Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து..! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து..! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..

sampanthan-mavai-sumanthiran-38.jpg

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரனுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதிரடிப்படையினரின் பாதுகாப்பு தற்போதைய அரசாங்கத்திலும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புக் காலத்தில், சுமந்திரனுக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு அமையவும் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஆறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அற்கு மேலதிகமாக பத்து விசேட அதிரடிப்படையினர்

சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தற்போது பதினாறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக சுமந்திரன் கலந்துகொள்ளும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில்

பாதுகாப்புப் பிரிவினரின் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதால் அப்பிரதேசமே பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது.இதுகுறித்துப் பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

https://jaffnazone.com/news/19206

  • கருத்துக்கள உறவுகள்

16 அதிரடிப்படையினர் பாதுகாக்கும் அளவிற்கு அப்படி என்னதான் சுமந்திரனிடம் இருக்கிறது....??  தமிழுக்குத் தெரியாதது சிங்களத்துக்கு தெரிந்திருக்கிறதே. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

16 அதிரடிப்படையினர் பாதுகாக்கும் அளவிற்கு அப்படி என்னதான் சுமந்திரனிடம் இருக்கிறது....??  தமிழுக்குத் தெரியாதது சிங்களத்துக்கு தெரிந்திருக்கிறதே. 🤔

ராயபச்ச அன்ட் ரணில் கொம்பனி திரைமறைவுத்திட்டத்தோடு நகர்கிறது. அதனை நகர்த்த சுமந்திரன் போன்றவர் தேவை. அதுவரை பாதுகாப்பார்கள்.

பொன். இராமநாதனின் தொடர்ச்சியே....!
முரளிதரனை கேப்பீயை இறுதியாக சுமந்திரனையும் பாதுகாத்தல் என்பது சிங்களத்தைப் பாதுகாக்கும் தமிழர்களை பாதுகாத்தல் கடன்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nochchi said:

ராயபச்ச அன்ட் ரணில் கொம்பனி திரைமறைவுத்திட்டத்தோடு நகர்கிறது. அதனை நகர்த்த சுமந்திரன் போன்றவர் தேவை. அதுவரை பாதுகாப்பார்கள்.

பொன். இராமநாதனின் தொடர்ச்சியே....!
முரளிதரனை கேப்பீயை இறுதியாக சுமந்திரனையும் பாதுகாத்தல் என்பது சிங்களத்தைப் பாதுகாக்கும் தமிழர்களை பாதுகாத்தல் கடன்தானே. 

என்ன பாடுபட்டாவது சுமத்திரனை  பதவிக்கு கொண்டுவரனும் என்பதில் தீவிரமாக உள்ளனர் இனவாத சிங்களவர்கள் சிறிதரன் கள்ளவோட்டு சம்பந்தமாக உளறி அதுக்கும் ஆப்பு குடுத்துவிட்டார் இந்த முறை கொரனோ  பிரச்சனையில் சமூக ஊடகங்களில் மற்றவர்கள் போல் தானும் வெளிக்கிட்டார் போதாக்குறைக்கு தன்  தம்பிமாரையும் அங்கு கொண்டுவர நடந்த சமூக ஊடக கலவரத்தில் அவரின் முடிவு அவருக்கே தெரிந்துவிட்டது படுதோல்வி என்று உடனே ஐந்து நாட்களில் 80 க்கு மேட்பட்ட கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்து கடைசியாக நெல்லியடி கூட்டத்தில் காய்ச்சல் பிடித்த முகத்துடன் தனக்கு ஓட்டு போடவேண்டாம் என்று முனகுவதை பார்க்க எனக்கு மேலேயுள்ள மாவீரர்கள் சிரிப்பது போல் இருந்தது .தமிழ் தேசியத்தை சிதைக்க முட்படும்  எவருமே நல்லா  வாழ்ந்ததா சரித்திரம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

நாடகம் நன்றாக போகின்றது; கிளைமக்ஸ் - சுமத்திரன் அமோக வெற்றி; 

சுமத்திரனை ஆட்டுவிக்கும் பின்புலம் நன்றாக திட்டமிட்டு வேலை செய்கின்றது 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

வரணிக்குள் ஓடித்திரிய ஒரு ஆமட் ட்றக்கும் கொடுத்தால் அவருக்கு  எவ்வளவு வசதியாக இருக்கும்.

சிவாஜிலிங்கத்துக்கு எதிரா வழக்குகள், சுமந்திரனுக்கு பாதுகாப்பு. 

இதிலிருந்து தமிழர்களின் உரிமைகளுக்கு உண்மையா குரல் கொடுப்பவர்கள் யார் என்பது புரியவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் தமிழர் பிரச்சனையே இல்லாமல் எல்லாம் பூட்டி மூட சுமந்திரன் வேலை செய்கிறார் என்பது அவர்க்கு கொடுக்கப்படும் பாதுகாப்பிலும், அது தொடர்பான விளக்கத்திலும் இருந்து தெரிகிறது. அவரின் கூட்டங்களை விமர்சிக்காது மக்கள் புறக்கணித்தால் பிரச்சனை முடிந்தது. பாதுகாப்போடு தன் வீட்டில் முடங்கியிருந்து முகநூலில் பிரச்சாரம் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்7 July 23:39

சுமத்திரன் முகநூலில் தனது பரப்புரைகளை வைக்க எட்டுப்பக்கத்தாலையும் கல்லெறி வாங்கிக்கொண்டு இருக்கிறார்.
 
பாவம் சுமந்திரன், அவர் எவ்வளவைத்தான் சுமப்பார்...? தன்னைச் சுமக்கவேண்டும், சம்பந்தரையும் கட்சியையும் சுமக்கவேண்டும், தனது மதத்தைச் சுமக்க வேண்டும், முசுவீம்களையும் சிங்களத்தையும சுமக்க வேண்டும்,
பாரச் சுமைநீங்க திண்ணையில் கொஞ்சம் இடம்கொடுப்போம் என்றால் அங்கேயும் கல்லெறி விழுகிறதே..... 😲
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Paanch said:

தனது மதத்தைச் சுமக்க வேண்டும்

இவர் தான் மதத்துக்கு சுமை. மதம் யாரையும் வஞ்சிக்க சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, உடையார் said:

நாடகம் நன்றாக போகின்றது; கிளைமக்ஸ் - சுமத்திரன் அமோக வெற்றி; 

சுமத்திரனை ஆட்டுவிக்கும் பின்புலம் நன்றாக திட்டமிட்டு வேலை செய்கின்றது 

அமோக வெற்றி என்பதெல்லாம் நம்புவதுக்கு  ஒரு காலம் இருந்தது இம்முறை யார் வந்தாலும் தமிழனுக்கு விடிவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் கூத்தமைப்புக்குள்  ஒருத்தரை ஒருத்தர் இழுத்து விழுத்தும்  நிலைதான் தொடர்கிறது இந்த நிலையில் சுமத்திரன் அமோக வெற்றி  என்பது பகல் கனவே  அந்த படு தோல்விக்கு பின் உண்ணிகள் கழண்டு  ஓடுவதை போல் செம்புகள் வாயை மூடிவிடுவினம் அதன் பின் சுமத்திரன் ஐயா தனக்கு பிடித்த சிங்களவர்களுடன் அமைதியாக கொழும்பில் வாழலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 

சரிப்படுத்த முடியாத அளவுக்கு பதவி வெறியும் குத்துப்பாடும் கொள்ளுப்பாடும் நிறைந்த அரசியல் சாக்கடையாகி விட்டது . புதியவர்கள் நிறைந்த சிரமத்தை எதிர்நோக்குவார்கள் அங்கிருப்பவர்கள் யார் என்றாலும் புலம்பெயர் என்றால் பணத்தை மாத்திரம் அனுப்புங்கள் அத்துடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என்ற வகையில்தான் கதைபேச்சு .

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

அதன் பின் சுமத்திரன் ஐயா தனக்கு பிடித்த சிங்களவர்களுடன் அமைதியாக கொழும்பில் வாழலாம்

அதன்பின் சிங்களம் இவரை சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் என்று நம்புகிறீர்களா? தமிழ்த் தலைமை என்கிற தகுதி இருக்கும்வரை தான் இவர்களுக்கு மதிப்பும், வரவேற்பும் சிங்களத்திடமிருந்து   வரும். அது தோல்வி என்றால்; இவர்களை கணக்கெடுக்கவே மாட்டார்கள். அதனாற்தான் எங்களை தொடர்ந்து  ஏமாற்றிக்கொண்டு இருக்குது இந்தக்கூட்டம்.

1 hour ago, உடையார் said:

அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 

அப்படி வரும் புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் ஜதாரத்த‍த்தை உள்வாங்கியதாக இருந்தாலே அது பிரயோசனமாக இருக்கும். பழைய தலைமுறையின் உசுப்பேற்றல்களை உள்வாங்கிய தோல்வியடைந்த அணுகுமுறையை கைக்கொள்ளுவதாக இருந்தால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, tulpen said:

அப்படி வரும் புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் ஜதாரத்த‍த்தை உள்வாங்கியதாக இருந்தாலே அது பிரயோசனமாக இருக்கும். பழைய தலைமுறையின் உசுப்பேற்றல்களை உள்வாங்கிய தோல்வியடைந்த அணுகுமுறையை கைக்கொள்ளுவதாக இருந்தால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

அதைதான் நானும் ஏதிர்பார்க்கின்றேன், நல்லதொரு புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் உருவாக வேண்டும். அங்குள்ள இளைய தலைமுறை யோசித்து ஒன்று சேர்ந்தால் இந்த நேரம், நல்லதொரு மாற்றம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

அதைதான் நானும் ஏதிர்பார்க்கின்றேன், நல்லதொரு புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் உருவாக வேண்டும். அங்குள்ள இளைய தலைமுறை யோசித்து ஒன்று சேர்ந்தால் இந்த நேரம், நல்லதொரு மாற்றம் வரும்

அங்குள்ள இளைய தலைமுறையினரை தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்றி வேறு வைத்திருக்கிறார்கள் மூன்று மொழிகளிலும் புலமையாளர்களை  கார்டலியில் படித்த நபர்களை  சுமத்திரன் தன்னுடைய செம்பாக மாற்றி வைத்துள்ள கொடுமையும் நடக்குது..

On 9/7/2020 at 17:09, உடையார் said:

நாடகம் நன்றாக போகின்றது; கிளைமக்ஸ் - சுமத்திரன் அமோக வெற்றி; 

சுமத்திரனை ஆட்டுவிக்கும் பின்புலம் நன்றாக திட்டமிட்டு வேலை செய்கின்றது 

இந்தியர்கள் குடுத்த டிப்ஸ் வேலை செய்யுது!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அங்குள்ள இளைய தலைமுறையினரை தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்றி வேறு வைத்திருக்கிறார்கள் மூன்று மொழிகளிலும் புலமையாளர்களை  கார்டலியில் படித்த நபர்களை  சுமத்திரன் தன்னுடைய செம்பாக மாற்றி வைத்துள்ள கொடுமையும் நடக்குது..

தன் உயிர் வெறுத்து, இளமையை தொலைத்து, இன விடுதலைக்காய் புறப்பட்ட உறவு: சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் மாண்டு விட்டது இனத்துக்காய். இருப்பதெல்லாம் ஆவா குழு, வாள்வெட்டுக்குழு, வெட்டிப்பேச்சு குழு, போதைப்பொருள் குழு என்று மாற்றப்பட்டு அதிலேயே கட்டிப்புரளுதுகள், அதுக்காய் அலையுதுகள்.  விடுதலை உணர்வோ, தட்டிகேட்க்கும் மனப்பான்மையோ வரக்கூடாது இளம்சமுதாயத்துக்கு என திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது சிங்களத்தால். இப்படி இந்த சமுதாயம் இருந்தால் தமது தலைமைத்துவத்துக்கு, சந்ததிக்கு பாதிப்பு வராது. காலமெல்லாம் அதிகாரம் செலுத்தும் பரம்பரையாக வலம் வரலாம் என நம் தலைமைகளும் வரவேற்கும். நல்ல தலைமைத்துவம் இல்லை, வழிகாட்டல் இல்லை எத்தனை இருந்தும் சுஜநலப்போக்கு. இங்கிருந்து நல்லது எதுவும் வருமா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

அப்படி வரும் புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் ஜதாரத்த‍த்தை உள்வாங்கியதாக இருந்தாலே அது பிரயோசனமாக இருக்கும். பழைய தலைமுறையின் உசுப்பேற்றல்களை உள்வாங்கிய தோல்வியடைந்த அணுகுமுறையை கைக்கொள்ளுவதாக இருந்தால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

மிகவும் பயனுள்ள ஒரு கருத்து.

யார் வந்தால் நல்லது நடக்கும்?   அது கேள்விதான். யார் வந்தாலும் எதுவும் நடக்காது என்பது விடை.

  • கருத்துக்கள உறவுகள்

16 அதிரடிப்படையில்லை ஒரு ரெஜிமெண்டையே அனுப்பி தமிழனின் உதிர்ந்துபோன தலை மயிருக்கும் சிங்கள அரசு பாதுகாப்பு வழங்கும் அதில் தனக்கு நன்மை உண்டு என்றால். அப்படி ஒன்றுதான் இதுவும் என்று கடந்து செல்வோம் ஆனால் சுமந்திரனால்  இன்னும் சில முன்னாள் போராளிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று எண்ணவும் இடமுண்டு.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

21.10.2016 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையின் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.யாழ் பல்கலையின் கலைபீட மாணவர்களான சுலக்சன் சுகந்தராஜா (கந்தரோடை), கஜன் நடராஜா(கிளிநொச்சி) போன்றவர்களே யாழ் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து சிறிலங்காவின் விசேட அதிரடிப் படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். இந்த இரண்டு இளைஞர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களைப் படுகொலை செய்த விசேட அதிரடிப் படை வீரர்களே தற்பொழுது சுமந்திரனின் மெய்ப்பாதுகாப்பு அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக் கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள். எமது சக மாணவர்களை படுகொலை செய்தவர்களையே துணைக்கழைத்துக்கொண்டு ஒரு தமிழ் தலைவர் சுற்றித்திரிவது- அதுவும் யாழ்குடாவிலேயே சுற்றித்திரிவது - தமிழ் இனத்துக்கே அவமானம்' என்று தெரிவித்தார் ஒரு பல்கலைக்கழக மாணவர்.

 Sum-1.jpg

Sum-2.jpg

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vanangaamudi said:

16 அதிரடிப்படையில்லை ஒரு ரெஜிமெண்டையே அனுப்பி தமிழனின் உதிர்ந்துபோன தலை மயிருக்கும் சிங்கள அரசு பாதுகாப்பு வழங்கும் அதில் தனக்கு நன்மை உண்டு என்றால். அப்படி ஒன்றுதான் இதுவும் என்று கடந்து செல்வோம் ஆனால் சுமந்திரனால்  இன்னும் சில முன்னாள் போராளிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று எண்ணவும் இடமுண்டு.

சுமந்திரனை வைத்தே,  சிங்களம் விட்ட தொட்ட குறை எல்லாம் நிவர்த்தி செய்யும்.    

On 9/7/2020 at 15:30, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

சுமந்திரன் யாரது கைப்பிள்ளை என்பதற்கான இன்னொரு ஆதாரம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.