Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

முருகமூர்த்தி அவனுக்கு  பெற்றோர் இட்ட பெயர். பெற்றோர்கள் எந்த மதத்தை கடைப்பிடிக்கிறார்களோ அந்த மதக்கடவுளின் பெயர்களை வைப்பது எம்மவர்களின் மரபு அந்த வகையில் அவனுக்கும்  அந்த பெயர் அவனின் அனுமதியின்றி ஒட்டிக்கொண்டது.ஆசிரியர் இடாப்பு கூப்பிடும்பொழுது மட்டும் முருகமூர்த்தி என்று அழைப்பார்.மற்றும்படி முருகா,முருகு ,முருகன் என்றுதான் அழைப்பார்கள்,

 அவனது வீட்டுக்கு அருகில் முருகன் கோவில் உண்டு பரம்பரை பரம்பரையாக அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த கோவில்.அவன் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே பாட்டி அழைத்து சென்று கற்பூரம் கொழுத்தி விளக்கேற்றி வருவார்,சில சமயம் கோவில் முற்றத்தை துப்பரவு செய்வார்.நான் இல்லாத காலத்தில் முருகு நீ தான் வெள்ளிக்கிழமைகளில் வந்து விளக்கேற்றி வைக்கவேணும். பாட்டிக்கு ஒம் என்று சொல்லிவிட்டான்

.அவனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது பாட்டி இறை பதமடைந்து விடவே .அவன் வெள்ளிக்கிழமைகளிள் தாயாருடன் சென்று விளக்கேற்றி வந்தான்.

ஒரு நாள் கோவிலுக்கு பின்னேரம் விளையாட போட்டிருந்த உடுப்புடன் போகதயாரானான்.அதை அவதானித்த தாயார்

"பாட்டி எப்படி கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லி தந்தவ"

"குளித்து சுத்தமா போகவேனும் என்று சொன்னவ,நான் காலம்பிற குளிச்சிட்டன்"

"உந்த புழுதிக்குள்ள உழுது திரிச்சனீயள்ளோ,காற்சட்டையையும் செர்ட்டையும் பார்,கைகாலை கழுவி வேறு சட்டையை போட்டுக்கொண்டு வா"

அவனுக்கு குளிக்கிறது என்றால் கொல்ல கொண்டு போறமாதிரி,கிணற்றடியில் கை காலை கழுவிட்டு ஓடி வந்து தீபாவளிக்கு சீத்தை துணியில் தைத்த சேர்ட்டையும் காற்சட்டையும் போட்டுக்கொண்டு வந்தான்.அந்த சேர்ட்டை அவன் போடமல் வைத்திருந்தமைக்கு காரணம் அதில் வரும் மண்ணெயின் மணம் தான்.

"டேய் கோவிலுக்கு போகும் பொழுது உது என்ன தியட்டருக்கு போற மாதிரி போட்டிருக்கிறாய், ஒடி போய் வெள்ளை சேர்ட்டை போடு"

"வெள்ளை சேர்ட் ஊத்தையாக இருக்கு அப்பா"

"அப்ப ,சேர்ட் போடாமல் போயிட்டு வா "

"ஐயோ நான் மாட்டேன்"

அவனை அழைத்து கொடியில் காய்ந்து கொண்டிருந்த தனது சால்வையை அவனது காற்சட்டைக்கு மேல் சுற்றிவிட்டு,விபூதி யை பூசி இப்ப நீ அம்மாவுடன் கோவிலுக்கு போகலாம் என்றார்.அவனுக்கு வெட்கமாக இருந்தாலும் தந்தைக்கு பயத்தில் கோவிலுக்கு தாயாருடன் சென்றான்.

இனிமேல் இப்படித்தான் கோவிலுக்கு வரவேனும் இது உனக்கு வடிவாயிருக்கிறது,ஒம் அம்மா என்று தலையாட்டினான்.தனியாக செல்லும் பொழுது வெள்ளை சேர்ட்டும் போட்டுகொண்டு போவான். அவன் சால்வையை வேஸ்டியாக கட்டும் வயதை தாண்டிவிட்டான் என உணர்ந்த தந்தை தீபாவளிக்கு இந்த தடவை அவனுக்கு வேஸ்டி வாங்கி கொடுத்தார். ஆனால் அவன் தந்தையின் பழைய வேஸ்டியைதான் கட்டிகொண்டு செல்வான் .

அந்த முருகனும் இரண்டு பட்டுத்துணியை மாறி மாறி அணிந்து இருப்பார் அதை அணிய வரும் ஐயரின் வெள்ளை நிற வேஸ்டி பழுப்பு நிறமாக இருக்கும்.அதில கறுப்பு நிறத்தில பட்டிக் டிசைன் தெரியும்.அது வேறு ஒன்றுமில்லை விளக்குதிரியின் முனையை பிடித்த பின்பு வேஸ்டியில் துடைத்தமையால் வந்த டிசைன்.

கால போக்கில் கோவிலுக்கு போறதை நிறுத்தி கொண்டான் .,இறக்குமதி செய்யப்பட்ட சித்தாத்தங்கள் அவனை ஆள் கொள்ள தொடங்க பரம்பரையாக க‌டைப்பிடித்த கொள்கைகள் விடுபட தொடங்கின .தாயார் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்துகொண்டிருந்தார்.முருகா இந்தமுருகை எங்கயாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடு என ஒவ்வொரு நாளும் முருகனை தொல்லை கொடுக்க தொடங்கிவிட்டாள்.

தாயாரின் வேண்டுதலுக்கு முருகன் செவிமடுத்து முருகை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி வைத்தார்.

"இன்றைக்கு எத்தனை மணிக்கு வேலையால் வருவீங்கள்"

"வழமையா வாற நேரத்திற்கு"

"கொஞ்சம் எர்லியா வர முடியுமோ"

"ஏன்"

"முருகன் கோவில் கொடியெறிவிட்டுதல்லோ"

"எப்ப"

" இரண்டு நாளைக்கு முதல், நாட்டு நடப்புகள் தெரியாது.வேலைக்கு போறது வந்திருந்து  கொம்புயூட்டரை பார்க்கிறது"

"சரி சரி கத்தாதை வயசு போன நேரத்தில உனக்கு கூடாது"

"ஓ ஓ எனக்கு வயசு போய்யிற்று உங்களுக்கு மட்டும் வயசு அப்படியே நிற்குதாக்கும்"

"நான் மார்க்கண்டேயர் பரம்பரை"

"சும்மா கொதியை கிளப்பாதையுங்கோ ,நீங்கள் மார்கண்டேயர் பரம்பரை என்பதை நான் சொல்ல வேணும்"

"சரி பின்னேரம் எர்லியா வாறன்"

 

"முருகு, வரும் பொழுது சுதாவின்ட வீட்டை போய் என்னுடைய பிளவுஸ் தைக்க கொடுத்தனான் எடுத்துக் கொண்டு வாங்கோ"

 

"இப்ப என்ன அவசரம் பிறகு எடுக்கலாம் தானே"

"சீ சீ  நான் திருவிழாவுக்கு என்று தைச்ச பிளவுஸ்"

"திருவிழா முடிய இன்னும் ஐந்தாறு நாள் இருக்கே"

"முருகு அதுக்கு போட பிளவுஸ் இருக்கு இன்றைக்கு மஞ்சள் கலர்  சீலை தான் எல்லோரும் உடுப்பினம் அதுக்கு பிளவுஸ் இல்லை அதுதான் முருகு பிளிஸ்"

எதாவது தேவை என்றால் கொஞ்சி குலாவிதனது காரியத்தை முடித்து கொள்வாள்.

வேலை முடிந்து வரும் பொழுது சுதாவீட்டை போனவன் அழைப்புமணியை அழுத்தினான்.கையில் கத்தரிக்கோலுடன் வந்த சுதா

"வாங்கோ,வாங்கோ,உங்கன்ட மிஸிஸ் கோல் பண்ணின‌வ நீங்கள்  வருவீங்கள் எண்டு"

"பிளவுஸ் தைச்சாச்சோ"

"கை தைச்சு முடியல ஐந்து நிமிடம் இருங்கோ ட‌க் என்று தைச்சுதாரன்"

"என்ன பிசியோ"

"ஒமோம் முருகன் கோவில் கொடியெறிட்டுது எல்லோரும் ஆறு எழு பிளவுஸ் என்று தைக்க தந்திருக்கினம் அதுதான்"

"அட கோதாரி ஆறு ஏழு பிளவ்ஸா"

" உங்கன்ட மிசிசே பத்து பிளவ்ஸ் தைக்க கொடுத்தவ,மற்ற பிளவ்ஸ்களை முதலே எடுத்துகொண்டு போய்விட்டா,"

கதைத்தபடியே பிளவ்ஸை தைத்து முடித்து முருகிடம்  கொடுத்து விட்டாள் சுதா.

 

இன்றைக்கு மனிசி கோவிலுக்கு போய்விடும் நிம்மதியா வீட்டிலயிருந்து கதை ஒன்றை கிறுக்குவோம் என்று நினைத்தபடியே வந்தவன்,

"இந்தாரும் அப்ப உம்மட பிளவ்ஸ்"

"ஐயோ தாங்க்ஸ் அப்பா நான் நினைச்சேன் நீங்கள் மறந்துகிறந்து போய்விடியளோ என்று"

"நீர் சொல்லி நான் என்னத்த எப்ப மறந்திருக்கிறன் சொல்லும்"

"உந்த நக்கல் கதைக்கு மட்டும் குறைச்சலில்லை,நீங்களும் குளிச்சு போட்டு வாங்கோவன் கோவிலுக்கு போய்விட்டு வருவோம்"

"நான் வரவில்லை நீர் போயிற்றுவாரும்"

"சும்மா அடம் பிடிக்காமல் வாங்கோ, மஞ்சள் வேஸ்டி எடுத்து வைச்சிருக்கிறன் சுற்றி கொண்டு வாங்கோ"

முருகு கோவிலுக்கு யாராவது வரச்சொன்னால் போகாமல் இருக்கமாட்டான்.விருப்பமில்லாவிடிலும் பயம் காரணமாக சென்று விடுவான்.

முருகும் மஞ்சள் வேஸ்டி அணிந்து கோவிலுக்கு சென்றான்.

முருகனை பார்த்து அரோகரா என இரு கை தூக்கி கண்ணை மூடி திறந்தான் முருகன் மஞ்சள் பூக்களாலும் மஞ்சள் பட்டுத்துணியாலும் அலங்கரிக்கப்பட்டு அழககாக காட்சியளித்தார்.சற்றே திரும்பினான் தலைசுற்றி போனான் ,நின்ற ஐயர்மாரும் மஞ்சள் வேஸ்டியை அழகாக ஸ்திரி பண்ணி அணிந்திருந்தார்கள். பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க மஞ்சள்  சேலைகளினதும் ,மஞ்சள் வேஸ்டிகளினதும் எண்ணிக்கை அதிகமானது.பக்கத்தில் மெய்மறந்து நின்ற மனிசியிடம்

" என்னப்பா எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி மஞ்சளில் வந்திருக்கினம் என்ன விசயம்"

"உங்களுக்கு தெரியாதே இன்றைக்கு எங்கன்ட சப்பேர்ப்காரரின்ட திருவிழா"

"அதுக்கும் மஞ்சளுக்கும் என்னடியாத்தை சம்பந்தம்"

" ஒவ்வொரு சப்பேர்ப்காரர்களுக்கும் ஒரு கலர் கொடுத்திருக்கினம்"

" யார் கொடுத்தது?முருகனே"

திருமதி முருகு அவனை சுற்றெரிப்பது போன்று பார்த்தாள்.

"கூல் கூல் சும்மா ஒரு பகடிக்குத்தான்"

"கோவிலில் நின்று என்ன பகடி வேண்டிக் கிடக்குது"

முருகா போற போக்கில எம்மவர்கள் உனக்கு கோர்ட் சூட் போட்டு அழகு பார்த்தாலும் பார்ப்பார்கள்.எனக்கு மனதில தோன்றியதை சொல்லி போட்டேன் யாவும் உன் செயலே....உனக்கும் டெர்ஸ்கொட்  கொண்டு வந்திட்டாங்கள் உன் பக்தர்கள்...முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா  ......dress code

ஊரிலயும் நீ அலங்கார‌மாகவும் புதுக் கோவிலிலும் வசதியாக இருப்பதாக கேள்வி ..நாற்பது வருடத்திற்கு முன்பு உன்னிட்ட வந்து விளக்கேற்றிய புண்ணியம் இன்றைக்கு என்னையும் உன்ட பக்தர்களின் dress code விளையாட்டுக்குள் இழுத்து  விட்டுள்ளது.

என எண்ணியபடியே முருகனை வலம் வந்தான் முருகு....

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, putthan said:

ஊரிலயும் நீ அலங்கார‌மாகவும் புதுக் கோவிலிலும் வசதியாக இருப்பதாக கேள்வி ..நாற்பது வருடத்திற்கு முன்பு உன்னிட்ட வந்து விளக்கேற்றிய புண்ணியம் இன்றைக்கு என்னையும் உன்ட பக்தர்களின் dress code விளையாட்டுக்குள் இழுத்து  விட்டுள்ளது.

 

சில ஐயர்மார் சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்து புது உடுப்பு போடும் போது பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும்.

ஊரில சுதந்திரமாக இருந்த சாமிகளை எல்லாம் பாதுகாப்பென்ற பெயரில் சுற்று மதிலில் வைத்து பூட்டி வைத்திருக்கிறார்கள்.

மனிசியை  கோவிலுக்கு அனுப்பி போட்டு  நன்றாகவே கதை எழுதியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனை ஆயிரம் மைலுக்கப்பால் போயும் அவன் விடவில்லை. பின்னால பாட்டியின் சதி வேலை செய்யுதுபோல........!  tw_blush:

இந்த பிளவ்ஸ் பிரச்சினை பெரிய பிரச்சினை.தைக்க குடுக்கும் போது ஒரு சைஸ் சில இருப்பினும்.அவ தைத்து கொடுப்பதற் கிடையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து இன்னொரு சைசுக்கு வந்திடுவினம். டைலரும் லேசுபட்ட  ஆளில்ல உள்ள துணி மிஸ்ஸமாய் வைத்து தைத்திருப்பா, உடனே பிரிச்சு அரக்கி தைச்சுப்போட்டு கறந்திடுவா......!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முருகா உன் திருவிளையாடலுக்கு அளவேயில்லையா?

உன் பக்கதனை ஏன் இப்படி சோதிக்கின்றாய்?

உனை உனது பூர்வீக உடையுடன் காட்சி தர எல்லாம் வல்ல உன் அப்பனை வேண்டுகின்றேன்.

KandaSwamy.jpg

அரோகரா.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் மஞ்சள் நிற வேட்டியில் கண்முன் வந்துவிட்டீர்கள். எல்லாம் அவன் செயல். :11_blush:

3 hours ago, suvy said:

அத்தனை ஆயிரம் மைலுக்கப்பால் போயும் அவன் விடவில்லை. பின்னால பாட்டியின் சதி வேலை செய்யுதுபோல........!  tw_blush:

இந்த பிளவ்ஸ் பிரச்சினை பெரிய பிரச்சினை.தைக்க குடுக்கும் போது ஒரு சைஸ் சில இருப்பினும்.அவ தைத்து கொடுப்பதற் கிடையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து இன்னொரு சைசுக்கு வந்திடுவினம். டைலரும் லேசுபட்ட  ஆளில்ல உள்ள துணி மிஸ்ஸமாய் வைத்து தைத்திருப்பா, உடனே பிரிச்சு அரக்கி தைச்சுப்போட்டு கறந்திடுவா......!  tw_blush:

உங்களுக்கு ஆர் உந்தக் கதை விட்டது அண்ணா. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர சின்னப் பிள்ளையளோ ????

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புத்தன் மஞ்சள் நிற வேட்டியில் கண்முன் வந்துவிட்டீர்கள். எல்லாம் அவன் செயல். :11_blush:

உங்களுக்கு ஆர் உந்தக் கதை விட்டது அண்ணா. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர சின்னப் பிள்ளையளோ ????

இந்த கண்ராவியை எல்லாம் வேறு யாரும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்குறீங்கள் போல...... எல்லாம் சொந்த அனுபவம்தான்.....எமக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ஆனால் இது தெரிந்தால் அட்டமத்தில சனிதான்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

முருகா உன் திருவிளையாடலுக்கு அளவேயில்லையா? புத்தனிடமுமா?
 
எண்டாலும் மனுசி பத்து பிளவுஸ் தைத்தது அநியாயம்தான். வழக்கம்போல் உங்கள் எழுத்துநடை பிரமாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுரேசின் கதையைச் சொல்லாமல் முருகமூர்த்தியின் கதையினைச் சொன்ன புத்தரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் திருவிழாவின் போது ஒருநாள் வேட்டியுடன் கறுப்பு மேல்சட்டை அணிந்து சென்றேன். கோவிலுக்குப் போக மங்களகரமான உடுப்பு அணியவேண்டும் என்று ஒருவர் சொன்னார். என்னைப்பார்க்க  திரவிடக்கழகத்தினர்போல இருப்பதாகவும் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி....புத்தன்!

ஓபன் சுபேர்ப் பக்கம் இப்ப...என்ன கலர் போகுது...எண்டு ஒருக்காச் சொல்லுங்கோ!

சிட்னி முருகனை...எப்ப பார்த்தாலும்...எனக்கென்னவோ...எனக்குத் தெரிந்த மற்ற முருகன்களிலும் பார்க்க...வித்தியாசமாகத் தான் தெரிவதுண்டு!

அவரது தலை முடியைப்...பின்னால் வாரி விட்டது மாதிரித் தலையிழுப்பு எனக்கு எப்பவுமே ...ஏனோ ..பிடிக்கும்!

நானே...பலதடவைகள்...இவருக்கு ஒரு ஜீன்ஸ் போட்டு....ஜீன்ஸ் திருவிழா ஒரு நாளைக்கு நடத்தினால்..என்று யோசிச்சு இருக்கிறேன்!

வெளியே சொல்லப் பயமாக இருந்ததால்...அந்த விருப்பத்தை...எனக்குள்ளேயே புதைத்தும் விட்டேன்!

நீங்கள் உங்கள் கதையில்...கோட்டு..சூட்டைப் பற்றிக்கதைக்கப் போக...இப்போது எனக்கும் கொஞ்சம் தெம்பு வாறது மாதிரிக் கிடக்குது!

கடைசியாய்....இரண்டு பேரையும்...சப்பரச் சில்லுக்குள்ள..போட்டு மிதிப்பாங்களோ ...தெரியாது!

நானும்...இப்ப செய்யிற வேலையை விட்டுப் போட்டுப்....'பிளவுஸ்' தைக்க வெளிக்கிடலாம எண்டு யோசிக்கிறன்!

இருந்தாலும்......அருணாசலத்தார் எழுதின...நாட்டாமைக் கதை மாதிரி முடியுமோ...எண்டும்....பயமாயும் கிடக்குது! 

எதுக்கும் நீங்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்!

கதை அருமை!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, indoorImage may contain: 17 people, people sitting and crowdImage may contain: 5 people, people standing and indoorImage may contain: 10 people, people smiling, people standing and outdoorImage may contain: 6 people, people standingImage may contain: 1 person, standing

4 hours ago, புங்கையூரன் said:

எல்லாம் சரி....புத்தன்!

ஓபன் சுபேர்ப் பக்கம் இப்ப...என்ன கலர் போகுது...எண்டு ஒருக்காச் சொல்லுங்கோ!

 

முதலாவது படத்தின் கலர்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, putthan said:

Image may contain: 5 people, indoorImage may contain: 17 people, people sitting and crowdImage may contain: 5 people, people standing and indoorImage may contain: 10 people, people smiling, people standing and outdoorImage may contain: 6 people, people standingImage may contain: 1 person, standing

முதலாவது படத்தின் கலர்

கோழிச்சாயம் மாதிரிக் கிடக்குது!

ம்ம்ம்...,கொஞ்சம் உத்துப் பார்க்க வடிவாயும் கிடக்குது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

கோழிச்சாயம் மாதிரிக் கிடக்குது!

ம்ம்ம்...,கொஞ்சம் உத்துப் பார்க்க வடிவாயும் கிடக்குது!

வெளிநாட்டில கலியாண வீட்டிலயும்dress code  கோவிலும் dress code, எல்லாம் அவன் செயல்

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்க்கையில் நிறங்கள் மிக முக்கியமானவை .  அதன் மூலம்   ஒரு  ஒருமித்த உணர்வு ஏற்படுகிறது  சம்பவங்களை நகை   ச்சுவையாக கொண்டும் செல்லும் உங்ககள் பகிர்வு பாராட்ட் படத்தக்கது 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் உள்ள சாமிகளுக்கு ஒவ்வொரு நாளும் திரு விழாவுக்கு உடுப்பு மாத்துவது இல்லையா <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11.4.2018 at 2:20 PM, putthan said:

அட கோதாரி ஆறு ஏழு பிளவ்ஸா"

" உங்கன்ட மிசிசே பத்து பிளவ்ஸ் தைக்க கொடுத்தவ,மற்ற பிளவ்ஸ்களை முதலே எடுத்துகொண்டு போய்விட்டா,"

கதைத்தபடியே பிளவ்ஸை தைத்து முடித்து முருகிடம்  கொடுத்து விட்டாள் சுதா.

ஏன் புத்தன்?

நாங்களே ஒரு தையல் மிசினை வாங்கி உவையளுக்கு பிளவ்ஸ் தைச்சுக்குடுத்தால் என்ன? :rolleyes:

வீட்டிலை இவ்வளவு செய்யுறனாங்கள் கை..கையில்லாத .....யன்னல் வைச்ச பிளவ்ஸ் தைய்க்கமாட்டமா என்ன? :(

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி மாதிரி ஆட்கள் இப்படி பிளான் பண்ணுவினம் எண்டு தெரிஞ்சுதான் இப்பவெல்லாம் பெண்கள் கோல்ட் பிளவுஸ் தைச்சு வச்சு எல்லா சாறிக்கும் போட வெளிக்கிட்டிருக்கினம். நீங்க தைப்பீங்க மனுசிமார் போடவும் வேணுமெல்லோ.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/04/2018 at 6:51 PM, குமாரசாமி said:

முருகா உன் திருவிளையாடலுக்கு அளவேயில்லையா?

உன் பக்கதனை ஏன் இப்படி சோதிக்கின்றாய்?

உனை உனது பூர்வீக உடையுடன் காட்சி தர எல்லாம் வல்ல உன் அப்பனை வேண்டுகின்றேன்.

குமாரசாமி,

பிறகு எல்லாரும் கலர் கலரா கோவணம் கட்டிக் கொண்டு வந்திடுவினம். எதுக்கு உங்களுக்கு வீணான ஆசை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/04/2018 at 10:22 AM, குமாரசாமி said:

ஏன் புத்தன்?

நாங்களே ஒரு தையல் மிசினை வாங்கி உவையளுக்கு பிளவ்ஸ் தைச்சுக்குடுத்தால் என்ன? :rolleyes:

வீட்டிலை இவ்வளவு செய்யுறனாங்கள் கை..கையில்லாத .....யன்னல் வைச்ச பிளவ்ஸ் தைய்க்கமாட்டமா என்ன? :(

ஏன் யன்னல் ,கதவு என்று வைச்சு மினக்கெடுவான்.....அத்திவாரத்தை ஸ்ரோங்கா போட்டு நிலையை(இரண்டு பட்டி) வைச்சு தைச்சு கொடுக்கலாம்...

..Back designs of blouse

 

Ojasvee

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொறிலங்கா விமானசேவைக்கு விளம்பரம் போல இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12.4.2018 at 8:11 AM, புங்கையூரன் said:

நானும்...இப்ப செய்யிற வேலையை விட்டுப் போட்டுப்....'பிளவுஸ்' தைக்க வெளிக்கிடலாம எண்டு யோசிக்கிறன்!

 

On 14.4.2018 at 5:02 AM, putthan said:

ஏன் யன்னல் ,கதவு என்று வைச்சு மினக்கெடுவான்.....அத்திவாரத்தை ஸ்ரோங்கா போட்டு நிலையை(இரண்டு பட்டி) வைச்சு தைச்சு கொடுக்கலாம்...

Ojasvee

 

 உவையின்ரை பின்பக்க பிளவுஸ் தைக்கிறதுக்கு  வட்டாரி வைச்சுத்தான் அளவெடுக்கோணும் போலை கிடக்கு...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் மட்டும் அல்ல வெளிநாட்டு நம்ம சாமிகள் சிவ்ட் ஆன போது பயல்கள் ஆளே மாறிட்டானுகள் ( கடவுள்கள்தான் ) ஆட்களே மாறும் போது அவனும் மாற மாட்டானா ? புத்தன் அண்ணை சும்ம கலக்கலா இருந்திச்சு இவரு யாரு சிட்னி முருகனா கொடுத்து வச்சவன்யா இங்க உள்ள முருகன் இப்பவும் கோவணமும் வேட்டியும் தான் ( நானும் ஓர் முருகு)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பண்டிகை, கொண்டாட்டம் வந்தாலும் புதுப் பிளவுஸ் தைக்காமல் நம்ம பெண்களால் போகமுடியாது. பேசாமல் ஒரு பிளவுஸ் தையல்காரனாக இருந்திருக்கலாம்?

புத்தர்,

அண்மையில் கனடாவில் ஐம்பதாவது பிறந்தநாளுக்கு பாகுபலி அரச வேஷத்தில் ஒருத்தர் பொய்க்கால் குதிரைகள் படைசூழ போன வீடியோ வாட்ஸப்பில் உலாவுகின்றது. உங்களுக்கும் வந்திருக்கும்.

சந்தணம் மிஞ்சினால் கு*டியில மட்டுமில்ல முன்பக்கமும் பூசுவார்கள் நம்மவர்கள். முருகனுக்காக மஞ்சள் உடுத்துவதில் என்ன பிழை கண்டீர்கள்? ?

10 hours ago, கிருபன் said:

பிறந்தநாளுக்கு பாகுபலி அரச வேஷத்தில்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

என்ன பண்டிகை, கொண்டாட்டம் வந்தாலும் புதுப் பிளவுஸ் தைக்காமல் நம்ம பெண்களால் போகமுடியாது. பேசாமல் ஒரு பிளவுஸ் தையல்காரனாக இருந்திருக்கலாம்?

புத்தர்,

அண்மையில் கனடாவில் ஐம்பதாவது பிறந்தநாளுக்கு பாகுபலி அரச வேஷத்தில் ஒருத்தர் பொய்க்கால் குதிரைகள் படைசூழ போன வீடியோ வாட்ஸப்பில் உலாவுகின்றது. உங்களுக்கும் வந்திருக்கும்.

சந்தணம் மிஞ்சினால் கு*டியில மட்டுமில்ல முன்பக்கமும் பூசுவார்கள் நம்மவர்கள். முருகனுக்காக மஞ்சள் உடுத்துவதில் என்ன பிழை கண்டீர்கள்? ?

தப்பே இல்லை எல்லாம் அவன் செயல்....கோவண‌த்துடன் நின்றவனுக்கு கொர்ட் சூட் போட்டு பார்க்க அவனது பக்தர்கள் விரும்பினால் அதை எம் பெருமான் முருகனாலும் தடுக்கமுடியாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.