Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2020 at 10:31 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சர்க்கரை நோய்க்கு சொத்தை பற்களுக்கும் தொடர்பு உண்டா.? வரிசை வரிசையாக வந்து கொண்டே இருப்பதால் கேட்கிறேன்.. அடிக்கடி சிறு நீர் கழிக்க நினைப்பதற்கும் தொடர்பு உண்டா.? 😢

இரண்டு விதமான டயபடீஸ் ( Type 1 and 2) சிறுநீர் அதிகமாக உற்பத்தி ஆகும். குருதியில் சீனி அதிகமாக இருப்பதால் பற்கள் சொத்தையாகும். டயபடீஸ் (Type 2)அ து ஒரு இன்சுலின் குறைபாடு. அதனை வைத்தியர்கள் சொன்னபடி ஒழுங்காக கடைபிடித்தால் சாதாரண வாழ்க்கை வாழலாம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

கட்டுப்படுத்தாத diabetes இருந்தும் உடல் மெலிவு ஏற்படாமைக்கு ஏதும் காரணம் இருக்குமா?

பதில் போட்டுளேன். பார்க்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

முதல் முதல் பாண் சாப்பிடுறது நல்லது என்று சொன்ன ஆள் நீங்கள் தான் ...நான் இங்கே வந்ததில் இருந்து பேக்கரி பாண் சாப்பிடுறது[அது தான் ஓரளவுக்கு சாப்பிட கூடியதாய் இருக்கும்]...சிலர் பாண் சாப்பிடுவது கூடாது என்பதால்  நிப்பாட்டி இருந்தேன் ..நான் ஊரிலேயே பசுப்பால் குடிப்பதில்லை...இங்கே பால்மா டின் தான் பாவிப்பது ஆனால் காலமை ஒரு நேரம் கோப்பி மட்டும் மா கலந்து குடிப்பது ...பின்னேரம் பிளேன் ரீ  மற்றும் இடையில் கிறீன் ரீ குடிக்கிறது ...எப்பாலும் இருந்திட்டு தான் சோறு சாப்பிடுவது ...பெரும்பாலும் தானியங்களில் தான் சோறு சமைப்பது ..கறி தான் தட்டில் கூடவாய் இருக்கும் 
இந்த வருசம் இன்னும் நடக்க தொடங்கவில்லை ...ஆனால் 4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை [ சில நேரம் விரைவாய் நடக்கவில்லையோ தெரியவில்லை ]...என்ட பிரண்ஸ் எல்லோரும் நக்கலடிக்கினம் நடந்தும் உடம்பு குறையவில்லை என்றுtw_cry: ...பரம்பரை காரணமாய் இருக்குமோ?

குளிர்பானங்கள் குடிப்பதில்லை ஆனால் சொக்கிலேட்டுகள்,கேக்குகள் ....விருப்பம் ,கிரிப்ஸ் போன்ற ஜங் பூட் தான் விரும்பி சாப்பிடுறது ...இப்ப கொஞ்சம்,கொஞ்சமாய் இவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு வாறன்.

நாம் உண்ணும் உணவினால் மட்டுமே உடல் பருக்கும். ஏனெனில் உடல் உணவினால் தான் ஆனது. மரபு வழியினாலும்  வேறு  குறைபாடுகளினால்  மட்டுமே சாப்பிடாமல் அசாதாரணமாக உடல் எடை கூடும். ஆனால் விரைவில் அது ஒரு நோயாக வடிவெடுக்கும். மற்றது வயது போக உடல் என்னும் இந்த இயந்திரம் நல்லா வேலை செய்யாமல் சாப்பிட்ட சாப்பாட்டை எல்லாம் சேகரிக்க தொடங்கி விடும். 50 வயதுக்கு பின் ( குறிப்பாக பெண்களுக்கு) ஹோர்மோன் குறைபாடால் நல்லாவே கொழுப்பு சேரும். எனவே 30 வயதில் சாப்பிட்ட உணவில் இருந்து 50% தான் சாப்பிட வேண்டும். மற்றது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யவே வேண்டும். எமது மரபு அணுக்களும் கொஞ்சம் விளையாடும். சில பேருக்கு கொஞ்சம் கவனித்தால் போதும் மற்றவருக்கு நிறைய கவனம் தேவை.  குறிப்பு: பாண் நல்லம் என்று சொல்லவில்லை. சொல்லப்போனால் பாணில  சீனி உப்பு, எண்ணெய் , ஈஸ்ட், என்று எல்லாமே இருக்குது. சோறென்றால் தனிய சோறுதான். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை சோறு சாப்பிடா விட்டால் நிறை குறையும். 

Edited by nilmini
text
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

சோறு சாப்பிடா விட்டால் நிறை குறையும். 

ஆனால் வயிறு நிறையாதே Nilmini

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kavi arunasalam said:

ஆனால் வயிறு நிறையாதே Nilmini

முயற்சித்து பாருங்கள். பழகிவிடும்.  நிறையசாப்பிடும்போது இரப்பை எல்லாவற்றையும் சேகரிப்பதற்காக இலாஸ்டிக் மாதிரி இழுபட்டு பெரிதாகி விடும். அதனால் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் இரப்பை நிறையும் வரை சாப்பிடலாம் போல இருக்கும். அதுவே கஸ்ரப்பட்டு சாப்பாட்டை அரைவாசியாக குறைத்தால் திரும்ப இரைப்பை சிறுத்து பழைய அளவுக்கு வந்து விடும். அதுக்கு பிறகு கணக்க சாப்பிட முடியாது. Obese  ஆணவர்களுக்கு  சில சமயம் இரைப்பையின் அளவை குறைப்பதற்கு  ஒரு பகுதியை இறுக்கி கட்டி விடுவார்கள் . நான் வெட்டிய  உடல்கள் சிலவற்றில் பார்த்திருக்கிறேன்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் டாக்டர் நில்மினி!
நான் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக ஆங்கில மருத்துவ மாத்திரைகள் எடுத்து வருகின்றேன்.அதில் ஒவ்வொன்றிலும் ஏராளமான பக்கவிளைவுகள் இருக்கின்றன.
எனது கேள்வி என்னவென்றால் பக்க விளவுகள் இல்லாத மாத்திரைகள் இருக்கின்றனவா?
உதாரணத்திற்கு Rosuvastatin 5mg  .இந்த மாத்திரை மூலம் மூட்டுவலி,தசைப்பிடிப்பு போன்ற இன்னும் பல பக்கவிளைவுகள் வருகின்றன.இதை நிவர்த்தி செய்ய மாற்று வழிகள் இருக்கின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2020 at 9:34 AM, nilmini said:

மற்ற இறைச்சிகளிலும் பார்க்க ஆட்டிறைச்சி இல் கொலெஸ்ட்ரோல் மற்றும் saturated fats  குறைந்தே காணப்படுறது. 85 கிராம் மட்டன் இல் 2.6 கிராம் கொழுப்பு தான் இருக்கிறது.மாடு 7.9, செம்மறி ஆடு(லாம்ப்) 8.1,  பண்டி 8.2, கோழி 6.3 . கலோரி முறைப்படி பார்த்தாலும் ஆடு 122, மாடு 179, செம்மறி ஆடு(லாம்ப்) 175, பண்டி 174 கோழி 162 காலோரிகள். it has all the amino acids needed by the body along with a high level of iron that can be helpful to anemic persons. இது எனது பல்கலைக்கழக  கழக கண்டுபிடிப்பு.

முதல்முறையாக ஆட்டிறைச்சியில் கொழுப்பு குறைவு என்று எழுதும் ஒருவராகவே உங்களைப் பார்க்கிறேன்.
ஆட்டு இறைச்சியை வெட்டும் போதோ சாப்பிட்டு முடிந்த பின் கை கழுவும் போதோ சவர்க்காரம் போடாவிட்டால் கையிலுள்ள கொழுப்பு போகாது.
மற்றைய இறைச்சிகள் அப்படியல்ல.
வீட்டில் சமைப்பது அனேகமாக கோழி.எப்பவாவது உடனே அடித்த ஆட்டிறைச்சி.5-6 மாதத்துக்கொரு முறை பண்டி றிப் .மாடு வீட்டில் சமைப்பது கிடையாது.கடைத்தெருவுக்கு போனாலும் பெண்குலங்கள் சாப்பிட மாட்டார்கள்.
ஆட்டிறைச்சி சமைத்தால் ஒரு பிரச்சனை வீட்டில் எல்லோருமே இரண்டாம் தரம் சோறு போட்டு சாப்பிடுவோம்.
உங்கள் தகவல்களுக்கு நன்றி.

On 3/10/2020 at 10:08 AM, suvy said:

அப்பாடா .....பொதுவாக 50 வயதுக்கு மேற்படடவர்களுக்குத்தான் நிறைய பிரச்சனைகள் சருமத்திலும் சரி சமூகத்திலும் சரி வரும் என்று சொல்லுறா....நான் தப்பீட்டன்.....!   😂 

  70 வயது 50க்கு மேல தான் சார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2020 at 6:08 PM, nilmini said:

சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு தடவை என்றாலும் போட்டு அடையாவிட்டால் மனம் அமைதியடையிதே இல்லை.

On 3/13/2020 at 6:08 PM, nilmini said:

கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும்.

இது பெரியதொரு கேள்வியாகவே உள்ளது?
சிலர் தேங்காய் நல்லது என்கிறார்கள்.
சிலர் தேங்காய் ஊர் காலநிலைக்கு நல்லது.குளிரிடங்களுக்கு ஊடாது என்கிறார்கள்.
நல்லெண்ணையும் தேங்காய் எண்ணெயும் எடுத்தால் குளிருக்கு தேங்காய் எண்ணெய் உறைகிறதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒரு நாளைக்கு ஒரு தடவை என்றாலும் போட்டு அடையாவிட்டால் மனம் அமைதியடையிதே இல்லை.

இது பெரியதொரு கேள்வியாகவே உள்ளது?
சிலர் தேங்காய் நல்லது என்கிறார்கள்.
சிலர் தேங்காய் ஊர் காலநிலைக்கு நல்லது.குளிரிடங்களுக்கு ஊடாது என்கிறார்கள்.
நல்லெண்ணையும் தேங்காய் எண்ணெயும் எடுத்தால் குளிருக்கு தேங்காய் எண்ணெய் உறைகிறதே?

குளிருக்கு.... தேங்காய் எண்ணை  உறைந்தால் தான், 
கலப்படமில்லாத எண்ணை  என்று சொல்ல கேள்விப் பட்டுள்ளேன்.

மற்றும் தேங்காய் எண்ணையில் உள்ள கொழுப்பு...
உடலுக்கு தீங்கு விளைவிக்காத கொழுப்பு என எங்கோ வாசித்தேன்.
அது சரியா... என்று தெரியவில்லை, ஈழப் பிரியன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

வணக்கம் டாக்டர் நில்மினி!
நான் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக ஆங்கில மருத்துவ மாத்திரைகள் எடுத்து வருகின்றேன்.அதில் ஒவ்வொன்றிலும் ஏராளமான பக்கவிளைவுகள் இருக்கின்றன.
எனது கேள்வி என்னவென்றால் பக்க விளவுகள் இல்லாத மாத்திரைகள் இருக்கின்றனவா?
உதாரணத்திற்கு Rosuvastatin 5mg  .இந்த மாத்திரை மூலம் மூட்டுவலி,தசைப்பிடிப்பு போன்ற இன்னும் பல பக்கவிளைவுகள் வருகின்றன.இதை நிவர்த்தி செய்ய மாற்று வழிகள் இருக்கின்றனவா?

எல்லா செயற்கை மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் இருக்கு. மருந்துக்கு மருந்து அதன் விளைவுகள் மாறுபடும் . மற்றும் எடுக்கும் dose ஐ பொறுத்ததும் தான். Rosuvastatin பக்க விளைவுகள் அவ்வளவு இல்லை. மூட்டு, தசை நோக்கள்  தான் பொதுவானது. இந்த மருந்து ஈரலில் கொலெஸ்ட்ரோல் உருவாக்க தேவையான ஒரு நொதியத்தை தடுத்து கொலெஸ்ட்ரோல் கூடாமல் செயற்படுவதால் ஈரலை கொஞ்சம் பாதிக்கும். அனால் ஈரல் எமது உடற் பாகங்களுக்குள் மிகவும் வலிமையானது. பாதித்த பகுதிகள் தம்மை திருத்தி விடும். ஆனால் அதையும் மீறி நாம் ஈரலை பாவித்தால் ஈரல் பழுதாகி விடும். முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்னவென்றால் இந்த மருந்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுக்கலாமா என்று டொக்டரிடம் கேக்கவேணும். Alcohol , Nicotin  பொதுவாக எல்லா மருந்துகளோடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ( சிலர்  Alcohol உடன் மருந்தை எடுப்பார்கள். இது மிக ஆபத்தானது. ஈரலை பாதிக்கும் ) ஒவ்வொரு நாளும் prescrption இந்த படி மருந்தை எடுக்கவேண்டும் ( அளவு, சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா , capsule மருந்தை முழுதாக விழுங்க வேணும். ஒரு நாளைக்கு எடுக்க மறந்தால் அடுத்த நாளைக்கு double டோஸ் எடுக்க கூடாது. சில மருந்துகள் Fridge இல் வைக்க வேணும். சிலதுகள் இருட்டான இடத்தில நிறைய வெப்பம் இல்லாமல் இருக்கும் இடத்தில வைக்கவேணும். இவை எல்லாம் பார்ப்பதுக்கு சின்ன விடயங்களாக இருந்தாலும் மிகவும் முக்கியமான விடயங்கள்.

குறிப்பு: 16 மணி நேரம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் ஒரு கிழமைக்கு இரு நாட்கள் செய்தால் ஈரலுக்கு நல்லது, எல்லா berry வகை பழங்களை smothie அடித்து குடித்தல் , உணவில் organic மஞ்சள் சேர்த்தல் , Apple , Broccoli , இஞ்சி , கொத்தமல்லி இலை , புதினா (mint ) இலை எல்லாம் ஈரலை மற்றும் உடல் பாகங்கள் அனைத்தைம் detox பண்ணும். எனது அவதானிப்புப்படி மருந்துக்களை நான் மேலே சொன்னமாதிரி எடுத்துக்கொண்டு எமது உணவுப் பழக்கங்கள், சிறிது உடற் பயிற்சி, யோகாசனம், தியானம்  செய்தால் முக்கால்வாசி நோய்களும் குறையும். கேரளாவில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளும் நல்லது ( நிறைய fake ones  இருக்கு, தெரிந்தவர்கள் மூலமாக தான் போக வேணும்). யோகாசனம், தியானம் நிச்சயம் பலனளிக்கும் . விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து உள்ளார்கள்.

Edited by nilmini
text
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்முறையாக ஆட்டிறைச்சியில் கொழுப்பு குறைவு என்று எழுதும் ஒருவராகவே உங்களைப் பார்க்கிறேன்.
ஆட்டு இறைச்சியை வெட்டும் போதோ சாப்பிட்டு முடிந்த பின் கை கழுவும் போதோ சவர்க்காரம் போடாவிட்டால் கையிலுள்ள கொழுப்பு போகாது.
மற்றைய இறைச்சிகள் அப்படியல்ல.
வீட்டில் சமைப்பது அனேகமாக கோழி.எப்பவாவது உடனே அடித்த ஆட்டிறைச்சி.5-6 மாதத்துக்கொரு முறை பண்டி றிப் .மாடு வீட்டில் சமைப்பது கிடையாது.கடைத்தெருவுக்கு போனாலும் பெண்குலங்கள் சாப்பிட மாட்டார்கள்.
ஆட்டிறைச்சி சமைத்தால் ஒரு பிரச்சனை வீட்டில் எல்லோருமே இரண்டாம் தரம் சோறு போட்டு சாப்பிடுவோம்.
உங்கள் தகவல்களுக்கு நன்றி.

  70 வயது 50க்கு மேல தான் சார்.

நான் முன்பு போட்ட பதிவின்படி ஆட்டிறைச்சி தான் இருக்கும் இறைச்சிகளிலே சிறந்தது என்று பல ஆய்வுகள், survey  கல் மூலம் நிரூபித்து இருக்கிறார்கள். உலகில் 70% வீதமான Red-meat  Goat meat என கூறப்படும் ஆட்டிறைச்சியில் இருந்துதான் பெறப்படுகிறது. ஏன் Greasy ஆக இருக்கென்று தெரியவில்லை. குளிர் பிரதேசத்தில் இருக்கும் மிருகங்களுத்தான் கொழுப்பு அதிகமாக இருக்கும். Lamb எனப்படும்  செம்மறி ஆடு  கூடாது. அதில் நிறைய கூடாத கொழுப்பு LDL , Saturated fat எல்லாமே இருக்கு

Edited by nilmini
text
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

குளிருக்கு.... தேங்காய் எண்ணை  உறைந்தால் தான், 
கலப்படமில்லாத எண்ணை  என்று சொல்ல கேள்விப் பட்டுள்ளேன்.

மற்றும் தேங்காய் எண்ணையில் உள்ள கொழுப்பு...
உடலுக்கு தீங்கு விளைவிக்காத கொழுப்பு என எங்கோ வாசித்தேன்.
அது சரியா... என்று தெரியவில்லை, ஈழப் பிரியன்.

தேங்காய் எண்ணெய்  76 degrees F (24 C) பாகை வெப்பத்துக்கு கீழ் கட்டியாகி விடும். அதற்கு மேல் என்றால்தான் உருகும். நல்லெண்ணெய்  - 5  பாகைக்கு கீழ் தான் கட்டியாகும். அதற்கு மேல் என்றால் உருகி விடும்.  இதற்கு காரணம் அந்தந்த எண்ணையில் உள்ள பலவகை கொழுப்புகள் . இந்த இரண்டு எண்ணையும் உடலுக்கு மிகவும் நல்லது. இப்பதான் மேலை நாடுகள் தேங்காய் எண்ணெயின் நல்ல பயன்களை ஆய்வு மூலம் அறிகிறார்கள். சீனர்கள் கருக்கிய  எள்ளு எண்ணெய் ( sesame oil ) பாவிப்பதால் அதனை பற்றியும் இப்போது ஆய்வு அறிக்கைகள் உள்ளது. எமது நல்லெண்ணெய் பற்றி அவ்வளவாக ஒருவருக்கும் தெரியாது. தேங்காய் என்னை பாவிப்பதினால் உள்ள நன்மைகள்: HDL கொலஸ்டரோலை கூட்டும் , குருதியில் உள்ள சீனி அளவை கட்டுப்படுத்த உதவும், ஈரலை பாதுகாக்கும். தோலுக்கு முடிக்கு பூசினால் antibacterial, antifungal ஆக செயற்படும்.நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். முடி வளர்ச்சி , ஆரோக்கியத்தை கூடும். பற்களுக்கும்  எலும்புகளுக்கும் நல்லம், மூட்டு வலிகளுக்கு உதவும், பசியை குறைக்கும், காயங்கள் ஆற உதவும்.  இன்னும் பல நன்மையைகளே அன்றி தீங்கு இல்லை. 

Edited by nilmini
text
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நில்மினி ,
இந்த திரிகளை வாசித்தபின்னர் தான் நீங்கள் ஒரு மருத்துவர் என்று தெரிந்து கொண்டேன்.
இது மிகவும் பயனுள்ள திரி. தொடரட்டும் இந்த கருத்து பரிமாற்றம். 
பல நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
உங்கள் மருத்துவ துறையில் உங்கள் ஸ்பெஷாலிட்டி என்ன?  தெரிந்தால் அது சார்ந்த பல கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு  உங்களிடம் பதில் கேட்கலாம்? 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Sasi_varnam said:

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. நான் MD  இல்லை PhD . நான் மருத்துவ கல்லூரியில் படிப்பித்துக்கொண்டு research  உம் செய்கிறேன். Anatomy படிப்பிப்பதால் உடல்களை dissect பண்ண வேண்டும். அத்துடன் மற்ற மருத்துவர்களுடன் பலதும் விவாதிப்பதால் நிறைய விடயங்களை அறிகிறேன். அவற்றைத்தான் பதிவிடுகிறேன்நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பரவாயில்லை. பதில் தெரிந்தால் பதிவிடுவேன் 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி ,நேரம் எடுத்து பொறுமையாய் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நன்றிகள்..இந்த கேள்விக்கும் நேரம் இருக்கும் போது பதில் சொல்லுங்கள்;
காஸ்டிக் பிரச்சனை இருந்தால் உடம்பு ஊதுமா? என்ன வகையான உணவுகள் சாப்பிட வேண்டும்?
"மூசுறது" என்று சொல்வார்களே அது எதனால் வருகிறது?...நிறை கூடுவதாலா ? ,,,நன்றி 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

நீங்கள் பாஸ்டனிலா  இருக்கிறீர்கள்?
முன்பு ஒரு பதிவில் நீங்கள் ஹார்வார்ட் பற்றி எதோ பதிந்து இருந்தீர்கள் அதனால் கேட்க்கிறேன். 
எனது உறவுகார பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து அங்கு 
சிறுவர்களின் நித்திரை பற்றி எதோ ஆய்வு படிப்பை செய்துகொண்டு இருந்தார் 
பெப்ரவரி இறுதியில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் அவுஸ்திரேலியா சென்றுவிட்டார் 
ஏப்ரலில் முடிவதாகத்தான் இருந்தது மிகுதியை ஒன்லைனில் முடிக்கும் வசதி இருக்குமோ தெரியவில்லை 
சடுகதியாக சென்றுவிட்டார் ஏர்போட்டில் இருந்துதான் தான் திரும்பி செல்வதாக சொல்லியிருந்தார் மீண்டும் வருவாரோ தெரியவில்லை. நான் இன்னும் பேசவில்லை பேசினால்தான் தெரியும். 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். நான் அலபாமாவில் வசிக்கிறேன். ஆமாம் அவரர்கள் நாடுகள் தமது மக்களை திருப்பி வரும்படி அழைத்துக்கொண்டார்கள். ஆய்வு online இல் செய்வது சாத்தியமில்லை. அநேகமாக உங்கள் சிநேகிதி திரும்ப வந்துதான் முடிக்க நேரிடும். போற போக்கை பார்த்தால் அமெரிக்கா இந்த நோய்க்கு தயார் இல்லை போல் தெரிகிறது. ஆனால் வயது போனவர்களுக்கும் , நுரையீரல் பிரச்சனை அல்லது மற்ற வருத்தங்கள் உள்ளவர்களை தான் மிகவும் பாதிக்கும் போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2020 at 4:24 PM, ரதி said:

நில்மினி ,நேரம் எடுத்து பொறுமையாய் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நன்றிகள்..இந்த கேள்விக்கும் நேரம் இருக்கும் போது பதில் சொல்லுங்கள்;
காஸ்டிக் பிரச்சனை இருந்தால் உடம்பு ஊதுமா? என்ன வகையான உணவுகள் சாப்பிட வேண்டும்?
"மூசுறது" என்று சொல்வார்களே அது எதனால் வருகிறது?...நிறை கூடுவதாலா ? ,,,நன்றி 
 
பொதுவாக பீன்ஸ் வகைகள் குறிப்பாக பீஸ்(Peas) , பருப்பு வகைகள், ப்ரோக்கோலி , கோழிபிளவர் , Brussel sprouts, கோவா , Kale , Apple , பேரிச்சை. பசுப்பால், சீஸ் போன்ற பால் உற்பத்தி உணவுகள் உடலில் வாய்வு ஏற்படுத்துபவை. உப்பு கூடிய சிப்ஸ், டின் உணவுகளை குறைக்கவேணும்.எனக்கு பொதுவாக பயறு, கடலை பருப்பு ஒத்து வராது. அப்படி ஒவ்வொருவருக்கு மாறுபடும். இள  வயதில் பிரச்னை இல்லை. 35 வயதுக்கு மேல் தான் இவை தொடங்கும்.  நிறைய சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். நடக்க வேணும். வாழைப்பழம், kiwi பழம் , Pistachio , Avocado போன்றவை உடலில் உள்ள தேவை இல்லாத நீரை அகற்ற உதவும். பாப்பாப்பழம் , அஸ்பாரகஸ், தயிர், பெருஞ்சீரகம், இஞ்சி இவைகள் நீரையும், வாய்வை அகற்றவும் உதவும் . இல்லாவிடில் வயிறு ஊதும்.  மிக அரிதான நிலையில் கான்செர், ஈரல் பிரச்சினை, குடல் அழற்சி, Gluten intolerance , சிறுநீரக குறைபாடு, இதய நோய்  காரணமாக வயிறு இருக்கும் உடல் குழியில் நீர் தேங்கும் (ascites). 

மூசிறது பொதுவாக மூச்சுக்குழாயில் எதோ அடைப்பினால் வருவது. அல்ர்ஜி , அஸ்மா (இதுவும் இருவித அல்ர்ஜி தான்) இவையெல்லாம் wheezing .  இன்னுமொரு விதமான மூசல் வருவது சுவாசப்பைக்கு தேவையான அளவு காற்று கிடைக்காவிட்டால் கனமான மூச்சு எடுத்து தான் சுவாசப்பையை  நிரப்பலாம் (Heavy breath ). இதற்கெல்லாம் மருந்து உண்டு. ஆனால் நடை, சுவாச பயிற்சி, உடல் நிறை குறைத்தல் , முக்கியமாக யோகாசனம் செய்து மனதையும் அமைதியாக வைத்திருந்தால் மிகுந்த பலன் கிடைக்கும். மருந்து எடுக்கும் அளவை நல்லா குறைக்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கடலை,பருப்பு ,கச்சான் ஒத்து வாறேல்ல...சாப்பிட்டால் வயிறு ஊதி போகும் ...கேல் ,அப்பிள் சாப்பிட கூடாது என்பது ஆச்சரியமாய் உள்ளது ...மிக்க நன்றி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

எனக்கும் கடலை,பருப்பு ,கச்சான் ஒத்து வாறேல்ல...சாப்பிட்டால் வயிறு ஊதி போகும் ...கேல் ,அப்பிள் சாப்பிட கூடாது என்பது ஆச்சரியமாய் உள்ளது ...மிக்க நன்றி 

கேல் , ஆப்பிள் உடம்புக்கு நல்லம். சிலபேருக்கு வாய்வு. வாய்வு கூட உள்ள நாட்களில் என்ன சாப்பிட்டோம் என்று குறிப்பெழுதி வைத்து எந்தெந்தெ சாப்பாடுகள் எமக்கு ஒத்து வராது  என்று கண்டு பிடிக்கலாம்  . நிச்சயம் திரிபலா (Triphala once a  week ), நன்னாரி பவுடர், மற்றும் மூலிகை கோப்பி ( மல்லி, சீரகம், மிளகு, சுக்கு, ஓமம் , கருஞ்சீரகம் ) குடிக்கவும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nilmini said:

நன்றி ...திரிபலா ,நன்னாரி வேர் இங்கு வேண்டலாம் என்று நினைக்கிறேன் ...மீண்டும் மனமார்ந்த நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மருத்துவத்துறையில் முனைவராக இருந்தவாறு களஉறவுகளின் வினாக்களுக்கு விடை ஆலோசனை என்று அற்புதமாகச் செயலாற்றும் உங்களுக்கு எனது வணக்கத்தையும் வாழ்த்தையும் பதிவுசெய்கின்றேன்.
நில்மினி அவர்களே!

களத்தில் உங்கள் பணி தொடரட்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் எனக்கு மூலப்பிரச்சினை இருக்கு. இது வெளிமூலம். கிட்டதட்ட 5mm நீளத்துகு ரெண்டு முளைகள் வந்துவிட்டது.. அதைவிட வேறு சின்னசின்ன முளைகள். நான் ஆப்பரேசன் ஊருக்குபோய் செய்வம் எண்டு பிற்போட்டுகொண்டிருந்ததில் இப்படி ஆகிவிட்டது. ஏனெனில் ஆப்பரேசனின் பின் நீண்ட ரெஸ்ற் தேவை என்பதால் ஊரே எனது தெரிவு. எனக்கு என்ன சந்தேகம்கள் என்றால்

1)இதை நாள்பட விடுவதால் கான்சராக்க சந்தர்ப்பங்கள் உள்ளதா..?

2)இவ்வளவு முற்றிவிட்டதால் இதற்கு ஆப்பரேசந்தான் ஒரே தீர்வா..? மருந்துகள் மூலம் இல்லாமல் செய்யமுடியாதா.!?

நன்றி டாக்டர்..._

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2020 at 16:25, nilmini said:

தேங்காய் எண்ணெய்  76 degrees F (24 C) பாகை வெப்பத்துக்கு கீழ் கட்டியாகி விடும். அதற்கு மேல் என்றால்தான் உருகும். நல்லெண்ணெய்  - 5  பாகைக்கு கீழ் தான் கட்டியாகும். அதற்கு மேல் என்றால் உருகி விடும்.  இதற்கு காரணம் அந்தந்த எண்ணையில் உள்ள பலவகை கொழுப்புகள் . இந்த இரண்டு எண்ணையும் உடலுக்கு மிகவும் நல்லது. இப்பதான் மேலை நாடுகள் தேங்காய் எண்ணெயின் நல்ல பயன்களை ஆய்வு மூலம் அறிகிறார்கள். சீனர்கள் கருக்கிய  எள்ளு எண்ணெய் ( sesame oil ) பாவிப்பதால் அதனை பற்றியும் இப்போது ஆய்வு அறிக்கைகள் உள்ளது. எமது நல்லெண்ணெய் பற்றி அவ்வளவாக ஒருவருக்கும் தெரியாது. தேங்காய் என்னை பாவிப்பதினால் உள்ள நன்மைகள்: HDL கொலஸ்டரோலை கூட்டும் , குருதியில் உள்ள சீனி அளவை கட்டுப்படுத்த உதவும், ஈரலை பாதுகாக்கும். தோலுக்கு முடிக்கு பூசினால் antibacterial, antifungal ஆக செயற்படும்.நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். முடி வளர்ச்சி , ஆரோக்கியத்தை கூடும். பற்களுக்கும்  எலும்புகளுக்கும் நல்லம், மூட்டு வலிகளுக்கு உதவும், பசியை குறைக்கும், காயங்கள் ஆற உதவும்.  இன்னும் பல நன்மையைகளே அன்றி தீங்கு இல்லை. 

நல்லெண்ணெய், எள்ளு எண்ணெய் இரண்டும் ஒண்டு தானே...? 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.