Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன்

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%
 
‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள்.

போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதினாறு பதினேழு வயதுதொட்டு ஐம்பது கடந்தவர்கள் கூட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகவேண்டிய ஒரு கட்டாய நிலை தோன்றியது. இதன் காரணமாக பலர் மனவுளைச்சல்களுக்கும் ஆளானார்கள். ஆனாலும் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்ற நிலையில் பலவிதமான இன்னல்களையும் ஆரம்பநாட்களில் சகித்துக்கொண்டு தமக்காகவும் தம் குடும்பத்துக்காகவும் உழைத்தார்கள்.

பல தமிழர்கள் காணிகளை, வீடுகளை, நகைகளை ஈடுவைத்து அல்லது விற்று தம் பிள்ளைகளை, கணவன்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியும் வைத்தனர். தம் உறவினர் வெளிநாடு சென்றுவிட்டால் பணமழை அங்கு கொட்டும். தம் துன்பங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்றே ஆரம்பத்தில் பலரும் நம்பினர்.

நாம் பிறந்து வளர்ந்த வீட்டையும் கூடித் திரிந்த நண்பர்களையும், உறவினர்களோடு  கூடி வாழ்ந்த  பூர்வீக நிலங்களையும் கிராமங்களை, கல்விகற்ற பள்ளிகளை, வேலைத்தலங்களை மட்டுமல்ல தம் தகுதிகளையும் விட்டுவிட்டு கற்பனைகளோடு கவலைகளையும் சுமந்து வெளிநாடு வந்த சிலர் மகிழ்வோடு இருந்தாலும் பலரும் பிரிவுத் துயரில் பலநாட்கள் தூக்கம் தொலைத்து விழித்திருந்ததைப் புலத்தில் உள்ளவர்கள் அறியமாட்டார்கள்.

உண்மையான அக்கறையோடு உயிர்காக்கப் பெற்றோரால் அனுப்பப்பட்டவர்களும் தாமாக வந்தவர்களுமாக 2009 வரை இலட்சக்கணக்கில் தமிழர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் 2009 இன் பின்னர் வருபவர்களும் ஒருசிலர் போரின் வடுக்கள் தாங்கி வாழமுடியாதவர்களாக இருந்தாலும்கூட மற்றவர்கள் வெளிநாடு வருவதன் நோக்கம் என்ன???பணமும் வசதியான வாழ்வும் மட்டுமே காரணிகள்.

புலத்தில் வாழும் இளம் பெண்களைப் பொறுத்தவரை வெளிநாடு என்பது சொர்க்கம் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை அவர்கள் எல்லோர் மனதிலும் வேரூன்றியிருக்கிறது. வெளிநாட்டு மாப்பிளைகளையே பெற்றோரும் விரும்புவதற்குக் காரணம் பிள்ளைகள் அங்கு சென்றால் தம் பொருளாதார வளம் சீரடையும் என்ற எண்ணமும் வெளிநாட்டில் பிள்ளை வசதியாக வாழ்வாள் என்ற எண்ணப்போக்கும்தான். பல பெற்றோர் கூட மணமகனுக்கு எந்தவிதக் கல்வித் தகுதியோ  அல்லது எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் கூட அதைப்பற்றி எவ்வித கவலையும் இன்றி மணமகனின் குணநலன்களைக் கூட விசாரிக்காது அல்லது கண்டுகொள்ளாது  மணமுடித்துக் கொடுக்கின்றனர். இதற்கான காரணம் பணமும் வசதியான வாழ்வும் என்ற எண்ணமேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?

சில பெண்கள் அங்கு ஒரு காதலன் இருக்க அவரின் சம்மதத்துடனும் திட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டு வந்து இங்கு விசா பெற்றுக்கொண்டபின் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள். இதைவிடக் கேவலமான செயல் வேறொன்றுமில்லை.

பெற்ரோரைக் கடவுளாக மிகைப்படுத்திக் கூறும் எம் சமுதாயத்தில் பெற்றவர்கள் பலர் பிள்ளைகளின் வாழ்வைப் பற்றிய எந்தக் கரிசனையுமற்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளிடம் பணம் கறப்பதையே நோக்கமாகக் கொண்டு, தாம் மகிழ்வாக வாழவும், போலி கெளரவத்துக்காக தம் பிள்ளைகளை ஓட்டாண்டியாக்கி வெளிநாடுகளில் நடைப்பிணங்களாக வாழவைத்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது.

பெற்றோர் ஒருபுறமிருக்கட்டும். பல சகோதரர்கள் வெளிநாட்டுச் சகோதர சகோதரிகளின் உழைப்பைச் சுரண்டி தாம் அங்கு ஆடம்பரவாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பது கண்கூடு. உறவினர் பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி அவர்கள் பணத்தில் பெற்றோல் போட்டுத் திரியும் இளம் பெண்கள் ஆண்கள் எத்தனைபேர்? தம் பிள்ளைகளின் கல்வி, திருமணச் செலவு, குடும்பத் செலவு,  தம் வைத்தியச் செலவு மட்டுமன்றித் தாம் விடுமுறை சென்று மகிழ்வதற்கு வெளிநாட்டவர் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவுசெய்வதைப் பலரும் அறிந்திருந்தாலும் தொடர்ந்தும் தம் உறவுகள் நல்லாய் இருக்கட்டும் என்ற பரந்த நோக்கில் தம் செலவுகளைச் சுருக்கி, தம் பிள்ளைகள் கேட்கும் பல பொருட்களை வாங்கிக் கொடுக்காது, ஒரு நாளில் மேலதிக வேலை செய்து, கடுங் குளிரில் விறைத்தபடி வேலைக்குச் செல்வதை புலம்பெயரிகள் பணத்தை ஏப்பமிடும் எவரும் அறியமாட்டார்கள்.

புலம் பெயர்ந்தவர்கள்  பெயரில்  ஏதாவது சொத்துக்கள் இருந்தால் அவ்வளவுதான். அவர்களுக்கு எதற்கு இங்கிருக்கும் சொத்து? எனத் தாமாகவே முடிவு செய்துகொண்டு அவர்களுக்கே தெரியாமல் அச் சொத்துக்களில் தம் ஆதிக்கத்தைச் செலுத்துவதும், கள்ள உறுதி முடித்துத் தமதாக்கிக்கொள்வதும், அவர்களை நிர்ப்பந்தித்து அச் சொத்துக்களை தம் பெயருக்கு மாற்றி எழுதிக்கொள்வதும் பல இடங்களில் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்து புலத்தில் வாழும் எம் உறவுகள் பலருக்கு மானஉணர்ச்சியே  அற்றுப் போய்விட்டமை தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

போர் கொடுமையானதுதான். எம்மினத்தின் ஆன்ம பலத்தை அடியோடு அழித்து, பலரை நிற்கதியாக்கிப் பல சந்ததிகளையே அடையாளம் தெரியாமலும் ஆக்கிவிட்டது. அதை எம் எதிரிகள் தான் செய்தார்கள். ஆனால் உங்கள் உறவுகளை, உங்கள் இனத்தவரை இப்படிச் சுரண்டி, ஏமாற்றி, எதிரிகளாக எண்ணி அவர்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களைத் தூற்றுபவர்களை ஐந்தறிவு கொண்டவைகளில்க் கூட அடக்கமுடியாது.

இனி நாம் எம்மூரில் வாழமுடியாது.சரி விடு முறைக்காவது அங்கு சென்று உறவுகளைக் கண்டு மகிழலாம், எம் பிள்ளைகளுக்கும் எம் நாட்டை, ஊரைக் காட்டிப் பற்றுக்கொள்ள வைக்கலாம் என்னும் அற்ப ஆசையுடன் புலத்துக்குச் செல்லும் பலர் இனிமேல் அங்கு போவதில்லை என்னும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தனை காலமும்எம்பணத்தை அவர்களுக்கு அனுப்பியது போதாதென்று வெளிநாட்டிலிருந்து போகும்போதும் இலட்சக் கணக்கில் கொண்டுபோக வேண்டி உள்ளது.

ஆயிரங்கள் எல்லாம் ஒரு பெறுமதி அற்ற பணம் அவர்களுக்கு. ஒரு சிலஅறிவற்ற புலம்பெயர் தமிழர்கள் அவர்களையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்துவிட்டு வருவோம் என்று தம் பணத்திலோ அன்றி வட்டிக்கு வாங்கிக்கொண்டோ சென்று ஊதாரித்தனமாகச் செலவு செய்வதைக் காணும் மற்றவர்கள், சாதாரணமாகச் செல்லும் ஒருவரிடம் காணும் எளிமையைக் கூடப் போற்றுவதில்லை. நாம் எப்போதும் இங்கு வாகனத்திலேயே திரிகிறோம். காற்றாட எம் ஊரில் பேருந்துக்களில் திரிவோம் என்றாலோ, பணத்தை விரயமாக்காது கவனமாகச் செலவழித்தாலோ எமக்கு கிடைக்கும் பெயர் நம்பி, கசவாரம் என்பதுதான். சில வெளிநாட்டில் இருந்து செல்லும் குடும்பங்கள் பணத்தை ஆடம்பரமாகச் செலவுசெய்து, அங்குள்ளவர்களிடம் தாம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று பணத்தை வீண் செலவு செய்கிறார்கள். அது அவர்களின் அறியாமை என்பது ஒன்று. மற்றும் புலம் பெயர் தேசத்திலும் சொந்த உழைப்பில் வாழாது அரச உதவிப் பணங்களில் வாழும் கேடுகெட்ட சிலர் செய்யும் அர்த்தராத்திரியில் குடைபிடிக்கும் வேலையால் ஒட்டுமொத்த புலம் பெயர் சமூகத்தின் பெயரும் கெட்டுப்போகின்றது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் புலத்தில் உள்ளவர்களுக்கு நாங்கள் வெறும் பணம் காய்க்கும் மரங்கள் மட்டும்தான்.

புலத்தில் உள்ளவரின் அந்த மனநிலை பற்றித் தெரிந்தும் கூடப் பல உறவுகள் இன்னும் இன்னும் தம் உறவுகளுக்குப் பணம் அனுப்பி உதவியபடிதான் உள்ளனர். அப்படி இருந்தும் எமக்கெல்லாம் அவர்களிடம் இருந்து கிடைக்கும் மகத்தான பட்டம் நாட்டை விட்டிட்டு ஓடிப் போனவர்கள். இதை நாட்டுக்காகப் போராடிய போராளிகளோ அவர்கள் குடும்பத்தவரோ சொன்னால் கூட நாம் ஏற்றுக்கொள்வோம்.  சரி நாங்கள் ஓடிப்போனவர்களாகவே இருக்கட்டும். நீங்கள் நாட்டுக்காக என்ன செய்தீர்கள்? போராடப் போனீர்களா? அல்லது நாட்டுக்காக மனமுவந்து ஒரு துரும்பைத்தான் எடுத்துக் போட்டீ ர்களா அல்லது புலம்பெயர்ந்த உங்கள் உறவுகள் சொந்தங்கள் அனுப்பிய பணத்தில் ஒரு பத்து ரூபாயைத் தன்னும் போராட்டத்துக்காக வழங்கினீர்களா? அல்லது போரினால் துன்பப்பட்ட மக்களில் ஒருவருக்காவது மனிதநேயத்தோடு ஓர் உதவியாவது செய்தீர்களா ? என்றால் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. ஒரு சிலர் விதிவிலக்கணவர்களும் இருந்தார்கள். நான் அவர்கள் பற்றிப் பேசவில்லை. உங்களிடம் பணம் இருந்திருந்தால் எமக்கு முன்னோ பின்னோ நீங்களும் தான் ஓடி வந்திருப்பீர்கள்.

உறவுகளுக்காகப் பணம் அனுப்பினோம் சரி. முகமே தெரியாத எத்தனையோ உறவுகளுக்கு இடப்பெயர்வின்போது, சுனாமியின் போது, மழை வெள்ளம் ஏற்பட்டபோது, மண்சரிவு ஏற்பட்ட போது, நாட்டைக் காப்பதற்காய், போர் ஓய்ந்தபின்னும் எமினத்தவர் என்ற காரணங்களுக்காய் அள்ளி அள்ளிக் கொடுத்தோமே…. இன்றுவரை கொடுப்பது இன்னும் நிற்கவே இல்லை. எம்மைப் பார்த்து இன்னும் சொல்ல முடிந்தவை எல்லாம் சொல்வீர்கள். ஏனெனில் நாம் நாடற்று அகதிகளாய் அலையும் புலம்பெயர் தமிழர்கள்.

வசதி வாய்ப்பிருந்தும் வெளிநாட்டு ஆசை அறவே இன்றி தான் பிறந்த மண்ணை விட்டுப் போகமாட்டேன் என்னும் மனது துணிவோடு இருந்தவர்களுக்கு என் தலை தாழ்த்தி வணக்கமும்  நன்றியும் கூறிக்கொள்வதில் நான் பெருமைதான் கொள்கிறேன்.

தாய் நாட்டுக்கு விடுமுறையில் செல்லும் உறவினரை உள்ளன்போடு எதிர்பார்த்துக் காத்திருப்போர் மிகச் சொற்பமே. அக்காலத்துக்கு ஏற்ற நாகரிக உடை அணிந்து வாழ்வை வசதியாக்கிக்கொண்டு நல்ல வீடு, வாகனங்கள் என சுகவாழ்வு வாழ்பவர் பலர்  இங்கு இருக்கிறார்கள் தான். ஆனாலும் பலர் தம் சொந்தங்களுக்காக இன்னும் கடன் கட்டிக்கொண்டு, விடுமுறைக்கு எங்கும் செல்லாது பணம் மட்டுமே குறிக்கோளாய், எத்தனையோ நோய்களை உடலில் சுமந்துகொண்டு, விரும்பிய உணவுகளைச் சுவைக்க முடியாதவர்களாக, தம் அற்ப ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாதவர்களாகவும் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

ஆனால் எம்பணத்தில் உண்டுகொண்டே எம்மைப்பற்றிக் கட்டுரைகள், கவிதைகள், நக்கல் நளினங்கள் என இணையத்தளங்களிலும் முகநூல்களிலும்  பகிரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் எம்மைக் குறை கூற புலத்தில் உள்ள எவருக்கும் அருகதையே இல்லை. ஏனெனில் நீங்கள் உண்பது, உடுப்பது, வாழ்வது, வீணடிப்பது எம் உழைப்பும் தான்.

புலம்பெயரிகள் செலவழிக்கலாம்,  படாடோபமாகக்கூட வாழலாம். அதைக் கேட்க உறவுகள் , எம்மினம் என்பதைத் தவிர உங்களுக்கு எந்த உரிமையோ அன்றி கடமையோகூட இல்லை. ஏனெனில் நாம் எம் பணத்தில் வாழ்கிறோம். எம் பணத்தைச் செலவு செய்கிறோம், எம்பணத்தில் உண்கிறோம்.

ஒருவராவது வெளிநாட்டவர்களுக்கு ஒருநேர உணவை எதிர்பார்ப்பின்றித் தந்தீர்களா? ஒருதரமேனும் எதிர்பார்ப்பின்றி நலமாக இருக்கிறீர்களா? என விசாரித்திருக்கிறீர்களா? உங்கள் உழைப்பில் ஒருநாள் ஊதியத்தை எமக்குத் தந்துள்ளீர்களா? தந்திருப்பவர்கள் கூட ஒரு எல்லை வரை தான் கேட்க முடியும். அவர்கள் கேட்காதவற்றையெல்லாம் எதுவுமே செய்யாது, சொந்த உழைப்பின்றி எம் பணத்தில் உண்டு வாழும் நீங்கள் கேட்பதே தவறு.

ஆனாலும்  அதன்பின்னும் கூட நாங்கள் பலர் உங்களை மன்னிக்கிறோம். ஏனெனில் நீங்கள் எம் உறவுகள் என்பதும் எம்மால் வாழமுடியாத எம் தேசதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்  என்னும் காரணம்தான். அதை புரிந்து இனியாகிலும் எங்களைத் தூற்றுவதைவிட்டு உங்கள் சொந்தக் காலில் நின்று உங்கள் எண்ணங்களையும்  வாழ்வையும் வளம்படுத்தப் பாடுபடுங்கள். உங்கள் உயர்வுகண்டு நாங்கள் உங்களை போற்றுவோமேயன்றி எப்போதும் தூற்றவே மாட்டோம் புலத்தவரே.

நிவேதா உதயராஜன் -ஐக்கிய ராச்சியம்           

https://naduweb.com/?p=10883

  • Replies 53
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை  சில  உண்மைகளை  சொல்லிச்சென்றாலும்

கொஞ்சம் ஓவராகத்தெரிகிறது

ஒரு  சிலர்  என்றாவது காப்பரண்  எடுத்திருக்கலாம்

இறைவா  என்  தங்கை  சுமேயை  காப்பாற்றும்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கிருபன் said:

சில பெண்கள் அங்கு ஒரு காதலன் இருக்க அவரின் சம்மதத்துடனும் திட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டு வந்து இங்கு விசா பெற்றுக்கொண்டபின் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள். இதைவிடக் கேவலமான செயல் வேறொன்றுமில்லை.

58 minutes ago, கிருபன் said:

புலம் பெயர்ந்தவர்கள்  பெயரில்  ஏதாவது சொத்துக்கள் இருந்தால் அவ்வளவுதான். அவர்களுக்கு எதற்கு இங்கிருக்கும் சொத்து? எனத் தாமாகவே முடிவு செய்துகொண்டு அவர்களுக்கே தெரியாமல் அச் சொத்துக்களில் தம் ஆதிக்கத்தைச் செலுத்துவதும், கள்ள உறுதி முடித்துத் தமதாக்கிக்கொள்வதும், அவர்களை நிர்ப்பந்தித்து அச் சொத்துக்களை தம் பெயருக்கு மாற்றி எழுதிக்கொள்வதும் பல இடங்களில் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்து புலத்தில் வாழும் எம் உறவுகள் பலருக்கு மானஉணர்ச்சியே  அற்றுப் போய்விட்டமை தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

இந்த இரண்டு விடயங்களும் மிகவும் மனதை பாதித்த விடயங்கள்.

பல விடயங்களை துணிந்து எழுதிய சுமேவுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சில பெண்கள் அங்கு ஒரு காதலன் இருக்க அவரின் சம்மதத்துடனும் திட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டு வந்து இங்கு விசா பெற்றுக்கொண்டபின் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள். இதைவிடக் கேவலமான செயல் வேறொன்றுமில்லை.

இப்படி ஒரு செய்தியை இணைக்க போய் எனக்கு சகோதரிகள் இல்லையோ என்று கேட்டவர்களும் உண்டு.நன்றிகள் மெசோவுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதை சுமே தானாக இங்கே இணைக்கவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் இதை சுமே தானாக இங்கே இணைக்கவில்லை?

பிச்சுப்பிடுங்கிவிடுவார்கள் என்ற பயம்தான்😂 வேறென்ன!🤣

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆய்வு, சுமே!

திரைகடலோடித் திரவியம் தேடு....!

இது ஒரு பொதுவாக்கு!

அன்றைய தமிழன் திரைகடலோடுவதில் முன்னின்றான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன!

சாதாரண தடியொன்றில் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாகத் துளைகளிட்டு....ஒரு  பருத்தி நூல் ஒன்றை மட்டுமே...அடையாளக் குறியாக வைத்து .....துருவ நட்சத்திரத்தை மட்டுமே...உபயோகித்து....கடலாண்டவன் தமிழன்.!

ஆனால்...இப்போதைய புலம்பெயர்வுக்கும்.....அப்போதைய புலம்பெயர்வுக்கும் ஒரே வித்தியாசம்...சென்றவன்...திரவியங்களைச் சேர்த்த பின்னர் திரும்பி வந்தான்! புலம் பெயர் பறவைகளைப் போல..!

அவனுக்கென ஒரு வாழ்வு இருந்தது!

இப்போதைய தமிழன்...பெரும்பாலும்..சர்வதேச கூலியாகவே புலம் பெயர்கின்றான்!

பணமில்லாதவனுக்குப் பணத்தைக் கண்ட பின்னர் ஒரு கொம்பு முளைத்து விடுகின்றது! அல்லது அவனுக்குச் சமுதாயம் ஒரு கொம்பு வைத்து விடுகின்றது..!

போதிய இடைக்காலம் இல்லாது....மரத்திலிருந்து....நேரடியாக 'பென்ஸ்' காருக்குள் விழுந்தவன் எவ்வாறு நடந்து கொள்வானோ...அவ்வாறே எம்மில் பலர் நடந்து கொள்கின்றனர்!

உங்கள் பதிவு இவர்களையே  குறிக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்!

இன்னுமொரு புலம் பெயர் சமூகமும் உள்ளது!

என்ன காரணத்தால் புலம் பெயர்ந்திருந்தாலும்....கிடைத்த சந்தர்ப்பங்கள் எதையுமே...தவற விடாது..தங்களையும் தங்கள் அடுத்த தலைமுறையையும் மேம் படுத்தியுள்ளது..! தாம் வாழும் நாட்டின் பெரும்பான்மையுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது மட்டுமன்றித் தங்கள் இனத்தின் தனித்துவங்களையும் பேணி வருகின்றது! இவர்களைப் போன்றோர் திரை மறைவில் செய்து வரும் பல விதமான உதவிகள்.....எமது இனத்தின்...அத்திவாரத்தை அழிந்து போகாது...தாங்கி நிற்பதை  ..நான் அறிவேன்!

முதலில்....எமது கலாச்சாரம் என்ன என்பதை ...அதன் தார்ப்பரியத்தை.நாம் அறிந்து கொள்ள வேண்டும்!

புட்டும்....இடியப்பமும்.....காஞ்சி புரம்  சேலையும்...முருகனும்...பிள்ளையாரும் ...சாமத்திய வீடுகளும்...அம்மி மிதிப்பதும்...அருந்ததி பார்ப்பதும் தான் எமது கலாச்சாரம் என நாம்....நம்பினால்.....ராஜ ராஜ சோழன் விட்ட தவறையே நாம் மீண்டும் ....மீண்டும்...விடுகிறோம் என்றே நினைக்கிறேன்!

தொடந்தும்...உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள், சுமே..!

விவாதிப்பது...எம்மை...எப்போதுமே.  மேம் படுத்தும் எனப்து எனது நம்பிக்கை..!

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு வாழ்க்கைக்காக  சில பெண்கள் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள். என்கிறார் கட்டுரையாளர்

இப்படித்தான் வாழ வேண்டும் என்பது யாருக்கும் கட்டாயம் இல்லை. அவரவர்கள் தங்களுக்கு ஏற்ப வாழட்டும். இதை ஒரு ஆண் செய்தால் அதை அப்படியே விட்டு விடுகிறோம். நிறைய பார்த்திருக்கிறேன்.

நான் அறிந்த வகையில் பலர் தாங்கள் வாழும் நாடுகளிலேயே  நிலைத்து அந்த நாட்டவர்களாக ஆகிப் போனார்கள். அவர்களது அடுத்த தலைமுறைக்கு அவர்கள் வாழும் நாடுதான் சொந்தநாடு.

கோடை விடுமுறைக்கு தாயகம் போன இடத்தில் கட்டுரையாளரிடம் இருந்து நன்றாக பணத்தை கறந்து விட்டார்களோ என்ற கேள்வி என்னிடம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

கோடை விடுமுறைக்கு தாயகம் போன இடத்தில் கட்டுரையாளரிடம் இருந்து நன்றாக பணத்தை கறந்து விட்டார்களோ என்ற கேள்வி என்னிடம் இருக்கிறது

என்னவோ நடந்திருக்கு எதுக்கும் ஆள் வரும் போது கேட்போம் 

இலங்கையிலோ காசு என்பது எப்படி உழைத்தாலும் செலவுகள் தான் வந்து நிற்கிறது

01. கல்யாண வீடு 

02. பிறந்தநாள் வீடு 

03. இப்ப புதுசா வந்திருக்கு பெண்பிள்ளைகளுக்கு 21 வயதில் கீ பேர்த்து டே

04. பூப் புனித நீராட்டு விழா

05. குழந்தை பிறந்தால் தொட்டிலில் போடும் விழா , 

06. மாசமா இருந்தால்  வளைகாப்பு (புதுசா சேர்த்து இருக்கிறாங்கள்)

07. கோயில் திருவிழாக்கள் 

08. வீடு கட்டினால் , வேலை கிடைத்தால் ,  வாகனம் வாங்கினால் , பிரமோசன் கிடைத்தால், ஏன் லவ்வர் செட் ஆகினால் ,கல்யாணத்துக்கு , செத்த வீடானால்  8 நாட்களும் இரவில் நிற்பவர்களுக்கு   எல்லாத்துக்கும் பார்ட்டி 

09. மருந்து செலவுகள் ( கொலஸ்ரோல், சுகர், ) 

10. வாகனம் வைத்திருந்தால் அதற்கு செலவு என அதிகரித்தே செல்கிறது இப்படி இருக்க இலங்கையில் எப்படி வேலைசெய்தாலும் மிச்சம் எப்படி பிடிப்பதென்பதே தெரியாமல் முளிப்பவனில் நானும் ஒருத்தான் 

சில நேரம் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடு சென்று உழைக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது  எனக்கும் இதுதான் சிலோன் லைவ் 

 வேலை இல்லாதவர்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

சரியான வேலை வாய்ப்புகள் அமையாமல், பொருளீட்ட நியாயமான, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு புலம் பெயர ஆசை கொள்வதில் நிச்சயம் தவறில்லை.

ஆனால் எப்படியோ வாய்ப்பு கிட்டி, புலம் பெயர்ந்து அங்கே செட்டிலாகிய பின், தாயகத்திலிருந்து பின்னால் புலம் பெயர எத்தனிப்பவர்களைப் பார்த்து "இங்கொன்றும் சரியில்லை, நீங்கள் அங்கேயே தாயகத்தில் சமாளித்து வாழுங்கள்..!" என அறிவுறுத்துவது சரியன்று.

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களை ஆதங்கத்துடன் எழுதியுள்ளீர்கள்.......,  தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரிந்தே அநேகமானோர் ஏமாறுகின்றனர்.சொந்தங்கள்தானே போகட்டும் விடு என்ற கணக்கில்.......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயிருந்து போய் அங்கு ஓவராய் படம் காட்டினால்,அவர்களும் அதிகம் எதிர்பார்ப்பார்கள்...பொதுவாக அங்கிருப்பவர்கள் நினைப்பது இங்கு காசு கொட்டிக் கிடக்குதுக்கு என்று ...பொறுமையாய் விளங்கப்படுத்தினால் விளங்கிக் கொள்வார்கள் 
விலைவாசி ஏறிக் கொண்டு போவதால் அங்கும் இருவரும் உழைத்தாலும் காணுதில்லை என்பார்கள்... இங்கேயும் அப்படித் தானே ! கிரெடிட் காட் இருப்பதால் இங்கு சமாளிக்கிறார்கள் 
அங்கு இருப்பவர்களுக்கும்,இங்கு இருந்து போவோருக்கும் இடை வெளி இருக்கு தான் ...நான் பார்த்த அங்கிருக்கும் சிலர் சாப்பாட்டுக்கு காசு செலவழிப்பதில்லை ...அவர்களுக்கு காசு சேர்ப்பதில் தான் ஆர்வம்..இங்கேயும் அப்படி இருக்கினம்.
இங்கேயிருந்து போவோருக்கு வடிவாய் உடுத்த விருப்பம்.
இங்கேயிருந்து போவோர் ஹொலிடேக்கு தான் வந்து இருக்கிறார்கள் ஈன்று அங்கிருப்பவர்கள் நினைப்பதில்லை...அங்கிருப்பவர்கள் ஹொலிடேயே போயிருக்க மாட்டினம்,இங்கத்தையே வாழ்க்கை முறை தெரியாது...விளங்கப் படுத்தி சொன்னால் விளங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

புட்டும்....இடியப்பமும்.....காஞ்சி புரம்  சேலையும்...முருகனும்...பிள்ளையாரும் ...சாமத்திய வீடுகளும்...அம்மி மிதிப்பதும்...அருந்ததி பார்ப்பதும் தான் எமது கலாச்சாரம் என நாம்....நம்பினால்.....

உணவு, உடை, சடங்குகள் தானே கலாச்சாரம்? இல்லை என்றால் வேறு ஏது கலாச்சாரம்?

5 hours ago, ரதி said:

விலைவாசி ஏறிக் கொண்டு போவது தவிர்க்க முடியாதது. சனத்தொகை அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி காரணமாக விலைவாசி ஏறிக் கொண்டு போகிறது. ஏறிக்கொண்டு போகும் விலைவாசியுடன் நிம்மதியாக வாழ வழி, விலைவாசிக்கு தக்க அளவிலாவது வருமானத்தையும் பெருக்கி கொள்ள வேண்டும். செய்யும் தொழிலில் வருமானத்தை பெருக்கிக்கொள்ள வழிதெரியாவிட்டால் வேறு தொழில்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உண்மையில் சொல்லப்போனால், மற்றவர்களிடம் பணத்தை வாங்குவதும் வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் ஒரு வழியாகும். அந்த துறைக்கும், ஆற்றலும், அறிவும், அனுபவமும் நிறையவே பயன்படுகின்றன. இதற்கு பயிற்றுவிக்கும் பல்கலைக்கழக பாடநெறிகளும் உள்ளன. இலாபநோக்கற்ற, பொதுநல நிறுவனங்களில் வேலைபெற விரும்புபவர்கள் இந்த பாடநெறிகளை கற்றுக்கொள்கிறார்கள். இலங்கையிலும் தனியார் கல்விநிறுவனங்களில் இந்த பாடநெறிகளை கற்றுக் கொடுத்து, புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து எப்படி பெருமளவு வருமானத்தை தொடர்ச்சியாக நீண்டகாலத்துக்கு பெற்றுக்கொள்வது என்பதில் அங்கிருப்பவர்களை வல்லுநர்கள் ஆக்கினால், உள்ளூர் பொருளாதாரத்தை வேகமாக ஊக்குவிக்கலாம்.

போர்க்காலத்தில் இந்த துறையில் ஆற்றலுள்ளவர்கள் பெருமளவு பணத்தை போருக்கு திரட்டினார்கள். இன்று அவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தி அபிவிருத்திக்கு பணத்தை திரட்ட எந்த தலைமையும் இல்லை. கருணாவும், டக்ளசும் இன்று அரசில்இருப்பதால் இவ்வாறு அபிவிருத்திக்கு பணத்தை திரட்டுவது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

வணக்கம், ஜுட்!

நான் சொல்ல வந்த விடயம் இது தான்..!

புட்டு மலையாளிடமிருந்து...!

காஞ்சிபுரம் சேலை....இந்தியாவிலிருந்து..!

முருகனின்...மறுவடிவம்... கந்தன்.....பார்ப்பனப் புனை கதைகளிருந்து....!

பிள்ளையார்....மகாராஷ்டிராவிலிருந்து...!

அம்மி மிதிப்பதும்....அருந்ததி பார்ப்பதும்...பாரிப்பனிய சடங்குகள்...!

சாமத்திய வீட்டுக் கொண்டாட்டம்....நீங்கள் தான் சொல்ல வேண்டும்..!😃

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, புங்கையூரன் said:

புட்டும்....இடியப்பமும்.....காஞ்சி புரம்  சேலையும்...முருகனும்...பிள்ளையாரும் ...சாமத்திய வீடுகளும்...அம்மி மிதிப்பதும்...அருந்ததி பார்ப்பதும் தான் எமது கலாச்சாரம் என நாம்....நம்பினால்.....

5 hours ago, Jude said:

உணவு, உடை, சடங்குகள் தானே கலாச்சாரம்? இல்லை என்றால் வேறு ஏது கலாச்சாரம்?

1 hour ago, புங்கையூரன் said:

வணக்கம், ஜுட்!

நான் சொல்ல வந்த விடயம் இது தான்..!

புட்டு மலையாளிடமிருந்து...!

வணக்கம் புங்கையூரான்,

மலையாளிகள் தமது வரலாறு பற்றிய கண்காட்சியில் 18ம் நூற்றாண்டில் தாம் தமிழரில் இருந்து பிரிந்து மலையாளிகள் ஆனார்கள் என்று காட்டியிருந்தார்கள். புட்டு பற்றி 18ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பதாகவும் அறிந்தேன். ஆகவே, எனது கேள்வி:

புட்டு மலையாளிகளிடம் இருந்து தமிழரிடம் வந்த உணவா அல்லது தமிழரிடம் இருந்து மலையாளிகளிடம் சென்ற உணவா?
 
1 hour ago, புங்கையூரன் said:

காஞ்சிபுரம் சேலை....இந்தியாவிலிருந்து..!

இந்தியா உருவாக முன்னரே தமிழர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்ததாகவும், அங்கு அந்த காலத்தில் இருந்தே சேலைகள் நெய்யப்பட்டதாகவும் வரலாற்றில் படித்திருக்கிறேன். கேள்வி:

காஞ்சிபுரம் சேலை.தமிழரின் கலாச்சாரத்தில் இருந்து இந்தியாவுக்குள் அங்கமானதா இல்லையா?

1 hour ago, புங்கையூரன் said:

முருகனின்...மறுவடிவம்... கந்தன்.....பார்ப்பனப் புனை கதைகளிருந்து....!

கந்தனும் முருகனும் ஒரு கடவுளாக முன்னரே தமிழ் கலாச்சாரத்தில் முருகனை கடவுளாக கொண்ட இலக்கியங்கள் நிறையவே இருக்கின்றனவே? அவற்றையும் தமிழ் கலாச்சாரத்தையும் பின்னால் வந்த கலப்பை காரணம் காட்டி நிராகரிப்பது தவறல்லவா?

1 hour ago, புங்கையூரன் said:

பிள்ளையார்....மகாராஷ்டிராவிலிருந்து...!

அம்மி மிதிப்பதும்....அருந்ததி பார்ப்பதும்...பாரிப்பனிய சடங்குகள்...!

சாமத்திய வீட்டுக் கொண்டாட்டம்....நீங்கள் தான் சொல்ல வேண்டும்..!😃

இப்படி எமது மக்களின் பாரம்பரிய உணவுகளையும், மத நம்பிக்கைகளையும், சடங்குகளையும் எங்கள் கலாச்சாரமல்ல என்று நிராகரிக்கும் நீங்களே எங்கள் கலாச்சாரத்தின் தோற்றப்பாடுகளை பட்டியலிட்டு எங்களுக்கு அறிவூட்ட வேண்டாமா?

1 hour ago, புங்கையூரன் said:

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 7:03 PM, விசுகு said:

கதை  சில  உண்மைகளை  சொல்லிச்சென்றாலும்

கொஞ்சம் ஓவராகத்தெரிகிறது

👍

கொஞ்சம் இல்லை அரைவாசிக்கு மேல் ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் "வெளிநாடு போவது" என்பது ஒரு தொழிலாக மாறி இப்ப கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிவிட்டன.

கடந்த 35 ஆண்டுகளில் சிங்களவர்கள் கல்வியிலும்.. வேலை வாய்ப்புக்களிலும் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இன்று எம்மவர்கள் எட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டார்கள்.

போர் முடிந்த கடந்த ஒரு தசாப்தத்திலும் கூட.. "வெளிநாடு போவது" என்பதே தாயகம் வாழ் தமிழர்கள் குறிப்பாக வடக்குக் கிழக்கு தமிழர்களின் குறிப்பாக இளையவர்களின் முக்கிய தொழிலாக உள்ளது.

இந்தச் சிந்தனையோட்டத்துக்கு முக்கிய காரணம்.. புலம்பெயரிகளின் பணம். அது எப்படி வருகுது என்ற கேள்விக்கு அப்பால்.. புலம்பெயரிகள்.. எப்படியோ அனுப்பும் பணமே. மிச்சதெல்லாம்.. பிறகு..!!! 

Edited by nedukkalapoovan

2 hours ago, nedukkalapoovan said:

தமிழனை அழிக்க யாரும் தேவை இல்லை; தானே புலம்பெயர்ந்து அழிந்து போவான், என்னுடைய சகோதரனின் நண்பன் 30 வயது அவர் உள்ளுர் நிறுவனத்தில் 100,000/=  சம்பளம் மனைவிக்கு சர்வதேச நிறுவனத்தில் 150,000= இதையெல்லாம் விட்டு போட்டு கனடாவில்  வந்து குப்பை கொட்டீனம்......

தாயக கனவுடன் உயிர் நீத்த மாவீர் தான் பாவம் ...புலம் பெயர்வு தான் குறிக்கொள் என்றால் ஏன் இத்தனை அழிவு.... போராடாமல் புலம் பெயர்ந்து இருக்கலாம்.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 7:05 PM, கிருபன் said:

பிச்சுப்பிடுங்கிவிடுவார்கள் என்ற பயம்தான்😂 வேறென்ன!🤣

நன்றி கிருபன் இணைத்ததற்கு.

எழுதி முடித்து போட்ட பிறகும் எத்தனை கல்லெறி விழப்போகுதோ என்ற பயம் ஒன்று இருந்ததுதான்.  ஆனால் நான் நினைத்த அளவு யாருமே கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாமல் போய்விட்டனர் வெளியே. யாழ் உறவுகள் எழுதுவதைப்பற்றி நான் என்றுமே பயம் கொண்டதில்லை.😎

On 11/30/2019 at 6:03 PM, விசுகு said:

கதை  சில  உண்மைகளை  சொல்லிச்சென்றாலும்

கொஞ்சம் ஓவராகத்தெரிகிறது

ஒரு  சிலர்  என்றாவது காப்பரண்  எடுத்திருக்கலாம்

இறைவா  என்  தங்கை  சுமேயை  காப்பாற்றும்....

உங்கள் வேண்டுதல் என்னைக் காப்பாற்றிவிட்டது அண்ணா 😀

On 11/30/2019 at 11:45 PM, புங்கையூரன் said:

புட்டும்....இடியப்பமும்.....காஞ்சி புரம்  சேலையும்...முருகனும்...பிள்ளையாரும் ...சாமத்திய வீடுகளும்...அம்மி மிதிப்பதும்...அருந்ததி பார்ப்பதும் தான் எமது கலாச்சாரம் என நாம்....நம்பினால்.....ராஜ ராஜ சோழன் விட்ட தவறையே நாம் மீண்டும் ....மீண்டும்...விடுகிறோம் என்றே நினைக்கிறேன்!

தொடந்தும்...உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள், சுமே..!

விவாதிப்பது...எம்மை...எப்போதுமே.  மேம் படுத்தும் எனப்து எனது நம்பிக்கை..!

நன்றி புங்கை கருத்துக்கு.இருவர் தொலைபேசியில் ஏன் உங்களுக்குத் தேவையில்லாத வேலை என்றனர். எமக்குள்ளேயே பொருமிக்கொண்டிருந்து என்ன பயன். வருவது வரட்டும் என்றுதான் எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 5:45 AM, Kavi arunasalam said:

வெளிநாட்டு வாழ்க்கைக்காக  சில பெண்கள் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள். என்கிறார் கட்டுரையாளர்

இப்படித்தான் வாழ வேண்டும் என்பது யாருக்கும் கட்டாயம் இல்லை. அவரவர்கள் தங்களுக்கு ஏற்ப வாழட்டும். இதை ஒரு ஆண் செய்தால் அதை அப்படியே விட்டு விடுகிறோம். நிறைய பார்த்திருக்கிறேன்.

நான் அறிந்த வகையில் பலர் தாங்கள் வாழும் நாடுகளிலேயே  நிலைத்து அந்த நாட்டவர்களாக ஆகிப் போனார்கள். அவர்களது அடுத்த தலைமுறைக்கு அவர்கள் வாழும் நாடுதான் சொந்தநாடு.

கோடை விடுமுறைக்கு தாயகம் போன இடத்தில் கட்டுரையாளரிடம் இருந்து நன்றாக பணத்தை கறந்து விட்டார்களோ என்ற கேள்வி என்னிடம் இருக்கிறது.

இப்படித்தான் வாழவேண்டும் என்று யாருக்கும் எந்தக் கட்டாயமும் இல்லை என்று ஒவ்வொருவரும் எண்ண ஆரம்பித்தால் குடும்பம் என்னும் கட்டமைப்பே சிதைந்து போய்விடுமே அண்ணா. நான் இதில் கூறியது அதுவல்ல. பல பெண்கள் இப்போது வெளிநாட்டில் அரசாங்கம் பெண்களுக்குச் செய்யும் சலுகைகளை, தனியாக வாழும் பெண்களுக்கான சட்ட விதிமுறைகளைக் கூட  அறிந்து,  திட்டமிட்டே  இங்கு ஒருவரைத் திருமணம் செய்து வருகிறார்கள் என்பதைத்தான் குறிப்பிட்டேன். ஆண்கள் இப்படி அரிதாகவே செய்கின்றனர். அதனாலேயே அவர்களைக் குறிப்பிடவில்லை.

இதில் நான் என் அனுபவத்தை மட்டும் எழுதவில்லை அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 7:46 AM, தனிக்காட்டு ராஜா said:

என்னவோ நடந்திருக்கு எதுக்கும் ஆள் வரும் போது கேட்போம் 

இலங்கையிலோ காசு என்பது எப்படி உழைத்தாலும் செலவுகள் தான் வந்து நிற்கிறது

01. கல்யாண வீடு 

02. பிறந்தநாள் வீடு 

03. இப்ப புதுசா வந்திருக்கு பெண்பிள்ளைகளுக்கு 21 வயதில் கீ பேர்த்து டே

04. பூப் புனித நீராட்டு விழா

05. குழந்தை பிறந்தால் தொட்டிலில் போடும் விழா , 

06. மாசமா இருந்தால்  வளைகாப்பு (புதுசா சேர்த்து இருக்கிறாங்கள்)

07. கோயில் திருவிழாக்கள் 

08. வீடு கட்டினால் , வேலை கிடைத்தால் ,  வாகனம் வாங்கினால் , பிரமோசன் கிடைத்தால், ஏன் லவ்வர் செட் ஆகினால் ,கல்யாணத்துக்கு , செத்த வீடானால்  8 நாட்களும் இரவில் நிற்பவர்களுக்கு   எல்லாத்துக்கும் பார்ட்டி 

09. மருந்து செலவுகள் ( கொலஸ்ரோல், சுகர், ) 

10. வாகனம் வைத்திருந்தால் அதற்கு செலவு என அதிகரித்தே செல்கிறது இப்படி இருக்க இலங்கையில் எப்படி வேலைசெய்தாலும் மிச்சம் எப்படி பிடிப்பதென்பதே தெரியாமல் முளிப்பவனில் நானும் ஒருத்தான் 

சில நேரம் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடு சென்று உழைக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது  எனக்கும் இதுதான் சிலோன் லைவ் 

 வேலை இல்லாதவர்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் 

உண்மையைச் சொன்னதற்கு நன்றி தம்பியா. வெளிநாட்டவரைத் திட்டி வரும் வீடியோக்களும், முகநூல் பதிவுகளாலும் ஏற்பட்ட கடுப்பினாலும் கசப்பினாலும் எழுதியது இது.
என்னிடம் உதவி கேட்ட ஒரு உறவு ஒரு ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத் தருகிறேன் என்று வாங்கிய பணத்தை நான்கு ஆண்டுகளாகியும் தரவே இல்லை. அவர் முகநூலில் போடும் பதிவுகளை பார்த்துக் கடுப்பாகி என் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டதற்கு இரு மாதங்களுக்கு ஒரு தடவை 5000 ரூபாய் போடுகிறேன் என்கிறார். சரி என்று அங்குள்ள பாதிக்கப்பட்ட ஒருவருக்கு போகுமாறு ஒழுங்கு செய்தால் ஒரு மாதம் போட்டுவிட்டு மூன்றாம் மாதம் போடவில்லை. ஏன் போடவில்லை என்று கேட்டால் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலாச் சென்றதாகக் கூறுகிறார். எனக்கு எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

On 12/1/2019 at 8:11 AM, ராசவன்னியன் said:

சரியான வேலை வாய்ப்புகள் அமையாமல், பொருளீட்ட நியாயமான, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு புலம் பெயர ஆசை கொள்வதில் நிச்சயம் தவறில்லை.

ஆனால் எப்படியோ வாய்ப்பு கிட்டி, புலம் பெயர்ந்து அங்கே செட்டிலாகிய பின், தாயகத்திலிருந்து பின்னால் புலம் பெயர எத்தனிப்பவர்களைப் பார்த்து "இங்கொன்றும் சரியில்லை, நீங்கள் அங்கேயே தாயகத்தில் சமாளித்து வாழுங்கள்..!" என அறிவுறுத்துவது சரியன்று.

புலம் பெயர எண்ணுபவர்களைத்தடுப்பதொ தூற்றுவதோ இக் கட்டுரையின் நோக்கம் அல்ல அண்ணா. உங்களுக்கு இது சிலவேளை விளங்காதிருக்கும் ஏனெனில் இப்படியான விடயங்களை நீங்கள் அனுபவத்திலோ அல்லது கேட்டோ கூட இருக்கமாட்டீர்கள்.

On 12/1/2019 at 8:37 AM, suvy said:

பல விடயங்களை ஆதங்கத்துடன் எழுதியுள்ளீர்கள்.......,  தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரிந்தே அநேகமானோர் ஏமாறுகின்றனர்.சொந்தங்கள்தானே போகட்டும் விடு என்ற கணக்கில்.......!   🤔

நன்றி அண்ணா கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 11:35 AM, ரதி said:

இங்கேயிருந்து போய் அங்கு ஓவராய் படம் காட்டினால்,அவர்களும் அதிகம் எதிர்பார்ப்பார்கள்...பொதுவாக அங்கிருப்பவர்கள் நினைப்பது இங்கு காசு கொட்டிக் கிடக்குதுக்கு என்று ...பொறுமையாய் விளங்கப்படுத்தினால் விளங்கிக் கொள்வார்கள் 
விலைவாசி ஏறிக் கொண்டு போவதால் அங்கும் இருவரும் உழைத்தாலும் காணுதில்லை என்பார்கள்... இங்கேயும் அப்படித் தானே ! கிரெடிட் காட் இருப்பதால் இங்கு சமாளிக்கிறார்கள் 
அங்கு இருப்பவர்களுக்கும்,இங்கு இருந்து போவோருக்கும் இடை வெளி இருக்கு தான் ...நான் பார்த்த அங்கிருக்கும் சிலர் சாப்பாட்டுக்கு காசு செலவழிப்பதில்லை ...அவர்களுக்கு காசு சேர்ப்பதில் தான் ஆர்வம்..இங்கேயும் அப்படி இருக்கினம்.
இங்கேயிருந்து போவோருக்கு வடிவாய் உடுத்த விருப்பம்.
இங்கேயிருந்து போவோர் ஹொலிடேக்கு தான் வந்து இருக்கிறார்கள் ஈன்று அங்கிருப்பவர்கள் நினைப்பதில்லை...அங்கிருப்பவர்கள் ஹொலிடேயே போயிருக்க மாட்டினம்,இங்கத்தையே வாழ்க்கை முறை தெரியாது...விளங்கப் படுத்தி சொன்னால் விளங்குவார்கள்.

ஒரு குறிப்பிட்ட விகிதத்தின் விடுமுறைக்கு என்று சென்றாலும் பலர் உறவுகளைக் காண, எம் மண்ணுக்கு என்றேதான் அங்குசெல்கிறார்கள். விடுமுறை செல்ல எமக்கு எத்தனையோ நாடுகள் இருக்கே ரதி?? அதை விட்டு அங்கு ஓடுவது நாம் பிறந்து வளர்ந்த மண் என்பதனால்த்தானே.

On 12/1/2019 at 5:37 PM, Jude said:

 இலங்கையிலும் தனியார் கல்விநிறுவனங்களில் இந்த பாடநெறிகளை கற்றுக் கொடுத்து, புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து எப்படி பெருமளவு வருமானத்தை தொடர்ச்சியாக நீண்டகாலத்துக்கு பெற்றுக்கொள்வது என்பதில் அங்கிருப்பவர்களை வல்லுநர்கள் ஆக்கினால், உள்ளூர் பொருளாதாரத்தை வேகமாக ஊக்குவிக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யூட். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

👍

கொஞ்சம் இல்லை அரைவாசிக்கு மேல் ஓவர்.

ஓ நீங்கள் முகம் காட்டாது இலங்கையில் இருந்து எழுதும் தமிழரா??? அப்ப இப்படித்தான் எழுதுவீர்கள் ☺️

10 hours ago, nedukkalapoovan said:

தாயகத்தில் "வெளிநாடு போவது" என்பது ஒரு தொழிலாக மாறி இப்ப கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிவிட்டன.

கடந்த 35 ஆண்டுகளில் சிங்களவர்கள் கல்வியிலும்.. வேலை வாய்ப்புக்களிலும் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இன்று எம்மவர்கள் எட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டார்கள்.

போர் முடிந்த கடந்த ஒரு தசாப்தத்திலும் கூட.. "வெளிநாடு போவது" என்பதே தாயகம் வாழ் தமிழர்கள் குறிப்பாக வடக்குக் கிழக்கு தமிழர்களின் குறிப்பாக இளையவர்களின் முக்கிய தொழிலாக உள்ளது.

இந்தச் சிந்தனையோட்டத்துக்கு முக்கிய காரணம்.. புலம்பெயரிகளின் பணம். அது எப்படி வருகுது என்ற கேள்விக்கு அப்பால்.. புலம்பெயரிகள்.. எப்படியோ அனுப்பும் பணமே. மிச்சதெல்லாம்.. பிறகு..!!! 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Dash said:

தமிழனை அழிக்க யாரும் தேவை இல்லை; தானே புலம்பெயர்ந்து அழிந்து போவான், என்னுடைய சகோதரனின் நண்பன் 30 வயது அவர் உள்ளுர் நிறுவனத்தில் 100,000/=  சம்பளம் மனைவிக்கு சர்வதேச நிறுவனத்தில் 150,000= இதையெல்லாம் விட்டு போட்டு கனடாவில்  வந்து குப்பை கொட்டீனம்......

தாயக கனவுடன் உயிர் நீத்த மாவீர் தான் பாவம் ...புலம் பெயர்வு தான் குறிக்கொள் என்றால் ஏன் இத்தனை அழிவு.... போராடாமல் புலம் பெயர்ந்து இருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாஸ். 

எனக்குத் தெரிந்த குடும்பம் கிளிநொச்சியில் வசதியாக வாழ்த்து கொண்டிருந்தனர். அங்கு கட்டிய வீட்டின் பெறுமதியே ஒன்றேகால் கோடி. மாபிள் வேலைப்பாட்டைப் பார்த்து நானே வியந்திருக்கிறேன். கடைசி மகள் திருமணமாகி கனடா வந்து மூன்று ஆண்டுகளில் ஸ்பொன்சரில் கனடா வந்த 61 வயதுடைய தாய் கணவனை மட்டும் திருப்பி அனுப்பி வீடுவளவை விற்றுவிட்டு வாருங்கள். இனி இங்கேயே மக்களுடன் இருப்போம். இதுதான் வசதி என்று கூற, கணவர் அங்கு சென்று சொத்துக்களை விற்றுவிட்டுவரச் சென்றுள்ளார். கனடா விசா இருவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்காம்.

ஒரு விதத்தில் மக்களுடன் இருப்பது அவர்களுக்கு மகிழ்வைக் கொடுத்தாலும் குளிரில் வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சி பார்ப்பது மகிழ்வைக் கொடுக்கிறது என்றால் எதைச்ச்சொல்ல ??/

On 11/30/2019 at 6:31 PM, nunavilan said:

இப்படி ஒரு செய்தியை இணைக்க போய் எனக்கு சகோதரிகள் இல்லையோ என்று கேட்டவர்களும் உண்டு.நன்றிகள் மெசோவுக்கு.

நன்றி நுணா. பலர் ஏன் இந்தப் பிரச்சனை என்று ஒதுங்கிப் போவது.

On 11/30/2019 at 6:46 PM, ஈழப்பிரியன் said:

ஏன் இதை சுமே தானாக இங்கே இணைக்கவில்லை?

எப்பிடியும் கிருபன் இணைப்பார் என்ற நம்பிக்கைதான் 😊

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 12:11 AM, ராசவன்னியன் said:

சரியான வேலை வாய்ப்புகள் அமையாமல், பொருளீட்ட நியாயமான, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு புலம் பெயர ஆசை கொள்வதில் நிச்சயம் தவறில்லை.

ஆனால் எப்படியோ வாய்ப்பு கிட்டி, புலம் பெயர்ந்து அங்கே செட்டிலாகிய பின், தாயகத்திலிருந்து பின்னால் புலம் பெயர எத்தனிப்பவர்களைப் பார்த்து "இங்கொன்றும் சரியில்லை, நீங்கள் அங்கேயே தாயகத்தில் சமாளித்து வாழுங்கள்..!" என அறிவுறுத்துவது சரியன்று.

54 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புலம் பெயர எண்ணுபவர்களைத்தடுப்பதொ தூற்றுவதோ இக் கட்டுரையின் நோக்கம் அல்ல அண்ணா. உங்களுக்கு இது சிலவேளை விளங்காதிருக்கும் ஏனெனில் இப்படியான விடயங்களை நீங்கள் அனுபவத்திலோ அல்லது கேட்டோ கூட இருக்கமாட்டீர்கள்.

அப்படி இல்லை.சொத்துக்கள் சுருட்டல் என்பது பரவலாக நடக்கிறது.

தமிழ்நாடு கேரளா இங்கே உள்ளவர்களும் ஆய்க்கினை தாங்கேலாமல் புலம்பவே செய்கிறார்கள்.

மத்திய கிழக்கிலுள்ளவர்கள் விதிவிலக்காக இருக்கலாம்.அவர்கள் வேலை ஒப்பந்தம் முடிய போக வேண்டியவர்களே.அத்துடன் குடும்பம் பிள்ளைகுட்டி என்று இடம் பெயர்வது மிகவும் குறைவு.

32 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
On 11/30/2019 at 10:46 AM, ஈழப்பிரியன் said:

ஏன் இதை சுமே தானாக இங்கே இணைக்கவில்லை?

எப்பிடியும் கிருபன் இணைப்பார் என்ற நம்பிக்கைதான் 😊

உங்கள் உண்டியலில் விழ வேண்டிய பணமெல்லாம் மாறி கிருபனின் உண்டியலில் விழுந்திருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.