Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்!

Featured Replies

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்!

தமிழ் மக்களுக்கென தனிநாடான்று இல்லாததே ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்று ஸ்ரீலங்கா பாளி மொழி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்!

இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டை கோரும்படியும் அவர் தெரிவித்தார்.

எதிர்பார்ப்புக்களை ஏற்றிவைக்கும் ஒளி என்ற தலைப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர்,

“அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு வரும்படியே நான் கூறுகின்றேன். பிரிவினைவாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஏதாவது ஒன்றை வழங்கி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி இடவே எதிர்பார்க்கின்றனர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்று நாங்கள் கூறக்கூடாது. தமிழ் மக்களுக்கு என்னதான் பிரச்சினை இருக்கிறது என்று நாங்கள் கூறுகின்றோம் தானே. உண்மையிலேயே நான் இந்த விடயம் குறித்து ஆழமாக யோசித்துப்பார்த்தேன். அவர்களுக்கென்று தனியான ஒரு நாடு இல்லாமையே தமிழ் மக்களுக்குரிய பிரச்சினையாகும்.

இந்தப் பிரச்சினையை அவர்கள் தமிழ் நாட்டிற்குச் சென்று அல்லது, மலேஷியா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு ஒரு பகுதியை தனிநாடாக கோருங்களேன். எனினும் தங்களது ஆதரவில் தெரிவாக இந்த அரசாங்கத்திடம் அவசியங்களை பூரணப்படுத்திக் கொள்ள தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த உலகினில் ஸ்ரீலங்காவை விடவும் அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற நாடுகள் உள்ளன. அங்கு சென்று சுயநிர்ணய உரிமையுடன் அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்படி பெறுவார்களாயின் எங்களால் முடியுமானவற்றை நாங்கள் சிந்தித்துக் கூறுவோம்” என்று மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/abayatissa-Thero-Comment-on-Tamil-people-

3 hours ago, நவீனன் said:

புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்!

சிங்கள-பௌத்த களவானிக் கும்பலின் இரத்தத்தில் ஓடும் கள்ளப்புத்தியை தேரர் ஒப்புவித்துள்ளார்.

தங்களைப் போலவே கள்ளத் தோணிகளில் வந்து இறங்கி 1000 வருடங்களாக தமிழர் பூர்விக நிலத்தை கொள்ளையடித்து வருவது போலவே, தமிழர்கள் பிறநாடுகளில் செய்யட்டும் என்று இந்த சிங்கள-பௌத்த களவானித் தேரர்  கருதுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

 அவன் பிடுங்கி எடுத்தது போக இருக்கிறதையும் எங்கடையள் விட்டுக்குடுத்தால் அவன் அப்பிடித்தானே பேசுவான். கைப்பற்றினவன் சரக்கு மிடுக்கு கூட. ஆரம்பிக்கும்போதே தடுத்திருக்க வேணும். முழுதும் பறிபோனபின்  கூத்தாடிப் பயன் இல்லை.

12 hours ago, போல் said:

:101_point_up:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த களவானிக் கும்பலின் இரத்தத்தில் ஓடும் கள்ளப்புத்தியை தேரர் ஒப்புவித்துள்ளார்.

தங்களைப் போலவே கள்ளத் தோணிகளில் வந்து இறங்கி 1000 வருடங்களாக தமிழர் பூர்விக நிலத்தை கொள்ளையடித்து வருவது போலவே, தமிழர்கள் பிறநாடுகளில் செய்யட்டும் என்று இந்த சிங்கள-பௌத்த களவானித் தேரர்  கருதுகிறார். 

வியயன்  கள்ளத்தோணியில் வந்திறங்காதுவிடின் அல்லது இறங்கிய கள்ளரை அன்றே துரத்தியிருப்பின்  இன்று இந்தப் பிக்கு இப்படிப்பேசவோ  நாம்  அழிந்து அகதியாக உலகநாடுகளை நோக்கி புலம்பெயர்ந்திருக்வோ  அவசியமேயிருந்திருக்காது. இப்ப இலங்கைமுழுவதையும் படிப்படியா விழுங்கி ஏப்பம்விடத்தடையாக இருப்போரைநோக்கிச் சிங்கள இனவாதிகள் வரலாற்றை மறந்துவிட்டுப் பாய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nochchi said:

என்ன செய்வது! நாங்கள் நாமிருவர் நமக்கிருவர், அந்த இருவருக்கு மேலும் ஒன்று போதும் என்று இருந்துவிட்டோம். அத்துடன் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்று நம்மவர்கள் வருடக்கணக்கில் இணைபிரிந்து இருந்துவிட்டார்கள்.... வம்சம் பெருக வழியில்லை. வந்தவர்களோ...! அல்லும் பகலும் அதே வேலையாக இருந்து பெருகிவிட்டார்கள். அரசன் ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்தநிலை வந்திராது. சனநாயகம் வந்து நாய்களையும் நாயகர்கள் ஆக்கிவிட்டது. :(   

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, சுவைப்பிரியன் said:

அந்தாள் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான்.

எந்த  விதத்தில்???

-----------------------------------------

சிறிலங்காவை  தவிர தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சுதந்திரத்துடன் தான் வாழ்கிறார்கள். ஆகவே தா ம் சிறிலங்காவில் வாழும் தமது சகோதரர்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்கும் படி புலம் பெயர் தமிழர்கள் கே ட் கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான நேர்மையான அகழ்வு ஆய்வுகள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் செய்யபடவேண்டும் அப்போதுதான் யார் என்ன என்பது தெரியவரும் .. ஆனாலும் ஆளும் அதிகார வர்க்கம் அதை செய்யவிடாது என்பதே நிதர்சனம்.. அதற்கு கீழடி பெரிய உதாரணம் ..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முழுமையான நேர்மையான அகழ்வு ஆய்வுகள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் செய்யபடவேண்டும் அப்போதுதான் யார் என்ன என்பது தெரியவரும் .. ஆனாலும் ஆளும் அதிகார வர்க்கம் அதை செய்யவிடாது என்பதே நிதர்சனம்.. அதற்கு கீழடி பெரிய உதாரணம் ..:cool:

தமிழகத்துக்கு முதலில் ஒரு முதுகெலும்புள்ள தமிழனை முதல்வனாக்க முடியுமா என்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nochchi said:

தமிழகத்துக்கு முதலில் ஒரு முதுகெலும்புள்ள தமிழனை முதல்வனாக்க முடியுமா என்று பாருங்கள்.

அதுதான் திரையரங்கில் பார்த்து தேடிக்கொண்டிருக்கிறோம்.. ஒரு பயலும் அம்புட மாட்டேங்குறான்..  smiley-with-glasses32.gif

அம்புட்ட ஒரு ஆளையும் "தமிழன் டி.என்.ஏ எக்ஸ்பர்ட்"(Tamizhan DNA Expert)னு அலட்சியப்படுத்துறானுக..! :)  :grin:

On 11/8/2017 at 6:08 AM, satan said:

 அவன் பிடுங்கி எடுத்தது போக இருக்கிறதையும் எங்கடையள் விட்டுக்குடுத்தால் அவன் அப்பிடித்தானே பேசுவான். கைப்பற்றினவன் சரக்கு மிடுக்கு கூட. ஆரம்பிக்கும்போதே தடுத்திருக்க வேணும். முழுதும் பறிபோனபின்  கூத்தாடிப் பயன் இல்லை.

சிங்களவர்கள் யாரையோ தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு கொண்டாடி போனார்களே அவர்தானே..?:unsure:

3 hours ago, ராசவன்னியன் said:

சிங்களவர்கள் யாரையோ தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு கொண்டாடி போனார்களே அவர்தானே..?:unsure:

அந்த சிங்களவன் பயிற்சி எடுத்து இந்தியக் கயவர்களிடம்!

ஏற்கனவே ரவுடிக்கும்பலின் பரம்பரை சிங்களவன் என்பது வரலாறு. அப்படிப்பட்டவன் உலகிலேயே நாகரிகமற்ற, பண்பற்ற இந்தியனிடம் பயிற்சி பெற்றால் வேறு என்ன செய்வான்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Rajesh said:

அந்த சிங்களவன் பயிற்சி எடுத்து இந்தியக் கயவர்களிடம்!

ஏற்கனவே ரவுடிக்கும்பலின் பரம்பரை சிங்களவன் என்பது வரலாறு. அப்படிப்பட்டவன் உலகிலேயே நாகரிகமற்ற, பண்பற்ற இந்தியனிடம் பயிற்சி பெற்றால் வேறு என்ன செய்வான்?

அருமையான வாய்ப்பிருந்தும், பயிற்சி பெற்ற கயவர்கள் என தெரிந்தும் சிங்களனுடன் சினேகம் வைத்து, அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றி, சொந்த இனத்திற்கும் துரோகம் செய்த தொலை நோக்கற்ற தமிழ் தலைகளைத் தானே பெரும்பாலும் நோக வேண்டும்? சிங்களனை மட்டும் நோவானேன்..?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தலும் ஒற்றுமயாக இருக்கமாட்டர்கள். நீ பெரிது நான் பெரிது என அடிபடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, colomban said:

தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தலும் ஒற்றுமயாக இருக்கமாட்டர்கள். நீ பெரிது நான் பெரிது என அடிபடுவார்கள்.

இந்த எண்ணம் எனக்கும் இன்றைய நிலையில் வருவதுண்டு ஆனாலும் எண்ணிப்பாருங்கள்....!

ஒரு 30 வருட காலம் தமிழீழம் என்ற நிழல் அரசின்கீழ் மக்கள் வாழ்ந்த காலத்தை சிங்களரும் போற்றத் தவறவில்லையே.!

"அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி."
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

அந்தாள் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான்.

சரிவரும் என்று நினைக்கிறீர்களா ஏன் ஒரு  வடகிழக்கு போன்ற  ஒரு தீவை நம்ம புலம் பெயர்ந்த தமிழர்கள் வாங்க கூடாது அங்கே மக்களை குடியேற்ற முடியாது அப்பப்ப சில நேரம் ஓடும் சிந்தனைகள் பல கோடீஸ்வரர்கள் தங்களுக்கென தனித்தீவை வாங்கி வைத்திருக்கிறார்கள்  என கன நாள் முன்பு படித்த ஞாபகம். 

 இந்த சிங்களவர்களிடமும் , முஸ்லீம்களிடமும் தேங்காய் பிட்டு , வெண்பொங்கல் சம்பல் என்று வாழ இயலாமல் கிடக்க்கு எங்க ட செம்புகளும் ஒன்று பெரிசாய் கிளிக்கிற மாதிரி தெரியல 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முன்பு வந்த செவியை பின்பு வந்த கொம்பு முட்டுது, ஆகவே செவியை அகற்றி விடலாம் என்று சொல்கின்றிர்கள்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2017 at 3:28 PM, suvy said:

முன்பு வந்த செவியை பின்பு வந்த கொம்பு முட்டுது, ஆகவே செவியை அகற்றி விடலாம் என்று சொல்கின்றிர்கள்....!  tw_blush:

கிழக்கு நிலை அப்படி கெதியா எழும்புங்கள் என்ற அறை கூவுவது போல் இருக்கிறது  தமிழர்களுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2017 at 1:52 PM, Paanch said:

என்ன செய்வது! நாங்கள் நாமிருவர் நமக்கிருவர், அந்த இருவருக்கு மேலும் ஒன்று போதும் என்று இருந்துவிட்டோம். அத்துடன் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்று நம்மவர்கள் வருடக்கணக்கில் இணைபிரிந்து இருந்துவிட்டார்கள்.... வம்சம் பெருக வழியில்லை. வந்தவர்களோ...! அல்லும் பகலும் அதே வேலையாக இருந்து பெருகிவிட்டார்கள். அரசன் ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்தநிலை வந்திராது. சனநாயகம் வந்து நாய்களையும் நாயகர்கள் ஆக்கிவிட்டது. :(   

அப்பு
கேக்கிறேன் என்று கோவிக்காதையண்ணை
உங்களுக்கு எத்தனை
பிள்ளைகள்?

On 11/9/2017 at 3:55 AM, Paanch said:

ஒரு 30 வருட காலம் தமிழீழம் என்ற நிழல் அரசின்கீழ் மக்கள் வாழ்ந்த காலத்தை சிங்களரும் போற்றத் தவறவில்லையே.!
 
அந்த 30 வருடத்தில் எத்தனை
வருடம் அப்பு
அங்க இருந்தனியல் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

அப்பு
கேக்கிறேன் என்று கோவிக்காதையண்ணை
உங்களுக்கு எத்தனை
பிள்ளைகள்?

எண்ணிவிட்டுச் சொல்கிறேன் பேரா.  அப்புக்கு வயது போய்விட்டதல்லவா! கணக்குத் தெரியவில்லை....!!

On 11/9/2017 at 1:38 PM, ராசவன்னியன் said:

அருமையான வாய்ப்பிருந்தும், பயிற்சி பெற்ற கயவர்கள் என தெரிந்தும் சிங்களனுடன் சினேகம் வைத்து, அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றி, சொந்த இனத்திற்கும் துரோகம் செய்த தொலை நோக்கற்ற தமிழ் தலைகளைத் தானே பெரும்பாலும் நோக வேண்டும்? சிங்களனை மட்டும் நோவானேன்..?

உங்கள் பதிலில் முக்கியமான கயவர்களை மறந்துவிட்டீர்களே! அது வேற யாருமில்லை தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போகும் இந்திய அரச கயவர்கள் தான். எல்லை தாண்டி படுகொலையில் ஈடுபட்டுவரும் இந்திய அரச கயவர்கள் மற்ற இரண்டு கயவர்களையும் இயக்குவதால் மிக மோசமான கயவர்கள் இந்திய அரச கயவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

மதிப்பிற்குரிய ஐயா, நான் சுட்டியது இலங்கை சுதந்திரத்திற்கு முன் ஈழத்தமிழருக்கு ஆங்கிலேயரிடமிருந்த செல்வாக்கை ஏன் தொலை நோக்கோடு சிந்தித்து அப்போதைய அப்புக்காத்துகள் செயல்பட்டு தனி நாடு பெறவில்லை என்பதே! அப்போது, மலையகத்தமிழர்களை நாடிழந்தவர்களாக்குவதில் இருந்த முனைப்பை ஈழத்தமிழ் தலைகள் முன்னரே ஆங்கிலேயரிடமிருந்து தனிநாடு பெறுவதில் காட்டியிருக்கலாம்..! வாய்ப்பை தவற விட்டது ஈழத்தலைமைகளே..!!

தாங்கள் தாராளமாக இந்தியாவை திட்டிக்கொள்ளலாம்..  No worries.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இப்ப எங்க ஐயா வடகிழக்கில் நாங்க புட்டும் தேங்காய் பூவும் என்று சொன்னமாதிரி அந்த காலத்து ஆட்கள்  கிரிபத்தும் கட்ட சம்பலும் என்று சொல்லி இருப்பார்கள் ராஜவ்வன்னியர் அண்ண ( சிங்களவர்களுக்கு )tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

மதிப்பிற்குரிய ஐயா, நான் சுட்டியது இலங்கை சுதந்திரத்திற்கு முன் ஈழத்தமிழருக்கு ஆங்கிலேயரிடமிருந்த செல்வாக்கை ஏன் தொலை நோக்கோடு சிந்தித்து அப்போதைய அப்புக்காத்துகள் செயல்பட்டு தனி நாடு பெறவில்லை என்பதே! அப்போது, மலையகத்தமிழர்களை நாடிழந்தவர்களாக்குவதில் இருந்த முனைப்பை ஈழத்தமிழ் தலைகள் முன்னரே ஆங்கிலேயரிடமிருந்து தனிநாடு பெறுவதில் காட்டியிருக்கலாம்..! வாய்ப்பை தவற விட்டது ஈழத்தலைமைகளே..!!

தாங்கள் தாராளமாக இந்தியாவை திட்டிக்கொள்ளலாம்..  No worries.

இப்ப tna ல் தமிழரசு கட்சி  எவ்வளவு கெஞ்சி மண்டாடி தமிழ்மக்களிடம் வோட்டில் வென்றபின் தமிழ்மக்களுக்கு இலங்கை அரசுடன் சேர்ந்து  துரோகம் இழைத்தது போல் அப்பவும் நடந்தது .இலவச கல்வி என்றமுறை நடைமுறையில் தொடங்கும் காலம் கேட்க்க நாதியில்லை எனும் நேரம்களில் நடந்த மிகப்பெரும் தவறு அந்த தவறால் எங்கள் இனமே கருவறுந்து போனது உண்மை .அதை திருப்பி திருப்பி கதைப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை வெள்ளம் தலைக்குமேல் போயிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இப்ப tna ல் தமிழரசு கட்சி  எவ்வளவு கெஞ்சி மண்டாடி தமிழ்மக்களிடம் வோட்டில் வென்றபின் தமிழ்மக்களுக்கு இலங்கை அரசுடன் சேர்ந்து  துரோகம் இழைத்தது போல் அப்பவும் நடந்தது .இலவச கல்வி என்றமுறை நடைமுறையில் தொடங்கும் காலம் கேட்க்க நாதியில்லை எனும் நேரம்களில் நடந்த மிகப்பெரும் தவறு அந்த தவறால் எங்கள் இனமே கருவறுந்து போனது உண்மை .அதை திருப்பி திருப்பி கதைப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை வெள்ளம் தலைக்குமேல் போயிட்டுது .

ஆற்றாமையில் இந்தியாவின் துரோகத்தை நினைத்து நினைத்து எவ்வளவு நாட்கள் ஆக்ரோஷமாக திட்டுவீர்களோ, அதே போன்று கடந்த கால தவறுகளையும் மறக்காமல் நினைவுகொண்டு, மீண்டும் தவறிழைக்காமல் இனியாவது சிறந்த மாற்று வழிகளை ஆராய்ந்து முன்னெடுத்தலே நல்லது.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.