Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமரூபிணியும் கற்சிற்பியும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                     
                             உ.

 காமரூபினியும்  கற்சிற்பியும்.


அயிரை மீன்கள் உருண்டு பிரண்டு 
நிரை நிரையாய் விளையாடும் ஆறு.
கரையினில் குறுமணல் மேடுதனில் 
தரையிலே இருந்தது தங்குமோர் குடில்.

கற்சிற்பியவன் கலங்கி நின்றான் --- கையில் 
சிற்றுளி கொண்டு செதுக்கி செப்பனிட்ட 
கற்சிற்பத்தை கண்ணால் வருடியபடி 
கண்ணில் நீர் ஒழுகியபடி.
மெய்தீண்டாது வான் பார்த்து சிந்தனையுடன்.

அலைபுரண்டோடும் ஆற்றின் 
கரைபுரண்டு தெறிக்கும் திவலையின் 
நுரைகளுடன் கையளைந்து 
நிரை கொங்கைகள் சதிராட 
நீந்திக் களிக்கும் மங்கையவள் 
ஈரேழு அகவையவள் இளமைப் 
பருவத்தின் தலைவாசல் தீண்டுவாள்.

சிற்றிடை தள்ளாட தண்டை கிண்கிணியென ஒலிக்க 
சின்ன பாதங்களால் தாவி கரையேறி --- அவள் 
எடைபோல் குறைந்த உடையுடன் 
குடில் நோக்கி வருகின்றாள் குமரி 
குங்குமம் இட்டறியாத பிறைநுதலாள்.  

வைத்த விழி வாங்காது 
கன்னிச் சிற்பத்தைப் பார்த்து 
நிற்கின்றான் கட்டிளங்காளை 
முகத்தில் கவலையின் ரேகை --- அதனால் 
அருகில் வந்த அதிசயத்தையும் கண்டிலன்.

கைவளை ஒலியெழுப்ப கடைக்கண் நோக்கியவனின் 
முழுக்கண்ணையும் ஈர்க்கின்றாள் மோகனப் புன்னகையால் 
முணுமுணுக்கின்றான் யார் நீ , உனக்கென்ன வேண்டும் 
வினா தொக்கி நிற்க விழி தொங்காத அழகை தொட்டு வர.

அற்புதம்: இந்த அழகிய சிலையை நீதான் செதுக்கினாயா 
சிற்பம் கேட்க சிற்பியும் தன்னிலை மீண்டான் 
ஆமாம், நான்தான் செதுக்கினேன் ஆயினும் 
அதில் ஒரு சிக்கல் நவின்று நின்றனன்.

நன்றாகத்தானே இருக்கின்றது பின் ஏன் இந்த விசனம் 
நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் நீ நன்றாகப் பார்த்தாயா 
கற்குவியலின் மேலே கடுகி ஏறினள் கன்னி 
சிற்பத்தின் முன்னால் ஒரு சிற்பமாய் நின்றனள் 

நெற்றி அழகாய் இருக்கிறது என்கிறாள் 
அவன் விழியருகே தன் இடையசைய 
ம்....நெற்றி வடிப்பது சுலபம் --- அதன் மேல் 
ஜடை இழைப்பது கடினம்.
ஆம் :கச்சிதமாய் பின்னியிருக்கிறாய் 

கண்கள் அழகாய் இருக்கின்றன 
ஆனால் கருமணிகள் தெரியவில்லை.
ஆம் பெண்ணே; 
ம்....ரூபிணி. காமரூபிணி என் நாமம்.
நல்லது ரூபிணி: சிலை பூர்த்தியடைந்த பின்தான் 
கண்கள் திறக்கும் கருவிழிகள் கதை பேசும்.

ஓ....அப்படியா....!
ஆம்....அப்படித்தான் சிற்பசாஸ்திர வேதம் சொல்கிறது....!

பவளஇதழ்களை பக்குவமாய் வடித்திருக்கிறாய் 
ஆம் ரூபிணி, அதைவிட உதட்டுக்குள் சிரிக்கும் 
பற்களை வடிப்பது சிரமம்.
உதடுகளின் செம்மை எப்படி சாத்தியம் சிற்பி. 
அவற்றில் சிலமூலிகைகள் வெற்றிலைச்சாறு 
சுண்ணாம்புடன் எனது உதிரமும் கலந்திருந்தது.

ஆமாமாம், சிலையின் சிரிப்பு கிறங்கடிக்குது.
தாடையும் கழுத்தும் காதுகளும் கன்னங்களும் 
அங்கலட்ஷணமாய் இருக்கின்றன சிற்பி.
உண்மைதான், அவைகள் சிறிது பிசகினாலும் 
அவலட்ஷணமாய் ஆகிவிடும். காதில் தோடும் 
கழுத்தில் நகைகளும் செதுக்க கஷ்டப்பட்டேன்.

நெடிய தோள்களும்  அபிநயிக்கும் கரங்களும் 
அதில் ஓடும் நரம்புகளும் அற்புதம் சிற்பி .
ஆம் ரூபிணி: அந்த கை வளையல்களை 
தட்டிப்பார் அசைந்து அசைந்து ஒலியெழுப்பும்.

அசைத்து பார்த்தவள் ஆச்சரியத்துடன் 
ஓமோம் அவைகள் கற்களா...!
இங்கு கற்களைத்தவிர வேறொன்றும் 
கிடையாது ரூபிணி.

தயங்குகிறாள் வந்தவள்.... என்ன ரூபிணி 
என்ன தயக்கம் சொல்லு....!
வந்து....பெண்ணின் கொங்கைகள் 
கொப்பளித்து நிற்கின்றனவே--- எனில் 
மிகக் காமம் கொண்டு செதுக்கினீரோ.
 
காமம் கொண்டல்ல, கவனம் சிதறாமல் 
அதை செப்பனிட்டேன். கொங்கைகளின் 
மேலால் நழுவும் துகிலை நீ பார்க்கவில்லையா 
அதை வடிக்க சில மாதங்கள் சென்றன தெரியுமா.
ஓ...ஆமாமாம், இது ஒரு விந்தைதான்.
இதை நீ எங்கு கற்றாய்....!

எங்குமில்லை இங்குதான். தேடல் உள்ளவனுக்கு 
இயற்கை கற்றுத்தரும்.
சொல்லியபடியே  அவளைப் பார்த்தவன் 
ஆங்கே கல்மேல் கிடந்த ஆடியை (கண்ணாடி)
எடுத்து அவள் முன் பிடிக்கிறான்.அதில் அவள் 
தன்னைப் பார்க்கிறாள். ரவிக்கையணியாத 
அவள் மேனியில் மார்பை மூடியபடி துகில் 
தோளில் சரிகிறது.ஈரத்துகிலினுடாக மார்பகங்கள் 
மதர்த்து நிற்கின்றன. சட்டென்று  கைகளால் 
புள்ளடியிட்டுக் கொள்கிறாள்.

நிலைமையை மாற்ற எண்ணி, மெலிந்த இடையும் 
நாபிச் சுழியும் நயமாகப் படைத்திருக்கிறாய் நீ ....!
ஆமாமாம், அந்த ஒட்டியாணம் பார்த்தாயா....!
பார்த்தேன், அதில் பூக்கள் எல்லாம் வெறும் 
மொட்டுகளாக இருக்கின்றன.மலரவில்லை.....!
நான் வடித்த கன்னியும் இன்னும் மலராத மொட்டுத்தான்....!


நாணத்துடன் தலை கவிழ்ந்தவளின் கவனத்தை 
பாதங்களும் சிலம்பும் ஈர்க்கின்றன.
ஆகா, பாதங்களும் அவற்றின் விரல்கள் நகங்கள் 
எல்லாம் அளவோடு அழகழகாய் இருக்கின்றன சிற்பி.
அப்படியே அந்தக் கொலுசை உரசிப்பார்.
சுட்டுவிரலால் எட்டித் தொட்டுப்பார்க்க கொலுசில் இருந்து 
கல்லினாலான மணிகள் கலகலக்கின்றன.....!

ஓ......கடவுளே, நீதான் எவ்வளவு திறமையானவன்.
கெண்டைக்கால் தொடை இடை பிருஷ்டம் எல்லாம் அந்தந்த 
அளவுப் பிரமானங்களில் செதுக்கியிருக்கிறாய். பின் ஏன் 
இந்த விசனம், கண்திறந்துவிட என்ன தயக்கம்......!

ஏறிநின்ற கல்லிலிருந்து ஒய்யாரமாய் சாய்ந்தபடி கேட்கிறாள்.
சிற்பம் இன்னும் பூர்த்தியாகவில்லை ரூபிணி.சிறு வேலை 
பாக்கியிருக்கிறது.அதை நீ பார்க்கவில்லையா....!
ம்....ம்.....பார்த்தேன், ஏன் உனக்கு அதில் அறிவில்லையா 
அல்லது அனுபவமில்லையா.....!
ஆம் உண்மைதான், எனக்கு அதில் அனுபவமில்லை,அறிவுக்காக 
பல ஏடுகளைப் புரட்டினேன், அவைகள் பூடகமாக தெரிவித்தனவே தவிர 
புதிரை விடுவிக்கவில்லை.பல மாதங்கள் கடந்து சென்று விட்டன.
இன்றும் முடியாவிட்டால்  இனி இந்தச் சிலையை உடைத்து விடுவது 
என்னும் முடிவில் உறுதியாய் இருக்கிறேன்.

அவள் சாய்ந்து நின்ற கல்லின் மேல் இருந்த சுத்தியலையும் 
உளியையும் எடுக்கிறான்.கொஞ்சம் பொறு சிற்பி,
அவள் அவன் கையைத் தடுக்க  உளி தவறி அவள் கால்விரல்மீது 
விழுகின்றது.இரத்தம் கொப்பளிக்க அவள் அம்மா என்றலறியபடி 
குந்திய வேகத்தில் காற்றிலே காய்ந்திருந்த துகில் சற்றே நழுவிய 
ஒரு நொடிப்பொழுதில் ....அந்த ஒருநொடியில் அவன் முகத்தில் பிரகாசம்.
அவளைப் பொருட்படுத்தாமல் உளியை எடுத்தவன் சிலையின் இடையில் 
ஒரு விரற்கிடை யளவில் துகில் மறை காயாக அல்குலை செதுக்க 
உளியில் இருந்த அவள் உதிரமும் அதில் இழைந்து சிலை பூரணமாகி 
கண் திறக்கிறது.
அவள் நினைவு வர திரும்பிப் பார்க்கிறான் அவள் எட்டச் செல்கிறாள்.
ரூபிணி நில் போகாதே ....!
என்ன இயற்கை உனக்கு கற்பித்து விட்டது போல.....!
ஆமாம் அறிவைத்தான் தந்திருக்கிறது.ஆனால்.....!
நின்று திரும்பிக் கேட்கிறாள், ஆனால் என்ன ....!
அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரை,நீ உயிர் குடுத்த சிலை உள்ளவரை,
 நிலமும் நீலவானம் உள்ளவரை......!

யாழ் 22 அகவைக்காக.....!
ஆக்கம்......!
சுவி......! 
 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா என்ன தலைவா இப்படி பிய்த்து உதறிவிட்டியள்.. பாலியாத்தில் கல்லுமணல் சளசளவென்று ஒலி எழுப்ப உதிர்ந்த விழுந்த சருகுகள் ஆற்றின் மேல் மிதந்தும் நெளிந்தும் வளைந்தும் அலைமகளோடு விளயாட ஆத்துநீர் ஆர்ப்பரித்து ஓடியதுபோல் தமிழ்மகளை உங்கள் கவிதையில் தவழவிட்டுள்ளீர்கள்.. 

யாழ்மேல் உங்கள் அன்பும் பிரியமும் உங்கள் கவிதைகளில் நிறைந்து வழியக்கண்டோம்..

ஊர் ஊராய் போய் அரச சபைகளில் யான் பாடிப்பெற்ற பொன்னையும் மணியையும் அத்தனையையும் உங்கள் தமிழ்கண்டு மகிழ்ந்து தந்துவிட்டேன் புலவரே.. 

நீர் வாழ்க.. நின் தமிழ் வாழ்க..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கற்பனை வளம் அண்ணா. தொடர்ந்தும் இப்படியான படைப்புகள் தாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ்களத்தில் பார்த்து பொறாமைப்படும்/பெருமைப்படும் ஒரே ஒருவர் என்றால் அது சுவியர் மட்டும் தான்.
எழுத்துக்களும் எழுத்து நடைகளும் பிரமிக்க வைக்கும்.
சில இடங்களில் கருத்து சொல்லக்கூட அருகதை எனக்கில்லை என்ற உணர்வுடன் விலக்கிச் செல்லவேண்டி இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அருமையான கவிதை, லக் டவுணில் கற்பனை ஆறக ஒடுகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பியின் வடிவில்  சிறகுவிரித்த  சுவியவர்களுக்குப் பாராட்டுகள். கவிதை ரசபானமாய்  நகர்ந்து  ரதிபாகமாய் ..................  

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா,தங்கச்சி உள்ளே வரலாமா 😙

 

  • கருத்துக்கள உறவுகள்

.சுவி உங்கள் கற்பனை வளம் பிரமிக்க வைப்பதோடு உங்கள் எழுத்தைப் பார்த்து பொறாமைப்படவும் வைக்கிறது. மிக அபாரமான கற்பனை. பாராட்டுக்கள்.

எப்படி பாராட்டுவது  என்று தெரியல. பாராட்டுவதற்கு வார்த்தைகளும் வரவில்லை.

கவிதை நயமாக நளினமாக இலகுவாக புரியக்கூடியதாக இருந்தது.

வாழ்த்துக்கள் சுவி அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா ,
முதலில் உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், கவிதை படைக்கும் திறனுக்கும் ஓர் அஷ்டாங்க நமஸ்காரம்.
உங்கள் கவிதை படைப்பை வாசிக்கும் போது , சாண்டில்யனின் எதோ ஒரு புத்தகத்திக்குள் வந்து விட்டோமா என்று உணரும் அளவிட்கு வர்ணனைகள், சொல் நயம், கட்பனை வளம் .... அபாரம்!!!
சில எனக்கு தெரியாத புதிய தமிழ் சொற்களையும்  காணுகிறேன். 
இந்தகைய படைப்பாளிகள் யாழ் களத்தில் வளம் வருவது எமக்கெல்லாம் பெருமை.
இப்படி தொடர்ந்தும் எழுதுங்கள் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம்.  

பின் குறிப்பு:
நீங்கள் கவிதையில் வர்ணித்த அந்த பதினாலு வயது ....கண்முன்னே வந்து என்னை தடுமாற வைக்கிறது.  நானும் அந்த சிற்பியாய் அவள் அழகில் தொலைந்தே போகிறேன்... 🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 07:32, suvy said:

சிற்றிடை தள்ளாட தண்டை கிண்கிணியென ஒலிக்க 
சின்ன பாதங்களால் தாவி கரையேறி --- அவள் 
எடைபோல் குறைந்த உடையுடன் 
குடில் நோக்கி வருகின்றாள் குமரி 
குங்குமம் இட்டறியாத பிறைநுதலாள்.  

எப்படி உங்களால் இப்படி?
அருமை அருமை சுவி.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2020 at 00:32, suvy said:

காமம் கொண்டல்ல, கவனம் சிதறாமல் 
அதை செப்பனிட்டேன். கொங்கைகளின் 
மேலால் நழுவும் துகிலை நீ பார்க்கவில்லையா 
அதை வடிக்க சில மாதங்கள் சென்றன தெரியுமா.
ஓ...ஆமாமாம், இது ஒரு விந்தைதான்.
இதை நீ எங்கு கற்றாய்....!

அருமையானன் கவிதை ...தமிழ் கொஞ்சி விளையாடுகின்றது .....எனக்கு சாதாரண பேச்சு தமிழே எழுத வருதில்லை .....இலக்கண இலக்கிய ...வள்ளுவன் காலத்து தமிழ் எல்லாம் புகுந்து விளையாடுகின்றது உங்களது கவிதையில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 18:10, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவா என்ன தலைவா இப்படி பிய்த்து உதறிவிட்டியள்.. பாலியாத்தில் கல்லுமணல் சளசளவென்று ஒலி எழுப்ப உதிர்ந்த விழுந்த சருகுகள் ஆற்றின் மேல் மிதந்தும் நெளிந்தும் வளைந்தும் அலைமகளோடு விளயாட ஆத்துநீர் ஆர்ப்பரித்து ஓடியதுபோல் தமிழ்மகளை உங்கள் கவிதையில் தவழவிட்டுள்ளீர்கள்.. 

யாழ்மேல் உங்கள் அன்பும் பிரியமும் உங்கள் கவிதைகளில் நிறைந்து வழியக்கண்டோம்..

ஊர் ஊராய் போய் அரச சபைகளில் யான் பாடிப்பெற்ற பொன்னையும் மணியையும் அத்தனையையும் உங்கள் தமிழ்கண்டு மகிழ்ந்து தந்துவிட்டேன் புலவரே.. 

நீர் வாழ்க.. நின் தமிழ் வாழ்க..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....!   👍

On 8/4/2020 at 00:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையான கற்பனை வளம் அண்ணா. தொடர்ந்தும் இப்படியான படைப்புகள் தாருங்கள்.

இருந்திருந்திட்டு இப்படியெல்லாம் வரும். இனியும் வரலாம்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.....!  😁

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 16:32, suvy said:

அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரை,நீ உயிர் குடுத்த சிலை உள்ளவரை,
 நிலமும் நீலவானம் உள்ளவரை......!

3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம் அவர்களே என் உயிர் உள்ளவரை உங்களையும் மறக்க முடியாது நண்பரே நீங்கள் மென்மேலும் சிறப்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.......!  🌹

Oiseaux de fleurs Fonds D'écran Animé iPhone - Télécharger sur l ...

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ...யாழ்களத்தில் கவிஞர்கள் மட்டுமல்ல ஓவியர்களும் இருக்கிறாா்கள். பாராட்டுக்கள் கவி அருணாச்சலம்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kavi arunasalam said:

3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரைஇநீ உயிர் குடுத்த சிலை உள்ளவரைஇ
நிலமும் நீலவானம் உள்ளவரை......!

இந்த கவிதை வரிகளுக்கு இதை விட இன்னும் சிறப்பாக ஒரு ஓவியம் 
சாத்தியமா?
அருமை கவி அருணாச்சலம். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

என் உயிர் உள்ளவரை உங்களையும் மறக்க முடியாது நண்பரே

உயிர் இல்லாத போது நினைக்கவே முடியாது. நல்லது Suvy உங்கள் அன்புக்கு நன்றி.

உங்கள் கவிதைக்கு நான் இரண்டு படங்கள் வரைந்தேன். முதலாவதில் அவ்வளவாக திருப்தி கிடைக்காததால் இரண்டாவதை வரைந்துஇங்கே பதிந்திருந்தேன். நான் கிறுக்கிய முதலாவது படத்தை இங்கே இணைக்கிறேன்  கவிதைக்குப் பொருந்தாவிட்டால் கவலை வேண்டாம். படத்துக்கு ஏற்ப இன்னொரு கவிதையை எழுதி விடுங்களேன்

567-ECFE1-4534-4-ED1-A797-88-B296084-FAD

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பல கவி சுவிக்கு.சுவி தந்த கவிக்கு.கவித்துவம் கவிமுழுக்க கரைபுரண்டு ஓடுகிறது.தொடருங்கள் ஆவலாய் உள்ளேன் அள்ளிப்பருக.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

சுவியின் கவிதைக்கு உயிர் கொடுத்த ஓவியம், அருமை👍👍👏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.