Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் தனித்துவத்தை பேண எத்தனிப்பது பிழை என்று சொன்ன பிரித்தானிய ராஜதந்திரிகளுக்கு பாடம் புகட்டி அனுப்பிய விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் மேலும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஆகிய ஃபேர்கஸ் ஒளல்ட், இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன், அலுவலர் ஜோவிடா அருளாநந்தம் ஆகியோர் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை இன்று (24.01.2019) காலை 11.45 மணியளவில் நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்தனர் .

இந்த சந்திப்பின்போது பிரித்தானிய ராஜதந்திரிகள் தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெரிவித்த சில கருத்துக்களுடன் உடன்பட மறுத்த விக்னேஸ்வரன் அவர்களுடன் தர்க்கம் செய்தார்.

பிரித்தானியாவில் பல நாடுகளில் இருந்தும் மக்கள் தம் நாட்டுக்கு வந்து தம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டை முன்னேற்றிச் செல்வதாக கருத்து கூறியதுடன் தனித்துவத்தை நீங்கள் பேண எத்தனிப்பது சரியான ஒரு விடயம் என்று தமக்குப் படுவதாகத் தெரியவில்லை என்று ஃபேர்கஸ் கருத்து கூறியபோது அதற்குப் பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் வெளிநாடுகளில் இருந்து எத்தனைபேர் வந்தாலும் நாட்டின் அதிகாரம் பிரித்தானிய நாட்டு மக்களின் கைகளிலேயே அமைந்துள்ளது என்றும் ஒரு நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மற்றவர்கள் இணைந்து செயற்படுவது வேறு தம் நாட்டிலேயே இரண்டாந் தரப் பிரஜைகளாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலை வேறு என்றும் கூறினார். அதற்கு திரு ஃபேர்கஸ் அவர்கள் பிரித்தானியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், உதாரணமாகத் தமிழர்கள், பெரும் பங்காற்றி வருகின்றார்கள் என்றும்; ஏன் அதேவாறு தமிழ் மக்களும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தினுள் நுழைந்து பங்காற்ற முடியாது என்றும் கேட்டார். அதற்கு முன்னைய முதலமைச்சர் அவர்கள் ‘எம் நாட்டிலேயே எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கிவிட்டு எம்மை நாட்டின் அரசியல் நீரோட்டத்துடன் சேரச் சொல்வது முறையானதாக எனக்குப்படவில்லை. கிணற்றின் உள்ளே ஒருவரை வைத்துக் கொண்டு கிணற்றுக்கு வெளியே மற்றொருவர் நின்று கொண்டு ஏன் என்னோடு ஒருமித்து செயற்பட மறுக்கின்றீர்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது உங்கள் கேள்வி’ என்று கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது:

பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் மேலும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஆகிய ஃபேர்கஸ் ஒளல்ட் என்பவர் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன் அவர்களுடனும் அலுவலர் ஜோவிடா அருளாநந்தம் அவர்களுடனும் முன்னைய முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று (24.01.2019) காலை 11.45 மணியளவில் நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்தார்.

அண்மையில் ஒரு புதிய அரசியல் கட்சியை நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் தொடங்கியதாகத் தாம் அறிந்து கொண்டதாகவும் அதற்கான காரணம் என்னவென்றும் அவர் முன்னைய முதலமைச்சரிடம் கேட்டார். அதற்கு நீதியரசர் அவர்கள் மக்களிடம் வாக்குப் பெறச் செல்லும் போது சில முக்கியமான அடிப்படை விடயங்களைப் பெற்றுத் தருவதாக மக்களிடம் கூறி வாக்குப் பெற்று விட்டு அவை சம்பந்தமாக அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாது மிகவும் குறைந்த அளவு சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ்த் தலைவர்கள் முயன்றுள்ளதால் அதை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் தமது முதுமையின் போது இவ்வாறான ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிப்பது என்பது சாதாரண விடயம் அன்று என்றும் எனினும் நடைபெறும் விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லா விட்டால் 2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மக்களின் பாரம்பரியமானது ஒரு சில வருடங்களில் இல்லாதொழிக்கப்படும் என்றும் கூறினார்.

இதற்கு திரு ஃபேர்கஸ் அவர்கள் பிரித்தானியாவில் பல நாடுகளில் இருந்தும் மக்கள் தம் நாட்டுக்கு வந்து தம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டை முன்னேற்றிச் செல்வதாக கருத்து கூறியதுடன் தனித்துவத்தை நீங்கள் பேண எத்தனிப்பது சரியான ஒரு விடயம் என்று தமக்குப் படுவதாகத் தெரியவில்லை என்று கூறினார். அதற்குப் பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் வெளிநாடுகளில் இருந்து எத்தனைபேர் வந்தாலும் நாட்டின் அதிகாரம் பிரித்தானிய நாட்டு மக்களின் கைகளிலேயே அமைந்துள்ளது என்றும் ஒரு நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மற்றவர்கள் இணைந்து செயற்படுவது வேறு தம் நாட்டிலேயே இரண்டாந் தரப் பிரஜைகளாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலை வேறு என்றும் கூறினார். அதற்கு திரு ஃபேர்கஸ் அவர்கள் பிரித்தானியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், உதாரணமாகத் தமிழர்கள், பெரும் பங்காற்றி வருகின்றார்கள் என்றும்; ஏன் அதேவாறு தமிழ் மக்களும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தினுள் நுழைந்து பங்காற்ற முடியாது என்றும் கேட்டார்.

அதற்கு முன்னைய முதலமைச்சர் அவர்கள் ‘எம் நாட்டிலேயே எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கிவிட்டு எம்மை நாட்டின் அரசியல் நீரோட்டத்துடன் சேரச் சொல்வது முறையானதாக எனக்குப்படவில்லை. கிணற்றின் உள்ளே ஒருவரை வைத்துக் கொண்டு கிணற்றுக்கு வெளியே மற்றொருவர் நின்று கொண்டு ஏன் என்னோடு ஒருமித்து செயற்பட மறுக்கின்றீர்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது உங்கள் கேள்வி’ என்று கூறினார்.
மேலும், தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் கையளிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் கூறுவது போல் எம்மாலும் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நீரோட்டத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு செயலாற்ற முடியும் என்றும் கூறினார். ஆனால் முதலில் எங்களைக் கிணற்றினுள் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இராணுவத்தை வைத்துக் கொண்டு பக்கச்சார்பான சட்டங்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டு தமது அரசியல் நீரோட்டத்தினுள் சேருமாறு சிங்கள அரசியல் தலைவர்கள் கோரினார்களேயாகில் அது சமத்துவ அடிப்படையிலான கோரிக்கை அன்று என்று விளக்கினார். எமது உரிமைகளை அரசாங்கம் தந்த பின்னர் நாம் மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து செயலாற்ற முடியும். ஆனால் முதலில் எமது தமிழ்ப் பேசும் பிரதேசங்களான வடகிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும். சர்வதேச சட்டத்தின் கீழ் உள்நாட்டு சுயநிர்ணய உரிமை எமக்கு இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்;கொள்ள வேண்டும். மேலும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் இறுதியில், ‘உங்கள் மக்களின் உரிமைகளுக்காக நீங்கள் போராடுவதாக இருந்தால் அதனை நான் பாராட்டுகின்றேன். உங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகின்றேன்’ என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் கௌரவ ஃபேர்கஸ் அவர்கள். இன்று மத்தியானமே இரயிலில் கொழும்புக்குப் பிரயாணம் செய்வதாகக் கூறினார்.

http://www.samakalam.com/செய்திகள்/தமிழர்கள்-தனித்துவத்தை-ப/

விக்கியாருக்கு, இராஜதந்திரிகளுடன் எப்படிப் பேசவேண்டும் என்றுகூடத் தெரியாது.

இவரெல்லாம் கட்சி ஆரம்பித்து எதைக் காண  போகிறார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, thulasie said:

விக்கியாருக்கு, இராஜதந்திரிகளுடன் எப்படிப் பேசவேண்டும் என்றுகூடத் தெரியாது.

இவரெல்லாம் கட்சி ஆரம்பித்து எதைக் காண  போகிறார்?

2009க்கு பிறகு எதுக்கெடுத்தாலும் கோயில்மாடு மாதிரி தலையாட்டிக்கொண்டிருக்கிறவை ஏதாவது உருப்படியாய் செய்திருந்தாலும் விக்கியர் செய்தது பிழையெண்டு சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, thulasie said:

விக்கியாருக்கு, இராஜதந்திரிகளுடன் எப்படிப் பேசவேண்டும் என்றுகூடத் தெரியாது.

இவரெல்லாம் கட்சி ஆரம்பித்து எதைக் காண  போகிறார்?

இந்த விடயத்தில் விக்கி ஐயாவின் கருத்து மிகச் சரியென்று நான் நினைக்கிறேன். சட்டத்தின் ஆட்சி,  யாரிடம் என்ன திறன் இருக்கிறது என்று இனம், தோல் நிறம் தாண்டிப் பார்க்கும் (பெரும்பாலும்) மனநிலை கொண்ட மக்கள், மொழி அமல்படுத்தலை அரசியலாக அல்லாமல் பயன்பாட்டு ரீதியாக நோக்கும் அரசுகள் இப்படி இருக்கும் நாடுகளின் நிலையில் இருந்து இலங்கையில் இருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளை நோக்கக் கூடாது. வந்தவர் விக்கிபீடியாவில் இலங்கை பற்றி அவசரமாக வாசித்து விட்டு கூட்டத்திற்கு வந்திருப்பார் போல! 

5 hours ago, thulasie said:

விக்கியாருக்கு, இராஜதந்திரிகளுடன் எப்படிப் பேசவேண்டும் என்றுகூடத் தெரியாது.

இவரெல்லாம் கட்சி ஆரம்பித்து எதைக் காண  போகிறார்?

6 hours ago, கிருபன் said:

அதற்கு முன்னைய முதலமைச்சர் அவர்கள் ‘எம் நாட்டிலேயே எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கிவிட்டு எம்மை நாட்டின் அரசியல் நீரோட்டத்துடன் சேரச் சொல்வது முறையானதாக எனக்குப்படவில்லை. கிணற்றின் உள்ளே ஒருவரை வைத்துக் கொண்டு கிணற்றுக்கு வெளியே மற்றொருவர் நின்று கொண்டு ஏன் என்னோடு ஒருமித்து செயற்பட மறுக்கின்றீர்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது உங்கள் கேள்வி’ என்று கூறினார்.
மேலும், தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் கையளிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் கூறுவது போல் எம்மாலும் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நீரோட்டத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு செயலாற்ற முடியும் என்றும் கூறினார். ஆனால் முதலில் எங்களைக் கிணற்றினுள் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இராணுவத்தை வைத்துக் கொண்டு பக்கச்சார்பான சட்டங்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டு தமது அரசியல் நீரோட்டத்தினுள் சேருமாறு சிங்கள அரசியல் தலைவர்கள் கோரினார்களேயாகில் அது சமத்துவ அடிப்படையிலான கோரிக்கை அன்று என்று விளக்கினார். எமது உரிமைகளை அரசாங்கம் தந்த பின்னர் நாம் மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து செயலாற்ற முடியும். ஆனால் முதலில் எமது தமிழ்ப் பேசும் பிரதேசங்களான வடகிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும். சர்வதேச சட்டத்தின் கீழ் உள்நாட்டு சுயநிர்ணய உரிமை எமக்கு இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்;கொள்ள வேண்டும். மேலும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் இறுதியில், ‘உங்கள் மக்களின் உரிமைகளுக்காக நீங்கள் போராடுவதாக இருந்தால் அதனை நான் பாராட்டுகின்றேன். உங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகின்றேன்’ என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் கௌரவ ஃபேர்கஸ் அவர்கள்.

ராஜதந்திரமாக வேறு எப்படி பேசியிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் ?

7 hours ago, குமாரசாமி said:

2009க்கு பிறகு எதுக்கெடுத்தாலும் கோயில்மாடு மாதிரி தலையாட்டிக்கொண்டிருக்கிறவை ஏதாவது உருப்படியாய் செய்திருந்தாலும் விக்கியர் செய்தது பிழையெண்டு சொல்லலாம்.

30 வருட காலமாக,  தலைவருக்கு கோயில் மாடு மாதிரி தலையாட்டியவர்களுக்கு ,  2009 இற்கு பிற்பாடு,  ஓரளவாவது சுதந்திரமாக பேசுவதற்கு இடம் கொடுத்திருக்குது, சிங்கள அரசு.

அதற்காக, சிங்கள அரசு நல்லது என்று சொல்ல வரவில்லை.

ஓர் அரசையே புரட்டிப் போடும் அளவுக்கு சுமந்திரனுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது.

சம்பந்தன், சுமந்திரன், மாவை  போன்றோர் கோயில் மாடுகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

சம்பந்தன், சுமந்திரன், மாவை  போன்றோர் கோயில் மாடுகள் அல்ல.

அவை எல்லாம் கோயில் மாடுகளில்லை. அவர்கள் கோவிலுக்காக நேர்ந்துவிட்ட ஆடுகள்.  மாறி தலையை ஆட்டினால் தலையே போயிடும் பாருங்கோ!

2 hours ago, thulasie said:

30 வருட காலமாக,  தலைவருக்கு கோயில் மாடு மாதிரி தலையாட்டியவர்களுக்கு ,  2009 இற்கு பிற்பாடு,  ஓரளவாவது சுதந்திரமாக பேசுவதற்கு இடம் கொடுத்திருக்குது, சிங்கள அரசு.

அதற்காக, சிங்கள அரசு நல்லது என்று சொல்ல வரவில்லை.

ஓர் அரசையே புரட்டிப் போடும் அளவுக்கு சுமந்திரனுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது.

சம்பந்தன், சுமந்திரன், மாவை  போன்றோர் கோயில் மாடுகள் அல்ல.

ஆஹா , இவர்கள் கோயில் மாடுகளை விட கேவலமானவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, thulasie said:

ஓர் அரசையே புரட்டிப் போடும் அளவுக்கு சுமந்திரனுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது.

நீங்கள் சாெல்வது உண்மையாயின், அவ்வளவு சுதந்திரம் சுமந்திரனுக்கு அரசு காெடுத்திருந்தும், திறமை இருந்தும் அவர் வேண்டுமென்றே தமிழர் பிரச்சனைக்கு  தீர்வு காண முயற்சிக்காமல் இழுத்தடிக்கிறார் என்று காெள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தனயாவின் வழமையான drivel.

விக்கி அவர்கள் நேரம் கொடுத்து தர்க்கித்ததே செய்த மரியாதையாகும்.

விக்கியிடம் கேமரூன் கொட்டுத வாக்குறுதி எங்கே என்று கேட்டிருந்தால், வாதம் இல்லாமலே முடிந்திருக்கும்.

6 hours ago, thulasie said:

சம்பந்தன், சுமந்திரன், மாவை  போன்றோர் கோயில் மாடுகள் அல்ல.

ம்ம் அவர்களை மாடுகளுடன் ஒப்பிட்டு மாடுகளை கேவலப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்! எருமைகளுடன் கூட ஒப்பிட முடியாது அவர்களை.

2 hours ago, Rajesh said:

ம்ம் அவர்களை மாடுகளுடன் ஒப்பிட்டு மாடுகளை கேவலப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்! எருமைகளுடன் கூட ஒப்பிட முடியாது அவர்களை.

எருமையும், மாட்டின் இனம்தானே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

எருமையும், மாட்டின் இனம்தானே

மாட்டினம்தான் .... எருமைகள்  நாட்டு நடப்பு தெரியாத காட்டின மாடுகள்.
பின் நாட்களில் சிலர் எருமைகளை வைத்து உழுது பால் கறந்து இருந்ததை 
நான் வவுனிக்குளம் பகுதியில் பார்த்திருக்கிறேன். 
சின்ன வயதில் எமது வீடுகளுக்கு பக்கமாக இரு எருமை மாடுகள் ஒரு வீட்டில் 
இருந்தது ..... நாம் சிறுவயதில் பள்ளி போகும்போது பயந்து பயந்துதான் அந்த 
வீடடை கடந்து போவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

மாட்டினம்தான் .... எருமைகள்  நாட்டு நடப்பு தெரியாத காட்டின மாடுகள்.
பின் நாட்களில் சிலர் எருமைகளை வைத்து உழுது பால் கறந்து இருந்ததை 
நான் வவுனிக்குளம் பகுதியில் பார்த்திருக்கிறேன். 
சின்ன வயதில் எமது வீடுகளுக்கு பக்கமாக இரு எருமை மாடுகள் ஒரு வீட்டில் 
இருந்தது ..... நாம் சிறுவயதில் பள்ளி போகும்போது பயந்து பயந்துதான் அந்த 
வீடடை கடந்து போவோம். 

எருமை  மாட்டுக்கு  தோல் தடித்திருக்கும்

காது  கொஞ்சமல்ல  அதிகமாகவே  மந்தமாக  கேட்கும்

எருமை  மாடுகளை எவரும்   கும்பிடுவதில்லை

அதன் எருவை விபூதிக்கு பயன்படுத்துவதில்லை

அதன்  சலத்தை  எவரும்  பருகுவதுமில்லை😀😀

(நாம  இப்படி  போவம்)

41 minutes ago, Maruthankerny said:

மாட்டினம்தான் .... எருமைகள்  நாட்டு நடப்பு தெரியாத காட்டின மாடுகள்.
 
மாடுகள், நாட்டு நடப்பு தெரிந்ததுகள் என்று, சொல்லுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, thulasie said:

விக்கியாருக்கு, இராஜதந்திரிகளுடன் எப்படிப் பேசவேண்டும் என்றுகூடத் தெரியாது.

எனக்கு  மாட்டினம், எருமை இனம் பற்றி ஒரு கரிசனையும் இல்லை.

உங்களுக்கு இராஜதந்திர மரபு (diplomatic protocl) தெரியாதா?

ராஜதந்திகிளுக்கிடையிலான ஓர் உண்மையான போட்டி ஆயினும், ஓர் நாட்டின் மண்ணில் அந்த மண்ணின் குடிமகனே வெல்வதத்திற்கு வழிவிடவேண்டும் , ஏனைய ராஜதந்திரிகள்  உண்மையாகவே தோற்பது  போன்ற தோற்றத்துடன். 

ஓர் நாட்டின் ஒப்பிட்டஅளவில் உயர் குடிமகன், அந்நாட்டின் முன்னாள் நீதி அரசர், வடக்கின் முன்னாள் முதல்வர் அந்நாட்டு மண்ணிலேயே வைத்து இன் னொரு நாட்டின் ராஜதந்திரி விமர்சிக்க, தர்க்கிக்க  முனைந்ததே பிழை, இராஜதந்திர மரபை மீறும் செயல்.

இது முன்பே நிர்ணயிக்கப்பட்ட சந்திப்பு, தற்செயலாக இருக்க முடியாது.

விக்கி அவர்கள் ராஜதந்திரி இருக்க வேண்டிய இடத்தில இருத்தி உள்ளார்.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, thulasie said:

30 வருட காலமாக,  தலைவருக்கு கோயில் மாடு மாதிரி தலையாட்டியவர்களுக்கு

தனி நபர்களாக சிலவேளைகளில் பிரபாவிற்கு தலை ஆட்ட வேண்டி இருந்திருக்கலாம். அது கூட இனத்தின், தேசத்தின் நலனை கொண்டே அந்த தலையாட்டுதலை பிரபா எதிர்ப்பார்த்திருப்பர்..

ஓர் இனமாக, தேசமாக அவர் தான் எல்லோருக்கும் (துரோகிகளுக்கு கூட) தலை ஆட்டினவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, thulasie said:

30 வருட காலமாக,  தலைவருக்கு கோயில் மாடு மாதிரி தலையாட்டியவர்களுக்கு ,  2009 இற்கு பிற்பாடு,  ஓரளவாவது சுதந்திரமாக பேசுவதற்கு இடம் கொடுத்திருக்குது, சிங்கள அரசு.

அதற்காக, சிங்கள அரசு நல்லது என்று சொல்ல வரவில்லை.

ஓர் அரசையே புரட்டிப் போடும் அளவுக்கு சுமந்திரனுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது.

சம்பந்தன், சுமந்திரன், மாவை  போன்றோர் கோயில் மாடுகள் அல்ல.

தலைவர் வருவதற்கு முதல் 40/30 வருட  ஈழத்தமிழர் அரசியல் போராட்டங்கள் பற்றியும் அதற்கான இனக்கலவர அழிவுகள் பற்றியும் எங்கேயாவது படித்துவிட்டு வாருங்கள்.

தொடர்ந்து கதைக்கலாம்.  

வாவ் என்னது சுமந்திரனுக்கு அரசையே புரட்டி போடும் அளவிற்கு சுதந்திரமா?  அப்படியென்றால் ஏன் இன்னும் 50ம் வருடங்களில் இருந்த பிரச்சனைகள் கூட இன்னும் தீர்க்கப்படவில்லை?

எப்படி ஏன் தமிழர்பிரதேசங்களில் அவசியமில்லாமல் பௌத்த சின்னங்களும் விகாரைகளும் நிர்மாணிக்கப்படுகின்றன?

நீங்கள் குறிப்பிட்ட அந்த மூவரில் இருவர் அன்றே கோயில் மாடுகள் தான். கூட்டுக்கு ஒரு எருமையை சேர்த்தவுடன் மிகுதி இருவரும் எருமை பட்டியலில் இணைந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/25/2019 at 8:25 AM, thulasie said:

விக்கியாருக்கு, இராஜதந்திரிகளுடன் எப்படிப் பேசவேண்டும் என்றுகூடத் தெரியாது.

இவரெல்லாம் கட்சி ஆரம்பித்து எதைக் காண  போகிறார்?

தாங்கள் ஒரு வகுப்பெடுத்து, எப்படி பேசவேண்டுமென்று கற்றுக்காெடுத்தால் பிரச்சனை தீர்ந்தது.

பிரித்தானிய பிரதிநிதி இப்படி கூறியது நகைப்புக்குரியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கொண்டே பிரித்தானிய தனித்துவம் தொடர்பில் கறாராக இருப்பவர்கள்.  ஐக்கிய இராய்ச்சியத்துக்குள் ஒரே மொழி பேசும் மக்களுக்குள் இங்கிலாந்து,  அயர்லாந்து, ஸகொட்லாந்து , வேல்ஸ் என்று தனித்துவமான மக்களாக தம்மை அடையாளப்படுத்தி அரசாட்சியை தனித் தனியாக பேணுபவர்கள். உலக கிண்ண கால்பந்து போட்டியில் தனித் தனி அணிகளாக பங்குபற்றுபவர்கள் எம்மைப்பார்தது அப்படிக் கூறுவது  ஒரு இளக்காரம் தான். 

Edited by tulpen

10 hours ago, satan said:

தாங்கள் ஒரு வகுப்பெடுத்து, எப்படி பேசவேண்டுமென்று கற்றுக்காெடுத்தால் பிரச்சனை தீர்ந்தது.

சுமந்திரன் உங்களுக்கு தேவையான வகுப்புக்களை நடத்தி கொண்டிருக்கிறார்.

அதில்  விக்கியார் கலந்து  கொண்டு, எப்படி இராஜதந்திரிகளுடன் பேச  வேண்டும் என்பதை பயின்றால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, thulasie said:

சுமந்திரன்

சிங்களவருக்கு வக்காளத்து வாங்கி எதிர்க்கட்சிதலைவர் கதிரை அம்பாே, வகுப்பு?...... விக்கியருக்கு?...... சுமந்திரனும் அதன் அடிவருடிகளுந்தான் விக்கியருக்கு எதிராக ஆதாரமற்ற கருத்துக்களை வைக்கமுடியும் என எதிர்பார்த்தேன். என் கணிப்பு சரியென உங்கள் பதில் நிரூபித்துவிட்டது. நன்றி.

15 hours ago, thulasie said:

சுமந்திரன் உங்களுக்கு தேவையான வகுப்புக்களை நடத்தி கொண்டிருக்கிறார்.

அதில்  விக்கியார் கலந்து  கொண்டு, எப்படி இராஜதந்திரிகளுடன் பேச  வேண்டும் என்பதை பயின்றால் நல்லது.

விக்கியர் எதற்காக அயோக்கியர்களில் ஒருவரான சுமந்திரனிடம் கற்க வேண்டும்?

1 hour ago, Rajesh said:

விக்கியர் எதற்காக அயோக்கியர்களில் ஒருவரான சுமந்திரனிடம் கற்க வேண்டும்?

விக்கியாருக்கு யோக்கியன் என்றால் என்னவென்று புரியாது.😜

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.