Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்த வருட யாழ் 21வது அகவைக்காக பயணம் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்த போது எழுத்தாளர் சுவி அவர்கள் பயணக் கட்டுரை எழுதி ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.இதுக்குப் பின் எப்படிடா எழுதுவது என்று எண்ணினாலும் சரி என்ன தான் நடந்தாலும் யாழ்இணையத்திற்கு நான்பட்ட கடன் என்று ஒன்று இருக்கல்லவா அதற்கான நன்றிக்கடன் தான் இது.அதுக்காக

நாகபாம்பு ஆடுதென்று

நாக்கிளிபுழுவும் ஆட வெளிக்கிட்டுட்டுது 
என்று யாரும் எண்ணாமலிருந்தால் பெரிய உதவியாக இருக்கும்.

தொடரும்.

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

... என்ன தான் நடந்தாலும் யாழ்இணையத்திற்கு நான்பட்ட கடன் என்று ஒன்று இருக்கல்லவா அதற்கான நன்றிக்கடன் தான் இது.அதுக்காக..

இப்பவே சொல்லிப்புட்டேன்..!

பாதி தொடர் எழுதிக்கொண்டிருக்கும்போதே,

  • பேரன் விளையாடக் கூப்பிட்டான்,
  • பேத்தி விளையாடக் கூப்பிட்டாள்,
  • மனிசி குசினிக்குள் மசால் வடை சுட கூப்பிட்டாங்க.. 

என ஓடிவிடக் கூடாது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் கத்துக்குட்டிதான்,இதுக்குள்தான் அதுவும் நீங்கள் எல்லாம் தாங்கிப் பிடிப்பீர்கள் என்ற தெம்பில்தான் குதிரை ஓடுறன், யோசிக்காமல் எழுதுங்கோ.....வன்னியர் சொன்னதுபோல் பாதியில் மட்டும் விட  வேண்டாம்......!   😁

Posted

அந்த 7 (ச்சா..  70)  நாட்களுக்காய் காத்திருக்கின்றோம். தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பிறந்தநாட்டுக்கு எந்தநாடு தான் பெரிது.இலங்கை போவதானால் அங்கு பிறந்த எல்லோருக்குமே ஒரு சந்தோசம்.ஆனால் ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு ஒரு பயணம்.அமெரிக்க கண்டத்திலிருப்பவர்களுக்கு இந்தப் பயணம் எறத்தாள ஒரு தண்டனை என்றே கூறலாம்.இங்கிருந்து புறப்பட்டு இடைத்தங்கலில் நின்று மீண்டும் புறப்பட்டு கொழும்பு போக 25-30 மணி நேரமாகிவிடும்.பின்னர் விமானநிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் போவதற்கு 8-9 மணிநேரமாகும்.இதனால் பயணுத்துக்காக 35-40 மணிநேரம் தொடர் பயணமென்பது சந்தோசமான தண்டனையாக ஏற்றுக் கொண்டு புறப்பட வேண்டியது தான்.

                                     இந்தப் பயணம் சரியாக 70 நாட்கள் திட்டமிட்டு எதிகாட்விமானத்தில் போய் வருவதற்கு விமான சீட்டும் இணைய மூலமாக எடுத்தாகிவிட்டது.இனி பெட்டி படுக்கைகள் என்று வீட்டில் ஒரு அறையே ஒதுக்கியாச்சு.யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று எழுத்துவழக்கு கணக்கெல்லாம் மனைவியின் வேலை.அமெரிக்கா கனடாவிலிருந்து போகிறவர்கள் 50 இறாத்தல் எடை கொண்ட இரு பொதிகளும் கையிலே இழுத்துக் கொண்டு போக 15 இறாத்தல் பொதியும் முதுகிலே போட ஒரு புத்தகப்பை.இது நிறுப்பதில்லை.எவ்வளவு நிறை தான் கொண்டு போக அனுமதித்தாலும் கொஞ்சம் என்றாலும் கூடுதலாக சுழித்துக் கொண்டு போனால்த் தான் அதில் சந்தேசம் கெட்டித்தனம்.வீட்டிலேயே தராசு இருக்கிறபடியால் அடிக்கடி பார்த்து பார்த்து வைத்து அப்பவும் கடைசி நேரத்தில் கொஞ்சம் கூடிப் போட்டுது என்று சிரிப்பு வேறை.சரி சரி நான் பார்க்கிறன் விடு என்று நல்ல பாரமான சாமானாக எடுத்து புத்தகப் பையில் போட்டு அவர்களுக்கு காட்டுவதற்காக எல்லா பொதிகளுமே சரியாக இருந்தது.உள்ளுக்குப் போனபின் நிறை கூடியதை எடுத்து இழுத்துக் கொண்டு போறதற்குள் போட்டால் சரி.

                                          இந்தப் பயணத்தில் மூத்தமகள் கணவர் கடைசிமகள்(இப்போதைக்கு எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம்) மூவரும் தாங்களும் இருகிழமைக்கு வரப் போவதாகவும் இந்த தடவை இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும்.ஆனாலும் நல்லூர் தேர் தவறவிடக் கூடாது.எங்கெங்கே எத்தனை நாட்கள் என்ற விபரத்தையும் மட்டும் தாங்கோ என்றார்கள்.இரண்டு கிழமைகளுக்கு சிங்கப்பூர் விமானம் மூலம் வந்து போக ரிக்கற்றும் எடுத்துவிட்டார்கள்.இப்போ விடுதிகள் எடுக்க வேண்டும் எப்ப எப்ப எங்கு தங்குதென்ற விபரம் தாங்கோ என்றால் எனக்கு தலையைச் சுத்துது.யாழ்-கொழும்பு என்றால் பரவாயில்லை.இப்ப தான் நானும் சுத்தப் போகிறேன் ஆனபடியால் இலங்கை போனதும் விசாரித்து தகவல் அனுப்புகிறேன் பின்பு செய்வதைச் செய்யுங்கோ என்று சொல்லியாச்சு.

                                         புறப்படும் நாள் இரவு 11 மணிக்கு தான் விமானம்.வீட்டிலிருந்து 15 நிமிடம் தான் விமானநிலையம்.மகனும் மருமகளும் வந்து ஏற்றி இறக்கிவிட்டார்கள்.மகன் என்னை சாமானுகள் தூக்கவிடமாட்டான்.அதனால் தானும் உள்ளுக்கு வந்து போடிங்பாஸ் எடுத்து உள்ளேபோகும் வரை நின்று அங்கையும் ஒன்றும் தூக்கிப்பறித்து நாரியை உடைக்காமல் போட்டருக்கு 6-8 டொலரைக் கொடுத்து பொதிகளைக் கொண்டு போங்கோ என்று விடை பெற்று போனார்.
 
                                         10 மணி போல் விமானத்தில் ஏற்றத் தொடங்கினார்கள்.வாசலில் போடிங்பாஸ் சரிபார்த்து உள்ளுக்குப் போனால் இரண்டு வழியால் விமானத்தில் ஏறுகிறார்கள்.அதிலே போய் கொஞ்சம் முளிசிக் கொண்டு நின்றதும் அதில் நின்ற பணிப்பெண் ஏதோ அப்பதான் தூக்கத்திலிருந்து எழுந்தவராக பிஸ்னஸ்கிளாஸ் திஸ் வே பிளீஸ் என்றதும் எனக்கு ஒருமாதிரி போய்விட்டது.உள்ளே போய் பார்த்ததும் தான் முழுவிபரமும் முழுமையாக விளங்கியது.இது ஒரு இரட்டைத்தட்டு பஸ் மாதிரி.எமது இருக்கை 62ம் வரிசை.மனைவிக்கு எப்ப விமானமேறினாலும் யன்னல் கரையோரம் உள்ள இருக்கை தான் வேண்டும்.இருந்து கொண்டு தான் விமான விபரமட்டை எடுத்து பார்த்தால் எ380 எயரபஸ் என்று எல்லா விபரங்களும் இருந்தது.ஆட்கள் ஏறிஏறி புறப்படும் நேரம் வந்ததும் மனைவி ஏதொ கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தா.நான் ஏதோ காசுக் கணக்குத் தான் பார்க்கிறா என்று நினைத்து வெளிக்கிட்டு விமானம் வரை வந்து இருந்துகொண்டா கணக்குப் பார்க்கிறாய் என்று கேட்டால் இல்லை இல்லை நாங்கள் இருக்கிற நீட்டுக்கே 10 சீற் என்றால் மேலையும் கீழையும் ஆக்கள் ஒவ்வொருவரின் கொண்டுவாற சாமானுகள் இவை எல்லாத்தோடும் இந்த பிளேன் மேல போகுமா?எப்படி போகும் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தா.

                            ஒருமாதிரி 11 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அரை மணிநேரம் தாமதமாக 11.30 ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியது.கொஞ்சம் கொஞ்சம் நகர்வதும் நிற்பதுமாக மெதுவாக நகர்ந்தது.இடைஇடையே ஓடுபாதையில் திருத்தவேலைகள் வேலைகள் செய்வதால் கொஞ்சம் தாமதம் என்று சொல்லிச் சொல்லியே எம்மை ஏமாற்றி கடைசியில் ஒன்றரை மணிநேரம் தாமதமாக 12.30 மணிக்குத் தான் புறப்பட்டது.

                            இப்போ எனக்கு யோசனை என்னவென்றால் அபுதாபியில் ஒன்றரை மணிநேரமே இடைத்தங்கல் ஏற்கனவே ஒன்றரைமணி நேரம் தாமதமாகிவிட்டது.ஒரே யோசனை தொட்டுவிட்டது.விமானம் மேலெழும்பி சில்லுகளும் உள்ளே போற சத்தம் கேட்க மனைவியும் செருப்போ சப்பாத்தோ களட்டிவிட்டு சப்பாணி போட்டுடவா.வெளியே வெளிச்சங்கள் மறையும் மட்டும் பார்த்திருந்துவிட்டு சாப்பாடுகள் கொண்டுவரும் போது எழுப்புங்கோ என்று சொல்லிவிட்டு தூங்கிவிடுவா.எனக்கு எங்கையாவது நீட்டி நிமிர்ந்து போர்வையால் ஆளை சுத்திக் கொண்டு படுத்தா தான் நித்திரை வரும்.இல்லாவிட்டால் எத்தனை மணிநேரம் பிரயாணம் செய்தாலும் கோழித் தூக்கம் தான்.விமானத்தில் நன்றாக கவனித்தார்கள்.நல்ல சாப்பாடு.

                             ஒருமாதிரி அரைமணி நேரமிருக்கும் போது வந்து இறங்கியாச்சு.இறங்கியவுடன் இழுத்துக் கொண்டு ஓடவேணும் தயாராக இரு என்று எழும்பி நின்றால் முன்னே உள்ளவர்கள் இறங்கினால் தானே நாங்களும் இறங்கலாம்.இப்ப பார்த்து எமக்காக எல்லோரும் மெதுவாக இறங்குவது போல இருந்தது.இதிலேயே அரைமணி நேரம் ஓடிவிட்டது.சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று பாக்கையும் இழுத்துக் கொண்டு ஓட்டம் தான்.அடுத்த கதவுக்கு போவதற்கு இடையில் செக்கிங் வேற.அதையும் முடித்துக் கொண்டு அடுத்த கதவுக்கு கிட்ட போக ஒருவர் கொழும்பு கொழும்பு என்று ஓடிவாறார்.களைப்பில கதையும் வருதில்லை யேஸ் யேஸ் என்றதும் தானும் ஒரு பாக்கை வாங்கி தயாராக நின்ற பஸ்சில் ஏற்றிவிட்டார்.நாங்களும் போய் எறினதும் விமானம் புறப்பட்டுவிட்டது.இப்ப அடுத்த யோசனை நாங்கள் போய்ச் சேர எமது பொதிகள் வந்து சேருமா?

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

(இப்போதைக்கு எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம்)

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

suvy

  • Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ அப்போ ஊர் வந்து சுற்று சுற்றி போயாச்சு போல இன்னும் வரட்டும் பந்திகள் அதை வாசித்து நிறையட்டும் பக்கங்களும் மனசுகளும்👈

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

எந்த நிறுவனங்களிலும் வீடுகளிலும் 'ரிசல்ட் ஓரியன்டன்ட்' (Result Oriented) நபர்களைதான் ஊக்குவித்து விட்டுவைத்திருப்பார்கள்.. ! 😃

 

இங்கே முடிவுகள்தான் வெளியே தெரியவில்லை..! 🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ராசவன்னியன் said:

இப்பவே சொல்லிப்புட்டேன்..!

பாதி தொடர் எழுதிக்கொண்டிருக்கும்போதே,

  • பேரன் விளையாடக் கூப்பிட்டான்,
  • பேத்தி விளையாடக் கூப்பிட்டாள்,
  • மனிசி குசினிக்குள் மசால் வடை சுட கூப்பிட்டாங்க.. 

என ஓடிவிடக் கூடாது..

என்னையா குளிர் நேரத்தில் கராச்சுக்குள் படுக்கப்பண்ணுற எண்ணம் போல.

 

11 hours ago, suvy said:

நானும் கத்துக்குட்டிதான்,இதுக்குள்தான் அதுவும் நீங்கள் எல்லாம் தாங்கிப் பிடிப்பீர்கள் என்ற தெம்பில்தான் குதிரை ஓடுறன், யோசிக்காமல் எழுதுங்கோ.....வன்னியர் சொன்னதுபோல் பாதியில் மட்டும் விட  வேண்டாம்......!   😁

சுவி வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் கஸ்டநஸ்டங்கள் உங்களுக்குத் தெரியாததா?

11 hours ago, தமிழினி said:

அந்த 7 (ச்சா..  70)  நாட்களுக்காய் காத்திருக்கின்றோம். தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா!

எழுதவும் வேண்டுமல்லவா?அதுவும் ஒத்தை விரலால.

7 hours ago, ரதி said:

தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா 😃

இயலுமானவரை முயற்சி செய்கிறேன்.வேலைவெட்டியை விட்டுவிட்டு வந்து நிற்பதே பேரனை பார்க்கவென்று.இப்போ மனைவியோடு சேர்ந்து மகளும் பார்க்கிறாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள்.....ஈழப்பிரியன்...!

ஆபீசில் இருந்து படிக்காமல் வீட்டில் போயிருந்து படிச்சு பாருங்கோ அருமை தெரியும்.

5 hours ago, குமாரசாமி said:

 யாழ்களத்திலை இப்பவும் மார்க்கண்டேயன் நினைப்பிலை  திரியிற ஆக்கள்ளை இவரும் ஒருவர்.....😀 

வேறை ஒரு திரியிலையும் இன்னொராள் நெஞ்சை நிமித்தனவர்......ஆரும் கவனிச்சனீங்களோ? 😎

எரிச்சல் எரிச்சல் எரிச்சல்.

4 hours ago, Nathamuni said:

suvy

  • Advanced Member

65-70 இல்த் தான் திருமணமே செய்யுறாங்கள்.நீங்க வேறை.

3 hours ago, நிலாமதி said:

தொடருங்கள் ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன் 

 

3 hours ago, Kavallur Kanmani said:

தொடருங்கள் ஈழப்பிரியன்.

இருவருக்கும் பேரப்பிள்ளைகளின் பிரச்சனையை சொல்லி விளக்கத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓ அப்போ ஊர் வந்து சுற்று சுற்றி போயாச்சு போல இன்னும் வரட்டும் பந்திகள் அதை வாசித்து நிறையட்டும் பக்கங்களும் மனசுகளும்👈

உங்களைப் பற்றியும் வரும் காத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஈழப்பிரியன் said:

-------                                    இந்தப் பயணம் சரியாக 70 நாட்கள் திட்டமிட்டு எதிகாட்விமானத்தில் போய் வருவதற்கு விமான சீட்டும் இணைய மூலமாக எடுத்தாகிவிட்டது.இனி பெட்டி படுக்கைகள் என்று வீட்டில் ஒரு அறையே ஒதுக்கியாச்சு.யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று எழுத்து வழக்கு கணக்கெல்லாம் மனைவியின் வேலை.

ஊருக்குப் போகும் போது.... அங்குள்ள சொந்தங்களுக்கு, என்ன  பரிசுப்  பொருட்கள் வாங்கலாம் என்பது மிகவும் கடினமான வேலை. நாங்கள் மினக்கெட்டு  தேடி... வாங்கி, அதனைக்  காவிக் கொண்டு போய்... கொடுக்கும்  போது... அது,  அவர்களுக்கு அவசியம் அற்றதாக இருக்கும் நிலையில்.... மிகவும் மனக்  கஷ்டமாக இருக்கும்.

ஈழப் பிரியன் ஆரம்பமே.. நன்றாக உள்ளது. வாசிக்க ஆவலாக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                             ஏற்கனவே வான் வைத்து ஓடுபவர் ஒருவரிடம் எனது வருகையைப் பற்றி சொல்லி எனது போன் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தேன்.வீட்டில் கொண்டு போய்விட ஏசி இல்லாமல் 14000 ரூபா.ஏசி போட்டா 16000 ரூபா என்று கட்டணமும் கூறியிருந்தார்.நியூயோர்க் விமானநிலையத்திலிருந்து வைபர் மூலம் கதைத்த போது தன்னால் வர முடியால் இருப்தாகவும் தனது நண்பர் நம்பிக்கையானவர் அவர் வருவார் உங்கள் நம்பர் கொடுத்துள்ளேன் என்று அவரின் நம்பரையும் தந்தார்

                                    அமெரிக்காவிலுள்ளவர்களுக்காக இலங்கை தூதுவராலயம் ஒரு சலுகை செய்துள்ளது.ஒரு முறை விசா எடுத்துவிட்டு உடனேயே மல்ரிப்பிள் என்றிக்கு 100 டெலர்கட்டி எடுத்தால் அடுத்த 5 வருடத்துக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம் ஒரு தடவை போனால் 6 மாதத்திற்கு நிற்கலாம்.இதை அவுஸ்திரேலியா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளிலுள்ளவர்கள் முயற்சி செய்தும் கொடுக்கவில்லை.

                                    கொழும்பு விமானநிலையத்தில் இறங்கி பொதி வந்திருக்குமோ என்ன செய்வது வான்காரன் வேறை வந்து நிற்பானே வீட்டிலுள்ளவர்களுக்கு ஏன் கஸ்டமென்று அவர்களுக்கும் சொல்லவில்லை என்று ஆளையாள் பார்த்து முழிசிக் கொண்டு இமிகிரேசன் தாண்டி பொதி எடுக்கப் போனால் ஆச்சரியம் கடைசியில் போட்டதாலோ என்னவோ எமது பொதி முதலாவதாக வந்திருந்தது.நல்ல சந்தோசம்.50 இறாத்தல் 4 பொதியை போட்டு தள்ளிக் கொண்டுவந்து உள்ளுக்கு நின்றே வான்சாரதியுடன் குறுந் தகவலில் வந்துவிட்டோம் உங்கள் வானின் இலக்க தகடை அனுப்புமாறி சொல்லி வெளியில் போக ஏதோ பக்கத்தில் நின்றவர் மாதிரி உடனேயே வந்துவிட்டார்.

                                     ஆளைப்பார்க்க நல்ல வாட்டசாட்டமாக இளந்தாரியாக இருந்தார்.அவராகவே பொதிகளெல்லாம் எடுத்து வைத்து உதவி செய்தார்.நேரம் காலை 4 மணிதான்.ஊர் பத்திரிகைகளில் எயர்போட்டுக்கு வாறபோற வாகனங்கள் அடிக்கடி அடிபடுவதாக செய்திகள் வாறபடியால் முன்னுக்கிருந்து கதைத்துக் கொண்டு போவோம் என்று முன்சீற்றிலே இருந்தேன்.எனக்கும் நித்திரை வராது.அவர்ஆள் இளந்தாரியாக இருந்தாலும் மிகவும் அவதானமாக ஆறுதலாக ஓட்டினார்.சில நேரங்களில் இன்னும் கொஞ்சம் விரைவாக ஓடலாமே என்று சொல்ல வேண்டும் போல இருக்கும்.காலைச் சாப்பாடு அனுராதபுரத்திலுள்ள(வெளிநாட்டுப பாணி) ஒரு பேக்கரியில் நல்ல இடம் பாதுகாப்பு சுத்தம் என்று அங்கேயே சாப்பிட்டோம்.காசும் பெரிதாக ஒன்றுமில்லை.நான் எப்போதுமே யாருக்காவது அன்பளிப்பு கொடுப்பதென்றால் முதலேயே கொடுத்துவிடுவேன்.இவருக்கும் சிறுதொகை பணத்தை கொடுத்தேன்.

                                        இலங்கையை எப்படி சுற்றலாம் எத்தனை நாளாகும் என்று அவருடன் கதைத்த போது ஓரளவு புரிந்து கொண்டேன்.இடையிடையே நடந்த யுத்தம் தற்போதய நிலை என்று நிறையவே சொன்னார்.ஓரளவுக்கு நாம் அறிந்தவைகள் என்றாலும் சிலவற்றைக் கேட்க சங்கடமாக இருந்தது.முருகண்டி பிள்ளையாரை பார்த்தா கொஞ்சம் வெளிக்கிட்டு நிக்கிறமாதிரி இருந்தது.பிள்ளையாரையும் கும்பிட்டு கொஞ்ச கடலையும் வாங்கி கொறித்துக் கொண்டு வீடு போய் சேர 12.30 மத்தியானம்.

                                       எனக்கென்று அண்ணன் ஒருவரே.அவரும் சிட்னியில்.அப்பா அம்மா முதலே இறந்துவிட்டார்கள்.எமது வீட்டில் உறவினர் ஒருவரை இருத்தியிருந்தோம்.இப்போது மனைவி வீட்டில் தான் போய் இறங்கினோம்.திடீர் என்று கண்டதும் அவர்களுக்கு ஒரே ஆச்சரியமும் சந்தோசமும்.குசலம் விசாரிப்பது தொடங்கி ஊர் நடப்பு அதுஇதென்று நீண்ட நேரம் பின்னர் சாப்பிட்டுவிட்டு எனது வீட்டுப் பக்கம் போய் பார்த்து பொழுதுபட நித்திரை வெறியாகிவிட்டது.வேளைக்கே படுத்துவிட்டேன்.

                                       காலையில் எழும்பினால் எவரும் எழும்பிய மாதிரி தெரியவில்லை.இன்னும் முற்றாக விடியவில்லை எப்படி வெளியே போவது?கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவராக எழும்பினார்கள்.முதல் நாள் பிற்பகல் மாட்டை மேச்சலால் கொண்டுவந்து கட்டினார்கள்.அந்த ஞாபகம் வர மாடு எங்கை வயலுக்கையா கட்டுறநீங்கள் என்று கேட்டு ஒரு வேப்பங்கொப்பில் தடிமுறித்து சப்பிக் கொண்டு சின்ன துவாயையும் தோளில் போட்டுக் கொண்டு மாட்டுக்கு கொஞ்ச தண்ணீரும் வைத்து வயலுக்குள் கட்டிவிட்டு வரலாம் என்று மாட்டை அவிழ்துக் கொண்டு கொஞ்ச தூரம் போக பெறாமகன் கத்திக் கொண்டு வாறான்.என்னடா என்றால் இப்ப ஒருவரும் சேட்டில்லாமல் திரியிறேல்லை சேட்டை போட்டுக் கொண்டு போங்கோ என்று சேட்டைத் தந்தான்.ஊருக்குள் திரியும் போது சேட்டுடன் திரிவது குறைவு.இப்போ சேட்டே இல்லாமல் வெளிய போகேலாதா?ஓரிரு நாட்கள் போனபின் தான் கூலி வேலை மேசன் சீவல் தொழிலாளி எல்லோருமே பெனியனோ சேட்டோ போட்டிருக்கிறார்கள்.மாட்டுடன் வயலுக்கு போனால் முன்னர் பச்சைப்பசேலென்றிருந்த வயல் வெளி இப்போ காய்ந்து கருவாடாக கிடக்கிறது.பழைய தோட்டம் செய்த ஞாபகம் பார்க்க பார்க்க மிகவும் கஸ்டமாக இருந்தது.கிணற்றை சுற்றி தென்னைகள் ஒரே முள்ளுகள் தட்டித் தட்டி கிணற்றங்கட்டிலிருந்து யோசிக்க போன ஆளைக் காணல்லையே என்று தேடிவாறங்கள்.

தொடரும்.

46 minutes ago, தமிழ் சிறி said:

ஊருக்குப் போகும் போது.... அங்குள்ள சொந்தங்களுக்கு, என்ன  பரிசுப்  பொருட்கள் வாங்கலாம் என்பது மிகவும் கடினமான வேலை. நாங்கள் மினக்கெட்டு  தேடி... வாங்கி, அதனைக்  காவிக் கொண்டு போய்... கொடுக்கும்  போது... அது,  அவர்களுக்கு அவசியம் அற்றதாக இருக்கும் நிலையில்.... மிகவும் மனக்  கஷ்டமாக இருக்கும்.

ஈழப் பிரியன் ஆரம்பமே.. நன்றாக உள்ளது. வாசிக்க ஆவலாக உள்ளோம்.

சிறி ஒரு சின்ன உதாரணம் இரவில் கறன்ற் இல்லை என்றால் தற்காலிகமாக பாவிக்க சிறிய ரியூப் லைற் மாதிரி வாங்கிக் கொண்டு போனால் அங்கே அதே மாதிரி பெரிய லைற் வைத்திருக்கிறார்கள்.பெரிய வெக்கக்கேடு.

Posted
37 minutes ago, ஈழப்பிரியன் said:

                              

                                  வேப்பங்கொப்பில் தடிமுறித்து சப்பிக் கொண்டு சின்ன துவாயையும் தோளில் போட்டுக் கொண்டு மாட்டுக்கு கொஞ்ச தண்ணீரும் வைத்து வயலுக்குள் கட்டிவிட்டு வரலாம் என்று மாட்டை அவிழ்துக் கொண்டு கொஞ்ச தூரம் போக பெறாமகன் கத்திக் கொண்டு வாறான்.

மாட்டுடன் வயலுக்கு போனால் முன்னர் பச்சைப்பசேலென்றிருந்த வயல் வெளி இப்போ காய்ந்து கருவாடாக கிடக்கிறது.பழைய தோட்டம் செய்த ஞாபகம் பார்க்க பார்க்க மிகவும் கஸ்டமாக இருந்தது.கிணற்றை சுற்றி தென்னைகள் ஒரே முள்ளுகள் 

பசுமையான தாயகப் பயண அனுபவங்களைத் தொடருங்கள், ஈழப்பிரியன் அண்ணா. நாமும் இணைந்திருக்கிறோம். 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவாரஸ்யமாக செல்கிறது தொடருங்கள்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஈழப்பிரியன் said:

.1)சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று பாக்கையும் இழுத்துக் கொண்டு ஓட்டம் தான்.அடுத்த கதவுக்கு போவதற்கு இடையில் செக்கிங் வேற.அதையும் முடித்துக் கொண்டு

.2)இப்ப அடுத்த யோசனை நாங்கள் போய்ச் சேர எமது பொதிகள் வந்து சேருமா?

தொடரும்.

நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் உந்த வியாதி இருக்கு என்று ....இது ஒரு சர்வேதே வியாதி ....நிம்மதியாக இருக்கு....

ஈழப்பிரியன் தொடருங்கள் ....வாசிக்க ஆவலாக காத்திருக்கிறோம்....எழுத்து மண்புழு பட்ம் எடுத்த மாதிரி தெரியவில்லை ...பாம்பு படமெடுத்த மாதிரி இருக்கு

Posted

எனது பயணத்தில் ஒருமுறை ஒரு சிறு பயணப்பொதியை முதல் விமானத்தில் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். மற்றய பொதிகள் எல்லாம் வந்தும் இதற்காக மட்டும் மீண்டும் விமான நிலையம் போக வேண்டியதாய்ப் போச்சு. அதிலிருந்து எனக்கும் இதே பயம் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, மல்லிகை வாசம் said:

பசுமையான தாயகப் பயண அனுபவங்களைத் தொடருங்கள், ஈழப்பிரியன் அண்ணா. நாமும் இணைந்திருக்கிறோம். 😊

தொடங்கியாச்சு இப்ப சேடம் இழுக்குது.

 

7 hours ago, suvy said:

சுவாரஸ்யமாக செல்கிறது தொடருங்கள்.....!   😁

சுவி நீண்டகாலமாக வாசிப்பில்லாதபடியால் உங்களை மாதிரி சோறுகறி சேர்த்து சாப்பிடுவது போல முடியவில்லை.

7 hours ago, putthan said:

நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் உந்த வியாதி இருக்கு என்று ....இது ஒரு சர்வேதே வியாதி ....நிம்மதியாக இருக்கு....

ஈழப்பிரியன் தொடருங்கள் ....வாசிக்க ஆவலாக காத்திருக்கிறோம்....எழுத்து மண்புழு பட்ம் எடுத்த மாதிரி தெரியவில்லை ...பாம்பு படமெடுத்த மாதிரி இருக்கு

புத்து இணையத்தில் கொஞ்சம் மலிவு என்று விமானச் சீட்டுக்கள் வாங்க போனால் இடைத்தங்கல் நீண்டநேரம் வரும் இல்லாவிட்டால் குறுகிய நேரம் வரும்.

கொஞ்ச லாபத்துக்காக கயிற்றில் நடக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, மல்லிகை வாசம் said:

எனது பயணத்தில் ஒருமுறை ஒரு சிறு பயணப்பொதியை முதல் விமானத்தில் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். மற்றய பொதிகள் எல்லாம் வந்தும் இதற்காக மட்டும் மீண்டும் விமான நிலையம் போக வேண்டியதாய்ப் போச்சு. அதிலிருந்து எனக்கும் இதே பயம் உண்டு. 

பிள்ளைகள் வரும்போது இதே பிரச்சனை வந்தது.பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                    மேலே உள்ளது தான் எனது வீடு.நீண்டகாலமாக நெருங்கிய உறவினர் இருக்கிறார்கள்.அவர்களது வீடு நீண்டகாலத்தின் பின் திருத்தவேலை செய்ய தொடங்கியிருந்தனர்.அவர்கள் வீட்டுவேலை முடிந்துவிடும் என்பதால் எனது வீட்டையும் திருத்தலாம் என்றே 70 நாட்கள் போயிருந்தோம்.இப்போது நாங்கள் வெளிக்கிடும் வரையிலும் அவரின் வீடு திருத்தி முடியவில்லை.

                                   1995 இல் இடப் பெயர்வின்போது நடைபெற்ற சண்டையில் சாமியறைப் பக்கம் செல் விழுந்து சேதமாகி ஓடுகள் உள்ளே இருந்த சீற்றுகள் நிறைய இடங்களில் சன்னங்கள் பட்டு பல காயங்கள்.மீண்டும் அவரவர் ஊர் திரும்பிய போது தற்காலிகமாக திருத்தம் செய்யப்பட்டிருந்தது.இன்னமும் அப்படியே இருக்கிறது.இந்த கோடைக்கு போகலாம் என்றிருக்க மகன் ஆனியில் இரண்டாவது குழந்தை கிடைக்கப் போகுதென்றான்.சரி அப்ப இந்த வருடமும் வீடு திருத்துப்படாது.இப்ப வெளிக்கிடும் போதும் இது தான் கடைசி றிப் பிள்ளை பிறந்து எல்லாம் முடிந்த பின் எங்காவது வெளிக்கிடலாம் என்று சட்டம் வேறு சொல்லிவிட்டான்.

                                  சரி இத்தனை நாள் வந்தாச்சு வளவை என்றாலும் துப்பரவாக்குவோம் என்று ஒவ்வொருநாளும் வேலை.போன உடனேயே பெரிய இரும்பு கரியர் உள்ள சைக்கிள் ஓடுவாரற்றுக்கிடந்ததை எண்ணைதண்ணி பூசி அதில் தான் பயணம்.தூர எங்காவதென்றால் மோட்டார் சைக்கிள்.அங்கே போய் ஓடுவதற்காகவே மினக்கெட்டு மோட்டார் சைக்கிள் ஓட அனுமதிப் பத்திரம் பின்பு அதை 15 டொலர் கொடுத்து இன்ரநசினலாக்கி கொண்டு போனபடியால் பயப்படாமல் யாரின் உதவியும் இன்றி எல்லா இடமும் போக முடிந்தது.மனைவியின் வீடு நான்கு பக்கமும் மதிலென்றபடியால் விறகுக்கு கொஞ்சம் பஞ்சம்.காஸ் அடுப்பு இருந்தாலும் விறகடுப்பும் எரிந்து கொண்டிருக்கும்.ஆனபடியால் எனது வீட்டிலிருந்து வேலை முடிந்து போகும்போது சைக்கிளில் நிறைய விறகு கட்டிக் கொண்டு மனைவியையும் முன்னுக்கு ஏத்திக் கொண்டு போவோம்.அந்த நேரம் இளைப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு சந்தோசம்.ஒரு முறை இப்படி வரும் போது எனது ஒன்றுவிட்ட அண்ணன் மறித்து அட கோதாரிவிழுவாரே இந்த வெய்யில் எங்களாலேயே தாங்க முடியாமல் இருக்கிறது.உண்மையைச் சொல்லுங்கோடா சவுதியில் இருந்து வந்தநீங்களோ இல்லை அமெரிக்காதானோ என்று பேசிவிட்டுப் போனார்.இதை பலரும் சொல்லி குறைபட்டனர்.ஆனால் எமக்கு கஸ்டமாக இருந்தாலும் சந்தோசமாகவும் உடம்புக்கு இதமாகவும் இருந்தது.

                                              இங்கிருக்கும் போது ஒவ்வொருநாளும் ஓட்கஞ்சி(22 வருடமாக).அங்கு பசியோ பசி.மச்சாளே கேட்பாள் சாப்பிடுறதைப் பார்த்தா அகதி முகாமிலிருந்து வந்த மாதிரி இருக்கென்று.மாமி பேச்சுவிழும் எவ்வளவு காலத்துக்கு பின் வந்திருக்கினம் சாப்பிட விடடி நீஅங்கால போ நான் போட்டுக் கொடுக்கிறேன் என்பா.அத்தோடு மாம்பழம் வாழைப்பழம் பிலாப்பழம் என்று வேறை.பிலாப்பழம் எமது வீட்டிலேயே நல்ல சுவையான மரம் நிற்கிறது.ஒருநாள் வீட்டுவேலையாக இருந்த போது பிலாப்பழம் காகம் கொத்துது என்றார்கள்.வீட்டிலிருந்தவர்களிடம் சின்ன கத்தியும் வாங்கிக கொண்டு பிலாபபழம் வெட்ட வெளிக்கிட்டாச்சு.அப்பவும் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவா நான் தான் அங்கால இரண்டு மூன்று பொம்பிளைகளும் நிக்கினம் என்று சுதி காட்ட வெளிக்கிட்டு ஒரு 10 அடி ஏறல்லை பிலாப்பழத்துக்கு பதிலாக நான் தொப்பென்று விழுந்துகிடக்கிறேன்.நல்ல வேளை நிறைய தென்னம்பாளைகள் அடுக்கி வைத்திருந்தது.அதற்கு மேல் தான் விழுந்தது.விழுந்த என்னை தூக்கிவிடுவம் என்றில்லை மனைவியும் அவர்களுடன் சேர்ந்து சிரிசிரி என்று சிரித்துக் கொண்டிருக்கிறா.பெரிய வெட்கமாகிப் போட்டுது.இன்னும் இந்த சரத்தைக் கட்டியிருக்க வேண்டுமா என்றிருந்து.ஒரு காலத்தில் அணில் மாதிரி மரங்களில் ஏறித்திரிந்த நினைப்பு வினையாக போயிருந்திருக்கும்.

                                                  வீட்டுவேலைகள் வேலியடைப்புகள் முடிய கொஞ்சம் தூரமுள்ள உறவினர்கள் வீடுகள் என்று உலாத்து.சுவியர் மாதிரி கோவில்குளம் என்றுஒன்றும் அலையவில்லை.நல்லூருக்கு மாத்திரம் திருவிழா தொடங்க முதல் உள்ளுக்கு போக வேண்டுமென்பதற்காக போனேன்.பழைய கோவில் ஒரு பயபக்தி இருந்தது.இப்போ பெரியதேசம் பழைய உணர்வு வரவில்லை.இப்படியே நாள்போக நல்லூர் திருவிழாவும் தொடங்கிவிட்டது.ஒவ்வொருநாளும் சரியாக 5.45 போல சைக்கிளில் வெளிக்கிட்டால் 10 நிமிடத்தில் சைக்கிள் தரிப்பில் சைக்கிளை விட்டுவிட்டு நடந்து போக சரியாக 6 மணிக்கு சாமி வெளியே வரும்.7-7.30க்கு வீட்டுக்கு வந்துவிடுவோம்.சைக்கிள் ஓடும் போது என்னப்பா மூச்சுவாங்கிற மாதிரி இருக்கு நான் இறங்கி கொஞ்ச தூரம் நடக்கட்டோ என்பா.சீ சீ அப்படி ஒன்றுமில்லை தொடக்கத்தில் சும்மா இருந்த இதயம் கொஞ்சம் வேகமாக வேலை செய்யேக்கை அப்படித் தான் சத்தம் வரும் ஆனால் நான் ஓகோ.சொன்னா கேக்கவா போறியள்.மனைவி என்றாலும் கொஞ்சம் குறைத்து சொல்லவிடலாமோ?

                                        வான்காரனுடன் பேசி நேரே விமானநிலையம் போய் அங்கிருந்து இலங்கையைச் சுற்றிவர என்று ஒரு அட்டவணை தயாரித்து மகளுக்கு அனுப்பியிருந்தேன்.அவவும் காலி கதிர்காமம் நுவரெலியா திருகோணமலை யாழ்ப்பாணம் அடுத்தநாள் நல்லூர் தேருக்கு கட்டாயம் இங்கே நிற்க வேண்டும் என்று திட்டம் போட்டு எயர்பிஎன்பியில் வீடுகளும் ஒழுங்கு செய்து போட்டா.நான் மட்டக்களப்பும் போட்டிருந்தேன்.ஆனால் அவவோ நுவரெலியாவில் இரண்டு நாட்கள் போட்டு மட்டக்களப்பை தவிர்த்து விட்டா.அவ அனுப்பிய அட்டவணையைப் பார்த்ததும் யாழ் தனிக்காட்டுராசாவை பார்க்க முடியாதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

                                       சுற்றுலா நாள் வந்ததும் சிங்கப்பூர் விமானம் இரவு 12 மணிக்கு வாறதால் இங்கிருந்து 3-4 மணிக்கு வெளிக்கிட்டால் சரி என்று வான் சாரதியின் எண்ணப்படியே மனைவியின் அக்கா தங்கை பிள்ளைகள் அம்மா என்று வெளிக்கிட்டாச்சு.இப்போ பிள்ளைகள் கொண்டுவரும் பொதிகளை எப்படியாவது வேறு வானில் கொடுத்தனுப்ப சாரதியும் முயற்சி செய்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது.அவருக்கும் பெரிய கவலையாக போய்விட்டது.வானிலேயே எல்லா இடமும் கொண்டு திரிவதானால் பின்சீற் இரண்டும் மடிக்க வேண்டும்.இனி ஒன்றும் செய்ய முடியாது கொழும்பிலுள்ள எனது உறவினருக்கு விபரம் சொல்லி அவரின் வீட்டில் பொதிகளைப் போட்டுவிட்டு தொடர்ந்து பயணிப்பதாக திட்டம்.

                                       இரவு 11 மணிபோல விமானநிலையம் வந்ததும் சாரதியை பிள்ளைகள் வரும்வரை தூங்க சொன்னேன்.அவரும் விடியவிடிய காலிக்கு ஓடவேண்டுமே.நேரம் போகப்போக 2மணிக்கு கிட்டவாச்சு.12 மணி போல வந்துவிட்டோம் என்று குறந்தகவல் வந்தது.அதன் பின் நீண்ட நேரம் சென்றபின் 
       “ ஓஓஓ வீ காவ் பிரபிளம்”
என்று ஒரு குறுந்தகவல் வந்தது.

தொடரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.