Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.

தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயர் 10/08/1997 இல் இருந்து இடம்பெற்று வருகிறது. 

கடந்த வியாழன் மீளமைக்கப்பட்ட இப்பட்டியலில் லக்ஷர் ஐ ஜான்வி மற்றும் சீனாய் - ஐஸிஸ் ஆகிய இரு புதிய அமைப்புக்களும் அடக்கப்பட்டிருக்கின்றன. 

இதைவிடவும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களும் தொடர்ந்தும் இப்பட்டியலில் இடம்பெற்று வருகின்றன.

https://www.state.gov/foreign-terrorist-organizations/

Edited by ரஞ்சித்

  • ரஞ்சித் changed the title to அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.
  • Replies 80
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புதிய அமைப்புகள்

.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் மாற்றங்களை மேற்கொணடுள்ள அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் அந்த பட்டியலில் நீடிக்கின்றது

state-dept-825x380-1-300x152.jpg
வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த 10.08.1997ஆம் ஆண்டு முதல் பட்டியலிடப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், லஸ்கர் ஐ ஜாங்வி(LJ) மற்றும் ஐஎஸ்ஐஎல் சினாய் குடாநாடு(ISIL- SP) ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களை உள்ளடக்கி திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

புது ஜனாதிபதிதானே ...அவசரம் ..அத்தடியில் வாசியாமல் கையொப்பம் போட்டுட்டார்....காரிசு அம்மா நம்ம  ஆள்தானே...எப்படியும் வாறமுறை அழிச்சுப்போடுவா...🙃

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ,இன்னும் புலிக் கொடியை பிடிச்சுக் கொண்டு திரியுங்கோ😟 தடையை கெதியாய் எடுப்பினம் 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

இன்னும் ,இன்னும் புலிக் கொடியை பிடிச்சுக் கொண்டு திரியுங்கோ😟 தடையை கெதியாய் எடுப்பினம் 🙂

சிறு பிள்ளைத்தனமான கருத்து.

புலிகள் சார்ந்த கொடிகளை தூக்குவதால் தான் தடை நீடிக்கின்றது போல் இருக்கின்றது உங்கள் கருத்து.

புலி சாராதோர் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஏதாவது செய்யலாமே? காணாமல் போனவர்கள் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ஆதரவும் இல்லை கவனயீர்ப்பு நிகழ்வுகளும் இல்லை.

சும்மா மற்றவன் செய்யுறதுக்கு  அண்டு தொடக்கம் நொள்ளு புடிச்சுக்கொண்டு...

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று கேள்விப்படவில்லையோ சாமியார்? 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா – வெளியுறவுத் துறை அறிவிப்பு

USA-696x366.png
 9 Views

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவேந்தும் நிகழ்வுகள் அமெரிக்காவில் பகிரங்கமாக இடம்பெற்று வருகின்ற போதிலும் அந்த அமைப்பு மீதான தடையை அமெரிக்கா தொடர்ந்து நீடித்துள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகள் மீதான தடைப்பட்டியலில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் குறித்த பட்டியலின் புதுப்பித்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தொடர்ந்தும் உள்ளடக்கபட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் பிரஜா உரிமை சட்டத்தின் 219 ஆவது சரத்துக்கு அமைவாக எல்.ஜே.மற் றும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய அமைப்புகள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாகவும் பெயரிடப்பட்டுள்ளன.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளமைக்கு இலங்கை அமைச்சர்கள் சிலர் தமது சமூக ஊடகங்களில் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

https://www.ilakku.org/?p=39590

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இன்னும் ,இன்னும் புலிக் கொடியை பிடிச்சுக் கொண்டு திரியுங்கோ😟 தடையை கெதியாய் எடுப்பினம் 🙂

உங்கோட அரிசியியல் அறிவு புல்லோரிக்குது. .. ☹️

இண்டையிலிருந்து புலிக்கொடியப் பிடிக்காம விடுவம் அப்ப தடய எடுத்துடுவாங்க..👍

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

இன்னும் ,இன்னும் புலிக் கொடியை பிடிச்சுக் கொண்டு திரியுங்கோ😟 தடையை கெதியாய் எடுப்பினம் 🙂

பலநாடுகளில் தமழ்ஈழவிடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தடை நீடிக்கப்பட்டுவருகிறது. ஆனால் புலிகள் இயக்கத்தின்கொடி தடைசெய்யப்படவில்லை. ஏன் தடைசெய்யப்படவில்லை? செலவு இல்லாமல் கண்காணிக்கிறார்கள். கொடிபிடித்தால் இயங்கிறர்கள் என்று பொருள் . கொடி பிடிக்கவில்லையென்றல்..இயங்கவில்லையென்று பொருள்..அப்படிப்பட்டநிலையில் சிலசமயம் தடைநீக்கப்படலாம்.😜😁

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

உங்கோட அரிசியியல் அறிவு புல்லோரிக்குது. .. ☹️

இண்டையிலிருந்து புலிக்கொடியப் பிடிக்காம விடுவம் அப்ப தடய எடுத்துடுவாங்க..👍

இலங்கையரசு தமிழ்ஈழவிடுதலைப்புலிகளைத்தடை செய்த நாடுகளிடம் அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டில் புலிகள் இயங்கின்றார்கள் எனவே தடையைத்தொடர்ந்து நீடியுங்களென , அதற்க்கு மிகமுக்கிய சாட்சி புலிக்கொடி பிடித்து பத்திரிக்கையில் காட்சிப்படுத்தலாகும்.😁😁🙏😜

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

இலங்கையரசு தமிழ்ஈழவிடுதலைப்புலிகளைத்தடை செய்த நாடுகளிடம் அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டில் புலிகள் இயங்கின்றார்கள் எனவே தடையைத்தொடர்ந்து நீடியுங்களென , அதற்க்கு மிகமுக்கிய சாட்சி புலிக்கொடி பிடித்து பத்திரிக்கையில் காட்சிப்படுத்தலாகும்.😁😁🙏😜

அப்ப மேற்கு நாடுகளெல்லாம் ஒவ்வொரு நாளும் காலம பேப்பற வாசிச்சுப்போட்டுத்தான் பொலிசி டிசிசன் எடுக்கிறவங்கள் போல கிடக்குது. 

புலிக்கொடிய தூக்கி எறிஞ்சா தமிழீழம் தந்திடுவாங்களோ... 🤥

எங்கட ஆக்களட அரசியல் அறிவ மாடு மேஞ்சிடப் போகுது. எதுக்கும் மாட்ட கட்டி வையுங்கோ.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

உங்கோட அரிசியியல் அறிவு புல்லோரிக்குது. .. ☹️

இண்டையிலிருந்து புலிக்கொடியப் பிடிக்காம விடுவம் அப்ப தடய எடுத்துடுவாங்க..👍

உங்களை போன்றவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட கருத்துக்கள் வரும் என்று எதிர் பார்த்தது தான் ...கொடி  பிடிக்கா விட்டால் உடனே எல்லாத்தையும் தூக்கி தந்து விட மாட்டார்கள் ...ஆனால் கொஞ்சம், கொஞ்சமாய்  எல்லாத்தையும் மாத்தலாம் என்ற நப்பாசை இருக்கின்றது .

இன்னும் 2009ம் ஆண்டு பாராளுமன்றத்தில் போய் கொடி  பிடித்து கத்தியதால் தான் அங்கு அவ்வளவு சனம் செத்தது ...பேசாமல் இருந்திருந்தால் இறந்தவர்களது தொகை புலிகளை தவிர்த்து அரைவாசியாய் குறைந்திருக்க கூடும் என்ற கில்ட்டி இப்பவும் என் மனசில் இருக்கின்றது 
 
  • கருத்துக்கள உறவுகள்

புலி கொடியை பிடிப்பதை விடுங்கோ புலிகளின் தடையை எடுக்கிறம் என்று ரதி அக்காவிற்கு அமெரிக்கா சொல்லியிருக்காம்...🤓

1 hour ago, Kapithan said:

எங்கட ஆக்களட அரசியல் அறிவ மாடு மேஞ்சிடப் போகுது. எதுக்கும் மாட்ட கட்டி வையுங்கோ.. 😂

super annai

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

உங்கோட அரிசியியல் அறிவு புல்லோரிக்குது. .. ☹️

இண்டையிலிருந்து புலிக்கொடியப் பிடிக்காம விடுவம் அப்ப தடய எடுத்துடுவாங்க..👍

இலங்கையரசு தமிழ்ஈழவிடுதலைப்புலிகளைத்தடை செய்த நாடுகளிடம் அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டில் புலிகள் இயங்கின்றார்கள் எனவே தடையைத்தொடர்ந்து நீடியுங்களென , அதற்க்கு மிகமுக்கிய சாட்சி புலிக்கொடி பிடித்து பத்திரிக்கையில் காட்சிப்படுத்தலாகும்.😁😁🙏😜எனது அரசியல் அறிவுக்கு என்னகுறை.? நான் ஏன் மாட்டைக்கட்டவேண்டும்.?  2009 க்கு பின் தமிழ்ஈழவிடுதலைப்புலிகளுக்கு தலைவர் இல்லை .அமைப்பு இயங்கவில்லை.  செயலிழந்துவிட்டது.  இங்கே சிலர் கொடியைப்பிடிப்பதன்மூலம் புலிகளமைப்பு  தொடர்த்துமியங்கிறது என்ற தோற்றப்பாட்டை உருவக்கிறார்கள். இதனால்  தடையும் தொடர்கிறது .

குறிப்பு:_கௌரவ கள உறுப்பினர் கபிதன் ,நீங்கள் மற்றவர்களின் அரசியல் அறிவை அளவிட அளவுகோலாகயிருக்கமுடியாது என்பதை உங்கள் எழுத்துக்கள் கூறிநிற்கின்றன 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அப்ப மேற்கு நாடுகளெல்லாம் ஒவ்வொரு நாளும் காலம பேப்பற வாசிச்சுப்போட்டுத்தான் பொலிசி டிசிசன் எடுக்கிறவங்கள் போல கிடக்குது. 

புலிக்கொடிய தூக்கி எறிஞ்சா தமிழீழம் தந்திடுவாங்களோ... 🤥

எங்கட ஆக்களட அரசியல் அறிவ மாடு மேஞ்சிடப் போகுது. எதுக்கும் மாட்ட கட்டி வையுங்கோ.. 😂

நான் இளைஞனாக இருந்தபோது எல்லாம் தெரியும் என நினைத்தேன் .கொஞ்சம்  வயதானபோது கொஞ்சம் தான் தெரியும் என உணர்த்தேன்.  முதிர்ச்சி அடைத்தபோது தான் தெரிந்தது எனக்கு எதுவும் தெரியாது என்று இப்படிச்சென்னவர்    .சாக்ரடீஸ் எனற அறிஞர். அத்த சாக்ரடீஸ்  வாரிசு இங்கேயிருப்பதைக்கண்டேன்.  நன்றி😄😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

பலநாடுகளில் தமழ்ஈழவிடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தடை நீடிக்கப்பட்டுவருகிறது. ஆனால் புலிகள் இயக்கத்தின்கொடி தடைசெய்யப்படவில்லை. ஏன் தடைசெய்யப்படவில்லை? செலவு இல்லாமல் கண்காணிக்கிறார்கள். கொடிபிடித்தால் இயங்கிறர்கள் என்று பொருள் . கொடி பிடிக்கவில்லையென்றல்..இயங்கவில்லையென்று பொருள்..அப்படிப்பட்டநிலையில் சிலசமயம் தடைநீக்கப்படலாம்.😜😁

தமிழருக்கு ஏதாவது செய்ய சர்வதேசம் எத்தனித்த அனைத்து நிலைகளிலும் தமிழர்கள் பலமாக இருந்ததால் மட்டுமே சாத்தியமானது. 

இன்றும் பழைய நிலைக்கு தமிழர்கள் வரக்கூடாது என்பதற்காக மட்டுமே தமிழர்களுக்கான தீர்வு பற்றி பேசுகிறார்கள்.

உங்களது மேற்குறிப்பிட்ட கருத்து படி பார்த்தாலும் அது சர்வதேசத்தை தூண்டுவதாகவே அமையும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

கௌரவ கள உறுப்பினர் கபிதன் ,நீங்கள் மற்றவர்களின் அரசியல் அறிவை அளவிட அளவுகோலாகயிருக்கமுடியாது என்பதை உங்கள் எழுத்துக்கள் கூறிநிற்கின்றன 

அவர் அப்படி தான். முன்பு ஒரு முறை நான் நான் நிலாந்தன் கட்டுரையை விமர்சித்ததற்கு நிலாந்தன் அறிவானவர் அவர் கட்டுரையை விளங்கி கொள்வதற்கு அறிவு வேண்டும் என்றவர் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 11 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் அமெரிக்கா கூறி வந்த எந்த "பயங்கரவாத நடவடிக்கையிலும்" ஈடுபடவில்லை.

ஆனால்.. தடை நீடிக்கிறது.

ஆக மொத்தத்தில்.. அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தான் தடையே தவிர.. உண்மையில் பயங்கரவாத உச்சரிப்பு என்பது பசப்புத்தனமானது.

இன்றுள்ள கேள்வி.. இந்தத் தடையை நீடிப்பதால்.. அமெரிக்கா சாதித்தது என்ன.

சொறீலங்காவை சீனா நோக்கி நகர்த்தியதும்.. தமிழர்களை பழிவாங்கியதும் தான். இது ஒன்றும் அமெரிக்காவுக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, Kandiah57 said:

நான் இளைஞனாக இருந்தபோது எல்லாம் தெரியும் என நினைத்தேன் .கொஞ்சம்  வயதானபோது கொஞ்சம் தான் தெரியும் என உணர்த்தேன்.  முதிர்ச்சி அடைத்தபோது தான் தெரிந்தது எனக்கு எதுவும் தெரியாது என்று இப்படிச்சென்னவர்    .சாக்ரடீஸ் எனற அறிஞர். அத்த சாக்ரடீஸ்  வாரிசு இங்கேயிருப்பதைக்கண்டேன்.  நன்றி😄😎

ஈழத்தமிழனுக்கும் உலக தமிழனுக்கும் சர்வதேச அரங்கில் ஒரு அடையாளத்தை கொடுத்தது இந்த கொடிதான். 
சர்வதேசமும் சிங்களமும் பேச்சுவார்த்தைக்கு வந்ததும் இதே கொடியின் கீழ்தான்..
நயவஞ்சகத்தால் வீழ்ந்த போராட்டக்கொடி அது...
 
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

கடந்த 11 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் அமெரிக்கா கூறி வந்த எந்த "பயங்கரவாத நடவடிக்கையிலும்" ஈடுபடவில்லை.

ஆனால்.. தடை நீடிக்கிறது.

ஆக மொத்தத்தில்.. அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தான் தடையே தவிர.. உண்மையில் பயங்கரவாத உச்சரிப்பு என்பது பசப்புத்தனமானது.

இன்றுள்ள கேள்வி.. இந்தத் தடையை நீடிப்பதால்.. அமெரிக்கா சாதித்தது என்ன.

சொறீலங்காவை சீனா நோக்கி நகர்த்தியதும்.. தமிழர்களை பழிவாங்கியதும் தான். இது ஒன்றும் அமெரிக்காவுக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. 

10 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழனுக்கும் உலக தமிழனுக்கும் சர்வதேச அரங்கில் ஒரு அடையாளத்தை கொடுத்தது இந்த கொடிதான். 
சர்வதேசமும் சிங்களமும் பேச்சுவார்த்தைக்கு வந்ததும் இதே கொடியின் கீழ்தான்..
நயவஞ்சகத்தால் வீழ்ந்த போராட்டக்கொடி அது...
 
உண்மை, 2009 க்குபின் தலைவரில்லை ,தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் இயங்கவில்லை, தடையும் தேவையில்லை ,கொடியும் தேவையில்லை. இல்லாத...இயங்காத...இயக்கத்துக்கு...தடையென்? கொடியென்?. 11ஆண்டுகள் போய்விட்டது . ஐ.நா சபை முன் ,தமிழ் இளைஞர் அமைப்பு,. தமிழ் மகளிர் அமைபபு,.     தமிழர் அமைப்பு எல்லோரும் ஏன் ?புலிகளின் கொடியைப்பிடிக்கவேண்டும்?

ஓர் நிலையான,உறுதியான,தீர்வை பெற்றுக்கொடுப்பதே தலைவருக்கும் ,மாவிரர்களுக்கும் செய்யும் மாரியாதையும், மதிப்புமாகும்.  இப்படியே கொடியைப்பிடித்துவிட்டு நாங்கள் மரணமடைந்துவிடலாம்.2009க்கு முன்பு. நடத்த வீர தீர செயல்களை கதைத்து காலத்தை கடத்துவதால் எதுவிதபிரயோசனமுமில்லை. புலிகளையோ, புலிக்கொடியையோ தேவையற்றமுறையில் பயன்படுத்தவேண்டாம்.😁😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Kandiah57 said:

2009க்கு பின்னர் யார் யாரெல்லாம் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

1) உங்களை போன்றவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட கருத்துக்கள் வரும் என்று எதிர் பார்த்தது தான் ...

2) கொடி  பிடிக்கா விட்டால் உடனே எல்லாத்தையும் தூக்கி தந்து விட மாட்டார்கள் ...ஆனால் கொஞ்சம், கொஞ்சமாய்  எல்லாத்தையும் மாத்தலாம் என்ற நப்பாசை இருக்கின்றது .

3)இன்னும் 2009ம் ஆண்டு பாராளுமன்றத்தில் போய் கொடி  பிடித்து கத்தியதால் தான் அங்கு அவ்வளவு சனம் செத்தது ...

4) பேசாமல் இருந்திருந்தால் இறந்தவர்களது தொகை புலிகளை தவிர்த்து அரைவாசியாய் குறைந்திருக்க கூடும் என்ற கில்ட்டி இப்பவும் என் மனசில் இருக்கின்றது 
 
1) பின்ன என்னக்கா.. உங்கோட கருத்துக்கு வேற என்ன வள்ளுவற்ற ஆத்திசூடியோ (😜) பதிலா வரும் ..? 

2) சிலோ மோசனில தடய எடுத்திருப்பாங்கள் எண்டுறீங்க.. 🤥 நீங்க அரிஸ்ரோட்டில் தான் போங்கோ.. 😀

3) இல்லாட்டி என்ன நடந்திருக்கும்.. ? தமிழீழம் தந்திருப்பாங்களோ.. 😏

4) கில்டி பீலிங்... ம்ம்ம்ம்ம்ம்ம்🥴

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா தடை எடுத்தால் 
என்ன பெரிதாக நடந்துவிட போகிறது?

நீங்கள் யாராவது புலியை தடையால் ஒழித்து வைத்திருக்கிறீர்களா?
தடை எடுத்ததும் திறந்துவிட ?

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாக திரிந்த புலிகள் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்காகப்போராடிய  புலிகள் பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்டார்கள். 2008 ஆம் ஆண்டு வரை இந்தத்தடை புலிகளைப்பாதிக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு  தமிழ்ஈழத்தில் செயல்படமுடியாத நிலை எற்ப்பட்டது. இந்தடைகளினால் வெளிநாடுகளலில் போயிருந்து செயல்படமுடியவில்லை. எனவே தமிழ்ஈழத்திலேயே  இறக்கவேண்டியநிலை எற்ப்பட்டது. தடையில்லாதுயிருந்தால் 2009 இல் பல புலி உறுப்பினர்கள் வெளிநாடுவந்து தொடர்த்து இயக்கியிருக்கமுடியும். புதியதலைவர் பகிங்கரமாக அறிவித்தல்...இலங்கை உள்பட வெளிநாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துதல்..புலிகளின்சொத்துக்களைப்பரபரித்தல்...இப்படிப்பல.  செய்திருக்கமுடியும்..  மேலும் 2008 ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளில் பல தனிநபர்களின் பெயரில் வருமானத்தில் 50க்கு50 என்ற அடிப்படையில் முதலிடப்பட்டது.. 2009ஆம் ஆண்டு போர் முடிந்தபின் மேற்படி  தனிநபர்களில் சிலர்/பலர் வருமானத்தை செலுத்தத்தவறியதுடன்,முதலிட்டைப்மிளப்பெற

 சிரமப்பட வேண்டியிருந்தது. இதற்க்கு எதிராகச்சட்ட நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. அப்படி சட்டத்தை நடினால் அந்தநபர் விசா,வேலை,பணம்...என்பவற்றை இழப்பதுடன் ,சிறையும் செல்ல நேரிடும். தமிழ்ஈழம் கிடைக்கும்வரை ..புலிகள் இயக்கம் வலுவுடனிருக்கவேண்டுமென்பதற்க்காக...பிரபாகரனால் செயல்படுத்தப்பட்ட திட்டம்தன் வெளிநாட்டு முதலிடு..எந்தத்தமிழனுக்காக போராடினரே அந்தத்தமிழன் அவரின் திட்டத்தை முறியடித்துவிட்டான்..இதற்க்கு உதவியது. புலிகள் தடைச்சட்டம். இந்தத் தடையினால் புலிகளின் பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் ..பணம்வைப்பிடமுடியவில்லை..இந்த சந்தப்பர்த்தை பல தமிழர்கள் பயன்படுத்திவிட்டார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.