Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

Featured Replies

11 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

Edited by சண்டமாருதன்

  • Replies 56
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தார்கள் எமன்பது முக்கியமல்ல நிகழ்காலமும் எதிர்காலமுமே முக்கியம் ,என்னைப்பொறுத்தவரை சாதாரண பொதுமக்களே போராளிகளைவிட மேலானவர்கள் இந்த போராட்டத்தில் பொருளாதார தடை காலகட்டத்திலும் உணவு , மருந்து மற்றும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்பட்டவர்கள் , போரில் உயிர் , அவயங்களையும் இழந்தார்கள் யாராவது கூறுங்கள் போராளிகள் இந்த சாதாரண மக்களைவிட எந்த வகையில் சிறந்தவர்கள் என்று? எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் ? ஏற்கனவே ஒரு அம்மையார் பதவி கிடைத்தவுடன் அவர் யார் என்று தெரியாது என்று சொன்ன ஒரு பெரியவடன் கடுமையாக நடந்து கொண்டார்,  மக்களுக்காகப்போராடுகிறோம் என்பதெல்லாம் சரி அனால் அதனை உண்மையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் இப்போது என்னதான் பிரச்சனை ? கைக் கூலி என்று கூறுவதை தவிர்த்து அவர்களது தற்போதை சூழலையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்து எங்கள் வார்த்தைகளை கொஞ்சம் அவதானத்துடன் கதைப்போம் என்பதா ? 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சண்டமாருதன் said:

எந்த  ஆதார  அடிப்படையில் இவ்வாறான கருத்தை பொதுவெளியில் அநாகரீகமாக முன்வைக்கின்றீர்கள்? போராட்ட காலம் முழுவதும் சிங்களப் பகுதியில் சிங்கள அரச இயந்திரத்தில் நீதித்துறையில் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரன் வடக்குக்கு முதல்வராகும் போது முன்னாள் போராளிகள் அரசியலில்  ஈடுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? 

போராளிகளாக இருந்தால் போராளிகள் வழி தடுமாறினால் என்ற கேள்விக் குறிக்க என்ன அர்த்தம்? என்ன வழி தடுமாறினார்கள்?  முன்னாள் போராளிகளை முன்னாள் போராளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ? அவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அதை சிங்களம்  ஏற்றுக்கொள்ளுமா ? ஏற்றுக்கொண்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்குமா ? முன்னாள் போராளிகள் என்பது தமிழர்கள் சூடிக்கொண்ட பெயர் கிடையாது மாறாக  முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களம் அவ்வாறுதான் அடயாளப்படுத்துகின்றது. அந்த அடயாளத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் என்னும் சிறையில் இருக்கின்றார்கள பலர் கொல்லப்பட்டார்கள் . 

தாயகத்தில் வாழும்  முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் போராட்டத்திற்க ஆதரவளித்த மக்கள்  தனித்தனியாக சிதைந்து இருப்பதை விடவும்  சங்கங்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என வாய்ப்புள்ள வகையில் ஏற்படுத்திக்கொள்வதே  அவர்கள் பாதுகாப்பக்கு நல்லது. கூட்டமைப்பையோ இதர கட்சிகளையோ நம்புவதும் இணைவதும் அவர்கள் வாழும் சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு. 

மேலும் தாயகத்தை விட்டு வெளியேறி வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பாக வாழும் நான் உட்ப எவருக்கும் தன் செந்த நிலத்தில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளை முகம்கொடுக்கும் எந்த அமைப்பு கட்சி அல்லது சாதாரண மக்கள் கூறித்து கருத்துக் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது தவிர அதிகாரம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக அநாகரீகமாக விமர்சனம் செய்யவோ இல்லை அவர்கள் சார்பாக முடிவெடுக்கவோ முடியாது. தாயகத்தில் வாழும் மக்கள் மீதான தலையிட்டிற்கு ஒரு எல்லை தாயகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இருக்கின்றது. அதை உணர்ந்து கருத்தை முன்வைப்பதே நல்லது.. 

நன்றி சண்டமாருதன்.

உங்கள் விளக்கம் எனக்கு மேலும்  தெளிவை ஏற்படுத்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

ஏன் அண்ணா இயக்கம் பலவந்தமாய் ஆட்களை பிடிக்கேல்லையோ?... உங்கட பொலிசி எனக்கு பிடித்திருக்கு உங்களுக்கு விருப்பமானதை  செய்தால் தியாகிகள் அல்லாட்டில் துரோகிகள் சரியா 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

தாங்களாகவே விரும்பி சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கியவர்களையும், 2009 வைகாசி மாதம் வரை நேர்மையாகப் போராடி கைது செய்யப்பட்டு சூழ்னிலைக் கைதிகளானோரையும் ஒப்பீடு செய்வது சரிதானா ? என்றொரு கேள்வி இருப்பினும்...

இந்தத் திரியில் வரும் வாதப் பிரதிவாதங்களை நான் நன்மையானதாகவே பார்க்கிறேன். 

ஏனென்றால் இந்த வாதங்கள் யாவும் எங்கள் சிந்தனை முறையில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதுடன் அதனை எழுத்திலும் பேச்சிலும் நாம்  காண்போம் என்பது திண்ணம்.  😀

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

இருவகையினரதும் வரலாறுகள் வேறு வேறாகவே இருக்கிறன என்பதும், இருவகையினர்க்குமிடையேயான வித்தியாசங்கள் பல என்பதும் உண்மையே.

ஆனால் - இப்போ இருவகையினரும் வேறு ஒருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் இருக்கிறார்கள் எனும் போது - அவர்கள் இடையேயான வரலாற்று வழிபட்ட வித்தியாசம் முக்கியம் இழந்து போவதும் உண்மையே.

எம்மை பிரதிநிதப் படுத்துபவர்களின் ஏக எஜமான்;

1. எமது இனத்தின் மீட்சியா

2. அவர்களின் தற்போதைய போசகர்களா

3. அல்லது அவர்களின் சுயநலமா

என்பதை தரவுகளின் அடிப்படையில் (பொத்தாம் பொதுவாக அன்றி) நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டியது அவசியமே.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை கைக் கூலிகள் என அழைப்பதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை.

ஆனால், போராட்டத்தில் பங்கு கொள்ளாமல், பயந்தோடி, தனது குடும்பத்தை, தனது உறவினரை, தனது ஊரவனை, தனது சாதியைச் சேர்ந்தவனை வெளிநாடுகளிற்கு எடுத்துவிட்டு, போராட்டம் தொடர்பாக வெட்டிக் கதைபேசி,  வீறாப்பு பேசி, துரோகி, தேசத்துரோகி, கைக் கூலி, கோடாரிக் காம்பு, காட்டிக் கொடுத்தவன் என பட்டம் சூட்டி, எந்த ஒரு புல்லும்ம்(😀) பிடுங்காமல் காலத்தை ஓட்டும்(நானும் உள்ளடங்கலாக) எம் புலம் பெயர்ந்தோருக்கு ஒரு பொருத்தமான பெயரைச் சூட்டிய பின்னர் நானும் மற்றெல்லோரையும் போல போராடி அழிந்தவர்களை இழிவாக அழைக்கிறேன்.

அதுவரை மல்லுக்கட்ட நானும் ஆயத்தம்.

 எப்படி வசதி ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எவரினது தூண்டுதலாலோ அல்லது தாமாக விரும்பியோ அரசியலில் ஈடுபட்டாலும், தமிழரின் நலன்களே இவர்களது உண்மையான நோக்கமாக இருந்தாலும் இவர்களால் இப்போது தமிழர்கள் இருக்கும் அரசியல் அதள பாதாள நிலையிலிருந்து அவர்களை வெளியே இழுத்துவர முடியுமா? 

இதுவரை தமிழர்கள் செய்துவந்த அனைத்து அரசியல் செயற்பாடுகளும் எந்தவித பலனையும் தராதபோது, இப்போதிருக்கும் அதிதீவிர பெளத்த சிங்கள ஏகாதிபத்திய அரசின் முன்னால் எம்மால் செய்வதற்கு இன்னுமிருக்கும் அரசியல் என்னவென்பது எனது கேள்வி. 

உள்நாட்டில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வெளிநாடுகளாலும், குறிப்பாக பிராந்திய வல்லரசுகளாலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்களம் செய்யும் கொடுமைகளை வெளியே எம்மால் கொண்டுபோகவும் முடியாது, அப்படிக் கொண்டுபோனாலும் எதுவுமே நடக்கப்போவதுமில்லை. 

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டமைப்பினாலே இதுவரை தமிழர் நலன் தொடர்பில் எதையுமே செய்யமுடியவில்லை என்று ஆகிறபோது, முன்னாள்ப் போராளிகளினால் எதைச் செய்துவிட முடியும் என்கிற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. 

இவர்கள் சார்ந்த சமூகத்திற்கும், உறவுகளுக்கும் ஏதாவது நல்லவிடயங்களை இவர்கள் செய்யமுடிந்தால், அதுவே எம்மால் இன்றுள்ள அரசியலில் செய்யக்கூடிய அதிகூடிய முயற்சியாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

மீரா....  கூறியதில், தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
"விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை" என்ற கட்சி ஆரம்பிக்கப் பட்டு,  24 மணித்திலாத்திற்கு மேலாகியும்,  இதுவரை... ஐக்கிய தேசியக் கட்சியடமிருந்தோ   புத்த பிக்குகளிடம் இருந்தோ, 
ஜே.வி.பி., ஜாதிக கெல  உறுமய போன்ற கடும் போக்கான சிங்கள கட்சிகளிடம் இருந்தோ....
இதுவரை எந்த கண்டனக் குரல்களும் வரவில்லை.

அப்படியென்றால்.... மகிந்த, கோத்தா போன்றவர்கள் அவர்களிடம் ஏற்கெனவே...
பேசி முடிவு எடுத்த பின்தான்.... இந்தக் கட்சியை, கூ ட் டமைப்புக்கு எதிராக, 
களமிறக்கியுள்ளார்கள்  என்பதை, சாதாரண  மனிதனுக்கும் விளங்கும்.

அதுகும்... மகிந்த, கோத்தா போன்றவர்கள் ஆட்சியிலிருக்கும் போது...
தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதற்காகவும்,
தலைவரின் படத்தை வைத்திருந்தற்காகவும், புலிப் படம் அச்சிடப் பட்ட  
(விடுதலைப் புலிகளின் சின்னம் அல்ல)   ரீ  சேர்ட்டை  அணிந்த, 
சிறுவன் முதல் கொண்டு பலரையும்,புலனாய்வுத்துறை விசாரித்த 
செய்திகளை நாம் பார்த்திருக்கின்றோம்.

அப்படியிருக்க.... இவர்கள் ஆடசியில், விடுதலைப்புலிகள் பெயரில் ஒரு கட்சி  ஆரம்பிப்பதற்கு 
அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க சந்தர்ப்பம் அறவே கிடையாது என்பதே யதார்த்தம்.

அதனைத் தான்... மீரா, முன் எச்சரிக்கையாகவும், 
எதற்காக களம்  இறக்கப்படுகிறார்கள் என்பதையும்  தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை அங்கீகரிப்பதன் ஊடாக சிங்கள அரசு தனது நலன்களை பாதுகாத்தது மட்டுமல்லாது தமிழர் விரோத செயற்பாடுகளையும் கரூணா என்ற கைக்கூலி மூலம் ஊக்கிவித்தது. அதற்காக விடுதலைப்புலிகள் என்ற சொல்லை மகிந்த சகோதரர்களின் குறிப்பாக ஜனாதிபதி கோத்தாவின் ஆசீர்வாதம் இல்லாமல் எவரும்  பயன்படுத்தமுடியாது.அப்பாவி போராளிகள் இதுபோன்ற சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு கெட்டபெயர் வாங்குவது மிக சாதாரணமாகிவிட்டது. எப்போது கோத்தா ஆட்சிக்கு வருவார் விடுதலை புலிகளின் பெயரில் கட்சி தொடங்கலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்ததுபோல் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஜாக்கிரதை: தனியாகவோ சிறு சிறு குழுக்களாகவோ இலங்கையிலும்வெளி நாடுகளிலும்  தேசியத்துக்காக இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், தொண்டர்கள், தமிழின ஆதரவாளர்கள் அவசரப்பட்டு இதுபோன்ற கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது உசிதமானது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே.

 மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை.

ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது.

இதே நிலைதான் விக்கிக்கும். 

ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை.

சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம்.

விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம்.

அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் 😂.

இது யாழில் சாதாரண வழமைதான்.

கைப்பாவைக்கும் கைக் கூலிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றது. 

நான் எப்போதுமே யோசிப்பது இதனைத்தான் - எங்கள் சமூகத்தின் சிந்தனை முறையின் குறைபாட்டிற்கு என்ன காரணம். 

எங்எகளுக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மமதையா அல்லது எங்கள் கல்வி முறையின் குறைபாடுதான் காரணமா ? 

உண்மையில் எங்கள் சமூகத்தின் கடின உழைப்பிற்கும் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமைக்கும் எங்களிடம் ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறை இருந்திருப்பின் , எமது இனம் தென் ஆசியாவையே கட்டி ஆண்டிருக்கும்.

ஆனால் எங்கள் இனத்தின் ஒழுக்கமின்மை (Discipline)  எங்கள் இனத்தையே கருவறுத்து விட்டது. யாரை நோக ?????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

மலரட்டும் மலரட்டும் । வாடிப்போகாமல் இருந்தால் சரிதான்। அது சரி இது எத்தனையாவது மலர் , அதாவது எத்தனையாவது கட்சி ? இன்னும் எதனை கட்சி வரப்போகுதோ। சிவ சிவா।

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது?

ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம்.

அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது.

பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும்.

ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும்.

50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது.

இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.

உண்மையில் அந்த வசவுத் தொனிதான் எனது பிரச்சனையே. முன்னாள் போராளிகள் அமைப்பை இயக்குவது யாராக இருக்கலாம் என்று நாம் ஊகிப்பது கடினமல்ல. ஆனால்க அவர்களை அரச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் / வழி நடத்துதலில் இயங்குகின்றனர் என கூறுவதற்கும் கைக்கூலி எனகூறுவதற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரிது .

அதனை சுட்டிக்காட்ட விரும்பினேன்(கொஞ்சம் காரமாக) அது இங்கே வந்து நிற்கிறது.😀

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

சகோ

நீங்கள் எழுதும்  விடயங்கள் நாம்  அறியாததல்ல.

இது  போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட   போதெல்லாம் மக்களின்  வரவேற்பை  பெறமுடியவில்லை.

காரணம்  சந்தேகமும் இன்றைய சூழ்நிலையும் இவர்களுடைய செயற்பாடுகளும்  தான்.

எனவே இவர்கள் ஆரம்பத்திலிருந்து மக்கள்  பணியை ஆரம்பிப்பதே வரவேற்கத்தக்கது.

புலிகளின் பெயரைப்பாவிப்பதோ

அவர்களின் அடுத்த  கட்டமாக செயற்படுதோ

புலிகளின் மரியாதையை  இழக்கவும்  தமிழ்மக்கள் புலிகளை  வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த  நன்மையுமில்லை.

டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

விசுகு அண்ணா ,
இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள்.

நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்...

காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக  இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

உங்களது கருத்தோடு முரணில்லை  சசி

2009 க்குப்பின்னர் முன்நாள்கள் என்று  ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் செயற்பாடுகளால் வந்த  விரக்தி  இது.

காலம்   பதில்  சொல்லட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

நானும் ஏல் எல் பயோதான் ஆனால் ஆர்வக்கோளாரில் கொமேர்ஸ் வகுப்பில் நடக்கும் லொஜிக் பாடங்களையும் கற்பதுண்டு. இந்த லொஜிக் விளங்குதா பாருங்களேன் 👇😂.

1. இயக்கதில் சேர்ந்து போராடியவர்கள் எல்லாரும் 2009 மே மாதம் வரை “போராளிகள்”. 

2. மே 2009 க்கு பின் இயக்கம் அற்றுபோனதால், இதன் பின் உயிரோடு எஞ்சிய அனைத்து 2009 மே வரை போராளிகளாக இருந்த அனைவரும் இப்போ “முன்னாள் போராளிகள்”. இது ஒரு fact. இன்னார் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது போல. (அவர் ஊரை அடித்து உலையில் போட்டாலும் அவர் யாழ் இந்துவின் பழைய மாணவர் என்பது மாறாதுதானே?).

3. போராளிகளிடையே நல்லவர்களும், தீயவர்களும் இருந்தார்கள். ஆகவே முன்னாள் போராளிகளிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருப்பார்கள்.

4. முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட தீயவர்கள் - அரசின் ஏவலர்களாக செயல்பட்டுளனர் - உதாரணம் தயா மாஸ்டர்.

அதே போல் முடிவு 3ல் அடையாளம் காணப்பட்ட நல்லவர்கள் தூய அரசியல் செய்யவும் கூடும்.

5. ஒருவரை - அவர் முன்னாள் போராளி எனவே அவர் நேர்மையாக தமிழ் தேசிய அரசியல் செய்வார் என எதிர்பார்ப்பது மடமை. (ஏனென்றால், சுரேஸ், சித்தர், டக்ளஸ், கருணா, பிள்ளையான், எல்லாரும் முன்னாள் போராளிகள்தான்).

அதே போல் இவர் முன்னாள் போராளி - கைதாகி விடுதலையானார் - எனவே இவர் அரசின் கைப்பாவையாகவே இருப்பார் என எடுத்த எடுப்பில் முடிவு செய்வதும் மடமையே.

6. Just follow the evidence and go where it takes you.

நானும் சொல்ல நினச்சன் நீங்க சொல்லிட்டீங்க  கோசான் 

தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வைக்க முனைந்த போது இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் பெயரை வைத்து கட்சி ஆரம்பிக்க முடியாது என அரசு கூறியது  அதை மாற்றியே அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என வைத்தார்கள் .

 இந்தப்பேரவை தொடங்கினாலும் பிற கட்சியால் ஓரங்கப்பட்டு வைக்கப்படுவார்கள் அல்லது  அமத்தி வைக்கப்படுவார்கள் அது  தற்போதும் சரி முன்னரும் சரி தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை வாங்கி கொடுப்போம் என இன்று வரை பதவி விலகாமல் பதவியில் ஒட்டியிருந்து சுகபோக வாழ்க்கை அனுபவித்துவரும் நபர்கள் இவர்களை வளர விடுவார்களா?? என்பது பல கேள்விகளை ஏற்படுத்துகிறது .

இவர்கள் முன்னாள் போராளிகள் என்றால்  போராளிகள் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் முன்னாள் போராளிகள் பலர் இப்பவும் சொல்வார்கள் தமிழ் மக்களுக்கு அரசியாலால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது அது சாத்தியமில்லை என்று. கனபேர் ஒதுங்கியுள்ளார்கள் இவர்கள் தற்போது கிளம்பியிருப்பதும் அதுவும் பயன்படுத்த முடியாத பெயரை கொண்டுவந்திருப்பதும் பல கேள்விகளை உண்டாக்கி இருக்க வேணும் ஆனால் அதையெல்லாம் நாம் யோசிக்க மாட்டம் இவர்கள் போராளிகள் என்று சண்டை பிடிப்பம். 

அப்படி பார்த்தால்  இயக்கத்த விட்டவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள் என்று சொல்பவர்கள் (யாரும் காணவில்லை) ஏன் அப்படி அழைக்கலாம் கைக்கூலியென அப்படி  சொல்ல யாருக்கு உரிமை உண்டு?? கர்ணா அம்மான் சொல்லுவார் தலைவரே சொல்லமாட்டார் தன்னை துரோகி என சொன்னதாக எங்கயோ கேட்ட ஞாபகம் 😄 

Edited by தனிக்காட்டு ராஜா

17 hours ago, goshan_che said:

இது யாழில் சாதாரண வழமைதான்.

யாழில் (மட்டும்) அல்ல, எம் சமூகம் முழுதுமே இப்படித்தான் சிந்திக்கின்றது. இது அரசியல் விடயங்களில் மட்டுமல்ல, ஒரு ஆண் / பெண் தற்கொலை / கொலை ஆனால் கூட தம் விருப்பு வெறுப்புகளையும் புரையோடிப்போன முன் முடிவுகளையும் வைத்து கொண்டு தான் சிந்திக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் என்றும் கூறலாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்படியான திரிகள் எல்லாம் ஒரு பொழுது போக்கு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை புலம் பெயர்தவர்களுக்கு

இதனைக் கூறி தாங்கள் புளகாங்கிதமடைவதை நான் கலைக்க  விரும்பவில்லை கனம்  நீதிபதியவர்களே.😜

2 hours ago, MEERA said:

கள்ளனை கள்ளன் என்று கூறாமல் திரு. கள்ளன் என்றா கூறுவது.

மீராரா மிகவும் திருகுதாளம் செய்பவர் என்று கூறினால்  ஆதாரமெல்லாம் கேட்கக் கூடாது சரிதானே ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.