Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணை வேண்டும் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் ஐயா நல்லா😀 ஆட்சி அரசில் அங்கம் வகித்து நாடு நாடாய் ஓடுபட்டு திரியேக்கிளை இவ்வளவு கேள்வியும் எங்கு போனது ?

அதெல்லாம் கை நழுவி போய்விடப்போகிறதே, மற்றைய தமிழ்த் தலைவர்கள் பேசும்போது தான் மட்டும் பேசாமல் இருந்தால் தன்னை மக்கள் இனங் கண்டு விடப் போகிறார்களே என்கின்ற பயத்தில் சிலர் குரல் கொடுக்கிறார்கள். இப்போ சிங்களவரும், இஸ்லாமியரும் இவர் பேசியதை திருப்பி விட்டால் அதற்கும் வேறொரு வியாக்யானம் செய்வார். முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் முதல் முரண்பாடு வரகாரணமே, இலங்கையில்  தமிழருக்கு நடந்தது இனவழிப்பு என்று விக்கினேஸ்வரன் சொல்ல அது இல்லை என்று சுமந்திரன் முரண்டு பிடித்ததே. அதே வாயால் முஸ்லீம்களுக்கு யாழ்ப்பாணத்தில் நடந்தது இனச் சுத்திகரிப்பு என முஸ்லீம்களின் ஒரு கூட்டத்தில் இதே சுமந்திரன் பேசினார். சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பில் இருந்த போது இந்தியாவிற்கு சென்றிருந்தார். ஆண்டு மறந்து விட்டேன். அப்போ ஜெனீவா கூட்டத் தொடருக்கு கூட்டமைப்பு போவதென்று  தீர்மானிக்கப்படட்டது. சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தியாவில் இருந்தபோது இலங்கையில் இருந்த சம்பந்தரும், சுமந்திரனும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின்படி ஜெனீவாவுக்கு போவதில்லை என்று தீர்மானித்து அறிவித்து விட்டார்கள். ஆனால் மற்றைய உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை. இந்தியாவிலிருந்து திரும்பிய சுரேஷிடம் பத்திரிகையாளர் வினவிய போது அவர் தங்களின் திட்டப்படி த. தே. கூட்டமைப்பு ஜெனிவா செல்லும் என்று தெரிவித்தார். அங்கேயே அந்த இருவரின் தான்தோன்றித்தனமான முடிவுகள் அம்பலமானது. சுமந்திரனை பத்திரிகையாளர் தொடர்பு கொண்டு கூட்டமைப்பு ஏன் ஜெனிவா செல்லவில்லை? என்ற கேள்விக்கு ஜெனிவாவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாட்டைச் சேர்ந்த யாரோ  "நீங்கள் வரத் தேவையில்லை அது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று சொன்னார்களாம். பாதிக்கபட்டவர்கள் இல்லாமல் யாரோ எங்களுக்காக பேசுவார்களாம், நாங்கள் அதை நம்பவேணுமாம். எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிப்போட்டு இப்போ கூப்பாடு போட்டு என்ன பயன்?  இவர் ஒரு சந்தர்ப்பவாதி. இவர் பேச்சை யாரும்  தீவிரமாக எடுத்துகொள்ளத்தேவையில்லை. 

13 hours ago, tulpen said:

நான் கூறிய அந்த தமிழ் வசனத்தை வாசித்து புரிந்து கொள்ளுங்கள். புரியாவிட்டால் பல முறை வாசியுங்கள். எனது தாய் மொழியான தமிழில்  தமிழ் புலமை உள்ளவர்களுக்கு  அதன் கருத்து புரியும் படியாக தெளிவாக எழுதப்பட்ட வசனம் அது. 

உண்மை. சிலர் இங்கு பந்தி பந்தியாக எழுதுவார்கள். அவர்களுக்கே தெரியாது என்ன எழுதுகிறோம் என்று. தனிப்படட ரீதியில் அவர்களுக்கு எதிரான கோப தாபங்களை இங்கே எழுதி ஆறுதலடைகிறார்கள். சிலர் நினைக்கிறார்கள் பாராளுமன்றில் ஆவேசமாக பேசியவுடன் எல்லாம் முடிந்தது என்றும், ஈழத்துக்கு கிடடே வந்துவிட்ட்தாட்கவும் இனி எல்லாம் முடிந்தது என்று.

இதே கதையைத்தான் அடுத்த முறையும் வந்து பேசுவார்கள். அவ்வளவுதான். பேச்சிலே அல்ல பெலத்தில்தான் ( செயலில் ) எல்லாம் இருக்கிறது. மற்றப்படி எல்லாம் புஷ்வாணம்தான் . 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

தமிழ்நெட் பக்கச்சார்பு, கீத பொன்கலன் வார்த்தை ஜாலம். அப்போ யார் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள்? 2009 வரை புலிகளுக்கு ஆதரவாக இருந்த நீங்கள் இன்று அவர்களை ஆதரிப்பவர்களை எதிர்க்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று திரி திரியாக கருத்தெழுதுவது ஏனோ? 

ரஞ்சித், உங்களுக்கும் இங்கே இருக்கும் சிலர் போல யோசிக்கும் சக்தியை ஹிப்போகம்பஸ் பறித்துக் கொண்டு விட்டதா? சுமந்திரன் பற்றிய ஒரு பொய்யான தகவலை மறுத்தால் நான் புலிகளை எதிர்ப்பவனா? 

நான் புலிகளை எதிர்ப்பவனோ தூற்றுபவனோ அல்ல. ஆனால் 2012 இல் நான் யுத்தம் முடிந்து முதலில் தாயகம் சென்ற போது, இறுதிப் போர் காலத்தில்  தமிழ் மக்களின் நலத்தைவிட தம் இருப்பைத் தக்க வைக்க புலிகள் எடுத்த முடிவுகள் பற்றிய நேரடி சாட்சிகளைக் கேட்ட பின்னரே அந்த சம்பவங்களை விமர்சனம் செய்கிறேன். அதே சம்பவங்களை வைத்துக் கொண்டு புலிகள் 2009 இற்கு முன்னர் நடந்து கொண்ட விதத்தையும் நான் இப்போது புதிதாக புரிந்து கொள்கிறேன். இது புலி எதிர்ப்பு என்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

இப்ப இங்கே பேசு பொருள்: இனப்படுகொலை நடக்கவில்லையென்று சுமந்திரன் சொன்னாரா என்பது. இதற்கு மட்டுமல்ல, தமிழ் அரசியல் பற்றிய எந்தக் கேள்விக்கும் தமிழ்நெற் ஒபினியன் ஆக்கம் பக்கச் சார்பற்ற ஆதாரமாக அமையாது. அது எப்போதுமே மிதவாத அரசியலை விமர்சிக்கும் புலிகள் ஆதரவுத் தளம்.

கீதபொன்கலன் சும் வட மாகாணசபையின் தீர்மானம் பற்றிய கேள்விக்கு  சொன்ன பதிலை தான் புரிந்து கொண்ட வியாக்கியானமும் ஆதாரம் அல்ல. 

அப்ப எது ஆதாரம்? முதல் நிலை ஆதாரம் சுமந்திரன் பேசிய ஒலி ஒளிப்பதிவுகள். இவை தாராளமாக இருக்கின்றன. கனடாவில் "இனப்படுகொலையை மறுக்கிறீர்களா?" என்று ஆறு தடவைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கேட்கப் பட்டபோது சுமந்திரன் சொன்ன பதில் தான் மேலே என் ஒரிஜினல் பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

உணர்ச்சி பூர்வமான தமிழ் பற்று என்கிற பதாகையின் கீழ் நின்று கொண்டு, எங்களுக்குப் பிடிக்காத ஆட்கள் சொல்வதை திரித்து அதை மீண்டும் மீண்டும் பரப்பும் வேலை பொய்ப்பிரச்சாரம்.

இவற்றை எதிர்ப்போர் புலி எதிர்ப்பாளர்கள் அல்ல. பொய்செய்திகளைப் பரப்புவோர் தமிழ் தேசிய அபிமானிகளும் அல்ல!    

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=37937

அது சுவிட்சர்லாந்து இல்லை, ஜேர்மனியின் பேர்ன் நகரம்

சுமந்திரனின் பேட்டி இங்கே முழுதாக இருக்கிறது.

கேட்பவர்கள் கேட்கலாம்.

இனக்கொலை என்பதை தேவையில்லாமல் பேசியதன் மூலம் வடமாகாணசபையினர் அதனை தோற்கடித்துவிட்டார்கள் என்று கூறுகிறார்.

ஐ நா ஆணையாளர் தன்னிடம் கூறும்போது நடந்தவை எப்படிப்பட்ட கொடூரங்களாக இருந்தாலும், தன்னால் இனக்கொலையென்று ஏற்றுக்கொள்ளமுடியாதென்று கூறினாராம். ஆகவே இதுபற்றி இப்போது பேசத்தேவையில்லை. விசாரணைகள் தொடர்ந்து நடக்கும்போது சிலவேளை விசாரணையாளர்கள் இது இனக்கொலைதான் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கும்பொழுது சிலவேளை இனக்கொலை என்பதை நிரூபிக்கலாம் என்று கூறுகிறார். 

ஆனால் வேதனை என்னவென்றால், சுமந்திரன் செய்த இவ்வாறான விசாரணைகளுக்கான உதவிகள், அணுசரணைகள் எல்லாமே இன்று தோற்கடிக்கப்பட்டு, காட்சிகள் மாற்றப்பட்டு ஈற்றில் எதுவுமில்லாமல் வந்து நிற்கின்றன. 

ஐ நா மனிதவுரிமைக் கவுன்சிலில் இலங்கையை, இந்தியாவை, நல்லாட்சியரசாங்கத்தைக் காப்பாற்ற, அவர்களை தர்மசங்கடத்திலிருந்து காப்பற்ற சுமந்திரன் வேண்டுமென்றே பேசாதுவிட்ட தமிழரின் அவலங்கள் இன்று காற்றோடு காற்றாகப் போய்விட்டன. 

இதற்கு எதிரான கருத்துக்கள் இல்லையாக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

இதற்கு எதிரான கருத்துக்கள் இல்லையாக்கும் ?

“what is genocide? Genocide is an international crime that must be proved in a judicial form, not in a representative one… (passing the resolution) does not mean the crime of genocide is proved. The crime of genocide has certain ingredients that must be proved in an established court…even the High Commissioner of Human Rights very specifically said…it has not satisfied the act of genocide…crime of genocide is a legal issue. Not what you feel like….Unless you prove ingredients of those offences very specifically, it is not genocide.

👆மேலேயே எதிரான கருத்து இருக்கிறது: இந்தப் பேட்டியில் இருப்பதைத் தான் கீதபொன்கலனும் குறிப்பிட்டிருக்கிறார். சட்ட ரீதியில் இனப்படுகொலை என்று நிரூபிக்க இயலாது என்பதே அடிக்கருத்து. பிரேரணை முட்டாள் தனமானது என்றும் சொல்லியிருக்கிறார். 

கேட்டுப் பாருங்கள்! உங்களுக்கு விளங்கியதை எடுத்துக் கொள்ளுங்கள்! 
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

ரஞ்சித், உங்களுக்கும் இங்கே இருக்கும் சிலர் போல யோசிக்கும் சக்தியை ஹிப்போகம்பஸ் பறித்துக் கொண்டு விட்டதா? சுமந்திரன் பற்றிய ஒரு பொய்யான தகவலை மறுத்தால் நான் புலிகளை எதிர்ப்பவனா? 

நான் புலிகளை எதிர்ப்பவனோ தூற்றுபவனோ அல்ல. ஆனால் 2012 இல் நான் யுத்தம் முடிந்து முதலில் தாயகம் சென்ற போது, இறுதிப் போர் காலத்தில்  தமிழ் மக்களின் நலத்தைவிட தம் இருப்பைத் தக்க வைக்க புலிகள் எடுத்த முடிவுகள் பற்றிய நேரடி சாட்சிகளைக் கேட்ட பின்னரே அந்த சம்பவங்களை விமர்சனம் செய்கிறேன். அதே சம்பவங்களை வைத்துக் கொண்டு புலிகள் 2009 இற்கு முன்னர் நடந்து கொண்ட விதத்தையும் நான் இப்போது புதிதாக புரிந்து கொள்கிறேன். இது புலி எதிர்ப்பு என்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

இப்ப இங்கே பேசு பொருள்: இனப்படுகொலை நடக்கவில்லையென்று சுமந்திரன் சொன்னாரா என்பது. இதற்கு மட்டுமல்ல, தமிழ் அரசியல் பற்றிய எந்தக் கேள்விக்கும் தமிழ்நெற் ஒபினியன் ஆக்கம் பக்கச் சார்பற்ற ஆதாரமாக அமையாது. அது எப்போதுமே மிதவாத அரசியலை விமர்சிக்கும் புலிகள் ஆதரவுத் தளம்.

கீதபொன்கலன் சும் வட மாகாணசபையின் தீர்மானம் பற்றிய கேள்விக்கு  சொன்ன பதிலை தான் புரிந்து கொண்ட வியாக்கியானமும் ஆதாரம் அல்ல. 

அப்ப எது ஆதாரம்? முதல் நிலை ஆதாரம் சுமந்திரன் பேசிய ஒலி ஒளிப்பதிவுகள். இவை தாராளமாக இருக்கின்றன. கனடாவில் "இனப்படுகொலையை மறுக்கிறீர்களா?" என்று ஆறு தடவைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கேட்கப் பட்டபோது சுமந்திரன் சொன்ன பதில் தான் மேலே என் ஒரிஜினல் பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

உணர்ச்சி பூர்வமான தமிழ் பற்று என்கிற பதாகையின் கீழ் நின்று கொண்டு, எங்களுக்குப் பிடிக்காத ஆட்கள் சொல்வதை திரித்து அதை மீண்டும் மீண்டும் பரப்பும் வேலை பொய்ப்பிரச்சாரம்.

இவற்றை எதிர்ப்போர் புலி எதிர்ப்பாளர்கள் அல்ல. பொய்செய்திகளைப் பரப்புவோர் தமிழ் தேசிய அபிமானிகளும் அல்ல!    

அவர் இனக்கொலை நடக்கவில்லையென்று சொன்னதாக நினைக்கவில்லை. 

ஆனால், அதனை அடக்கி வாசிப்பதாகவே தெரிகிறது. 

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் ரணில் அரசாங்கத்திற்கு தர்மசங்கடமான நிலையினை ஏற்படுத்த அவர் விரும்பாமல் இருந்திருக்கலாம். காலவோட்டத்தில் ரணில் அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கலாம் என்று எண்ணியிருந்திருப்பார்.

ஆனால், இப்போது எதுவுமேயில்லை என்றாகிவிட்டது. பழையபடி அதே புள்ளியில் வந்து நிற்கிறோம், ஆயிரம் காரணங்களோடு. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு முதலிருந்தே தமிழர் பிரச்சனையும், அதை மூடி மறைத்து அரசாங்கம் ஆடிய அட்டூழியங்களும், அதற்கு முட்டுக்கொடுத்து மௌன விரதம் காத்தவர்களும்இப்போ நிஷ்டை கலைந்து கதறுவதன் நோக்கம் என்ன? சுமந்திரன் கூறுவது: இலங்கையில் தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட கொலைகளை இனச்சுத்திகரிப்பு என்று நிறுவுவதற்கு ஆதாரம் போதாதாம். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து திட்டமிட்டு அபிவிருத்தி எனும் பெயரில் தமிழரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களும், அந்த பூர்வீக மக்களுக்கு சம்பந்தமில்லாத சமய கட்டிடங்கள் எழுப்புவது, பேச்சு சுதந்திரம் மறுப்பு, அவர்களின் பொருளாதாரம் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தல், அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு  இராணுவம் ஆக்கிரமித்துள்ளது, அவர்களது சுதந்திரம் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. கல்வி சிதைக்கப்படுள்ளது அவர்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து ஏவி விடப்பட்ட இனக்கலவரங்கள், மறுக்கப்பட்ட நீதி. அரசாங்கமே வலிந்து எம் இனத்தின்மீது போராட்டத்தை திணித்தது. அதே அரசு சர்வதேசத்திடம் பயங்கரவாத நாடகமாடி உதவிகளை பெற்றுக்கொண்டு, பயங்கரவாதிகளை அழிக்கிறோம் எனும் பொய்ப்பிரசாரத்தோடு அழித்ததெல்லாம் வட கிழக்கு அப்பாவி மக்களையும் அவர்களின் பொருளாதாரத்தையுமே. மக்களை வெளியேறவிடாமல் திறந்த வெளியில் தடுத்து வைத்து, அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள், மருந்து போன்றவற்றை தடுத்து கொன்றொழித்தது.. குடிமனை மீது குண்டு மழை பொழிந்து இறந்தவர்களெல்லாம் புலிகள் என கணக்குக்கு காட்டியது. போராட்டம் நின்று போகவில்லை வலிமை பெற்றது. காலையில் எம்மை கண்விழிக்கச் செய்தது புக்காரா விமான குண்டுச்சசத்தங்களும், மரண ஓலங்களுமே. காலையில் வழிபாடு, வியாபாரம் என வெளியேறிய உறவுகளை முதல் விழுந்த குண்டு காவு கொண்டது, சிதறிய உடல்களை அடையாளம் காணவும், காயப்பட்டோரை காப்பாற்ற  கூடும் மக்களை  இலக்கு வைத்து அதே இடத்தில் அடுத்த குண்டு அவர்களையும் பதம் பார்த்தது. பொருளாதாரத் தடையால் வவுனியா சென்று வந்த  மக்களுக்கு சலுகை காட்டி வளைத்து தனக்கு ஒற்றர் வேலை செய்ய வைத்தது சிங்களம்.  அவர்களில் புலிகளுடன் நெருங்கிய தொடர்புடைய சில குடும்பங்களும் அடக்கம். பாடசாலை, கோவில்களில் மக்கள் தஞ்சமடையலாம் அங்கு குண்டு வீசமாட்டார்கள் யாரோ சொன்னார்கள். கூரைமீது பாதுகாப்பு அடையாளம் பெரிதாக குண்டு விமானிகளின் கண்களில் படும்படியாக வர்ணத்தில்,. அங்கும் மக்கள் சிதறினார்களே.பொதுமக்களைத்தானே குறிவைத்து துரத்தியடித்தான். சொந்த இடங்களை விட்டு வெளியேறி எது பாதுகாப்பு தெரியாமல் கூட்டமாக தெருத்தெருவாக நடந்த மக்களை நோக்கி ஆகாயம், நிலம், நீர் பல்வேறு முனைகளில் தாக்குதல். மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பில் குவித்து, பாதைகளை தடுத்து, அகப்பட்ட மக்களின் தொகையை குறைத்து கூறி, வயோதிபர், குழந்தைகள், பெண்கள் எல்லோரையும் கொன்று குவித்தான். மக்களை காப்பாற்ற மனிதாபிமானபோராம். கொன்றது  சாதாரண மக்களை. சரி, மக்களை காப்பாற்ற போர் செய்தவர்கள் காப்பாற்றிய மக்களை தங்க வைக்க என்ன ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள்? மக்களின் தொகையை ஏன் குறைத்து அறிவித்தார்கள்? சிக்குண்ட அனைத்து மக்களளையும் கொல்வதுதான் திட்டம். இது இனச்சுத்திகரிப்பு  இல்லையா? அந்த மக்களை மந்தைகளைப்போல் திறந்த வெளியில்  அடைத்து, அடிமைகளாக நடத்தி, அவர்களிடமே காசு பறித்தார்கள். மனிதாபிமானப்போர் என்று தம்மைத்தாமே புகழ்ந்து கொண்டார்கள். புலிகள் மக்களை கேடயமாக பாவித்தார்களாம். வடக்கில் கொல்லப்பட்டது பொது பொதுமக்கள், குறுகிய நிலப்பரப்பில் குவியும்வரை கொல்லப்பட்டது பொதுமக்கள். இப்போ புலிகள் மக்களை கேடயமாக பிடித்தால் மட்டும் மக்களை விட்டுவிடுவார்கள் என்று புலிகள் நம்புமளவிற்கு சிங்களவனைப்பற்றி அறியாதவர்களா புலிகள்? தமிழ் மக்கள்தான் புலிகள், புலிகள் தான் மக்கள் என்று  கொல்பவன், மக்களுக்காக தங்களை இராணுவம் விட்டு விடுமென எப்படி அவர்கள் எதிர்பார்ப்பார்கள்? அப்படியான எண்ணம் கொண்டவர்கள் ஏன் சரணடைந்தார்கள்? நடந்த இனக்கலவரங்கள், பயணிகளை படகில் வெட்டியதெல்லாம் புலிகள் மக்களை கேடயமாக பாவித்ததாலா? அதற்கு என்ன விளக்கம்? அப்போ இயக்கம் இருந்ததா? ஏற்பட்ட இனக்கலவரத்திலாயினும், போரிலாயினும் அழிந்தது அழிக்கப்பட்டது எல்லாம் தமிழரும் அவர்களின் சொத்துக்களும். இது போதாதா நடந்தது இனச் சுத்திகரிப்பு என நிறுவுவதற்கு? இல்லை என்றால் ஒரு தமிழனும் இல்லாமல் அழிக்கப்பட்டுத்தான் நிறுவ வேண்டுமாயின் அதை நிறுவ வேண்டிய தேவை யாருக்கு? எதற்கு? சுமந்திரன்தான் பதில் கூற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2020 at 20:02, Justin said:

ரஞ்சித், உங்களுக்கும் இங்கே இருக்கும் சிலர் போல யோசிக்கும் சக்தியை ஹிப்போகம்பஸ் பறித்துக் கொண்டு விட்டதா? சுமந்திரன் பற்றிய ஒரு பொய்யான தகவலை மறுத்தால் நான் புலிகளை எதிர்ப்பவனா? 

நான் புலிகளை எதிர்ப்பவனோ தூற்றுபவனோ அல்ல. ஆனால் 2012 இல் நான் யுத்தம் முடிந்து முதலில் தாயகம் சென்ற போது, இறுதிப் போர் காலத்தில்  தமிழ் மக்களின் நலத்தைவிட தம் இருப்பைத் தக்க வைக்க புலிகள் எடுத்த முடிவுகள் பற்றிய நேரடி சாட்சிகளைக் கேட்ட பின்னரே அந்த சம்பவங்களை விமர்சனம் செய்கிறேன். அதே சம்பவங்களை வைத்துக் கொண்டு புலிகள் 2009 இற்கு முன்னர் நடந்து கொண்ட விதத்தையும் நான் இப்போது புதிதாக புரிந்து கொள்கிறேன். இது புலி எதிர்ப்பு என்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

இப்ப இங்கே பேசு பொருள்: இனப்படுகொலை நடக்கவில்லையென்று சுமந்திரன் சொன்னாரா என்பது. இதற்கு மட்டுமல்ல, தமிழ் அரசியல் பற்றிய எந்தக் கேள்விக்கும் தமிழ்நெற் ஒபினியன் ஆக்கம் பக்கச் சார்பற்ற ஆதாரமாக அமையாது. அது எப்போதுமே மிதவாத அரசியலை விமர்சிக்கும் புலிகள் ஆதரவுத் தளம்.

கீதபொன்கலன் சும் வட மாகாணசபையின் தீர்மானம் பற்றிய கேள்விக்கு  சொன்ன பதிலை தான் புரிந்து கொண்ட வியாக்கியானமும் ஆதாரம் அல்ல. 

அப்ப எது ஆதாரம்? முதல் நிலை ஆதாரம் சுமந்திரன் பேசிய ஒலி ஒளிப்பதிவுகள். இவை தாராளமாக இருக்கின்றன. கனடாவில் "இனப்படுகொலையை மறுக்கிறீர்களா?" என்று ஆறு தடவைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கேட்கப் பட்டபோது சுமந்திரன் சொன்ன பதில் தான் மேலே என் ஒரிஜினல் பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

உணர்ச்சி பூர்வமான தமிழ் பற்று என்கிற பதாகையின் கீழ் நின்று கொண்டு, எங்களுக்குப் பிடிக்காத ஆட்கள் சொல்வதை திரித்து அதை மீண்டும் மீண்டும் பரப்பும் வேலை பொய்ப்பிரச்சாரம்.

இவற்றை எதிர்ப்போர் புலி எதிர்ப்பாளர்கள் அல்ல. பொய்செய்திகளைப் பரப்புவோர் தமிழ் தேசிய அபிமானிகளும் அல்ல!    

நல்லாட்சி அரசுக்கு முட்டு வச்சது இப்ப மாறி முட்டு வைக்குது அவ்வளவுதான் கண்டுகாதீங்க. சுமந்திரன் சாருக்கு தமிழ் கட்சிக்கு அடி விழ கொஞ்சம் தமிழ் மக்கள் மீது கரிசனை வந்திருக்கு அவ்வளவுதான்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லாட்சி அரசுக்கு முட்டு வச்சது இப்ப மாறி முட்டு வைக்குது அவ்வளவுதான் கண்டுகாதீங்க. சுமந்திரன் சாருக்கு தமிழ் கட்சிக்கு அடி விழ கொஞ்சம் தமிழ் மக்கள் மீது கரிசனை வந்திருக்கு அவ்வளவுதான்.  

அரசியலில் பின்கதவால் உள்ளே வரும்போது கடந்த பத்துவருடமாய் சுமத்திரன் கோமாவில் இருந்து இருக்கிறார்போல்  உள்ளது இப்ப எழும்பி சர்வதேச விசாரணை என்று கூவுறார்  என்றால் தடயங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டன இல்லை அதற்குரிய அதிகாரிகள் போய்  மென்வலு அதிகாரிகள் வந்துள்ளனர் ஆக்கும்  சுமத்திரன் எல்லாம் இப்படி அழுகிறார் என்றால் ஓநாய்கள் வெட்கப்படும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லாட்சி அரசுக்கு முட்டு வச்சது இப்ப மாறி முட்டு வைக்குது அவ்வளவுதான் கண்டுகாதீங்க. சுமந்திரன் சாருக்கு தமிழ் கட்சிக்கு அடி விழ கொஞ்சம் தமிழ் மக்கள் மீது கரிசனை வந்திருக்கு அவ்வளவுதான்.  

அவர் நல்ல நடிகரா இருக்கலாம் ஆனால் ரசிகர்கள் இப்ப மாறி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

131168356_1608482246022873_3690131489060

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

131168356_1608482246022873_3690131489060

இதுக்கெல்லாம் தேர்தல் நேரம் சனத்துக்கு நினைவு படுத்தி விட்டால் காணும் இந்த படம் எல்லாம் சேமிப்பில் இருக்கும் நன்றி நுணா .

கீழே விழுந்தும் திமிராடிக்கொண்டு  இருக்கினம் இருங்க அடுத்தமுறையும் வைக்கிறம் .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

இதுக்கெல்லாம் தேர்தல் நேரம் சனத்துக்கு நினைவு படுத்தி விட்டால் காணும் இந்த படம் எல்லாம் சேமிப்பில் இருக்கும் நன்றி நுணா .

கீழே விழுந்தும் திமிராடிக்கொண்டு  இருக்கினம் இருங்க அடுத்தமுறையும் வைக்கிறம் .

கட்டாயம் வையுங்கோ! ஆனால் அடுத்த முறை முயலும் போது லட்சம், கோடிக்கு எத்தனை பூச்சியம் என்றுதெரிந்த ஆட்களாகப் பார்த்து அனுப்புங்கோ! கணிதத்தில் ஈழத்தமிழரின் மானம் போகுது!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

கட்டாயம் வையுங்கோ! ஆனால் அடுத்த முறை முயலும் போது லட்சம், கோடிக்கு எத்தனை பூச்சியம் என்றுதெரிந்த ஆட்களாகப் பார்த்து அனுப்புங்கோ! கணிதத்தில் ஈழத்தமிழரின் மானம் போகுது!

லட்சம், கோடிக்கு வித்தியாசம் தெரியாமல்தான் உங்கடை ஆக்கள் ரணிலட்டை  வேண்டி அமுக்கினவையாக்கும்!

1 minute ago, Eppothum Thamizhan said:

லட்சம், கோடிக்கு வித்தியாசம் தெரியாமல்தான் உங்கடை ஆக்கள் ரணிலட்டை  வேண்டி அமுக்கினவையாக்கும்!

ரணிலிடமா அல்லது மகிந்தவிடமா?  2005 ல் மகிந்தவை வெல்ல வைக்க யாரோ பணம் வாங்கியதாக ஒரு பேச்சு அடிபட்டது அது தான் கேட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2020 at 03:17, satan said:

சுமந்திரன் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு முதலிருந்தே தமிழர் பிரச்சனையும், அதை மூடி மறைத்து அரசாங்கம் ஆடிய அட்டூழியங்களும், அதற்கு முட்டுக்கொடுத்து மௌன விரதம் காத்தவர்களும்இப்போ நிஷ்டை கலைந்து கதறுவதன் நோக்கம் என்ன? சுமந்திரன் கூறுவது: இலங்கையில் தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட கொலைகளை இனச்சுத்திகரிப்பு என்று நிறுவுவதற்கு ஆதாரம் போதாதாம். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து திட்டமிட்டு அபிவிருத்தி எனும் பெயரில் தமிழரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களும், அந்த பூர்வீக மக்களுக்கு சம்பந்தமில்லாத சமய கட்டிடங்கள் எழுப்புவது, பேச்சு சுதந்திரம் மறுப்பு, அவர்களின் பொருளாதாரம் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தல், அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு  இராணுவம் ஆக்கிரமித்துள்ளது, அவர்களது சுதந்திரம் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. கல்வி சிதைக்கப்படுள்ளது அவர்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து ஏவி விடப்பட்ட இனக்கலவரங்கள், மறுக்கப்பட்ட நீதி. அரசாங்கமே வலிந்து எம் இனத்தின்மீது போராட்டத்தை திணித்தது. அதே அரசு சர்வதேசத்திடம் பயங்கரவாத நாடகமாடி உதவிகளை பெற்றுக்கொண்டு, பயங்கரவாதிகளை அழிக்கிறோம் எனும் பொய்ப்பிரசாரத்தோடு அழித்ததெல்லாம் வட கிழக்கு அப்பாவி மக்களையும் அவர்களின் பொருளாதாரத்தையுமே. மக்களை வெளியேறவிடாமல் திறந்த வெளியில் தடுத்து வைத்து, அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள், மருந்து போன்றவற்றை தடுத்து கொன்றொழித்தது.. குடிமனை மீது குண்டு மழை பொழிந்து இறந்தவர்களெல்லாம் புலிகள் என கணக்குக்கு காட்டியது. போராட்டம் நின்று போகவில்லை வலிமை பெற்றது. காலையில் எம்மை கண்விழிக்கச் செய்தது புக்காரா விமான குண்டுச்சசத்தங்களும், மரண ஓலங்களுமே. காலையில் வழிபாடு, வியாபாரம் என வெளியேறிய உறவுகளை முதல் விழுந்த குண்டு காவு கொண்டது, சிதறிய உடல்களை அடையாளம் காணவும், காயப்பட்டோரை காப்பாற்ற  கூடும் மக்களை  இலக்கு வைத்து அதே இடத்தில் அடுத்த குண்டு அவர்களையும் பதம் பார்த்தது. பொருளாதாரத் தடையால் வவுனியா சென்று வந்த  மக்களுக்கு சலுகை காட்டி வளைத்து தனக்கு ஒற்றர் வேலை செய்ய வைத்தது சிங்களம்.  அவர்களில் புலிகளுடன் நெருங்கிய தொடர்புடைய சில குடும்பங்களும் அடக்கம். பாடசாலை, கோவில்களில் மக்கள் தஞ்சமடையலாம் அங்கு குண்டு வீசமாட்டார்கள் யாரோ சொன்னார்கள். கூரைமீது பாதுகாப்பு அடையாளம் பெரிதாக குண்டு விமானிகளின் கண்களில் படும்படியாக வர்ணத்தில்,. அங்கும் மக்கள் சிதறினார்களே.பொதுமக்களைத்தானே குறிவைத்து துரத்தியடித்தான். சொந்த இடங்களை விட்டு வெளியேறி எது பாதுகாப்பு தெரியாமல் கூட்டமாக தெருத்தெருவாக நடந்த மக்களை நோக்கி ஆகாயம், நிலம், நீர் பல்வேறு முனைகளில் தாக்குதல். மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பில் குவித்து, பாதைகளை தடுத்து, அகப்பட்ட மக்களின் தொகையை குறைத்து கூறி, வயோதிபர், குழந்தைகள், பெண்கள் எல்லோரையும் கொன்று குவித்தான். மக்களை காப்பாற்ற மனிதாபிமானபோராம். கொன்றது  சாதாரண மக்களை. சரி, மக்களை காப்பாற்ற போர் செய்தவர்கள் காப்பாற்றிய மக்களை தங்க வைக்க என்ன ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள்? மக்களின் தொகையை ஏன் குறைத்து அறிவித்தார்கள்? சிக்குண்ட அனைத்து மக்களளையும் கொல்வதுதான் திட்டம். இது இனச்சுத்திகரிப்பு  இல்லையா? அந்த மக்களை மந்தைகளைப்போல் திறந்த வெளியில்  அடைத்து, அடிமைகளாக நடத்தி, அவர்களிடமே காசு பறித்தார்கள். மனிதாபிமானப்போர் என்று தம்மைத்தாமே புகழ்ந்து கொண்டார்கள். புலிகள் மக்களை கேடயமாக பாவித்தார்களாம். வடக்கில் கொல்லப்பட்டது பொது பொதுமக்கள், குறுகிய நிலப்பரப்பில் குவியும்வரை கொல்லப்பட்டது பொதுமக்கள். இப்போ புலிகள் மக்களை கேடயமாக பிடித்தால் மட்டும் மக்களை விட்டுவிடுவார்கள் என்று புலிகள் நம்புமளவிற்கு சிங்களவனைப்பற்றி அறியாதவர்களா புலிகள்? தமிழ் மக்கள்தான் புலிகள், புலிகள் தான் மக்கள் என்று  கொல்பவன், மக்களுக்காக தங்களை இராணுவம் விட்டு விடுமென எப்படி அவர்கள் எதிர்பார்ப்பார்கள்? அப்படியான எண்ணம் கொண்டவர்கள் ஏன் சரணடைந்தார்கள்? நடந்த இனக்கலவரங்கள், பயணிகளை படகில் வெட்டியதெல்லாம் புலிகள் மக்களை கேடயமாக பாவித்ததாலா? அதற்கு என்ன விளக்கம்? அப்போ இயக்கம் இருந்ததா? ஏற்பட்ட இனக்கலவரத்திலாயினும், போரிலாயினும் அழிந்தது அழிக்கப்பட்டது எல்லாம் தமிழரும் அவர்களின் சொத்துக்களும். இது போதாதா நடந்தது இனச் சுத்திகரிப்பு என நிறுவுவதற்கு? இல்லை என்றால் ஒரு தமிழனும் இல்லாமல் அழிக்கப்பட்டுத்தான் நிறுவ வேண்டுமாயின் அதை நிறுவ வேண்டிய தேவை யாருக்கு? எதற்கு? சுமந்திரன்தான் பதில் கூற வேண்டும்.

இவ்வளவு ஆதாரங்களை வைத்திருக்கிறீர்கள். 11 வருடமாக ஜெனிவாவுக்கு கொண்டுசென்று கொடுக்காமல் இருக்கிறீர்களே? அடுத்த மார்ச் மாதம் நீங்கள் இவற்றை சமர்ப்பித்து பெறப்படும் முடிவால் போர்க்குற்றவாளிகளை 2021 இறுதிக்குள் சர்வதேச நீதிமன்றத்தில் எதிர்பார்க்கலாமா?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ரணிலிடமா அல்லது மகிந்தவிடமா?  2005 ல் மகிந்தவை வெல்ல வைக்க யாரோ பணம் வாங்கியதாக ஒரு பேச்சு அடிபட்டது அது தான் கேட்டேன். 

ரணிலிடம் பெட்டி வாங்கியதற்கு ஆதாரம் என்னவென்று ஒருக்கா நான் கேட்டிருக்கிறேன், பதில் "வாங்குகிறவர் வீடியோ எடுத்துக் கொண்டா வாங்குவார்?" என்று வந்திருந்தது.

மகிந்தவிடம் (பசில் ஒரு தடவை சொன்னது போல) வாங்கியதும் வீடியோவில் பதிவாகியிருக்காதென  நினைக்கிறேன்!☺️

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் இனப்படுகொலை என்பதன் வரைவிலக்கணம் என்ன என்பதை விளக்கி போட்ட பதிவை கீழே போடுகிறேன்.

இந்த வரைவிலக்கணம் மிக குறுகலானது. 

ஆகவே நாம் ஒரு விடயத்தை இனப்படுகொலை என உணருவதற்கும் அதே விடயத்தை சட்டம் இனப்படுகொலை என தீர்மானிப்பதற்கும் இடையேயான gap கணிசமானது.

இனப்படுகொலையை நிறுவ நிகழ்வு (act) மட்டும் போதாது இலங்கைக்கு இனப்படுகொலை நோக்கமும் (intention) இருந்ததாக காட்ட வேண்டும்.

இதைதான் சுமந்திரன் சொல்ல வந்தார் என நினைக்கிறேன். சொல்லவந்ததை தெளிவுற சொல்லும் திறனும் அவருக்கு இல்லை, அதை கிரகிக்கும் திறனும் எமக்கு இல்லை....

என்னை பொறுத்த மட்டில் இலங்கை இனப்படுகொலை செய்ததது என்பதற்கு முகாந்திரம் உண்டு. ஆனால் வழக்கு இலங்கைக்கு சாதகமாகவே முடியும் என்பது என் கணிப்பு. 

பல இடங்களில் நுணலும் தன்வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் நல்ல உதாரணமாக அமைகிறார்.

அத்துடன் தான் தமிழர்களின் அரசியல் பிரதிநிதியா, சட்ட பிரதிநிதியா என்பதில் அவருக்கு பெரும் குழப்பம்.

ஒரு விடயம் - இனப்படுகொலையா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது ICC எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

தாம் இனப்படுகொலைக்கு ஆளானதாக கூறும் ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதி சுமந்திரன். அவரின் வேலை என்ன? அந்த மக்கள் கூட்டத்தின் வேண்டுகோள் படி இனப்படுகொலை விசாரணையை முன் தள்ளுதல். அல்லது இதை முந்தள்ளுவதை விட இதை வைத்து நாம் ஒரு தீர்வை அடைவோம் என்ற அரசியலை முந்தள்ளால்.

இரெண்டையும் விட்டு விட்டு... மக்களுக்கு சர்வதேச குற்றவியல் கோவையை படிபிக்க வெளிகிட்டால் இப்படித்தான் ஆகும்🤣.

இதில் 75% பேருக்கு சுமந்திரன் சொன்னது விளங்கவில்லை, 25%(கஜேந்திரகுமார், மணி, குரு) விளங்கினாலும், விளங்காதமாரி நடித்து சுமந்திரனை வெளுக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்🤣

—//////—————//////—————/////—

இனப்படுகொலைக்கு எதிரான ஒப்பந்தம் இனப்படுகொலைக்கான சர்வதேச சட்ட வரைவிலக்கணத்தை இப்படி வரையறுக்கிறது (emphasis in bold is mine and intended). 

Definition

Convention on the Prevention and Punishment of the Crime of Genocide

Article II

In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: 

  1. Killing members of the group; 
  2. Causing serious bodily or mental harm to members of the group;
  3. Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part; 
  4. Imposing measures intended to prevent births within the group;
  5. Forcibly transferring children of the group to another group.

Elements of the crime

The Genocide Convention establishes in Article I that the crime of genocide may take place in the context of an armed conflict, international or non-international, but also in the context of a peaceful situation. The latter is less common but still possible. The same article establishes the obligation of the contracting parties to prevent and to punish the crime of genocide.

The popular understanding of what constitutes genocide tends to be broader than the content of the norm under international law. Article II of the Genocide Convention contains a narrow definition of the crime of genocide, which includes two main elements: 

  1. A mental element: the "intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such"; and 
  2. A physical element, which includes the following five acts, enumerated exhaustively:
    • Killing members of the group
    • Causing serious bodily or mental harm to members of the group
    • Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part
    • Imposing measures intended to prevent births within the group
    • Forcibly transferring children of the group to another group

இந்த வரைவிலக்கணத்தை தமிழில் சுருங்க கூறின், இன உறுப்பினர்களை கொல்லுதல், கடும் உடல் அல்லது மன காயத்துக்கு ஆளாக்கல், திட்டமிட்டு அந்த இன குழுவை பெளதீகரீதியில் முற்றாக அல்லது பகுதியாக அழிக்கும் விதமாக வாழ்க்கை நிலையை அந்த குழுவின் மீது கட்டமைத்தல், பிறப்பை தடுக்கும் முறைகளை கைகொள்ளல், சிறுவர்களை வலுகட்டாயமாக ஒரு குழுவில் இருந்து இன்னொரு குழுவுக்கு இடமாற்றல். 

ஆகியவற்றில் எதாவதொன்றை, ஒரு இனத்தை முற்றாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்தல்.

இனப்படுகொலை என்பதன் வரைவிலக்கணம் இதுதான். 

சட்டத்தில் எந்த ஒரு குற்றத்தையும் நிறுவ இரெண்டு விசயம் அவசியம். ஒன்று actus reus எனப்படும் நடவடிக்கை (act). மற்றையது mensrea எனப்படும் நோக்கம் (intention).

அமெரிக்கா செய்தது இனப்படுகொலை என்பதற்க்காகன “நடவடிக்கை” யை மிக இலகுவாக யாரும் கண்டு கொள்ளலாம்.

ஆனால் “நோக்கு” இருந்ததா? என்பதுதான் இந்த வழக்கை தீர்மானிக்கும் கேள்வி.

நிற்க- எந்த வழக்கும் கோர்ட்டுக்கு போக முன்னமே “நடவடிக்கை” “நோக்கம்” இரெண்டும் பொலிஸ்/அரச தரப்பிடம் 100%. இராது.

அப்படி இருப்பின் வழக்கே தேவையில்லை நேராக தண்டனைக்கு போகலாம்.

 வழக்கில் சாட்ட்சியங்கள் அடிப்படையில் இந்த இரெண்டும் இருந்ததாக நிறுவவேண்டும். அதாவது try the evidence = trial

சட்டத்தில் prima facie என்பார்கள். அதாவது at face value - there is a case to answer. தமிழில் சரியான சொல் முகாந்திரம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நல்ல பதிவு கோசான். ஒரேயொரு விடயத்தில் நான் முரண்படுகிறேன். நீங்கள் சொல்லியிருக்கும் "தமிழ் பிரதிநிதியாக அவர் செய்திருக்க வேண்டும்" என்ற எதிர்பார்ப்பை அவர் இலங்கைப் பாராளுமன்றில் "சிறி லங்கா செய்தது இனப்படுகொலை" என்று பேசி தன் பணியை நிறைவேற்றியிருக்கிறார்.

 வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் ஒழுங்கு படுத்திய (தமிழர்கள் மட்டுமே பங்கு பற்றிய?) மூடிய கூட்டங்களில் மட்டும், "இனப்படுகொலை என்று நிறுவுவது கடினம், நிறுவ முயன்று முடியா விட்டால் சிறிலங்காவை நிரபராதியாக நாங்களே ஆக்கி விட்டதாக ஆகும், எனவே அடையக் கூடிய போர்க்குற்றம் என்ற வழியில் நாம் முயல வேண்டும்" என்று தன் சட்ட அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சட்ட அபிப்பிராயத்தோடு பலர் முரண்படலாம், அது ஏற்றுக் கொள்ளக் கூடியது.

ஆனால் எங்கள் தீவிர சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் செய்தது, அதைக் கணக்கிலெடுக்காமல்  "சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என்கிறார்" என்ற பொய்செய்தியைப் பரப்பியது மட்டுமே.இந்த பொய்செய்தி ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரம் உயிர் பெற்று, பின்னர் அடங்கி விடும்!

எவ்வளவு தெளிவு கொடுக்கப் பட்டாலும், அடுத்த தேர்தலில்  இதே யாழ் உறுப்பினர்கள் இதே பல்லவியோடு திரும்ப வருவார்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

உண்மைதான் சுமந்திரன் சொன்னதன் தார்பரியம் மேலே கோடிட்டதுதான் என்பதை நானும் ஏற்கிறேன். என் அபிபிராயமும் அதுதான்.

ஆனால் எமது மக்கள் யார்? தனக்கு பிடிக்காத வியாதி இருப்பதாக டாக்டர் சொல்லி விட்டால், டாக்டரில் பிழை என்று சொல்பவர்கள் 🤪.

அதிலும் புலம் பெயர் மேதாவிகள்... ஒரு படி மேலே. இவர்களிடம் போய் இதை சொல்லியது அரசியல் முதிர்ச்சியின்மையயே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் பேர்ன் சுவிட்லாந்தில் தான் உண்டு .மட்டுமல்ல அதன் தலைநக௫ம் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் செய்வது வெளிப்படையாக வீட்டுக் கொடுப்பாத்து போல இருந்தாலும், என்னை பொறுத்தவரையில், ஓர் game plan உடன் தான் சுமந்திரனின் நடவடிக்கைகள் இருப்பதாக என்னிடம் ஓர் கணிப்பு உண்டு.
    
அதாவது,  சொறி சிங்களத்தை அதனை கொண்டே மெதுவாக போர்க்குற்ற விசாணையை தொடங்கி, அடுத்தபடியான crimes against humanity மற்றும் இனப்படுகொலை சாட்ச்சியங்களை, இனப்படுக்கொலை விசாரணை மற்றும் விளக்கம் (trial) இல்லாமல் try பண்ணுவது.

சுமந்திரன் ஒரு போது பூடகமாக  சொல்லி இருந்தார்,  தோற்றாலும் பரவாயில்லை என்ற தொனியில்.

அதில் தோற்றாலும், முக்கியமாக கிந்தியா சொன்ன, நேரம் கொடுத்தால் சொறி சிங்களம் தானாக செய்யும் என்பது அடிபட்டு போக, போர்க்குற்ற சர்வதேச விசரணையை தடுப்பதற்கு முக்கிய தடை , அதாவது கிந்தியா தடுப்பது, இல்லாமல் போகும் என்பது.  

சர்வதேச விசாணையிலும், சுமந்திரனின் பாதை, உள்ளநாடு விசாரணையில் செய்ய முயன்றது போல, போர்க்குற்ற விசாரானை, விளக்கத்தில், இனப்படுகொலை நடந்தவைகளை (ACT), சாட்சியங்களை (evidence for intention) ட்ரை பண்ணுவதன் மூலம், இனப்படுகொலை terms of reference ஐ நீதிமன்றத்திலேயே வரவைப்பது.    

இது எனது தனிப்பட்ட  கணிப்பு மாத்திரமே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.