Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, zuma said:

ஆமாம், ஈரானில் தேர்தல் முடிய முன்னரே முடிவுகள் கிடைத்துவிடும். மக்களால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படடாலும் உச்ச(சா) கட்டட  தலைவர்  தான் இறுதி முடிவு எடுப்பார், அப்படிப் பட்ட சனநாயக 
நாடு. 

ஒவ்வொரு நாடும் தமக்கெயுரித்தான அரசியல் அமைப்பையும் தேர்தல் முறைகளையும் கொண்டிருக்கும். எல்லா நாடுகளுமே அமெரிக்க தேர்தல் முறைகளைத்தான் கைக்கொள்ள வேண்டும் என்பதில்லை.

ஏனென்றால் நாம் எல்லோரும் அதிகம் புழுகும் சனநாயகம் அதைத்தான் சொல்கிறது. 

அது தவிர..

சனநாயகம் என்பது ஒரு அரசியல் முறைமையே தவிர அது மட்டுமே அரசியல் அல்ல. 

🙂

  • Replies 203
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

ஒவ்வொரு நாடும் தமக்கெயுரித்தான அரசியல் அமைப்பையும் தேர்தல் முறைகளையும் கொண்டிருக்கும். எல்லா நாடுகளுமே அமெரிக்க தேர்தல் முறைகளைத்தான் கைக்கொள்ள வேண்டும் என்பதில்லை.

ஏனென்றால் நாம் எல்லோரும் அதிகம் புழுகும் சனநாயகம் அதைத்தான் சொல்கிறது. 

அது தவிர..

சனநாயகம் என்பது ஒரு அரசியல் முறைமையே தவிர அது மட்டுமே அரசியல் அல்ல. 

🙂

இதென்ன வார்த்தை ஜாலமென்று எனக்கு விளங்கவில்லை கப்ரன்!

"தேர்தல் முடியமுதலே முடிவு செய்வது" ஒரு தேர்தல் முறையோ?🤔

"ஜனநாயகம் என்பது அரசியல் முறைமை, அது மட்டுமே அரசியல் அல்ல" - இதை ஒருக்கா விளக்குங்கோ! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ஆமாம், ஈரானில் தேர்தல் முடிய முன்னரே முடிவுகள் கிடைத்துவிடும். மக்களால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படடாலும் உச்ச(சா) கட்டட  தலைவர்  தான் இறுதி முடிவு எடுப்பார், அப்படிப் பட்ட சனநாயக 
நாடு. 

உலகத்துக்கு ஜனநாயகம் படிப்பிக்கிற வாத்தியார் முதல்லை தான் ஒழுங்காய் இருக்கணும்...

ஊரே சிரிக்குதே..🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஒவ்வொரு நாடும் தமக்கெயுரித்தான அரசியல் அமைப்பையும் தேர்தல் முறைகளையும் கொண்டிருக்கும். எல்லா நாடுகளுமே அமெரிக்க தேர்தல் முறைகளைத்தான் கைக்கொள்ள வேண்டும் என்பதில்லை.

ஏனென்றால் நாம் எல்லோரும் அதிகம் புழுகும் சனநாயகம் அதைத்தான் சொல்கிறது. 

அது தவிர..

சனநாயகம் என்பது ஒரு அரசியல் முறைமையே தவிர அது மட்டுமே அரசியல் அல்ல. 

🙂

நான் அமெரிக்காவின் சனநாயகத்துக்கு  கொடி பிடிக்கும் ஆதரவாளன் இல்லை, ஆனால் கற்கால ஷரியா சட்டத்தை முன்னிறுத்தும் தலைவர், அமெரிக்காவின் சனநாயகத்திதை விமர்சிப்பது கேலிக்கூத்தானது ஆகும்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, zuma said:

நான் அமெரிக்காவின் சனநாயகத்துக்கு  கொடி பிடிக்கும் ஆதரவாளன் இல்லை, ஆனால் கற்கால ஷரியா சட்டத்தை முன்னிறுத்தும் தலைவர், அமெரிக்காவின் சனநாயகத்திதை விமர்சிப்பது கேலிக்கூத்தானது ஆகும்.
 
ஒரு காலத்தில் ஈரான்,ஈராக் எல்லாம் கொஞ்சம்  நவ நாகரீத்துடன் தான் இருந்தது.அதை அளவோடு விட்டுருந்தால் இன்றும் அப்படியே இருந்திருக்கும்.அமெரிக்காவும் அதன் கூட்டுகளும் தங்கள் நாகரீகத்தை புகுத்த ஆரம்பித்ததின் விளைவுகள் தான் இவைகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kapithan said:

ஒவ்வொரு நாடும் தமக்கெயுரித்தான அரசியல் அமைப்பையும் தேர்தல் முறைகளையும் கொண்டிருக்கும். எல்லா நாடுகளுமே அமெரிக்க தேர்தல் முறைகளைத்தான் கைக்கொள்ள வேண்டும் என்பதில்லை.

ஏனென்றால் நாம் எல்லோரும் அதிகம் புழுகும் சனநாயகம் அதைத்தான் சொல்கிறது. 

அது தவிர..

சனநாயகம் என்பது ஒரு அரசியல் முறைமையே தவிர அது மட்டுமே அரசியல் அல்ல. 

🙂

அட....உங்கடை பிரச்சனை வேறை....

இவையின்ரை பிரச்சனை பெரிய பிரச்சவையாமெல்லே....

Scenes as Tory Brexiters respond to Biden win.

Bild

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்; வெற்றியின் விளிம்பில் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல்; வெற்றியின் விளிம்பில் ஜோ பைடன்

பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதின் விளைவுதான், அங்கு முடிவுகள் வெளியாவதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா அச்சத்தாலும், முன்கூட்டியே வாக்கு அளிப்பதை பல மாகாணங்களும் எளிமைப்படுத்தியதாலும், இந்த முறை முன்கூட்டி வாக்கு அளித்தவர்களும், தபால் மூலம் வாக்களித்தவர்களும் அதிகம், கடந்த 2016 தேர்தலில் இந்த எண்ணிக்கை 4.60 கோடியாக இருந்துள்ளது. இந்த முறை அது 10 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த முறையை விட இந்தமுறை வாக்குகள் அதிகம் என்றாலும், எண்ணுவதற்கு அதே எண்ணிக்கையிலான அதிகாரிகளே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.

மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270-ஐ கைப்பற்றிவிட்டால் வெள்ளை மாளிகையில் அமர்ந்து உலகையே விரலசைவில் ஆட்டிப்படைக்க முடியும் என்பதால், நாற்காலியை தக்க வைப்பதற்கு டொனால்டு டிரம்பும், நாற்காலியை கைப்பற்றுவதற்கு ஜோ பைடனும் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்த டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
எதிர் தரப்பில் தேர்தலை திருட முயற்சிகள் நடப்பதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் ஜோ பைடன் அவற்றை திட்டவட்டமாக நிராகரித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நமது ஜனநாயகத்தை யாரும் நம்மிடமிருந்து பறிக்கப்போவதில்லை. இப்போது மட்டுமல்ல எப்போதும் இல்லை” என கூறினார்.

இதே போன்று குடியரசு கட்சி ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றிய முன்னாள் அரசு வக்கீல்கள் 19 பேர் டிரம்புக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள், “டிரம்பின் அச்சுறுத்தல்கள், மோசடி கருத்துகள், வெற்றியின் தவறான அறிவிப்புகள் ஆதாரமற்றவை, பொறுப்பற்றவை” என கூறி உள்ளார்கள்.

இத்தனை பரபரப்புக்கும் மத்தியில் பென்சில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, வட கரோலினா, நெவாடா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. பரபரப்புக்கும் பஞ்சமில்லை. பிலடெல்பியாவில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாக்கும் சதித்திட்டத்தின் மத்தியில் ஆயுதம் ஏந்திய ஒரு நபர் பென்சில்வேனியா மாகாண நகரமான பிலடெல்பியாவில் கைது செய்யப்பட்டார். அங்கு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் பிரசார குழு கோர்ட்டை நாடியபோது, அது நிராகரிக்கப்பட்டது. இதேபோல் மிச்சிகனிலும் டிரம்ப் தரப்பு வழக்கை அந்த மாகாண கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

ஜோ பைடன் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். டிரம்பை விட ஜோ பைடனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அரிசோனாவை ஜோ பைடன் கைப்பற்றிவிட்டால், அவர் நெவேடாவிலும், ஜார்ஜியா அல்லது பென்சில்வேனியாவில் வெற்றி பெற்று விட்டால் போதுமானது. அவர் அமெரிக்க ஜனாதிபதியாகி விட முடியும். ஜார்ஜியாவிலும், நெவேடாவிலும், அரிசோனாவிலும் கூடுதலாக வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னணியில் உள்ளார். 

 டிரம்பை பொறுத்தமட்டில் அவர் பென்சில்வேனியாவில் மட்டுமே முன்னிலை பெற்று வந்தார். ஆனால் அங்கும் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். எனவே ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதி  ஆவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/07062345/Biden-On-Verge-Of-Victory.vpf

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தேர்தல் முறை மீது தனக்கு நம்பிக்கை உள்ளது - கனடா பிரதமர்

அமெரிக்க தேர்தல் முறை மீது தனக்கு நம்பிக்கை உள்ளது - கனடா பிரதமர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்றுள்ளதால், அவர் அமெரிக்காவின் அதிபர் பதவியை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதனிடையே அதிபர் பதவிக்கு ஜோ பைடன் தவறாக உரிமை கோரக் கூடாது என டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்க அதிபராக யார் பொறுப்பேற்பார் என உலக நாடுகள் முழுவதும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.  

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவினை உன்னிப்பாகக் கவனிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

பார்லிமெண்ட் ஹில்சில் வைத்து அமெரிக்க தேர்தல் குறித்து ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர்,

நம் அண்டை நாட்டின் தலைவராக யார் இருப்பார்கள் என்பதைப் பார்ப்பதற்கு நீண்ட இழுபறியில் பல நாட்கள் நாம் காத்திருக்க வேண்டி வரலாம்.

நிச்சயமாக, நாம் அதை கவனமாகப் பின்பற்றுகிறோம். நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.  தானும் தனது அரசாங்கமும் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். 

அமெரிக்க தேர்தல் முறை மீது தனக்கு நம்பிக்கை உள்ளது. அமெரிக்க தேர்தல் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடுவதில் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம் என்றார். 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/07093345/Trudeau-says-he-wont-comment-on-US-election-until.vpf

  • கருத்துக்கள உறவுகள்

மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சட்ட நடவடிக்கை: 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட  ட்ரம்ப் முயற்சி! | Athavan News

மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சட்ட நடவடிக்கை: 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட ட்ரம்ப் முயற்சி!

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் முன்னிலை வகித்துவரும் சில மாகாணங்களில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளுக்காக, 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட குடியரசு கட்சி முயற்சிசெய்து வருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 இடங்கள் பெறவேண்டும் என்ற நிலையில் ஜோ பிடன் 264 இடங்களைப் பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், பென்சில்வேனியா, ஜோர்ஜியா, நெவாடா, வட கரோலினா மற்றும் அலாஸ்கா ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையாமல் நீடித்து வருகிறது.

எனினும், இதுவரை டொனால்ட் ட்ரம்புக்கு சாதகமாக இருந்த ஜோர்ஜியா மற்றும் பென்சில்வேனியாவில் ஜோ பிடன் தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இதுவரை 46 இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜார்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நவேடா ஆகிய 4 மாகாணங்களில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பிடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகின.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் ட்ரம்ப் தொடந்த வழக்கு தள்ளுபடியான நிலையில், ஜார்ஜியா மாகாண அராசங்கம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி அளித்துள்ளது.

ஜோ பிடன் முன்னிலை வகித்து வரும் மேலும் சில மாகாணங்களிலும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ட்ரம்ப் மேற்கொண்டுவரும் சட்ட நடவடிக்கைகளின் செலவுகளுக்காக குடியரசு கட்சியின் சார்பில் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அக்கட்சியினர் கொடையாளிகளிடம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட அவர்கள் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://athavannews.com/மறுவாக்கு-எண்ணிக்கை-நடத்/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில் ஈரான்,ஈராக் எல்லாம் கொஞ்சம்  நவ நாகரீத்துடன் தான் இருந்தது.அதை அளவோடு விட்டுருந்தால் இன்றும் அப்படியே இருந்திருக்கும்.அமெரிக்காவும் அதன் கூட்டுகளும் தங்கள் நாகரீகத்தை புகுத்த ஆரம்பித்ததின் விளைவுகள் தான் இவைகள்...

இஸ்லாம் தொடங்கிய காலத்தில் இருந்தே ஸுன்னி ஷியாய் என்று மாறி மாறி கழுத்துவெட்டிக் கொண்டு திரியுறாங்கள். நீங்கள் என்ன எண்டால் பாலும் தேனும் ஓடின மாதிரி சொல்லுகின்றிர்கள். தன்னுடைய குடும்பத்திதை வடிவ பாக்க தெரியாதவன், பக்கத்து வீட்டுக்காரனை குற்றம்  சொன்ன மாதிரி.

Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, zuma said:

கௌபோய் தொடங்கின காலம் தொடக்கம் அமெரிக்காவிலை என்ன நடக்குது ராசா? ஒரே டுமீல் டுமீல்.
 மரணதண்டணை குடுக்குற நாடுகளிலை அமெரிக்காவும் முன்னுக்கு நிக்கிதெல்லோ?
 ராசனுக்கு கௌந்தனாமோ சித்திரவதை  சிறைபற்றி ஏதும் தெரியுமோ? பூர்வீககுடி செவ்விந்தியர்களை அழித்த வரலாறு ஆவது தெரியுமோ?
சும்மா பினாத்தப்படாது....!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்க யாரும் அமெரிக்காவின் நாகரீகம் நவ நாகரீகம் என்று கொடி பிடிக்கவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நேரமும் பெனிசிலவேனியாவுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படலாம்.
20 புள்ளிகள் கொண்ட மாநில முடிவுகள் அறிவித்தால் பைடன் 273 எடுத்து ஜனாதிபதியாக அறிவிக்கப்படும்.
மற்றைய மாநிலங்களின் முடிவுகளுக்காக காத்திருக்கத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

எந்த நேரமும் பெனிசிலவேனியாவுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படலாம்.
20 புள்ளிகள் கொண்ட மாநில முடிவுகள் அறிவித்தால் பைடன் 273 எடுத்து ஜனாதிபதியாக அறிவிக்கப்படும்.
மற்றைய மாநிலங்களின் முடிவுகளுக்காக காத்திருக்கத் தேவையில்லை.

இரண்டு வேட்ப்பாளர்கள்  இடையே வாக்கு வித்தியாசம் 0.5% விட  குறைவாக இருப்பதினால்,வாக்குகள் மீள எண்ணக் கூடிய சாத்தியமுண்டு.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கௌபோய் தொடங்கின காலம் தொடக்கம் அமெரிக்காவிலை என்ன நடக்குது ராசா? ஒரே டுமீல் டுமீல்.
 மரணதண்டணை குடுக்குற நாடுகளிலை அமெரிக்காவும் முன்னுக்கு நிக்கிதெல்லோ?
 ராசனுக்கு கௌந்தனாமோ சித்திரவதை  சிறைபற்றி ஏதும் தெரியுமோ? பூர்வீககுடி செவ்விந்தியர்களை அழித்த வரலாறு ஆவது தெரியுமோ?
சும்மா பினாத்தப்படாது....!

26 minutes ago, zuma said:

இரண்டு வேட்ப்பாளர்கள்  இடையே வாக்கு வித்தியாசம் 0.5% விட  குறைவாக இருப்பதினால்,வாக்குகள் மீள எண்ணக் கூடிய சாத்தியமுண்டு.

2000 ஆண்டு தேர்தலில் வெறும் 565 வாக்குகள் வித்தியாசத்தால் புஸ் அடாத்தாக வெற்றி பெற்றார்.அவரது தம்பி கவர்னராக இருந்தபடியால் அண்ணனுக்காக சகல விதிகளையும் தானே கையாண்டார்.
 
கடைசியில் சுப்றீம் கோட் குடியரசுகட்சி நீதிபதிகள் கூடுலாக இருந்ததால் அங்கும் நீதி நிலைக்காமல் புஸ்க்கு ஆதரவாக தீர்பு எழுதப்பட்டது.

அதன் பின்பும் அல் கோரின் விட்டுக் கொடுப்பால் 271 புள்ளிகளை எடுத்து தேர்தலில் வென்றார்.

அடாத்தாக வென்றதாலோ என்னவோ புஸ் உம் குடும்பமும் இப்போது வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இப்போ பிந்த செருப்புக்கும் யாரும் கணக்கெடுப்பதில்லை.

அமெரிக்காவை பற்றியோ உலக அரசியல்  குறித்தோ தமிழ் யூருப் தளங்களில் கூறும் விடயங்களில்  பெரும்பானையானவை Fake News களாகவோ சதிக் கோட்பாடுகளை பரப்புவோரின் கோட்பாடுகளை உள்வாங்கியவர்களின் மறு பிரதியாகவே  உள்ளது. அமெரிக்க/ உலக அரசியல் குறித்து விளங்கி கொள்வதற்கான தளங்களோ அவை குறித்த நூல்களோ வாசித்து  விளங்கி கொள்வது கடினமானது  என்பதால் அவற்றை விட சதி கோட்பாளர்களின் யூ ருயூப் தளங்கள் கவர்சசிகரமாக இலகுவாகவும் இருப்பதால் பெரும்பாலான தமிழ் யூருப் தளங்களும் அவற்றை மறு ஒளிபரப்பு செய்து மக்களுக்கு அறிவூட்டுவதற்கு பதிலாக போலியான தகவல்களை விதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.  

  • கருத்துக்கள உறவுகள்

123576794_10157820143087992_207377450666

"நன்றி வணக்கம் "என  விரைவில் எதிர் பார்க்கிறோம்.😜

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடன் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு 8 மணிக்கு அமெரிக்க மக்களுக்கு பைடன் உரையாற்றுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனுக்கும் , கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துக்கள் ...இவர்களது ஆட்சியிலாவது அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் கொலைகள் குறையுதா என்று பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

இங்க யாரும் அமெரிக்காவின் நாகரீகம் நவ நாகரீகம் என்று கொடி பிடிக்கவில்லையே.

ஆனால் ஷரியா காட்டு சட்டத்தை பின்பற்றும் ஈரானின் அனுதாபியாக இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர்களே DEMOCRAT  devils     என்று தான் சொல்லினம்.

இவங்கள் தான் விடுதலைப்புலிகள் மீதான தடையை கொண்டு வந்தது. முள்ளிவாய்கால் வரை எம் இனத்தை அழிவுக்கு கொண்டு போய் விடுப்புப் பார்த்ததும்.

ஒபாமா.. மத்திய கிழக்கின் ஒசாமா. உலக வரலாற்றில் பல மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கிய ஒரே நோபல் பரிசுபெற்ற சமாதானவாதி.. ஒபாமாகவே இருக்க முடியும்..! ஈழத்தின் பெரும் இனப்படுகொலையைக்கும் மறைமுகக் காரணி. 

இவங்களால்.. உலகிற்கு.. விமோசனமா..??! ட்ரம் காலத்தை விட..ஒபாமா காலத்தில் தான் கறுப்பர்கள் பலர் சகட்டு மேனிக்கு படுகொலைகளுக்கு உள்ளானார்கள்.

அடிப்படையில்.. அமெரிக்க தேர்தல் சனநாயகம் சந்தி சிரிக்கும்.. தேர்தல் சூதாட்டமாக காட்சிப்பட்டதே இந்தத் தேர்தலில் நன்கு வெளிப்படையாக தோன்றியது. இது உலகில் ஏலவே சுத்துமாத்து ஊழல் சனநாயகம் செய்யும் நாடுகளுக்கு ஒரு ஊக்கியாக தவறான உதாரணமாக இருக்கப் போகிறது.

 ரஷ்சியா.. சீனா.. ஈரான் போன்ற நாடுகள்.. அமெரிக்க சனநாயகத்தை எள்ளி நகையாடி இருந்தன. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

அமெரிக்காவை பற்றியோ உலக அரசியல்  குறித்தோ தமிழ் யூருப் தளங்களில் கூறும் விடயங்களில்  பெரும்பானையானவை Fake News களாகவோ சதிக் கோட்பாடுகளை பரப்புவோரின் கோட்பாடுகளை உள்வாங்கியவர்களின் மறு பிரதியாகவே  உள்ளது.

அதில் முக்கியமானது அமைதி மதமான முஸ்லிம் மதத்தின் மீது பழி போடுவதற்காக அமெரிக்கா செப்ரெம்பர் 11 தேதி நியூயார்க்கில் தனது கட்டடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தி  3000 மேற்பட்ட தனது மக்களை கொன்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் ஷரியா காட்டு சட்டத்தை பின்பற்றும் ஈரானின் அனுதாபியாக இருப்போம்.

சார் இங்கே யார் ஈரான் அனுதாபிகளாக இருக்கின்றார்கள்? :grin:

48 minutes ago, nedukkalapoovan said:

இது உலகில் ஏலவே சுத்துமாத்து ஊழல் சனநாயகம் செய்யும் நாடுகளுக்கு ஒரு ஊக்கியாக தவறான உதாரணமாக இருக்கப் போகிறது.

இது நூற்றுக்கு நூறு வீதம் முன்னுதாரண நிகழ்வு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.