Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’

-என்.ராஜ்

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சுமந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

மறவன்புலவு பகுதியில், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன.

தேர்தல் விதிமுறைகளை மீறி, கோவிலின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், சாவகச்சேரி பொலிஸாரால், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் ஈடுபடுகின்றாரெனவும் சைவக் கோயில்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முகமாக அவருடைய தேர்தல் சுவரொட்டிகளை சைவக் கோவில்களின் கருவறைக்குள் ஒட்டியிருக்கின்றாரெனவும் கருவறை என்பது சைவர்களுடைய நம்பிக்கைக்குரிய இடமெனவும் கூறினார். 

“தேர்தல் விதிமுறைகளையும் மீறி மக்களுடைய நம்பிக்கையையும்  உடைத்து கிறிஸ்தவர்களுடைய மேலாதிக்கத்தை உயர்த்தும் முகமாக கோவில் கருவறையிலேயே  தேர்தல் சுவரொட்டிகளை 26ஆம் திகதி இரவு ஒட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிப்பதோடு, அவரிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்” எனவும், அவர் கூறினார்.

 அத்துடன், இந்த வீட்டுக்குப் பொறுப்பான கட்சித் தலைவருக்கு எதிராகவும் சாவகச்சேரி தொகுதி வீட்டுக்கு பொறுப்பானவருக்கு எதிராகவும்  வழக்கு பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், எனினும் இன்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதோடு, தேர்தல் திணைக்களத்திலும் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறினார்.

“சைவ மக்கள் இயல்பாக வாழ்வதா அல்லது அவர்களுடைய கோவில்களை அழிப்பதும் கிறிஸ்தவர்களுடைய நோக்கமா என்பது இங்கே புலனாகின்றது. எனவே, சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமென நான்  கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சவரகள-யரம-சமநதரனகக-வககளகக-வணடம/71-253702

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கு... எத்தனை சைவர். 😁

போலீஸ் விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். சிலவேளைகளில் மத பேதத்தை உருவாக்க யாராவது செய்திருக்கலாம். அல்லது சுமந்திரனின் ஆதரவாளர் செய்திருக்கலாம். எனவே சுமந்திரனின் நோட்டீஸ் ஒட்டியிருப்பதாக கூறி உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது. சச்சியும் ஒரு மதவாதி என்று எல்லோரும் அறிந்த ஒன்று. தீர விசாரிப்பது தமிழர்களின் ஒற்றுமைக்கு நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியே ஆள் வைத்து ஒட்டியிருக்கும். 

15 minutes ago, nunavilan said:

’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’

-என்.ராஜ்

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சுமந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

மறவன்புலவு பகுதியில், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன.

தேர்தல் விதிமுறைகளை மீறி, கோவிலின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், சாவகச்சேரி பொலிஸாரால், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் ஈடுபடுகின்றாரெனவும் சைவக் கோயில்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முகமாக அவருடைய தேர்தல் சுவரொட்டிகளை சைவக் கோவில்களின் கருவறைக்குள் ஒட்டியிருக்கின்றாரெனவும் கருவறை என்பது சைவர்களுடைய நம்பிக்கைக்குரிய இடமெனவும் கூறினார். 

“தேர்தல் விதிமுறைகளையும் மீறி மக்களுடைய நம்பிக்கையையும்  உடைத்து கிறிஸ்தவர்களுடைய மேலாதிக்கத்தை உயர்த்தும் முகமாக கோவில் கருவறையிலேயே  தேர்தல் சுவரொட்டிகளை 26ஆம் திகதி இரவு ஒட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிப்பதோடு, அவரிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்” எனவும், அவர் கூறினார்.

 அத்துடன், இந்த வீட்டுக்குப் பொறுப்பான கட்சித் தலைவருக்கு எதிராகவும் சாவகச்சேரி தொகுதி வீட்டுக்கு பொறுப்பானவருக்கு எதிராகவும்  வழக்கு பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், எனினும் இன்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதோடு, தேர்தல் திணைக்களத்திலும் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறினார்.

“சைவ மக்கள் இயல்பாக வாழ்வதா அல்லது அவர்களுடைய கோவில்களை அழிப்பதும் கிறிஸ்தவர்களுடைய நோக்கமா என்பது இங்கே புலனாகின்றது. எனவே, சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமென நான்  கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சவரகள-யரம-சமநதரனகக-வககளகக-வணடம/71-253702

இவ்வாறு செய்ய இருக்கிறார். இன்னமும் செய்யவில்லை...

மறைமுகமாக சுத்துமாத்திரனுக்கு வாக்கு சேகரிக்கும் முயற்சி இது.

  • கருத்துக்கள உறவுகள்

மறவன்புலவு சச்சி சுமந்திரனுக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியிருந்திருக்கும். 

மொந்தையும் பழசு. கள்ளும் புளிச்ச கள். 

இதில்புதிதாக ஏதுமில்லை 😏

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மறவன்புலவும்  சரி சுமத்திரனும் சரி இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்கள் யாழில் சாதிய  சமய வேறுபாடுகளை உருவாக்கி பிளவுபட  வைப்பதே ஒரே நோக்கம் இருவருக்கும் .

மறவன்புலவு முதுகெலும்பு இருந்தால் மன்னாரில் வளைவு உடைக்கப்படும்போது அல்லது கிழக்கில் சைவசமய தலம்கள் பிக்குகளால் உடைக்கப்படும்போது அங்கு போய்  களத்தில்  நின்று இருக்கணும் .

சுமத்திரன் உண்மையான கிருஸ்த்தவனாக இருந்தால் இவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை செய்ய மாட்டார்  நவாலி தேவாலய படுகொலைகள் பற்றி வாயே திறப்பதில்லை அவரின் மனைவியின் பெயரில் மூன்று இலட்ச்சம் பணமாக வெளிநாட்டு  அல்லோஉலோயா கூட்டம் ஒன்று மதம் பரப்புதல் சம்பந்தமாக மாதா மாதம் சம்பளமாக கொடுக்கின்றது இது பற்றி சுமத்திரன் வாயே திறப்பதில்லை அப்படி இல்லை என்று மறுப்பு கூட சொல்வதில்லை .வாய் திறந்தால்  உண்மையான கிருத்துவத்துக்கு பதில் சொல்லவேண்டி வரும் என்ற பயம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, nunavilan said:

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன்

வன்மையாக கண்டிக்கின்றேன்.எனக்கு சுமந்திரன் மீது அரசியலில் வேறுபாடு இருந்தாலும் மதத்தை இங்கே புகுத்துவது கண்டிக்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வன்மையாக கண்டிக்கின்றேன்.எனக்கு சுமந்திரன் மீது அரசியலில் வேறுபாடு இருந்தாலும் மதத்தை இங்கே புகுத்துவது கண்டிக்கத்தக்கது.

இப்படியானதொரு கருத்துடன் ஒதுங்கி போகலாம் என்று இருந்தன்  ஆனால் புது ஐடிகளில் தம்பிமார் யாழில் மறுபடியும் கம்பு சுத்துகின்றனர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை பாவம் அவர்களும் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுத்தது போல் பழைய துரோகங்கள் தான் எஜமானர்களால் சொல்லிக்கொடுக்கப்பட்டு உள்ளது உண்மைகள் சுடும் இம்முறை சம் சும்  க்கு முக்கிய எதிர்பாளர்களே 

• அரசியல் கைதிகளின் பிரச்சனை
• காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனை
• இடம் பெயர்ந்தோரின் மீள் குடியேற்றப் பிரச்சனை. இவைகள் தான் அவை அவர்கள் போகுமிடம் எல்லாம் தொடர்ந்தே வரும் என்பதை இலகுவாக மறந்து விடுகின்றனர் .
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:
17 hours ago, nunavilan said:

சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன்

வன்மையாக கண்டிக்கின்றேன்.எனக்கு சுமந்திரன் மீது அரசியலில் வேறுபாடு இருந்தாலும் மதத்தை இங்கே புகுத்துவது கண்டிக்கத்தக்கது.

சுமந்திரனை வெல்ல வைக்கத் தான் இந்த நாடகமோ தெரியலை.

  • கருத்துக்கள உறவுகள்

3Maha_Uddhav_Thackeray_lauds.jpg

உத்தவ் தாக்ரேக்கு உதவியாளர் தேவையாம் .. குடியுரிமைய மாற்றி மகாராஷ்ட்ராவுக்கு அனுப்பி வையுங்கப்பா..👌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனை வெல்ல வைக்கத் தான் இந்த நாடகமோ தெரியலை.

 வென்றுவிட்டு போகட்டும். தோல்வியடைந்தால் சைவர்கள் வாக்களிக்காத்தால் தோற்றேன் என்றொரு வாக்கியம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

 வென்றுவிட்டு போகட்டும். தோல்வியடைந்தால் சைவர்கள் வாக்களிக்காத்தால் தோற்றேன் என்றொரு வாக்கியம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உண்மை, ஏற்கனவே பல பிரச்சனைகள் அதற்குள் மத ரீதியான பிரிவு என்பது வேண்டவே வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் அரசாங்கத்தின் முகவர்கள் எப்படி குத்திமுறிங்சாலும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் அதரவுடன் சுமந்திரன் அமோக வெற்றி அடைவார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, MEERA said:

உண்மை, ஏற்கனவே பல பிரச்சனைகள் அதற்குள் மத ரீதியான பிரிவு என்பது வேண்டவே வேண்டாம்.

ஈழத்தமிழ் அரசியல் என்றுமே சாதி மத பேதங்களை கடந்து தூய அரசியலாகத்தான் இருந்தது
வாக்குக்காக சமயத்தை என்றுமே அரசியலோடு கலக்கக்கூடாது.அது கலவரத்தில் தான் முடியும்.சச்சிதானந்தம் இலங்கை அரசியல் பிரச்சனைக்கு மதத்தை கையில் எடுப்பாரேயானால் நாட்டை விட்டு துரத்துவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
மதங்கள் வழிபாட்டுக்கு மட்டுமே. மோட்டு பிக்குகளை மாதிரி நாமும் இருக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, zuma said:

இந்தியன் அரசாங்கத்தின் முகவர்கள் எப்படி குத்திமுறிங்சாலும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் அதரவுடன் சுமந்திரன் அமோக வெற்றி அடைவார்

சரி நீங்கள்  எல்லாம் உத்தமர் இதே தமிழரசு கட்சியை சேர்ந்த அப்போது நாட்டில் மக்களோடு மக்களாக இருந்தவர்கள்தான் இந்த ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம். அப்போதைய டெலோ பொபி யாட்க்களால்  போட்டுத்தள்ளப்பட்டனர் உங்கள் இப்போதைய தலைவர்கள் இந்தியாவுடனோ அல்லது ரோவுடனே சங்காத்தம் எதுவும் இல்லையென்றால் .இன்னை  வரைக்கும்  சம்பந்தன் கூட இந்த கொலைகளை கண்டிக்கவில்லை ஏன் ?

அடுத்தது விளங்கா  சிங்களகுன்சு சுமத்திரன் அல்பிரட் துரையப்பாவுக்கு இரங்கல் அறிக்கை விடும் ஆள் அவரின் சொந்த கட்சியை சேர்ந்த இந்த மூத்த தலைவர்களுக்கு இரங்கிறார்  இல்லையே ஏன் ?

கேட்டு சொல்லுங்க உங்களுக்கு புரியும் அப்போது யார் றோவின் ஆள் என்று .

1 hour ago, zuma said:

இந்தியன் அரசாங்கத்தின் முகவர்கள் எப்படி குத்திமுறிங்சாலும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் அதரவுடன் சுமந்திரன் அமோக வெற்றி அடைவார்

முதலில் அது என்ன இந்து , சைவம் என்று கூறவும். 

  • கருத்துக்கள உறவுகள்

கண்டனத்திற்கரிய கருத்து. தமிழர்களாக ஒன்றுபடுவதைத் தடுப்பதில் கைக்கூலிகள் எல்லாப்பக்கங்களிலிருந்தும்  ஏவுகணைகளை ஏவுகின்றார்கள்.  இது ஆபத்தானது. தமிழர்களாக மட்டுமே சிந்திக்கும் வரைதான் ஒருபலம் வரும். அதனைச் சிதைப்பதற்கு யாருடைய நிகழ்ச்சிநிரலோடு மதவாதக் கூச்சல் போடுகிறார். முதலில் இந்தக் காவிகளைக் குமுகாயத்திலிருந்து களைய வேண்டும்.  அரசியற்கட்சிகள் மெளனம் சாதிப்பது அநாகரிகமானது. கொள்கை முரண் விமர்சனங்கள் வேறு. மதவாதம் நாற்றமடிக்கும் சேறு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் அதரவுடன் சுமந்திரன் அமோக வெற்றி அடைவார்

கனவு காண்பது உங்கள் உரிமை அதை யாரும் தடுக்க முடியாது ஆனால் யதார்த்தம் என்றது  உண்மையில் சுடும் . யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்ப்பு யாழ் புத்திஜீவிகள் அமைப்பு எதிர்ப்பு

சொந்தக் கட்சிக்குள் மகிளிர் அணி எதிர்ப்பு
சொந்தக் கட்சியின் சக வேட்பாளர்களே எதிர்ப்பு
இவ்வாறு வெளியே, உள்ளே, எங்கும், எதிலும் எதிர்ப்பு சந்திக்கும் ஒரே வேட்பாளராக சுமந்திரன் இருக்கிறார்.
இத்தனைக்கும் பிறகும் அவர்  அமோக வெற்றி பெறுவாரா ?
  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 12:12, nunavilan said:

’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’

எப்படி இருந்ததேசம்

இன்று?????😭

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

முதலில் அது என்ன இந்து , சைவம் என்று கூறவும். 

இந்து = சைவம்,சாக்தம்,வைணவம் ,கௌமாரம், சாய் பாபா பக்தர்கள், அம்மா பக்தர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

எப்படி இருந்ததேசம்

இன்று?????😭

2009 க்கு பின்னர் வளர்ந்து விட்டார்களாம். இனிவரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஒரு வகுப்பினை வைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எப்படி இருந்ததேசம்

இன்று?????😭

இரு பக்கத்திலும் மிகச் சிலர்தான் என்பது ஆறுதலான விடயம்.

ஆனாலும் மெல்லக் கொல்லும் நஞ்சு.  ☹️

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

2009 க்கு பின்னர் வளர்ந்து விட்டார்களாம். இனிவரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஒரு வகுப்பினை வைப்பார்கள்.

அவரவர் வளர்ந்து  விட்டார்கள்

எதையெல்லாம் வளர்க்கணுமோ

அவை  தவிர்த்து

ஊழலை

லஞ்சத்தை

கப்பத்தை

பொய்யான  வாக்குறுதியை....

எப்படி  இருந்த தேசம்????

3 minutes ago, Kapithan said:

இரு பக்கத்திலும் மிகச் சிலர்தான் என்பது ஆறுதலான விடயம்.

ஆனாலும் மெல்லக் கொல்லும் நஞ்சு.  ☹️

நல்ல விதைகள் காலம் எடுக்கும்

எல்லாம் முளைக்காது

ஆனால்  நச்சு விதைகள் ???????

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

இரு பக்கத்திலும் மிகச் சிலர்தான் என்பது ஆறுதலான விடயம்.

ஆனாலும் மெல்லக் கொல்லும் நஞ்சு.  ☹️

மாவு புளிப்பதற்கு ஒரு துளி மதுவமே சேர்க்கப்படுகிறது, முழு மாவையும் புளிக்கச் செய்து விடுகிறதே!  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

இந்து = சைவம்,சாக்தம்,வைணவம் ,கௌமாரம், சாய் பாபா பக்தர்கள், அம்மா பக்தர்கள்.

அப்போ குண்டலினி எழுப்பிய எங்க தல நித்தி(குஜிலி)யானந்தா...?
இந்து மத லிஸ்டிலேயே இல்லையா  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.