Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு!

1575455004-Court-2.jpg?189db0&189db0

நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலில் செய்வதற்கு எதிராக கடந்த வருடம் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் இது தொடர்பான கட்டளை வழங்கப்படும் என்று தவணையிட்ட நீதிமன்று, வழக்கை வத்திவைத்தது.

இதன்படி வழக்கு இன்று கட்டளைக்காக பருத்தித்துறை நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

“கடற்தொழில் பிணக்குத் தொடர்பில் தீர்த்து வைக்கும் அதிகாரம் முழுமையாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு உண்டு.

மேலும் வடமராட்சியைச் சேர்ந்த மூன்று சங்கங்கள் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபட அனுமதியை வழங்கியுள்ளன.

அத்தோடு நீதிமன்றக் கட்டளையை மீறி தொழில் இடம்பெறுவது தொடர்பில் விசாரணைகள் சாட்சியங்கள் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் விண்ணப்பத்தை நிராகரித்தது.

https://newuthayan.com/கடலட்டை-பிடிக்க-தடை-கோரி/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு!

இது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

இது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன. 

இங்கு பிரச்சனை 
வெளி மாவட்ட(சிங்கள)த்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து முழு வளங்களையும் அள்ளிக் கொண்டு போகும் போது எமது மீனவர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு பிரச்சனை 
வெளி மாவட்ட(சிங்கள)த்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து முழு வளங்களையும் அள்ளிக் கொண்டு போகும் போது எமது மீனவர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.

தகவலுக்கு நன்றி அண்ணா . இப்படி ஏதாவது கோளாறு இருக்கும் என்று நினைத்தேன் . எம்மவர்கள் ஏன் இதை செய்யமுடியவில்லை என்று தெரியவில்லை. கடலட்டையை எமது ஊரிலை இருந்து குப்பை விலைக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி ( யாழ்ப்பாண நண்டு, றாலும் தான்) அங்கு வெரி பெயரில் அழகாக பொதி செய்யப்பட்டு விப்பதாக கேள்விப்பட்டேன். சிங்களவர்கள்தான் செய்கிறார்கள் என்று இப்பதான் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

கடலட்டை கடலில் கட்டப்படும் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்படுவதால் அது எப்போதும் மீனவரின் கட்டுபாட்டுக்குளேயே வாழும். பின்னர் அதை இயந்திரபடகுகள் கொண்டு பிடிக்கவேண்டிய தேவை இல்லை.

தமிழ் பிரதேசத்தில் (தீவு பகுதிகளில்) கடலட்டை வளர்ப்பில் முதலீடு செய்ய புலம்பெயர் நாட்டில்  இருந்து சென்ற சிலர் அங்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக திரும்பிவிட்டனர். அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vanangaamudi said:

அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.

இதுதான் அபிவிருத்தி மட்டுமே போதும் என்று கேட்டு போராடுபவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் பங்கு கொடுக்க மறுத்தால் அடித்துப் பறிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

இது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன. 

நில்மினி அவர்களே,

நீங்கள் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் என யாழ் இணையம்மூலம் தெரிந்துகொண்டேன்.

 இலங்கைத்தீவில், கடலட்டை விடையத்தில் இனங்களுக்கிடையிலான பொருளாதார மற்றும் அரசியல்ரீதியிலான வேறுபாடான கண்ணேட்டத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்,

மனிதன் எனும் விலங்கின் பரிணாம வளர்ச்சிக்கு முதலேயே கடலட்டை உட்பட நிறைய உயிரினங்கள் பூமியில் தோன்றிவிட்டன, ஆரம்பத்தில் அவை இப்போது உள்ள வடிவத்தில் இருந்திருக்குமா என்பதற்கான கேள்விக்கு ஆராட்சியாளர்கள்தான் பதில்கூறவேண்டும்.

இந்தப்பூமிச்சூழலில் அனைத்து உயிரினமும் தொடர்ந்தும் உயிர்புடன் இருப்பதற்கான சூழலை அவைகள் அனைத்தும் இணைந்தே தகவமைத்துக்கொளளுகின்றன மனிதனைத் தவிர.

கடலட்டை கடலின் படுகைகளில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கைச் சூளலை சமமாக வைத்திருப்பதற்கான காரணிகளில் ஒன்றாகவும் இருக்கலாம். அவைகளது தொகையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தினால் கடல்வாழ் உயிரிகளது வாழ்க்கைச் சமநிலையில் மாற்றம் ஏற்படும் தவிர பவளப்பாறைகளது அழிவுக்கும் கடலட்டை பிடிப்பதற்காகப் பயன்படுத்தும் தற்கால முறைமைகள் காரணமாக இருக்கலாம்.

கடலட்டை பிடிப்பது யாழ் குடாநாட்டு மீனவர்களுக்கு நீண்டகாலமான வாழ்வாதாரமாக இருந்தது உண்மையே ஏன் நீங்கள் படித்த சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிக்கு அருகாமையில் உள்ள கிட்டங்கி அல்லது பறங்கித்தெரு அல்லது பிரதான வீதியின் இருமருங்கிலும் கடலட்டைகள் வெயிலில் காயவைத்ததை அவதானித்திருப்பீர்கள். கரயூர் பாசையூர் நாவாந்துறை ஆகிய பகுதிகளிலுள்ள மீனவர்காக "கடலட்டை பிடிப்போர் சங்கம்" எனும் பெயரில் ஒரு சங்கம் இருந்ததாகவும் நினைவு.

பாரம்பரிய மீன்பிடி முறைகள் வழக்கொளிந்துபோய் இப்போது இலங்கைத்தீவில் நவீனங்கள் புகுத்தப்பட்டுவிட்டன, மேற்குலக நாடுகளில் மீன்பிடி முறைகளில் நவீனம் புகுத்தப்பட்டாலும் அதற்கீடாக சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் சாமாந்தரமாகப் பயணம்செய்து அவை நடைமுறைப்படுத்தப்பட்டு மீறுவோர்மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது ஆனால் இலங்கை அப்படி இல்லையே ........

மேற்குலக நாடுகளில் சாதாரணமாகக் காணப்படும் தெருக்களைப்போல் புதிதாக காப்பற் வீதிகளை அமைத்துவிட்டு இருமருங்கிலும் குண்டும் குழியுமாகக் மதகுகளையும் தெரு ஓரங்களையும் பராமரிக்காது  அந்தத் தெருக்களில் மக்கள் நடமாட்டத்துக்குள் இயல்பான வாகனங்களை மட்டும் அனுமதிக்காது வலு கூடிய வாகனங்களை குறுப்பாக மேட்டார் சைக்கிள்களை ஓடவிடும் இப்போதைய சூழலைப்பொன்றதே நாம் எமது கடலையும் அதன் சூழலையும் கையாளும் நிலை. ஆகவே கடலட்டைப் பிடிப்பதை தடை செய்யாது விடினும் கடல்தொழிலில் புதிய ஒழுங்குமுறை இலங்கைத்தீவில் கொண்டுவருதவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

இதுதான் அபிவிருத்தி மட்டுமே போதும் என்று கேட்டு போராடுபவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் பங்கு கொடுக்க மறுத்தால் அடித்துப் பறிப்பார்கள்.

பங்கு கேட்ப்பவர்கள் எங்கடை அரசியல் வாதிகள் தான்.

12 hours ago, nilmini said:

தகவலுக்கு நன்றி அண்ணா . இப்படி ஏதாவது கோளாறு இருக்கும் என்று நினைத்தேன் . எம்மவர்கள் ஏன் இதை செய்யமுடியவில்லை என்று தெரியவில்லை. கடலட்டையை எமது ஊரிலை இருந்து குப்பை விலைக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி ( யாழ்ப்பாண நண்டு, றாலும் தான்) அங்கு வெரி பெயரில் அழகாக பொதி செய்யப்பட்டு விப்பதாக கேள்விப்பட்டேன். சிங்களவர்கள்தான் செய்கிறார்கள் என்று இப்பதான் தெரியும். 

சிங்கப்பூரில் இலங்கை நண்டின் விலை அண்ணளவாக 100கிராம் 45S$

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு ...

உவாக்.... நிழலி,  :oO:
கடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால், :rolleyes:
இந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.   tw_weary:
இது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற  சாப்பாடு. 
உங்களுக்கு, வேண்டாமே... 🙃

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

தோலை அகற்றிவிட்டு வெட்டினால் எல்லாம் சதைதான்.இனி அதுக்கென்று கஸ்தூரி மஞ்சளா போடப்போறம்.வெறும் மஞ்சளில்  கழுவிப்போட்டு கணவாய் மாதிரி சமைக்க வேண்டியதுதான் போல ......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, suvy said:

தோலை அகற்றிவிட்டு வெட்டினால் எல்லாம் சதைதான்.இனி அதுக்கென்று கஸ்தூரி மஞ்சளா போடப்போறம்.வெறும் மஞ்சளில்  கழுவிப்போட்டு கணவாய் மாதிரி சமைக்க வேண்டியதுதான் போல ......!   👍

உந்தக்  கறுமத்தை... சட்டியில் போட்டு, சமைத்து  சாப்பிடுவதை விட....
பட்டினியால்... கிடந்து, சாகலாம்.  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு ...

உவாக்.... நிழலி,  :oO:
கடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால், :rolleyes:
இந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.   tw_weary:
இது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற  சாப்பாடு. 
உங்களுக்கு, வேண்டாமே... 🙃

சிறித்தம்பி! உதை பார்க்க ஜேர்மன்காரர்ரை சின்ன பிறாட் வூஸ்ற் போலை கிடக்கு :grin:

polnische-weisse3.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! உதை பார்க்க ஜேர்மன்காரர்ரை சின்ன பிறாட் வூஸ்ற் போலை கிடக்கு :grin:

polnische-weisse3.jpg

குமாரசாமி அண்ணை... இதை, ஜேர்மன்  "பிறாட் வூஸ்ற்" உடன் ஒப்பிடாதேயுங்கோ. 😎
எங்கடை... வூஸ்ற், வேறை லெவல், ரேஸ்ற். ❤️

இந்தக் கடல் அட்டையை  பார்த்தாலே.. குமட்டிக் கொண்டு, வருகுது. 🤢

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

பங்கு கேட்ப்பவர்கள் எங்கடை அரசியல் வாதிகள் தான்.

சிங்கள (மத்திய) அரசின் முகவர்கள்தான் எங்கடை அரசியல்வாதிகள் என்பதை நம்புவதற்கு உங்களுக்கு கொஞ்சம் கஷ்ரமாகத்தானிருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இவர்களுக்கு எதிராக ஒரு இறகும் பிடுங்க முடியாது யாராலும்.

12 hours ago, தமிழ் சிறி said:

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு ...

உவாக்.... நிழலி,  :oO:
கடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால், :rolleyes:
இந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.   tw_weary:
இது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற  சாப்பாடு. 
உங்களுக்கு, வேண்டாமே... 🙃

இதை நீங்கள் உயிருடன் பார்க்கும்போது பெரிதாக இருக்கும். அதை சுத்தப்படுத்தி , பதப்படுத்திய பின்னர் பார்த்தால் மிகவும் சிறிதாகிவிடும். இலங்கையில் உணமைவாக பாவிக்கவிடடாலும் வெளி நாடுகளில் மிகவும் பிரபலமானது. பொதுவாக சூப் வைத்து குடிப்பார்கள். அப்படி சூப் வைக்கும்போது அதனை துண்டு துண்டாக வெட்டிபோடும்போது பெரிதாகிவிடும். பொதுவாக இது ஆண்களின் பாலியல் தொழிட்பாடடை தூண்டிவிடும் என்று சொல்லுகிறார்கள் . எனவே இதன் விலையும் மிக அதிகம்.

மேலும் சிங்களவர்கள் வந்து இதைப்பிடிப்பதாக எழுதி இருக்கிறார்கள். உண்மையில் இங்கு வந்து கடல் தொழில் செய்வதட்கு உடப்பு தமிழ் மீனவர்களுக்கு உரிமை இருப்பதாகவும், ஆனால் அவர்கள் இதனை சிங்களவர்களுக்கு கொடுத்து விட்ட்தாகவும் அறிய முடிகின்றது. எனவே இது தமிழர்களால் செய்யப்படட தவறு என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் ஒருடடவை பார்த்துவிடுங்கள்

https://www.businessinsider.com/why-sea-cucumbers-so-expensive-seafood-2019-1?r=US&IR=T

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

நிழலி,

புரதம் அபரீதமாகவுள்ள கடலட்டை, காட்டுப்பன்றியின் தோல், மற்றும் ஆமையின் மேல் தோல் போன்ற வார் என அழைக்கப்படும் புரத உணவு போல சுவையானது. அமெரிக்காவில் விலை கூடிய உணவு வகைகளில் ஒன்று. கொரிய, ஜப்பானிய அல்லது சீன வணிகநிறுவனங்களிலே தான் கிடைக்கிறது. எலும்புகளோ, கழிவுகளோ அதிகம் இல்லாத, இலகுவாக வெட்டி வதக்கி சாப்பிடக்கூடிய உணவு.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2020 at 07:51, vanangaamudi said:

கடலட்டை கடலில் கட்டப்படும் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்படுவதால் அது எப்போதும் மீனவரின் கட்டுபாட்டுக்குளேயே வாழும். பின்னர் அதை இயந்திரபடகுகள் கொண்டு பிடிக்கவேண்டிய தேவை இல்லை.

தமிழ் பிரதேசத்தில் (தீவு பகுதிகளில்) கடலட்டை வளர்ப்பில் முதலீடு செய்ய புலம்பெயர் நாட்டில்  இருந்து சென்ற சிலர் அங்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக திரும்பிவிட்டனர். அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.

சகல மட்டங்களிலும் நடக்கிறது  இதுதான் உன்மையும் இங்குள்ளவர்கள் கனபேர் விரைவா பணக்காரனாக நினைக்கிறார்கள் 

அண்மையில் ஆலயடிவேம்பு டி. எஸ் ம் அங்கு பணி புரியும் ஒருவரும் லஞ்சம் வாங்கும் போது கைதானார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.