Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், சங்கிலியன் காலத்திற்கு உரியவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

எல்லா நாடுகளும் தமிழரைக் கருவறுத்தல் எனும் ஒரே நோக்கத்திற்காகவே இயங்குகின்றன என்ற இறுதி முடிவுக்கு வரலாம்!

இன்னுமா முடிவுக்கு வரவில்லை....!! இந்த நாடுகளுக்கெல்லாம் தலைமை இந்தியாதான் என்பதுகூடத் தெரியவில்லையா....?? Bildergebnis für cat+eye+closed

  • Replies 52
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஓர் வாட்ஸப் பகிர்வு.

மன்னார் மனித எலும்புக்கூடுகளை பீட்டா பெற்றுக்கொண்ட திகதி   25.01.2019. 
அறிக்கையிடப்பட்ட திகதி  21.02.2019.

“மன்னார் புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை முடிவுகள் தமிழர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என கவுரவ சுமந்திரன் எம்.பி அதிர்ச்சி வெளியிட்ட திகதி 02.02.2019.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கவுரவ சுமந்திரன். எம்.பி. முக்காலமும் உணரக்கூடியவர். முன்கூட்டியே ஆருடம் சொல்லக்கூடியவர். காலத்தை தன் கைவிரல்களால் கணிப்பிடக்கூடியவர்.

கவுரவ சுமந்திரன் ஐயா...நீவிர் தமிழர் குலத்துக்கு கிடைத்த சொத்து. மாதுஷிடமே சிக்காத முத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், சங்கிலியன் காலத்திற்கு உரியவை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

இன்னுமா முடிவுக்கு வரவில்லை....!! இந்த நாடுகளுக்கெல்லாம் தலைமை இந்தியாதான் என்பதுகூடத் தெரியவில்லையா....?? Bildergebnis für cat+eye+closed

நீங்கள் சொல்வது சரிதான்! உலகின் 192 நாடுகள் அல்லது சுயாட்சிப் பிரதேசங்களின் தலைவர்கள் ஒவொருவரும்  துயிலெழும் போதே "இன்று ஈழத்தமிழர்களுக்கு எப்படி ஆப்பிறுக்கலாம்?" என்று யோசித்துக் கொண்டு தான் எழும்புவார்கள் என்று "மக்கள்" சொல்லக் கேட்டிருக்கிறேன்!

யூதர்களுக்குக் கூட இப்படி நடக்கவில்லை! நாம் எப்படி கவனத்தை ஈர்த்தோம் என்று நான் யோசிப்பதுண்டு! நாங்கள் நீராவியில் புட்டு அவிக்கும் ரெக்னொலொஜியை இரகசியமாக உருவாக்கியது தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அந்த குழிகளுக்குள்..... பிஸ்கற் பெட்டியை சுத்தி வரும், பொலித்தீன்  பேப்பரும் இருந்தாக முன்பு செய்தியில்  வந்தது.

மண்டை ஓட்டில்... துப்பாக்கி சூட்டுடன், இருந்தது எல்லாம்... 500 வருடங்களுக்கு முன்பு நடந்திருக்குமா? 

சங்கிலியன் காலத்தில்...  துப்பாக்கி,  பொலித்தீன் எல்லாம்...  பாவனையில் இருந்ததை... சிங்களமும், அமெரிக்காவும் தான் தெளிவு படுத்த வேண்டும்.

அந்த எலும்புகளின் ஒரு இயல்பாகச் சொல்லப் பட்டது துப்பாக்கிக் காயங்கள் என்று அடையாளம் காணப் பட்ட காயங்கள் இல்லாமல் இருந்தது தான்! துப்பாக்கிக் காயங்கள் போல தெரியும் துளைகள் இலங்கையில் பணி செய்யும் எந்த மருத்துவராலும் அடையாளம் காணப்படக் கூடியவை. மேலும் வெற்று ரவைகளும் இருக்க வேண்டும். சுட்டு விட்டு பிணத்தை வெட்டி சன்னத்தை அகற்றி விட்டுப் புதைத்திருந்தால் வெற்றுச் சன்னம் கிடைக்காது. ஐனூறு வருடத்தில் மேலே மண் மாறியிருக்கும். எனவே எலும்பின் வயதை விட மண்ணின், கூட வந்த பொருட்களின் வயது குறைவாகத் தான் இருக்கும்.

இங்கே இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி சந்தேகம் கிளப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை உண்மை போலப் பரப்பாமலே சந்தேகங்களை வெளிப்படுத்தலாம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இது ஓர் வாட்ஸப் பகிர்வு.

மன்னார் மனித எலும்புக்கூடுகளை பீட்டா பெற்றுக்கொண்ட திகதி   25.01.2019. 
அறிக்கையிடப்பட்ட திகதி  21.02.2019.

“மன்னார் புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை முடிவுகள் தமிழர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என கவுரவ சுமந்திரன் எம்.பி அதிர்ச்சி வெளியிட்ட திகதி 02.02.2019.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கவுரவ சுமந்திரன். எம்.பி. முக்காலமும் உணரக்கூடியவர். முன்கூட்டியே ஆருடம் சொல்லக்கூடியவர். காலத்தை தன் கைவிரல்களால் கணிப்பிடக்கூடியவர்.

கவுரவ சுமந்திரன் ஐயா...நீவிர் தமிழர் குலத்துக்கு கிடைத்த சொத்து. மாதுஷிடமே சிக்காத முத்து.

இதற்கு எளிமையான விளக்கம் இருக்கிறது. வாட்ஸப், முகநூலில் முளைக்கும் "திடீர் அறிவாளிகளுக்கு" தெரியாத தகவல் சுமந்திரன் உடபட பல கிறிஸ்தவர்களுக்கு பல ஆண்டுகளாகவே தெரியும்! "மரித்த விசுவாசிகள்" என்ற பதம் கிறிஸ்தவர் அல்லாதோருக்குத் தெரிய வாய்ப்பில்லை! ஆனால், மன்னாரில் எலும்புகள் கண்டெடுத்த பிரதேசம், துப்பாக்கிச் சன்னக் காயங்கள் இல்லாமை போன்ற தகவல்களை சட்ட மருத்துவ அறிக்கையில் பார்த்த போது சும் ஊகித்திருக்கக் கூடும்! இதுவே என் ஊகம்! அப்ப இதை ஏன் முதலே அவர் சொல்லவில்லை? எனப் பலர் கேட்கலாம்! இதை அவர் முதலே சொல்லியிருந்தால் இப்ப இருப்பதை விட நிறையக் கதைகள் பின்னியிருப்பார்கள்!

இதை சுமந்திரனையோ, இந்த ஆய்வு முடிவையோ ஆதரிக்கும் நோக்கில் நான் சொல்லவில்லை! எங்கள் காழ்ப்புணர்வுகளினூடாக எம் முன் இருக்கும் பல தரவுகளில் எமக்கு விருப்பமானவற்றை எடுத்துக் கொண்டு, விருப்பமில்லாதவற்றை தவிர்த்து விடும் வேலையைச் செய்கிறோம்! இது குறுகிய காலத்தில் எமக்கு உதவலாம்! நீண்டகால நோக்கில் இது தீமை, ஈழத்தமிழர்கள் எதைச் சொன்னாலும் உலகில் யாரும் நம்பாத ஒரு நிலை வரும்! உலகில் இப்போது பிலிப்பைன்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த reputation இருக்கிறது!

16 minutes ago, Justin said:

 ஈழத்தமிழர்கள் எதைச் சொன்னாலும் உலகில் யாரும் நம்பாத ஒரு நிலை வரும்! உலகில் இப்போது பிலிப்பைன்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த reputation இருக்கிறது!

மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக வேலையின் நிமித்தம் வாழ்பவர்கள்தான், இந்த நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மக்கள்.

அவர்கள் சொல்வதை, யாரும் நம்புவதில்லையா?

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அறிவுரையின்படிதான், போதை பொருளை முற்றாக ஒழிப்பேன் என்று சொல்கிறார், நமது மைத்திரி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, thulasie said:

மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக வேலையின் நிமித்தம் வாழ்பவர்கள்தான், இந்த நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மக்கள்.

அவர்கள் சொல்வதை, யாரும் நம்புவதில்லையா?

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அறிவுரையின்படிதான், போதை பொருளை முற்றாக ஒழிப்பேன் என்று சொல்கிறார், நமது மைத்திரி.

துளசி, துரும்பைப் பிடித்துக் கொண்டு திரியைத் திசை திருப்பி நேரத்தை வீணாக்காதீர்கள்! இங்கே பேசும் தலைப்புக்கு ஆக்க பூர்வமாக எதுவும் பங்களிக்க முடியாவிட்டால், பேசாமல் இருங்கள்! அமைதி நல்லதல்லவா?

1 hour ago, Justin said:

நீங்கள் சொல்வது சரிதான்! உலகின் 192 நாடுகள் அல்லது சுயாட்சிப் பிரதேசங்களின் தலைவர்கள் ஒவொருவரும்  துயிலெழும் போதே "இன்று ஈழத்தமிழர்களுக்கு எப்படி ஆப்பிறுக்கலாம்?" என்று யோசித்துக் கொண்டு தான் எழும்புவார்கள் என்று "மக்கள்" சொல்லக் கேட்டிருக்கிறேன்!

வட இந்தியாவில் உள்ளவனுக்கே தெரியாது, இலங்கையில் தமிழர் என்ற இனம் இருக்கிறதா இல்லையா  என்று!

நீங்கள் 192 நாடுகளில் உள்ளவர்களைப்பற்றி சொல்கிறீர்கள்?

துயில் எழும்போது, எல்லாரும் காப்பி, டீ குடிப்பதற்கு - சீனி, கோப்பி, தேயிலைத் தேடுவார்களேயொழிய, ஈழத்தமிழர்களைத் தேடுவதாவது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அந்த எலும்புகளின் ஒரு இயல்பாகச் சொல்லப் பட்டது துப்பாக்கிக் காயங்கள் என்று அடையாளம் காணப் பட்ட காயங்கள் இல்லாமல் இருந்தது தான்! துப்பாக்கிக் காயங்கள் போல தெரியும் துளைகள் இலங்கையில் பணி செய்யும் எந்த மருத்துவராலும் அடையாளம் காணப்படக் கூடியவை. மேலும் வெற்று ரவைகளும் இருக்க வேண்டும். சுட்டு விட்டு பிணத்தை வெட்டி சன்னத்தை அகற்றி விட்டுப் புதைத்திருந்தால் வெற்றுச் சன்னம் கிடைக்காது. ஐனூறு வருடத்தில் மேலே மண் மாறியிருக்கும். எனவே எலும்பின் வயதை விட மண்ணின், கூட வந்த பொருட்களின் வயது குறைவாகத் தான் இருக்கும்.

இங்கே இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி சந்தேகம் கிளப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை உண்மை போலப் பரப்பாமலே சந்தேகங்களை வெளிப்படுத்தலாம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். 

ஜஸ்ரின் அண்ணா என்புகள் பழுதடையாமல் இருந்ததை பார்க்கும் போது சந்தேகம் இயல்பாக வருகின்றது?
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளான என்புகள் ஓரளவாவது உக்க தொடங்கியிருக்கும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா என்புகள் பழுதடையாமல் இருந்ததை பார்க்கும் போது சந்தேகம் இயல்பாக வருகின்றது?
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளான என்புகள் ஓரளவாவது உக்க தொடங்கியிருக்கும் தானே?

ஏராளன், நான் ஏற்கனவே சொன்னது போல இப்படி நியாயமான காரணங்களை முன் வைத்து சந்தேகங்களை எழுப்ப வேண்டும்! ஆனால், துப்பாக்கிக் காயம் இருந்தது, பொலித்தீன் இருக்கிறது என்பதெல்லாம் வீக்கான காரணங்கள் மட்டுமல்ல, சில பொய்யான தகவல்களுமாகும்! எலும்பு உக்குவதற்கு அல்லது பேணப்படுவதற்கு பல வெளிக்காரணிகள் இருக்கலாம்! மன்னார் உப்புச் செறிவு கூடிய நிலம் என்பதால் உக்குதல் குறைந்ததா என்றும் பார்க்க வேண்டும்!

 கேள்விகளை எழுப்புவது நல்லது! நிபுணத்துவம் உள்ளவர்களிடம் இருந்து பதில் வந்தாலும் நாம் நம்பப் போவதில்லை என்றால், கேள்விகளுக்கு வேறு அர்த்தங்கள் இருக்கின்றன என்று தான் சந்தேகம் வரும்! நிபுணர்களிடம் விட்டு விட்டு எங்கள் வேலையை நாம் பார்ப்பது தான் உரிய முடிவை எங்களுக்குத் தரும் என நான் நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மக்களின் சந்தேகத்துக்கு மற்றுமொரு காரணம்

மாத்தளை மனிதப் புதைகுழியில் இருந்து 2014 இல் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் அமெரிக்கா அனுப்பப்பட்ட போது அவை 1950 காலத்தை சேர்ந்தவை என்றபோது மன்னார் போல் மாத்தளை மனிதப் புதை குழிக்கும் பொறுப்பாக இருந்த பேராசிரியர் சோமதேவா அப்போது எச்சங்களில் கலப்பு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி அவை 1986 இற்கும் 1990 இற்கும் இடைப்பட்டவை என்றார். அதாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட்வர்கள் என்ற அர்த்தத்தில். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

நுணா, காபன் டேற்றிங்கின் margin of error நூறு வருடங்கள் தாண்டும்! 1950 இற்கும் 1990 இற்கும் இடையில் 40 வருடங்களே! இதனால் தான் பல வாசிப்புகள் எடுத்து 95% வாய்ப்பு, 68% வாய்ப்பு என்று விளைவைத் தருகிறார்கள். 5500 வருடங்கள் அரை வாழ்வுடைய C14 இல் இருந்து 1950 இற்கும் 1990 இற்கும் இடைப்பட்ட சாம்பிளை பிரித்தறிவது கடினம் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அந்த எலும்புகளின் ஒரு இயல்பாகச் சொல்லப் பட்டது துப்பாக்கிக் காயங்கள் என்று அடையாளம் காணப் பட்ட காயங்கள் இல்லாமல் இருந்தது தான்! துப்பாக்கிக் காயங்கள் போல தெரியும் துளைகள் இலங்கையில் பணி செய்யும் எந்த மருத்துவராலும் அடையாளம் காணப்படக் கூடியவை. மேலும் வெற்று ரவைகளும் இருக்க வேண்டும். சுட்டு விட்டு பிணத்தை வெட்டி சன்னத்தை அகற்றி விட்டுப் புதைத்திருந்தால் வெற்றுச் சன்னம் கிடைக்காது. ஐனூறு வருடத்தில் மேலே மண் மாறியிருக்கும். எனவே எலும்பின் வயதை விட மண்ணின், கூட வந்த பொருட்களின் வயது குறைவாகத் தான் இருக்கும்.

இங்கே இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி சந்தேகம் கிளப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை உண்மை போலப் பரப்பாமலே சந்தேகங்களை வெளிப்படுத்தலாம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். 

ஜஸ்ரின்... நீங்கள், நல்லாய்... பூசி, மெழுகி  🗣️ கதைக்கின்றீர்கள்.  
உங்களது... கதையை பார்க்க,  "ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்"  இருக்குது. 

துப்பாக்கியால்... சுட்டால்,  மண்டை ஓட்டுக்குள் தான்.... ரவை  (குண்டு) நிற்கும் என்று, உங்களுக்கு, யார் சொன்னது? 

அப்படி... அது, துப்பாக்கி சூடு தான் என்று... இலங்கை தமிழ் உணர்வு உள்ள மருத்துவர் ஒருவர் சொல்லி விட்டு,  வீடு போய் சேர முடியுமா?

நீங்கள் எழுதிய பகுதிகளை,  மீண்டும் ஒரு முறை... பொறுமையாக, இருந்து வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கே.. தலையை சுத்திக் கொண்டு வரும்,  என்பது திண்ணம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

உயிரோடு புதைத்தால் சன்னமும் வராது....வெற்று ரவைகளும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

காபன் அணுக்கதிர் வீச்சின் வீரியத்தை வைத்து ஒரு பொருளின் வயதெல்லையைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், இவை துல்லியமானவைதானா என்பது ஒரு பிரச்சனைதான். ஜஸ்டின் குறிப்பிட்டதுபோல 50 இலிருந்து 100 வருடங்கள் வரை முன்னுக்கோ பின்னுக்கொ இவை நடந்திருக்கலாம் என்பது வெறும் 35 வருட கால சிங்களவர்களின் தமிழர்மீதான இனக்கொலைக்கு இவை சாட்சியங்களாகப் பாவிக்கப்பட முடியாதவை. அதுமட்டுமல்லாமல், இந்த சாட்சியங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி சிங்களம் தப்பிப்பதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது. அதுவும் 500 வருடங்கள் என்று கணிப்பிடப்படுவதால், சங்கிலியன் செய்த கொலைகள் என்று இப்போதே எள்ளி நகையாடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இனி எந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்றாலும் சிங்களவர்கள் அவற்றை இலகுவாக தமிழர் தலையிலோ அல்லது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் அல்லது ஆங்கிலேயர் தலையிலோ கட்டிவிட வாய்ப்பிருக்கிறது.

இந்த மனித எச்சங்களின் பரிசோதனைபற்றி பல கேள்விகள் இருக்கின்றன. நடத்தப்பட்ட முறை, ஆய்வில் ஈடுபட்டவர்கள், மாதிரிகள் தெரிவுசெய்யப்பட்ட முறை, வெளிப்படைத்தன்மை என்று சந்தேகங்கள் இருக்கின்றன. 

என்னைபொறுத்தவரை, இப்பரிசோதனை வெளிப்படையாக பாதிக்கப்பட்ட உறவுகள் முன்னால் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிபுணர்குழுவினால் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது வரும் முடிவை ஏற்றுக்கொளலாம்.

திட்டமிட்ட வகையில் இந்த ஆய்வு அறிக்கை முழுமையாக சோடிக்கப்பட்டது!
காரணம்:
(1) அங்கு கிடைத்த பிஸ்கற் பாக்கெட் பிளாஸ்டிக் உறை
(2) கிடைத்த சில ஆவணங்கள்
(3) கிடைத்த பிளாஸ்டிக் தலைமுடி கிளிப்புகள்
(4) கிடைத்த பொலித்தீன்கள்
(5) ஆய்வுக்கு முன்னரே அரசின் எடுபிடிகள் தமிழர்கள் ஏமாறுவார்கள் எனக் கூறியமை
(6) பல அரச ஆய்வகங்கள் இருக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுப்பியமை
(7) அங்கு கடமையாற்றிய தமிழ் நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்படடமை.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 3:15 PM, தமிழ் சிறி said:

ஜஸ்ரின்... நீங்கள், நல்லாய்... பூசி, மெழுகி  🗣️ கதைக்கின்றீர்கள்.  
உங்களது... கதையை பார்க்க,  "ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்"  இருக்குது. 

துப்பாக்கியால்... சுட்டால்,  மண்டை ஓட்டுக்குள் தான்.... ரவை  (குண்டு) நிற்கும் என்று, உங்களுக்கு, யார் சொன்னது? 

அப்படி... அது, துப்பாக்கி சூடு தான் என்று... இலங்கை தமிழ் உணர்வு உள்ள மருத்துவர் ஒருவர் சொல்லி விட்டு,  வீடு போய் சேர முடியுமா?

நீங்கள் எழுதிய பகுதிகளை,  மீண்டும் ஒரு முறை... பொறுமையாக, இருந்து வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கே.. தலையை சுத்திக் கொண்டு வரும்,  என்பது திண்ணம். 

தமிழ் சிறி, நீங்கள் தான் மீண்டும் பள்ளிக்குப் போய் தமிழ் வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! மேலும், இந்த அகழ்வில் மருத்துவ அதிகாரியாக இருப்பவர் தமிழர் என்று எங்கே வாசித்தீர்கள்? அவர் ஒரு சிங்களவர்! தலையினுள் சென்று சன்னம் வெளிவரும் போது நுழைந்த துளையை விட வெளிவரும் துளை பெரிதாக இருக்கும் என்பது பொதுவாக யாருக்கும் தெரிந்த விடயம். இந்த இரண்டு சத்தியக் கூறுகளில் ஒன்றாவது நடந்ததாக நான் வாசிக்கவில்லை, நீங்கள் செய்திகளில் கண்டிருந்தால் ஆதாரத்தை இங்கே கொண்டு வந்து இணையுங்கள், பேசலாம்!

இப்படி உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருக்க , மற்றவர் fact ஆக சொல்வது பூசி மெழுகுவது போல் இருந்தால், நக்கலை கண்ணாடியொன்றைப் பார்த்து உங்களுக்கு நீங்களே செய்து கொள்வது தான் பொருத்தம்!😎

On 3/8/2019 at 5:39 PM, குமாரசாமி said:

உயிரோடு புதைத்தால் சன்னமும் வராது....வெற்று ரவைகளும் வராது.

நல்ல கற்பனை! ஆனால் ஆதாரம் எங்கே? காணாமல் போனோரில் எத்தனை பேர் கதறக் கதற உயிரோடு புதைக்கப் பட்டிருக்கக் கூடும் என்று உங்களிடம் தகவலாவது இருக்கிறதா? கற்பனையை விட்டு விட்டு நடக்கக் கூடிய விடயங்களை ஆராயுங்கள்! சிங்களவன் கொடுமையானவன் தான், ஆனால் முட்டாள் அல்ல!  முன்னூறு பேரை இப்படி ஆழம் குறைந்த குழியில் போட்டு மூடுவதா அல்லது கொன்று விட்டு உடலைப் புதைப்பதா அவனுக்கு வேலை குறைவானது? மூக்கைச் சுற்றித் தலையைத் தொடும் உங்களை மாதிரி சிங்களவனின் அறிவை எடை போடக் கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 10:02 PM, போல் said:

திட்டமிட்ட வகையில் இந்த ஆய்வு அறிக்கை முழுமையாக சோடிக்கப்பட்டது!
காரணம்:
(1) அங்கு கிடைத்த பிஸ்கற் பாக்கெட் பிளாஸ்டிக் உறை
(2) கிடைத்த சில ஆவணங்கள்
(3) கிடைத்த பிளாஸ்டிக் தலைமுடி கிளிப்புகள்
(4) கிடைத்த பொலித்தீன்கள்
(5) ஆய்வுக்கு முன்னரே அரசின் எடுபிடிகள் தமிழர்கள் ஏமாறுவார்கள் எனக் கூறியமை
(6) பல அரச ஆய்வகங்கள் இருக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுப்பியமை
(7) அங்கு கடமையாற்றிய தமிழ் நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்படடமை.

என்ன ஆவணங்கள் கிடைத்தன என்று குறிப்பிடுங்கள்? பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம் என்று பல இடங்களில் மேலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அமெரிக்காவில் இப்படிப் பட்ட பாரிய முதலீடு தேவைப்படும் ஆய்வகங்கள் தனியார் தான்! "அரச பகுப்பாய்வுத் திணைக்களம்" சிறி லங்காவில் தான் பிரபலம்! 

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

3 hours ago, Justin said:

பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம்

அதெப்படி எலும்புக்கூடுகள் அப்படியே இருக்க மண் மட்டும் மாற முடியும்?
அதிலும் பெண்களின் தலைகளின் அருகே மட்டும் பிளாஸ்டிக் கிளிப்புகளும், அங்கங்கே சில மலிபன் பிஸ்கற் பிளாஸ்ட்டிக் உறைகளும் அகப்படும்?

அதெப்படி ஆழமான ஓரிடத்தில் பாஸ்போர்ட் கவர் போல சந்தேகிக்கப்படும் ஒரு கவரும் கண்டெடுக்கப்பட்டிருந்தது?
அதெப்படி சில சிறுவர் கைகளுக்குரிய பிளாஸ்டிக் வளையல்கள் அங்கங்கே இருந்தன? (பெரியவர் அளவில் எதுவும் இருக்கவில்லை, தங்கநகைகள் கிடைக்கவில்லை கொலை செய்யப்படும் முன்னர் அவை அகற்றப்பட்டிருக்கலாம்).
சில இலங்கை நாணயக் குற்றிகளும் மீட்கப்பட்டிருந்ததாக நேற்று ஒருவர் கூறினார் (அதை நான் முன்னர் கேள்விப்பட்டிருக்கவில்லை).  

இன்னும் பல செய்திகள் யாழில் வந்திருந்தது.
பல மாதங்களின் முன்னர் முக்கியத்துவம் கருதி இது சம்பந்தமாக செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவது நல்லது என "நவீனனின்" பதிந்த ஒரு செய்தியின் கருத்தில் பகிரங்கமாக கேட்டிருந்தேன். ஆனால் யாரும் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை!

அது ஒருபுறமிருக்க, அமெரிக்காவில் கூலிக்காக மாரடிப்பவர்கள் அதிகம் என்றும் அதற்காக சிங்கள அரசு பலகோடிகளை பலதடவைகள் கொட்டியது என்பதுவும் வரலாறு!

ஆனாலும், அமெரிக்காவில் தில்லுமுல்லுகள் நடப்பதே இல்லை என்று நம்புவது உங்கள் உரிமை!

4 hours ago, Justin said:

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

மேலும் உங்கள் விதண்டாவாத கருத்துக்களுக்கு பதில் எழுதுவது விழலுக்கு இறைத்த நீர் போன்றதே!

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன் போன்ற இனப்படுக்கொலையாளியின் வம்சத்திலா தமிழர்கள் வந்தார்கள். சிங்களவனை இனப்ப்டுகொலையாளி என்கின்றோம். மிலேச்சத்தனம் பிடித்தவன் என்று கூறுகின்றோம், அப்படியானால் சங்கிலியன்? அவன் என்ன சாத்வீகனா? ஏன் இவனை தமிழர்கள் தூக்கிப்பிடிக்க வேண்டும். 600 பேரை அநியாயமாய் கொன்ற‌வனல்லவா?

பிரான்ஸில் கூட சில தினங்களுக்கு முன்பு தமிழர்கள் தாங்களுக்குள் அடிப்பட்டு இறந்தார்கள். தாங்கள் கோட்படுகளுக்கு ஒத்து வராதவர்களை தாக்குவது, கொல்லுவது போன்றவகளுக்கு சங்கிலியனும் ஓர் உதரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

ஏன் சங்கிலியன் காலத்துக்குப் போகிறீர்கள்.. ஜே வி பி மீதான அடக்குமுறையில் எத்தனையோ அப்பாவி சிங்கள இளைஞர்கள்.. கொன்று குவிக்கப்பட்டார்கள்.. எம்பிலிப்பிட்டிய உட்பட பல மனிதப் புதைகுழிகள் கிண்டப்பட்டன.

தமிழர்கள் வரலாற்றில்.. பல புதைகுழிகளை  சிங்களம் உருவாக்கி இருந்தாலும் செம்மணிப் புதைகுழி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து நீதி இன்றி நீர்த்துப்போனது. அதைச் செய்தவர் இன்றைய நல்லிணக்கத் தேவதை அன்றைய சமாதான தேவதை என்று வர்ணிக்கப்பட்ட சந்திரிக்கா அம்மையார்.

உலகில் எல்லா மன்னர்களும்.. புதைகுழிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த படியால் தான் மக்கள்.. சனநாயகத்தை விரும்ப நேரிட்டது. சனநாயகம்.. தோற்றிவித்த புதைகுழிகள் என்பது பல. ஆனால் மக்களுக்கு வேறு தேர்வுக்கு இடமில்லாமல்.. சனநாயக பாசிசவாதம் பார்த்துக் கொள்வதால்.. மக்கள் அநியாயமாக நீதி இன்றி இறந்து கொண்டிருக்கிறார்கள்.

மன்னார் புதைகுழி சங்கிலியன் காலத்தான் என்பது நம்பக் கூடிய ஒன்றாகவே இல்லை. அமெரிக்கனுக்கு வழங்கப்பட்ட மாதிரி உண்மையில்.. மன்னார் புதைகுழி மாதிரியா.. என்பதில் இருந்து.. ஒரு தனியார் நிறுவனத்தின் ஊடாக இந்தப் பரிசோதனை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன... என்பது ஈறாக பல கேள்விக்கணைகள் அங்கு தொக்கு நிற்கின்றன. 

எத்தனையோ சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உள்ளன.. அவற்றின் மேற்பார்வையின் கீழ்.. நடுநிலையான ஆய்வு மையங்களில்.. மாதிரிகள் ஆராயப்பட வேண்டும். அதுவும் மாதிரிகள்.. உண்மையாக புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டதற்கான நேரடி கண்காணிப்பு அவசியம். வெறும் ஒரு தனியார் நிறுவனத்தின் முடிவின் பிரகாரம்.. இந்த விடயத்தில் தீர்வு எட்டுவது என்பது அறிவியல் ரீதியாகக் கூட முட்டாள் தனமானது.  ஏனெனில் அந்த நிறுவனத்தின் பின்னணி.. இந்த ஆய்வு மாதிரிகளை சமர்ப்பித்தவர்களுக்கும் அந்த நிறுவத்திற்கும் உள்ள வெளிப்படையற்ற தொடர்புகள்..சிங்கள அரச செல்வாக்கு.. அமெரிக்க அரச செல்வாக்கு.. என்று பல பக்கச்சார்புக் காரணிகள்.. இந்த ஆய்வில் செல்வாக்குச் செலுத்தி இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில்.. இந்த ஆய்வு முடிவு.. நடுநிலையானதாகக் கருத முடியாது.

இந்த ஆய்வு பக்கச் சார்ப்பற்ற.. நடுநிலையான நீதியான.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் மேற்பார்வையின் கீழ் பெறப்படும் மாதிரியில் இருந்து.. அவர்கள் பிரேரிக்கும்.. வெவ்வெறு ஆய்வு கூடங்களில் (குறைந்தது 5 இல்) மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு.. மாதிரிகளின் பின்னணித்தகவல்கள் ஆய்வுகூடங்களுக்கு வழங்கப்படாத வகையில் ரகசியம் காக்கப்பட்டு.. செய்யப்படும்.. ஆய்வு முடிவின் மூலமே ஓரளவுக்கு உண்மைத் தன்மை கண்டறியப்பட முடியும்.

ஆனால்.. தற்போதைய ஆய்வு முடிவு.. சிங்கள ஆட்சியாளகளையும்... சிங்கள இனப்படுகொலை பயங்கரவாத இராணுவத்தை காப்பாற்ற.. நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றாகவும்.. தமிழர்கள்.. வரலாற்றுரீதியாக மனிதப் படுகொலை புரியும் கொடூரர்கள் போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கவும் செய்யப்பட்டிருக்கும்.. மோசடி ஆகும். 🙄

Edited by nedukkalapoovan

15 hours ago, Justin said:

என்ன ஆவணங்கள் கிடைத்தன என்று குறிப்பிடுங்கள்? பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம் என்று பல இடங்களில் மேலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அமெரிக்காவில் இப்படிப் பட்ட பாரிய முதலீடு தேவைப்படும் ஆய்வகங்கள் தனியார் தான்! "அரச பகுப்பாய்வுத் திணைக்களம்" சிறி லங்காவில் தான் பிரபலம்! 

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

காதில பூ வைக்கிற கதையாக இருக்கு ? ஆமா இனி ...மண் மாறி இருக்கும் ..வேறென்ன அப்படியே சுத்துமாத்து மாதிரி ....சுத்த வேண்டியதுதான் .....அது சரி 500 வருடமாக எப்படி இரும்பு உக்காது ? கைவிலங்கிடப்படட ஒரு எலும்பும் எடுத்தார்கள் .....
 
  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றாண்டுகள் ஆகியும் கொஞ்சம் கூட 
நிறம் மாறாத மண்டையோடு பற்கள் கொண்ட இரும்பை ஒத்த ஒரு 
மனித இனம் இலங்கை எனும் சிறுதீவில் வாழ்ந்ததுக்கான 
ஆதாரங்கள் கண்டெடுக்க பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிலேயே இல்லை,பொய் என்ற சொற்களுக்கு எதிராக போராடினால் வெல்வது கடினம்.
இல்லை,பொய் என்ற சொற்களை பயன்படுத்துபவர்களாலும், எதெற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கும் நம்பாச்சாதிகளாலும் தான் ஈழத்தமிழினம் நொடிக்கு நொடி அழிந்து கொண்டு வருகின்றது.

2009க்கு பின் 10 வருடங்கள் ஆகியும்....சிங்களத்தின் கோரமுகம் வெளிப்படையாக தெரிந்தும்.....இன்றும் சிங்களத்துக்காகவும் தன் வாழ்வுக்காகவும் வக்காலத்து வாங்கும் ஜென்மங்களை என்னவென்று சொல்வது.

மாற்றுக்கருத்து மாணிக்கவாதிகள் அவலை நினைத்து வெறும் உரலை இடிக்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.