Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடான்ஸ் சாமியார் அருளுரைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூரி

உங்களுக்கு தெரியுமா?

பூரி எங்கட யாழ்பாணத்து பாரம்பரிய உணவு.

நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள்.

“பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது.

பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது.

ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார்.

அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என்றாகியது.

இதனால்தான் 87 இல் பேச்சுவார்த்தைக்கு கூட யாழ்பாணத்தில் இருந்து உடான்ஸ் சிங் அழைத்துப்போன சுத்த தமிழர் வம்சாவழியான பூரி என்ற அதிகாரியை இந்தியா அனுப்பியது.

ஆனால் இப்போது வட இந்தியர்கள் பூரியை தமது உணவு என உரிமை கொண்டாடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது.

இது. தமிழ்சிரியண்ணையின்  சொந்த இடம். அவரைப்பிடித்து  சோதித்து பார்த்தலதான் உண்மை.  பொய்  தெரியும்  😜😜..அது  சரி  இப்பவும் உந்த விழா  நடைபெறுகிறதா?😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இது. தமிழ்சிரியண்ணையின்  சொந்த இடம். அவரைப்பிடித்து  சோதித்து பார்த்தலதான் உண்மை.  பொய்  தெரியும்  😜😜..அது  சரி  இப்பவும் உந்த விழா  நடைபெறுகிறதா?😂😂

தமிழ் சிறி அண்ண கந்தரோடையே? இல்லை புங்குடுதீவு எண்டு நினைக்கிறன்.

இந்த சடங்கு யாழில் ஒவ்வொரு இடங்களில் கொஞ்சம் மாறுபடும் என அறிகிறேன்.

உதாரணத்துக்கு வலிகாமம், தென்மராட்சி, தீவு பகுதிகளில் பூரிக்கட்டையை பாவிப்பது போல வடமராட்சியில் உலக்கையை பயன்படுத்துவார்களாம்🤣.

இந்த விழா இப்போதும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

எனது வீட்டுக்காரம்மா கொஞ்சம் பாரம்பரிய பிடிப்பு மிக்கவர் - அதனால் வருடாந்தம் என்றல்லாமல் வாரமொருமுறை வெகு விமரிசையாக கொண்டாடுவோம்😂.  

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

பூரி

உங்களுக்கு தெரியுமா?

பூரி எங்கட

எங்களது பாரம்பரிய உணவான பூரியை... 
எமது அம்மா, ஆச்சிமார் தினமும் செய்யாமல்,

இத்தாலிய உணவான இடியப்பத்தை.... பிழிந்து தந்து, 
எமக்கு தவறான முன் உதாரணமாகி விட்டார்கள்.  

பூரி செய்யும் முறையை பற்றி,
சென்ற கிழமைதான், நிகே.. ஒரு பதிவு போட்டிருந்தார்.

நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள்.

“பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது.

பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது.

ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார்.

அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என்றாகியது.

இதனால்தான் 87 இல் பேச்சுவார்த்தைக்கு கூட யாழ்பாணத்தில் இருந்து உடான்ஸ் சிங் அழைத்துப்போன சுத்த தமிழர் வம்சாவழியான பூரி என்ற அதிகாரியை இந்தியா அனுப்பியது.

ஆனால் இப்போது வட இந்தியர்கள் பூரியை தமது உணவு என உரிமை கொண்டாடுகிறார்கள். 

Home Cooked Idiyappam | PM Idiyappam Suppliers, Medavakkam, Chennai

எங்களது பாரம்பரிய உணவான பூரியை... 
எமது அம்மா, ஆச்சிமார் தினமும் செய்யாமல், 😂

இத்தாலிய உணவான இடியப்பத்தை.... பிழிந்து தந்து, 
எமக்கு தவறான, முன் உதாரணமாகி விட்டார்கள்.  🤣

பூரி செய்யும் முறையை பற்றி,
சென்ற கிழமைதான், நிகே.. ஒரு பதிவு போட்டிருந்தார்.:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

Home Cooked Idiyappam | PM Idiyappam Suppliers, Medavakkam, Chennai

எங்களது பாரம்பரிய உணவான பூரியை... 
எமது அம்மா, ஆச்சிமார் தினமும் செய்யாமல், 😂

இத்தாலிய உணவான இடியப்பத்தை.... பிழிந்து தந்து, 
எமக்கு தவறான, முன் உதாரணமாகி விட்டார்கள்.  🤣

பூரி செய்யும் முறையை பற்றி,
சென்ற கிழமைதான், நிகே.. ஒரு பதிவு போட்டிருந்தார்.:)

அண்ணை இதபற்றி அடுத்த அருளுரையை தயார்படுத்த யுடியூப் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறன் - நீங்கள் இப்படி பதில் போடுறியள். 

விரைவில் எதிர்பாருங்கள் இத்தாலி போன தமிழ் தாலி🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2. நூடுல்ஸ்

உங்களுக்கு தெரியுமா?

நூடுல்ஸ் என்பது எங்கட யாழ்பாணத்து உணவு என்பது. 

மார்கோ போலோ தனது பயணக்குறிப்பில், பின்வருமாறு கூறுகின்றார்.

நான் மொங்கோலிய பேரரசன் குப்பிளேகான் அரண்மனையில் வசித்த போது நூடுல்ஸ் எனும் உணவை உண்டேன். இதன் வரலாறு அலாதியானது.

உண்மையில் குப்பிளேகான் ஒரு மொங்கோலியன் அல்ல. அவர் மொங்கோலியரை விட காலத்தால் முந்திய, கல் மண் தோன்றமுதல் தோன்றிய யாழ் தமிழர் மரபில் வந்தவர். 

அவரது குடும்ப பெயர் பிள்ளை என்பதாகும். அவரது மூதாதை ஒருவருக்கு முதுகு கோணலாக ஒரு பிள்ளை பிறந்ததால். கூன்-பிள்ளை-காரன் என அழைக்கப்பட்டு ஈற்றில் மொங்கோலிய உதடுகளில் அது குப்பிளேகான் என ஆகி விட்டது.

அவர்கள் யாழ்பாணத்தில் இருந்து கொண்டு வந்த அரிசி உணவே நூல்-உள். தமிழ் மொழியில் நூல் என்பது பட்டு வார்களை குறிக்கும். அரிசியில் வார் வாராக செய்யப்படுவதால் நூல்-உள். 

இதையே தட்டையா செய்து அதை இடியப்பம் என்றும் அழைப்பார்களாம்.

இந்த நூல்-உள் சீன/மொங்கோலிய உச்சரிப்பில் நூடுல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

பார்தீர்களா எங்கட யாழ்பாண உணவு நூடில்ஸ். இதை தான் 4000 வருசமா சாப்பிடுறாதா கதை விடுறான் சப்பயன். நாம் 400000 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்பதை அறியாமல்.

நாங்களும் அவங்கட ரெஸ்டூரண்ட் போய் சாப்பிடுறம். காலகொடுமை🤦‍♂️.

அனைவருக்கும் இதை வாட்சப், யுடியூப் போன்ற அதி நம்பகமான ஆராய்சி அமைப்புகள் மூலம் பரப்புங்கள்.

அப்படி செய்தால் 3 நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்.

அஜாக்கிரதையாக செய்தியை பகிராமல் விட்ட ஒருவருக்கு அவர் நூடுல்சில் இருந்த கறுப்பு பூஞ்சை வயிற்று போக்கை கொடுத்து உயிரை பறித்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

தல 
நீங்கள் பாரிசாலன், தமிழ் பொக்கிஷம் விக்கி, ஹீலர் பாஸ்கர்  ஆகியோருக்கு சமாந்திரமாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, அவர்களை விட அதிக வாசகர்களையும், அதிக வருவாயையும் பெறலாம். அவ்வளவு திறமை உங்களிடம் உள்ளது. 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, zuma said:

தல 
நீங்கள் பாரிசாலன், தமிழ் பொக்கிஷம் விக்கி, ஹீலர் பாஸ்கர்  ஆகியோருக்கு சமாந்திரமாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, அவர்களை விட அதிக வாசகர்களையும், அதிக வருவாயையும் பெறலாம். அவ்வளவு திறமை உங்களிடம் உள்ளது. 😜

எமது மக்களும் வாட்சப்பும் யுடியூப்பும் இருக்கும் வரை - குறைவில்லா லைக்சும் வருமானமும் வரும் எண்டுறியள்?🤣.

என்னுடை மானசீக குரு எங்கள் சிவப்பு தொப்பி அப்துல் மஜீத் மெளவிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

தமிழ் சிறி அண்ண கந்தரோடையே? இல்லை புங்குடுதீவு எண்டு நினைக்கிறன்.

😂.  

கந்தர்மடம் என்பதை கந்தரோடையாக மாற்றிய goshan_che அவர்களை தமிழ் சிறி நீங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும் 🤭😂

19 hours ago, தமிழ் சிறி said:

Home Cooked Idiyappam | PM Idiyappam Suppliers, Medavakkam, Chennai

எங்களது பாரம்பரிய உணவான பூரியை... 
எமது அம்மா, ஆச்சிமார் தினமும் செய்யாமல், 😂

இத்தாலிய உணவான இடியப்பத்தை.... பிழிந்து தந்து, 
எமக்கு தவறான, முன் உதாரணமாகி விட்டார்கள்.  🤣.

இடியப்பம் இத்தாலி உணவா? உதெப்பத்தைய கண்டு பிடிப்பு🤣

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, shanthy said:

கந்தர்மடம் என்பதை கந்தரோடையாக மாற்றிய goshan_che அவர்களை தமிழ் சிறி நீங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும் 🤭😂

தவறான புரிதல் அக்கா.

கந்தரோடையில் இருக்கும் ஈமத்தாளிகளில்தான் மண்டை ஓட்டில் பூரி தளும்புகள் அவதானிக்க பட்டுள்ளன.

நீங்கள் சொல்லும் கந்தர்மட ஈமத்தாளிகளில் பெரும்பாலனவற்றில் மண்டையோடு இல்லை 🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, shanthy said:

இடியப்பம் இத்தாலி உணவா? உதெப்பத்தைய கண்டு பிடிப்பு🤣

இது தமிழ் சிறி அண்ணாவின் தவறான புரிதல்.

3. இத்தாலி போன தமிழ் தாலி

நான் மேலே சொன்ன வரலாற்றின் பிரகாரம் - கூன் பிள்ளை காரனின் அரண்மனையை விட்டு நீங்கிய மார்கோபோலோ பலவருட பயணத்தின் பின் கொன்ஸ்டாண்டி நோபிள் வழியாக தனது சொந்த ஊரான இத்தாலியின் வெனிசை அடைகிறார்.

அங்கே அவர் இத்தாலியர்களுக்கு நூல்-உள் ஐயும் இடியப்பத்தையும் அறிமுகம் செய்கிறார்.

அந்த காலத்தில் வெனிசில் ஒரு பிராந்திய வழக்கு இத்தாலிய மொழியே பேசப்பட்டது.

அந்த மொழியில் இ உச்சரிப்பும், டி உச்சரிப்பும் இல்லை. இந்த உச்சரிப்புக்கு பதிலாக பி உச்சரிப்பை மாற்றீடு செய்தனர்.

ஆகவே அவர்கள் இடியப்பத்தை பிசியப்பம் என்று அழைத்தனர்.

தவிரவும் வெனிசில் பனை மட்டை தட்டுபாடு நிலவியதால் அவர்களால் எம்மை போல் இடியப்பத்தை நீராவியில் பூப்போல அவிக்க முடியவில்லை.

ஆகவே அதை இன்னும் தட்டையாக வெதுப்பியில் அவிக்க தொடங்கினார்கள். கூடவே கோதுமையையும் சேர்த்து அவித்தார்கள் (இப்போ நான் அவிப்பதை போல).

காலப்போகில் பிசியப்பம் மருவி பிசப்பம் ஆகி பின் இத்தாலிய மொழி சீர்திருத்தத்தின் போது பீசா என மாற்றப்பட்டது. 

பின்னர் இந்த பீசா என்கிற பிசியப்பம் இத்தாலிய குடியேறிகளுடன் அமெரிக்கா போய் - இப்போ நாங்கள் இதை ஏதோ அந்நிய உணவு போல் பெரும் பணம் கொடுத்து பீட்சா ஹட்டில் போய் உண்கிறோம்.

உண்மையில் பீசா என்பது எங்கட சுத்த யாழ்பாணத்து உணவு.

நீங்கள் வந்தேறி ஜீன் துளியும் கலக்காத ஒரிஜினல் தமிழர் என்றால் உதை உடனே பகிருங்கள்.

இல்லை எண்டால் கரும்பூஞ்சை….தெரியும்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஊத்தப்பம் சொன்ன என்ன வா..?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தவறான புரிதல் அக்கா.

கந்தரோடையில் இருக்கும் ஈமத்தாளிகளில்தான் மண்டை ஓட்டில் பூரி தளும்புகள் அவதானிக்க பட்டுள்ளன.

நீங்கள் சொல்லும் கந்தர்மட ஈமத்தாளிகளில் பெரும்பாலனவற்றில் மண்டையோடு இல்லை 🤣.

கந்தரோடையே  ஈமத்தாளிகள் சரி. தமிழ் சிறி கந்தரோடை இல்லை. கந்தர்மடத்து தமிழ்க்குடி மகன் அதைத்தான் சொன்னேன் goshan_che 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

கந்தரோடையே  ஈமத்தாளிகள் சரி. தமிழ் சிறி கந்தரோடை இல்லை. கந்தர்மடத்து தமிழ்க்குடி மகன் அதைத்தான் சொன்னேன் goshan_che 🤣

இதை நானும் கவனித்தேன். பஞ்சியில் விட்டுவிட்னே.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை நானும் கவனித்தேன். பஞ்சியில் விட்டுவிட்னே.

பாத்தியளோ ஒரு வரலாற்று நாயகன் ஊரை சொல்ல பஞ்சிப்பட்டிட்டியள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, சுவைப்பிரியன் said:
1 hour ago, shanthy said:

கந்தரோடையே  ஈமத்தாளிகள் சரி. தமிழ் சிறி கந்தரோடை இல்லை. கந்தர்மடத்து தமிழ்க்குடி மகன் அதைத்தான் சொன்னேன் goshan_che 🤣

இதை நானும் கவனித்தேன். பஞ்சியில் விட்டுவிட்னே

நானும் தான்.(நேரமும் குறைவு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

அப்ப ஊத்தப்பம் சொன்ன என்ன வா..?

அதை ஊத்தப்பம் என அழைப்பது தெலுங்கு வந்தேறிகளின் திராவிட ஷதி.

அதன் உண்மையான பெயர் ஊர் அப்பம். 

இப்போதான் யூடியூப் என்று ஒரு ஆராய்சி தளத்தில் இதை பற்றி பி எச் டி ரேஞ்சில் படிக்கிறேன். 

விரைவில் எதிர்பாருங்கள் ஊர் அப்பம். பறிக்கப் பட்ட தமிழனின் அப்பம்.

33 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை நானும் கவனித்தேன். பஞ்சியில் விட்டுவிட்னே.

8 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் தான்.(நேரமும் குறைவு)

23 minutes ago, shanthy said:

பாத்தியளோ ஒரு வரலாற்று நாயகன் ஊரை சொல்ல பஞ்சிப்பட்டிட்டியள். 🤣

நான் வேற நேற்று அண்ணை புங்குடுதீவு எண்டு ஒரு பெரிய உருட்டை போட்டுட்டன். 

கந்தமடத்து இளவரசன்  வந்து பதில் சொல்லட்டும்😀.

வணக்கம் கோஷான்,

மீள் வருகைக்கு நன்றி.

நீங்கள் இந்த திரியை நகைச்சுவைப் பகுதியில் இணைத்து இருப்பினும், இது வெறுமனே நகைச்சுவைக்காக மட்டுமே திறக்கப்பட்ட திரியாக தெரியவில்லை. கள உறவு ஒருவரை அவரது கருத்துகளை நையாண்டி பண்ணுவதற்காக திறக்கப்பட்ட திரியோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

ஊர் பெயரை / நபர்களின் பெயரை / உணவின் பெயரை ஒரு ஆவணமாக கருதி அதனூடாக தகுந்த ஆதாரங்கள் ஆய்வுகள் எதுவும் இன்றி வரலாற்றை எழுத / அறிய முற்படும் தவறான போக்கை நீங்கள் நையாண்டி செய்ய முனைந்தாலும் இன்னொரு வளத்தில் அது தனிப்பட ஒருவரை தாக்குவது போன்றும் தோன்றுகின்றது. இத் திரி அவ்வாறுதான் எனில் ஆரோக்கியமான கருத்தாடல்களை இது உருவாக்காமல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் ஆபத்தும் சந்தர்ப்பங்களும் உள்ளன. 

புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்களின் பின்னர் நிர்வாகத்தினருக்கு புரிந்துள்ளது.🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

வணக்கம் கோஷான்,

மீள் வருகைக்கு நன்றி.

நீங்கள் இந்த திரியை நகைச்சுவைப் பகுதியில் இணைத்து இருப்பினும், இது வெறுமனே நகைச்சுவைக்காக மட்டுமே திறக்கப்பட்ட திரியாக தெரியவில்லை. கள உறவு ஒருவரை அவரது கருத்துகளை நையாண்டி பண்ணுவதற்காக திறக்கப்பட்ட திரியோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

ஊர் பெயரை / நபர்களின் பெயரை / உணவின் பெயரை ஒரு ஆவணமாக கருதி அதனூடாக தகுந்த ஆதாரங்கள் ஆய்வுகள் எதுவும் இன்றி வரலாற்றை எழுத / அறிய முற்படும் தவறான போக்கை நீங்கள் நையாண்டி செய்ய முனைந்தாலும் இன்னொரு வளத்தில் அது தனிப்பட ஒருவரை தாக்குவது போன்றும் தோன்றுகின்றது. இத் திரி அவ்வாறுதான் எனில் ஆரோக்கியமான கருத்தாடல்களை இது உருவாக்காமல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் ஆபத்தும் சந்தர்ப்பங்களும் உள்ளன. 

புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி
 
நிழலி,

நிச்சயம் உங்கள் கரிசனையை கவனத்தில் எடுக்கிறேன்.

எனது அணுகுமுறை பற்றி யாழில் உங்களை விட அதிகம் தெரிந்தவர் இருக்க முடியாது. ஒரு விடயத்தை முகத்துக்கு நேரே சொல்லிவிடும் தன்மை என்னுடையது.

நக்கலை கூட உங்களை நக்கல் அடிக்கிறேன் என சொல்லிவிட்டு செய்வதுதான் வழக்கம். 

முன்னொரு முறை செல்வநாயகம் தெலுங்கர் என ஒரு திரி திறந்தது நினைவிருக்கலாம். அதை நான் சிரிப்பு பகுதியில் திறக்கவில்லை (அதில் இதை விட பல நகைசுவைகள் நடந்தது வேறு). ஆனால் அந்த திரியிலும் அதற்கு சமாந்தரமான திரியிலும்  அதை என்ன காரணமாக திறந்தேன், யாரால் முன்வைக்க பட்ட எந்த தியரியை குறிவைக்கிறேன் என விபரமாக எழுதியே திறந்தேன்.

காரணம் அந்த தியரி எனது இனத்துக்கு படுபாதகத்தை விழைவிப்பதை உணர்ந்திருந்தேன்.

இந்த திரி அப்படியல்ல.

வெளிபடையாகவே எழுதுகிறேன். நீங்கள் நாதமுனியை சொல்வதாக இருந்தால் இது அவர் உட்பட யாரையும் குறி வைக்கும் திரி அல்ல. அவர் நானறிய “கறி” தமிழர் உணவு என்றார். நானும் ஓம் கறி எமது சொல்தான் அதை யாரும் பறிக்கவில்லை. பதற வேண்டியதில்லை என்றேன். 

அதே போல் இப்போ இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் பட்டீசை ஐரோப்பியர் தந்தார்கள் என்றார். நான் அதை மறுக்கவில்லை. நான் அதை தேடிபார்க்கவில்லை ஆனால் அப்படி இருக்க அதிகம் வாய்பிருக்கிறது ஆகவே அதை ஏற்று கொண்டே, பகிடியாக அப்போ இந்தோனேசியாவில் தண்ணீரை அரபிகள் அறிமுக படுத்தினரா? என்று ஒரு ரொம்ப “புளிச்ச” ஒரு ஜோக்கை அடித்து விட்டு நகர்ந்தேன்.

இவை தவிர நாதம் கடல் ஆமை நகர்வு, குமரி கண்டம் என பல கற்பனை வரலாற்று புனைவுகளை காவி வரும் போதெல்லாம் நேரம் மினெகெட்டு அந்த திரிகளிலேயே அவற்றை தர்க ரீதியாக மறுத்து எழுதியுள்ளேன். தனியே திரி திறக்கவில்லை.

இது அவரோடு மட்டும் அல்ல மருதர், கடஞ்சா, குசா அண்ணை இன்னும் பலரோடும் அடிகடி நடக்கும் விசயம்தான்.

இதே போல் நாதத்தின் சீமான் பற்றிய அணுகுமுறை மீதும் அது ஒரு hidden agenda வோடு நடக்கிறது என்ற சந்தேகம் கிட்டதட்ட என் மனதில் இப்போ உறுதியாகவே ஆகி விட்டது

இதையும் பலதடவை அவரிடம் நேரிலே கூறியுள்ளேன். 

இவைதான் நானும் நாதமும் முரண்படும் இடங்கள்.

ஆனால் இவை தவிர நாதம் உணவின் பெயர்களை வைத்து “ஆராய்சி” ஏதும் செய்ததாக எனக்கு நினைவில் இல்லை.

இந்த திரி வாட்சப், யூடியூப் எங்கினும் நிறைந்து கிடக்கும் click bait ஆய்வாளர்களை மனதில் வைத்தே எழுந்தது.

அப்படியான வீடியோக்களை யாழுக்கு காவி வருவபர்களில் ஒருவர் என்பதை தவிர நாதத்துக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

அவர் மட்டும் அல்ல பலரும் இப்படியான வீடியோக்களை இணைப்பவர்கள் உள்ளார்கள். அவர்கள் எல்லாரும் தம்மை குறிவைத்தே கோஷான் எழுதுகிறார் என எண்ணுகிறார்களோ தெரியாது.

இந்த பதிவுகளில் எதிலும் நாதம் தாக்கபட்டதாக ஒரு வரி கூட இல்லை.

தான் தாக்கபட்டதாக அவரோ அல்லது வேறு யாருமோ உணர்ந்தால் பிழை அவர்கள் பார்வையில் அன்றி என் எழுத்தில் இல்லை.

உதாரணமாக மேலே ஊத்தப்பத்தை தெலுங்கர்கள் திருடியது திராவிட ஷதி என எழுதினே. அது நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தியை மனதில் வைத்து எழுதியது. ஏன்றால் அவர்தான் எதையும் திராவிட ஷதி என எழுந்தமான கூறுபவர்.

ஆனால் இதை வாசிக்கும் யாழின் நாம்தமிழர் ஆதரவாளர் அனைவரும் கோஷான் என்னைதான் குத்துறார் என்று நினைத்தால், நான் என்ன செய்ய முடியும்?

இவ்வளவற்றையும் எழுதிய பின்,

நான் நகைசுவையாக எழுதுவது வாசிப்பவர்கள் வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்பதனால் மட்டுமே.

தவறான புரிதலினாலே ஆயினும், ஒருவரை சங்கடபடுத்தி நானும் மற்றையவரும் சிரிப்பது மனித இயல்பாக எனக்கு படவில்லை.

ஆகவே வாசர்களோடு இன்னும் அதிக தூரம் பயணிக்கலாம் என நான் எண்ணி அழைத்து வந்த உடான்ஸ் சிங்கையும், கூன் பிள்ளை காரனையும், மார்கோபோலோவையும், பூரித்துவையும், நூல்-உள் ஐயும், பிசியப்பத்தையும் பரணில் ஏற கட்டி வைக்கும் முடிவை எடுக்கிறேன்.

ஏனென்றால் எழுதுவது என்றால் சுந்திரமாக எழுத வேண்டும். அவர் நோவாரோ, இவர் அழுவாரோ என்று பார்த்து பார்த்து எழுத முடியாது.

தமிழனின் ஊர் அப்பம் பறிபோன வரலாற்றை எழுதாமல் போவது கொஞ்சம் கவலைதான் 🤣. பரவாயில்லை.

🙏🏾

பிகு: வரவேற்பிற்கு நன்றி

32 minutes ago, MEERA said:

இரண்டு நாட்களின் பின்னர் நிர்வாகத்தினருக்கு புரிந்துள்ளது.🤪

தவறான புரிதல் மீரா. மேலே பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

வணக்கம் கோஷான்,

மீள் வருகைக்கு நன்றி.

நீங்கள் இந்த திரியை நகைச்சுவைப் பகுதியில் இணைத்து இருப்பினும், இது வெறுமனே நகைச்சுவைக்காக மட்டுமே திறக்கப்பட்ட திரியாக தெரியவில்லை. கள உறவு ஒருவரை அவரது கருத்துகளை நையாண்டி பண்ணுவதற்காக திறக்கப்பட்ட திரியோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

ஊர் பெயரை / நபர்களின் பெயரை / உணவின் பெயரை ஒரு ஆவணமாக கருதி அதனூடாக தகுந்த ஆதாரங்கள் ஆய்வுகள் எதுவும் இன்றி வரலாற்றை எழுத / அறிய முற்படும் தவறான போக்கை நீங்கள் நையாண்டி செய்ய முனைந்தாலும் இன்னொரு வளத்தில் அது தனிப்பட ஒருவரை தாக்குவது போன்றும் தோன்றுகின்றது. இத் திரி அவ்வாறுதான் எனில் ஆரோக்கியமான கருத்தாடல்களை இது உருவாக்காமல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் ஆபத்தும் சந்தர்ப்பங்களும் உள்ளன. 

புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி
 
நன்றி நிழலி.

எனது பெயரை நேரடியாக குறிப்பிடுகிறார். 

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஒருமுறை பாராளுமன்றத்தில் பேசினார். ஆசிரியராக இருந்த 
அவர், மாணவரிடம், மாட்டினை பற்றி எழுது என்றால், மாட்டினை கொண்டுபோய் மரத்தில் கட்டி விட்டு, மரத்தினை பற்றி எழுதின கதையாக இருக்குது, கவுரவ உறுப்பினர் கதை என்று.

நீங்கள் என்னவோ சொல்லுகிறீர்கள். அவரோ.... சீமான் அது, இது என்று உளறுகிறார்.

பத்து வருட காலம் இங்கே களமாடுகிறேன். ஒரே போதுமே எல்லை மீறுவதில்லை. இந்த மனிதருடன் விவாதித்த போது, எச்சரிக்கை புள்ளி பெற வேண்டிய நிலை வந்தது.

தனதுகையொப்பத்தின் கிழே, நையாண்டியை பெருமிதப்படுத்தும் மாண்பு கொண்ட களஉறவு. அதனால் அதனை விட முடியாமல் தவிக்கிறார். 

ஒருவர் கருத்துக்கு மறு கருத்து ஆதரத்துடனே வைக்கப்பட வேண்டுமே அன்றி, நையாண்டி கருத்து அல்ல. என்னை குறித்து எதுவும் எழுதட்டும், கவலை இல்லை.

அந்த நையாண்டிக்காக, தனி திரி திறந்து, தமிழர் உணவு கலாச்சாரத்தினை கேவலப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது என்பதே கவலை.

நீண்ட நாட்களுக்கு பின்னர் வருகிறார் என்றால், பழைய கறலுடன் வருவதை என்ன சொல்வது.

குறை ஒன்றும் இல்லை. இவர்களுடன் இனியும் குதியம் போட எனக்கு நேரம் தான் இல்லை. ஆகவே, கடந்து போகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

வணக்கம் நாதம்,

நீங்கள் கடந்து போனாலும் குதித்து போனாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை.

ஊரில் உள்ளவன் செய்யும் நையாண்டி எல்லாம் என்னைதான் என்று மனபிரமையில் உழல்பவர்களுக்கா நான் பதில் எழுதவில்லை.

நிழலி கேட்டு கொண்டதற்கான பதிலே மேலே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நீர் ஆவியாதை பார்த்து நீராவி எந்திரத்தை கண்டுபிடித்தான் ஜரோப்பியன்.. நாங்க அதே ஆவியில புட்டு இடிஆப்பம் அவிக்கிரதை கண்டுபிடித்தோம்... மாவை குழைச்சு பிறகு அதை புட்டு புட்டு வைக்கிரதாலை புட்டு எண்டு பேர் வந்திருக்கும் போல.. ஆனால் இடியப்பம் தா புரியல.. நல்ல இடி இடிக்கிற நேரம் மனிசி மண்டைய உடைக்க யாராவதுமாவை அப்பி வச்சிருந்திருப்பாங்கள் போல.. அதை கண்டு புடிச்ச மனிசிக்காரி மாக்கட்டிய எடுத்து கோபத்தில நார் நாரா புழிஞ்சிருப்பாங்க போல.. அதான் பின்னாளில் இடிஅப்பம் ஆகி இருக்கும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீர் ஆவியாதை பார்த்து நீராவி எந்திரத்தை கண்டுபிடித்தான் ஜரோப்பியன்.. நாங்க அதே ஆவியில புட்டு இடிஆப்பம் அவிக்கிரதை கண்டுபிடித்தோம்... மாவை குழைச்சு பிறகு அதை புட்டு புட்டு வைக்கிரதாலை புட்டு எண்டு பேர் வந்திருக்கும் போல.. ஆனால் இடியப்பம் தா புரியல.. நல்ல இடி இடிக்கிற நேரம் மனிசி மண்டைய உடைக்க யாராவதுமாவை அப்பி வச்சிருந்திருப்பாங்கள் போல.. அதை கண்டு புடிச்ச மனிசிக்காரி மாக்கட்டிய எடுத்து கோபத்தில நார் நாரா புழிஞ்சிருப்பாங்க போல.. அதான் பின்னாளில் இடிஅப்பம் ஆகி இருக்கும்..

இவர் அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறார் என்பதால்.....
அண்ணலுக்கு மேலைத்தேயவர்களின் உணவு முறைகள் தெரியவில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.