Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள பரிமளம் அறிவது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு உருகும் பரிமளம் அம்மணி, ஏன் 'குமாரசாமி அத்தானோட' அயல்நாட்டிலிருக்கும்  புகைப்படத்தை கேட்கவில்லை..? :innocent:

ரகசியமாக முத்தமிட்டுக்கொள்ளலாம்.. அல்லது முண்டாசுபட்டி கதாநாயகி மாதிரியும் தூங்கலாமே..? :)

  • Replies 294
  • Views 47.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உங்கள் பொன்னான மூன்று கடிதங்களும் என் கைக்கு கிடைத்தது. உங்கள் முத்து முத்தான  முத்தங்களை அள்ளி பகிர்ந்தேன்.

Image associée

நான் இவவுக்குத்தானே குடுத்தேன்.இவை யார் யாருக்கு பகிர்ந்திருப்பா .......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

என்னையும் இன்னும் கொஞ்ச  ஆக்களையும் நாங்கள் ரயிலிலை பரீஸ் போய்க்கொண்டிருக்கேக்கை பொலிசு பிடிச்சுப்போட்டார்கள்.நீங்கள் பொலிசு எண்டவுடனை  கனக்க யோசிக்க வேண்டாம். அகதியாய் வந்தால் இஞ்சை இப்பிடித்தானாம்.எங்களை விசாரிச்சுப்போட்டு ஒரு பெரிய காம்பிலை விட்டிருக்கினம். இஞ்சத்தையான் பொலிசு நல்லவங்கள்.அடிக்கேல்லை.நல்ல அன்பாய் கதைக்கினம்.

அட நீங்கள் அகதியாவே வந்தனீங்கள்?நான் நினைச்சன் என்னைப் போல ஸ்கொலசிப்பில வந்தனீங்கள் என்று.

13 hours ago, குமாரசாமி said:

கடியன் கந்தையாவின்ரை மகள் கதை கேட்டாலும் கதைக்க வேண்டாம்.வேறு இடம் மாற முடியுமென்றால் இடம் மாறவும்.அவள் உங்கடை அறைக்கு பக்கத்திலையா இருக்கிறாள்?

என்ன தான் உறவாக இருந்தாலும் இன்னெரு பெட்டையைப் பற்றி கதைத்தா போதுமே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

எனது அண்ணா சுகமாக இருக்கிறார்.அண்ணா எங்கள் காதல் விவகாரம் தெரிந்து உங்களை சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும்  என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள்.

ஐயோஐயோ இதெல்லாம் வேறை நடந்திருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயோஐயோ இதெல்லாம் வேறை நடந்திருக்கா?

பரிமளம், 

உண்மையை சொல்லவேண்டுமென்றால், கொன்னர் நாலு சாத்து சாத்திப்போட்டு, சொன்னார் பாருங்கோ, 'இந்த ஏரியால உன்னை இன்னோருக்கா பார்த்தான், தொலைந்தாய்'.

அதோட வெளிக்கிட்டனான், கொழும்பு வந்து, ஜெர்மனிக்கு ஏறி, இப்ப ஆறுதலா கடதாசி போடுறன். 😜

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

இவ்வளவு உருகும் பரிமளம் அம்மணி, ஏன் 'குமாரசாமி அத்தானோட' அயல்நாட்டிலிருக்கும்  புகைப்படத்தை கேட்கவில்லை..? :innocent:

ரகசியமாக முத்தமிட்டுக்கொள்ளலாம்.. அல்லது முண்டாசுபட்டி கதாநாயகி மாதிரியும் தூங்கலாமே..? :)

a3o32t.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே 82 ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டீங்களா அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பரிமளம், 

உண்மையை சொல்லவேண்டுமென்றால், கொன்னர் நாலு சாத்து சாத்திப்போட்டு, சொன்னார் பாருங்கோ, 'இந்த ஏரியால உன்னை இன்னோருக்கா பார்த்தான், தொலைந்தாய்'.

அதோட வெளிக்கிட்டனான், கொழும்பு வந்து, ஜெர்மனிக்கு ஏறி, இப்ப ஆறுதலா கடதாசி போடுறன். 😜

இல்லாட்டி அந்த மனுசன் அங்கேயே நின்று இப்ப மாவீரர் ஆகியிருக்கும்.

30 minutes ago, ரதி said:

உண்மையிலேயே 82 ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டீங்களா அண்ணா?

கடிதத்தை விட திகதி ஆண்டுகளில்த் தான் கூடிய கவனம் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/25/2019 at 2:00 AM, புங்கையூரன் said:

ம்ம்ம்...அந்தக்காலத்திலேயே....இந்த  அடையாளம் ðஎல்லாமே....தூள் பறந்திருக்குது...!
நாங்கள் தான்.....பட்டிக்காட்டுச்  சீவியம்...சீவிச்சிருக்கிறம் போல கிடக்குது...!

தொடருங்கள்....அத்தான்!

மன்னிக்கவும்....அண்ணை...!😀

அந்தக்காலத்திலை  கடிதத்திலை ஒட்டுறதுக்கெண்டே விதம்விதமான ஸ்மைலி ஸ்ரிக்கர் எல்லாம் விற்றது..... கிட்டத்தட்ட எங்கடை லேடிஸ் ஒட்டுப்பொட்டு மாதிரி....😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/25/2019 at 4:02 AM, சாமானியன் said:

பிள்ளையார் சுழியும்   போட்டு பக்தி முக்தியாய் கடிதம்  எழுதத் தொடங்கியது எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு     

நாங்கள் பக்தி முக்தியாய் இருந்தாலும்....பிற மதத்தவருடனும் பிற இனத்தவருடனும் சகோதர பக்தியுடனே பழகினோம் சாமானியன்....உங்கள் கருத்திற்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/25/2019 at 5:28 AM, தமிழ் சிறி said:

Bildergebnis für balkon schlafen

அன்புள்ள அத்தான்.... குமாரசாமி   அறிவது, ❤️

இப்ப அரசடி பிள்ளையார் கோயிலடியில்... புத்த விகாரை வந்து, கனகாலமாச்சு.
நீங்கள் எனக்கு கடிதம் போட்டது, உங்கடை வீட்டுக்காரருக்கு தெரிந்தால்...
உங்களை,   "பல்கணியில்" படுக்க விட்டுடுவார்கள் என்பதால், நான் அதை வெளியில் சொல்ல மாட்டேன். :grin:

  பல்கனியெண்டால் எல்லாம் அல்லோல கல்லோலப்பட்டிருக்கும்...:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/25/2019 at 6:03 AM, suvy said:

முதலாவது கடிதத்தில் "அன்பு அத்தான் "   இரண்டாவதில் "அன்பை "காணேல்ல அன்புத் தங்கச்சி வந்திருக்கிறா......இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ பார்ப்பம்.........!  👍

 சுவியர் எனக்கு பரந்துபட்ட மனசு 😍........நான் என்னத்தை செய்ய? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/25/2019 at 6:09 AM, ஏராளன் said:

காதல் கடிதங்கள் சுவாரஸ்யமானவை!

அப்ப நீங்கள் சின்ன வயதிலை ஆருக்கும் பியோன் வேலை பாத்திருக்கிறியள் போலை கிடக்கு....😃

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணியின்ட கடிதத்திற்கு பதில் கடிதம் எங்க?
 
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

அண்ணியின்ட கடிதத்திற்கு பதில் கடிதம் எங்க?
 
Image associée

அண்ணனிடம் அம்பிட்டு இருக்குமோ.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2019 at 11:56 AM, குமாரசாமி said:

சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும்  என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள்.

உந்த அண்ணன்மார் இருக்கினமே தாங்கள் சுழட்டுவாங்கள், தங்கட தங்கச்சி யாரையும் சுழட்டுது என்றால் வந்திடுவாங்கள் கத்தி பொல்லுகளுடன்....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

உந்த அண்ணன்மார் இருக்கினமே தாங்கள் சுழட்டுவாங்கள், தங்கட தங்கச்சி யாரையும் சுழட்டுது என்றால் வந்திடுவாங்கள் கத்தி பொல்லுகளுடன்....

😜

  • கருத்துக்கள உறவுகள்
On 3/27/2019 at 5:11 AM, குமாரசாமி said:

அப்ப நீங்கள் சின்ன வயதிலை ஆருக்கும் பியோன் வேலை பாத்திருக்கிறியள் போலை கிடக்கு....😃

நான் ரொம்ப பயந்த சுபாவம், அதனால இந்த வேலைக்கு போனதில்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/25/2019 at 6:50 AM, putthan said:

பாசமுள்ள அத்தான்......தூர தேசம் போனாலும் மறக்காமல் சுகம் விசாரிக்கின்றார்

அது மண்ணிலையே ஊறினது ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2019 at 6:15 PM, குமாரசாமி said:

சிவமயம் 

பெர்லின் மேற்கு
ஜெர்மனி
15.10.1982

அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது!
நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்

நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள்  பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.

இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.

என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.💕

இப்படிக்கு
அன்பு அத்தான் குமாரசாமி 💘

அடுத்த கடிதம் வரும்......

காகிதம் எங்க போகுது? ஊருக்கோ ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
19.03.1983

அன்புள்ள பரிமளத்திற்கு!

                                                     நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க சன்னதி முருகனை வேண்டுறன்.

நான் இதோடை ஆறு கடிதம் போட்டுட்டன். இன்னும் ஒரு பதிலுமில்லை. ஏகாம்பரம் ஐயாவை விசாரிச்சால் எல்லா கடிதமும் குடுத்தனான் எண்டு சொல்லுறார். நீங்கள் வேண்டா வெறுப்பாய் கடிதத்தை வாங்கினதாயும் சொன்னார்.திருப்பியும் சொல்லுறன்  நான் அப்பிடியொண்டும் கூடாத நோக்கத்தோடை அந்தக்கேள்வியை உங்களிட்டை கேக்கேல்லை. எல்லாம் எங்கடை பிற்கால வாழ்க்கை நன்மைக்குத்தான் கேட்டனான். நான் இன்னுமொரு கடிதம் போடுவன்.அதுக்கும் பதில் இல்லையெண்டால் நான் உங்கை வந்துடுவன்.
இப்படிக்கு அன்புடன்
குரு

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உதார் குரு புதுசா😶

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சுவைப்பிரியன் said:

உதார் குரு புதுசா😶

உணர்ச்சிவசப்பட்டு உண்மை பெயரை போட்டிட்டாரோ?!

7 hours ago, குமாரசாமி said:

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
19.03.1983

அன்புள்ள பரிமளத்திற்கு!

                                                     நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க சன்னதி முருகனை வேண்டுறன்.

நான் இதோடை ஆறு கடிதம் போட்டுட்டன். இன்னும் ஒரு பதிலுமில்லை. ஏகாம்பரம் ஐயாவை விசாரிச்சால் எல்லா கடிதமும் குடுத்தனான் எண்டு சொல்லுறார். நீங்கள் வேண்டா வெறுப்பாய் கடிதத்தை வாங்கினதாயும் சொன்னார்.திருப்பியும் சொல்லுறன்  நான் அப்பிடியொண்டும் கூடாத நோக்கத்தோடை அந்தக்கேள்வியை உங்களிட்டை கேக்கேல்லை. எல்லாம் எங்கடை பிற்கால வாழ்க்கை நன்மைக்குத்தான் கேட்டனான். நான் இன்னுமொரு கடிதம் போடுவன்.அதுக்கும் பதில் இல்லையெண்டால் நான் உங்கை வந்துடுவன்.
இப்படிக்கு அன்புடன்
குரு

என்ன கேள்வி கேட்டிருப்பார்?

என்ன கேள்வி?   உங்கட கேள்வியால அண்ணி அழுகிறாவோ தெரியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/25/2019 at 7:53 AM, மல்லிகை வாசம் said:

அந்தக்காலத்தில் கடிதங்கள் மூலம் உறவைப் பேணிய மகிழ்ச்சி தற்போதய மின்னஞ்சல், குறுந்தகவல் தொடர்புகளில் தெரிவதில்லை. 

முப்பது வருஷத்துக்கும் முந்தைய திகதியுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். கடிதம் படிக்க மேலும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள் குமாரசாமி அண்ணை. 🙂

அந்தக்காலத்து காதல் சுவாரசியமானவை. இன்று எல்லாம் அவசரக்காதல்.....:grin:

On 3/25/2019 at 10:03 AM, Shanthan_S said:

காதல்  சுகமானது...வரவுக்கு நன்றி

On 3/25/2019 at 11:10 AM, ஜெகதா துரை said:

குமாரசாமி அண்ணா!

உங்களின் பகிர்வுகள் எல்லாம் நகச்சுவையுடன் இருக்கும். நானும் ரசிப்பேன்.தொடருங்கள்....

ஆனால் இஞ்சை பகிடியெல்லாம் இருக்காது....ஒரே வெட்டுக்கொத்துதான்......😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.