Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது; ஆபத்தானது.

பெண்கள், குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம்.

வக்கிர மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/20140105/1995848/DMK-MP-Kanimozhi-condemned-to-Actor-Vijay-Sethupathi.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... கொந்தளித்த சின்மயி

டுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... கொந்தளித்த சின்மயி

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.  

சின்மயியின் டுவிட்டர் பதிவு

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாடகி சின்மயி, “கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு ஆதரவா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை மாற்ற யாருமே இல்லையா?, பொதுவெளியில் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவனும் குற்றவாளி தான்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/20132124/1995834/Vijay-Sethupathis-daughter-gets-rape-threats-online.vpf

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் எல்லாத்தையும் ஒருமாதிரி ஈழத்தமிழர் தலையில் விடியப்பண்ணிப்போட்டங்கள்.

இவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தல்வேண்டும்.

நான் நினக்கிறேன் இதில் பல உள்ளடிவேலைகள் நடந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடு காவல்துறை இதைமறைத்து உண்மையான குற்றவாளியைக் காப்பாற்றும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, உடையார் said:

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது; ஆபத்தானது.

நானும் சில இணையத்தளங்களில் இந்த மிரட்டலை பார்த்தேன்.இப்படி செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.இது கண்டிக்கத்தக்க செயல். 😡

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான விவகாரத்தில் அவரது மகள் குறித்து ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட டிவிட்டர் ஆசாமியின் செயலுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் குழந்தை குறித்து ஆபாசமாக பதிவிட்டவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு பிரபலத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்ட கருத்து குறித்து பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பான புகார் வந்ததையடுத்து, சைபர் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில், முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளியானது. இந்த நிலையில், அவர் அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என முத்தையா முரளிதரன் தெரிவித்தார். அதை ஏற்பது போல விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கத்தில் "நன்றி.. வணக்கம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், @ItsRithikRajh என்ற ட்விட்டர் பதிவர், தனது பக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறு பெண் குழந்தையின் படத்தை பதிவிட்டு, மிக ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் பயனர்கள் பலர் புகார் அளித்ததையடுத்து அந்தப் பக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது என தி.மு.க எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

"விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

திரைக்கலைஞர் ரோகிணியும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

"ஒரு தொழில்முறை நடிகரை நமது தமிழ் சமூகத்தின் முகமாகப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆரோக்கியமானது. விஜய் சேதுபதி தன்னாலானவரை போகுமிடத்திலெல்லாம் நல்ல கருத்துக்களைத்தான் விதைத்திருக்கறார், மக்களுக்கு உதவியும் இருக்கிறார். அவர் வில்லனாக நடித்தால் கெட்டவர் என்று எடுத்துக் கொள்ளமாட்டோம்தானே.." என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

இந்த விவகாரம் தொடர்பாக, தனிப்பட்ட முறையில் பலரும் காவல்துறையினருக்கு புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.https://www.bbc.com/tamil/india-54613023

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  நன்றி கனிமொழியக்கா

  • கருத்துக்கள உறவுகள்

இது திட்டமிட்டே வி சே மீது இருந்த கோபத்தை மாற்றி,  அனுதாபம் கொள்ள வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகத் தோன்றுகிறது.  

🤥

  • கருத்துக்கள உறவுகள்

அந்த செய்தியை ரீடுவிட் போட்டவங்களையும் உள்ளே போடணும் அப்படியொரு செய்தி வந்தது என்றாலே சைபர் கிரைமுக்கு  சொல்வதை விட்டு பாலோவர்ஸ் இல்லாத அந்த அன்னக்காவடியின் டுவிட்டை காவித்திரிந்தவர்கள்  அடுத்த குற்றவாளிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்னர் அந்தக் கணக்கிலிருந்து என்ன மாதிரியான கருத்துகள் வந்திருக்கின்றன என்று பார்த்தால் ஒரு விளக்கம் கிடைக்கலாம். 

இவ்வளவு துணிவாக கீழ்த்தரமாக பதிவிட்டிருப்பதால் இந்தியாவுக்கு வெளியே இருக்கும் ஒருவரின் கணக்காகத் தான் இருக்கும்! ஆனால், எங்கே இருந்தாலும் இவரை ஒருக்கா உள்ளுக்குப் போட்டு எடுக்க வேணும், இல்லா விட்டால் இதைத் தொடர முனைவர்!

  • கருத்துக்கள உறவுகள்

8 வயது சிறுமியை கோவிலுக்குள் வைத்து கூடு பாலியல் கொடுமைகள் செய்து 
உலக்கையை அந்த சிறுமியின் பெண் உறுப்பில் சொருகி கொலை செய்த கொடூரர்களுக்கு 
ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடக்கும் நாட்டில் ......... ட்விட்டரில் எழுதியவனை தூக்கி உள்ளே  போட்டு தான் 
தேசம் திருந்தும் என்பது வெறும் அற்ப எண்ணம். நீங்கள் இங்கு கருத்து எழுதி கொண்டும் இருக்கும் 
ஒவ்வரு நிமிடத்துக்கும் ஒரு சிறுமி இந்தியாவில் பாலியல் கொடுமைக்கு ஆளாக பட்டுக்கொண்டு இருக்கிறாள். 

அப்பவெல்லாம் கனிமொழியோ மற்றும் கனிஷ்ட மொழிகளோ பெரிதாக வாய்திறப்பதில்லை 
தூத்துக்குடியில் அண்ணா விடுங்க விடுங்க என்று ஒரு பெண் தமிழில் கதறுகிறார்கள் வீடியோ 
ஆதாரம் இருந்தும் அவர்கள் வெளியில் திரிகிறார்கள் 

ஆனால் டுவிட்டரில் எழுதியவன்தான் இப்போ இந்தியாவையே சீர்குலைத்து விட்டான் 
உடனே இவர்கள் எல்லாம் துடித்து எழுந்துவிட்டார்கள். 

Jammu: Two BJP ministers attend rally in support of Kathua rape-murder suspect

While Minister for Forest Chowdhary Lal Singh demanded a CBI inquiry, Minister for Industries Chander Prakash Ganga criticised the police investigation.

https://scroll.in/latest/870575/jammu-two-bjp-ministers-attend-rally-to-protest-arrest-in-kathua-rape-murder-case

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

வணக்கம்  நன்றி கனிமொழியக்கா

விசுகர்! திரைக்கதை வசனம் இசையமைப்பு எல்லாமே அங்கிருந்து தானாம் வந்தது என காற்றிலை தென்றலாய் வீசுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:

அப்பவெல்லாம் கனிமொழியோ மற்றும் கனிஷ்ட மொழிகளோ பெரிதாக வாய்திறப்பதில்லை 
தூத்துக்குடியில் அண்ணா விடுங்க விடுங்க என்று ஒரு பெண் தமிழில் கதறுகிறார்கள் வீடியோ 
ஆதாரம் இருந்தும் அவர்கள் வெளியில் திரிகிறார்கள் 

ஆனால் டுவிட்டரில் எழுதியவன்தான் இப்போ இந்தியாவையே சீர்குலைத்து விட்டான் 
உடனே இவர்கள் எல்லாம் துடித்து எழுந்துவிட்டார்கள். 

திமுக பொதுமக்கள் படுகொலைகளை வைத்து அரசியல் லாபம் தேடும் கட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது; ஆபத்தானது.

பெண்கள், குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம்.

வக்கிர மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/20140105/1995848/DMK-MP-Kanimozhi-condemned-to-Actor-Vijay-Sethupathi.vpf

ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்தியதற்கு வருந்தாத அம்மணி.. இதற்கு வருந்திறாவாம் இல்ல.

விஜய் சேதுபதியின் குழந்தையை அச்சுறுத்தியது தவறு. ஆனால்.. ஒரு இனப்படுகொலையாளனுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்தது மகா தவறு.

முரளிதரன், சேதுபதி, தமிழுக்கு தமிழர்க்கு ஆதரவானவர் என்றுசொல்லும் ௐருத்தர், பெண்குழந்தை.

முதலிருவர் சொல்லவந்த செய்தி ௐன்று. சொல்லிவிட்டு போனது வேறு.

முரளி- தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பது வெளிப்படையானது. ஆனால் அவர் தமிழர்களுக்கு எதிராக என்ன சொன்னார்? எப்போ சொனார்? என்பது பலருக்கு தெரியாது. இப்போ எல்லாவற்றையும் சொல்லிவைத்து விட்டுப் போயிருக்கிறார். 

சேதுபதி- ௐரு நல்ல நடிகர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழரா தெலுங்கரா எனபது பலருக்கு தெரியாது. இப்போ தான் ௐரு தெலுங்கர் என்பதும் தான் தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பதையும் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார்.

தமிழர்க்கு ஆதரவானவர் போல்- இவர் உண்மையான தமிழரா என்பதும் இவருடைய செய்தியும் விசாரணைக்குட்படுத்த வேண்டியன.

பெண்குழந்தை-இந்தச்செய்தியை பெருப்பிக்காமல் இருந்தாலே போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த், குஷ்பு, சின்மயி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். 
 
வழக்குபதிவு

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/20180742/1995915/Police-case-filed-vijay-sethupathi-threaten-issue.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியின் மகள் மீதான தாக்குதல்,கோழைத்தனமானது..!! | ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Ellam Theringjavar said:

முரளிதரன், சேதுபதி, தமிழுக்கு தமிழர்க்கு ஆதரவானவர் என்றுசொல்லும் ௐருத்தர், பெண்குழந்தை.

முதலிருவர் சொல்லவந்த செய்தி ௐன்று. சொல்லிவிட்டு போனது வேறு.

முரளி- தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பது வெளிப்படையானது. ஆனால் அவர் தமிழர்களுக்கு எதிராக என்ன சொன்னார்? எப்போ சொனார்? என்பது பலருக்கு தெரியாது. இப்போ எல்லாவற்றையும் சொல்லிவைத்து விட்டுப் போயிருக்கிறார். 

சேதுபதி- ௐரு நல்ல நடிகர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழரா தெலுங்கரா எனபது பலருக்கு தெரியாது. இப்போ தான் ௐரு தெலுங்கர் என்பதும் தான் தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பதையும் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார்.

தமிழர்க்கு ஆதரவானவர் போல்- இவர் உண்மையான தமிழரா என்பதும் இவருடைய செய்தியும் விசாரணைக்குட்படுத்த வேண்டியன.

பெண்குழந்தை-இந்தச்செய்தியை பெருப்பிக்காமல் இருந்தாலே போதும்.

ஓமோம் அந்த சின்ன பிள்ளைக்கு நடந்ததை பற்றி கதைக்க கூடாது ...நாங்கள் பிள்ளையின்ட தகப்பன் தமிழனா ,தெலுங்கனா என்பது பற்றி  கதைப்போம் 
 
  • கருத்துக்கள உறவுகள்

அந்த மிரட்டலை யார் விட்டிருந்தாலும் கண்டிக்கத்தக்கது. அருவருக்கத்தக்கது. இப்படித்தான் தமிழுணர்வைக்காட்ட வேண்டும் என்ற தேவை தங்கள் உயிரைக்கொடுத்து தமிழைக்காக்கத்துணிந்த எந்த தமிழனுக்கும் இருந்திருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கன்டவன் நின்டவன் எல்லாம் கருத்து போடுவான்.நாங்கள் தான் விலத்தி போக வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாராக இருந்தாலும் முதலில் குழந்தை / சிறுவர்களை மையமாக வைத்து இப்படியான கீச்சகம் போட்டது தவறு.
இதை தமிழ் உணர்வாளர் என்ற அசட்டுத்தனத்தில் ஒருவர் போட்டிருக்கலாம் அல்லது தமிழ் உணர்வாளர் என்ற போர்வைக்குள் இருந்து  தமிழ் உணர்வை கொச்சை படுத்ததும்  ஒரே நோக்கத்தில் செயல்படும் மனநோயாளியும் போட்டிருக்கலாம். 
இணைய தளங்களில் வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு சிறுவர், குழந்தைகள், பெண்கள் மீதான தினமும் நடந்து கொண்டு இருக்கிறது. 
இந்தியாவில அடிக்கடி 8 வயது பிள்ளை, 10 வயது பிள்ளையெல்லாம் பாலியல் வன்புணரப்பட்டு ஈனத்தனமாக கொலை செய்யப்பட்ட கேஸுகள் நிறைய இருக்கு. கனிமொழி போன்ற கயமொழிகள் இவர்களுக்கும் எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

இந்த செய்தியை பொறுத்தவரை நீங்கள் கையை சுட்டி முறையிட வேண்டியது ஒரு ஒழுக்கமற்ற தனி மனிதனையே அன்றி எந்த ஒரு குழுமத்தையும் அல்ல.

*****

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, முதல்வன் said:

அந்த மிரட்டலை யார் விட்டிருந்தாலும் கண்டிக்கத்தக்கது. அருவருக்கத்தக்கது.

இது நேர்மை 👍
விஜய் சேதுபதியின் மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதாக மிரட்டியவரை கண்டித்த கனிமொழியையும் சின்மயியையும் அல்லவா கண்டிக்கிறார்கள் 🥵

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Sasi_varnam said:

யாராக இருந்தாலும் முதலில் குழந்தை / சிறுவர்களை மையமாக வைத்து இப்படியான கீச்சகம் போட்டது தவறு.
இதை தமிழ் உணர்வாளர் என்ற அசட்டுத்தனத்தில் ஒருவர் போட்டிருக்கலாம் அல்லது தமிழ் உணர்வாளர் என்ற போர்வைக்குள் இருந்து  தமிழ் உணர்வை கொச்சை படுத்ததும்  ஒரே நோக்கத்தில் செயல்படும் மனநோயாளியும் போட்டிருக்கலாம். 
இணைய தளங்களில் வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு சிறுவர், குழந்தைகள், பெண்கள் மீதான தினமும் நடந்து கொண்டு இருக்கிறது. 
இந்தியாவில அடிக்கடி 8 வயது பிள்ளை, 10 வயது பிள்ளையெல்லாம் பாலியல் வன்புணரப்பட்டு ஈனத்தனமாக கொலை செய்யப்பட்ட கேஸுகள் நிறைய இருக்கு. கனிமொழி போன்ற கயமொழிகள் இவர்களுக்கும் எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

இந்த செய்தியை பொறுத்தவரை நீங்கள் கையை சுட்டி முறையிட வேண்டியது ஒரு ஒழுக்கமற்ற தனி மனிதனையே அன்றி எந்த ஒரு குழுமத்தையும் அல்ல.

****

அண்ணா இதை யார் நியாய படுத்துகிறான்?

செய்வேன் என்று ட்வீட் போட்டத்துக்கு துள்ளுறீங்களே 
உங்கள் கண்முன்னாலேயே அதை செய்தவன் கடந்து போகிறான் 
என்ன செய்து கிழித்தீர்கள்? என்றுதான் கேட்க்கிறோம் 

ஆக இது வெறும் நாடகம்தானே?
இப்ப வந்து சேதுபதிக்கு சோப்பு போடும் வேலைதானே பாக்குறீங்க? 
உங்களுக்கு சிறுவர் மீது அக்கறை இருந்து இருந்தால் 
எப்படி உங்களால் மௌனமாக இருக்க முடிந்து இருக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

அண்ணா இதை யார் நியாய படுத்துகிறான்?

செய்வேன் என்று ட்வீட் போட்டத்துக்கு துள்ளுறீங்களே 
உங்கள் கண்முன்னாலேயே அதை செய்தவன் கடந்து போகிறான் 
என்ன செய்து கிழித்தீர்கள்? என்றுதான் கேட்க்கிறோம் 

ஆக இது வெறும் நாடகம்தானே?
இப்ப வந்து சேதுபதிக்கு சோப்பு போடும் வேலைதானே பாக்குறீங்க? 
உங்களுக்கு சிறுவர் மீது அக்கறை இருந்து இருந்தால் 
எப்படி உங்களால் மௌனமாக இருக்க முடிந்து இருக்கும்? 

அதை தானே நான் சொல்லியிருக்கிறேன் மருதர் 🙄

2 hours ago, ரதி said:

ஓமோம் அந்த சின்ன பிள்ளைக்கு நடந்ததை பற்றி கதைக்க கூடாது ...நாங்கள் பிள்ளையின்ட தகப்பன் தமிழனா ,தெலுங்கனா என்பது பற்றி  கதைப்போம் 
 
2 hours ago, ரதி said:

ஓமோம் அந்த சின்ன பிள்ளைக்கு நடந்ததை பற்றி கதைக்க கூடாது ...நாங்கள் பிள்ளையின்ட தகப்பன் தமிழனா ,தெலுங்கனா என்பது பற்றி  கதைப்போம் 
 
விமர்சனத்துக்கு முன் பதிவு முழுவதையும் படித்திருக்கவேண்டும். 

இங்கே சம்பவத்தை நேரில் பார்த்தவர் யாரும் இல்லை. 

ௐருத்தரைப் பார்த்து ௐருத்தர் அத்தோடு கொஞ்சம் அவரவர் கற்பனை. இப்படியே போகுது.

குழந்தையைப்பற்றி பதிவு போட்டவரையும் சந்தேகத்தோடு சிலர்பதிவிட்டிருந்தனர்.

அதனால்த்தான் அவரையும் அவரின் பதிவையும் விசாரணைக்குட்படுத்த வேண்டுமென போட்டிருந்நேன்.

அவர் பதிவுக்கு பொறுப்பானவரென காணும்பட்சத்தில் அவருக்கரிய தண்டனை கிடைக்கும் அல்லது கிடைக்காது போகும்.

இங்கு தெரிவிக்கும் கண்டனத்தில் ௐன்றும் நடக்கப் போவதில்லை.

அதுசரி இசைப்பிரியா பற்றி உங்களுக்கு தெரியும். நடந்தவையெல்லாம் முழு உலகத்திற்கே தெரியும்.

சாட்சிகள், ஆவணங்கள் என எல்லாம் இருந்தும்.......

ஆண்டுகள் பதினொன்றாகிறது...

தமிழனா தெலுங்கனா யாருக்கென்ன. தானே சொல்லிப் போனார்.

உங்களுக்கு என்ன விருப்பமோ அதைக்கதையுங்கோ. யார் கேட்டா. 

1 hour ago, Maruthankerny said:

அண்ணா இதை யார் நியாய படுத்துகிறான்?

செய்வேன் என்று ட்வீட் போட்டத்துக்கு துள்ளுறீங்களே 
உங்கள் கண்முன்னாலேயே அதை செய்தவன் கடந்து போகிறான் 
என்ன செய்து கிழித்தீர்கள்? என்றுதான் கேட்க்கிறோம் 

ஆக இது வெறும் நாடகம்தானே?
இப்ப வந்து சேதுபதிக்கு சோப்பு போடும் வேலைதானே பாக்குறீங்க? 
உங்களுக்கு சிறுவர் மீது அக்கறை இருந்து இருந்தால் 
எப்படி உங்களால் மௌனமாக இருக்க முடிந்து இருக்கும்? 

சில நேரங்களில் சிலமனிதர்கள் என்று ஏன் சொன்னார்?

அவர்களை புரிந்து கொள்ள முடியாதென்பதாலா? அல்லது

அவர்கள் முழு பைத்தியங்களென்பதாலா?

Maruthankerny not for you

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.