Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg

இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 
  • Replies 412
  • Views 39k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 
  இதெல்லாம் கிறிஸ்த்தவ விஞ்ஞானிகள் அலசி ஆராய்ந்து...
அதனால் ஏற்படும் விளைவுகள் மனித இனத்திற்கே நன்மை பயக்கும்
என்று கூறியுள்ளார்களாம்.
அதைவிட  கற்கள் முட்கள் செறிந்த பாதையில் மனிதன் உருண்டு பிரண்டு தனது     உடலை வருத்துவதைவிட  முழங்காலில் நடந்தால் முழங்கால் மூட்டுக்கள் வலிமைபெற்று ஆயுட்காலம் முழுவதும் ஓடியாடி நடக்கலாமாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Maruthankerny said:

இஞ்சை கேட்டியளே மருதங்கேணியர்! நீங்கள் வந்த நேரம் தொடக்கம்   மூச்சு விடாமல் வெட்டி விளாசுறியள்.கொஞ்ச நேரம் உதிலை இருங்கோவன்.
அடுப்பு மூட்டித்தான் கிடக்கு.தேத்தண்ணி  ஒண்டு ஊத்தட்டே?:grin:

இனம்,மதம்,சாதி,நிறம்,உயரம்,கட்டை,ஏழையின் வயிற்றில் பிறத்தல்,பணக்காரரின் வயிற்றில் பிறத்தல்,ஆண்,பெண் எல்லாமே பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டது.மதத்தை வைத்து குத்தி முறிந்து ஒரு பிரயோசனமும் இல்லை.:cool:
 
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

கோயில்களை சாமிக்கு பால் ஊத்துறோம், பக்கத்தில் இருந்து பாலுக்கு அழும் குழந்தையை புறக்கணித்து விட்டு. அங்கே ஏழைகளுக்கு செய்பவர்களை பார்த்து இவ்வாறு சொல்கிறார்கள்  "இந்தச் சின்னஞ் சிறுவருக்கு செய்ததெல்லாம் எனக்கே (கடவுளுக்கே)  செய்தீர்கள்." 

p9Kvp8D.jpglQvRLh4.jpgCOQgS9r.jpg

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம் (US Dollars)
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம்

வத்திக்கான் (நாடு / நகரில்) கத்தோலிக்க பாதிரியார்கள் போன்றவர்கள்  மட்டுமே வசிக்கமுடியும், 
இவர்களின் தொகை சுமார் 800 பேர் வரையில்.
அவர்களுக்கு சேவகம் செய்வோர் சுமார் 2,400.
எனக்கு தெரிந்த மட்டில், இவர்கள் யாரும் வத்திக்கானில் தங்க முடியாது.  

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.
அட ச்சை ....என்ன உலகமடா இது.

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.

அட ச்சை ....என்ன உலகமடா இது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை கேட்டியளே மருதங்கேணியர்! நீங்கள் வந்த நேரம் தொடக்கம்   மூச்சு விடாமல் வெட்டி விளாசுறியள்.கொஞ்ச நேரம் உதிலை இருங்கோவன்.
அடுப்பு மூட்டித்தான் கிடக்கு.தேத்தண்ணி  ஒண்டு ஊத்தட்டே?:grin:

இனம்,மதம்,சாதி,நிறம்,உயரம்,கட்டை,ஏழையின் வயிற்றில் பிறத்தல்,பணக்காரரின் வயிற்றில் பிறத்தல்,ஆண்,பெண் எல்லாமே பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டது.மதத்தை வைத்து குத்தி முறிந்து ஒரு பிரயோசனமும் இல்லை.:cool:
 
இதை நீங்கள் உங்களுக்கே 1970களில் சொல்லி பாக்குவ பட்டிருக்கலாம் 
தமிழராக இலங்கையில் பிறந்தால் சிங்களவருக்கு அடிமையாய் இருக்கவேண்டும் 
எனும் தத்துவத்தை புலிகளுக்கே சொல்லி புரிய வைத்திருக்க வேண்டும். 

உழைக்க தெரியாமல் இங்கு யாரும் இல்லை 
அடுத்தவன் உழைப்பை இன்னொருவன் சுரண்டுவதுதான் பிரச்சனை.
அது பற்றித்தான் இங்கு விவாதிக்கிறோம். 

நிறைய விவாதிக்க வேண்டும் 
அடுத்த சந்ததி எம்மிலும் கொஞ்சம் அறிவு கூடியதாக இருக்கும் 
எம்மைப்போல பித்தலாட்டங்களை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள போவதில்லை 
கேள்வி கேட்பார்கள்  நாம் பதில் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் 
இருக்கும் மதமும் அழிந்து போவதுதான் உறுதி ... அவன் அனுமானை வைத்து ஆட்டுவான் 
இதுகள் காவடி ஆடுங்கள் அவளவுதான். 

காற்று நீர் நிலம் நெருப்பு வானம் எல்லோருக்கும் ஒரே மாதிரியே இருக்கிறது 
அடுத்தவனை நம்பி வாழவேண்டிய தேவை எந்த சமூக குழுமத்துக்கு இல்லை 
இன்னொருவன் ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும்  செய்யும்வரை 

20 minutes ago, Sasi_varnam said:

p9Kvp8D.jpglQvRLh4.jpgCOQgS9r.jpg

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம் (US Dollars)
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம்
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

வத்திக்கான் (நாடு / நகரில்) கத்தோலிக்க பாதிரியார்கள் போன்றவர்கள்  மட்டுமே வசிக்கமுடியும், 
இவர்களின் தொகை சுமார் 800 பேர் வரையில்.
அவர்களுக்கு சேவகம் செய்வோர் சுமார் 2,400.
எனக்கு தெரிந்த மட்டில், இவர்கள் யாரும் வத்திக்கானில் தங்க முடியாது.  

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.
அட ச்சை ....என்ன உலகமடா இது.

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.

அட ச்சை ....என்ன உலகமடா இது.

கூகிளுக்கு தெரியாத தில்லுமுல்லு இன்னமும் 60% வரை இருக்கு 

உங்களுக்கு இன்னொரு அதிர்ச்சியை சொல்லிக்கொள்கிறேன் .. வத்திக்கானின்  ஆரம்ப 
சொத்துக்கள் எல்லாம் காலனிய காலத்தில் பிற நாடுகளில் களவெடுத்தவையாகும் 
களவெடுத்த சொத்துக்களை பாதுகாக்கவே கத்தோலிக்கத்தை வைத்து மாயா வித்தை இன்றுவரை 
காட்டுகிறார்கள்.

அதற்காக பாலை கொண்டு சென்று கல்லில் ஊத்துவதை இதை வைத்து நியாய படுத்த முடியாது 
அக்கிரமம் எந்த அளவில் இருந்தாலும் அது வக்கிரம்தான் .. அதை அங்கிருந்து அகற்றவேண்டும்  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg

இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 
இங்கு குத்தி முறிபவர்களின் கணக்கின்படி 
இவையும் இந்துமதம் என்ற போலியைத்தான் சேரும் 
அவர்களின் மதம்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடியாம் 

உண்மையான கணக்கின்படி எல்லாம் ஒரே கணக்கில்தான் சேரும் ....
ஆறாம் அறிவை அடகுவைத்த அடி முட்டாள்கள்  கணக்கில் சேரும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 
8 hours ago, tulpen said:

அபராஜிதன் இவை எல்லாம் உண்மை என்று மனதார நம்புகின்றீர்களா? 

நான் நம்பவில்லை ,அவர்களின் நம்பிக்கையை கெடுக்கவும் விரும்பவில்லை..ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

8 hours ago, மாங்குயில் said:

கிட்னி இரண்டும் failure ஆகின பின்பும், பாதிரியாரின் ஒரு ஜெப 'dose' இற்காக குடும்பத்துடன், கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களை என்னவென்று அழைப்பது?

இங்கு எல்லோருக்கும் அவர் அவர் விரும்புவதை பாலோ பண்ணுவதற்கான தனி மனித சுதந்திரம் இருக்குன்னு நம்புகிறவன் நான்.. அவர்களின் நம்பிக்கைகளுக்குள் தலையிட விரும்பவில்லை, அதேநேரம் அவர்களுக்கு என்னால் அதை விட/ அதற்கு மேலானதாக  வேறு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியாத போது அவர்கள் விரும்பியதை அவர்கள் பின்தொடர்வதில் நான் /நாம் சொல்வதற்கு என்ன இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, அபராஜிதன் said:

ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

உங்களின் கையறு நிலையைவிட, மோசமாயிருக்கிறது பாதிரியாரின் கையறுநிலை.

அதனால்தான், அவர் ஜெபித்திருக்கிறார்.

அசையாமல் இருந்த சிசு, திருவாசகத்தை கேட்டு, அசைந்ததாம்.

இன்னொருவர், கிட்னி பூரணமாக பழுதடைந்ததற்கு ஜெபித்தாராம். முன்னர் இருந்த நிலைமையை விட பரவாயில்லையாம்.

முழுக் குடும்பமும் கிறிஸ்தவத்திற்கு எஸ்கேப்.

29 minutes ago, அபராஜிதன் said:

நான் நம்பவில்லை ,அவர்களின் நம்பிக்கையை கெடுக்கவும் விரும்பவில்லை..ஏனெனில் அவர்கள் நோயால் அவதிப்படும் போது கையறு நிலையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது

இங்கு எல்லோருக்கும் அவர் அவர் விரும்புவதை பாலோ பண்ணுவதற்கான தனி மனித சுதந்திரம் இருக்குன்னு நம்புகிறவன் நான்.. அவர்களின் நம்பிக்கைகளுக்குள் தலையிட விரும்பவில்லை, அதேநேரம் அவர்களுக்கு என்னால் அதை விட/ அதற்கு மேலானதாக  வேறு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியாத போது அவர்கள் விரும்பியதை அவர்கள் பின்தொடர்வதில் நான் /நாம் சொல்வதற்கு என்ன இருக்கு

 அம்மாவுக்கு இரத்தம் சம்பந்தமான புற்றுநோய் உள்ளது எனக் கண்டறிந்து இந்த செப்ரம்பருடன் 3 வருடங்கள் முடிவடைகின்றது. நோயின் எந்த அறிகுறியோ பாதிப்போ இன்னும் இல்லாமல் சராசரி ஆளாக இருக்கின்றார். எப்படி என்று கேட்டால், "அம்மா பகவான் ஒரு நாள் தன் தலையை வருடி இனி உனக்கு இந்த நோயால் பாதிப்பு வராது" என்று கனவில் வந்து சொன்னாராம். அது கனவா அல்லது உண்மையாகவே வந்து சொன்னாரா என தனக்கு இன்னும் புரியவில்லையாம். அவர் சொன்ன மாதிரி நடக்கின்றமையால் அம்மா பகவானை தீவிரமாக நம்புகின்றார்.

நான் அம்மா பகவானின் மீது அண்மையில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தொலைபேசியில் சொன்னால், கேட்காத மாதிரி இருந்து விடுகின்றார்.

எனக்கு நன்கு தெரிகின்றது அவரது நம்பிக்கை தவறானது என. ஆயினும் அந்த நம்பிக்கை அவரை நேர்மறையாக சிந்திக்க வைப்பதால் நோயின் தாக்கத்தை மனவுறுதியுடன் எதிர்த்து நிற்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, அபராஜிதன் said:

உண்மைதான். நம்பிக்கைகள், அவரவர் பின்பற்றும் மதம், கொள்கை, கோட்பாடுகளை சார்ந்தவை.

இங்கு யாரும், கொள்கை, கோட்பாடுபற்றி யாரும் கவனமெடுப்பதாகத் தெரியவில்லை.

3 hours ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg

இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 
சசிவர்ணம், சலுகைக்காக மதம் மாறியவர்கள் சிலுவை தூக்குவது தவறில்லையாம்! இப்படித்தான் இங்கு இருக்கிறது பலரின் விவாதம். 🤣

12 minutes ago, மாங்குயில் said:

உண்மைதான். நம்பிக்கைகள், அவரவர் பின்பற்றும் மதம், கொள்கை, கோட்பாடுகளை சார்ந்தவை.

இங்கு யாரும், கொள்கை, கோட்பாடுபற்றி யாரும் கவனமெடுப்பதாகத் தெரியவில்லை.

இங்கு சிலருக்கு மதகுருவாக மாறுவது தான் ஆன்மீக வழியில் செல்வதாகத் தெரிகிறது. அதனால் வசதி வாய்ப்புகள் தரும் மதமாகப் பார்த்துமாறுவதும் தவறில்லையாம். இந்த லட்சணத்தில் இந்து/சைவ மதங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?

21 minutes ago, நிழலி said:

 அம்மாவுக்கு இரத்தம் சம்பந்தமான புற்றுநோய் உள்ளது எனக் கண்டறிந்து இந்த செப்ரம்பருடன் 3 வருடங்கள் முடிவடைகின்றது. நோயின் எந்த அறிகுறியோ பாதிப்போ இன்னும் இல்லாமல் சராசரி ஆளாக இருக்கின்றார். எப்படி என்று கேட்டால், "அம்மா பகவான் ஒரு நாள் தன் தலையை வருடி இனி உனக்கு இந்த நோயால் பாதிப்பு வராது" என்று கனவில் வந்து சொன்னாராம். அது கனவா அல்லது உண்மையாகவே வந்து சொன்னாரா என தனக்கு இன்னும் புரியவில்லையாம். அவர் சொன்ன மாதிரி நடக்கின்றமையால் அம்மா பகவானை தீவிரமாக நம்புகின்றார்.

நான் அம்மா பகவானின் மீது அண்மையில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தொலைபேசியில் சொன்னால், கேட்காத மாதிரி இருந்து விடுகின்றார்.

எனக்கு நன்கு தெரிகின்றது அவரது நம்பிக்கை தவறானது என. ஆயினும் அந்த நம்பிக்கை அவரை நேர்மறையாக சிந்திக்க வைப்பதால் நோயின் தாக்கத்தை மனவுறுதியுடன் எதிர்த்து நிற்கின்றார்.

நிழலி, சாய்பாபா, அம்மா பகவான் போன்றோரை நான் கடவுளாகக் கருதுவதில்லை. எனினும் இவர்களை வழிபடுபவர்களை எதிர்ப்பதில்லை, உண்மையான பக்தியும், சேவை மனமும் உள்ளவர்கள் என்றால். இந்த நம்பிக்கையோடு மனவுறுதியுடனுள்ளவர்களை மட்டுமல்ல பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை உடையவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் பஜனை, பூஜை வழிபாடுகள் அவர்களுக்கு மனமகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்கின்றன. நானே இதனை உணர்ந்திருக்கிறேன். 

அந்த பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனை தரும் சக்தியின் வலிமையோ என்று எண்ணுவது உண்டு. 😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, மல்லிகை வாசம் said:

இங்கு சிலருக்கு மதகுருவாக மாறுவது தான் ஆன்மீக வழியில் செல்வதாகத் தெரிகிறது. அதனால் வசதி வாய்ப்புகள் தரும் மதமாகப் பார்த்துமாறுவதும் தவறில்லையாம். இந்த லட்சணத்தில் இந்து/சைவ மதங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?

பிறர் கொச்சைப்படுத்தும்போது,  புத்தகங்களின்மூலம் தேடல்களை நாடுங்கள் என்று சொல்லாமல், இந்து மத நூல்களில் இருந்து ஆதாரபூர்வமாக பதில் எழுதுங்கள்.

இது எல்லாருக்கும் பயன் அளிக்கும். 

இங்கு எழுதும் கிறிஸ்தவர்கள்கூட, மேலெழுந்தவாரியாக எழுதுகிறார்கள்.

தங்களது பைபிளை மேற்கோள்காட்டி யாரும் எழுதுவதாகக் காணோம்.

1 hour ago, மல்லிகை வாசம் said:

நிழலி, சாய்பாபா, அம்மா பகவான் போன்றோரை நான் கடவுளாகக் கருதுவதில்லை. எனினும் இவர்களை வழிபடுபவர்களை எதிர்ப்பதில்லை

நான் இவர்களை மனிசராக கூட மதிப்பதில்லை. அயோக்கிய போக்கிரிகள்.

ஆனால் இந்த போக்கிரிகளை உண்மை என நினைத்து உள்ளன்புடன் நம்புகின்றவர்கள் பலர் இவர்களின் அயோக்கியத்தனத்தை புரியாமல் அதே நேரம் தாம் வாழும் வாழ்வுக்கு நேர்மையாக வாழும் போது  அப்படியே விட்டு விடுவது தீங்கல்ல என நம்புகின்றேன்.

8 minutes ago, நிழலி said:

உண்மை!

ஒவ்வொரு மதத்திலும் உயர்ந்த கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும் உள்ளன.

ஒரு மூட நம்பிக்கையைவிட இன்னொரு மூட நம்பிக்கை உயர்வானது என நம்பும் மூடர்களே மற்றவர்களை ஏமாற்றி, வஞ்சித்து மதம் மாற்ற முனைகின்றனர்.

கிறிஸ்தவ சமயத்திலுள்ள நல்ல விடயங்களையும் குழியில் புதைக்கும் வேலைகளை சில மூடர்களே செய்துவருகின்றனர். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் (நல்ல கிறிஸ்தவர்கள்) இந்த மூடர்களின் ஏமாற்று வேலைகளை, மதம் மாற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவதில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நான் இவர்களை மனிசராக கூட மதிப்பதில்லை. அயோக்கிய போக்கிரிகள்.

ஆனால் இந்த போக்கிரிகளை உண்மை என நினைத்து உள்ளன்புடன் நம்புகின்றவர்கள் பலர் இவர்களின் அயோக்கியத்தனத்தை புரியாமல் அதே நேரம் தாம் வாழும் வாழ்வுக்கு நேர்மையாக வாழும் போது  அப்படியே விட்டு விடுவது தீங்கல்ல என நம்புகின்றேன்.

நிழலி....நம்பிக்கை என்பது மனித வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானது!

வாழ்க்கையை நகர்த்துவற்கு.. ஒரு கொப்பு  எப்போதும் தேவைப்படுகின்றது! எமது ஊரில்..பாம்புக்கடிக்கு வேப்பிலை அடித்துத் திரு நீறு அடிப்பார்கள்!  விஞ்ஞானக் கண்களுக்கு வெறும் முட்டாள் தனமாகத் தோன்றும் செயல் இதுவானாலும்...பலர் குணம் பெற்றதை....நேரடியாகக் கண்டதுமுண்டு! இதே போலத் தான் சூனியம் வெட்டுவதும்! இல்லாவிட்டால்....சூனியம் வைக்கப்பட்டவன்....பயத்திலேயே....உயிரை விட்டு விடுவான்!

அவுசில் உள்ள பூர்விக குடிகள்...தங்கள் இறந்து போன மூதாதையர்களின் ஆவி...தங்களை வழிநடத்துவதாக....எப்போதும் நம்புவார்கள்! இவர்கள் மூதாதையர்களின் ஆவிகள்...ஆறு..மலை...குளம் போன்ற இடங்களில் வாழ்வதால்..இவர்கள் எப்போதும் த்றந்த வெளியிலும்....உறவுகளுடனும் வாழ்வதையே விரும்புவார்கள்! இவர்களை மூடப் பட்ட சிறைகளுக்குள் அடைத்தால்....மூன்று அல்லது நான்கு நாட் களுக்குள் தற்கொலை செய்து கொள்வார்கள்! இதனால் இவர்களை பொதுவான மூடிய சிறைகளில் அடைப்பதில்லை!

திறந்த வெளிச் சிறைகளில்...கூடுகளூக்குள் வைத்திருப்பார்கள்!

இந்தக் பிடிப்பதற்கான கொப்பின் தேவையைத் தான்...மதங்கள் நிரப்புகின்றன எனநினைக்கிறேன்!

38 minutes ago, புங்கையூரன் said:

எதார்த்தமான கருத்து!
நம்பிக்கை தான் வாழ்வு! அதனடிப்படையில் தான் மத நம்பிக்கைகள் அமைகின்றன.

ஆனால் மதங்களின் முகவர்களாக தொழிற்படுபவர்கள் பலர் நல்ல கருத்துக்களைக் கூட தங்கள் இருப்புக்கு, வசதிக்கு திரித்து மதமாற்றம், ஆக்கிரமிப்பு போன்ற மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 hours ago, வாத்தியார் said:

  இதெல்லாம் கிறிஸ்த்தவ விஞ்ஞானிகள் அலசி ஆராய்ந்து...
அதனால் ஏற்படும் விளைவுகள் மனித இனத்திற்கே நன்மை பயக்கும்
என்று கூறியுள்ளார்களாம்.
அதைவிட  கற்கள் முட்கள் செறிந்த பாதையில் மனிதன் உருண்டு பிரண்டு தனது     உடலை வருத்துவதைவிட  முழங்காலில் நடந்தால் முழங்கால் மூட்டுக்கள் வலிமைபெற்று ஆயுட்காலம் முழுவதும் ஓடியாடி நடக்கலாமாம்

வாத்தியார்  உங்களை நம்பி வந்த மாணவர் களுக்கு இப்படி தான் அறிவூட்டினீர்களா? இப்படியான மூடத்தனங்களை அறிவியலுடன் தொடர்புபடுத்தும் செயலை இந்திய இலங்கை ஊடகங்கள் தான்  மிக அதிகமாக செய்கின்றன. இபடியான காட்டுமிராண்டித்தனங்கள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அவை காட்டு மிரண்டித்தனங்கள் தான். 

2 hours ago, மாங்குயில் said:

பிறர் கொச்சைப்படுத்தும்போது,  புத்தகங்களின்மூலம் தேடல்களை நாடுங்கள் என்று சொல்லாமல், இந்து மத நூல்களில் இருந்து ஆதாரபூர்வமாக பதில் எழுதுங்கள்.

இது எல்லாருக்கும் பயன் அளிக்கும். 

இங்கு எழுதும் கிறிஸ்தவர்கள்கூட, மேலெழுந்தவாரியாக எழுதுகிறார்கள்.

தங்களது பைபிளை மேற்கோள்காட்டி யாரும் எழுதுவதாகக் காணோம்.

மாங்குயில், மத நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறியாதவர்கள் அல்ல இவர்கள். இவர்களின் முக்கிய பிரச்சினையே மதங்களில் உள்ள குறைகளாகச் சிலவற்றை தூக்கிப்பிடித்துக் கொண்டாடுவது தான்.

எத்தனையோ நல்ல விடயங்களை இருப்பதை இவர்களுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. குறைகளைக் கண்டறியத் தெரிந்த இவர்களுக்கு பெரும்பாலான நல்ல விடயங்கள் தெரிவதில்லையோ அல்லது அவற்றை மூடி மறைக்க முயல்கின்றனரோ என்று தெரியவில்லை. 

பல்வேறு திரிகளில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தாம் இவை. இவர்களுக்கு மத நூல்களை மேற்கோள் காட்டியும் பயனில்லை. முன்னைய காலங்களில் பலர் அவ்வாறு புரியவைக்க முயன்றோம். ஆனால் இவர்களுக்குக் கொள்கையை விடச் சோறும், மதகுருப் பட்டமும் தான் முக்கியம் போல் தெரிகிறது. ஆன்மீக விழிப்புணர்வு என்பது இங்கு செல்லாக்காசு போலாகிவிட்டது.

40 minutes ago, போல் said:

ஆனால் மதங்களின் முகவர்களாக தொழிற்படுபவர்கள் பலர் நல்ல கருத்துக்களைக் கூட தங்கள் இருப்புக்கு, வசதிக்கு திரித்து மதமாற்றம், ஆக்கிரமிப்பு போன்ற மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முகவர்களையே தான் வழிகாட்டிகளாக ஏற்று அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை எண்ணிப்பார்க்க வேதனையாக உள்ளது.

7 hours ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg

இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 
சசி வர்ணம் நீங்கள் இணைத்த படங்களில் உள்ள செயல்கள் பக்கா மூடத்தனங்கள் என்பதில் நீங்களும் நானும் தெளிவாக உள்ளோம். ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி  கனடாவில் வசிக்கும் உங்களால் அம்மக்களின் அன்றாட வாழ்வியலில் இப்படியானவற்றை  காண முடிகிறதா? இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். கனடாவில் அல்லது மேற்கு ஐரோப்பிய மக்கள் இப்படியான மூடத்தனங்களில் மூழ்கி இருந்திருந்தால் நானும் நீங்களும் இந்நாடுகளுக்கு குடி வந்திருக்க மாட்டோம் என்பதை நீங்கள. மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அவர்கள் அவ்வாறு அறிவியலில் முன்னேறி தமது நாடுகளை பொருளாதாரத்தில் வளர்தது எடுத்ததைப் போல எதிர்காலத்தில் எமது மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விரும்புவது தவறா? 

நிற்க நீங்கள் இணைத்த படங்கள் ஏற்கனவே மத மூடத்தனங்களில் மூழ்கி இருக்கும் தென் அமெரிக்க நாடு ஒன்றில் நடைபெற்ற செயல்கள். எமது மக்களின் இப்படியான மூடத்தனத்தை நியாயப்படுத்த இவைகளை நீங்கள் இணைத்தது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.   

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, மல்லிகை வாசம் said:

இந்த முகவர்களையே தான் வழிகாட்டிகளாக ஏற்று அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை எண்ணிப்பார்க்க வேதனையாக உள்ளது.

இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அந்த மதத்தை நீங்கள் பின்பற்றும் விதத்தை எண்ணிப்பார்க்க எனக்கும் வேதனையாகத்தான் உள்ளது. 

26 minutes ago, Jude said:

இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அந்த மதத்தை நீங்கள் பின்பற்றும் விதத்தை எண்ணிப்பார்க்க எனக்கும் வேதனையாகத்தான் உள்ளது. 

நான் இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தீர்மானிக்க நீங்கள் யார்? 

எது எங்களுக்குத் தேவையோ அதைத் தேடிய பயணத்தில் தெளிவாக இருக்கிறோம். அதற்கான தத்துவங்களும், வழிகாட்டிகளும் எமது மதத்தில் நிறையவே உண்டு. எமது தகுதிக்கேற்ற அளவு வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கச் சுதந்திரமும் உண்டு. (உதாரணம்: சரியை, கிரியை, யோகம், ஞானம்)

15 hours ago, Maruthankerny said:

உங்களுக்கு எழுதுவது ஒன்றும் புரியவில்லை ...
வீணாக சும்மா அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் 
ஒரே ஒரு மகிழ்ச்சியான விடயம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று எழுதி இருப்பதுதான்.

ஆதிக்கத்துக்கும்  அடிமைத்தனத்துக்கும்  
திட்டமிட்ட இன-மத அழிப்புக்கும்  உங்களுக்கு வித்தியாசமும் விளக்கம் புரியவில்லை 
தொடர்ந்தும் அலம்புவதால் பயன் ஒன்றும் இல்லை.

இப்படி நீங்கள் ஏன் அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் 
இதுக்கு எல்லாம் என்ன மூல காரணம் என்பதுபற்றித்தான் நான் இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன் 
ஒட்டுமொத்த இனமும் அலம்பிக்கொண்டு இருப்பதால்தான்... பலர் மதம் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
என்பதைத்தான்  இங்கு பலர்  சுட்டி காட்ட முனைவது.

நீங்கள் கேட்ட கேள்விக்கு ஏற்ப சரியான பதில் தரப்பட்டுள்ளது. அது உங்களுக்குக் கசப்பானதாக இருந்தால் அலம்புவதாகக் கூறித் தப்பித்துக் கொள்வது உங்கள் இயல்பு போலும்!

பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதாகக் கூறும் நீங்கள், வெள்ளையர்கள் பலர் இந்து மதம் பால் ஈர்க்கப்பட்டு அதன் கொள்கைகள் மீது ஆர்வமாக இருப்பதை அறியவில்லைப் போலும். இந்து மதத்தை தழுவிய வெள்ளையர்களும் பலவுண்டு. Meditation, இந்து மதப் பாடல்கள் இவற்றைப் பயின்று நாளாந்த வாழ்வில் வெள்ளையர்கள் கடைப்பிடிப்பதை நாம் அறிந்திருப்போம். இவையெல்லாம் அவர்கள் தன்னார்வமாக முன் வந்து பயின்றவை. சலுகைகள் கொடுப்பதன் மூலம் மதவியாபாரம் செய்து பரப்பப்பட்டவை அல்ல. 

இவையெல்லாம் உணர்த்துவது என்னவென்றால், அந்நியரையும் ஈர்க்கக்கூடிய அம்சங்கள் இந்து சமயத்தில் நிறையவே உண்டு என்பதே. எனவே உங்கள் புலம்பல் அர்த்தமற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.