Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

புரட்டாதி 2020

ஐரொப்பா  எங்கும்  கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம்

ஐரொப்பிய  நாடுகள் தம்மிடையேயும் பிற  நாடுகளுக்கிடையேயும்

எல்லைகளை  மூடியும் விமானப்பறப்புக்களை  புறக்கணிக்கவும்  தொடங்கிய  நேரம்.

பிள்ளைகளுடன் ஆவணி  மாத விடுமுறை  முடியும் வேளை 

நான்  10  நாள் வேறு ஒரு பயணம்  போகப்போறேன் என்றேன்

அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால்  ஆவணி  மாதமே  வழமையாக பூட்டப்படும்  எனது  தொழில் புரட்டாதி மத்திவரை பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே  கேள்விக்குறி ஒன்றை  தந்திருந்தது)

விமானம்  ஓடாது  என்றார்கள் விமான  ரிக்கற்  ஏற்கனவே  எடுத்தாச்சு  என்றேன்.

விமானம்  ஓடாவிட்டால்  என்றார்கள்  காரில்  போவேன்  என்றேன் (அப்பா  1400 கிலோமீற்றரை 9 மணித்தியாலத்தில் போவார் என்பதால்  எதிர்ப்பில்லை)

அப்போ அங்க  நீங்கள் சந்திக்கப்போறவரின் வயது  கருதி உங்களுக்கு கொரோனா  பரிசோதனை  செய்யணும் என்றார்கள்.

அதற்கென்ன செய்தாப்போச்சு என்றவுடன் மலைப்பகுதியிலேயே பரிசோதனைக்கு நேரம்  எடுத்து  தந்தார்கள்

கொரோனா  தொற்று  இல்லை  என்று வைத்தியர் தந்த அந்த பத்திரத்தை  கவனமாக என்னுடன் வைத்துக்கொண்டேன் (விமான நிலையத்தில்  உதவலாம்  என்பதற்காக)

ஓய்வு  முடித்து வந்த  அடுத்த  நாள் விமானநிலையத்தில் விட்டு  விட்டு  சென்றார்கள் (அவர்களுக்கு  நம்பிக்கையில்லை  நான்  பறப்பேன்  என்று)

விமான  நிலையத்தில்  எந்த  எதிர்ப்புமில்லை.

தொடர்ந்து  ஒவ்வொரு வாசலாக  முன்னேறிக்கொண்டிருக்கின்றேன். 

விமானம்  ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன்  நீண்ட வரிசையில் நிற்க  வைத்து துப்பாக்கி  போல்  எதையே நெற்றியில்  வைக்கிறார்கள். 

ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு  சூடாக இருக்கு

அது  வேற நெற்றியை சூடாக்கிக்கொண்டிருக்கு அதைவிட  வெய்யில் வேற???

நெற்றியை  தொட்டுப்பார்க்கிறேன் சூடாகத்தான் இருக்கு

அடப்பாவிகளா அவ்வளவு  தானா???

ஆனால் அடிக்கடி  பிரெஞ்சு  அரசாங்கம் சொன்னபடியே  உள்ளது வயதானவர்களை  இந்த  நேரத்தில் அரவணையுங்கள்

சென்று  பாருங்கள்

அவர்களை  தனிமையில் விட்டு விடாதீர்கள்...

அது  ஒன்று  மட்டுமே எனது  மனதில் ஓடியபடி????

தொடர்வோம்

Edited by விசுகு
  • Like 21
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் தொடர்கின்றோம்......!   👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, விசுகு said:

விமானம்  ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன்  நீண்ட வரிசையில் நிற்க  வைத்து துப்பாக்கி  போல்  எதையே நெற்றியில்  வைக்கிறார்கள். 

அரச கட்டடங்கள் வைத்தியசாலை போன்ற இடங்களில் தலையை வைக்க அது பெரிய சத்தத்தில் சொன்ன பின்பு தான் உள்நுழையவிடுகிறார்கள்.

  • Thanks 1
Posted

IR-BT-TG88-1_1024x1024@2x.jpg?v=15986384

பாடசாலையில் இருந்து விமானநிலையம் வரை பயன்படுத்துகிறார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, nunavilan said:

IR-BT-TG88-1_1024x1024@2x.jpg?v=15986384

பாடசாலையில் இருந்து விமானநிலையம் வரை பயன்படுத்துகிறார்கள்.

இது பரவாயில்லை.
அனேகமான இடங்களில் தானியங்கியாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.
பக்கத்தில் போய் குனிந்து,நிமிர்ந்து முன்னுக்கு,பின்னுக்கு போய் வெறுப்பே வந்துவிடும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, விசுகு said:

ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு  சூடாக இருக்கு

ரென்ஷன் ஆனாலும் சூடாகும்!

தொடருங்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் எந்த இடத்திற்கு சென்றாலும் (காரியாலங்கள் ,) வாசலில் இந்த மெசினை வைத்து உடல் சூட்டை கணித்து வெப்பநிலையின் வீதம் , ஊர் பெயர் , வருபவரின் அடையாள அட்டை இலக்கம் , விலாசம் , போண் நம்பர் எல்லாம் பதிந்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள் நான் மோட்டார் சைக்கிளில் சென்றேன் அதன் போது வெப்பநிலை உடலில் அதிகம் இருக்க கொஞ்ச நேரம் பிடித்து வைத்தார்கள் பின்னர் உடல் சூடு குறையவே உள்ளே விட்டார்கள் , கொஞ்ச நேரம் மரண பீதிதான் எனக்கும் 

தொடரட்டும் விசுகர் 

  • Thanks 1
Posted

எழுதப் பஞ்சியில தொடருவியள் போல. பேசாமல் எழுதி முடியுங்கோ விசுகு. 

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது  முறை  வந்ததும் நெற்றியில் காய்ச்சல் பார்த்து விட்டு

நீங்கள்  உங்கள் பயணத்தை தொடரலாம்

ஆனால் பயணம் முடியும்வரை எந்த  காரணத்துக்காகவும் Mask யை களட்டக்கூடாது என்கிறார்கள்

விமானத்துக்குள் வந்ததும்  எனது இருப்பிடத்தை  தேடிப்பிடிப்பது கடினமாக  இருக்கவில்லை

காரணம் எனது  சீற்றுக்கு பக்கத்திலோ முன்னுக்கோ பின்னுக்கோ  எவருமில்லை

(ஒன்று  விட்டு  ஒரு சீற்றே ஒதுக்கப்பட்டிருந்தது.)

விமானம்  பறக்கத்தொடங்க சாப்பாடும் தேனீரும்  தருகிறார்கள்

எல்லோரும் Mask யை களட்டியதால்  நானும் சாப்பிட்டு தேனீர் குடிக்க ஒரு  மணித்தியாலப்பயணம்  நிறைவுக்கு  வருவதாக  அறிவிக்கவும் சரியாக  இருக்கிறது.

அடுத்த பரிசோதனைகளை   சந்திக்கணுமே  என  மனம் சொல்கிறது

14 நாள்  உள்ளே  போட்டாலும் பின் வாங்குவதில்லை என பாசம்  தள்ளுகிறது

விமானத்தால் வெளியில் வந்து வெளியே செல்லும் பாதையில் நடக்கத்தொடங்குகின்றேன்

வெளியே  வரும்வரை எந்த  பரிசோதனையும் இல்லை.

மூத்த மருமகன் சொன்னது போல் வந்து நிற்கிறார் (அதிசயமாக  பார்க்கிறார்)

நான் முடிவெடுத்திட்டா அப்புறம் நானே எனது  சொல்லை  கேட்பதில்லை என  பஞ்ச்  டயலாக்கை  விட்டு விட்டு அம்மாட்ட  போ என்கிறேன்.

நான் வருவதாக அக்காவிடம் (அவரின் அம்மா) சொல்லவேண்டாம்  ஆனால் நீ மத்தியானம் சாப்பிட வருவதாய் சொல்லி சமைக்கச்சொல்  என்று  சொல்லியிருந்தேன்)

போய்க்கொண்டிருக்கும்போதே அக்காவிடமிருந்து தொலைபேசி  வருகிறது  என்ன  மகன்  நேரம் பின்னேரம் 3 ஆகுது இன்னும் சாப்பிடவரவில்லையே  என?

இதோ 10 நிமிடத்தில்  வந்து விடுவேன்  என்றபடி சில  நிமிடங்களில்  கதவை  தட்டுகிறோம்.

மருமகன் விலத்தி என்னை  தெரியுமாப்போல் விட தம்பி என ஆசையாக  ஓடிவந்து முத்தம் தந்து  வரவேற்கிறார் அவர் எதிர்பார்க்கவே  இல்லை  அதிலும்  இன்றைய சூழ்நிலையில்  எப்படி  சாத்தியம் என ???

குளித்து சாப்பிட்டு முடிய மருமகன் கடை  திறக்க புறப்படுகிறார்.

நாங்கள்  பேசத்தொடங்குகுின்றோம்

ஏனப்பு இத்தனை சிரமத்திலும் வரணுமா?

ஆமாக்கா  இப்பத்தான் வரணும்

சாப்பிட என்ன வேணும் எங்க  எங்க  போகணும்?  இது  அக்கா

இன்றிலிருந்து  நீங்க சமைக்கவேண்டாம்

முடிந்தவரை வெளியில்  உணவகங்களில் சாப்பிடலாம்

மற்றும்படி உங்களுக்கு  எங்கெல்லாம்  போகணுமோ சொல்லுங்க  அங்கெல்லாம்  போகலாம்

எனக்கு எந்த உறவினர் வீட்டுக்கோ 

பார்க்கவேண்டிய இடமோ  என்று ஏதும் இல்லை  

என்னை  யாரும் பார்க்க  விரும்பினால் நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் அவர்கள் இங்கு வந்து  என்னை  சந்திக்கட்டும்.

அதன்படி காலையில்  எழும்பி தேனீர்  காலைச்சாப்பாடு  முடிய  கால்  போனபோக்கில் நடந்தோம்

மதியம் முடிந்தவரை வெளியில் சாப்பிட்டோம் (அக்கா கோயில் விரதம்  என்ற  படியால் அதிகம் வெளியில் சாப்பிட முடியவில்லை)

வேறு  எவரிடமும் கார் திறப்பு  கொடுக்காதவர்  நான் போனதிலிருந்து திரும்பும்வரை என்னிடமே காரை தந்தார்.  அவருக்கு போக விரும்பிய அவருக்கு  பிடித்தவர்கள்  வீடுகளுக்கெல்லாம் போனோம். தம்பி  வந்திருக்கிறார்  தம்பி வந்திருக்கிறார் என்று  அறிமுகப்படுத்தும் போதே என்  அக்காவின்  முகத்தில் பேரானந்தத்தை  கண்டேன்.  அவரது நண்பர்களும் இன்றைய நிலையிலும்  உங்களை  தேடி  வரும் தம்பி. அக்கா  தம்பி  பாசத்துக்கு  எடுத்துக்காட்டு என்று சந்தோசப்பட்டார்கள்.

பின்னேரம் என்றதும் நாலைந்து பந்துகளுடன் அக்கா  மைதானத்துக்கு வந்து விடுவார்

இருவரும் சேர்ந்து பந்தை காலால் அடித்து

மேலே போட்டு பிடித்து என 2 மணித்தியாலங்கள் விளையாடுவோம்

அப்பொழுதும் நான் களைப்பதை  பார்த்தே அவர் இன்றைக்கு  காணும் என  நிறுத்துவார்

இன்னொன்றையும் அடிக்கடி  சொல்வார்

தம்பி நீ சின்னனாக  இருக்கும்போது உன்னுடன் விளையாடி  இருக்கமாட்டன்

அது தான் காலம்  எம்மை  மீண்டும்  ஒன்றாக  விளையாட வைத்திருக்கு என்பார் (அவருக்கும் எனக்கும் 13 வயது வித்தியாசம்)

விளையாடி  முடிய யோகா செய்வார் ( அவர் யோகா ஆசிரியர்)

எனக்கும்  சில  பயிற்சிகள் சொல்லித்தருவார்.

பொழுது பட  வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு

இரவிரவாக  நித்திரை  கொள்ளும்வரை  அந்தக்கால  கதைகள்  உட்பட பேசிக்கொண்டே தூங்கிவிடுவோம்

தம்பி கதைத்துக்கொண்டிருக்கும்போதே நீ  தூங்கி விடுவாய் எனக்கு  அந்த  தூக்கம்  தானே பிரச்சினை  என்பார்

அது தான் எனது சொத்து அதில்  கொஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்பேன்

இப்படியே 10 நாட்கள் ஓடி விட்டன

புறப்படும் நாளும் வந்தது. புறப்படும் போது கட்டி  அணைத்து நன்றி தம்பி என்றார்

எதுக்கு தம்பிக்கு  நன்றி அக்கா  என்றேன்

இந்த 10 நாட்களும் என்னுள்  ஒரு அபாரபலம் இருந்ததை  உணர்ந்தேன் என்றார்

எனக்கும்  போக விருப்பமில்லை  அக்கா

எங்கள் பெற்றோர் இவ்வளவு  இடைவெளி  விடாது  எம்மை பெற்றிருந்தால் நானும்  பென்சனில் இன்னும் கொஞ்ச  நாள்  உங்களுடன் நின்றிருக்கலாம் வேலை அழைக்கிறது போய்த்தானே ஆகணும் என்றபடி  புறப்படத்தொடங்கினோம். அப்பொழுதும் மனம்  சொல்கிறது என்னை .இங்கே விமானம்  ஏற  விடக்கூடாது. ஒரு மாதம்  யாரும்  எங்கேயும் நகரமுடியாது  என்று என்னை  திருப்பி விடணும் மீண்டு.ம் வந்து  அக்காவுடன் நிற்கணும் என.

காரில்  போய்க்கொண்டிருக்கும்போது மருமகன்  கேட்கிறான்

இன்றைய சூழ்நிலையில் இங்க  வரப்போகும் முடிவு  பற்றி கனக்க யோசித்திருப்பீர்கள்

ஆனாலும் வந்திருக்கிறீர்கள்

இந்த  முடிவை  நீங்க  எடுப்பதற்கு ஏதோ  ஒரு  காரணம்  இருக்குமென்று  எனது  உள் மனசு  சொல்லுது மாமா

தெரிஞ்சு  கொள்ளலாமா  என்று  கேட்டான்

கோவிட் 19 தொடங்கி அது  மெல்ல  மெல்ல ஆட்களை தனிமைப்படுத்த தொடங்கிய போது

தனிமை அக்காவை  வாட்டி  இருக்கணும்

ஒரு  நாள் தொலைபேசியில் சொன்னார்

தம்பி இதென்ன  வாழ்க்கை  செத்திடலாம்  போலிருக்கடா  என்று.

அன்றைக்கு ரிக்கற்  போட்டேன் 

ஏனெனில்  செத்த பின்னர் வந்து ஓலமிடுவதில்  எனக்கு என்றுமே உடன்பாடில்லை.

அதற்காகத்தான் வந்தேன்  என்றேன்

அவனது கண்கள் கலங்கியிருந்தன.

விமான  நிலையத்தில்  எந்த பிரச்சினையுமில்லை.

பயணம் தொடர்கிறது....

  • Like 12
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாசப்பிணைப்போடு செல்கிறது பயணம். மேலும் தொடருங்கள். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நிலாமதி said:

பாசப்பிணைப்போடு செல்கிறது பயணம். மேலும் தொடருங்கள். 

நன்றி பாட்டி 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, விசுகு said:

மருமகன் விலத்தி என்னை  தெரியுமாப்போல் விட தம்பி என ஆசையாக  ஓடிவந்து முத்தம் தந்து  வரவேற்கிறார் அவர் எதிர்பார்க்கவே  இல்லை  அதிலும்  இன்றைய சூழ்நிலையில்  எப்படி  சாத்தியம் என ???

வயது போன நேரத்தில் சடுதியாக ஆச்சரியப்பட வைப்பது ஆபத்தாகவும் முடிந்துவிடும்.
தம்பி ஜாக்கிரதை.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விசுகு said:

செத்த பின்னர் வந்து ஓலமிடுவதில்  எனக்கு என்றுமே உடன்பாடில்லை.

எனக்கு என் அண்ணர் 80களில்  சொன்ன வசனம் இது. ஆனால் அதைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பது காலத்தின் கொடுமை.

பயணம் தொடரட்டும்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, விசுகு said:

வேறு  எவரிடமும் கார் திறப்பு  கொடுக்காதவர்  நான் போனதிலிருந்து திரும்பும்வரை என்னிடமே காரை தந்தார்.  அவருக்கு போக விரும்பிய அவருக்கு  பிடித்தவர்கள்  வீடுகளுக்கெல்லாம் போனோம். தம்பி  வந்திருக்கிறார்  தம்பி வந்திருக்கிறார் என்று  அறிமுகப்படுத்தும் போதே என்  அக்காவின்  முகத்தில் பேரானந்தத்தை  கண்டேன்.  அவரது நண்பர்களும் இன்றைய நிலையிலும்  உங்களை  தேடி  வரும் தம்பி. அக்கா  தம்பி  பாசத்துக்கு  எடுத்துக்காட்டு என்று சந்தோசப்பட்டார்கள்.

எமது தலைமுறையில்....நான் அறிந்த வரை....அன்புக்கும், அறிவுக்கும் நடக்கும் போட்டிகளில்....பெரும்பாலும் அன்பு தான் இறுதியில் வென்று விடுகின்றது...!

உங்கள் அனுபவக் கதை கூறுவதும்.....அதையே தான்..!

அடுத்த தலை முறைகளுக்குள்  இவ்வாறான நெருக்கம் இருக்குமென்பது....சந்தேகமே..!

தொடருங்கள்  விசுகர்...!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஈழப்பிரியன் said:

வயது போன நேரத்தில் சடுதியாக ஆச்சரியப்பட வைப்பது ஆபத்தாகவும் முடிந்துவிடும்.
தம்பி ஜாக்கிரதை.

உண்மை தான் அண்ணா.

நன்றி அண்ணா

12 hours ago, குமாரசாமி said:

எனக்கு என் அண்ணர் 80களில்  சொன்ன வசனம் இது. ஆனால் அதைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பது காலத்தின் கொடுமை.

பயணம் தொடரட்டும்.

சில விடயங்களில் நாம் எடுக்கும் காலம் தாழ்த்திய முடிவுகள் எம் ஆயுள் வரை தொடர்ந்து வந்து துன்புறுத்திக்கொண்டே இருக்கும். எனக்கும் சில அனுபவ பாடங்கள் தான் உந்து சக்தியாகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

உண்மை தான் அண்ணா.

நன்றி அண்ணா

சில விடயங்களில் நாம் எடுக்கும் காலம் தாழ்த்திய முடிவுகள் எம் ஆயுள் வரை தொடர்ந்து வந்து துன்புறுத்திக்கொண்டே இருக்கும். எனக்கும் சில அனுபவ பாடங்கள் தான் உந்து சக்தியாகின்றன.

உண்மை தான் விசுகு அண்ணா ,தொடருங்கள் உங்கள் பயணத்தை

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகர் Busy Man  ஆனாலும் இந்த கொரோனா காலத்தில  போய் சொந்தத்தை வளைர்த்து விட்டிருக்கார் மனுசன் வாழ்த்துக்கள் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விமான நிலையத்தில் எந்த பிரச்சினையும் இல்லாததால் பிள்ளைகளுடன் வீடியோ கோல் போட்டு காட்டி Duty Free shop இல் அவர்களுக்கு பிடித்த அங்கு பிரபலமான பொருட்களை வாங்கிக்கொண்டு விமானத்தினுள் நுழைந்து விமானம் பறக்கும் வரை அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு விமானம் பறக்கும் போது தொலைபேசியை செயலிழக்க செய்கிறேன். மீண்டும் தொலைபேசியை இயக்கும்போது வரப்போகும் செய்தி மீண்டும் இன்னொரு அக்கா வீட்டுக்கு அனுப்பப்போவதை அறியாமல்???

இந்த இடத்தில் நிச்சயமாக தொடரும் போடணும் இல்லையா??

(கோபப்பட வேண்டாம் உறவுகளே கைத்தொலைபேசியில் இதற்கு மேல் எழுத முடியவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே கண பேர் உறவுகள் உயிரோடு இருக்கும் போது கணக்கெடுப்பதில்லை ....இறந்த  பின் ஓலமிட்டு செத்த வீட்டை பெரிசாய் செய்வீனம் ...தொடருங்கள் விசுகு அண்ணா 
 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

(உண்மையில் நான்  எடுத்துக்கொண்ட  கருவின் கதை  முடிவடைந்து விட்டது

ஆனால் பயணம்  என்று  பெயர் வைத்ததால் அந்தப்பயணம் முடிவடையவில்லை

தொடர்கின்றேன்)

 

சார்ல் து கோல் விமான நிலையத்தை விமானம் வந்தடைந்துள்ளதாக  விமானி  அறிவிக்கவும்

எனது  தொலைபேசியை மீள இயக்குகின்றேன்

எனது பெரிய மகளிடமிருந்து குறும் செய்தி  ஒன்று  வந்திருக்கிறது

உடனடியாக தொடர்பு  கொள்ளுங்கள் என்று.

அவள் ஐந்து மாத  கர்ப்பிணி

அவசரமாக அவளை  தொலைபேசியில் அழைக்கின்றேன்

அப்பா  எனக்கு கொரோனா என  உறுதிப்படுத்திய வைத்திய அறிக்கை  தற்போது  தான் கிடைத்தது

நான்  உங்கள் வீட்டுக்கும் அடிக்கடி  வந்து போனதால் வீட்டில் எல்லோருக்கும் பரிசோதனை செய்யணும் தனிமைப்படுத்தணும் 

ஆனால் நீங்கள் 10 நாட்களாக  எம்முடன் இல்லாததால் உங்களுக்கு  தேவையில்லை

ஆனால் எங்களுக்கு  கொரோனா  வந்தாலும் பிரச்சினையில்லை உங்களுக்கு  வந்தால்தான் ஆபத்து

எனவே வீட்டுக்கு வரவேண்டாம் அப்பா மீண்டும் வேறு  எங்காவது  செல்லுங்கள் என்கிறாள்

அடிப்பாவி  ஒரு 2 மணித்தியாலத்துக்கு முன் தெரிந்திருந்தால் அக்காவுடனேயே நின்றிருப்பேனே என்றபடி சரி யேர்மனிக்கு ரிக்கற் பாருங்கள்.  அந்தக்காவும்  அத்தாரும்  லீவில் வீட்டில  தான் நிற்கிறார்களாம்.

கடுகதி ரயில் ரிக்கற்  எடுத்தபடி அடுத்த பயணம் புறப்படுகின்றேன்.

அங்கும் எங்கும் செல்லமுடியாத  நிலை.

வீட்டில் இருந்தபடியே ஒரே சமையலும்  சாப்பாடும் பல  நாட்கள்  கதைக்க  கிடைக்காத விடயங்களை  பேசியபடியும்  நாட்கள்  போகின்றன.  அத்தாருடன் இயக்கம் சம்பந்தமான பெரும் தகவல்களையும் வரலாறுகளையும் அவரது  அனுபவங்களினூடாக கேட்க கிடைத்தது. (அவர் செல்லக்கிளி பொட்டம்மான் கிட்டண்ணா ....... என்று பெரும் தளபதிகளுடன் ஒன்றாக இருந்தவர்)

அங்கு  நின்றபோது வீட்டில் இருந்த  எவருக்கும் கொரோனா  தொற்று  உறுதிப்படுத்தப்படவில்லை

மகளுக்கும் 3 அல்லது  4 நாட்கள் உடல் நோ மற்றும் சிறு உபாதைகளுடன் கொரோனா முடிவுக்கு  வந்தாலும் தனிமைப்படுத்தல் தொடர்ந்தது

ஏழாவது நாள் எனது  மச்சாள் ஒருவர் (அப்பாவின்  மூத்த தமைக்கையின் மகள்)  பிரான்சில் இறந்து விட்டார்  என்ற  செய்தி கேட்டதும் அனைவரது வேண்டுகோளையும் புறந்தள்ளி பிரான்சுக்கு  வரவேண்டியதாயிற்று.

5எனக்கு இதுவரை  கொரோனா தொற்று  இல்லை)

 

முற்றும்

 

 

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

அத்தாருடன் இயக்கம் சம்பந்தமான பெரும் தகவல்களையும் வரலாறுகளையும் அவரது  அனுபவங்களினூடாக கேட்க கிடைத்தது. (அவர் செல்லக்கிளி பொட்டம்மான் கிட்டண்ணா ....... என்று பெரும் தளபதிகளுடன் ஒன்றாக இருந்தவர்)

விசுகு எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 27/2/2021 at 16:07, ஈழப்பிரியன் said:

விசுகு எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே.

அவர் வேறு ஒரு பெயரில் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்  அண்ணா

அதை அவர் பாதையிலேயே விட்டு  விடுவோம்

சிலரது  கட்டுக்கதைகளுக்கு இவர் கேள்விகளை  வைப்பதுண்டு

ஐயர் கூட இவரது நண்பர் தான்

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கொரோனா தொற்று காலத்தில் பயணங்களைத் தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக இருப்பதுதான் நல்லது. அவசர தேவைக்கு மட்டும் பயணம் செய்யுங்கள். உங்கள் பயண அனுபவம் உறவுகளின் சங்கமத்துடன் நன்றாக இருந்தது



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.