Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vanangaamudi said:

குருக்கள் சொல்ல வந்தது ஒன்று சொன்னது வேறொன்று.

கோவிலை பூட்டி உள்ளே குருக்கள் பூஜைகள், ஆராதனைகள், நைவேத்தியங்கள், நித்திய கிரிகைகள் அனைத்தையும் செய்தால் யார் கேட்கப்போறார். வேண்டுமானால் பூஜை நிகழ்வுகள் அனைத்தையும் இணையம் மூலம் அடியார்களுக்கு ஒளிபரப்பலாம்.

கோவிலுக்கு உள்ளே வழிபாட்டுக்கு என்று மக்களை அனுமதிக்காத வரைக்கும் தொற்று நோய் பரவலை கட்டுபாட்டுக்குள் வைக்கமுடியும். பெரிய உற்சவ காலங்களில் கோவிலுக்கு வெளியே திருவிழாக்கள், நிகழ்வுகள் யாவும் நிறுத்தப்பட்டு மக்கள் தரிசனத்துக்காக திரளாக கூடுவதும் தவிர்க்கபட வேண்டும்.

மயூரன் என்ன சொல்ல வந்தார் என்பதை நீங்கள் எப்படி கண்டுணர்ந்தீர்கள்?

நாங்கள் அவர் சொல்ல “வந்தது “ என்ன என்பதை அறிய இன்னும் மூக்கு சாத்திரத்தில் தேறவில்லை. 

எனவேதான் அவர் சொன்னதை சிலாகிக்கிறோம்🤣

3 hours ago, ampanai said:

சரியாக புரிந்துள்ளீர்கள் என தோன்றுகின்றது. 

சிலரோ வழமை போல தமது விளக்கத்தை வைத்து விளாசுகிறார்கள். 

நாங்கள் மயூரன்  சொன்னதை வைத்து மட்டுமே எழுதுகிறோம்.

நீங்கள்தான் அவர் சொல்லாத, ஆனால் “சொல்ல வந்த” தை வைத்து விளாசுகிறீர்கள்.

Edited by goshan_che
குருக்கள் என்ற பதத்தை மயூரன் என்று மாற்றினேன்

  • Replies 63
  • Views 5.8k
  • Created
  • Last Reply

1: அனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2: தலதா மாளிகைக்கு வரும் உள்நாட்டு,வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,  விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தளதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

3. மறுஅறிவித்தல் வரை ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகைகளை இடைநிறுத்துமாறு சகல மக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

ஆனாலும், சகல இதர மதவழிபாடுகளும் நிச்சயம் நடந்தே தீரும்.  

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

1: அனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2: தலதா மாளிகைக்கு வரும் உள்நாட்டு,வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,  விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தளதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

3. மறுஅறிவித்தல் வரை ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகைகளை இடைநிறுத்துமாறு சகல மக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

ஆனாலும், சகல இதர மாதவழிபாடுகளும் நிச்சயம் நடந்தே தீரும்.  

இந்த நேரத்தில் எந்த மத அனுஸ்டானத்துக்கேனும் மக்களை கூடும் படி யார் கேட்டாலும் அவர்கள் அடி முட்டாள்களே.

வேறு மதத்தில் சில முட்டாள்கள் அப்படி செய்வதால் எமது மதத்தில் அப்படி செய்யும் முட்டாள்கள்களை கண்டிக்காமல் இருக்க முடியாது.

இதே போல் மயூரன் போன்ற அர்ச்சனை காசுக்காக மக்களை ஆபத்தில் தள்ளும் புல்லுருவிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவைக்கு பாராட்டுக்கள். 

நாட்டில் இளையவர்களை பற்றி பலரும் பலவித குற்றங்களை முன்வைக்கும்பொழுது அவற்றை விட இது பரவாயில்லை. 

பின் குறிப்பு : இந்த உலகில் இன்று மிரட்டி வரும் கொரோனவை பற்றி யாருக்கும் எதுவுமே முழுமையாக தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

ஏனென்றால் பூஜையில் முக்கியமான அம்சம்  அது தானே.

FA5-A6860-9-CC0-43-ED-BA65-C9-BF848347-F

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவைக்கு பாராட்டுக்கள். 

நாட்டில் இளையவர்களை பற்றி பலரும் பலவித குற்றங்களை முன்வைக்கும்பொழுது அவற்றை விட இது பரவாயில்லை. 

பின் குறிப்பு : இந்த உலகில் இன்று மிரட்டி வரும் கொரோனவை பற்றி யாருக்கும் எதுவுமே முழுமையாக தெரியாது. 

கொரோனாவை பற்றி அரைகுறையாக இதுவரை தெரிந்த மட்டில் அது ஒரு வைரஸ். மக்கள் கூடும் இடங்களில் அதிகம் தொற்றும். தென் கொரியாவில் ஒரு கிறீஸ்த பைத்தியக்காரக் கும்பலும், ஈரானில் முட்டாள் முல்லாக்களும் மக்களை பிராத்தனை என கூப்பிட்டு நூற்றுக்கணக்கில் பரலோகம் அனுப்பி விட்டதால் இந்த மயூரன் எனும் சமூகவிரோதி தன் தட்டில் விழும் சில்லறைக்காக மக்களை கூட்டி பூசை செய்யவேண்டும் என்று நேரே கைலாயம் அனுப்புவதை கண்டித்தே ஆக வேண்டும்.

மயூரனோடு ஓப்பிடுகையில் கஞ்சா, தண்ணி அடித்து விட்டு வேலியில் புரளும் குலசாருகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்களால் சமூக கேடு வந்தாலும் உயிராபத்து இல்லை.

ஹெரோயின் போன்ற A1 போதை விற்பனையாளருக்கு சமமானவர்கள் இப்படி தம் சுயலாபத்துக்காக மக்களை பலியிடும் கயவர்கள்.

அவர்களுக்கும் ஆலவட்டம் பிடித்து வரவேற்க நம்மில் ஆட்கள் உள்ளார்கள்.

Edited by goshan_che

14 hours ago, கிருபன் said:

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அனைவரும் அறிவோம். அதனால் ஒவ்வொருவரும் தாங்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டிய தேவைகளும் உள்ளது. அதற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ அவற்றை நிறுத்தவோ முடியாது. 

உண்மை. நீங்கள் மக்களையும் பாதுகாக்கும் கடமையையும் செய்து உங்கள் பணியை நாட்டின் மருத்துவ மற்றும் இதர சட்டம்களுக்கும் அமைய செய்வதில் தவறு இல்லை. கடமையும் கூட. 
 
கடவுளை காப்பாறும் மனிதர்கள்.

large.821AEB2E-FD87-443F-84A4-65FCE9351775.jpeg.9d123afa0a27668a5e5e7c703f41642e.jpeglarge.0C8D8F07-A631-4970-AA72-783AA94B50C2.jpeg.c9c14e947a94885f4dc1dd5ae06eec54.jpeglarge.5CD58DA1-C954-41A7-B950-7B0790E6772B.jpeg.8106afdcce31969159128915580b8b05.jpeg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

இல்லை கிருபன் இதை இணைத்ததற்கு காரணம் இப்படியான லூசுகள் மக்களை எப்படி முட்டாள. ஆக்குகின்றார்கள் என்பதை எடுத்துக்காட்ட. 

இது  உணரவுபூர்மவமான திரி அல்லவே! மயூரக்குருக்கள் என்ற லூசுத்தனபான ஒருவரின் மடைத்தனமான அறிக்கை தொடர்பான திரி தானே. இந்த திரிக்கு இப்படியான வேறொரு லூசுத்தனம் பொருந்தும் தானே 

இவ்வளவு உக்கிரமாக இருக்கும் நீங்கள்.....
ஒரு கதைக்கு.......
கடவுள் இருந்தால் எப்படி அவர் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, tulpen said:

கடவுளை காப்பாறும் மனிதர்கள்.

large.821AEB2E-FD87-443F-84A4-65FCE9351775.jpeg.9d123afa0a27668a5e5e7c703f41642e.jpeglarge.0C8D8F07-A631-4970-AA72-783AA94B50C2.jpeg.c9c14e947a94885f4dc1dd5ae06eec54.jpeglarge.5CD58DA1-C954-41A7-B950-7B0790E6772B.jpeg.8106afdcce31969159128915580b8b05.jpeg

******** ****** ...இங்கு தெளித்ததற்கு கடவுளுக்கு இல்லை ...இவற்றினை மனிசன் தொடும் போது அவர்களுக்கு பரவ கூடாது என்பதால் தான் ...அதிக மத வெறி பிடிச்சு திரிகின்ற ஆட்களுக்கும் ,உங்களுக்கும் கொஞ்சம் கூட  வித்தியாசம் இல்லை 

26 minutes ago, குமாரசாமி said:

இவ்வளவு உக்கிரமாக இருக்கும் நீங்கள்.....
ஒரு கதைக்கு.......
கடவுள் இருந்தால் எப்படி அவர் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

அப்படி கடவுள் இருந்தால் தனக்கு கோவில்கட்டி கும்பிடும் வேலையற்ற மடைச்சம்பிரணிகளுக்கு   “ஏய் வீணாய்ப்போனவங்களே போய் உங்க  வேலையை பாருங்க“ என்று நல்ல புத்தியைக்  கொடுக்க வேண்டும். தன் பெயரில் எண்ணற்ற மூடப்பழக்கங்களை சாத்திரம் என்ற சாக்கடையை மக்களுக்கு  பரப்பும் அயோக்கியர்களைகளுக்கு தகுந்த  தண்டனை கொடுக்க வேண்டும்.. இவளவ்வையும் செய்தாலே போதும். 

23 minutes ago, ரதி said:

******** ****** ...இங்கு தெளித்ததற்கு கடவுளுக்கு இல்லை ...இவற்றினை மனிசன் தொடும் போது அவர்களுக்கு பரவ கூடாது என்பதால் தான் .  

அது எனக்கு தெரியும் ரதி. அறிவியல் கண்டுபித்த கிருமி நாசினி உள்ள சக்திகூட கடவுளுக்கு இல்லை என்ற உண்மையை காட்டவே இதை இணைத்தேன். உங்களைப் போன்ற அறிவாளிகளுக்கு  அந்த உண்மை ஏற்கனவே தெரியும் என்பது எனக்கு தெரியும். ஆகவே உங்களுக்காக இணைக்கவில்லை ரதி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, tulpen said:

அப்படி கடவுள் இருந்தால் தனக்கு கோவில்கட்டி கும்பிடும் வேலையற்ற மடைச்சம்பிரணிகளுக்கு   “ஏய் வீணாய்ப்போனவங்களே போய் உங்க  வேலையை பாருங்க“ என்று நல்ல புத்தியைக்  கொடுக்க வேண்டும். தன் பெயரில் எண்ணற்ற மூடப்பழக்கங்களை சாத்திரம் என்ற சாக்கடையை மக்களுக்கு  பரப்பும் அயோக்கியர்களைகளுக்கு தகுந்த  தண்டனை கொடுக்க வேண்டும்.. இவளவ்வையும் செய்தாலே போதும். 

உலகில் மக்கள் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும்.
தண்ணீர் பஞ்சம் நீங்க வேண்டும்.
வரட்சி நீங்க வேண்டும்.
மழை பெய்ய வேண்டும்.
கலவரம் இல்லா உலகம் வேண்டும்.
சகல இனமும் சமமாக வாழ வேண்டும்.
சுற்றம் சூழல் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
மக்கள் எல்லோருக்கு நல்லது செய்யும் மனம் வேண்டும்...
என்றெல்லாம் கடவுளிடம் வேண்டுதல் வைக்க மாட்டீர்களா சார்?

8 minutes ago, குமாரசாமி said:

அதை எல்லாம் இப்போது நடப்பதைப் போலவே  மனிதன் பார்ததுக் கொள்வான்.  கடவுள் மனிதனை தொல்லை கொடுக்காமல் விட்டால் அதுவே போதும். அந்த வீணாப்போனவன் பெயரால்த் தால்  பல அக்கிரமங்கள் நடக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோன வைரஸ் நிலவரம் எப்படி செல்லும் என்று எவருக்கும் தெரியாது. அது சில மாதங்களில் கட்டுக்குள் வரலாம். வருசங்களும் ஆகலாம். முடிவில் யார் யார் உயிருடன் மிஞ்சுவார்கள். அது விட்டு செல்லும் அழிவுகள், பொருளாதார சரிவுகள் எதுவுமே எமக்கு தற்போது தெரியாது. 

சமூக தனிமைப்படுத்தல் அணுகுமுறையை ஒவ்வொருவரும் எவ்வளவு காலம் பொறுமையாக கடைப்பிடிப்பார்கள் என்பதும் தெரியாது. 

ஒரு கட்டத்தில் கொரோன வைரஸ் என்று பயந்து ஒதுங்குவதை விட  நாளாந்த வாழ்க்கையை வழமைபோல் வாழ்வதே பலரின் தெரிவாய் போகலாம். இந்நிலையில் கோயில்கள், விகாரைகளிற்கு வருகை வந்து  மனஆறுதல், மன தைரியம் பெற பலரும் முனையலாம்.

கோரோனோ வைரஸில் இருந்து தப்புதல் சரி, ஆனால் மறுபக்கம் இதனால் வரக்கூடிய உளவியல் நெருக்கடிகள், மன உளைசல்கள், மன வியாதிகள் பற்றியும் யோசிக்க வேண்டும். இவற்றை சமாளிக்க சமயஸ்தலங்கள் உதவக்கூடும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, tulpen said:

அதை எல்லாம் இப்போது நடப்பதைப் போலவே  மனிதன் பார்ததுக் கொள்வான்.  கடவுள் மனிதனை தொல்லை கொடுக்காமல் விட்டால் அதுவே போதும். அந்த வீணாப்போனவன் பெயரால்த் தால்  பல அக்கிரமங்கள் நடக்கின்றன. 

எப்படி எப்படி  மனிதன் பார்த்துக்கொள்வான்? 
 நடக்கும் மனித அழிவுகளை காணாமல் இருப்பதையா?
காடுகள் அழிவதை தடுக்க முடியாமல் திணறுவதையா?
விவசாயிகள் மரணிப்பதையா?
சுனாமி வருவதையா?
ஓசோன் சிதைவு ஏற்படுவதையா?
காற்று மண்டலம் மாசு படுவதையா?
 இருக்கும் பூமியையே பராமரிக்க முடியாத மனிதன் விண்வெளியில் கீரை வளர்த்து கீரைப்புட்டு அவிக்கப்போறானாம். 
அய்யொ....அய்யொ..😂 😂 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

காடுகள் அழிவு, விவசாயிகள் மரணம், சுனாமி வருகை
ஓசோன் சிதைவு காற்று மண்டலம் மாசு படுவது
கொறோனா மனித அழிவுகள் ஒன்றையுமே தடுக்கும் சக்தி இறைவனுக்கு துளியும் கிடையாது. மனிதனை பிடித்து கொள்ளும் வைரஸ் இறைவன் குடியிருக்கும் வழிபாட்டு தலங்களிலும் கம்பீரமாக குடிஇருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

இவை எல்லாம் கடவுள் இருக்கிறான் என்று ஒரு கூட்டத்தை நம்ப வைத்த்துவிட்டு 
அவன் இல்லை என்று தெளிவாக தெரிந்தவர்கள் சுகபோகம் காண 
செய்யும் மனித வக்கிரத்தால்தான் வந்தது 
இயற்கையை மனிதன்தான் அழிக்கிறான் 

மனித நடமாட்டம் மூன்று கிழமை குறைந்த உடனேயே 
சீனாவில் கற்று சுத்தமாகி இருக்கிறது 
இத்தாலி வெனிசு கால்வாய்க்கு டொல்பின் வந்து இருக்கிறது 

உலகில் வெடிக்கும் 97 வீத குண்டு கடவுளின் மதங்களின் பெயரால்தான் வெடிக்கிது 

God Bless America!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

காடுகள் அழிவு, விவசாயிகள் மரணம், சுனாமி வருகை
ஓசோன் சிதைவு காற்று மண்டலம் மாசு படுவது
கொறோனா மனித அழிவுகள் ஒன்றையுமே தடுக்கும் சக்தி இறைவனுக்கு துளியும் கிடையாது. மனிதனை பிடித்து கொள்ளும் வைரஸ் இறைவன் குடியிருக்கும் வழிபாட்டு தலங்களிலும் கம்பீரமாக குடிஇருக்கிறது. 

15 minutes ago, Maruthankerny said:

இவை எல்லாம் கடவுள் இருக்கிறான் என்று ஒரு கூட்டத்தை நம்ப வைத்த்துவிட்டு 
அவன் இல்லை என்று தெளிவாக தெரிந்தவர்கள் சுகபோகம் காண 
செய்யும் மனித வக்கிரத்தால்தான் வந்தது 
இயற்கையை மனிதன்தான் அழிக்கிறான் 

மனித நடமாட்டம் மூன்று கிழமை குறைந்த உடனேயே 
சீனாவில் கற்று சுத்தமாகி இருக்கிறது 
இத்தாலி வெனிசு கால்வாய்க்கு டொல்பின் வந்து இருக்கிறது 

உலகில் வெடிக்கும் 97 வீத குண்டு கடவுளின் மதங்களின் பெயரால்தான் வெடிக்கிது 

God Bless America!

முதலில் மனிதனால் ஏற்படும் அழிவுகளை தடுத்து நிறுத்த வழிகளை தேடுங்கள். அதன் பின் கடவுள் இருக்கா இல்லையா என்ற சிந்தனைய வளர்தெடுக்கலாம்.

5 hours ago, ரதி said:

******** ****** ...இங்கு தெளித்ததற்கு கடவுளுக்கு இல்லை ...இவற்றினை மனிசன் தொடும் போது அவர்களுக்கு பரவ கூடாது என்பதால் தான் ...அதிக மத வெறி பிடிச்சு திரிகின்ற ஆட்களுக்கும் ,உங்களுக்கும் கொஞ்சம் கூட  வித்தியாசம் இல்லை 

மாமா காஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைைப் பார்த்து ஆறுதல் அடையும்... ஆனால், அந்த நதியே காய்ஞ்சு போய்ட்டா - என் பால்ய வகுப்புத் தோழன் சொன்னான் இந்தப் படங்களைப் பார்த்த பிறகு...😎

Edited by kayshan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு உக்கிரமாக இருக்கும் நீங்கள்.....
ஒரு கதைக்கு.......
கடவுள் இருந்தால் எப்படி அவர் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

"எள்ளுக்குள் எரிக்கும் வாயுவை பதுக்கிய என்னை 
உன்னுள் காணாமல் கல்லுக்குள் கற்பனை செய்யும்வரை 
பிரச்சனை தீராதடா உன் பிரார்த்தனை பலிக்காடா"
                                                                         சைவம் 
ஆகவே, கடவுள் எனக்குள்ளே இருக்கிறார்.

நானே கடவுள், எனது அவதாரத்தை பாருங்கள், கடவுளை காண்பீர்கள்.:100_pray:

கொரோனா ஆபத்தை விடவும் ஆலைய வழிபாடு முக்கியம் என்று கருதுவது அவரவர் உரிமை. ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு கொரோனா தொற்றை வாங்கிக்கொண்டவர்களுக்கு ஆலயங்களும்  சர்வதேச இந்து பேரவையும் பொறுப்பு என்று கூறும் பட்சத்தில்  நோய் வந்தவுடன் அவர்களை ஆலயங்களிலேயே கொண்டுபோய் விடவேண்டியதுதான். எல்லோருக்கும் மருத்துவ வசதி சாத்தியம் இல்லை. அவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான் அல்லது அழைத்துக்கொள்வான். 

9 hours ago, Kavi arunasalam said:

FA5-A6860-9-CC0-43-ED-BA65-C9-BF848347-F

சூப்பர் கார்ட்டூன் 

அதுலையும் அந்த அங்கவஸ்திரம் சூப்பரோ சூப்பர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

காடுகள் அழிவு, விவசாயிகள் மரணம், சுனாமி வருகை
ஓசோன் சிதைவு காற்று மண்டலம் மாசு படுவது
கொறோனா மனித அழிவுகள் ஒன்றையுமே தடுக்கும் சக்தி இறைவனுக்கு துளியும் கிடையாது. மனிதனை பிடித்து கொள்ளும் வைரஸ் இறைவன் குடியிருக்கும் வழிபாட்டு தலங்களிலும் கம்பீரமாக குடிஇருக்கிறது. 

சுனாமி, திடீர் வெள்ளங்கள், மரணம் போன்றவைகளை மனிதனால் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாது.

வழிபாட்டுத் தலங்கள், வெறும் கட்டடங்கள் மாத்திரமே!

வழிபாட்டுத் தலங்களில் இறைவன் குடியிருப்பதில்லை.

வழிபாட்டுத் தலங்களில், இறைவன் குடியிருக்கிறான் என்று நம்புவது, மூட நம்பிக்கை.

6 hours ago, Maruthankerny said:

உலகில் வெடிக்கும் 97 வீத குண்டு கடவுளின் மதங்களின் பெயரால்தான் வெடிக்கிது 

இதற்கு நிறையவே ஆதாரங்கள் இன்றைய உலகில் உண்டு.

தற்போது நடைபெறும் மனித அழிவுளின் மையங்களான.......

இலங்கை, மியன்மார்-பௌத்தத்தின் அடிப்படையில் பிறந்த இனவாதம்
இந்தியா, பாகித்தான்- இந்து அதிதீவிரவாதம் இசுலாமிய அடிப்படைவாதம்
மத்திய கிழக்கு நாடுகள் (சிரியா, யேமன், ஈராக்,ஆப்கானித்தான்.......)-இசுலாமிய குழுக்களுக்கிடையிலான போர்

மத்திய மற்றும் வட ஆபிரிக்கா: இசுலாமிய கிறித்துவ மதவாத போர்

மேற்கூறிய பிரதேச பிரதேச மக்கள் 90 வீதத்திற்கு மேற்பட்டோர் தீவிர மதநம்பிக்கையுடையோர். ஆனால் அப்படியான மக்களே மிக கடுமையான துன்பங்களிலும் வறுமையிலும் தத்தலிப்போர்.

மாறாக 50 வீதத்திற்கு குறைவான மத நம்பிக்கையுடைய

மேற்கு ஐரோப்பா, வடஅமெரிக்கா, கிழக்கு ஆசியா (சீனா, யப்பான், தென்கொரியா) நாடுகள் மனித சமூகம் அமைதியாக வளமாக வாழக்கூடிய ஒரு சூழலினை உருவாக்கியுள்ளன.

மதம் மனித வாழ்வை எப்படி சீரழிக்கின்றது என்பதற்கான சிறியதொரு உதாரணம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.