Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊரடங்கின் பசிப்பிணியை எதிர்க்கும் களப்போராளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நண்பர்களே 
ஏற்கனவே குறிப்பிட்டது போல , கடந்த மாதம் முதல் எனது நண்பன் மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய தன்னார்வ குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக உலர் உணவுப்பொதிகளை விநியோகித்து வருகிறோம், இவர்கள் அனைவரும் நீர்ப்பாசனத்துறையை சார்ந்தவர்கள் ,இவர்களுடன் நீர்ப்பாசனத்துறை பொறியாளரும் எங்களுக்கு முற்றுமுழுதான ஆதரவையும் உதவியையும் அனுசரணையையும் வழங்குகின்றார் , இவர்களின் நல்  மனதால் எங்களுக்கு ஊரடங்கிட்கு நடுவிலும் முழு வீச்சுடன் பொதிகளை விநியோகம் செய்ய முடிகிறது. 
எங்களது செயற்பாடு தொடர்பான சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன், 
மேலதிக செயற்பாடுகளும் தொடர்ந்து இங்கே இணைக்கப்படும்.
ஏற்கனவே யாழ் கள உறவுகள் இருவர் அவர்களது ஆதரவு கரத்தை எமக்கு நீட்டியுள்ளனர் (நிழலி மற்றும் உடையார் )
இவற்றில் உடையாரின் பணஉதவி ஏற்கனவே கிடைக்கப்பட்டு குழுவிற்கு பரிமாற்றப்பட்டுவிட்டது.
இந்த உறவுகளுக்கு பயனாளிகள்  சார்பிலும் குழுவின் சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

spacer.png

 spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

எங்களது குழு 
spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

பொதி விநியோகிப்பின் போது 

spacer.png

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

 இவை நான் தத்தெடுத்திருக்கும் இருபது குடும்பங்களுக்கான பொதிகள் 

spacer.pngspacer.pngspacer.pngspacer.png

வெற்றிகரமாக இரண்டாவது மாத விநியோகமும் நடந்து முடிந்து விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமாக இருக்கிறது அக்னி.
உங்கள் பாதுகாப்பிலும் கவனமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள்  உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும்.

இந்த ஊரடங்கு  நிலையிலும் அவர்கள் செய்யும் உதவி மிகப்பெரியது.

அவர்களையும் கவனமாக இருக்க செல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அரிதான சேவைகளை செய்கிறீர்கள் பாராட்டுக்கள் அக்னீ & நண்பர்கள்.....!   💐

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி நம்ம பக்கமா அல்லது மடக்களப்பு பக்கமா ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மகிழ்ச்சி நம்ம பக்கமா அல்லது மடக்களப்பு பக்கமா ? 

இருபது குடும்பங்கள் நம்ம பக்கம் 
மிகுதி முழுதும்  மட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

இருபது குடும்பங்கள் நம்ம பக்கம் 
மிகுதி முழுதும்  மட்டு 

மட்டக்களப்பு மேற்கு பகுதிகள் படுவான்கரை  பக்கம் செல்லட்டும் உணவுகள் ஆற்றுத்தொழில் செய்பவர்கள் மிகவும் கஸ்ரப்படுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினியஷ்த்ரா....   பாதிக்கப் பட்ட  மக்களுக்கு,  மிகவும் பெரிய அளவில்....  
உதவிகளை செய்துள்ளமையை பார்க்க மகிழ்ச்சியாக...  உள்ளது.
உங்களது நண்பர்களுக்கும்... பாராட்டுக்கள்.

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களுக்கு வணக்கம் 
மீண்டும் எங்களது குழு களத்தில் , இம்முறை வித்தியாசமாக எங்களுக்கு வாழைச்சேனை  போலீஸ் பிரிவிலிருந்து விண்ணப்பம் விடுக்கப்பட்டது, அதாகப்பட்டது கொரோனாவின் இரண்டாவது அலை பரவல்  சூடுபிடிக்கும் முன்பே சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட வாழைச்சேனை கருவாக்கேணியை சேர்ந்த  20 குடும்பங்களுக்கு ஒரு நேர சாப்பாட்டிற்கு வழிவகை செய்யமுடியுமா என்று, குழுவினர் உடனடியாக ஒன்று சேர்ந்து கலந்துரையாடி அந்த 20 குடும்பங்களுக்கும் ஒரு வாரத்திற்கு தேவையான (ஒன்று ரூபா 2500 பெறுமதியான) உணவுப்பொதிகளை விநியோகிப்பதாக தீர்மானித்து  உடனடியாக களத்தில் இறங்கினர், இன்று வெற்றிகரமாக அந்த பொதிகளை அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று எமது குழு விநியோகித்தது, 
இவற்றில் முக்கியமாக @நிழலி அவர்கள் எமக்கு உதவிய தொகை வரவு வைக்கப்பட்டு  நிலுவையில் இருந்ததால் அதனை முற்று முழுதாகவும் மிகுதியை எங்கள் சேமிப்பிலிருந்தும் எடுத்து உபயோகப்படுத்தியுள்ளோம், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் எங்கள் குழு சார்பிலும் நிழலி அண்ணைக்கு  உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், 
அத்துடன் பொலிஸ்  பிரிவால் விண்ணப்பம் விடுக்கும் அளவுக்கு எங்களது வீச்சு  மக்களை சென்றடைந்துள்ளமையையிட்டு குழு பெருமிதம் அடைகிறது, நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து செல்வதால் எங்கள் குழு மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர், மீண்டும் ஒரு இற்றைப்படுத்தலுடன் உங்களை சந்திக்கிறேன்  

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்படுத்திய குடும்பங்கள் எனில் உங்கள் பாதுகாப்பையும் கவனத்தில் எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர் .. 👍

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற சேவைகள், உங்களின் சேவை அளப்பரியது........!  💐

  • கருத்துக்கள உறவுகள்

அக்னியஷ்த்ரா....  போலீஸ் பிரிவிலிருந்து, குறிப்பிட்ட இடத்திற்கு...  
உதவி கோரி விண்ணப்பம், வந்த தகவலை அறிந்து, பெருமையாக இருந்தது.
அதனை.. உடனே நிறைவேற்றிய, உங்கள்  குழுவினருக்கு பாராட்டுக்கள். 🙏

எல்லோரும் சொன்னது போல், உங்கள் பாதுகாப்பும்.. மிக முக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்னி.

ஆனால், இப்படி கொடுக்கும் போது படத்தை  தூரமாக எடுப்பதை கருத்தில் கொள்ளவும்.   

என்னைப்  பொறுத்தவரையில் கொடுப்பவரின் அடையாளமும் தெரியாமல் இருப்பதே உதவி.  

அதற்காக, உங்களின் தன்னார்வ  குழுவாக அடையாளப்படுத்துவதை தவிர்க்குமாறு சொல்லவில்லை.  

இது ஓர் வேண்டுகோள் மாத்திரமே.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாகும்போது அது ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு அல்லாடும் மக்களை இன்னும் அதிகம் பாதிக்கும். 

உதவி தேவையானவர்களுக்கு காலத்துக்கேற்ற சேவையை உடனே செய்வதற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

நண்பர்களுக்கு வணக்கம் 
மீண்டும் எங்களது குழு களத்தில் , இம்முறை வித்தியாசமாக எங்களுக்கு வாழைச்சேனை  போலீஸ் பிரிவிலிருந்து விண்ணப்பம் விடுக்கப்பட்டது, அதாகப்பட்டது கொரோனாவின் இரண்டாவது அலை பரவல்  சூடுபிடிக்கும் முன்பே சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட வாழைச்சேனை கருவாக்கேணியை சேர்ந்த  20 குடும்பங்களுக்கு ஒரு நேர சாப்பாட்டிற்கு வழிவகை செய்யமுடியுமா என்று, குழுவினர் உடனடியாக ஒன்று சேர்ந்து கலந்துரையாடி அந்த 20 குடும்பங்களுக்கும் ஒரு வாரத்திற்கு தேவையான (ஒன்று ரூபா 2500 பெறுமதியான) உணவுப்பொதிகளை விநியோகிப்பதாக தீர்மானித்து  உடனடியாக களத்தில் இறங்கினர், இன்று வெற்றிகரமாக அந்த பொதிகளை அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று எமது குழு விநியோகித்தது, 
இவற்றில் முக்கியமாக @நிழலி அவர்கள் எமக்கு உதவிய தொகை வரவு வைக்கப்பட்டு  நிலுவையில் இருந்ததால் அதனை முற்று முழுதாகவும் மிகுதியை எங்கள் சேமிப்பிலிருந்தும் எடுத்து உபயோகப்படுத்தியுள்ளோம், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் எங்கள் குழு சார்பிலும் நிழலி அண்ணைக்கு  உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், 
அத்துடன் பொலிஸ்  பிரிவால் விண்ணப்பம் விடுக்கும் அளவுக்கு எங்களது வீச்சு  மக்களை சென்றடைந்துள்ளமையையிட்டு குழு பெருமிதம் அடைகிறது, நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து செல்வதால் எங்கள் குழு மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர், மீண்டும் ஒரு இற்றைப்படுத்தலுடன் உங்களை சந்திக்கிறேன்  
 
அக்னி! உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இப்படியான சேவைகளை செய்வதற்கு முதலில் மனம் வேண்டும். அதற்கு பின் நேரம் வேண்டும். அத்துடன் நண்பர்களின் ஒத்தாசைகளும் வேண்டும். நீங்கள் உதவி செய்த மக்களின் ஆசி உங்களைச்சேரும்.உங்களுடன் உறுதுணையாக நின்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

இதற்கு மூலகாரணமான நிழலிக்கும் அந்த மக்களின் ஆசி கிடைக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்னிக்கும் குழுவினருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
கூடவே நிழலிக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும், அக்னிக்கும் & குழுவினருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

காலத்திற்கேற்ற சேவைகள், உங்களின் சேவை அளப்பரியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு,வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்த,  மற்றும் பாதுகாப்பை பற்றி அக்கறையுடன் ஆலோசனை கூறிய யாழ் நல்லுள்ளங்களுக்கு நன்றி 
இதிலுள்ள அநேக குடும்பங்கள் (ஒருகுடும்பத்தை (நீல கேற்) தவிர -அதனாலேயே குழு வாசலில் பொதிகளை வைத்துவிட்டு அவர்களை எடுத்துக்கொள்ள சொன்னது  ) சுயதனிமைப்படுத்தலுக்கான  கால இடைவெளியை பூரணப்படுத்தியவர்கள், இலகுவாக அரசாங்கம் பதினான்கு ,இருபத்தியொரு நாட்கள் சுயதனிமைப்படுத்தல் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறது, தினக்கூலியை நம்பி வாழும் இந்த மக்கள் தங்களது உடமைகளை கூட அடகு வைத்து அல்லது விற்று உண்ணுமளவுக்கு தள்ளப்படுகிறார்கள், அதை விட கொடூரம் தனிமைப்படுத்தல் முடிந்ததும் தங்களது பழைய வாழ்க்கைக்கு திரும்ப அவர்கள் படும்துயரம் குறைந்தபட்சம் உடனடியாக ஒரு தினக்கூலிக்கான தொழிலை அமைத்துக்கொள்ள முடியாமல் ,சேமிப்பெல்லாம் கரைந்து அடுத்தவர்களிடம் கையேந்தவேண்டிய அவல நிலை, 

9 hours ago, Kadancha said:

நன்றி அக்னி.

ஆனால், இப்படி கொடுக்கும் போது படத்தை  தூரமாக எடுப்பதை கருத்தில் கொள்ளவும்.   

என்னைப்  பொறுத்தவரையில் கொடுப்பவரின் அடையாளமும் தெரியாமல் இருப்பதே உதவி.  

அதற்காக, உங்களின் தன்னார்வ  குழுவாக அடையாளப்படுத்துவதை தவிர்க்குமாறு சொல்லவில்லை.  

இது ஓர் வேண்டுகோள் மாத்திரமே.

Kadancha 
இந்த புகைப்படங்களில் பொருளுதவி,பணஉதவி செய்த எவரும் இல்லை, பண மற்றும் பொருளுதவி செய்பவர்களை விட காலம் நேரம் பார்க்காது  சரீர, வாகன  உதவிகளை  செய்யும் இந்த நல்லுள்ளங்களை எங்களது குழு என்றும் கண்ணியப்படுத்தும், அப்படி உடலுழைப்பை வழங்கிய உள்ளங்கள் தான்  இவர்கள் 
இது அவர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்று நம்புகிறோம்    

8 hours ago, குமாரசாமி said:

 இப்படியான சேவைகளை செய்வதற்கு முதலில் மனம் வேண்டும். அதற்கு பின் நேரம் வேண்டும். அத்துடன் நண்பர்களின் ஒத்தாசைகளும் வேண்டும்.

நிச்சயமாக.

இவற்றை ஒருங்கிணைத்த உள்ளங்களுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.