Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஜித்திற்கே ஆதரவு – சம்பந்தன் தலைமையிலான முக்கிய கலந்துரையாடல் அதிரடி முடிவு!

Featured Replies

TNA-2-720x450.jpg

ஜனாதிபதி வேட்பளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு தனது பூரணமான ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன் உள்பட கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதன்போது ஜனாதிபித் தேர்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சி இந்தத் தீர்மானத்தை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டமும், நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் நடத்தப்பட்டு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சஜித்திற்கே-ஆதரவு-சம்பந/

நிறைவடைந்தது  7 மணி நேரக் கலந்துரையாடல் ; தமது நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக்கட்சி

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக ஏழு மணித்தியாலய கலந்துரையாடலின் பின்னர் முடிவெட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

DSC_0421.JPG

தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை 10மணியிலிருந்து மாலை வரை இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இருக்கிறோம். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு மற்றும், பாரளுமன்ற குழு, கூட்டங்களிலும் இது பற்றி ஆராயபட்டிருந்தது. 

இன்று எமது மத்திய செயற்குழுவின் முடிவாக அன்னம் சின்னத்தில் போட்டி இடுகின்ற சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோக பூர்வ செயற்குழு இன்றையதினம் எடுத்திருந்தாலும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டிய விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயாவில் கைகளில் நாம் ஒப்படைத்துள்ளோம். 

மற்றைய இரண்டு கட்சித்தலைவர்களோடும் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார். பல விடயங்களை ஆராய்ந்திருக்கிறோம். பிரதான வேட்பாளர்கள் இருவர் தொடர்பில் தான் எமது கருத்துக்கள் இருந்தது. அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக பல விடயங்களை நாம் ஆராய்ந்து இன்றைய சூழலில் எமது மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கையாக சஜித்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை ஏகமனதாக எடுத்துள்ளோம்.

எமது கருத்தையும் மக்கள் கேட்கிறார்கள். மக்கள் திறமை சாலிகள் அவர்களிற்கு அரசியல் நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களிற்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. ஆகவே மக்களுடைய கருத்தையும் நாம்  அறிந்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லுவது அல்ல நிதானத்தை தற்போது இருக்கும்

அரசியல் சூழ்நிலையிலே தமிழ்மக்கள் சார்பாக ஏனைய தரப்புகளுடன் மக்களின் பிரதிநிகளாக நாம் பேச்சுவார்த்தை நடாத்துகிறோம். அந்தக்கடப்பாட்டை நாம் சரிவர செய்வதாக இருந்தால் மக்களிற்கு ஒரு வழி காட்டுதல் கொடுக்கவேண்டிய அத்தியவசியகடப்பாடு இருக்கிறது அதை நாங்கள் செய்வோம் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68105

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக ஏழு மணித்தியாலய கலந்துரையாடலின் பின்னர் முடிவெட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது எப்போதோ எடுத்த முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இது எப்போதோ எடுத்த முடிவு.

ஆம். மிகுதி நாடகம். தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்தல் என்றும்  சொல்லலாம். 

2 hours ago, ampanai said:

எமது கருத்தையும் மக்கள் கேட்கிறார்கள். மக்கள் திறமை சாலிகள் அவர்களிற்கு அரசியல் நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களிற்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. ஆகவே மக்களுடைய கருத்தையும் நாம்  அறிந்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லுவது அல்ல நிதானத்தை தற்போது இருக்கும்

எமது மக்களுக்காக ஏழுமணி நேரம் கடுமையாக சிந்தித்து எடுத்த,  ஒரு அளவில்லா விடிவை எமது மக்களுக்கு தந்த தலைவர்கள்.

நீங்கள் வாழியவே !

  • தொடங்கியவர்

தன்னுடைய எசமானும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்களில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதை தலைவனுமான ரணிலுக்கு விசுவாசமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்கு நாய்படாதபாடாக அலைந்து திரிந்த சுமந்திரன், இறுதியில் 7 மணிநேரம் கஷ்டப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சி எனப்படும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலுக்கு ஆதரவளிப்பதென்று பகிரங்க அறிவிப்பை வெளியிட்ட கையேடு தப்பிப் பிழைத்தேன் என்று வவுனியாவை விட்டு தலைதெறிக்க ஓடுவதாக தெரிகிறது.

கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களை தனித்தனியே சந்திக்கும் சம்பந்தன் 

(ஆர்.யசி )

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள  கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தீர்மானம் எடுத்துள்ளார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,

இன்று அல்லது நாளை கட்சியின் அடுத்த கட்ட கூட்டங்கள் சந்திப்புகள் குறித்த தீர்மானம் எடுக்கப்படும். அதேபோல் கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கூட்டப்படவுள்ளது. அதற்கு முன்னதாக பங்காளிக்கட்சிகளை தனித் தனியே சந்தித்து பேச சம்பந்தன் அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளார். 

பங்காளிக்கட்சிகள் இடையில் சில சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஒரு சிலர் ஆதரவை தெரிவித்துள்ள போதிலும் ஒரு சிலர் இன்னமும் இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் அனைவரும் பொது நிலைப்பாடு ஒன்றினை எட்டி கூட்டான இணைந்து பயணிக்க முடியும். அது குறித்து விரைவாக பேசுவோம். 

அதேபோல் எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில் என்றைய தினமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடி தீர்மானம் எடுக்கும். விரைவில் எமது நிலைப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/68178

  • கருத்துக்கள உறவுகள்

மலை ஒன்று முக்கி.....எலி ஒன்றைப் பெத்த  கடையாகிப் போனது.....தமிழரின் தலைவிதி...!😥

On 11/3/2019 at 5:35 PM, போல் said:

தமிழ் அரசுக் கட்சி இந்தத் தீர்மானத்தை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டமும், நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் நடத்தப்பட்டு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்துமாத்து சுமந்திரன் ரணிலை ஏவி அற்ப சலுகைகளை வழங்கி பங்காளிக் கட்சிகளை (அடைக்கலநாதன், சித்தார்த்தனை) தங்கட தீர்மானத்துக்கு உடன்பட வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது!

அடைக்கலநாதன், சித்தார்த்தன் இம்முறையும் விலைபோவார்களா என்டு கொஞ்ச நாளில தெரியும்.

யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வாகும் – சி.வி.விக்னேஸ்வரன்

https://yarl.com/forum3/topic/233848-யாருக்கு-வாக்களிப்பது-என்பது-ஒவ்வொருவரின்-தனிப்பட்ட-தேர்வாகும்-–-சிவிவிக்னேஸ்வரன்/

எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும்படி கோர முடியாது: நிலைப்பாட்டை அறிவித்தது ஈ.பி.ஆர்.எல்.எவ்!

https://yarl.com/forum3/topic/233865-எந்த-வேட்பாளரையும்-ஆதரிக்கும்படி-கோர-முடியாது-நிலைப்பாட்டை-அறிவித்தது-ஈபிஆர்எல்எவ்/

5 கட்சிகளில் இனி ரெலோவும் புளொட்டும் என்ன செல்லப்போகிறது என்பது பாக்கி.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவித்தது புளொட்

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே தமிழைரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது புளொட்டும் சஜித்தை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்து அதில் உறுதியாக உள்ளோம். இது ஒரு மாதத்துக்கும் முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம்.

அதாவது, நாம் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பது, அதில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதே சரியான தெரிவு என்பதை நாம் கூறிவிட்டோம். இப்போதும் நாம் அந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளோம்.

எமது நோக்கம் என்னவெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளருடன் நிற்க வேண்டும் என்பதே. அதில் எமது தலைமைகள் தனித்தனி தீர்மானம் எடுக்க வேண்டியதில்லை. கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை வெளிப்படுத்தியிருந்தால் இன்னமும் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்.

எவ்வாறு இருப்பினும் இப்போதும் நாம் ஒற்றுமையாக தமிழ் மக்களின் நலன்களை கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு” என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/ஜனாதிபதி-தேர்தலில்-யாரு-2/

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமிழ் மக்களின் நாடி பிடித்து கை காட்டுகிறார்கள்.கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இப்படித்தான்

ரெலோ சஜித்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

https://yarl.com/forum3/topic/233904-இரகசிய-கலந்துரையாடலின்-பின்-முடிவை-வெளியிட்டது-டெலோ/

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இலங்கையிலிருந்து சீனாவை வெளியேற்ற இந்தியா,  மேற்குலகு,  UNP,  மற்றும் எங்கள் தமிழ் தவளைகள் எல்லோரும்  சேர்ந்து முடிவெடுத்த்தாயிற்று.  

ஆக தமிழருக்கு :  உனக்கும்  பெப்பே,  உன் அப்பனுக்கும் பெப்பே.  

6 minutes ago, Maharajah said:

ஆக இலங்கையிலிருந்து சீனாவை வெளியேற்ற இந்தியா,  மேற்குலகு,  UNP,  மற்றும் எங்கள் தமிழ் தவளைகள் எல்லோரும்  சேர்ந்து முடிவெடுத்த்தாயிற்று.  

ஆக தமிழருக்கு :  உனக்கும்  பெப்பே,  உன் அப்பனுக்கும் பெப்பே.  

தற்சமயம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளும் சஜித்துக்கு ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளன.

EPRLF உம் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் யாருக்கும் வாக்களிக்குமாறு மக்களை கோர முடியாது என கூறியுள்ளன.

சீனாவை யாராலும் வெளியேற்ற முடியாது. எந்த அரசு வந்தாலும் சீனாவுடன் தொடர்புகளை பேணும்.

கோத்தாவை வேட்பாளராக நிறுத்தியதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது. (நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை)

எனவே மக்கள் சஜித்துக்கு வாக்களித்து ஒப்பீட்டளவில் தம்மை பாதுகாப்பதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

நாங்கள் சஜித் நல்லவரா  கோட்டாபய நல்லவரா என்று தனி நபர்கள் ஊடாக  பார்க்க வேண்டுமா அல்லது சுதந்திரக் கட்சி,  ஐக்கிய தேசியக் கட்சி என்று பார்க்க வேண்டுமா  ? 

கடந்த கால வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சி என்ன செய்தது என்று பார்ப்பதா (உதாரணம்: இனக்கலவரம் முழுவதும் இவர்களுக்கு சொந்தமானது ) அல்லது சுதந்திரக் கட்சி என்ன செய்தது என்ன பார்ப்பதா??? 

யார் ஆட்சிக்கு வந்தால்  போர்க்குற்ற விசாரணை நடக்க வாய்ப்பு அதிகரிக்கும் ?   யார்  ஆட்சியில் போர்க்குற்ற விசாரணை நீர்த்துப்போக வாய்ப்பு அதிகம்   ????? 

யார் ஆட்சியில் இலங்கைக்கு சர்வதேச நெருக்கடி அதிகரிக்கும் ?  யார் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச அழுத்தம் குறையும் ??? 

(அது சரி,   இவ்வளவு காலமும் ஐக்கிய தேசியக் கட்சி எங்களுக்கு என்ன செய்தது சுதந்திரக் கட்சி என்ன செய்தது  ???? இவர்களுக்கிடையே வேறுபாடு ஏதேனும் இருக்கிறதா ?? )

ஆக மொத்தத்தில்  யார் ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கு லாபம்,  ஒப்பீட்டு அளவில் ??????????? 

யாராவது சொல்லுங்கப்பூ  ???????

(பி. கு.  இது வேறொரு திரியில் நான் எழுதியது )

21 minutes ago, Maharajah said:

நீங்கள் மற்ற திரியில் எழுதிய போதே இதை நான் வாசித்தேன்.

எதற்கும் நீங்கள் இத்திரியிலுள்ள கருத்துகளை வாசியுங்கள். 😀

https://yarl.com/forum3/topic/232489-கோத்தாபய-ஜனாதிபதியானால்-தமிழருக்கு-தீமையில்லை-–-விக்னேஸ்வரன்/

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

தற்சமயம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளும் சஜித்துக்கு ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளன.

EPRLF உம் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் யாருக்கும் வாக்களிக்குமாறு மக்களை கோர முடியாது என கூறியுள்ளன.

சீனாவை யாராலும் வெளியேற்ற முடியாது. எந்த அரசு வந்தாலும் சீனாவுடன் தொடர்புகளை பேணும்.

கோத்தாவை வேட்பாளராக நிறுத்தியதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது. (நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை)

எனவே மக்கள் சஜித்துக்கு வாக்களித்து ஒப்பீட்டளவில் தம்மை பாதுகாப்பதே சிறந்தது.

தக்கன பிழைக்கும்,  தகாதன் அழியும்.

Edited by zuma

2 hours ago, Maharajah said:

நாங்கள் சஜித் நல்லவரா  கோட்டாபய நல்லவரா என்று தனி நபர்கள் ஊடாக  பார்க்க வேண்டுமா அல்லது சுதந்திரக் கட்சி,  ஐக்கிய தேசியக் கட்சி என்று பார்க்க வேண்டுமா  ? 

கடந்த கால வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சி என்ன செய்தது என்று பார்ப்பதா (உதாரணம்: இனக்கலவரம் முழுவதும் இவர்களுக்கு சொந்தமானது ) அல்லது சுதந்திரக் கட்சி என்ன செய்தது என்ன பார்ப்பதா??? 

யார் ஆட்சிக்கு வந்தால்  போர்க்குற்ற விசாரணை நடக்க வாய்ப்பு அதிகரிக்கும் ?   யார்  ஆட்சியில் போர்க்குற்ற விசாரணை நீர்த்துப்போக வாய்ப்பு அதிகம்   ????? 

யார் ஆட்சியில் இலங்கைக்கு சர்வதேச நெருக்கடி அதிகரிக்கும் ?  யார் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச அழுத்தம் குறையும் ??? 

(அது சரி,   இவ்வளவு காலமும் ஐக்கிய தேசியக் கட்சி எங்களுக்கு என்ன செய்தது சுதந்திரக் கட்சி என்ன செய்தது  ???? இவர்களுக்கிடையே வேறுபாடு ஏதேனும் இருக்கிறதா ?? )

ஆக மொத்தத்தில்  யார் ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கு லாபம்,  ஒப்பீட்டு அளவில் ??????????? 

யாராவது சொல்லுங்கப்பூ  ???????

(பி. கு.  இது வேறொரு திரியில் நான் எழுதியது )

நல்ல கேள்விகள்!

பதில்களும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை! அனைவரும் அறிந்ததே!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

நீங்கள் மற்ற திரியில் எழுதிய போதே இதை நான் வாசித்தேன்.

எதற்கும் நீங்கள் இத்திரியிலுள்ள கருத்துகளை வாசியுங்கள். 😀

https://yarl.com/forum3/topic/232489-கோத்தாபய-ஜனாதிபதியானால்-தமிழருக்கு-தீமையில்லை-–-விக்னேஸ்வரன்/

கேள்விக்கு நீங்கள் பதில் குறவில்லையே  LARA ?? 

3 hours ago, Maharajah said:

கேள்விக்கு நீங்கள் பதில் குறவில்லையே  LARA ?? 

நீங்கள் அத்திரியிலுள்ள கருத்துகளை வாசித்திருந்தால் அதில் பதில் உள்ளது. வாசிக்கவில்லை போல. 

சஜித் நல்லவர் என யாரும் கூறினார்களா? சஜித்தே ஒரு மகிந்த ஆதரவாளர். ஆனால் கோத்தா ஜனாதிபதியாக வருவதை விட சஜித் ஜனாதிபதியாக வருவது ஊரிலுள்ள மக்களுக்கு ஒப்பீட்டளவில் பாதிப்பு குறைவு. 2005-2015 மகிந்த ஆட்சியை போல் மோசமான ஆட்சி எதுவுமில்லை.

இலங்கை அரசை மீறி இலங்கை மீது சர்வதேச விசாரணை நடக்காது.

ஐ.நா, அமெரிக்கா, இந்தியா மற்றும் பல நாடுகளை சேர்ந்தவர்களே போர் குற்றவாளிகள் தான். சர்வதேச விசாரணை பற்றி கதைத்தால் அவர்களையே இலங்கை காட்டிக்கொடுத்து விடும்.

இது ஒரு உதாரணம்.

The government was responding to a call for an international war crimes probe by Bishop of Mannar Rev. Rayappu Joseph and Bishop of Jaffna Rev. Thomas Saundar-anayagam to find out whether government forces had used cluster munitions and chemical weapons in populated areas during eelam war IV. The call was made during a meeting with Stephen J. Rapp, ambassador-at-large with the Office of Global Criminal Justice of the United States on Wednesday.

The recommendation that the Sri Lanka Air Force (SLAF) acquire Cluster Bomb Units (CBUs) for ‘unarmoured area targets’ was made by USPACOM (United States Pacific Command) assessment team following a study conducted during Sept 12-2002 to Oct 24, 2002. USPACOM was acting on the instructions of the Department of Defence in the wake of Prime Minister Wickremesinghe seeking the intervention of US President George W. Bush.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95664

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவித்தது கூட்டமைப்பு

image_bc41203f60.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஏகமனதாக ஆதரிப்பதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இன்று (07) வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமது தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (07) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இரா.சம்பந்தனால் விடப்பட்ட அறிக்கையொன்றில் கோரப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியான அந்த அறிக்கையில்-

இலங்கைக்கு சனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2919 நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) – இலங்கைத் தமிழரசுக் கட்சி (இதக) சொல்லப்பட்ட தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறது.

இத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் – சஜித்பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் – கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் – அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க ஆகியோரும் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர்.

தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அபேட்சகர்களுள் முதல் இருவருக்கிடையிலேயே போட்டி பிரதானமாக நிலவுவதாகத் தோன்றுகிறது.

புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி (1) உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச் செல்லக்கூடிய அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானவராகவும், (2) அத்துடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீதும் உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும், (3) அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும், (4) நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்துப் பிரசைகளும் தமது விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் அதேவேளை, தாம் சமத்துவமானவர்கள் என்றும் நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போலவே தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்று, சகல பிரசைகளும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேற்போந்தவை உயரிய வேணவாக்களாகும் என்பதோடு, இப் பெரும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது சிறந்தது என்பது பற்றி நன்கு சிந்தித்து சரியான ஒரு கணிப்பினை மேற்கொள்வது வாக்காளரின் கடமையாகும்.இக்கணிப்பில் விடும் ஒரு தவறு ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும்.

முதலிரு வேட்பாளர்களும் ஆட்சியில் ஈடுபட்டிருந்துள்ளதோடு, அண்மைக் காலங்களில் ஆட்சியிலிருந்த அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களாவர். அவர்களுடைய கடந்தகால செயலாற்றுகை எமக்குத் தெரியும். அதன் அடிப்படையில் பொருத்தமான கணிப்பொன்றை நாம் மேற்கொள்ள முடியும். அவர்களது கொள்கைகளை விளக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களும் எம்மிடம் உள்ளன.

அவற்றின் அடிப்படையில், எதேச்சாதிகாரத்தையும் தான்தோன்றித்தனத்தையும் கைவிடுவதாக உறுதியளித்தல் சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாட்டில் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து நாட்டை ஒற்றுமைப்படுத்தல் அடங்கலாக அனைத்துப் பிரசைகள் மத்தியிலும் நீதியையும் சமத்துவத்தையும் ஊக்குவித்தல் உள்ளிட்ட அவர்களது ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதி தொடர்பாக ஒரு கணிப்பை மேற்கொள்ள முடியும்.

பொதுஜன பெரமுன மற்றும் அதன் அபேட்சகர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர்களோடு ஆட்சியதிகாரத்திலிருந்த ஏனையவர்கள் ஆகியோரின் கடந்த காலச் செயற்பாடுகள் கவலையளிப்பவையாகும்.

அரசியலமைப்பிற்கான 17வது திருத்தத்தை நீக்கியமை, அரசியலமைப்பிற்கான 18வது திருத்தத்தை நிறைவேற்றியமை, அந்நோக்கத்திற்காக சட்டவாக்கச் சபையை (நாடாளுமன்றத்தை) ஆட்டிப்படைத்தமை, அரசியலமைப்புப் பேரவையை இல்லாதொழித்தமை, சேவைத்துறைகள் மற்றும் நீதித் துறை ஆகியவற்றிற்கான அனைத்து உயர் நியமனங்களும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியின் விருப்பத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டமை ஆகியன ஆட்சிமுறையின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியான ஒரு தனி மனிதரின் எதேச்சாதிகாரமானதும் தான்தோன்றித்தனமானதுமான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தன.

பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை மற்றும் அற்ப குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் இராணுவத் தளபதிக்கெதிராக வழக்குத் தொடுத்தமை ஆகியன அந்த ஆட்சியின் எதேச்சதிகார மற்றும் தான்தோன்றித்தனமான தன்மையை உறுதிப்படுத்தின. அப்போதைய ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு உதவும் வண்ணம் அரசியலமைப்பு திருத்தியமைக்கப்பட்டது. இது, சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்கான திடசங்கற்பத்தை எடுத்துக் காட்டியது.

இயங்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தைப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையொன்று இல்லாது, அரசியலமைப்பிற்கு முரணான ஓர் அரசாங்கத்தின் வாயிலாக 2018 ஒக்டோபரில் கடத்தியமை; பதவி வழங்குவதான வாக்குறுதி, இலஞ்சம் மற்றும் வேறு சலுகைகள் மூலம் தூண்டப்பட்ட கட்சி மாறல் வாயிலாக நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைப் பெற ;றுக் கொள்வதற்கான முயற்சிகள் ஆகியன அதிகாரத்திற்கான அளவற்ற ஆசையை எடுத்துக் காட்டுவனவாக இருந்தன.

எமது உயரிய நீதித்துறைச் சுதந்திரத்தின் காரணமாக நாடு பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது ஜனநாயகத்திற்காகப் நாடாளுமன்றத்தில் உறுதியாக நின்றது.

பத்திரிகையாளர்கள், சிவிலியன் குடிமக்கள், மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள்,  ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் என். ரவிராஜ் ஆகிய எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றன. வெள்ளை வேன் பீதி நன்கு நினைவிலுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட முழுமையான ஒத்துழைப்பு இருந்தும், ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, மக்கள் முரண்பாட்டையும் ஒற்றுமையின்மையையும் தவிர்த்து ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு உதவக்கூடியதாக அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கத் தவறியது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதற்கான தற்போதுள ;ள ஏற்பாடுகளை வலுவற்றதாக்குவதற்கும் குறைப்பதற்கும் அரசாங்கம் மேலும் முயற்சித்தது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதை அரசியலமைப்பு ரீதியாக மேம்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலுள்ள பல அமைப்புகளுக்கும் அது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தவறியது.

மற்ற முக்கிய அபேட்சகரான சஜித் பிரேமதாசவினதும் அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தினதும் செயலாற்றுகை அத்தகைய முறைப்பாட்டிற்கு இடம் வைக்கவில்லை. மாறாக, அவர்கள் அந்நடைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டினுள் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வைக் காணும் விடயம், காணாமற் போன ஆட்களின் விடயம், தடுப்புக் காவலில் உள்ள ஆட்களின் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தல் ஆகியன நிறைவேற்றப்படவேண்டும் புதிதாக தெரிவு செய்யப்படும் சனாதிபதி இவ்விடயங்களுக்கு அவசரமாக தீர்வு காணவேண்டும். தமிழ் மக்களின் நலன்களுக்காக மாத்திரமின்றி, முழு நாட்டினதும் அனைத்து மக்களினதும் நலனுக்காகவும் இவ்விடயங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும்.

இவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிச நலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின்  சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டும்.

பொருளாதார விடயங்கள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர் எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும். ஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். இலங்கை இருப்பு கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

இவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்தில் கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழத் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) – இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் மக்களை அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இரா.சம்பந்தன்,

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/உததயகபபரவ-தரமனதத-அறவததத-கடடமபப/150-240779

அப்படி எல்லாம் ஒரு அதிரடி முடிவும் இல்லை. இவர்களது முடிவு இதுவே என்பது எல்லோருக்குமே தெரியும். கோத்தா தமிழர்களை கொலை செய்த்தபடியால் தமிழர்கள் வாக்களிக்க மாடடார்கள் என்று அவர்களுக்கு தெரியும் , அத்துடன் வேறு தெரிவும் இல்லை.

இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் தமிழ் பிரதேசம் நிச்சயமாக பாதிக்கப்படும். இது யாழ்ப்பாணத்தை தவிர மத்த எல்லா தமிழர் பிரதேசங்களும் முஸ்லிம்களின் அதிகாரத்தின் கிழே செல்லும். அவர்கள் அமைச்சு பதவியை எடுத்துக்கொண்டு முஸ்லிம்களை குடியேத்தி தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வார்கள். எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதாவது எலும்பை போடடால் அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட மாடடார்கள்.

இன்னும் ஒரு இருபது வருடங்களில் வன்னி , கிழக்கு எல்லாம் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் வந்து விடும். மன்னர் , முல்லைத்தீவு பிரதேசங்களில் ஏறக்குறைய நாப்பது தொடக்கம் ஐம்பது வரையான பிரதேசங்கள் முஸ்லிம்கள் வசம். கிழக்கில் கல்முனை பிரதேசத்தில் தொண்ணுறு வீதம் அவர்கள் பக்கம். இன்னும் மடடக்கலப்பு , திருகோணமலை , அம்பாறை தமிழ் பிரதேசம் எல்லாம் அவர்கள் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கிறார்கள்.

அரசியல் செல்வாக்கினால் இதை எல்லாம் செய்கிறார்கள். அப்படியான அரசுக்கு எமது அரசியல் மடையர்கள் ஆதரவு வழங்குகிறார்கள். யாழ்ப்பாணத்தை தவிர மத்த இடங்களில் உள்ள தமிழர்களிடம் கருத்து கேட்பது கிடையாது. எனவே இனி வரும் காலங்களில் தமிழ் மக்கள் சரியான தலைமையை தெரிவு செய்ய வேண்டும். இருந்தாலும் எமக்கு தெரிவு இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான். 

2 hours ago, Vankalayan said:

இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் தமிழ் பிரதேசம் நிச்சயமாக பாதிக்கப்படும். இது யாழ்ப்பாணத்தை தவிர மத்த எல்லா தமிழர் பிரதேசங்களும் முஸ்லிம்களின் அதிகாரத்தின் கிழே செல்லும். அவர்கள் அமைச்சு பதவியை எடுத்துக்கொண்டு முஸ்லிம்களை குடியேத்தி தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வார்கள். எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதாவது எலும்பை போடடால் அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட மாடடார்கள்.

யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம்களை குடியேற்றி வருகிறார்கள். (முன்பு யாழை விட்டு வெளியேற்றப்பட்டவர்களை மீளக்குடியேற்றுகிறோம் என்ற பெயரில்)

2 hours ago, Vankalayan said:

அரசியல் செல்வாக்கினால் இதை எல்லாம் செய்கிறார்கள். அப்படியான அரசுக்கு எமது அரசியல் மடையர்கள் ஆதரவு வழங்குகிறார்கள்.

மகிந்த & கோவும் அதை தான் செய்தது.

2 hours ago, Vankalayan said:

யாழ்ப்பாணத்தை தவிர மத்த இடங்களில் உள்ள தமிழர்களிடம் கருத்து கேட்பது கிடையாது.

கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறதே தவிர யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்களிடமும் கருத்து கேட்பது கிடையாது. 

3 hours ago, Vankalayan said:

எனவே இனி வரும் காலங்களில் தமிழ் மக்கள் சரியான தலைமையை தெரிவு செய்ய வேண்டும். இருந்தாலும் எமக்கு தெரிவு இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான். 

கூட்டமைப்புக்கு எதிராக இன்னொரு தலைமை உருவாக முயற்சித்தால் கூட்டமைப்பே அவர்களுக்கு துரோகி பட்டம் வழங்குவது வழமை. விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்த போது அவரையும் துரோகி என கூறினார்கள்.

அதை தாண்டி ஒரு மாற்று தலைமை உருவாகும் என பார்த்தால் கூட்டமைப்புக்கு எதிராக வெளிக்கிட்டவர்கள் அனைவரும் அதைவிட கேவலமான அரசியல் செய்கிறார்கள்.

வடக்கை விட கிழக்கில் கூட்டமைப்பில் மக்கள் அதிருப்தி அடைந்து வருகிறார்கள். போன வருட உள்ளூராட்சி தேர்தலில் பிள்ளையானின் கட்சிக்கு 44,062 வாக்குகள் கிடைத்தது ஒரு உதாரணம்.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.