Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்!

ஒவ்வொரு கிழமையும் எனது தகப்பனாரும் வாங்கிக் கொள்வார்! பின்னர் வானொலியில் முடிவுகளைக் கேட்கும் போது...., அட! இரண்டு நம்பரால  சறுக்கிப் போச்சுது என்ற படி.... ரிக்கற்றைக்  கிழித்து  எறிவார்!

இதைப் பார்த்துப் பார்த்து.....நான் ரிக்கற்றே  வாங்குவதில்லை..!😄

நான் இப்பவரைக்கும்  எடுக்கிறன் கிடைத்தால்  ஓர் வீடு மற்றும்படி 
கார் வாங்கணும் பந்தாவா வாழவேண்டுமென்ற ஐடியா எல்லாம் இல்லை  ஆனால் விழுந்தபாடில்லை 

சிறியண்ணை இழுத்து வைக்க வேண்டாம் எழுதிடுங்கள் 

  • Replies 72
  • Views 8.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை,  ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும்,  அவன்... ஒரு காதா

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,   அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    மிஷேலின் தொழிற்சாலை... சன நடமாட்டம் குறைவான,  ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அந்த இடத்தில் சில தொழிற்சாலைகளைத் தவிர, வீதி அமைதியாகவே இருக்கும். வேலை ஆட்கள் எல்லோரும், காலை 7´மணிக்கு வே

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இப்பவரைக்கும்  எடுக்கிறன் கிடைத்தால்  ஓர் வீடு மற்றும்படி 
கார் வாங்கணும் பந்தாவா வாழவேண்டுமென்ற ஐடியா எல்லாம் இல்லை  ஆனால் விழுந்தபாடில்லை 

சிறியண்ணை இழுத்து வைக்க வேண்டாம் எழுதிடுங்கள் 

இதுவரை நீங்கள் எடுத்த ரிக்கட் ஒன்றும் விழவில்லையா இன்னுமா பாக்கட்டில் வைத்திருக்கிறீர்கள்.......!    😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இதுவரை நீங்கள் எடுத்த ரிக்கட் ஒன்றும் விழவில்லையா இன்னுமா பாக்கட்டில் வைத்திருக்கிறீர்கள்.......!    😂

அதை க்கிழித்து எறிந்து விடுவன்  20 ரூபா விழும் அல்லது நூறு ரூபா ஒரு தடவை 1000 ரூபா  கொழும்பில் இறங்கினால் இந்த ரிக்கட் சத்தம் தான் காதில கேட் கும் கொழும்பில் கூட ஏன் சில இடங்களில் செல்வேன் சிங்களப்பகுதிகள் கூட ஆனால் விழவில்லை வீட்டில ஏச்சு மட்டும் விழும் . அதாவது விழுதே என்ற ஆசை ஐயா 😜

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்த லொட்டோ வாங்கிறனான்,வேலையில் 10 பேர் சேர்ந்து வாங்கிறது சிலநேரம் ஒரு ஆளுக்கு 5 டொலர் வரும் அதை அடுத்த முறை போடுவோம் ஒரு சதமும் விலாது ஆனால் நாங்கள் முயற்சியை கை விடவில்லை... நான் மறந்தாலும் பாட்னர்ஸ் மறக்க மாட்டினம் \

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறியின் நகைச்சுவை உணர்வுக்கு இந்த ஆக்கம் கொஞ்சம் சுமார்தான்.

யாழ்கள உறவுகளை வைத்து நகைச்சுவையாக ஒரு ஆக்கம் உருவாக்குங்கள் எல்லோராலும் விரும்பபடும்.

அனைவருடனும் நட்பாக பழகும் உங்களை யாரும் கோவித்து கொள்ள மாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும்,  ஊக்கமும்  பகிர்ந்து கொண்ட....

குமாரசாமி அண்ணா, நாதமுனி, உடையார், ஈழப்பிரியன், 
சுவி, கிருபன் ஜீ, வல்வை சகாறா, விவசாயி விக், காவலூர் கண்மணி அக்கா, 
நிலாமதி அக்கா, புங்கையூரன்,விசுகு, மல்லிகை வாசம்,  சாந்தி அக்கா, 
தனிக்காட்டு ராஜா, புத்தன், வளவன்,ரதி, பெனி, யாயினி, தமிழினி,  
சுவைப்பிரியன், நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள். 🙏

இன்று மாலை, மிகுதியை... தொடர்வேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வெளிவர இருக்கும் மிகுதிப் பகுதியில்... சுவராசியமான, 
எதிர்பாரத சம்பவங்கள் நிச்சயம்  உண்டு. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா விழுந்த லொட்டோவிலை எனக்கும் தாங்கோவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

   Mercedesbenz GIFs - Get the best GIF on GIPHY

மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,  
அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்...
நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖

முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க,
ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... 
 பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்...
வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐

நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது,
எழுதப் படாத, சட்டம் என்றாலும்...
மிஷேல்  வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘

அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது...
தனது பழைய முதலாளிக்கு,  "தினாவெட்டாக"... 
சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்...    🤨
தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... 
தன்னுடைய,  நான்கு நண்பர்களை சேர்த்து...
சிறிய 🛠️  தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜

இடைவேளை... !!! ??? :grin:
இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 55 நிமிடங்களுக்கு பின் வருகின்றேன்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

   

இடைவேளை... !!! ??? :grin:
இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

இடைவேளை கூடாமல் வந்து எழுதீட்டு ஓடீடுங்கோ தமிழ் சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

இன்னும் 55 நிமிடங்களுக்கு பின் வருகின்றேன்.......!   😂

அய்யய்யோ.... சுவியர்,
உண்மையாகவா... சொல்கிறீர்கள்.
களத்தில்... வேறு பதிவுகளை, பார்த்துக் கொண்டு இருந்ததால்...
இன்னும்.. எழுதுற  மூடு, வரவில்லை.

சம்பந்தன் ஐயா... பத்து வருசமாய்  சொன்ன மாதிரி,
தீபாவளிக்கும்,  பொங்கலுக்கும் தீர்வு வரும் என்று பொய்  சொல்ல மாட்டேன்.

என்ன... நான், சொன்ன மணித்தியாலாக் கணக்கில்.. கொஞ்சம் பிந்தலாம்.
ஐயோ... ஏற்கெனவே பிந்தி விட்டது.. ஐயா.   :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

   Mercedesbenz GIFs - Get the best GIF on GIPHY

மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,  
அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்...
நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖

முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க,
ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... 
 பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்...
வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐

நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது,
எழுதப் படாத, சட்டம் என்றாலும்...
மிஷேல்  வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘

அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது...
தனது பழைய முதலாளிக்கு,  "தினாவெட்டாக"... 
சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்...    🤨
தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... 
தன்னுடைய,  நான்கு நண்பர்களை சேர்த்து...
சிறிய 🛠️  தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜

இடைவேளை... !!! ??? :grin:
இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

இது எப்படி இருக்கு என்றால் சின்னப்பிள்ளைகளை படிக்க சொல்லி மேசையில் விட்டால் ஒருக்கா தண்ணீர் விடாய் என்று எழும்புவார்கள். அடுத்த தரம் பசிக்குது அல்லது பாத்ரூம் போகனும் இப்படி தான் இருக்கிறது..🤭😄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  

வெள்ளிக்கிழமையானபடியால் அடிச்சிட்டு குப்புற படுக்கிறதோ தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, வாதவூரான் said:

சிறி அண்ணா விழுந்த லொட்டோவிலை எனக்கும் தாங்கோவன்

சிறித்தம்பியோவ்! கண்வைச்சு வந்துட்டாங்கள்......வந்துட்டாங்கள்... படலை கவனம் 😂
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

என்ன... நான், சொன்ன மணித்தியாலாக் கணக்கில்.. கொஞ்சம் பிந்தலாம்.
ஐயோ... ஏற்கெனவே பிந்தி விட்டது.. ஐயா.   :grin:

Bild

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

இடைவேளை... !!! ??? :grin:
இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

😡 கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படம் பார்க்க வெளிக்கிட்டால் கூட சிறிது நேரம் தான் இடைவேளை.. உங்களுக்கு மட்டும் இத்தனை மணி நேரம் இடைவேளை வேணுமா....? ஆக்கங்கள் எழுதி முடிக்க வேண்டிய காலத்துக்கு முன்னர் ஆவது முடிப்பீர்கள் என்று நம்புவோமாக அண்ணா..😀

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணை முழுக்க எழுதிப்போட்டு 2 நாள்ல கதையை முடியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 17:58, ஈழப்பிரியன் said:

வெள்ளிக்கிழமையானபடியால் அடிச்சிட்டு குப்புற படுக்கிறதோ தெரியாது.

நான் சொன்னது தான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

2,3  வெள்ளி போயிட்டுது. ஆளை காணவில்லை. 😄

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் பரிசு விழுந்துட்டுதோ தெரியாது.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

can you imagine... — Jack's Motel 7

விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை, 
ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது.

அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும், 
அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான்.

அவனிடம்  அதிக  பணம் கையில் இருந்ததை கண்டு,
பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்..
அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது.

மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும்,
அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்...
வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் 
அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.

"ஒரு தொழிற்சாலைக்கு,
பொருட்களை... வாங்குபவர்கள் தான், முதலாளி" என்ற..
கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை.

ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால்,
பத்து  வாடிக்கையாளரை...  இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள்.

ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே...
பத்துப்  பேருக்கு...  அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு.
அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது. 

வாங்கிய புதுக் காரை... புது நண்பன், 
இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய்,
திருத்த முடியாத அளவுக்கு,  விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து...
மிஷேல்...  மேலும் இடிந்து, போனான்.

வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்...
வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை,
குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று...
வங்கி  அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில்  விற்று விட்டது.

இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று,
மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார். 

மிஷேலுக்கு...  🌠  வெள்ளி திசை 🌟  அடித்து, 
🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று....
எல்லாம் போன பின்தான்... மெல்ல  புரிய ஆரம்பித்தது. 😎

➡️  ➡️  ➡️ தொடரும்.... ✍️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும்...அவர்கள் பிறந்து வளரும் சூழலுக்கேற்பச் சில ஆசைகளும் ...எதிர் பார்ப்புகளும் இருக்கும்!

அவற்றை நோக்கிய பயணம் தானே வாழ்க்கை, சிறியர்?

அவற்றை அடைந்த பின்னரும்...ஒரு முழுமையான மனத் திருப்தி ஏற்பட மாட்டாது...! அதை விடவும் புதிய ஆசை ஒன்று தோன்றும்..!

காரே இல்லாதவன்....காருக்காக ஏங்குவான்..!

பென்ஸ் கார் வைத்திருப்பவன்....வீதியில் போகும் லம்போகினிக்காக ஏங்குவான்!

இதையெல்லாம் கடந்தவன்....ஞானியாகின்றான்..! தொடருங்கள்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

மிஷேலுக்கு...  🌠  வெள்ளி திசை 🌟  அடித்து, 
🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று....
எல்லாம் போன பின்தான்... மெல்ல  புரிய ஆரம்பித்தது. 😎

சிறித்தம்பி! உழைக்காமல் வந்த சொத்தும் பணமும் ஒருகாலமும் கையோடை நிக்காது கண்டியளோ...

தொடருங்கோ மிச்சத்தை வாசிப்பம்.:)

  • கருத்துக்கள உறவுகள்

இனி எத்தனை வெள்ளி 🌟🌟தாண்டி எழுதிறாரோ தெரியா..சோ சிறியண்ணா punctuality  முக்கியம்..😄 நான் சும்மா பகிடியாக சொல்வது சீரியசா எல்லாம் எடுத்துக் கொள்ள கூடா.🤭

Edited by யாயினி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.