Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது

January 20, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_3166.jpg?resize=800%2C389

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று நடைபெற்றது.

யாழ். கோவில் வீதியிலுள்ள விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

IMG_3163.jpg?resize=594%2C800

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை யாரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கான மதிப்பு இருக்கும்.

எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தால் எத்தகைய மேதாவியாக இருந்தாலும் மக்களிடம் எடுபடமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லை – விக்னேஸ்வரன்

by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்

cm-300x200.jpgதமிழ்த் தேசியக் கூட்டணியை பிளவுபடுத்தும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்.னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதிதாக உருவாக்கிய தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“எந்தக் கட்சிகளையும் பிளவு படுத்துவது எமது நோக்கமல்ல. தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பை உடைக்க நான் கட்சி தொடங்கவில்லை.

தமிழ் அரசுக் கட்சிக்கு தொந்தரவு கொடுக்காமலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.

தமிழ் மக்கள் கூட்டணியில் எப்போதும் ஜனநாயகம் இருக்கும் . எனது கட்சியில் உள்ளவர்கள், கட்சியின் செயலாளர் ஆகிய என்னை,  கட்சியில் இருந்து விலகுமாறு கேட்டால் கூட, நான் கட்சியை விட்டு சென்று விடுவேன்.

நிர்வாக உறுப்பினர்களை நான்தான் நியமித்துள்ளேன். என்னை வேண்டாம் என்றால் கூட, நான் கட்சியை விட்டுச் செல்வேன். அந்தளவுக்கு ஜனநாயக யாப்பினையே நாம் தயாரித்துள்ளோம்.

நாங்கள் கொள்கை ரீதியாகச் செல்பவர்கள். எம்முடன் சேர வருபவர்கள வந்தால் அவர்களை அடையாளம் கண்டு சேர்த்துக் கொள்வோம்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பலர் எமது ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.

ஆனால் செயலாளர் ஆகிய நான் மட்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைக்க வேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பின் கொள்கைகள் என்ன என கூறினால், அவர்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு கொடுப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ள புளொட்டை எமது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. புளொட் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளது.

கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே விலகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ் போன்ற கட்சிகளை எம்முடன் இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் விபரம் வருமாறு-

wicky-tmk.jpgwicky-tmk.jpg

http://www.puthinappalakai.net/2019/01/20/news/35945

7 hours ago, nunavilan said:

நிர்வாக உறுப்பினர்களை நான்தான் நியமித்துள்ளேன். என்னை வேண்டாம் என்றால் கூட, நான் கட்சியை விட்டுச் செல்வேன். அந்தளவுக்கு ஜனநாயக யாப்பினையே நாம் தயாரித்துள்ளோம்.

நாங்கள் கொள்கை ரீதியாகச் செல்பவர்கள். எம்முடன் சேர வருபவர்கள வந்தால் அவர்களை அடையாளம் கண்டு சேர்த்துக் கொள்வோம்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பலர் எமது ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.

ஆனால் செயலாளர் ஆகிய நான் மட்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.

7 hours ago, nunavilan said:

தமிழ் மக்கள் கூட்டணியில் எப்போதும் ஜனநாயகம் இருக்கும் .

வாழ்க ஜனநாயகம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

வாழ்க ஜனநாயகம் 

ஆனாலும் விக்கி ஐயா உண்மையை வெளியே சொல்கின்றார்.
சம்பந்தர் ஐயா தானே முடிவெடுத்துவிட்டு எல்லாம் ஜனநாயகம் என்கின்றார் 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஜீவன் சிவா said:

வாழ்க ஜனநாயகம் 

தமிழ்மக்கள் விடயத்தில் சம்பந்தனையும் சுமந்திரனையும் மீறி யாரும் எதுவும் எங்கும் செய்துவிட முடியாது.( நிலம் உரிமைகள் பறிபோவதை தவிர)

அது ஜனநாயகமா?

அல்லது அவர்கள் ஏகப்பிரதிநிதிகளா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

வாழ்க ஜனநாயகம் 

விக்கி ஐயா   அவரது  உரையில்  தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
முதலாவது நியமனங்கள் மட்டுமே தன்னால் எடுக்கப்படும்
அடுத்த வருடம் பொதுக்குழுவினால் தேர்தல் மூலம் நியமனங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அது வரை கட்சி இயங்கினால்  நாங்களும் அதைப்பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தமிழ்மக்கள் விடயத்தில் சம்பந்தனையும் சுமந்திரனையும் மீறி யாரும் எதுவும் எங்கும் செய்துவிட முடியாது.( நிலம் உரிமைகள் பறிபோவதை தவிர)

அது ஜனநாயகமா?

அல்லது அவர்கள் ஏகப்பிரதிநிதிகளா?

பல சந்தர்ப்பங்களில் நீங்கள் நியாயமானதும் ஆழமாக சிந்திக்க வைப்பதுமான கேள்விகளை முன்வைக்கிறீர்கள். நன்றி.

இந்த கேள்வியும் அத்தகையதே.

விடுதலைப்புலிகள் இடைக்கால நிருவாகம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் ஈ.பி.டி.பி. போன்ற அமைப்புகள் தாமும் இடைக்கால நிருவாகத்தில் பங்குபற்ற உரிமை கோரினார்கள். விடுதலை புலிகளோ தாமே பெருமளவு தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற அமைப்பு என்ற வகையிலும் இடைக்கால நிருவாகத்தை நடத்தும் பலம் கொண்டவர்கள் என்ற வகையிலும் தம்மை மட்டுமே மக்களின் ஒரே பிரதிநிதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரினார்கள். ரணில் விக்கரமசிங்க அரசு அதை ஒரு வெள்ளிக்கிழமை ஏற்று கொண்டது. திங்கட்கிழமை சந்திரிக்கா அந்த அரசை அகற்றினார். உண்மையில் விடுதலைப் புலிகள் தவிர மற்றவர்கள் இவ்வாறான நிருவாகத்தில் இடம் பெற்று இருந்தால் அவர்கள் பல்வேறு பக்கத்தாலும் இழுத்தடித்து எதையுமே செய்ய விட்டு இருக்க மாட்டார்கள்.

இன்று மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற அமைப்பாக சம்பந்தர் தலைமையிலான கட்சி இருக்கிறது. அந்த கட்சியின் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் வேண்டிய அரசியல், இராஜதந்திர பலமும் தொடர்புகளும் கொண்டவராக சுமேந்திரனே இருக்கிறார். ஒப்பீட்டளவில் சிறிதரனோ, யோகேசுவரனோ, சாந்தியோ, மாவையோ அல்லது சித்தார்த்தனோ இந்த விதமான அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளையும் பலத்தையும் கொண்டவர்களாக இல்லை. இவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்துடன் தான் எதையும் செய்ய வேண்டும் என்றால் இவர்களும் பல்வேறு பக்கத்தாலும் இழுத்தடித்து எதையுமே செய்ய விட மாட்டார்கள். 

இவ்விடத்தில் சிங்கப்பூரின் லீ குவான் யுவை நினைவு கூருவது பொருந்தும். சிங்கப்பூரை கட்டி எழுப்ப உண்மையான ஜனநாயகம் பாதகமானது என அவர் உணர்ந்து இருந்தார். ஆனால் உலகம் ஜனநாயகத்தை எதிர்பார்க்கிறது. ஆகவே ஒரு போலியான ஜனநாயக நாடாக சிங்கப்பூரை உருவாக்கினார். எதிர்க்கட்சியில் தப்பி தவறி எவரும் இடம்பெற்றால், அவர்களின் பொட்டுகேடுகளை கண்டு பிடித்து அவர்களை தனித் தீவில் ஆண்டுக்கணக்காக சிறையில் வைத்தார். சிங்கபூர் இன்று அமெரிக்காவிலும் பார்க்க தனிநபர் பொருளாதரத்தில் சிறந்து விளங்குகிறது. 

Maccari-Cicero.jpg

ஆகவே உண்மையான ஜனநாயகம்  எங்கள் மக்களுக்கும் பாதகமானது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார முதிர்ச்சி அடைந்த நாடுகளுக்கு ஜனநாயகம் பொருத்தமாக இருக்கிறது. மேலும் இந்த நாடுகளின் அரசியல் வரலாறும் ஆட்சி முறையும்  ரோமன் ஜனநாயக முறையில் இருந்து படிப்படியாக நூற்றாண்டு காலமாக வளர்ச்சி அடைந்து வந்து இருக்கிறது. எங்கள் மக்களுக்கு ஐரோப்பியரால் பொருந்தாத திணிப்பாக இந்த ஜனநாயக ஆட்சி முறை திணிக்கப்பட்டு இருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு நேர்காணலில் கூறியது போல எங்கள் மக்களுக்கு ஏதோ ஒரு வகையான மக்கள் ஆட்சி தேவை. ஆனால் அது ரோமன் ஆட்சி முறையில் இருந்து வந்த இன்றைய ஜனநாயக முறையாக தான் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமானதல்ல.

Edited by Jude

On 1/20/2019 at 10:45 PM, வாத்தியார் said:
On 1/20/2019 at 10:45 PM, வாத்தியார் said:

இவர்களை யாரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கான மதிப்பு 

புலம்பெயர்ந்த மக்கள் கணக்கில் எடுத்தால் மட்டும் போதும்.

யாழ் மக்கள் கணக்கில் எடுக்க தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் விடையத்தில் புலம்பெயர்தமிழர்கள் கூடிய விரைவில் தீர்க்கமான முடிவை எடுக்கும் நேரம் வெகுவிரைவில் வரும் என நான் நம்புகிறேன்.

இதேபோல தாயகத்தின் எமது உறவுகள் எதிர்காலத்திலும் போவார்களாகவிருந்தால். புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள்பாட்டைப்பார்த்துக்கொண்டு செல்வதைத்தவிர வேறுவழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை நாட்டுக்கே எடுத்துக் காட்டாக இருக்கட்டும்
 
17500.jpg
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு நேற்று முன்தினம் 20ஆம் திகதி கூடியது.
 
புதிய கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் என்ற வகையிலும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளை அறிவிக்கப்படுகின்ற கூட்டம் என்பதாலும் அதன் மீதான பார்வை அந்தக் கட்சி தொடர்பான கணிப்பை அளவிடுவதற்கு உதவுகின்றது.
 
இந்த வகையில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியில் ஒரு சிலர் அதிகாரம் செலுத்துகின்ற சிலர் உரிமைத்தன்மை அறவே இல்லை எனலாம்.
 
இது அந்தக் கட்சி தமிழ் மக்களுக்கு நல்லதொரு அரசியல் தலைமையைத் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.தவிர, நேற்று முன்தினம் நடந்த மத்திய குழுக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாப்புகளும் உப விதிகளும் கட்சியின் கட்டமைப்பும் மிகத் தெளிவாக குறித்துரைக்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியமான விடயமாகும்.
 
இவற்றுக்கு மேலாக, ஆலோசனைக் குழுவில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனையானது வழங்கப்படுகின்ற ஆலோசனைகள் சுயநலம் கடந்து தமிழ் மக்களின் நலனை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த ஏற்பாடாகும்.
 
ஆலோசனைக் குழுவில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்றால், அவர்களின் ஆலோசனை எப்படியாக இருக்கும் என்பதை நாம் கூறி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்காது.
 
எனவே ஆலோசனைக் குழுவுக்கான நிபந்தனை மிகவும் பொருத்தமானது. இவையாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகப்பாதையில் அடித்தளத்தில் இருந்து மேல் நோக்கியதாக கட்சிப் பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறும் என்ற கட்சி யாப்பு; கட்சியின் அடிமட்டத் தொண்டனும் கட்சியின் கட்டமைப்பில் பங்கேற்கின்ற ஜனநாயக உரிமையை வழங்குவதாகும்.
 
இவைதான் என்றால் இல்லை, கட்சி நினைத்தால், என்னையும் வெளியேற்ற முடியும் என்று ஒரு கட்சியின் நிறுவுநர் அறிவிக்கின்ற அளவில் அந்தக் கட்சியின் யாப்புகளும் உப விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன எனும்போது,
 
உண்மையிலேயே தமிழ் மக்கள் கூட்டணி சொந்த நலன்; குடும்ப நலன்; ஒரு பகுதியினரின் அதிகாரம் என்ற எல்லைகள் கடந்து ஒரு அரசியல் கட்சி என்றால் அது எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாட்டுக்கே எடுத்துக் காட்டுகின்ற கட்சியாக நிர்மாணிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
 
கூடவே தமிழ் மக்களுக்கு ஒரு சரியான அரசியல் தலைமை முகிழ்த்துள்ளது என்ப தையும் இது உறுதி செய்கிறது.
 
எதுவாயினும் நீதியரசர் விக்னேஸ்வரன் அமைத்துத் தந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் வளர்ச்சி என்பது தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 
 
12 minutes ago, Elugnajiru said:

இதேபோல தாயகத்தின் எமது உறவுகள் எதிர்காலத்திலும் போவார்களாகவிருந்தால். புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள்பாட்டைப்பார்த்துக்கொண்டு செல்வதைத்தவிர வேறுவழியில்லை.

நீங்கள் யதார்த்தத்தைப் பேசுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, thulasie said:

நீங்கள் யதார்த்தத்தைப் பேசுகிறீர்கள்.

இப்பவும் புலம் பெயர்ந்தவர்களால் அரசியலில் ஆட்டம் காண வைக்க முடியல மாறாக உதவிகளை மட்டும் செய்ய முடிகிறது 

23 hours ago, nunavilan said:
உண்மையிலேயே தமிழ் மக்கள் கூட்டணி சொந்த நலன்; குடும்ப நலன்; ஒரு பகுதியினரின் அதிகாரம் என்ற எல்லைகள் கடந்து ஒரு அரசியல் கட்சி என்றால் அது எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாட்டுக்கே எடுத்துக் காட்டுகின்ற கட்சியாக நிர்மாணிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
 
கூடவே தமிழ் மக்களுக்கு ஒரு சரியான அரசியல் தலைமை முகிழ்த்துள்ளது என்ப தையும் இது உறுதி செய்கிறது.
 
எதுவாயினும் நீதியரசர் விக்னேஸ்வரன் அமைத்துத் தந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் வளர்ச்சி என்பது தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 

புதிய கட்சியை தாபிப்பது, நிலைபெறச் செய்வதென்பது இலகுவான விடயமல்ல.

விக்னேஸ்வரன் அவர்கள் தனது வலுவுக்கு அப்பாற்பட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளார். எனினும் இருக்கும் சூழ்நிலையில், அரசியல் பாதையில் இதைத் தவிர அவருக்கு வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை.

அவரது கட்சி நிர்வாகிகள் பலர் பெரிதும் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து இணைக்கப்படுபவர்கள் கருணா உட்பட பெரும்பாலான கிழக்கு மாகாண அரசியல்வாதிகளைப் போன்று பிரதேசவாத வெறியர்களை இணைக்காமல் இருப்பது நலமானது.

வடக்கு மாகாணத்தில் சாதிவெறியர்களை, சுயநலப் பெருச்சாளிகளை இணைக்காமல் இருப்பது நலமானது. 

On 1/22/2019 at 4:43 AM, வாத்தியார் said:

விக்கி ஐயா   அவரது  உரையில்  தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
முதலாவது நியமனங்கள் மட்டுமே தன்னால் எடுக்கப்படும்
அடுத்த வருடம் பொதுக்குழுவினால் தேர்தல் மூலம் நியமனங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அது வரை கட்சி இயங்கினால்  நாங்களும் அதைப்பார்க்கலாம்

அரைகுறையா வாசிப்பவர்களுக்கு இதெல்லாம் விளங்காது!

On 1/21/2019 at 11:13 PM, வாத்தியார் said:

விக்கி ஐயா   அவரது  உரையில்  தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
முதலாவது நியமனங்கள் மட்டுமே தன்னால் எடுக்கப்படும்
அடுத்த வருடம் பொதுக்குழுவினால் தேர்தல் மூலம் நியமனங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அது வரை கட்சி இயங்கினால்  நாங்களும் அதைப்பார்க்கலாம்

அதுவரை கட்சி  இயங்கினால்தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, thulasie said:

அதுவரை கட்சி  இயங்கினால்தானே.

பொதுவானவர் போல் கருத்துக்களை பரிமாறும் நீங்கள்!!!!!

ஏன் விக்கியரை ஏற்க மறுக்கின்றீர்கள்?

அவரும் வரட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும், சுமந்திரனும்.... 
வெந்த புண்ணில்..... வேல், பாய்ச்சிய மாதிரி...
கிழக்கு.. மாகாணத்தை  முஸ்லீம்களிடம்  கொடுத்து,
வடக்கு... மாகாணத்தை, சிங்களவரிடம் கொடுக்க திட்டம் வைத்துள்ளார்கள், என்ற சந்தேகம் உள்ளது. 

ரணிலுக்கு... குத்தி, முறிஞ்ச   சுமந்திரன்.
அவரின்,  அரசியல் ஆசான்...  சம்பந்தனின்   குசியான  எதிர்க்கட்சி பதவியை, பறி கொடுக்க விட்டது சரியல்ல.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பொதுவானவர் போல் கருத்துக்களை பரிமாறும் நீங்கள்!!!!!

ஏன் விக்கியரை ஏற்க மறுக்கின்றீர்கள்?

அவரும் வரட்டும். 

வேண்டப்பட்டவரின் பிரச்சார திறமை, எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறனற்று கேட்டதை அப்படியே ஏற்று நம்பும் தன்மை. சிலர் காரணமில்லாமல் சிலரை எதிரிகாளாக நினைப்பதும், பரப்புவதும் உண்டு. இன்று இது பாெதுவான தன்மையாகிவிட்டது.

14 hours ago, குமாரசாமி said:

பொதுவானவர் போல் கருத்துக்களை பரிமாறும் நீங்கள்!!!!!

ஏன் விக்கியரை ஏற்க மறுக்கின்றீர்கள்?

அவரும் வரட்டும். 

விக்கியார், அரசியலில் தத்துக் குட்டி.

அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள சட்டாம்பியளுக்கும் நீதியரசருக்கும் வித்தியாசம் இருக்குதானே?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, thulasie said:

விக்கியார், அரசியலில் தத்துக் குட்டி.

அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

சுமந்திரன்/சம்பந்தம்  ஆக்களெல்லாம் எல்லாம் தெரிஞ்சு முத்தினபடியே  ஆகாயத்திலையிருந்து குதிச்சவையாக்கும் :cool:

15 hours ago, thulasie said:

அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

ம்ம். விக்கியருக்கு ,
திருடத் தெரியாது,
கொள்ளையடிக்கத் தெரியாது,
ஒன்றை சொல்லி இன்னொன்றை செய்யத் தெரியாது,
காசை நீட்டுபவர்களிடம் வாலை ஆட்டி நம்பினவர்களுக்கு துரோகம் செய்யத் தெரியாது,
ஏமாத்தத் தெரியாது,
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது,
தமிழர்களை கொலை செய்பவர்களை பாதுகாக்கத் தெரியாது,
இப்பிடி அவருக்கு மோசமான காரியங்கள் செய்ய நிறையத் தெரியாது
என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

1 hour ago, Rajesh said:

உங்களது உத்தம புருஷரின் bank balance நிச்சயமாக மக்களுக்கு வெளிப்படையாக தெரியாது என்பதையும் உங்கள்  பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அதுவரை கட்சி  இயங்கினால்தானே.

அப்ப ஏன் இவ்வளவு பதட்டம்?! 

Quote

உங்களது உத்தம புருஷரின் bank balance நிச்சயமாக மக்களுக்கு வெளிப்படையாக தெரியாது என்பதையும் உங்கள்  பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சம்பந்தன் ஐயா, சுமந்திரன் ஐயா, மாவை ஐயாக்களின்ர சொத்துபத்து, வங்கி இருப்பு விபரங்களயும் வெளியிடுங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.