Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை

Featured Replies

பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை

பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை

பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள் இறக்­கு­வ­தற்கு தடை விதிக்­கும் சட்­டத் திருத்­தம் ஒன்றை அறி­வித்­தி­ருக்­கி­றது அரசு.

இது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தல் கடந்த 20ஆம் திகதி விடுக்­கப்­பட்­டி­ருக்கி­றது.

உத்­தேச புதிய சட்­டத்­தின்­படி கித்­துள் மரம் தவிர்ந்த வேறு எந்­த­வொரு மரத்­தில் இருந்­தும் கள் சீவு­வதோ, எடுப்­பதோ, இறக்­கு­வதோ தடை செய்­யப்­ப­டு­கி­றது.

இந்­தச் சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் வடக்­கில் மட்­டும் சீவல் தொழிலை நம்­பி­யி­ருக்­கும் 12 ஆயி­ரம் குடும்­பங்­கள் பாதிக்­கப்­ப­டும் என்று பனை, தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் வலி­கா­மம் கொத்­த­ணி­யின் தலை­வர் எஸ்.செல்­வ­ராசா தெரி­வித்­தார்.

மது­வ­ரித் திருத்­தச் சட்ட வரைவு என்ற வகை­யில் இந்­தத் திருத்­தம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்­னர் கித்­துள், பனை, தென்னை தவிர்ந்த வேறு எந்த மரத்­தில் இருந்­தும் கள்ளு சீவு­வது, எடுப்­பது, இறக்­கு­வது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது என்று இருந்­தது.

இப்­போது பனை மற்­றும் தென்னை மரங்­க­ளின் பெயர்­கள் அதி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தச் சட்­டத் திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்­டால் அடுத்த வரு­டம் ஜன­வரி மாதம் முதல் அது நடை­மு­றைக்­கு­வ­ரும்.

பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள்­ளுச் சீவு­வ­தற்­குத் திடீ­ரெ­னத் தடை விதிக்­கப்­பட்ட இருக்­கின்­ற­மைக்­கான கார­ணம் என்ன என்­பது அர­சால் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அர­சின் இந்த நட­வ­டிக்கை ஓர் இன­வாத நட­வ­டிக்கை என்ற விமர்­ச­னங்­க­ளும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

கித்­துள் மரங்­கள் வடக்கு கிழக்­குக்கு வெளியே, குறிப்­பா­கச் சிங்­கள மக்­கள் வாழும் இடங்­க­ளி­லேயே இருக்­கின்­றன.

பனை, தென்னை மரங்­கள் தமி­ழர்­கள் அதி­கம் வாழும் வடக்கு, கிழக்­குப் பகு­தி­க­ளி­லேயே அதி­கம் இருக்­கின்­றன.

இத­னால் இந்த நட­வ­டிக்கை தமி­ழர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாதிப்­ப­தற்­கா­கத் திட்­ட­மிட்டு அரசு மேற்­கொள்­ளும் ஒரு செயல் என்று விமர்­சிப்­ப­வர்­கள் கூறு­கின்­றார்­கள்.

‘‘வடக்­கில் பனை, தென்னை மரங்­க­ளில் இருந்தே காலம் கால­மாக கள்ளு உற்­பத்தி செய்­கி­றோம். இதனை நம்பி 12 ஆயி­ரம் குடும்­பங்­கள் வாழ்­கின்­றன. சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் அது இந்­தக் குடும்­பங்­களை நடுத்­தெ­ரு­வுக்­குக் கொண்டு வந்­து­வி­டும். எனவே இது குறித்து பனை தென்னை வள கூட்­டு­ற­வுச் சங்­கங்­களை அழைத்து ஆரா­ய­வுள்­ளோம்’’ என்று உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார் எஸ்.செல்­வ­ராசா.

இந்­தப் பிரச்­சினை தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கவ­னத்­திற்­குக் கொண்­டு­வந்து, நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டத் திருத்­தத்­திற்கு எதி­ராக அவர்­க­ளைக் குரல் கொடுக்­கக் கோரப்­போ­கி­றார் என­வும் அவர் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/41681.html

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை மதுபானங்களை தவிர்த்து.. எல்லாரும் வரிகொண்டு வரும்.. உள்நாட்டு.. வெளிநாட்டு.. சாராயங்களை குடித்து.. அழிந்து போகத்தான்.  அமைச்சர்களுக்கும்.. அவைட ஆக்களுக்கும் கமிசன் வந்தால் சரி.  

நல்ல அரசு.. சொறீலங்கா அரசு. :rolleyes:

இந்தத் தடையில் இருந்து வடக்குக் கிழக்கு மாகாணங்கள் விலக்குக் கோர வேண்டும். மாறாக இயற்கை அல்லாத.. செயற்கை வடிகட்டி முறை தயாரிப்பு.. சாராயத்துக்கு அவை முற்றாக தடை விதிக்க வேண்டும். புகைப்பிடிப்பதை பொது இடங்களில்.. மற்றும்.. போக்குவரத்தில் தடை செய்ய வேண்டும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

இயற்கை மதுபானங்களை தவிர்த்து.. எல்லாரும் வரிகொண்டு வரும்.. உள்நாட்டு.. வெளிநாட்டு.. சாராயங்களை குடித்து.. அழிந்து போகத்தான்.  அமைச்சர்களுக்கும்.. அவைட ஆக்களுக்கும் கமிசன் வந்தால் சரி.  

நல்ல அரசு.. சொறீலங்கா அரசு. :rolleyes:

இந்தத் தடையில் இருந்து வடக்குக் கிழக்கு மாகாணங்கள் விலக்குக் கோர வேண்டும். மாறாக இயற்கை அல்லாத.. செயற்கை வடிகட்டி முறை தயாரிப்பு.. சாராயத்துக்கு அவை முற்றாக தடை விதிக்க வேண்டும். புகைப்பிடிப்பதை பொது இடங்களில்.. மற்றும்.. போக்குவரத்தில் தடை செய்ய வேண்டும். tw_blush:

நடக்காத ஒன்றை நீங்கள் ஏன் சிபாரிசு செய்யுறியள் 

எங்களுக்கு அரச மதுபான நிலையங்கள் இருக்கிறது  ஆனால் கோவில் வேள்விகளுக்கு மட்டும் தடை விதித்தோம் இப்ப இதுக்கு இன்னும் பொறுங்க நாங்க சேலை கட்டாமல் வெள்ளக்காரன் ரேஞ்சில திரிவம் 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நடக்காத ஒன்றை நீங்கள் ஏன் சிபாரிசு செய்யுறியள் 

எங்களுக்கு அரச மதுபான நிலையங்கள் இருக்கிறது  ஆனால் கோவில் வேள்விகளுக்கு மட்டும் தடை விதித்தோம் இப்ப இதுக்கு இன்னும் பொறுங்க நாங்க சேலை கட்டாமல் வெள்ளக்காரன் ரேஞ்சில திரிவம் 

பகிடி என்ன என்றால்.. எங்கட கலாசார நிகழ்வுகளில் வெள்ளை சேலை கட்டுது. எங்கட ஆக்களின் வாரிசுகள்.. சிலது.. அதைத் தவிர்க்குது. அதிலும் கொழும்பு வாழ் தமிழ் பெண்கள்.. நிலைமை கவலைக்கிடம். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0084.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதை தடை செய்வதனால் வெளிநாட்டு சரக்கு குடிப்பவர்கள் அதிகரிப்பர்கள் என கூறமுடியாது.

குடிமக்கள் விதம் விதமாக குடிக்க ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு இயற்கையோ செயற்கையோ போதை ஏறினால் சரி.

கள் கீழ் இறக்கத்தானே தடை. கள்ளு குடிக்க விருப்பமான ஆட்கள் மரத்திலயே ஏறி குடிக்கலாமோ? குடிச்சபிறகு கீழ கவனமாய் வந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கலைஞன் said:

கள் கீழ் இறக்கத்தானே தடை. கள்ளு குடிக்க விருப்பமான ஆட்கள் மரத்திலயே ஏறி குடிக்கலாமோ? குடிச்சபிறகு கீழ கவனமாய் வந்தால் சரி.

முன்பெல்லாம் இப்படி இல்லை, கே.கே.எஸ் சுக்கு போய் முட்டியோடு பணையைப் பார்த்ததில் இருந்து குருஜி ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறார்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இதை தடை செய்வதனால் வெளிநாட்டு சரக்கு குடிப்பவர்கள் அதிகரிப்பர்கள் என கூறமுடியாது.

குடிமக்கள் விதம் விதமாக குடிக்க ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு இயற்கையோ செயற்கையோ போதை ஏறினால் சரி.

கள்  இறக்க தடை என்றால்... தமிழனின் பனைக்கும், தென்னைக்கும்  தடை விதித்து விட்டு, சிங்களவனின் கித்துள் மரத்துக்கு விலக்கு  அளிப்பதில் இருந்தே, இவர்கள் யாரை குறி வைத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. 

தமிழ்நாட்டிலும்... கள்  இறக்க தடை விதித்து  விட்டு, 
தி.மு.க. காரன்  4 மது ஆலைகளையும் , அ. தி.மு.க.  5 மது ஆலைகளையும் நடத்தி பெரும் பணம் சம்பாதிக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
தமிழர்களுக்குப் பாதிப்பு?
 

-எம்.றொசாந்த்

“கள் சீவுவதற்காக விதிக்கப்படவுள்ள தடை அமுலுக்கு வந்தால், வடக்கில் சீவல் தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்” என, பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமம் கொத்தணியின் தலைவர் எஸ் செல்வராசா தெரிவித்துள்ளார்.

கித்துள் மரம் தவிர்ந்த பனை மற்றும் தென்னை மரம் உள்ளிட்ட ஏனைய மரங்களில் இருந்து கள் சீவவோ, இறக்கவோ முடியாது என, புதிய மதுவரித் திருத்தச் சட்டமூலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான அறிவித்தல், கடந்த 20ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“குறித்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சட்டம், நடைமுறைக்கு வரும். அதனால், வடக்கு - கிழக்கு மக்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகுவார்கள்.

“கித்துள் மரம், சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் மாத்திரமே உள்ளன. வடக்கு, கிழக்கில் பனை தென்னை மரங்களே உள்ளன. இந்நிலையில், பனை, தென்னை மரங்களில் கள் சீவுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், அது முற்றாக, தமிழ் மக்களையே பாதிக்கும். எனவே, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து, குறித்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழர்களுக்குப்-பாதிப்பு/71-206283

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

தென்னை மரங்­கள் தமி­ழர்­கள் அதி­கம் வாழும் வடக்கு, கிழக்­குப் பகு­தி­க­ளி­லேயே அதி­கம் இருக்­கின்­றன.

http://newuthayan.com/story/41681.html

சிங்கள பகுதிகளில் தென்னை மரங்கள் குறைவா? அவர்கள் தேங்காயை நம்பத்தானே கிரி பத் முதல் எல்லா உணவுகளும் சமைக்கிறார்கள்? மேலும் கொப்பரா, தேங்காய் எண்ணய்] என்று ஏற்றுமதி செய்கிறார்கள்?

கருப்பநீர் மற்றும் பனங்கட்டி ஆகியவற்றையும் சீனி தயாரிப்புக்கும் தடையா?
சாராயம் தயாரிக்க கள்ளு தானே தேவை? இலங்கை சாராயம் தயாரிப்பதையும் ஏற்றுமதி செய்வதையும் நிறுத்துமா?

இந்த செய்தியில் எதோ தவறு இருக்கிறது.

இதை மாகாண அரசு பார்த்து கொள்ளும்.    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நேசன் said:

இதை மாகாண அரசு பார்த்து கொள்ளும்.    

மத்திய அரசு முடிவு எடுக்கும் போது மாகாண அரசு என்ன செய்ய முடியும்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச்செய்தி ஏதோ இடக்குமுடக்கு போலை தெரியுது. நம்பேலாமல் கிடக்கு.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இந்தச்செய்தி ஏதோ இடக்குமுடக்கு போலை தெரியுது. நம்பேலாமல் கிடக்கு.. :rolleyes:

எனக்கும் அப்படித்தான் தெரியுது ..
ஆனால் நடப்பது நல் ஆட்சி என்பதால்தான் 
கொஞ்சம் யோசனையா இருக்கு.
நேரா குத்த மாட்டங்கள் ....
இப்பிடி குழி பறிக்கிற வேலைதான் செய்வாங்கள் 
செய்கிறார்கள்.
எங்கட சம் சும் கோஸ்டியே அவங்களுக்கு பிளான் போட்டு கொடுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

இந்தச்செய்தி ஏதோ இடக்குமுடக்கு போலை தெரியுது. நம்பேலாமல் கிடக்கு.. :rolleyes:

கள்ளை தடை செய்தால்.. பதனீர் சார்ந்த பொருட்கள் உற்பத்தியாவது தடையாகும். கித்துள் வெல்லத்துக்கும் கள்ளுக்கும் விலை கிடைக்கும். வெளிநாட்டுக்குப் போகும்.  வடிகட்டிச் சாராயம் விற்பனை அதிகமாகும்.. வரி வசூலாகும். தமிழர்கள் ஈரல் அழிஞ்சு சாவார்கள்..

இன அழிப்பை இப்படியும் தொடரலாம்... ஷெல் பொம்பர் கிபீர் கன்போர்ட் ஆட்லறி தான் அடிச்சுக் கொல்லனும் என்றில்லை. 

ஒரு காலத்தில்.. யாழ் நகர் மீது பீக்குண்டு வீசினவன் தானே சிங்களவன். அதையே இப்ப சிரியா காரன் செய்திருந்தால்.. அமெரிக்கன் ஐயோ பைலாஜி ஆயுதம் பாவிச்சிட்டாங்கள் என்று 40 ஏவுகணையை வீசித் தாக்கி விடுவான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சும்மா இருக்க மாட்டானே!

அவன் யாழ்ப்பாணம் வாறதே கள்ளுக்காகத் தானே!

அவங்களும் கித்துள் கள் இறக்குபவர்கள் தானே!

இந்தச் செய்தி சரியானது போல எனக்கும் தெரியவில்லை!

 

நாளைக்குக் கடலில் இறங்கி மட்டி பொறுக்கக் கூடாது என்று சொன்னால்....சனம் என்ன செய்யிறது?

12 hours ago, colomban said:

இதை தடை செய்வதனால் வெளிநாட்டு சரக்கு குடிப்பவர்கள் அதிகரிப்பர்கள் என கூறமுடியாது.

குடிமக்கள் விதம் விதமாக குடிக்க ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு இயற்கையோ செயற்கையோ போதை ஏறினால் சரி.

இது மிகவும் தவறான ஒரு கருத்து!

எனக்கு ஊரில் கன பேரைத் தெரியும்!

இதில் பெண்களும் அடக்கம்!

கள்ளு ஒகே..! 

ஆனால் 'வெட்டிரும்பு'.....நோ....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, புங்கையூரன் said:

சிங்களவன் சும்மா இருக்க மாட்டானே!

அவன் யாழ்ப்பாணம் வாறதே கள்ளுக்காகத் தானே!

அவங்களும் கித்துள் கள் இறக்குபவர்கள் தானே!

இந்தச் செய்தி சரியானது போல எனக்கும் தெரியவில்லை!

 

நாளைக்குக் கடலில் இறங்கி மட்டி பொறுக்கக் கூடாது என்று சொன்னால்....சனம் என்ன செய்யிறது?

இது மிகவும் தவறான ஒரு கருத்து!

எனக்கு ஊரில் கன பேரைத் தெரியும்!

இதில் பெண்களும் அடக்கம்!

கள்ளு ஒகே..! 

ஆனால் 'வெட்டிரும்பு'.....நோ....!

தெய்வம் நேரடியாயே விசயத்துக்கு வந்துட்டுது.....tw_blush:

எனிவே போராட்டம் நடக்க வெளிக்கிட்டால் கனபேரை சந்திக்கலாம்.:grin:

12 hours ago, suvy said:

முன்பெல்லாம் இப்படி இல்லை, கே.கே.எஸ் சுக்கு போய் முட்டியோடு பணையைப் பார்த்ததில் இருந்து குருஜி ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறார்.....!  tw_blush:

குருஜி நாங்கள் ஓலையை மட்டும்தான் தூக்கி அணைப்பது. கள்ளு நமக்கு ஆகாது. முன்பு எமது பனங்காணியில் வெட்டி வீழ்த்தப்பட்ட பச்சை ஓலைகளை நான்கு ஐந்தை ஒன்றாக கட்டி தலையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு காவிச்சென்று பின்னர் அவற்றை கிழித்து மாட்டுக்கு போடும் வேலை செய்யவேண்டும். அப்போதுதான் அப்பா வெளியில் சென்று விளையாடுவதற்கு அனுமதி தருவார். அது எல்லாம் ஒரு பொற்காலம்!

wcbvk4.jpg

  • தொடங்கியவர்

கள் இறக்­கு­வ­தற்­கான   தடைக்கு கண்­ட­னம்!

சமூக வலைத் தளங்­க­ளில் இளை­ஞர்­கள் கொதிப்பு

கள் இறக்­கு­வ­தற்­கான   தடைக்கு கண்­ட­னம்!

பனை மற்­றும் தென்னை மரங்­க­ளி­லி­ருந்து கள் இறக்­கு­வ­தற்குத் தடை விதிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யும் அர­சின் முயற்­சிக்கு சமூக வலைத் தளங்­க­ளில் நேற்­றுப் பர­வ­லான எதிர்ப்­புக் கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. இன­ரீ­தி­யான பாகு­பா­டான செயற்­பாடு என்று கடும் கண்­ட­னம் முன்­வைக்­கப் பட்­டது.

2018ஆம் ஆண்­டி­லி­ருந்து கித்­துள் மரத்­தி­லி­ருந்தே கள் இறக்கலாம் என்று மது­வ­ரிச் சட்­டத்­தில் திருத்­தம் முன்­வைத்­துள்­ளது அரசு. இதன் மூலம் இது­வ­ரை­யில் நடைமுறை யில் இருந்து வந்த பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள் இறக்­கப்­ப­டு­வ­தற்­கான அனு­ம­தியை நீக்­கி­யுள்ளது.

இது தொடர்­பான வர்த்­த­மானி கடந்த 20ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. இந்­தச் சட்­டம் நடை­மு­றைக்கு வரு­மாக இருந்­தால் வடக்­கில் மாத்­தி­ரம் 12ஆயி­ரம் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யா­கும் என்று பனை, தென்னை வள நிறு­வ­னங்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

அர­சின் இந்­தச் செயற்­பாட்­டுக்கு இளை­யோர் பல­ரும் தமது கண்­டன, எதிர்ப்­புக் குரல்­களை சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் நேற்று ஆக்­ரோ­ச­மா­கப் பதி­விட்­ட­னர். தமிழ் மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தில் அரசு திட்­ட­மிட்டு கைவைக்­கின்­றது என்­றும், வேள்­வி­யைத் தொடர்ந்து கள்­ளை­யும் அரசு தடை செய்­தமை தமிழ் மக்­க­ளின் பாரம்­ப­ரி­யத்தை மர­பைச் சிதைக்­கும் செயற்­பாடே என்­றும் பல்­வேறு கருத்­துக்­கள் பதிவு செய்­யப்­பட்­டன.

“கித்­துள் வெல்­லம் உங்­க­ளுக்கு…. பனை­வெல்­லம் எங்­க­ளுக்கு….., நீங்க வேறு நாடைய்யா… நாங்க வேறு நாடு” என்று காசி ஆனந்­தன் எழுதி தேனிசை செல்­லப்பா பாடிய பழைய பாட்­டின் வரி­கள் நினை­வுக்கு வரு­கி­றது என்­றும் ஒரு­வர் பதி­விட்­டார்.

http://newuthayan.com/story/41824.html

  • தொடங்கியவர்

மதுவரித் திருத்தச் சட்டம் தமிழின அழிப்பின் நீட்சி - அனந்தி

 

Ananthi-Sasitharan-Toddy.jpg
 
பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது தமிழின அழிப்பின் நீட்சியாகும். தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போடும் இச்சட்டத்திருத்தத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

பனை, தென்னை மற்றும் கித்துள் தவிர்ந்த வேறு எந்த மரத்தில் இருந்தும் கள்ளுச் சீவுவது, எடுப்பது, இறக்குவதனை தடைசெய்யும் வகையில் ஏற்கனவே இருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் கித்துள் தவிர்ந்த வேறு எந்த மரத்திலும் கள்ளுச் சீவுவது, எடுப்பது, இறக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி (01.01.2018) முதல் நடைமுறைக்கு வரும் வகையிலான சட்டத்திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

எந்தவித முகாந்திரமும் இன்றி எதேச்சதிகாரப் போக்கின் வெளிப்பாடாக கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தமானது தமிழர்களின் முதுகெலும்பை உடைக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டுகின்றேன்.

தமிழர் தாயகத்தின் தனிப்பெரும் அடையாளமாக பன்நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றிருக்கும் பனை மரமானது, தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றில் ஆழமாக இழையோடி தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக்கலந்த ஒன்றாகும்.

நீங்கள் வேறு நாடய்யா.. நாங்கள் வேறு நாடய்யா.. என்ற ஈழத்து பெருங்கவியின் பாடல் வரிகளில் முத்தாய்ப்பாக அமைந்திருக்கும் ‘கித்துள்வெல்லம் உங்களுக்கு பனைவெல்லம் எங்களுக்கு’ என்ற வரியின் ஊடே இந்த நாசகார சதித்திட்டத்தின் ஆழத்ததை புரிந்துகொள்ள முடியும். உலகில் எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருந்தாலும் ஒரு இனததின் அடையாளமாக பனை மரம் அடையாளப் படுத்தப்படுகின்றதொன்றால் அது தமிழினத்தின் சார்பாக மட்டுமே.

அந்த வகையில் தமிழர்களின் பெருமை மிகு அடையாளமாகவும் பொருன்மியத்தின் பலமாகவும் திகழ்ந்துவரும் பனை வளத்தை முற்றிலும் இல்லாதொழிக்கும் நோக்கிலேயே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு யுத்தம் நடந்தேறிய காலகட்டத்தில் பல இலட்சம் பனை, தென்னை மரங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் பனை, தென்னை மரங்களை இலக்கு வைத்தான செயற்பாடுகள் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தற்போது பனை, தென்னைகளில் இருந்து கள் இறக்குவதை முற்றிலும் தடைசெய்வதற்கு வழியேற்படுத்தும் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது.

இதன் மூலம் மிச்சம் மீதியாயிருக்கும் பனை தென்னை வளங்களை முற்றிலும் அழித்தொழிப்பதுடன் தமிழர்களை பொருளாதார ரீதியில் நிரந்தரமாகவே முடக்கும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் பனை, தென்னையில் இருந்தே கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதனை நம்பியே பல்லாயிரம் தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக பனை மரமானது பல்வேறுபட்ட வழிகளில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற வருமானம் ஈட்டக்கூடிய விளைபொருட்களை தருவதுடன் கள் பானமானது உடல் நலனிற்கு உகந்ததாகவும் அமைந்துள்ளது.

அவ்வாறே தென்னையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது.
இந்நிலையில் இச்சட்டம் நடைமுறைக்கு வருமானால் பனை, தென்னைகளில் இருந்து கள் இறக்கும் தொழில் சார்ந்திருக்கும் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

அத்துடன், தமிழ் நாட்டில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான மதுபான சாலைகளில் உற்பத்தியாகும் சாராயத்தினை விற்பனை செய்வதற்கு ஏதுவாக கள் இறக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதைப் போன்று இங்கும் தென்னிலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சாராய விற்பனையை முழு அளவில் ஊக்குவிக்கும் நோக்கில்  மதுவரித் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தமிழர்களின் கூன் நிமிர்த்தும் கற்பக தருவாக விளங்கி வரும் பனை மற்றும் தென்னை வளத்தை முற்றிலும் அழித்தொழித்து அது சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தினை முடக்கி தென்னிலங்கையிடம் கையேந்தும் நிர்க்கதி நிலைக்கு தமிழர்களை இட்டுச்செல்லும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத் திட்டத்தின் நீட்சியாகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழர்களின் தொன்மத்தின் அடையாளமாக தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பெங்கும் நிமிர்ந்தோங்கி வளர்ந்து முரசறைந்து நிற்கும் பனை வளங்களில் இருந்து பெறும் உற்பத்திகளை பாதுகாப்பதன் மூலமே எமது இருப்பினையும் பொருன்மிய பலத்தினையும் தக்கவைக்க முடியும்.
ஆகவே, தமிழர்கள் ஒன்றுபட்ட குரலாக இச்சட்டத்தினை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறு வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Toddy-Media-Release-Ananthi-1-550x777.jp

Toddy-Media-Release-Ananthi-2-550x777.jp

http://www.thinakaran.lk/2017/10/30/உள்நாடு/20834/மதுவரித்-திருத்தச்-சட்டம்-தமிழின-அழிப்பின்-நீட்சி-அனந்தி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இறக்கமுடியாது அனுமதி பெற்ற்வர்கள்தான் இறக்க முடியும் போல தெரிகிறது முற்றா தடை இன்னும் வரலபோல்

இருந்தாலும் வடக்கு வாழ் மக்கள் இந்த ராஜாவுக்கு தெரியபடுத்தவும் 

   1yhpew.jpg

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

சிங்களவன் சும்மா இருக்க மாட்டானே!

அவன் யாழ்ப்பாணம் வாறதே கள்ளுக்காகத் தானே!

அவங்களும் கித்துள் கள் இறக்குபவர்கள் தானே!

இந்தச் செய்தி சரியானது போல எனக்கும் தெரியவில்லை!

சிங்களவன், யாழ்ப்பாண  கள்ளுக்கு  வாறது  ஒரு புறம் இருக்க....
புலம் பெயர் தேசத்தில் இருந்து... அந்தக் கள்ளை  அருந்தப் போகும்.
ஆட்களின் வரவு குறைந்தால்.... இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு, பாரிய வீழ்ச்சி ஏற்படப் போகுது.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எல்லோரும் இறக்கமுடியாது அனுமதி பெற்ற்வர்கள்தான் இறக்க முடியும் போல தெரிகிறது முற்றா தடை இன்னும் வரலபோல்

இருந்தாலும் வடக்கு வாழ் மக்கள் இந்த ராஜாவுக்கு தெரியபடுத்தவும் 

   

முந்தியெல்லாம் தவறணை இல்லை...ஐ மீன் கள்ளுக்கொட்டில் இல்லை...
பின்னேரப்பார் சூரியன் இறங்க...நிலம் இருட்டு கட்ட...வேலை அலுப்பாலை வந்த நாங்கள் கள்ளு சீவுறவையின்ரை பின் வீட்டுப்பக்கம் போவம்....ஆற அமர இருந்து அடிப்பம்.பொரியலும் வரும்...வறுவலும் வரும்...விடாக்கண்டன் கதையளும் வரும்.....வாரியணைத்து வஞ்சம் தீர்த்த கதையும் வரும்....
எண்டைக்கு சிறிமா வந்தாளோ அண்டைக்கு வந்ததுதான் கோப்ரேசன்.....எல்லாம் கெட்டுது....வந்து மிஞ்சினது தென்னம் குத்தியும்....பனம் குத்தியும் தான்......
பின் வீட்டு சுகமும்....வேலிக்கரை சுகமும் போனது போனதுதான்......:love:
இப்ப கள்ளு இறக்கிறதும் கள்ளர் தொழிலாய் வரப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்கு தடை ,மாட்டுக்கு தடை என்று சொல்லி கடைசியில் கள்ளுக்கும் தடை போட்டிட்டாங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.