Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோணேஸ்வரம் கோயில் அல்ல அது கோகண்ண விகாரையே என்கிறார் மேதானந்த தேரர்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோணேஸ்வரம் கோயில் அல்ல அது கோகண்ண விகாரையே என்கிறார் மேதானந்த தேரர்.!

Konesh2.jpg

திருகோணமலையில் அமைந்துள்ள பாடல்பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம். ஆனால், அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்படவேண்டும். இதனைச் செய்தாலே போதும்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவ மேதானந்த தேரர் தெரிவித்தார்.

இராவணன் என்ற மன்னன் இலங்கையை ஆண்டான் என்பது வெறும் கட்டுக்கதை என்று சில தினங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த எல்லாவ மேதானந்த தேரர், தற்போது இந்துக்களின் புனித தலமான கோணேஸ்வரம், கோகண்ண விகாரை என்று புதிய கதை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொல்பொருள் ஆய்வு நடத்தவேண்டிய 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. வனப்பகுதிகளிலும் தொல்பொருள்கள் உள்ளன. இவை தேசிய மரபுரிமைகளாகும். அனைத்து விடயங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். எனவே, செயலணியின் பணி எப்போது முடிவடையும் என்று உறுதியாக கூறமுடியாது. ஆனால், கூடியவிரைவில் செய்துமுடிக்குமாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்பொருள் என்பதை தேசிய மரபுரிமையாகக்கருதி அனைவரும் பாதுகாக்கவேண்டும். குறிப்பாக பொலனறுவையிலுள்ள சிவன்கோவில் எமக்குரியது அல்லாவிட்டாலும் அதனை நாம் பாதுகாக்கின்றோம்.

கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது. இதற்காக நாம் கோவிலை இடித்து விகாரை கட்டமாட்டோம். ஆனால், அப்பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்பட வேண்டும். இதனைச் செய்தாலே போதும்.

எமது செயலணி தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளால் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/07/07/14153/

டிஸ்கி :

ராமேஸ்வர கோயில் அல்ல ராமன்ண விகாரையே அது...என்டு சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை போல் கிடக்கு..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கேட்டால்.. உவர் இதயத்தாக்கு காரணமாக உயிர் விடக் கூடும்.

மொட்டைகளுக்காக ஆரம்பித்த யுத்தமே மாவிலாறில் ஆரம்பித்தது என்பதை நாம் மறக்கக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எல்லாத்துக்கும் எங்கடை கூத்தமைப்பு தலையாட்டும் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோணேஸ்வரம் கோயில் அல்ல அது கோகண்ண விகாரையே என்கிறார் மேதானந்த தேரர்.!

எடுக்கிறதை எடுங்கோ மறந்திடாமல் பொட்டியை தாங்கோ.

27 minutes ago, குமாரசாமி said:

எல்லாத்துக்கும் எங்கடை கூத்தமைப்பு தலையாட்டும் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு😎

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இராவணன் என்ற மன்னன் இலங்கையை ஆண்டான் என்பது வெறும் கட்டுக்கதை என்று சில தினங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த எல்லாவ மேதானந்த தேரர், தற்போது இந்துக்களின் புனித தலமான கோணேஸ்வரம், கோகண்ண விகாரை என்று புதிய கதை வெளியிட்டுள்ளார்.

இலங்கைல பௌத்தமே ஒரு கட்டுக்கதை தான்!

  • கருத்துக்கள உறவுகள்

கோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

அநுராதபுர  யுகத்தில் கட்டப்பட்ட  கோகண்ண விகாரை மீதே திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. என்பதற்கான ஆதாரங்கள்  தம்மிடம் உள்ளதாக தெரிவித்த தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின்  உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர்,  யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம்  சபுமல் குமார என்ற சிங்கள இளவரசரினால் கட்டப்பட்டது. என்பதற்காக வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களை  உரிமை கோரமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

 இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ada.jpg

 கிழக்கு மாகாணத்தில்  உள்ள  தொல்பொருள்  மரபுரிமைகள் தொடர்பில்  ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி குறித்து  தமிழ்- முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய தேவை கிடையாது. செயலணியின் நோக்கம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல. என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்துக் கொள்ள  வேண்டும்.

சிதைவடைந்தள்ள தொல்பொருள் மரபுரிமையினை  அடையாளப்படுத்தி அதனை  பாதுகாப்பதே எமது பிரதான நோக்கம். பௌத்த மத மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது செயலணியின்  நோக்கமல்ல  ,பிற  இனங்களின்  மதம் தொடர்பான  உரிமைகளும் செயலணியின்  ஊடாக பாதுகாக்கப்படும்.  ஆய்வு  நடவடிக்கைகளின்போது கிடைக்கப் பெறும் தரவுகளை கொண்டு வெளியிடும் செய்திகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

வரலாற்று  புகழ்மிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் கோகண்ண  விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. என்பதற்கான  தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. அநுராதபுர  கால யுகத்தில் கோகண்ண விகாரை நிர்மாணிக்கப்பட்டது. போர்த்துக்கேயரது படையெடுப்பினால்  அந்த விகாரை அழிக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அவ்விடத்தில் திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையை அறிந்துக் கொள்வது அவசியமாகும்.

    மேலும், கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில்      சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது. என்பதையும்  அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள்  நல்லூர் ஆலயத்துக்கு உரிமை கோரவில்லை. இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில்  நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இரு தரப்பு மதவழிப்பாடுகள், மற்றும் கட்டிடக்கலை சிற்பங்கள் ஊடாக  உறுதியாகுகின்றன.

  ஒரு மதத்தின் உரிமைகள் செயலணியினால் எவ்வித  பாதிப்பும் ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/85419

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரம் இந்து பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்

   by : Litharsan

Angajan-Ramanathan.jpg

திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் பற்றிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து மக்களின் வரலாற்றுத் தொன்மையான வழிபாட்டுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தை கோகர்ண விகாரை என தேரர் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த பெருமான் தேவாரப் பதிகம் பாடிய திருத்தலமாக திருக்கோணேஸ்ரம் விளங்குகிறது.

மேலும், இலங்கையை ஆண்ட தமிழ் மன்னான இராவணன் சிவபூஜை செய்த திருத்தலமாகவும் குறித்த ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

சுமார் 2000 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழர்களின் தொல்பொருள் ஆய்வுகளின் புகலிடமாக விளங்குகின்ற வெடுக்குநாறி, செம்மலை நீராவியடி, அரிசி மலை, திரியாய் கண்ணியா, மத்தலவள முதலான 15 பிரதேசங்களை உள்ளடக்கி கதிர்காமம் வரை தமிழர்களின் புராதான அகழ்வாராய்சி பகுதிகள் நீண்டுகொண்டே செல்கின்றன.

இந்நிலையில் தமிழர்களின் புராதன பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதாகக் கூறி பௌத்த வரலாற்று சிதைவுகளை உட்சேர்க்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை வருத்தம் அளிக்ககூடியதாக உள்ளது.

ஆகவே, மனிதனின் செம்மையான வாழ்க்கை தத்துவங்களையும் வழிபாட்டு முறைகளையும் கற்றுக்கொடுக்கும் மதங்களின் பெயரால் இன்னோர் மதத்தவர் வருத்தும் வகையில் குறித்த தேரர் நடந்துகொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/திருக்கோணேஸ்வரம்-இந்து-ப/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

கோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

அநுராதபுர  யுகத்தில் கட்டப்பட்ட  கோகண்ண விகாரை மீதே திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. என்பதற்கான ஆதாரங்கள்  தம்மிடம் உள்ளதாக தெரிவித்த தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின்  உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர்,  யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம்  சபுமல் குமார என்ற சிங்கள இளவரசரினால் கட்டப்பட்டது. என்பதற்காக வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களை  உரிமை கோரமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

 இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ada.jpg

 கிழக்கு மாகாணத்தில்  உள்ள  தொல்பொருள்  மரபுரிமைகள் தொடர்பில்  ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி குறித்து  தமிழ்- முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய தேவை கிடையாது. செயலணியின் நோக்கம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல. என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்துக் கொள்ள  வேண்டும்.

சிதைவடைந்தள்ள தொல்பொருள் மரபுரிமையினை  அடையாளப்படுத்தி அதனை  பாதுகாப்பதே எமது பிரதான நோக்கம். பௌத்த மத மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது செயலணியின்  நோக்கமல்ல  ,பிற  இனங்களின்  மதம் தொடர்பான  உரிமைகளும் செயலணியின்  ஊடாக பாதுகாக்கப்படும்.  ஆய்வு  நடவடிக்கைகளின்போது கிடைக்கப் பெறும் தரவுகளை கொண்டு வெளியிடும் செய்திகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

வரலாற்று  புகழ்மிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் கோகண்ண  விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. என்பதற்கான  தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. அநுராதபுர  கால யுகத்தில் கோகண்ண விகாரை நிர்மாணிக்கப்பட்டது. போர்த்துக்கேயரது படையெடுப்பினால்  அந்த விகாரை அழிக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அவ்விடத்தில் திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையை அறிந்துக் கொள்வது அவசியமாகும்.

    மேலும், கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில்      சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது. என்பதையும்  அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள்  நல்லூர் ஆலயத்துக்கு உரிமை கோரவில்லை. இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில்  நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இரு தரப்பு மதவழிப்பாடுகள், மற்றும் கட்டிடக்கலை சிற்பங்கள் ஊடாக  உறுதியாகுகின்றன.

  ஒரு மதத்தின் உரிமைகள் செயலணியினால் எவ்வித  பாதிப்பும் ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/85419

BJP யின் விஸ்வ கிந்து பரிசத்தை அப்படியே கொப்பி அடிப்பதால் விரைவில் பாபர் மசூதியின் நிலை திருக் கோணேச்சரத்திற்கும் உண்டாகலாம். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்த ஐந்து சிவாலயங்களில், மாத்தறையில் இருந்த தொண்டீஸ்வரம் கோவிலை போர்த்துக்கேயர்கள் இடித்து அழித்தார்கள். அங்கிருந்த தமிழர்கள், இனம்மாறி சிங்களவர்கள் ஆகினர். இனக்கலவரம் காரணமாக மிகுதியாக இருந்தவர்கள் இடம் பெயர, அந்த இடத்தில் பாரிய புத்த விகாரை ஒன்று அமைந்து விட்டது. உப்புல் வண்ண தெய்யோ என்ற பெயரில் (நீல வண்ண கடவுள்) ஒரு விஸ்ணுவுக்கான சிறு கட்டிடம் உள்ளது. 

இப்போது, திருகோணமலைக்கு அலுவல் நடக்குது.

https://www.learnhinduism.org/ta/ஈழத்தின்-பஞ்சதலங்கள்/

English

https://www.learnhinduism.org/pancha-easwarams-of-eelam-sri-lanka/

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

இலங்கையில் இருந்த ஐந்து சிவாலயங்களில், மாத்தறையில் இருந்த தொண்டீஸ்வரம் கோவிலை போர்த்துக்கேயர்கள் இடித்து அழித்தார்கள். அங்கிருந்த தமிழர்கள், இனம்மாறி சிங்களவர்கள் ஆகினர். இனக்கலவரம் காரணமாக மிகுதியாக இருந்தவர்கள் இடம் பெயர, அந்த இடத்தில் பாரிய புத்த விகாரை ஒன்று அமைந்து விட்டது. உப்புல் வண்ண தெய்யோ என்ற பெயரில் (நீல வண்ண கடவுள்) ஒரு விஸ்ணுவுக்கான சிறு கட்டிடம் உள்ளது. 

இப்போது, திருகோணமலைக்கு அலுவல் நடக்குது.

https://www.learnhinduism.org/ta/ஈழத்தின்-பஞ்சதலங்கள்/

அவன் தன்ர காரியத்தில கண்ணாயிருக்கிறான். நாங்கள் சுமந்திரன் கிறீத்துவன் என்றும் இல்லை இல்லை அவர் அமெரிக்கன்ர ஆள் என்றும் ஆள் மாறி ஆள் பிடுங்குப்படுவோம்.  

தலையெழுத்து ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

அவன் தன்ர காரியத்தில கண்ணாயிருக்கிறான். நாங்கள் சுமந்திரன் கிறீத்துவன் என்றும் இல்லை இல்லை அவர் அமெரிக்கன்ர ஆள் என்றும் ஆள் மாறி ஆள் பிடுங்குப்படுவோம்.  

தலையெழுத்து

தமிழர்கள் சன நா(ய்)யக பன்மைத்துவம் மிக்கவர்கள் என்பதால் ,இந்த கோகண்ண விகாரை கூற்றை ஏற்றுக்கொண்டு கோணேஸ்வரத்தில் ஒரு குட்டி விகாரை கட்டவும் ஆதரவு வழங்கவேண்டும், அதற்கும் ஒரு படி மேலே போய் நல்லூரில் நல்லண்ண விகாரை கட்டவும் ஆதரவு வழங்கினால் உலக நாடுகள் தமிழர்களின் பன்மைத்துவத்தை பார்த்து நெக்குருகி தமது நாடுகளில் சிலை வைப்பார்கள் என்கிறேன் நான் ....நீங்கள் என்ன சொல்லுறிகள் ...?   

  • கருத்துக்கள உறவுகள்

Nallur-Kandhaswamy-Kovil.jpg

நல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது என்கிறார் மேதானந்த தேரர்- ஆதாரம் இருக்கிறதாம்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவராலேயே கட்டப்பட்டதாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுர காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே திருகோணமலை, திருக்கோணேச்சர ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த அவர், இவற்றுக்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

என்றபோதும் தாம் வரலாற்றுப் புகழ்மிக்க தமிழர்களின் ஆலயங்களை உரிமை கோரமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் செயலணியின் நோக்கம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிதைவடைந்துள்ள தொல்பொருள் மரபுரிமையினை அடையாளப்படுத்தி அதனை பாதுகாப்பதே தமது பிரதான நோக்கம் என்றும்  பௌத்த மத மரபுரிமைகளை மட்டுமன்றி பிற இனங்களின் மதம் தொடர்பான உரிமைகளும் செயலணியின் ஊடாக பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஆய்வு நடவடிக்கைகளின்போது கிடைக்கப்பெறும் தரவுகளைக் கொண்டு அறிவிக்கப்படும் செய்திகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ள மேதானந்த தேரர், வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் கோகண்ண விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கான தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போர்த்துக்கேயரின் படையெடுப்பினால் அந்த விகாரை அழிக்கப்பட்டது என்றும் பிற்பட்ட காலத்தில் அவ்விடத்தில் திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் உண்மையை அறிந்துகொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைவிட, கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

இதற்காக தாங்கள் நல்லூர் ஆலயத்தை உரிமை கோரவில்லை எனவும் இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இரு தரப்பு மத வழிபாடுகள் மற்றும் கட்டடக்கலை ஊடாக உறுதியாகின்றன என்றும் எல்லாவெல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/நல்லூர்-கோயில்-சிங்கள-இள/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகனையும் விட்டு வைக்காத மேதானந்த தேரரின் பிதற்றல்!

InShot_20200709_103325732-960x462.jpg?189db0&189db0

திருக்கோணேஸ்வரம் ஆலயம் அல்ல அது கோகண்ண விகாரையே” மற்றும் “இலங்கையை இராவணன் ஆண்டது கட்டுக்கதை” போன்ற சர்ச்சைக் கருத்துகளை “சுடர் ஒளி” பத்திரிகைக்கு தெரிவித்த எல்லாவல மேதானந்த தேரர் இப்போது யாழ்ப்பாணத்தின் நல்லூர் முருகன் ஆலயத்தையும் விட்டு வைக்கவில்லை.

“நல்லூர் முருகன் ஆலயம் சபுமல்குமார என்ற சிங்கள இளவரசனால் கட்டப்பட்டது. ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களை நாம் உரிமை கோரப் போவதில்லை” என்று ஆதாரங்கள் இல்லாமல் வீராப்பு பேசியுள்ளார் எல்லாவல மேதானந்த தேரர்.

https://newuthayan.com/நல்லூர்-முருகனையும்-ஆதார/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நல்லூர் முருகன் ஆலயம் சபுமல்குமார என்ற சிங்கள இளவரசனால் கட்டப்பட்டது.

புத்தரே அறிவுரை சொன்னா உண்டு..👍

IMG-20200709-145801.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பதிலாக நாம் பல கோவில்களை புலம் பெயர் நாடுகளில் கட்ட வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, சுவைப்பிரியன் said:

இதுக்கு பதிலாக நாம் பல கோவில்களை புலம் பெயர் நாடுகளில் கட்ட வேணும்.

நக்கலாக்கும்......:grin:

இலங்கையை பொறுத்தவரை இவையெல்லாம் தமிழர் அடையாளங்கள்.சிங்கள பேரினவாதாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் வாழும் இடங்களை இப்படியான நடவடிக்கைகள் மூலம் எம்மினத்தை அழித்து வருகின்றது      .ஆனால் இங்கு யாழ்களத்தில் சைவசமயத்தை/சமய வழிபாட்டை தூற்றிக்கொண்டிருக்கின்றார்கள்..இவர்களும் ஒரு வகையில் தமிழின அழிப்பிற்கு துணை போகின்றவர்கள் என  கருதவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, சுவைப்பிரியன் said:

இதுக்கு பதிலாக நாம் பல கோவில்களை புலம் பெயர் நாடுகளில் கட்ட வேணும்.

சிறிலங்காவில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என  கேட்கிறீர்கள். புலம் பெயர் நாடுகளில் கோவில்கள் கட்ட வேண்டும் என்றும் சொல்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சிறிலங்காவில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என  கேட்கிறீர்கள். புலம் பெயர் நாடுகளில் கோவில்கள் கட்ட வேண்டும் என்றும் சொல்கிறீர்கள்.

நுனா தாயகத்தில் எமது இருப்பையும் உறுதிப்படுதடத வேணும் என்ட நோக்கில்  எதிர் மறையாக எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்

InShot_20200709_185759754-960x581.jpg?189db0&189db0

“கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம்களின் இடமாகவே இது இருந்திருக்கும்” என்று உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

“திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் 40 அடியில் இராவணனின் சமாதி ஒன்று உண்டு என்றும் அதற்கருகில் அவன் தாயின் சமாதி உண்டு என்றும் இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இராவணன் வெட்டும் உள்ளது. பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2500 ஆண்டுகளே ஆகிறது. இந்த 40 அடி சமாதி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனுடையதாய் தான் இருக்க வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் ஆதாமின் வாரிசுகள் வாழ்ந்துள்ளனர்.

அதன் பிறகே விஜயன் இங்கு வந்து குவேனியை கரம் பிடித்தான். ஆதலால் குவேனி பௌத்த மதத்தைச் சேர்ந்தவள் இல்லை. அவள் இந்து அல்லது முஸ்லிமாக இருக்கலாம். என்னுடைய ஆய்வின்படி, அவர்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகளாவர். அதேவேளை ராமன் என்பவர் ரஹ்மான், சீதா என்பவர் சய்யிதா ஆகும். மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறியிருக்கலாம். ராமர் கூட எம் இறைதூதராக இருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம். இராவணன் தவறுகள் செய்த ஒரு முஸ்லிம். அவனை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமன். இதுவே எனது வாதம்” என்றார்.

https://newuthayan.com/இராவணன்-முஸ்லிம்-மன்னன்/?fbclid=IwAR05FBqEbTIpIxNytaM-WpYF39VpeEpYEUXP0kkzGeV_EQMrti5l97U17sg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, colomban said:

அதேவேளை ராமன் என்பவர் ரஹ்மான், சீதா என்பவர் சய்யிதா ஆகும். மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறியிருக்கலாம். ராமர் கூட எம் இறைதூதராக இருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம். இராவணன் தவறுகள் செய்த ஒரு முஸ்லிம். அவனை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமன்

tenor.gif

ஆத்தாடி.. எல்லோரும் 10 அடி தள்ளி நிற்பது நலம்..👌

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, colomban said:

InShot_20200709_185759754-960x581.jpg?189db0&189db0

“கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம்களின் இடமாகவே இது இருந்திருக்கும்” என்று உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

“திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் 40 அடியில் இராவணனின் சமாதி ஒன்று உண்டு என்றும் அதற்கருகில் அவன் தாயின் சமாதி உண்டு என்றும் இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இராவணன் வெட்டும் உள்ளது. பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2500 ஆண்டுகளே ஆகிறது. இந்த 40 அடி சமாதி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனுடையதாய் தான் இருக்க வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் ஆதாமின் வாரிசுகள் வாழ்ந்துள்ளனர்.

அதன் பிறகே விஜயன் இங்கு வந்து குவேனியை கரம் பிடித்தான். ஆதலால் குவேனி பௌத்த மதத்தைச் சேர்ந்தவள் இல்லை. அவள் இந்து அல்லது முஸ்லிமாக இருக்கலாம். என்னுடைய ஆய்வின்படி, அவர்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகளாவர். அதேவேளை ராமன் என்பவர் ரஹ்மான், சீதா என்பவர் சய்யிதா ஆகும். மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறியிருக்கலாம். ராமர் கூட எம் இறைதூதராக இருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம். இராவணன் தவறுகள் செய்த ஒரு முஸ்லிம். அவனை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமன். இதுவே எனது வாதம்” என்றார்.

https://newuthayan.com/இராவணன்-முஸ்லிம்-மன்னன்/?fbclid=IwAR05FBqEbTIpIxNytaM-WpYF39VpeEpYEUXP0kkzGeV_EQMrti5l97U17sg

அய்யய்யோ, அவர் இன்னும் கிளம்பலையா.....

இவர் தானே, லிஸ்டில இல்லாத புது விசயம் சொன்னார்.. கப்பலில் போய் கொண்டிருந்த அமீர் பாய், இறங்கி ஓடி போய், கக்கா, இருந்ததால, அமீர்+கக்கா = அமெரிக்கா என்று பெயர் வந்தது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வர ஆலயம் மீது பௌத்த தோர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இரா.துரைரெட்ணம் கோரிக்கை

July 9, 2020

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-300x182.jpg

திருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற கரியாலயத்தில் இன்று இடம்பெற் ஊடகவியளாளர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போரதீவுப்பற்று வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை, மண்முனைமேற்கு வவுணதீவு, ஏறாவூர்பற்று செங்கலடி, கோறளைப்பற்று தெற்குகிரான், கோறளைப்பற்று வடக்கு வாகரை இப் பிரதேசசெயலகப் பிரிவுகளிலுள்ள மாகாண நீர்பாசனம், மத்திய நீர்பாசனம், வனவலத் திணைக்களக்காணிகளிலும், மகாவலிக்குரிய காணிகளிலும், தனியார் காணிகளிலும், ஏனைய வாவிகளிலும், வாய்க்கால்களிலும் மேட்டுநிலம் போன்ற சில இடங்களில் மணல் அகழப்படுவதால் இயற்கை சூழலுக்கும், விவசாயச் செய்கைக்கும், பொதுமக்கள் வாழுகின்ற கிராமங்களுக்கு வெள்ள அபாயமும் ஏற்படக் கூடியவாறு ஒரு சில அமைப்புக்களின் தனி நபர்களும், ஒரு சில அதிகாரிகளும், ஒரு சிலரின் அரசியல் பின்னணியுடனும் அனுமதி வழங்கப் படுகின்றன. இதனால் ஒரு சில தனிநபர் ஆதாயத்தைப் பெற்று முழு மாவட்டமும் பெரும் அபாயத்தை சந்திக்கப்போகின்றது

பிரதமரால் குறிப்பிட்ட தினங்களாக கூறப்படும் ஜனாதிபதியின் கீழுள்ள ஆணைக்குழுக்களை மாற்றுவது தொடர்பான கருத்து சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழர்களின் கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயகத் தன்மையையும், நல்லாட்சி முறையையும் இல்லாது ஓழித்து விடும். ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்வதன் ஊடாக ஒரு தனி நபரின் இராணுவ ரீதியான ஆட்சி முறையை மேலோங்கச் செய்யும்.

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள சில அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரச நிருவாகத்தின் கீழ் செயற்படுகின்ற அமைப்புக்களின் ஒருசிலரின் செயல்பாடுகளும் ஒரு சில வேட்பாளர்களின் செயற்பாடுகளும் அரசதுறை சார்ந்த வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதை திணைக்களத் தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்றால் மட்டுமே பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் எழுப்புவதோடு பௌத்த ஆதிக்கத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட மக்களை காப்பாற்ற முடியும். எனவே அதிக ஆசனங்களை பெறக்கூடியவாறு உள்ள வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து வாக்குகளைப் பிரிப்பதற்காக போட்டிபோடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென அறைகூவல் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/53239

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நக்கலாக்கும்......:grin:

இலங்கையை பொறுத்தவரை இவையெல்லாம் தமிழர் அடையாளங்கள்.சிங்கள பேரினவாதாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் வாழும் இடங்களை இப்படியான நடவடிக்கைகள் மூலம் எம்மினத்தை அழித்து வருகின்றது      .ஆனால் இங்கு யாழ்களத்தில் சைவசமயத்தை/சமய வழிபாட்டை தூற்றிக்கொண்டிருக்கின்றார்கள்..இவர்களும் ஒரு வகையில் தமிழின அழிப்பிற்கு துணை போகின்றவர்கள் என  கருதவேண்டும்.

இலங்கையில் தமிழ் இனம் அழிந்துகொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் அதே நிலைமை. மலேசியா சிங்கப்பூரில் தமிழர் அடிமைகள். பர்மாவில் தமிழர் இல்லை. தென்னாவிரிக்காவில் இல்லை. மொறீசியஸில் இல்லை. ஈழத்திலிருந்து புலம் பெயர் தமிழர் தங்கள் அடையாளத்தை இன்னும் 25 வருடங்களில் தொலைத்துவிடும். 🤥

ஆக இன்னும் 50 வருடங்களில் அடையாளமில்லா முகங்களாக தமிழர் தெருக்களில் அலைவர். ☹️

இதைத்தான் பாரதி மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்றானா 😭

  • கருத்துக்கள உறவுகள்

koneshwaram.jpg

விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன – அகில இலங்கை சைவ மகா சபை

திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்படும் முன்னரே இங்கு சிவ வழிபாடு இருந்தது என்பதையும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் குடியேறி சிங்கள இனத்தை தோற்றுவித்த விஜயன் வருகையின் போதே திருக்கோணேச்சரம் உள்ளிட்ட பஞ்ச ஈச்சரங்கள் இங்கு இருந்ததாகவும் அங்கு சென்று விஜயன் வழிபட்டதாகவும் மகாவம்சமே ஒப்புக்கொள்கின்றது என்பதையும் சைவ மகா சபை வெளிப்படுத்தியுள்ளது.

மூத்த சிவனின் மகனாகிய தேவநம்பியதீசன் கி.மு 243 இல் பௌத்த மதத்திற்கு மதம் மாறும் வரை இலங்கை முழுவதும் சைவ சமயமே பின்பற்றபட்டது என்ற வரலாற்று உண்மையை எல்லாவெல மேதானந்த தேரர் மனங்கொள்வது நல்லது எனவும் சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

கிழக்கு தொல்லியல் செயலணிக்கு நியமிக்கப்பட்ட மேதானந்த தேரர் சமீப காலமாக சைவ ஆலயங்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலிறுக்கும் வகையில் அகில இலங்கை சைவ மகா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/விஜயன்-இலங்கைக்கு-வரும்ப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.