Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது..

செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது.

செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். 

குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். 

குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்)

நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்..

நாட்பட்ட நோய் கண்டவர்கள்..

தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்..

நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்..

நீரிழிவு நோய் கண்டவர்கள்..

தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்..

உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்..

விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்..

போதிய உணவின்மை..

போதிய ஊட்டச்சத்தின்மை..

வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை..

போதிய சுகாதார வசதிகள் இன்மை..

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்..

போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை..

இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. 

 

செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன..

1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும்

2. உடற்சோர்வு

3.சிறுநீர் உற்பத்தி குறைவு

4.மயக்க நிலை

5. அதிகரித்த இதயத்துடிப்பு

6. வாந்தி மற்றும் பேதி

7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல்

8. குறை குருதி அழுத்தம்

சுவாசத்தொற்று எனில்

சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்..

Sepsis | El Camino Health

 

அம்மாவின் விடயத்தில்..  அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன.

அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??!

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை.

சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை.

செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock)  என்பது..

குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன.

குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது.

அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம்.

ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும்  Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை.

அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும்  Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும்.

அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை.

உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்..  இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம்.

தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். 

உசாத்துணை:

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/

(யாழிற்கான சுய ஆக்கம்)

Edited by nedukkalapoovan
மேலதிக விடயங்கள் சேர்க்கப்பட்டும்.. தட்டெழுத்துப்பிழை திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.
  • Like 12
  • Thanks 6
  • Sad 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி பதிவுக்கு தம்பி.

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • nedukkalapoovan changed the title to செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
Posted

பதிவிற்கு நன்றி. இப்பதிவின் மூலம் நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது.

அம்மாவின் இழப்பை எதைக்கொண்டும் ஈடுசெய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்ஸ் முதலில் அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அம்மா யாழ்இல் தான் இருந்தாவா?
வீட்டில் இருந்த அம்மாவுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது?

உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
42 minutes ago, ஈழப்பிரியன் said:

நெடுக்ஸ் முதலில் அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அம்மா யாழ்இல் தான் இருந்தாவா?
வீட்டில் இருந்த அம்மாவுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது?

உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி.

ஆம்.. அம்மாவும் அப்பாவும் கொழும்பில் வாழ்ந்து பின் யுத்தம் முடித்த பின் ஊருக்கு போக விரும்பி போய் தங்கள் பரம்பரை இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். அது அவர்களின் சுய விருப்பமும் கூட. பிள்ளைகள் நாம் அதில் தலையீடு செய்யவில்லை. மாறாக அவர்களின் விருப்பத்திற்கு எம்மாலான ஒத்தாசை செய்தோம். 

அம்மாவுக்கு யாழில் நிலவிய கடும் மழை காலத்தின் பின் skin rash வந்தது. அதற்கு antibiotic cream பாவித்தே இருந்தார்கள். ஆனாலும்.. தன்னை அறியாமலே கையால் சொறிந்திருக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் பக்ரீரியா தொற்றுக்கு வாய்ப்புண்டு. சிறிய காயம் ஒன்றே போதும்... sepsis வருவதற்கு. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயோதிப வயதினரில்... இது ஒரு பெரும் பிரச்சனை. என்ன தான் கவனமாக இருந்தாலும்.

இதில் அம்மா தனக்கான நோய் அறிகுறி தென்பட்டதும்.. அப்பா குடும்ப வைத்தியரை அழைத்து சிகிச்சை வழங்கித்தான் இருந்தார். ஆனால்.. குடும்ப வைத்தியர் ஏதோ காரணத்தால்.. செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்யாமல் சாதாரண காய்ச்சல் போல் நிலைமையை கையாண்டது தான்.. பிரச்சனைக்கான தோற்றுவாய்.

இறுதியில் அம்மாவின் கடைசி 48 மணி நேரம்.. மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. குருதி அழுத்தம் குறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் குடும்ப வைத்தியர் வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில் அம்மா கன நாள் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்னது தான் மிகவும்.. கோபத்தை தூண்டியது.

ஆனாலும்.. நாங்கள் சோரவில்லை. உடனடியாக குடும்ப நண்பராக உள்ள வைத்தியரின் உதவியோடு.. உடனடியாக.. தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு  சென்று தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு.. தேறிவிடுவார் என்று நம்பிக்கை வளர்ந்திருந்த நிலையில்.. மிதமான இதயத் தாக்குக்கு ( Minor heart attack) உட்பட்டார். இருந்தாலும்.. மீண்டும் வைத்தியர்கள் விடா முயற்சி செய்தார்கள். சுமார் 12 மணி நேரத்துக்குள் இரண்டு இதயத்தாக்கு ஏற்பட்டு.. ஒக்சிசன் அளவு குருதியில் ஆபத்தான அளவுக்கு குறைந்த நிலையில்.. மரணம் சம்பவித்துவிட்டது.

அப்போதும் வைத்தியர்கள் கூடவே இருந்துள்ளார்கள்.

இதில்.. குடும்ப வைத்தியராக இருந்து அம்மாவை பாதுகாத்து வந்தவர்.. இறுதி நேரத்தில் நாட்டில்.. கொரோனா அதுஇதென்று சாட்டுச் சொல்லி.. அம்மாவை சரிவர கவனிக்காமல் விட்டதும்.. காய்ச்சல் வந்தும்.. அவருக்கு உரிய பரிசோதனைகளை செய்யாமல் விட்டதும்..தான்... அம்மாவின் இந்த திடீர் இழப்புக்கு முக்கிய காரணம் எனலாம். இது வழமையாக சோதனையில் பெயில் விட்டால் ஆசிரியர் மேல் பழிபோடுவது போன்ற நிலை அல்ல. ஏனெனில் அம்மா ஒரு high risk patient என்பதை அந்த வைத்தியர் நன்கு அறிந்திருந்தும்.. அவருடைய அலட்சியத்தன்மை ( negligence ) தான் அம்மாவுக்கு ஆபத்தும் ஆகிவிட்டது.  அம்மாவின் போதாத காலமும் கூடச் சேர்ந்துவிட்டதோ என்னவோ. 

ஆனால்.. நிச்சயமாக.. அம்மா மனதளவில்.. இந்தப் பூமியில் இருந்து விடைபெற தயார் இல்லாத நிலையில்... தான் அவர் விடைபெற்றிருக்கிறார். அதுதான் மிகக் கவலையாக அமைந்துவிட்டது. அதனை நினைக்கும் போது வலிதான் அதிகமாகிறது.

Edited by nedukkalapoovan
  • Like 1
  • Thanks 1
  • Sad 3
Posted

விரிவான விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்ஷ்.

என் அம்மா கொழும்பில் தனியாகவே இருக்கின்றார். கனடா தனக்கு சரிவரவில்லை என்று இங்கிருந்து போன பின் அங்குதான் தனியாக இருக்கின்றார். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக குறைக்கும் Acute lymphocytic leukemia வகையான புற்றுநோயும் கடந்த 5 வருடங்களாக - எந்தவிதமான பிரச்சனையும் கொடுக்காமல் - உள்ளது. இயல்பிலேயே உறுதியான ஓர்மம் கொண்டவர் என்பதால் 75 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவே உள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் வட்டத்தில் மட்டும் 7 பேரின் அம்மாக்காள் இறந்து விட்டனர். ஒவ்வொருவரினது அம்மாக்களின் இறப்பு செய்தி வரும் போது, நெஞ்சு பதறுகின்றது. கொரனா காலத்தில் ஏதும் நிகழ்ந்து விட்டால், போய் பார்க்க கூட முடியாமல் போய் விடுமோ என்று பயமாக உள்ளது.

ஒரு 40 வயதுக்கு மேற்பட்ட மகனுக்கோ, மகளுக்கோ அம்மா தான் நெஞ்சுடன் அணைத்து ஆறுதல் கொடுக்கும் நீண்ட கால நெருங்கிய உறவு.  மனைவியோ மகனோ மகளோ கணவனோ அத்தனை ஆண்டு காலம் உறவு கொண்டாடும் அளவுக்கு எம் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுள்காலத்தின் நாட்கள் விடுவதில்லை. அப்படியான ஒரு நிலைத்த நீண்ட உறவை சடுதியாக இழப்பது என்பது கடும் துயரம் தரும் விடயம்.

நெடுக்ஸ், உங்கள் துயரையும் இழப்பையும் காலம் ஆற்றுப்படுத்தட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

விரிவான விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்ஷ்.

என் அம்மா கொழும்பில் தனியாகவே இருக்கின்றார். கனடா தனக்கு சரிவரவில்லை என்று இங்கிருந்து போன பின் அங்குதான் தனியாக இருக்கின்றார். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக குறைக்கும் Acute lymphocytic leukemia வகையான புற்றுநோயும் கடந்த 5 வருடங்களாக - எந்தவிதமான பிரச்சனையும் கொடுக்காமல் - உள்ளது. இயல்பிலேயே உறுதியான ஓர்மம் கொண்டவர் என்பதால் 75 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவே உள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் வட்டத்தில் மட்டும் 7 பேரின் அம்மாக்காள் இறந்து விட்டனர். ஒவ்வொருவரினது அம்மாக்களின் இறப்பு செய்தி வரும் போது, நெஞ்சு பதறுகின்றது. கொரனா காலத்தில் ஏதும் நிகழ்ந்து விட்டால், போய் பார்க்க கூட முடியாமல் போய் விடுமோ என்று பயமாக உள்ளது.

ஒரு 40 வயதுக்கு மேற்பட்ட மகனுக்கோ, மகளுக்கோ அம்மா தான் நெஞ்சுடன் அணைத்து ஆறுதல் கொடுக்கும் நீண்ட கால நெருங்கிய உறவு.  மனைவியோ மகனோ மகளோ கணவனோ அத்தனை ஆண்டு காலம் உறவு கொண்டாடும் அளவுக்கு எம் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுள்காலத்தின் நாட்கள் விடுவதில்லை. அப்படியான ஒரு நிலைத்த நீண்ட உறவை சடுதியாக இழப்பது என்பது கடும் துயரம் தரும் விடயம்.

நெடுக்ஸ், உங்கள் துயரையும் இழப்பையும் காலம் ஆற்றுப்படுத்தட்டும். 

நன்றி நிழலி. உங்கள் அம்மாவை இயன்றவரை பத்திரமாகக் கவனித்துக் கொள்ளுங்கள். 

5 hours ago, விசுகு said:

நன்றி பதிவுக்கு தம்பி.

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

3 hours ago, ஜெகதா துரை said:

பதிவிற்கு நன்றி. இப்பதிவின் மூலம் நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது.

அம்மாவின் இழப்பை எதைக்கொண்டும் ஈடுசெய்ய முடியாது.

உங்கள் அனைவரினதும் அக்கறைக்கும் ஆறுதலுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள்நெடுக்கண்ணா. வயதானவர்கள் என்பதால் இலங்கையில் சில வைத்தியர்கள் அவசியமான பரிசோதனைகளைக்கூட புறக்கணிப்பதுண்டு. என்னுடைய அப்பாவிற்கும் இப்படிநடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விரிவான விளக்கத்திற்கு நன்றிகள் . இங்கும் கொரோனா காலமென்றபடியால் வைத்தியரிடம் செல்ல முடியாத நிலையில்தான் உள்ளோம். ஏதாவது பிரச்சினை என்றால் போனில்தான் கதைக்கிறார்கள். பாவிக்கும் மருந்துகளையும் பாமசியில் போய் எடுக்கும்படி போனில் அழைத்து சொல்கிறார்கள். நாம் இந்த நேரத்தில் எமது உணவுகளின் மூலம்தான் எமது நோய் எதிர்ப்புசக்தியை கூட்ட வேண்டி உள்ளது. முருங்கை இலை விற்றமின் டீ   காய்கறிகள் நட்ஸ் உடல்பயிற்சி முதலியன எம் உடலுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன். 
இது தவிர எமது குடும்ப வரலாறுகளும் எமது உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக இரத்த அழுத்தம் மாரடைப்பு புற்றுநோய் முதலியவை சிலருக்கு பரம்பரையாக வர வாய்ப்பு உள்ளதாக அறிகிறோம்.
உங்கள் பகிர்வுக்கு நன்றிகள். அம்மா இறையடியில் அமைதியில் இளைப்பாறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விரிவான விளக்கத்துக்கு நன்றி . அம்மாவின் இழப்பு எந்த வயதிலும் தாங்க முடியாது . பிறப்பவர் எல்லோரும் ஒரு நாள் இறப்பார் நோய் துன்பத்தில் கஷ்டப்படாமல்   சென்று விடடார்  என தேற்றிக் கொள்ளுங்கள். 

Posted

நோய் பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி நெடுக்கஸ். உங்கள் அம்மாவின் இழப்பின் துயரம் மிக வலி மிகுந்தது.  உங்களின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் மருத்துவ வசதிகள் நாம் நினைக்கும் வகையில் மட்டமாக இல்லாமல் திருப்திப்படும் அளவில் உள்ளதாக அறிந்தேன். அரசாங்க வைத்தியசாலைகளில் தனியார் வைத்தியசாலைகளுக்கு நிகராக நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றனவாம்.

முதியவர்கள் விடயத்தில் நாம் எவரையும் நம்ப முடியாது. பிள்ளைகள் சிரத்தை எடுப்பதுபோல் நிச்சயம் வெளியார் கவனம் எடுக்கமாட்டார்கள். குருதி, சிறுநீர் மாதிரிகளை ஆய்வுசாலைக்கு அக்கறையாக எடுத்து அனுப்புவது தொடக்கம் தவணை முறையில் தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துவது, கவனமாக வெளியில் அழைத்து சென்று கவனமாக வீட்டுக்கு கூட்டிவருவது வரை பிள்ளைகளின் அல்லது கரிசனை உள்ள நெருங்கிய உறவுகளின் உதவி பெரியோருக்கு தேவை. யாரையும் நம்பினால் ஒன்றுக்கும் உத்தரவாதம் இல்லை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று ...நீண்ட மருத்துவ விளக்கத்திற்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் கவலையாக இருக்கின்றது நெடுக்ஸ் ......உங்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்......இந்த வருத்தத்தின் விரிவான விளக்கத்துக்கு நன்றி.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி உறவுகளுக்கு இரங்கலுடன் அன்புடன் கூடிய உங்கள் பின்னூட்டங்களுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈடு செய்ய முடியாத ஓர்  இழப்பு ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் நெடுக்ஸ்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆமாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இங்கு இப்போதெல்லாம்  பெரிதாகக் கவனம் எடுப்பதில்லை வயதுபோனவர்களுக்கு மட்டுமல்ல. வெளிநாட்டினருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செப்சிஸும் பற்றி முன்னர் அறிந்திருக்கவில்லை.  உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
அங்கு வைத்தியர்களின் அல்டசியத்தன்மை மிகவும் மலிந்து போயுள்ளது.  நாங்களும் அதை அனுபவ ரீதியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தித்தோம். :(

உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் :(

  • 2 weeks later...
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள் நெடுக்ஸ்.

உங்களது தகவல்கள் பயனுள்ளவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மாவின் இழப்பின் துயரம்  வலி மிகுந்தது.  உங்களின் துயரில் நாங்களும்  பங்கு கொள்கின்றோம்.
விபரமான விளக்கத்திற்கும் நன்றிகள்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
    • அடுத்த வாரமே தன்னைப்  பிரபாகரனின் பேரன் என்பார்.  இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு  அடிக்கிற (B)பிராண்டை  பொறுத்து மாறுபடலாம். 😂
    • அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.  
    • 12 DEC, 2024 | 03:42 PM ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.  https://www.virakesari.lk/article/201089
    • ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.