடுப்பினால் சீவியை தூக்கி தலையில் வைக்கினம்.
 
ஒரு முன்னால் நீதிபதி தன்னோடு லஞசம் வாங்குபவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார் என்டால் அவரது நீதிபதியாக இருக்கும் போது எவ்வளவு விளையாட்டு விட்டு இருப்பார்....நிமலன் யார்? இவரது இரத்த உறவு தானே!...நிமலனை அவுசில் இருந்து கூப்பிட்டு உந்தப் பதவியை குடுத்தது யார் சுமத்திரனா?
 
வடகு மாகண சபைக்கு என்டு வந்து நிதியில் அரைவாசியை இவரும் இவரோடு சேர்ந்தவர்ளும் அடிக்க மிச்ச நிதி திரும்பி போய் விட்டது...மற்றவர்களை மீறி இவரால் செயற்பட முடியா விட்டால் பிறகு முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்...படிக்காத பிள்ளையானைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டும்.
 
பதவிக்காகவும்,காசுக்காகவும் தான் உந்த பதவியில் இருக்கிறார்...உவரை உந்தப் பதவியில் அமர்த்தின ச்ம்மந்தனையும்,கூட்டமைப்பையும் பிஞ்ச செருப்பாலே அடிக்கோனும்.tw_angry:
 
சுதந்திரத்துக்கு போராட என்று இளைஞர்கள் புறப்பட்ட போது ......
கருணா கே பி போன்றவர்களும் வெளிக்கிடவில்லையா ?

முதலமைச்சர் என்ன செய்யவது என்றாலும் பதவி 
என்று வரும்போது சுத்த சுயலவாதியான யாழ்ப்பாண தமிழனில் 
ஒருவரைதானே நியமிக்க முடியும்.
பூதமா ? பேயா ? என்ற நிலைமைதான் உள்ள ஒரே தெரிவு.

அப்படி இல்லை என்று யாரும் நல்லவர்கள் வந்தால் 
மக்கள் வாக்கு போடுவதுமில்லை இது உலகம் பூரா 
உள்ள நிலைமை.

மக்கள் வாக்கு போட்டு அனுப்புவர்க்ளுக்குள்தான் தேர்வு செய்ய முடியும். 
அப்பிடி இப்படி வரும்போது மேலான அழுத்தக்ங்கள் கூடும்போதுதான் 
ஒரு முடிவை எட்ட முடியும் .... 

இதை பற்றி சுமந்திரன் அளப்பதுதான் வான வேடிக்கை 
தமிழர்களை விலைபேசி விபச்சாரிகளாக ஆக்கியதை தவிர 
இந்த சாம் சும் கும்மல் 
தமிழர்களுக்கு செய்தது என்ன ?

அனந்தியை கடசியைவிட்டு கடைசியவர்கள் .....
மற்றவர்கள் மேல் எடுத்த நடவடிக்கை என்ன ?
கூடடமைப்பு தலைவர் கத்திரிக்காய் புடலங்காய் எல்லாம் 
இவர்கள்தானே ???.

இப்போது சாதாரண ஒரு யாழ்ப்பாண தமிழனின் எதிர்பார்ப்பு 
சி.வீ ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை 
சும்மா இருந்தாலே போதும் 
இந்த நாதாரி கூட்ட்டம் அங்கால பக்கம் வராமல் இருந்தாலே போதும் என்பதுதான். 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:
வடக்கு மக்களுக்காக முதலமைச்சர் இவ்வளவு காலம் செய்த நல்லவையை பட்டியலிடுங்கோ பார்ப்போம்...இங்கு கண பேர் சுமத்திரன் மேல் உள்ள கடுப்பினால் சீவியை தூக்கி தலையில் வைக்கினம்.
 
ஒரு முன்னால் நீதிபதி தன்னோடு லஞசம் வாங்குபவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார் என்டால் அவரது நீதிபதியாக இருக்கும் போது எவ்வளவு விளையாட்டு விட்டு இருப்பார்....நிமலன் யார்? இவரது இரத்த உறவு தானே!...நிமலனை அவுசில் இருந்து கூப்பிட்டு உந்தப் பதவியை குடுத்தது யார் சுமத்திரனா?
 
வடகு மாகண சபைக்கு என்டு வந்து நிதியில் அரைவாசியை இவரும் இவரோடு சேர்ந்தவர்ளும் அடிக்க மிச்ச நிதி திரும்பி போய் விட்டது...மற்றவர்களை மீறி இவரால் செயற்பட முடியா விட்டால் பிறகு முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்...படிக்காத பிள்ளையானைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டும்.
 
பதவிக்காகவும்,காசுக்காகவும் தான் உந்த பதவியில் இருக்கிறார்...உவரை உந்தப் பதவியில் அமர்த்தின ச்ம்மந்தனையும்,கூட்டமைப்பையும் பிஞ்ச செருப்பாலே அடிக்கோனும்.tw_angry:
 
அந்தப் படிக்காத ( அரசியல் ) மேதை இப்போது எங்கே அக்கோய்......?tw_blush:

சரி அதை விடுங்கள் அரசியலில் படித்தவன் படிக்காதவன் என்பதற்கப்பால் சாணக்கியம் தான் தேவை. நிச்சயமாக சம் சும் கும்பலின் சாணக்கியத்தாலோ பிள்ளையானின் சாணக்கியத்தாலோ
எதுவும் ஆகாது என்பது ஏற்கனவே அறிந்த விடயம்.
விக்கி அய்யாவின் சாணக்கியத்தினால் மட்டுமே தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றது.

அது தான் இன்றைய தேவையும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 நல்ல சுப்பர் கருத்தா இருக்கே நன்றி வணக்கம் தானே அடுத்த கருத்து....:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிக்கலான நேரத்தில் ஓடி திரிவதால் 
ஐயா சுமத்ந்திரன் அவர்கள் கொஞ்சமாவது இளைத்திருப்பார் 
இந்த வயதில் அவர் உடம்பு தாங்குமா ?
ஒருவார விடுமுறை கொடுத்து 
சுமந்திரன் ஐயாவை அவுஸுக்கும் 
மாவை ஐயாவை பிரான்ஸுக்கு சென்று வரும்படி 
மக்கள் அறிவுரை கூறி அவர்களை பாதுகாக்கா  வேண்டியது 
அவர்கள் கடின உழைப்பால் வாழ்வு பெற்ற தமிழர்களின் கடமையாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாத்தியார் said:

அந்தப் படிக்காத ( அரசியல் ) மேதை இப்போது எங்கே அக்கோய்......?tw_blush:

சரி அதை விடுங்கள் அரசியலில் படித்தவன் படிக்காதவன் என்பதற்கப்பால் சாணக்கியம் தான் தேவை. நிச்சயமாக சம் சும் கும்பலின் சாணக்கியத்தாலோ பிள்ளையானின் சாணக்கியத்தாலோ
எதுவும் ஆகாது என்பது ஏற்கனவே அறிந்த விடயம்.
விக்கி அய்யாவின் சாணக்கியத்தினால் மட்டுமே தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றது.

அது தான் இன்றைய தேவையும் கூட.

வாத்தியார்,பிள்ளையானை எதற்கு தூக்கி உள்ளுக்குள்ள தூக்கிப் போட்டவர்கள் என்று உங்களுக்கு விளங்கி இருந்தால் இந்தக் கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள்.

17 hours ago, putthan said:

 நல்ல சுப்பர் கருத்தா இருக்கே நன்றி வணக்கம் தானே அடுத்த கருத்து....:10_wink:

புத்தன்,நான் எழுதின கருத்துக்கு ஒழுங்கான பதில் கருத்து எழுதாமல் உங்களை மாதிரி விதண்டவாதமாய் கருத்தை எழுதினால் நன்றி,வணக்கம் தான் சொல்லிட்டுப் போக முடியும்<_<

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

புத்தன்,நான் எழுதின கருத்துக்கு ஒழுங்கான பதில் கருத்து எழுதாமல் உங்களை மாதிரி விதண்டவாதமாய் கருத்தை எழுதினால் நன்றி,வணக்கம் தான் சொல்லிட்டுப் போக முடியும்<_<

ரதி நீங்கள் தான் சகல திரிகளிலும் விதண்டாவாதகருத்துக்களை வைக்கிங்கின்றீர்களோ என சில சம்யங்களில் எண்ணத் தோன்றுகிறது  ..நான் யாழ்களத்தில் கிட்டதட்ட பத்து வருடமாக கிறுக்கிகொண்டிருக்கிறேன்  .நீங்கள் எதிர் கருத்து வைக்க வேண்டும் என்றரீதியில் சகல  கருத்துக்களை வைப்பது போன்று என்க்கு படுகிறது.அதாவது 80:20 என்று சொல்லுவார்களே அதில் நீங்கள் வைப்பவை யாவும் 20 வீத   கருத்தாளர்களின்  சார்பான வையாகவுள்ளது என்பது எனது தனிப்பட்ட அவதானிப்பு மட்டுமே ..:unsure:

வேறு ஒன்றுமில்லை ...:10_wink:

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.