Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு - கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

உ.ம். 1962 ஹிந்தியா- சீன சண்டையில், 14 வயதான சிலோனே சீனாவை பிடித்த சில நிலப்பரப்புகளை கிந்தியாவுக்கு விட்டுக் கொடுக்கும் முடிவுக்கு இட்டு சென்றது.

என் தேடலில் நீங்கள்  சொன்ன விடயம் மாட்டுப்படுகிதுல்லை  உங்களிடம் இருந்தால் தந்தாள் நல்லது .

  • Replies 127
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதை மறுவளமாக பார்த்தல், சிங்களம் மேற்கு அல்லது கிந்தியாவை கொண்டுவந்தால் எப்படி அதை எதிர்கொள்வோம்? 

சிங்களம் மேற்கு அல்லது கிந்தியாவை கொண்டுவந்தால் பெரும்பாலான தமிழர்களின் பிரதிபலிபு எப்படி இருக்குமோ, அவ்வாறே சீனாவுக்கும் இருக்க வேண்டும் என்பதே சரியான  நிலைப்பாடாக இருக்கும் என்று நினைக்கிறன்.
.

இவர்களை(மேற்கு/இந்தியா)வை நம்பி இருப்பதையும் இழக்கக்கூடாது என்று மட்டும் தெரிகிறது.. 

18 hours ago, Kadancha said:

இது பகிடி அல்ல.

சீனர்களின் ஓர் பகுதி அல்லது பிரதேச மக்கள் தான் நாயை உணவாக எடுப்பது. 

சீனர்களின் சனத்தொகை பெரிது என்பதால், வெளியாருக்கு அருவருப்பான உணவு வகைகளை சீனர்கள் எல்லோரும் விரும்புவதாக எடுத்து கொள்வது.

கடஞ்சா,

ஹேன் இன சீனர்கள் நிலங்களில் விவசாயங்களை மேற்கொண்ட மக்கள் கூட்டத்தினர். இதே சீனாவில் இவர்களுக்கு அடுத்து இருந்தவர்கள் மேய்ச்சல் நிலத்தை நம்பி வாழ்ந்த மொங்கோலியர்கள். பிற்காலத்தில் ஹேன் இனத்தவர்களால் மொங்கோலியர்கள் வெற்றி கொள்ளப்பட்டனர் (செங்கிஸ்தான் படையைச் சேர்ந்த வீரர்கள் மொங்கோலிய இனத்தவர்கள்).

மொங்கோலியர்கள் நாயை மிகப்பெரும் தோழனாக தம் குடும்பத்தில் வைத்து போற்றியவர்கள் (இவர்களின் குலச்சின்னம் ஓநாய்).  மேய்ச்சல் நிலத்தை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், வேட்டைக்கும் நாயை பழக்கப்படுத்தி வந்தவர்கள். ஆனால் ஹேன் இனத்தவர்களுக்கு நாயின் அவசியம் இருக்கவில்லை. அத்துடன் அவர்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்வதால் திருடர் பயம், காட்டு விலங்குகள் பயம் என்று எதுவும் இருக்கவில்லை. எனவே நாயை மிகவும் தரம் குறைந்த ஒரு மிருகமாகவே பார்த்தனர். சீனப் பழமொழிகள் பலவற்றில் ஒன்றை கேவலமாக பழிப்பதற்கு நாயை குறிப்பிட்டு கூறுவார்கள். எனவே தான்  நாயை அவர்கள் இறைச்சிக்குரிய ஒன்றாக மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். அதுவும் மிகவும் வறிய சீன மக்கள் மாத்திரமே நாயை உணவாக உட்கொள்கின்றனர்.

சீனர்கள் நாயின் மீதான வெறுப்பும் இப்ப குறைவடைந்து செல்கின்றது என நினைக்கின்றேன். நாயை செல்லப் பிராணியாக வளர்க்கும் சீனர்களை கனடாவில் நீங்கள் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீனத் திட்டம் - இந்தியா இலங்கைக்கு அதிரடியாக அறிவித்தது என்ன ?

லியோ நிரோஷ தர்ஷன்)

வடக்கில் மூன்று தீவுகளை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க  இரட்டை ரக சக்தி திட்டத்தினை சீனாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கவுள்ளமையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புபடுவதாக டெல்லி கொழும்பிற்கு அறிவித்துள்ளது. 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/119754/India.jpg

இவ்வாறானதொரு திட்டமொன்று முன்னெடுக்க ஒத்துழைப்பை கோரியிருந்தால் நிச்சயமாக இந்தியா முழு அளவில் இலங்கைக்கு அதனை வழங்கியிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொழும்பின் தற்போதைய நகர்வுகள் குறித்து டெல்லி கூர்மையாக அவதானித்து வருகின்ற நிலையில் வடக்கில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தினை சீனாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கவுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி ஜனவரி 17 ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை அனுமதிக்கமைவாக சினோசோர் ஈடெக் வின் என்ற நிறுவனத்திற்கு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தீவுகளில் புதுப்பிக்கத்தக்க இரட்டை ரக சக்தி திட்டத்தினையே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஏறற்கனவே டெல்லி கவனம் செலுத்தியிருந்த நிலையில் மேற்படி 3 தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டமானது இந்திய பாதுகாப்பு விடயத்தில் தாக்கம் செலுத்துவதாக கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து வெறும் 30 கடல் மைல் தொலைவிலேயே (48 கிலோமீற்றர்) நெடுந்தீவு அமைந்துள்ளதை சுட்டிக்காட்டியிருக்கும் டெல்லி ,  எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  இலங்கையில் முன்னெடுக்கப்படும் அந்நிய நாடுகளின் திட்டங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் தாக்கம் செலுத்தி விட கூடாது என்பதில் மிக அக்கறையுடன் செயற்படுமாறு வலியுறுத்தியுள்ளது.

இதுவரைக்காலமும் இரு தரப்பாலுமே இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்த நிலையில் நெடுந்தீவு , அனலைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க இரட்டை ரக சக்தி திட்டத்தினை சீனாவுடன் இணைந்து முன்னெடுக்கின்றமை நேரடியாகவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் தாக்கம் செலுத்தும் என்பதை கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தை இலங்கை மீள் பெற்றுக்கொள்வதாக இல்லை . அதே போன்று தான் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்திலும்  ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது. 

இவ்வாறு பல விடயங்களில் ஏற்பட கூடிய கசப்பான உணர்வுகள் இரு தரப்பிற்கிடையிலும் காணப்பட கூடிய நல்லுறவில் விரிசல் நிலையை ஏற்படுத்தலாம் என இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் சீனத் திட்டம் - இந்தியா இலங்கைக்கு அதிரடியாக அறிவித்தது என்ன ? | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

என் தேடலில் நீங்கள்  சொன்ன விடயம் மாட்டுப்படுகிதுல்லை  உங்களிடம் இருந்தால் தந்தாள் நல்லது .

நான் எங்கேயோ ஒரு passing reference ஆக வாசித்தேன். அதையே இங்கு உ.ம். ஆக சொன்னேன். 

அதை வாசித்த போது  நன் உண்மையில் திகைப்படைந்தேன். ஓர் சிறிய, அப்போது  தான் துளிர்  விட்ட அரசு, யுத்தத்தில் பிடித்த வட்டுக் கொடுப்பததற்கு சீனாவை இணங்கச் செய்தது, நினைத்து பார்க்க முடியாதது.

இதில் அந்த முயதர்சி பற்றி இருக்கிறது. இது நான் வசித்து அல்ல.

http://webcache.googleusercontent.com/search?q=cache:yn5lei_06UYJ:dbsjeyaraj.com/dbsj/archives/11946+&cd=13&hl=en&ct=clnk&gl=uk

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசித்ததே உண்மையாக இருக்க வேண்டும், அது ஓர் பூகோள  அரசியல், இராஜதந்திர கட்டுரை.

உண்மை ஏனெனில், அது விளக்கப்பட இல்லை, நடந்தந்தை சொன்னது.   

2 hours ago, பெருமாள் said:

என் தேடலில் நீங்கள்  சொன்ன விடயம் மாட்டுப்படுகிதுல்லை  உங்களிடம் இருந்தால் தந்தாள் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எனவே தான்  நாயை அவர்கள் இறைச்சிக்குரிய ஒன்றாக மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். அதுவும் மிகவும் வறிய சீன மக்கள் மாத்திரமே நாயை உணவாக உட்கொள்கின்றனர்.

நாய் இறைச்சி பண்டிகை ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இப்போது நடைபெறுகிறது.

அது கூட எதிர்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

மொங்கோலியர்கள் நாயை மிகப்பெரும் தோழனாக தம் குடும்பத்தில் வைத்து போற்றியவர்கள் (இவர்களின் குலச்சின்னம் ஓநாய்).  மேய்ச்சல் நிலத்தை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், வேட்டைக்கும் நாயை பழக்கப்படுத்தி வந்தவர்கள். ஆனால் ஹேன் இனத்தவர்களுக்கு நாயின் அவசியம் இருக்கவில்லை.

ஒரு பகுதி உண்மையான மொங்கோலியர்களே இப்போதைய han சீன்ஸர்களின் அடி.

ஏனெனில், பல தடவை மாறி  மாறி படையெடுப்பு நடைபெற்றது. மொங்கோலோயர்கே அதிக தரம் படை எடுத்தார்கள்.  

இறுதியில், குபிழைகான் (சிங்கிஸ் கானின் மகன்) சீனாவை ஓர் அரசின் கீழ் கொண்டு வந்தார்.

அந்த நேரத்தில்,  சிங்கிஸ் கானின்  பேரரசு குலைய,   குபிழைகான் han யிலும் தூய்மையான han ஆக மாறி இருந்தார்.

சீனரிற்கு  குபிழைகான் மொங்கோலியர் என்று தெரிந்தும், போற்றுவது இதனால். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நன்றி இணைப்புக்கு பீஜிங் .டெல்லி.கொழும்பு 1960 களில்  வேறு ஒரு கோணத்தை அறிமுகப்படுத்தி செல்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நன்றி இணைப்புக்கு பீஜிங் .டெல்லி.கொழும்பு 1960 களில்  வேறு ஒரு கோணத்தை அறிமுகப்படுத்தி செல்கிறது .

அதனால் தான் சொல்கிறேன், இவை எல்லாம் திட்டமிடப்பட்டு எழுதியது.

நான் வசித்து, நடந்ததை சொல்வதாக, ஓர்passing reference ஆக இருந்தது; ஒன்றும் அரங்கு கட்டி விளக்கம் அளிக்காமல்.    
 
அதனால் தான் என் நினைவில் அப்படியே பதிந்து  கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் இப்போதும் சிங்கள பேரினவாததிடம் என்ன இருக்கிறது 
கிந்தியாவின் பலம் எவ்வளவு என்றுதான் புகுந்து புகுந்து பார்க்கிறார்களே தவிர 
உண்மையான பலத்தின் அடித்தளம் பணம் என்பதையும் அதை சீனா எவ்வாறு 
கையாள்கிறது என்பதையும் அமேரிக்கா எவ்வாறு உலக வல்லரசாகியது என்பதையும் 
பார்க்க மறுக்கிறார்கள். உலக வங்கி  ஐ ம் வ் எல்லாம் என்ன? யாருடையது? யாருக்காக இயங்குகிறது? 
ஏன் இயங்குகிறது போன்ற அடிப்படைகளை கூட இன்னமும் பலர் அறிய முற்ப்படுவதில்லை.

புலிகள் மீதான யுத்தம் குறிப்பாக கடற்புலிகளை அழிப்பது  பற்றி 2000ஆம் ஆண்டு 
ஜி 8 மாநாட்டில் பேசப்பட்டது அது விக்கிலீக்ஸ்ல் இருக்கிறது. ஏன் கடற்புலிகள் மேற்கு நாடுகளின் 
கண்களில் எதிரியாகினார்கள் என்பது அதில் தெளிவாக இருக்கிறது. இப்போதும் சில புலிவாந்தி எடுப்பவர்கள் ராணில்வந்தால் கிழித்திருப்பார் மகிந்த வந்ததால்தான் படுத்திருந்தார் என்று அலட்டுவது போல மற்றவர்களும் கருத்துக்களை பகிர்வது யாரும் உலக அரங்கை சரியா புரியவில்லை என்றுதான் எண்ணுகிறேன்.

நான் கடந்த மாதம் இங்கு எழுதினேன் சீனா இந்தியாவுக்குள் தமிழ்நாட்டின் ஊடாகவே ஊடுருவ போகிறது என்று அதற்கான வேலை திட்டத்தில் சீனா 10 ஆண்டுகள் முன்பே நகர தொடங்கி மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டு இருக்கிறது. துறைமுக கிழக்கு முனையம் பற்றி நான் கடந்த ஆண்டு எழுதியது இப்போது நடக்கிறது அப்போது என்னை நக்கல் செய்தார்கள் சிலர் அதுக்கு காரணம் பில்லியன்னில்  (டாலரில்) எத்தனை சைபர்கள் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாத அடிப்படை அறிவின்மையே காரணம்.

சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி வருடா வருடம் எவ்வளவு ஏறுகிறது 
என்பது எந்த தமிழ் செய்திக்காரனுக்கும் தெரியாது அது எதோ யாருக்கும் தேவையற்ற வணிக செய்தி என்றுதான்  எண்ணுகிறார்கள் என்று நினைக்கிறன். இலங்கைக்கு ஒரு இந்திய அமைச்சர் வந்து கருணா குழுவுடன்  பேசினால் தலைப்பு செய்தி போடுகிறார்கள் ... இந்திய அமைச்சர் எவ்வளவு தரம் கெட்டு உலக அறிவின்றி  கிடக்கிறார் என்பதுக்குத்தான் அது ஆதாரம். அமைச்சர் என்ன பேசினாலும் பானையில் ஏதாவது இருந்தால்தான்  அகப்பையை போட்டு கிண்டும்போது ஏதாவது வரும் என்று எல்லோரும் மறந்து விடுகிறார்கள். 

சிங்களவன் மோடன் என்பது வெறும் பாண்டஸி என்று யாரோ ஒரு அரசியல் விஞ்ஞானி கூரவிவிட்டார் என்று 
கொஞ்ச புலிவாந்தி காரர்கள் காவி திரிந்தார்கள். தரமாக இருக்கும் ஒன்றை அழிப்பவன் மோடனா அறிவாளியா? என்ற அடிப்படை புத்திகூட அவர்களுக்கு இல்லை ... 1970இல் சிங்கப்பூரின் தந்தை லீ சிங்கப்பூர் மக்களுக்கு கொடுத்த  வாக்குறுதியே இந்த நாட்டை நான் சிலோன் போல ஆக்குவேன் என்பதே. இன்று சிங்கப்பூர்  துபாய் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாருங்கள். சகல வளங்களும் நிறைந்திருந்த  இலங்கையை பாருங்கள். நாம் இப்போதும் அடிபாதாளத்தில் வீழ போகிறோம் பொருளாதார  அறிவு அற்று  ஈழ தமிழன் இன்னும் 15 வருடம் கண் மூடினால் இனி எந்த காலத்திலும் எழ முடியாது.
நண்பர்களே நான் திரும்ப திரும்ப எழுதுவது  ஈழத்தில் இருக்கும் அவ்வளவு தனியார் காணிகளையும் நாம் இன்னும் ஒரு  15-20 வருடம் காப்பாற்றி வைத்திருந்தாலே போதும் நாம் அசைக்க முடியாத சக்தியாக தென் ஆசியாவில்  இருப்போம் என்று. 

மியன்மார் இராணுவ ஆடசி ஏன் முதல் இருந்த ஆட்ச்சி அப்படி ஒன்றும் சீனாவுக்கு எதிராக இருக்கவில்லையே? அதற்கு எல்லாம் என்ன காரணம் என்பதை கொஞ்சம் தேடி வாசியுங்கள் 
புலம்பெயர்ந்தவர்கள்  காணி கொள்வனவினால்  காணி விலை ஏறும் .. அது உள்ளூரில் வசிக்கும் மக்களை மிகவும்  பாதிக்கும் அதில்தான் எமக்கு தெளிவு வேண்டும். உள்ளூர் மக்கள் பலம் இழந்துபோனால்  உங்கள் காணிகள் செல்லாது  (இரட்டை பிராஜாஉரிமைக்கு காணி உரிமை இல்லை) என்று ஒரு சட்டம் இயற்றினாலே போதும் எல்லாவற்றையும்  நீங்கள் இழந்து நிற்க. 

எங்களுடைய வெற்றி  என்பது பொருளாதார வெற்றிதான் தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள் நன்பர்களே. மோட்டு சிங்களவனால் இலங்கை அந்நியர்களால் சூறையாடப்படுகிறது பின் தங்கி கிடப்பதால் 
கிராமாக இருப்பதால் ஈழம் இதுவரை தப்பியது இனியும் நாம் கண்ணை மூடி கிடந்தால் எல்லாம் கைநழுவி போய்விடும். ஈழ மக்களை பொருளாதாரத்தில் இருந்து காக்க வேண்டியது நாம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

உங்கள் அறிவு பல சந்தர்ப்பங்களில்...என்னைப் பிரமிக்க வைத்திருக்கின்றது, கற்பகதரு...!

இப்போதும் அப்படித்தான்...!

நாடுகள் கடன் பெறுவதும்...கடன் கொடுப்பதும் மிகவும் சாதாரணமாக நடக்கும் ஒரு விடயம் தான்..!

வங்கிகளில் கடன் பெறுவது வேறு..! அடகு வைத்துக் கடன் பெறுவது என்பது வேறு...!

சிறிலங்கா செய்வது அடகு வைத்துக் கடன் பெறுவது..!

இப்போது அடகு வைக்க ஒன்றுமில்லாத நிலையில்....இறைமையை அடகு வைக்கின்றது..!

அமெரிக்காவுக்குக் கடனைத் திரும்பச் செலுத்தும் வல்லமை உண்டு...!

சிங்களத்துக்கு வங்காள விரிகுடாவை விடவும் பெரிய வாய் மட்டும் தான் இப்போது உள்ளது...! 

அண்ணா முன்னரை போல அடிக்கடி உங்களை காண முடியவில்லை. அடிக்கடி வந்து இப்படி ஒரு வார்த்தை ஸ்ட்ராங்கா வைத்து விட்டுத்தான் போங்களேன்... 👌 🙂
 
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

பலரும் இப்போதும் சிங்கள பேரினவாததிடம் என்ன இருக்கிறது 
கிந்தியாவின் பலம் எவ்வளவு என்றுதான் புகுந்து புகுந்து பார்க்கிறார்களே தவிர 
உண்மையான பலத்தின் அடித்தளம் பணம் என்பதையும் அதை சீனா எவ்வாறு 
கையாள்கிறது என்பதையும் அமேரிக்கா எவ்வாறு உலக வல்லரசாகியது என்பதையும் 
பார்க்க மறுக்கிறார்கள். உலக வங்கி  ஐ ம் வ் எல்லாம் என்ன? யாருடையது? யாருக்காக இயங்குகிறது? 
ஏன் இயங்குகிறது போன்ற அடிப்படைகளை கூட இன்னமும் பலர் அறிய முற்ப்படுவதில்லை.

புலிகள் மீதான யுத்தம் குறிப்பாக கடற்புலிகளை அழிப்பது  பற்றி 2000ஆம் ஆண்டு 
ஜி 8 மாநாட்டில் பேசப்பட்டது அது விக்கிலீக்ஸ்ல் இருக்கிறது. ஏன் கடற்புலிகள் மேற்கு நாடுகளின் 
கண்களில் எதிரியாகினார்கள் என்பது அதில் தெளிவாக இருக்கிறது. இப்போதும் சில1)  புலிவாந்தி எடுப்பவர்கள் ராணில்வந்தால் கிழித்திருப்பார் மகிந்த வந்ததால்தான் படுத்திருந்தார் என்று 2) அலட்டுவது போல மற்றவர்களும் கருத்துக்களை பகிர்வது யாரும் உலக அரங்கை சரியா புரியவில்லை என்றுதான் எண்ணுகிறேன்.

நான் கடந்த மாதம் இங்கு எழுதினேன் சீனா இந்தியாவுக்குள் தமிழ்நாட்டின் ஊடாகவே ஊடுருவ போகிறது என்று அதற்கான வேலை திட்டத்தில் சீனா 10 ஆண்டுகள் முன்பே நகர தொடங்கி மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டு இருக்கிறது. துறைமுக கிழக்கு முனையம் பற்றி நான் கடந்த ஆண்டு எழுதியது இப்போது நடக்கிறது அப்போது என்னை நக்கல் செய்தார்கள் சிலர் அதுக்கு காரணம் பில்லியன்னில்  (டாலரில்) எத்தனை சைபர்கள் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாத அடிப்படை அறிவின்மையே காரணம்.

சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி வருடா வருடம் எவ்வளவு ஏறுகிறது 
என்பது எந்த தமிழ் செய்திக்காரனுக்கும் தெரியாது அது எதோ யாருக்கும் தேவையற்ற வணிக செய்தி என்றுதான்  எண்ணுகிறார்கள் என்று நினைக்கிறன். இலங்கைக்கு ஒரு இந்திய அமைச்சர் வந்து கருணா குழுவுடன்  பேசினால் தலைப்பு செய்தி போடுகிறார்கள் ... இந்திய அமைச்சர் எவ்வளவு 3) தரம் கெட்டு உலக அறிவின்றி  கிடக்கிறார் என்பதுக்குத்தான் அது ஆதாரம். அமைச்சர் என்ன பேசினாலும் பானையில் ஏதாவது இருந்தால்தான்  அகப்பையை போட்டு கிண்டும்போது ஏதாவது வரும் என்று எல்லோரும் மறந்து விடுகிறார்கள். 

சிங்களவன் மோடன் என்பது வெறும் பாண்டஸி என்று யாரோ ஒரு அரசியல் விஞ்ஞானி கூரவிவிட்டார் என்று 
4) கொஞ்ச புலிவாந்தி காரர்கள் காவி திரிந்தார்கள். தரமாக இருக்கும் ஒன்றை அழிப்பவன் மோடனா அறிவாளியா? என்ற அடிப்படை புத்திகூட அவர்களுக்கு இல்லை ... 1970இல் சிங்கப்பூரின் தந்தை லீ சிங்கப்பூர் மக்களுக்கு கொடுத்த  வாக்குறுதியே இந்த நாட்டை நான் சிலோன் போல ஆக்குவேன் என்பதே. இன்று சிங்கப்பூர்  துபாய் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாருங்கள். சகல வளங்களும் நிறைந்திருந்த  இலங்கையை பாருங்கள். நாம் இப்போதும் அடிபாதாளத்தில் வீழ போகிறோம் பொருளாதார  அறிவு அற்று  ஈழ தமிழன் இன்னும் 15 வருடம் கண் மூடினால் இனி எந்த காலத்திலும் எழ முடியாது.
நண்பர்களே நான் திரும்ப திரும்ப எழுதுவது  ஈழத்தில் இருக்கும் அவ்வளவு தனியார் காணிகளையும் நாம் இன்னும் ஒரு  15-20 வருடம் காப்பாற்றி வைத்திருந்தாலே போதும் நாம் அசைக்க முடியாத சக்தியாக தென் ஆசியாவில்  இருப்போம் என்று. 

மியன்மார் இராணுவ ஆடசி ஏன் முதல் இருந்த ஆட்ச்சி அப்படி ஒன்றும் சீனாவுக்கு எதிராக இருக்கவில்லையே? அதற்கு எல்லாம் என்ன காரணம் என்பதை கொஞ்சம் தேடி வாசியுங்கள் 
புலம்பெயர்ந்தவர்கள்  காணி கொள்வனவினால்  காணி விலை ஏறும் .. அது உள்ளூரில் வசிக்கும் மக்களை மிகவும்  பாதிக்கும் அதில்தான் எமக்கு தெளிவு வேண்டும். உள்ளூர் மக்கள் பலம் இழந்துபோனால்  உங்கள் காணிகள் செல்லாது  (இரட்டை பிராஜாஉரிமைக்கு காணி உரிமை இல்லை) என்று ஒரு சட்டம் இயற்றினாலே போதும் எல்லாவற்றையும்  நீங்கள் இழந்து நிற்க. 

எங்களுடைய வெற்றி  என்பது பொருளாதார வெற்றிதான் தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள் நன்பர்களே. மோட்டு சிங்களவனால் இலங்கை அந்நியர்களால் சூறையாடப்படுகிறது பின் தங்கி கிடப்பதால் 
கிராமாக இருப்பதால் ஈழம் இதுவரை தப்பியது இனியும் நாம் கண்ணை மூடி கிடந்தால் எல்லாம் கைநழுவி போய்விடும். ஈழ மக்களை பொருளாதாரத்தில் இருந்து காக்க வேண்டியது நாம்தான். 

உங்கள் கோபமும் இயலாமையும் புரிகிறது. இருந்த போதும்..

மேலே குறிப்பிட்டுக் காட்டியவற்றை தவிர்த்திருந்தால் உங்கள் கருத்து மேலும் வலுப் பெற்றிருக்கும் என்பது என் தாழ்மையான எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

எங்களுடைய வெற்றி  என்பது பொருளாதார வெற்றிதான் தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள் நன்பர்களே. மோட்டு சிங்களவனால் இலங்கை அந்நியர்களால் சூறையாடப்படுகிறது பின் தங்கி கிடப்பதால் 
கிராமாக இருப்பதால் ஈழம் இதுவரை தப்பியது இனியும் நாம் கண்ணை மூடி கிடந்தால் எல்லாம் கைநழுவி போய்விடும். ஈழ மக்களை பொருளாதாரத்தில் இருந்து காக்க வேண்டியது நாம்தான். 

இதைத்தான் நானும் கன றாளாக சொல்லுறன்.இங்கை என்ன என்டால் இந்தியா சீனா என்டு புடுங்குப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

நாலுபக்கம் கடலால் சூழ்ந்த ஒரு தீவுக்குள் 
வெறும் 15 வீத சிறுபான்மை இனமாக இருந்துகொண்டு 
அருகிருந்த வல்லாதிக்கத்தையும் எதிர்த்து 30 வருடம் உலகமே 
வியக்கும் வண்ணம் போராடினோம் என்றால் 
அது இனத்துக்காக தங்கள் உடலில் குண்டை சுமந்த தியங்களினால் 
மட்டுமே சாத்தியம் ஆக்கப்பட்டது என்பதை புரியாத ஒருவன் 
***** ... அவனுடன் தமிழன் 
என்ற ரீதியில் பேச என்ன இருக்கிறது எனக்கும் ? உங்களுக்கும் ? 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

சிறிலங்காவிலும் பார்க்க பல்லாயிரம் கோடிகள் அமெரிக்கா சீனாவிடம் கடன் பட்டிருக்கிறதே? ஓ.... அமெரிக்கருக்கும் அறிவில்லை என்கிறீர்களா? உண்மையாகத்தான் இருக்கும். ஈழத்தமிழர்கள் சாதித்தது போல இவர்கள் எவரும் எந்த வெற்றியும் கண்டதில்லை என்பது உண்மைதான். அது சரி ... எப்போது கனவுலகில் இருந்து மீள்வதாக உத்தேசம்? 😃

என்ன jude, 

அமெரிக்கனின் கடனையும் சிறீலங்கனின் கடனையும் ஒப்பிடும் அளவுக்கு .. முடியல..🤥

1) ஒன்று jude தன்னை அதி புத்திசாலியாக நினைத்திருக்க வேண்டும். அல்லது 2) யாழ் களத்தில் உள்ளோரையும் வாசகர்களையும் மூடர்களாக நினைத்திருக்க வேண்டும்.

அதில் எது சரியானது

இரண்டுமே பிழை என்று நம்புகிறேன். ☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவோ அல்லது மேற்கு நாடுகளோ ஒரு போதும் இலங்கையின் சீன ஆதரவுக்கெதிராக தமிழருக்கு ஆதரவு தெரிவிக்காது அவ்வாறு சிங்களத்திற்கு எதிராக இந்திய மேற்கு கூட்டணி சென்றால் இலங்கை முற்று முழுதாக சீன நிலை கொள்ளும் என்பதால் இலங்கையுடன் சமாதானமாகவே செல்லும் இலங்கை எப்போதும் பரமசிவன் களுத்துப்பாம்பு, உதாரணத்திற்கு தமிழீழமே மேற்கு நாட்டினர் தமிழர்க்கு தட்டில் வைத்துக்கொடுத்தாலும் இலங்கை பதிலுக்கு சீனா பக்கம் நிரந்தரமாக சென்றுவிடும் இதனால் பாதிப்பு இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்குத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, vasee said:

இந்தியாவோ அல்லது மேற்கு நாடுகளோ ஒரு போதும் இலங்கையின் சீன ஆதரவுக்கெதிராக தமிழருக்கு ஆதரவு தெரிவிக்காது அவ்வாறு சிங்களத்திற்கு எதிராக இந்திய மேற்கு கூட்டணி சென்றால் இலங்கை முற்று முழுதாக சீன நிலை கொள்ளும் என்பதால் இலங்கையுடன் சமாதானமாகவே செல்லும் இலங்கை எப்போதும் பரமசிவன் களுத்துப்பாம்பு, உதாரணத்திற்கு தமிழீழமே மேற்கு நாட்டினர் தமிழர்க்கு தட்டில் வைத்துக்கொடுத்தாலும் இலங்கை பதிலுக்கு சீனா பக்கம் நிரந்தரமாக சென்றுவிடும் இதனால் பாதிப்பு இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்குத்தான்.

அப்ப......இவங்கள் எவ்வளவு அடிச்சாலும்/அழிச்சாலும் தாங்குறாங்கள் ...... ரொம்ப ரொம்ப நல்லவங்களடா பீலிங்கோட வாழ வேண்டியதுதான் எண்டுறியள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

பலரும் இப்போதும் சிங்கள பேரினவாததிடம் என்ன இருக்கிறது 
கிந்தியாவின் பலம் எவ்வளவு என்றுதான் புகுந்து புகுந்து பார்க்கிறார்களே தவிர 
உண்மையான பலத்தின் அடித்தளம் பணம் என்பதையும் அதை சீனா எவ்வாறு 
கையாள்கிறது என்பதையும் அமேரிக்கா எவ்வாறு உலக வல்லரசாகியது என்பதையும் 
பார்க்க மறுக்கிறார்கள். உலக வங்கி  ஐ ம் வ் எல்லாம் என்ன? யாருடையது? யாருக்காக இயங்குகிறது? 
ஏன் இயங்குகிறது போன்ற அடிப்படைகளை கூட இன்னமும் பலர் அறிய முற்ப்படுவதில்லை.

புலிகள் மீதான யுத்தம் குறிப்பாக கடற்புலிகளை அழிப்பது  பற்றி 2000ஆம் ஆண்டு 
ஜி 8 மாநாட்டில் பேசப்பட்டது அது விக்கிலீக்ஸ்ல் இருக்கிறது. ஏன் கடற்புலிகள் மேற்கு நாடுகளின் 
கண்களில் எதிரியாகினார்கள் என்பது அதில் தெளிவாக இருக்கிறது. இப்போதும் சில புலிவாந்தி எடுப்பவர்கள் ராணில்வந்தால் கிழித்திருப்பார் மகிந்த வந்ததால்தான் படுத்திருந்தார் என்று அலட்டுவது போல மற்றவர்களும் கருத்துக்களை பகிர்வது யாரும் உலக அரங்கை சரியா புரியவில்லை என்றுதான் எண்ணுகிறேன்.

நான் கடந்த மாதம் இங்கு எழுதினேன் சீனா இந்தியாவுக்குள் தமிழ்நாட்டின் ஊடாகவே ஊடுருவ போகிறது என்று அதற்கான வேலை திட்டத்தில் சீனா 10 ஆண்டுகள் முன்பே நகர தொடங்கி மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டு இருக்கிறது. துறைமுக கிழக்கு முனையம் பற்றி நான் கடந்த ஆண்டு எழுதியது இப்போது நடக்கிறது அப்போது என்னை நக்கல் செய்தார்கள் சிலர் அதுக்கு காரணம் பில்லியன்னில்  (டாலரில்) எத்தனை சைபர்கள் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாத அடிப்படை அறிவின்மையே காரணம்.

சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி வருடா வருடம் எவ்வளவு ஏறுகிறது 
என்பது எந்த தமிழ் செய்திக்காரனுக்கும் தெரியாது அது எதோ யாருக்கும் தேவையற்ற வணிக செய்தி என்றுதான்  எண்ணுகிறார்கள் என்று நினைக்கிறன். இலங்கைக்கு ஒரு இந்திய அமைச்சர் வந்து கருணா குழுவுடன்  பேசினால் தலைப்பு செய்தி போடுகிறார்கள் ... இந்திய அமைச்சர் எவ்வளவு தரம் கெட்டு உலக அறிவின்றி  கிடக்கிறார் என்பதுக்குத்தான் அது ஆதாரம். அமைச்சர் என்ன பேசினாலும் பானையில் ஏதாவது இருந்தால்தான்  அகப்பையை போட்டு கிண்டும்போது ஏதாவது வரும் என்று எல்லோரும் மறந்து விடுகிறார்கள். 

சிங்களவன் மோடன் என்பது வெறும் பாண்டஸி என்று யாரோ ஒரு அரசியல் விஞ்ஞானி கூரவிவிட்டார் என்று 
கொஞ்ச புலிவாந்தி காரர்கள் காவி திரிந்தார்கள். தரமாக இருக்கும் ஒன்றை அழிப்பவன் மோடனா அறிவாளியா? என்ற அடிப்படை புத்திகூட அவர்களுக்கு இல்லை ... 1970இல் சிங்கப்பூரின் தந்தை லீ சிங்கப்பூர் மக்களுக்கு கொடுத்த  வாக்குறுதியே இந்த நாட்டை நான் சிலோன் போல ஆக்குவேன் என்பதே. இன்று சிங்கப்பூர்  துபாய் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாருங்கள். சகல வளங்களும் நிறைந்திருந்த  இலங்கையை பாருங்கள். நாம் இப்போதும் அடிபாதாளத்தில் வீழ போகிறோம் பொருளாதார  அறிவு அற்று  ஈழ தமிழன் இன்னும் 15 வருடம் கண் மூடினால் இனி எந்த காலத்திலும் எழ முடியாது.
நண்பர்களே நான் திரும்ப திரும்ப எழுதுவது  ஈழத்தில் இருக்கும் அவ்வளவு தனியார் காணிகளையும் நாம் இன்னும் ஒரு  15-20 வருடம் காப்பாற்றி வைத்திருந்தாலே போதும் நாம் அசைக்க முடியாத சக்தியாக தென் ஆசியாவில்  இருப்போம் என்று. 

மியன்மார் இராணுவ ஆடசி ஏன் முதல் இருந்த ஆட்ச்சி அப்படி ஒன்றும் சீனாவுக்கு எதிராக இருக்கவில்லையே? அதற்கு எல்லாம் என்ன காரணம் என்பதை கொஞ்சம் தேடி வாசியுங்கள் 
புலம்பெயர்ந்தவர்கள்  காணி கொள்வனவினால்  காணி விலை ஏறும் .. அது உள்ளூரில் வசிக்கும் மக்களை மிகவும்  பாதிக்கும் அதில்தான் எமக்கு தெளிவு வேண்டும். உள்ளூர் மக்கள் பலம் இழந்துபோனால்  உங்கள் காணிகள் செல்லாது  (இரட்டை பிராஜாஉரிமைக்கு காணி உரிமை இல்லை) என்று ஒரு சட்டம் இயற்றினாலே போதும் எல்லாவற்றையும்  நீங்கள் இழந்து நிற்க. 

எங்களுடைய வெற்றி  என்பது பொருளாதார வெற்றிதான் தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள் நன்பர்களே. மோட்டு சிங்களவனால் இலங்கை அந்நியர்களால் சூறையாடப்படுகிறது பின் தங்கி கிடப்பதால் 
கிராமாக இருப்பதால் ஈழம் இதுவரை தப்பியது இனியும் நாம் கண்ணை மூடி கிடந்தால் எல்லாம் கைநழுவி போய்விடும். ஈழ மக்களை பொருளாதாரத்தில் இருந்து காக்க வேண்டியது நாம்தான். 

தமிழர்கள் பொருளாதார ரீதியாய் முன்னேற வேண்டும் என்பதும் ....அதற்கு அவர்கள் நிலங்களை தக்க வைக்க வேண்டும் என்பதும் உண்மையே .
இவ்வளவு அழிந்த பின்னும் எப்படி உங்களால் சிங்களவனை முட்டாள் என்று சொல்ல  சொல்ல முடிகின்றது 
 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

தமிழர்கள் பொருளாதார ரீதியாய் முன்னேற வேண்டும் என்பதும் ....அதற்கு அவர்கள் நிலங்களை தக்க வைக்க வேண்டும் என்பதும் உண்மையே .
இவ்வளவு அழிந்த பின்னும் எப்படி உங்களால் சிங்களவனை முட்டாள் என்று சொல்ல  சொல்ல முடிகின்றது 
 
எங்களை நாங்களே பெருமையாக நினைக்காவிட்டால் பிறர் அற்பமாக நினைப்பார்கள் அல்லவா!

தமிழர் நிலங்களை தக்கவைக்க முயல்வார்கள் என்பது சிங்கள மோடையனுக்கு தெரியாதா? அவர்கள் இப்போது செய்வதே நில அபகரிப்புத்தானே.  முல்லைத்தீவில் 81% நிலம் (அநேகம் காடுகள்) ஏற்கனவே அரச காணிகளாக இருந்தும், மிச்சம் இருக்கும் 19% இலும் அபகரிப்பு செய்யத்தானே நிற்கின்றான்.

சிங்கள மோடையர் சர்வதேச அரசியலில் என்ன செய்கின்றார்கள் என்று கீழுள்ள கட்டுரை சொல்கின்றது.
 
முடிந்தவரை சிங்கள ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளையும் பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் ந்தியா ஜப்பான் ஆகிய நாடுகளையும தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்தியைத்தான் கையாளுகின்றன. அதாவது இலங்கை சிறிய நாடு என்ற எண்ணக் கருவோடு செயற்படும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை முடியுமானவரை தங்கள் காடிக்கு வரச்செய்யும் நகர்வுகளையே மேற்கொண்டு வருகின்றனர். இலங்கைத் தீவில் இரண்டு தேசிய இனங்கள் இருக்கின்ற என்பதை நிறுவக்கூடாது என்ற நோக்கமே இதன் பின்புலமாகும்”

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

சிங்களவனோடு கோபப்படுவது வேறு.. அவர்களை முட்டாள் என்று சொல்லும் நாம் படு முட்டாள்கள் ...யாரும் ஒரு செயலை செய்வதற்கு பின்னால் காரணம் இருக்கும் ...இந்திய அமைச்சர் கருணா,பிள்ளையானை சந்தித்தது கூட தமது தேவை கருதியே. அவர்கள் ஒன்றும் மோடர்கள் அல்ல  ....எல்லாரயும் பகைத்து ,எல்லோரையும் முட்டாளாக்கி நாம் இருக்க இடம் இல்லாமல் நிக்கின்றோம்  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

அண்ணா முன்னரை போல அடிக்கடி உங்களை காண முடியவில்லை. அடிக்கடி வந்து இப்படி ஒரு வார்த்தை ஸ்ட்ராங்கா வைத்து விட்டுத்தான் போங்களேன்... 👌 🙂
 
வணக்கம், சசி!
அந்த மாம்பழம் சந்தி நினைவுகளைப் போல, யாழின் நினைவுகளை இலகுவில் மறந்து விட முடியாது!
அடிக்கடி சந்திப்போம். நன்றி...!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

என்ன jude, 

அமெரிக்கனின் கடனையும் சிறீலங்கனின் கடனையும் ஒப்பிடும் அளவுக்கு .. முடியல..🤥

1) ஒன்று jude தன்னை அதி புத்திசாலியாக நினைத்திருக்க வேண்டும். அல்லது 2) யாழ் களத்தில் உள்ளோரையும் வாசகர்களையும் மூடர்களாக நினைத்திருக்க வேண்டும்.

அதில் எது சரியானது

இரண்டுமே பிழை என்று நம்புகிறேன். ☹️

இலங்கை வைத்திருப்பது கடன் 
இந்த தொகை பணத்தை இலங்கையில் இருப்பவர் எவரும் (ஜனாதிபதி உட்பட) கண்ணால் காண்பதில்லை 
அது நியோர்க்கில் இருக்கும் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு அல்லது பெஜிங்ல் இருக்கும் 
ஒரு வங்கியில் இருந்து ஷங்காய் ல் இருக்கும் இன்னொரு வங்கிக்கு மாறி இருக்கும். இலங்கையில் கட்டுமான பணி  எதாவது நடந்திருக்கும் அப்போதைய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் லஞ்ச ஊழல் அடிப்படையில் அதன் பெறுமதி கணக்கில் இருக்கும். 

அமெரிக்கா ட்ரெஷர்ரி நோட்களைத்தான் விற்கிறது அதற்கு 1-3% வட்டி உண்டு 
அந்த வட்டிதான் அதை (சீனா) வேண்டுபவர்களுக்கு லாபம்.
அமெரிக்கா அதை 8-9 வீத வருமானத்துக்கு முதலீடு செய்துகொள்ளும்.
சீனா அமெரிக்காவுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்வதால் .. ஏற்றுமதி இறக்குமதி டெபிசிற் 
வட்டி வீதத்தை கூட்டி கொள்ளும் என்பதால் சீனாவுக்கு இப்பொது அதிக லாபம். 

1 hour ago, vasee said:

இந்தியாவோ அல்லது மேற்கு நாடுகளோ ஒரு போதும் இலங்கையின் சீன ஆதரவுக்கெதிராக தமிழருக்கு ஆதரவு தெரிவிக்காது அவ்வாறு சிங்களத்திற்கு எதிராக இந்திய மேற்கு கூட்டணி சென்றால் இலங்கை முற்று முழுதாக சீன நிலை கொள்ளும் என்பதால் இலங்கையுடன் சமாதானமாகவே செல்லும் இலங்கை எப்போதும் பரமசிவன் களுத்துப்பாம்பு, உதாரணத்திற்கு தமிழீழமே மேற்கு நாட்டினர் தமிழர்க்கு தட்டில் வைத்துக்கொடுத்தாலும் இலங்கை பதிலுக்கு சீனா பக்கம் நிரந்தரமாக சென்றுவிடும் இதனால் பாதிப்பு இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்குத்தான்.

வசி!
சீனா செய்வது முதலீடுகள் 50-100 வருட குத்தகை அடிப்படையில். கடவுளே வந்து சீனாவை போ என்றாலும் 
முதலில் கணக்கு முடித்தாக வேண்டும். அந்த கணக்கை முடிக்கும் சக்தி இந்தியாவுக்கு இல்லை இந்தியாவின் மொத்த  2020 ஜி டி பியே  $2610 பில்லியன்கள்தான். மோடி இன்னும் ஒரு இரண்டு வருடம் இருந்தால்  இந்தியாவே  பிச்சை எடுத்துதான் பிழைக்க வேண்டும். 

அமெரிக்காவுக்கு என்ன லாபம்? லாப நஷ்ட கணக்கில் அமெரிக்காவுக்கு ஒரு லாபமும் இல்லை 
அதைவிட இந்தியாவிடம் இந்து சமுத்திரத்தில் ஒரு கடல் பரப்பை வாங்கி அமேரிக்கா சொந்தமாக ஒரு நாட்டை  உருவாக்கி கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

எங்களை நாங்களே பெருமையாக நினைக்காவிட்டால் பிறர் அற்பமாக நினைப்பார்கள் அல்லவா!

39 minutes ago, ரதி said:

சிங்களவனோடு கோபப்படுவது வேறு.. அவர்களை முட்டாள் என்று சொல்லும் நாம் படு முட்டாள்கள்

😂

மூளை இல்லாதவன் என்று சொல்ல மோட்டு சிங்களவன் என்றும் சொல்வார்கள.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எங்களை நாங்களே பெருமையாக நினைக்காவிட்டால் பிறர் அற்பமாக நினைப்பார்கள் அல்லவா!

தமிழர் நிலங்களை தக்கவைக்க முயல்வார்கள் என்பது சிங்கள மோடையனுக்கு தெரியாதா? அவர்கள் இப்போது செய்வதே நில அபகரிப்புத்தானே.  முல்லைத்தீவில் 81% நிலம் (அநேகம் காடுகள்) ஏற்கனவே அரச காணிகளாக இருந்தும், மிச்சம் இருக்கும் 19% இலும் அபகரிப்பு செய்யத்தானே நிற்கின்றான்.

சிங்கள மோடையர் சர்வதேச அரசியலில் என்ன செய்கின்றார்கள் என்று கீழுள்ள கட்டுரை சொல்கின்றது.
 
முடிந்தவரை சிங்கள ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளையும் பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் ந்தியா ஜப்பான் ஆகிய நாடுகளையும தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்தியைத்தான் கையாளுகின்றன. அதாவது இலங்கை சிறிய நாடு என்ற எண்ணக் கருவோடு செயற்படும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை முடியுமானவரை தங்கள் காடிக்கு வரச்செய்யும் நகர்வுகளையே மேற்கொண்டு வருகின்றனர். இலங்கைத் தீவில் இரண்டு தேசிய இனங்கள் இருக்கின்ற என்பதை நிறுவக்கூடாது என்ற நோக்கமே இதன் பின்புலமாகும்”

மேலே சிங்களவர்கள் மூடர்கள் என்பது வெறும் பாண்டஸி என்பதை சிலர் காவி திரிந்தார்கள் 
என்று எழுதி இருந்தேன் ... நீங்கள்தான் அதை இணைத்து இருந்தீர்களோ தெரியவில்லை.
அது இணைத்தது பற்றி நான் எழுதவில்லை அதில் மேற்கொண்டு எழுதப்பட்ட கருத்துக்களை குறித்தே எழுதினேன். எல்லாவற்றையும் சரியோ தவறோ வாசிப்பதில் எந்த தப்பும் இல்லை. 
நீங்கள் இணைத்து இருந்து அதனால் காவி கொண்டு திரிந்தார்கள் என்ற வார்த்தை உங்களை சுட்டு இருந்தால்.
அதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் ........ அதில் பதிந்த கருத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.