Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, satan said:

100 முறை சரியாகச் செய்திருந்தாலும் 101 வது முறை ஒரு தவறு செய்துவிட்டால்அதையே குத்திக்காட்டும் நமது சமூகம், ஒரு தடவையாவது முயற்சி செய்திருக்காது. இதுவும்கடந்து  போகும் என்பதை விட இதுவும் பழகிப்போகும் என்பதே பல சமயங்களில் நம்  இழப்புக்கும், வாழ்க்கைக்கும் பொருந்துகிறது. 

அண்ணெய்  விகடன் குமுதம் படித்த அரசியல் ஆய்வாளர்களுக்கு அது புரியாது விட்டு விடுங்க 😃

  • Replies 130
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

கந்தையா, எனது கருத்துகள் எவையும் பிரபாகரன் பற்றியதல்ல.   பிரபாகரனையோ அவரது இராணுவ திறமையையோ விமர்சனம்  செய்யும் தகுதி எனக்கு இல்லை. அதை நான் செய்யவும் இல்லை. நீங்கள்  தான் அடிக்கடி  பிரபாகரனை வலிந்து இங்கே கொண்டு வருகின்றீர்கள்.

எப்படி எவர்  போரிட்டாலும் தோல்வி நிச்சயம் கிடைத்திருக்கும்  என்று ஒன்றிற்கு பல தடவை அழுத்தி  சொல்லிவிட்டு பிரபாகரன் போராடினதால் தான் தோல்வி கிடைக்கும் என்ற உணமையை அறிந்துகொண்டோம்  என்று கூறினீர்கள். உங்கள் கருத்துப் படி தோல்வி கிடைக்கும் என்ற உண்மையை அறிவதற்காக போர் செய்து அதனால் பலியான லட்சக்கணக்கான அப்பாவி மக்களைப் பற்றி நீங்கள் கூறவில்லை. அந்த உணமையை அறிவதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் என்று நினைத்தீர்களோ தெரியாது.  

பிரபாகரன் ஒரு இராணுவ மேதை. இராணுவ பலத்தை மட்டும் பெருக்குவதன் மூலம் தமிழர்கள் தமிழ் ஈழத்தை அடையலாம் என்று முழுமையாக நம்பி அதற்காகவே அர்ப்பணிப்புடன்  செயற்பட்டவர்.  இராணுவ ரீதியில் பல சாதனைகளை செய்த சிறந்த இராணுவத்தலைவர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை 

இந்தத்திரி புலிகள்பற்றியது..இங்கே பிரபாகரன் பற்றியும் அவரது போர்த்திறமை பற்றியம் கதைக்கவேண்டும்.உங்களுக்கு தகுதி இல்லை எனில் .நீங்கள் இங்கு பதியும் கருத்துக்கள் ..பொருள் அற்றவை...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பரீட்சைப்பேயிலும் ஒர் தோல்வி. போராட்டத்தோல்வியும் ஒர் தோல்வி. இரண்டும். தோல்விதான்.

Tulpen  சொன்ன  கருத்து - பேச்சுவாரத்தையில்  எமது தேசியத்தை ஒரு பாதுகாப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சக்தியை விடுதலைபுலிகள் கொண்டிந்தார்கள். அதை அவர்கள் செய்யாமல் வழமையான இராணுவ மேலாண்மையால் சாதிக்கலாம் என்று மக்களை அழிவுக்குள்ளாக்கியதோடு சிங்கள தரப்பிலும் வெற்றி திமிரை பரிசளித்து எம்மை மேலும் அடக்க உதவினார்கள்.
அதற்க்கு நீங்கள் சொன்னது -  நீங்கள் சொல்லும் கருத்து தோல்வியை அடிப்படையாக வைத்து சொல்லப்படுகிறது.ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு பேயில் பண்ணினால்  அந்த மாணவன் பள்ளிக்கூடம்..போய்யிருக்கக்கூடாது..என்பிர்கள் போலுள்ளது.

மாணவன் பரீட்சையில் பெயிலாவதை யுத்தம் நடத்துவதோடு ஒப்பிடும் விளங்கி கொள்ள முடியாத நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kandiah57 said:

இந்தத்திரி புலிகள்பற்றியது..இங்கே பிரபாகரன் பற்றியும் அவரது போர்த்திறமை பற்றியம் கதைக்கவேண்டும்.உங்களுக்கு தகுதி இல்லை எனில் .நீங்கள் இங்கு பதியும் கருத்துக்கள் ..பொருள் அற்றவை...

பிரபாகரன், புலிகள், முள்ளிவாய்க்கால் பற்றிக் கதைப்பதற்கான தகுதிகள் எவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் கந்தையா? 

இலங்கையில் பா.உ ஆக இருக்க வேணுமோ, அல்லது ஏதாவது நாட்டில் சி.எம் ஆக வரக் கனவு காண வேணுமோ? 😎

இந்த கருத்துப் பரிமாற்றம் செய்ய லைசென்ஸ் எடுக்க வேணும் என்ற வாதம் பலரால் முன் வைக்கப் பட்டு பல தடவைகள் சிரிப்புக்குள்ளாகிய விடயம் தான்! நீங்கள் புதிதாக ஆரம்பித்திருப்பதால் ஏதாவது புதிதாக இருக்கும் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம், போராட்டம் என்பதை புலிகளின் வேலை அதன் வெற்றியும் தோல்வியும் அவர்களுடையது என்கிற விமர்சனம் இங்கு முதன்மைப்படுத்தப்படுகிறது. அவர்கள் தங்களால் முடிந்ததை அடைய முயற்சித்தார்கள். இப்போ அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்களை சொல்லிபுலம்புவதை விட்டு அவர்கள் விட்ட தவறை திருத்தி ஏதாவது செய்ய முயற்சிக்காமல், அவர்களை சுட்டிக்காட்டுவதிலேயே நேரத்தை வீணாக்குபவர்களோடு சண்டை போடுவதால் நேரம் வீணாகிறது. கடிபடுவதைக்காட்டிலும் அவர்களுக்கு வழி விடுவதே மேல். 

  • கருத்துக்கள உறவுகள்+

நானும்  என்ர பங்கிற்கு ஒரு சுள்ளியத் தூக்கிப் போடுறன்... ஏதோ என்னால முடிஞ்சது!

 

  • கருத்துக்கள உறவுகள்+

அண்ணைமார், நான் இஞ்ச இருக்கிற எல்லாரையும் விட சின்னவன்.. என்னட்ட ஒரு கேள்வி.. உங்கள் எல்லரையும் நோக்கி! சரியோ. ஆள புதுசுதான்.. ஆனால் கற்கை எல்லாம் உங்கள் எல்லாரிட்டையும் இருந்துதான்

நீங்கள்  எல்லாரும் இன்டைக்கு புலியைப் பற்றி சேறடீக்கிறதில்லை குறியா இருக்கிறியள்.. ஆனால் ஒருகணம் எங்கட தேசத்தை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கோ.. நாளுக்கு நாள் ஒவ்வொண்டா அவன் புடிங்கிக் கொண்டிருக்கிறான். ஒவோரு ஊரா மாத்துப்படுது, சிங்களமா!.. ஆனால் நிங்கள் எல்லாரும் இனமுமா புலி எங்க பிழை விட்டது என்டு தேடுறியள்?.. முதல்ல இவன நிப்பாட்டப் பாருங்கோ.. அவன நிப்பட்ட ஒரு உருப்படியான வழிதேடுங்கோ!

புலிக்கு சேறடடிகிறதாலையும் வெள்ளையடிக்கிறதாலையும் ஒண்டும் வரப்போறதில்லை. அதால எங்கட எதிர்காலத்திற்கு ஒரு சொட்டும் பிரியோசனமில்லை (நான் உங்கட ரண்டாவது தலைமுறை. நீங்கள் இங்களை இழுக்கிறதாலை இதில தலையிட எனக்கு உரிமை இருக்குது)...எங்களுக்கு புலியின்ர சேறால கொஞ்சம் கூட பிரியோசனமில்லை. எங்களுக்கு அவையின்ர வீர வரலாறுகள் தான் வேணுமே ஒழிய அவையளின்ர பிழையளோ சரியளோ தேவையே இல்லை. அந்த கற்பிதங்களும் தேவையே இல்லை. அதை நாங்கள் அறிய விரும்பவுமில்லை. 

அவையளின்ர பிழையள் சரியள போதிக்கிற நீங்கள் எல்லாரும் ஒன்ட மறந்திற்றியள், அவையளின்ர காலத்தில இருந்த உலக நடப்பு வேற, இப்ப இருக்கிற உலக நடப்பு வேற. ரண்டையும் ஒரே தட்டில வைச்சுப் பாக்காதீங்கோ. நீங்கள் இண்டைக்கு அவையளுக்கு சேறடீக்கிறது, உங்கட இனத்திற்குத்தான் அசிங்கம் . அவையளும் தமிழர் தான். நீங்களும் தமிழர்தான் என்டதான் மறவாதீங்கோ.

புலியத் தூற்றுகிறதால கொஞ்சம் கூட பிர்யோசனமே இல்லை. இன்டைக்கு சிங்களவரப் பாருங்கோ.. ஜே.வீ.பீ க்கு எத்தின அக்கிரமங்கள் நடந்தது. அவங்கள் என்ன உங்கள மாதிரி தெருத் தெருவா எங்கட அரசு உத செஞ்சது, இத செஞ்சது என்டு கதைச்சுக்கொண்டு திரியிறாங்களே?  தங்கட வெற்றிய ஒன்டாத் தானே கொன்டாடுறாங்கள்.. நீங்கள் மட்டும் ஏன் உப்பிடி இருக்கிறியள்..?

நீங்கள் கதைக்கிற மாதிரி உங்கட சந்ததி கதைக்கப்போறது இல்லை. நாங்கள் எல்லாரும் ஒன்டா ஒரு கொடியிற்கு கீழ தான் நிப்பம்; நிக்கப்போறம்.. அப்ப நீங்கள் எல்லாரும் கைலாயித்தில எமனோட தேநீர் குடிச்சுக்கொண்டு இருப்பியள் .. அப்ப மேல இருந்து பாருங்கோ நாங்கள் எவ்வளவு ''கெத்த ஒன்டா நிக்கிறம் என்டு.. அப்ப யோசிப்பியள்,, சா.. நாங்கள் இப்பிடி இருக்கேலேயே என்டு. '' அப்ப வயிரெரியும், எங்களப் பாத்து!😎😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, balakumar2 said:

நானும்  என்ர பங்கிற்கு ஒரு சுள்ளியத் தூக்கிப் போடுறன்... ஏதோ என்னால முடிஞ்சது!

 

பாராட்டுக்கள் பாலகுமாரா.
இவைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து சகலரையும் சென்றடைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பிரபாகரன், புலிகள், முள்ளிவாய்க்கால் பற்றிக் கதைப்பதற்கான தகுதிகள் எவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் கந்தையா? 

இலங்கையில் பா.உ ஆக இருக்க வேணுமோ, அல்லது ஏதாவது நாட்டில் சி.எம் ஆக வரக் கனவு காண வேணுமோ? 😎

இந்த கருத்துப் பரிமாற்றம் செய்ய லைசென்ஸ் எடுக்க வேணும் என்ற வாதம் பலரால் முன் வைக்கப் பட்டு பல தடவைகள் சிரிப்புக்குள்ளாகிய விடயம் தான்! நீங்கள் புதிதாக ஆரம்பித்திருப்பதால் ஏதாவது புதிதாக இருக்கும் என நினைக்கிறேன்!

நான் எழுதிய பதில்  துல்பனின் குறிப்பிட்ட ஒரு கருத்துக்குரியது..அவரே கூறியுள்ளார் ..தனக்கு தகுதி இல்லை என்று ..உங்கள் கேள்வியை அவரிடம் கேளுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புலிகளின் செயல்களை சரிநிகர் பார்ப்பதும், முன்னாள் வரும்  முந்திரிக்கொட்டை போல தவறுகளை மட்டுமே முதலில் சுட்டிக்காட்டும் பக்குவமும் யாழ் களத்தில் கூடிக்கொண்டு போவது வெளிப்படையாய் தெரிகிறது.
ஒன்றுமட்டும் தெளிவு, நாங்கள் எங்களுக்குள் மென் மேலும் தள்ளி நின்று முடங்கிப்போக மட்டுமே இவை உறுதுணை செய்யும். 

அதேபோல புலிகளின் தியாகத்தை, வீரத்தை, உண்மையை மறுக்காமல் எடுத்து , இடித்து சொல்ல வெளிக்கிட்டு இவர்களின் யானை பசிக்கு சோளப் பொரி ஆகாமல் இருப்பதும் கூட முக்கியம்.
தூர விலகி நிற்பதே  மேல். 

பாரதியாரின் இந்த கவிதை வரிகளை  கூட சரி நிகர், அரசியல் லாப நட்ட கணக்கில் தூற்றும் காலம் இது.

அச்சம் தவிர் 
நையப்புடை 
மானம் போற்று 
ரௌத்திரம் பழகு
ஆண்மை தவறேல்
தாழ்ந்து நடவேல் 
சூரரைப் போற்று 
தீயோர்க்கஞ்சேல்
ஓய்தல் ஒழி
நேர்படப் பேசு
தாழ்ந்து நடவேல்
சாவதற்கஞ்சேல்
காலம் அழியேல்
கீழோர்க்கஞ்சேல்
போர்த்தொழில் பழகு
தோல்வியில் கலங்கேல்
புதியன விரும்பு
வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு
தொன்மைக்கஞ்சேல்
வெளிப்படப் பேசு
நன்று கருது
வவ்வுதல் நீக்கு
தவத்தினை நிதம் புரி
கற்றது ஒழுகு 
கைத்தொழில் போற்று 
சேர்க்கை அழியேல் 
பேய்களுக்கஞ்சேல்
ஞாயிறு போற்று 
மந்திரம் வலிமை
சௌரியந் தவறேல் 
நாளெல்லாம் வினைசெய் 
நாளெல்லாம் வினைசெய்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீண்டும் வரவேண்டும் என்றோ அல்லது மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வேண்டுமென்றோ இங்கு எவரும் எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் புலிகளை இழுத்து வசைபாடல்கள் நிகழாவிட்டால் அவர்களைப்பற்றி இங்கு எவருமே பேசக்கூடப் போவதில்லை. வசைபாடல்களுக்கான எதிர்வினையாகத்தான் புலிகளை நியாயப்படுத்திப் பலரும் கருத்திடுகிறார்கள். ஆனால், தமிழ்த் தேசியம் என்றால் புலிகள்தான் என்று பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடிப்பவர்கள்தான் அவர்களை வீணே இழுத்து தேசியத்தை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் புலிகள்மீது வசையள்ளித் தூற்றுகிறார்கள்.

இங்கே இவர்களுடன் கருத்தாடும் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது தயவுசெய்து இவர்களின் வக்கிரங்களுக்குத் தீணிபோடும் செயலைச் செய்யாதீர்கள். புலிகளை தூற்றவே இக்களத்திற்கு வரும் சிலருக்கு நீங்களே களத்தினை அமைத்துக் கொடுக்காதீர்கள். இவர்களை உங்களால் மாற்றவியலாது. அவர்கள் தமது வக்கிரங்கள் தீரும்வரை தூற்றட்டும், பின்னர் தாமாகக் கலைந்து போய்விடுவார்கள், நீங்கள் இன்னுமொருமுறை அவர்களை அழைக்காதவரை.

புலிகள்மீது அவர்கள் தூற்றும் வசவுகள் இப்போது முக்கியமில்லை. ஏனென்றால், தமது வசவுகளால் எதுவுமே நடக்கப்போவதில்லையென்பதும், தமது தூற்றல்களால் தமிழருக்கு நண்மைகள் எதுவுமே கிடைக்கப்போவதில்லையென்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் இங்கே வருவதற்கு ஒரே காரணம் தமது வக்கிரங்களுக்கு வடிகால் தேடித்தான். தேசியவாதிகளின் முகத்தில் ஓங்கி அறையத் தமக்குக் கிடைத்த ஒரே களம் என்று எண்ணித்தான். ஆகவே, கடந்து செல்லுங்கள்.

தமிழருக்கு உண்மையிலேயே நீங்கள் நண்மையேதும் செய்ய விரும்பினால், முதலாவதாக இவர்களுக்குப் பதில் எழுதுவதை நிறுத்துங்கள். இது உங்களின் பொன்னான நேரத்தையாவது மீதமாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

Tulpen  சொன்ன  கருத்து - பேச்சுவாரத்தையில்  எமது தேசியத்தை ஒரு பாதுகாப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சக்தியை விடுதலைபுலிகள் கொண்டிந்தார்கள். அதை அவர்கள் செய்யாமல் வழமையான இராணுவ மேலாண்மையால் சாதிக்கலாம் என்று மக்களை அழிவுக்குள்ளாக்கியதோடு சிங்கள தரப்பிலும் வெற்றி திமிரை பரிசளித்து எம்மை மேலும் அடக்க உதவினார்கள்.
அதற்க்கு நீங்கள் சொன்னது -  நீங்கள் சொல்லும் கருத்து தோல்வியை அடிப்படையாக வைத்து சொல்லப்படுகிறது.ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு பேயில் பண்ணினால்  அந்த மாணவன் பள்ளிக்கூடம்..போய்யிருக்கக்கூடாது..என்பிர்கள் போலுள்ளது.

மாணவன் பரீட்சையில் பெயிலாவதை யுத்தம் நடத்துவதோடு ஒப்பிடும் விளங்கி கொள்ள முடியாத நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள்

எனக்கு அது சரியாகப்படுகிறது..தோல்வியடைந்த செயல்கள் செய்யக்கூடாதவை என்ற கருத்தை நான் எற்கவில்லை..மாணவனும் வெற்றி பெறலாம் எனறுதான் படித்தான்..புலிகளும் வெற்றி பெறலாம் என்றுதான் அப்படிச்செய்தார்கள்..இழப்பைப்பற்றி நான் இங்கு கதைக்கவில்லை..திரியும் புலிகளின்  வெற்றி...தோல்வி பற்றியது..தான்..

இன்று போராட வெற்றிடமுண்டு...

பேச்சுவார்த்தை செய்ய வெற்றிடமுண்டு...

தேசியக்கீதம் தமிழில் பாட வெற்றிடமுண்டு... செய்வரில்லை என்னெனில் தோற்று விடுவோம் என்ற பயம்...

31 minutes ago, Sasi_varnam said:

அதேபோல புலிகளின் தியாகத்தை, வீரத்தை, உண்மையை மறுக்காமல் எடுத்து , இடித்து சொல்ல வெளிக்கிட்டு இவர்களின் யானை பசிக்கு சோளப் பொரி ஆகாமல் இருப்பதும் கூட முக்கியம்.
தூர விலகி நிற்பதே  மேல். 

 

11 minutes ago, ரஞ்சித் said:

தமிழருக்கு உண்மையிலேயே நீங்கள் நண்மையேதும் செய்ய விரும்பினால், முதலாவதாக இவர்களுக்குப் பதில் எழுதுவதை நிறுத்துங்கள். இது உங்களின் பொன்னான நேரத்தையாவது மீதமாக்கும்.

மிக்க நன்றி ..எறறுக்கொள்கிறேன்.....வணக்கம்🙏🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, balakumar2 said:

இன்டைக்கு சிங்களவரப் பாருங்கோ.. ஜே.வீ.பீ க்கு எத்தின அக்கிரமங்கள் நடந்தது. அவங்கள் என்ன உங்கள மாதிரி தெருத் தெருவா எங்கட அரசு உத செஞ்சது, இத செஞ்சது என்டு கதைச்சுக்கொண்டு திரியிறாங்களே?  தங்கட வெற்றிய ஒன்டாத் தானே கொன்டாடுறாங்கள்.. நீங்கள் மட்டும் ஏன் உப்பிடி இருக்கிறியள்..?

மக்களை ஒன்றிணைக்கவேண்டுமென்றால் ஒரு வெற்றி தேவை. தமிழர்களை வென்ற வெற்றிவாதத்தால் சிங்களவர்கள் பல தலைமுறைகளுக்கும் ராஜபக்‌ஷக்களை வெற்றிநாயகர்களாகக் கொண்டாடுவார்கள். சிங்கள மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எல்லாம் மறக்கடிக்கப்பட தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்படுவார்கள். இதுதான் சிங்களவர்களின் ஒற்றுமைக்கான எளிய சூத்திரம்.

தமிழர்கள் தோல்வியடைந்ததால் அதற்கான ஆயிரம் காரணங்களை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதனை கடந்த முப்பது, ஐம்பது வருட வரலாற்றில் பார்க்காமல் இன்னும் பின்னோக்கிப் பார்க்கவேண்டும்.

இலங்கைத் தீவில் புத்த மதத்தைப் பரப்ப வந்தவர்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே. அவர்கள் புத்த மதத்தோடு தமிழையும் பரப்பியிருந்தால், சிங்களவர்கள் என்ற இனமே வேடுவர்கள் போலக் காட்டுக்குள் இருந்திருக்கும். அந்த வரலாற்றுத் தவறின், தூரநோக்கற்ற செயலின் விளைவுகளைத்தான் இப்போது அனுபவிக்கின்றோம்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, balakumar2 said:

நீங்கள் கதைக்கிற மாதிரி உங்கட சந்ததி கதைக்கப்போறது இல்லை. நாங்கள் எல்லாரும் ஒன்டா ஒரு கொடியிற்கு கீழ தான் நிப்பம்; நிக்கப்போறம்.. அப்ப நீங்கள் எல்லாரும் கைலாயித்தில எமனோட தேநீர் குடிச்சுக்கொண்டு இருப்பியள் .. அப்ப மேல இருந்து பாருங்கோ நாங்கள் எவ்வளவு ''கெத்த ஒன்டா நிக்கிறம் என்டு.. அப்ப யோசிப்பியள்,, சா.. நாங்கள் இப்பிடி இருக்கேலேயே என்டு. '' அப்ப வயிரெரியும், எங்களப் பாத்து!😎😎

குருடன் தகரக் கோப்பையில் பாலை அருந்திக்கொண்டு தங்கக்கோப்பையில் குடித்துக்கொண்டிருப்பதாக நினைப்பதுபோல இருக்கு!

தமிழருக்கும் ஒற்றுமைக்கும் எட்டாம் பொருத்தம்!

எத்தனை தரம் விரிவாக எழுதினாலும் மீண்டும் மீண்டும் அதே பல்லவியிலேயே நிற்பதாகவே தெரிகிறது. எனது எந்த பதிவிலாவது புலிகள் தலைமை மீதோ அல்லது வேறு  எந்த தமிழ் தலைமை மீதோ வசை பாடும் சொற்களை பயன்படுத்தியிருகிறேனா? அதை சுட்டிக்காட்ட முடியுமா? நிச்சயமாக இங்கு ஒப்பாரி வைக்கும் எவராலும் அது முடியாது.

அல்லது வசை பாடல் என்பதற்கு தமிழில் பொதுவாக  உள்ள வரைவிலக்கணத்தை விட ஒரு சிலர் தமக்கென  விசேட வரைவிலக்கணத்தை வைத்திருக்கின்றனரா? பொதுவான வரைவிலக்கணத்தை விட தமது சொந்தக குறுகிய வட்ட  வரைவிலக்கணத்தின் படி தான் விடயங்களை அணுகுகின்றனாரா?

நாம் இங்கு பேசுவது அரசியல். அரசியல் அல்லது அரசறிவியல் என்றால், அதிகாரத்தையும் பொறுப்பையும்  பிரதானமாக குறிக்கும் சொல்.  எந்த அமைப்பு அல்லது கட்சி ஒரு மக்கள் கூட்டத்தின் மீதோ, இனத்தின் மீதோ அல்லது நாட்டின் மீதோ அதிகாரத்தை தன்வசம் எடுக்கிறதோ அந்த அமைப்புக்கு  அதே அளவுக்கு தனது அதிகாரக்கட்டளைகளால், தனது அரசியல் தீர்மானங்களால்    அம் மக்களுக்கு வந்த விளைவிற்கு  முழுப்பொறுப்பு கூறும் கடமையும் உண்டு. அதன் படி தமிழ் மக்கள் மீது முழு அதிகாரத்தையும் தன்னளவில் தானே எடுத்துக்கொண்ட தலைமைக்கு மக்களின் அழிவுக்கும் தமிழ்  தேசியப்போராட்டத்தின்  இன்றைய பாரிய பின்னடைவுக்கும்  பொறுப்பு கூறும் கடமையும் உள்ளது. இதை கூறுவது எப்படி வசைபாடல் ஆகும்.

 சர்வதேசத்திடம் ஸ்ரீலங்கா அரசின் பொறுப்புக்கூறலை நாம் வலியுறுத்தி வருடா வருடம் ஜெனிவா செல்கிறோம். எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா அரசின் மீதான பொறுப்பு கூறல் சர்வதேச விசாரணைக்கு வருமானால் யுத்த‍த்தில் ஈடுபட்ட இருபகுதியினருது பொறுப்பு கூறலையும் சர்வதேசம்  நிச்சயம் வலியுறுத்த தான் போகிறது. அப்போது தமிழர் சார்பில் உள்ள தலைமை அதை ஏற்று கொள்ள முடியாது என்று அடம் பிடிக்க முடியுமா?அப்படி செய்தால் எம்மை காட்டுமிராண்டிகள் என்று தால் உலகம் கணிக்கும். 

நாம் நியாயம் கேட்கும் சர்வதேசத்திடன் அதை செய்ய முடியாத போது எம்முள் நாம் தமிழர்களாக நேர்மையாக  உரையாடுவதை எப்படி வசை பாடல் என்ற வரையறைக்குள் வைக்கின்றீர்கள். 

வீரப்பிரதாபங்கள் எல்லாம் எதிர் காலத்தில் இலக்கியம், கவிதை பாடுவதற்கும் புறநாநூறு, அகநானூறு என்று எம்முள் இலக்கியவாதிகள் மேடைகளில் புளகாங்கிதம் அடைவதற்கும் உதவலாம். ஆனால் ஈழத்தமிழரின் தேசிய வாத‍த்ததிற்கும் எதிர்கால அரசியலுக்கும் அது ஒரு மண்ணாக்கட்டிக்கும் உதவப்போவதில்லை.  தமிழ் தேசியவாதம் என்பது ஒரு சிலரின் குறுகிய வாத சென்றிமென்ற் இல்லை. அது பரந்து பட்டது. நீண்ட வரலாற்றை கொண்டது.  தமிழ் தேசியவாத‍த்தின் வரலாற்றில்   தோல்வியடைந்த படிமுறைகளை படிப்பினைகளாக மட்டும் எடுப்பதுடன் அதை புறந்தள்ளிவிட்டு புதிய சிந்தனைகளுடன், புதிய தந்திரோபாயங்களுன் செல்வதே உண்மையான விடுதலையை தரும். 

எனது இந்த கருத்துக்கள் அனைத்தும் இங்கு விதண்டாவாதம் வைப்பவர்களை மாற்றாது என்று எனக்கு தெரியும். அது பற்றி எனக்கு கவலையும் இல்லை. ஆனால் இதை வாசிக்கும் தமிழ் வாசகர்கள் நிச்சயம்  புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.  ஏனென்றால் இது புரிந்து கொள்ள கடினமான விடயம் அல்ல. அதனேலேயே நேரத்தை செலவிட்டு இங்கு எழுதவேண்டி உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

குருடன் தகரக் கோப்பையில் பாலை அருந்திக்கொண்டு தங்கக்கோப்பையில் குடித்துக்கொண்டிருப்பதாக நினைப்பதுபோல இருக்கு!

தமிழருக்கும் ஒற்றுமைக்கும் எட்டாம் பொருத்தம்!

 

உங்களது  கருத்து உண்மையல்ல என்பதற்கு இத்திரியே சாட்சி

அதர்மம்  ஓங்கும்போது

உண்மையை பொய்கள் பின்னுக்கு  தள்ள முனையும்போதெல்லாம் தமிழர்கள்  முன்  வருவர்

ஒற்றுமையாவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

குருடன் தகரக் கோப்பையில் பாலை அருந்திக்கொண்டு தங்கக்கோப்பையில் குடித்துக்கொண்டிருப்பதாக நினைப்பதுபோல இருக்கு!

தமிழருக்கும் ஒற்றுமைக்கும் எட்டாம் பொருத்தம்!

எப்போதும் சுண்டுவிரலை மற்றவர்களை நோக்கி நீட்டாமல் உங்கள்  கொம்பனியிலிருந்து ஆரம்பிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் நேர்மை நன்றாக இருக்கு, மோகண்ணா நீங்கள் கவனம்🙏

 தலைவர் மேதகு என்று அழைத்த யாழ் இணையம், மேதகு பிரபாகரனை கண்டவனெல்லாம் பிரபாகரன் என்று அழைக்கும் விதத்திற்கு நீங்கள் விரும்பி இணைத்த மட்டுதான் காரணம்😡,

இதையும் மீண்டும் இந்த திரியில் நீக்குவார் அந்த மட்டு, முதல் பதிந்த கருத்தை நீக்கியது போல். இந்த மட்டு என்ன எம் தலைவர் & மாவீரர்கள் போன்று அப்பளுக்கற்றவரா, தன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடுகின்றார்

2011 & 2012 இல் போய் பாருங்கள் மீண்டும் எப்படி யாழ் இணையம் எமது தலைவரையும் போராட்டைதையும் போற்றி பேணி காத்தது என்பதை🙏

 

 

9 minutes ago, குமாரசாமி said:

எப்போதும் சுண்டுவிரலை மற்றவர்களை நோக்கி நீட்டாமல் உங்கள்  கொம்பனியிலிருந்து ஆரம்பிக்கலாமே?

அவருக்கு அது எட்டா பொருத்தம், அவரை போல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

 

உங்களது  கருத்து உண்மையல்ல என்பதற்கு இத்திரியே சாட்சி

அதர்மம்  ஓங்கும்போது

உண்மையை பொய்கள் பின்னுக்கு  தள்ள முனையும்போதெல்லாம் தமிழர்கள்  முன்  வருவர்

ஒற்றுமையாவர்

அப்படியா! 2009 க்கு பின்னர் மாவீரர் தினம், மே 18 இனவழிப்பு நாள் எல்லாம் ஒற்றுமையாகத்தானே நடக்கின்றது.  ஒற்றுமையின் சீத்துவத்தை கடந்த 12 வருடமாகக் காண்கின்றோம்தானே.

5 hours ago, குமாரசாமி said:

எப்போதும் சுண்டுவிரலை மற்றவர்களை நோக்கி நீட்டாமல் உங்கள்  கொம்பனியிலிருந்து ஆரம்பிக்கலாமே?

நாம் எப்போதும் எல்லோருடனும் முகம் முறிப்பதில்லை. முதுகு சொறிவதுமில்லை😎

5 hours ago, உடையார் said:

அவருக்கு அது எட்டா பொருத்தம், அவரை போல்

நீங்கள் முன்முடிபுகளுடன் வைக்கும் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்பது தெரியும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

எந்த அமைப்பு அல்லது கட்சி ஒரு மக்கள் கூட்டத்தின் மீதோ, இனத்தின் மீதோ அல்லது நாட்டின் மீதோ அதிகாரத்தை தன்வசம் எடுக்கிறதோ அந்த அமைப்புக்கு  அதே அளவுக்கு தனது அதிகாரக்கட்டளைகளால், தனது அரசியல் தீர்மானங்களால்    அம் மக்களுக்கு வந்த விளைவிற்கு  முழுப்பொறுப்பு கூறும் கடமையும் உண்டு. அதன் படி தமிழ் மக்கள் மீது முழு அதிகாரத்தையும் தன்னளவில் தானே எடுத்துக்கொண்ட தலைமைக்கு மக்களின் அழிவுக்கும் தமிழ்  தேசியப்போராட்டத்தின்  இன்றைய பாரிய பின்னடைவுக்கும்  பொறுப்பு கூறும் கடமையும் உள்ளது. இதை கூறுவது எப்படி வசைபாடல் ஆகும்.

நீங்கள் முதலில் நேரடியாக எதிர்த்து நில்லுங்கள் அதைவிட்டு நழுவல் வலுவல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் .எத்தனை நாட்களுக்கு இப்படி சேறடிப்பதை இழுப்பதாக உத்தேசம் 2050ளிலாவது  நிப்பாட்டு வீர்களா ? 

மக்கள் நலன் என்று மூச்சுக்கு முன்னூறுதரம்  சொல்லும் நீங்கள் இதுவரை அந்த மக்களுக்கு என்ன செய்தீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை கருத்துடும் இரு தரப்பும் அடுத்த தலை முறைக்கு உண்மை தெரிய வேண்டும் என்று நினைப்பதாக இருந்தால் முதல் அந்த தலைமுறை குறிப்பாக தாயகத்தில் நிலைப்பதற்க்கு வழியைப்பாருங்கள்.கோழி ஆடு தையல் மிசின் போன்றவற்றை சொல்லவில்லை.நான் அறிந்த வரையில் பலர் நல்ல திறமையிருந்தம் வெளி நாடு வரவே விரும்புகின்றனர்.இங்கு தான் எதிரியின் விருப்பமும் நம்வரின் விருப்பமும் ஒரே கோட்டில் அமைகிறது.

35 minutes ago, பெருமாள் said:

நீங்கள் முதலில் நேரடியாக எதிர்த்து நில்லுங்கள் அதைவிட்டு நழுவல் வலுவல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் .எத்தனை நாட்களுக்கு இப்படி சேறடிப்பதை இழுப்பதாக உத்தேசம் 2050ளிலாவது  நிப்பாட்டு வீர்களா ? 

 

தெரியவில்லை. முந்தி என்றால் நீங்க வந்து மண்டையில் போடுவரை என்று சிம்பிளா சொல்லியிருக்கலாம் இப்ப அப்படியும் சொல்ல முடியாது. என்ன செய்வது. பார்ப்போம். 😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ வலிய வந்து புலியைப் பற்றி சேறடிப்பது மாதிரி இருக்கிறது பாலாவின் கதை. 

தமிழர் தரப்பின் அழுக்குகளை அப்படியே மறைத்து, அவன் கவிழ்த்தான் , இவன் வெட்டினான் என்று சும்மா வரலாற்றை இராமாயணம் போல கற்பனையாக எழுத முனையும் போது துலங்கல் வரத்தான் செய்யும்! அது சேறடிப்பு மாதிரித் தெரிந்தால் யார் என்ன செய்ய முடியும்? 

சேறடிப்பு வேண்டாமென்றால், பொய்களை, கற்பனைகளை எழுதாமல் உண்மைகளைப் பேசுங்கள்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

 

நாம் எப்போதும் எல்லோருடனும் முகம் முறிப்பதில்லை. முதுகு சொறிவதுமில்லை😎

 

அதுதான் உங்களைப்போலை ஆக்களை மதில் மேல் பூனைகள் எண்டு அப்பவே சொல்லீட்டம். :cool:

"எங்களுக்கு அப்பவே தெரியும்" எண்டொரு வசனத்தை எப்பவும் கைகாவலாய் வைச்சிருப்பியள். அதை சந்தர்ப்பம் பாத்து  அப்பப்ப எடுத்து விடுவியள். 🤠

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.