Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

  • Replies 213
  • Views 21.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ராசவன்னியன் said:

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

வலி இருந்தால்தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று பொருள்......ஆகவே வலியை ரசியுங்கள்.....வலி இருக்கும்போது இந்தப் பொன்மொழியை நினைவில் கொள்ளவும் .......!

இது அனுபவம் : பல்வலிக்கு கொடுப்புக்குள் ஊசி போட்ட போது பரமண்டலத்தில் பிதா தெரிந்தார்.......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

எனக்கு கொரோனா வந்தமையால் இரண்டாவது டோஸ் தான் போட்டேன். இன்று 2கிழமை. எனக்கு 5 நாட்கள் வரை கைவலியும் 2காச்சலும் இருந்தது. கைவலிக்கு ஐஸ் bag தான் நிவாரணி. 😊

  • கருத்துக்கள உறவுகள்

பைசர் ரெண்டாவது டோஸ் நேற்று மாலை போட்டதிலிருந்து காலை முதல் கையில் வலி மற்றும் காய்ச்சல் வாட்டுகிறது.  நெத்தி கண்களுக்கு மேல் ஒரே சூடு அழுத்துகிறது.

முதல் டோஸ் போட்டபோது கையில் வலி மட்டும் இரண்டு நாட்கள் இருந்தது.

நாளை வார முதல் நாள், அலுவலகம் செல்ல வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

பைசர் ரெண்டாவது டோஸ் நேற்று மாலை போட்டதிலிருந்து காலை முதல் கையில் வலி மற்றும் காய்ச்சல் வாட்டுகிறது.  நெத்தி கண்களுக்கு மேல் ஒரே சூடு அழுத்துகிறது.

முதல் டோஸ் போட்டபோது கையில் வலி மட்டும் இரண்டு நாட்கள் இருந்தது.

நாளை வார முதல் நாள், அலுவலகம் செல்ல வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Ibuprofen 600 மில்லி எடுக்குமாறு மருத்துவர் சொன்னார். வலி நிவாரணி எடுங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கொரானா என்றால் என்ன..??!

https://www.bbc.co.uk/news/uk-58380099

What is long Covid? Advice in five South Asian languages.

https://www.bbc.co.uk/news/uk-58380099

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, ராசவன்னியன் said:

பைசர் ரெண்டாவது டோஸ் நேற்று மாலை போட்டதிலிருந்து காலை முதல் கையில் வலி மற்றும் காய்ச்சல் வாட்டுகிறது.  நெத்தி கண்களுக்கு மேல் ஒரே சூடு அழுத்துகிறது.

முதல் டோஸ் போட்டபோது கையில் வலி மட்டும் இரண்டு நாட்கள் இருந்தது.

நாளை வார முதல் நாள், அலுவலகம் செல்ல வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

நான் இரண்டு ஊசியும் போட்டுட்டன். எனக்கு என்ரை டாக்குத்தர் பரசிட்டமோல் போடச்சொல்லி சொன்னவர். என்ரை டாக்குத்தரிட்டை கொரோனா ஊசி போட்ட ஆக்களுக்கு வலி வேதனையள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 11:55, ராசவன்னியன் said:

சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

யாழ். களத்திலேயே... அதிக  கொரோன தடுப்பூசி போட்டவராக, ராஜவன்னியன் உள்ளார்.
அதாவது இரண்டு  சினோபாம், இரண்டு பைசர் போட்டு, நான்கு ஊசிகளை ஏற்றியுள்ளார்.

எனது மகளுடன் படிக்கும் ஒரு சீன மாணவியும், சினோபாம் ஊசி போட்டதை,
பல இடங்களில் ஏற்றுக் கொள்ளாததால், பல சிரமங்களை எதிர் நோக்கியதால்..
பின்பு இரண்டு... மொடெர்னா ஊசி போட்டு கொண்டவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

Ibuprofen 600 மில்லி எடுக்குமாறு மருத்துவர் சொன்னார். வலி நிவாரணி எடுங்கள். 

நன்றி.

நேற்றிரவே பாரசிடமால் குளிசையை விழுங்கிவிட்டு தூங்கினேன்.

காலையில் கை வலியும் காய்ச்சலும் நின்றுவிட்டது. இன்று அலுவலகம் சென்று பாலைவனத்திற்குள்ளும் சென்றுவிட்டு இப்பொழுதான் வீடு வந்தேன்.

18 hours ago, குமாரசாமி said:

நான் இரண்டு ஊசியும் போட்டுட்டன். எனக்கு என்ரை டாக்குத்தர் பரசிட்டமோல் போடச்சொல்லி சொன்னவர். என்ரை டாக்குத்தரிட்டை கொரோனா ஊசி போட்ட ஆக்களுக்கு வலி வேதனையள் இல்லை.

இந்த தடுப்பூசி பக்க விளைவுகள், ஆளுக்கு ஆள் உடம்பின் எதிர்வினைக்கேற்ப மாறுபடுகிறது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்திலேயே... அதிக  கொரோன தடுப்பூசி போட்டவராக, ராஜவன்னியன் உள்ளார்.
அதாவது இரண்டு  சினோபாம், இரண்டு பைசர் போட்டு, நான்கு ஊசிகளை ஏற்றியுள்ளார்.

எனது மகளுடன் படிக்கும் ஒரு சீன மாணவியும், சினோபாம் ஊசி போட்டதை,
பல இடங்களில் ஏற்றுக் கொள்ளாததால், பல சிரமங்களை எதிர் நோக்கியதால்..
பின்பு இரண்டு... மொடெர்னா ஊசி போட்டு கொண்டவர்.  

உண்மைதான் சிறீ.

ஜூரிட்சில் உணவகத்திற்குள் வெள்ளைகளாக அனைவரும் இருக்கையில், நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் தடுப்பூசி சான்றிதழைக் கேட்டு, நாங்கள் சினோபாம்+1 டோஸ் பைசர் சான்றிதழை காண்பித்ததை ஏற்க மறுத்தது நெருடலாக இருந்தது.

அப்படிப்பட்டவர்கள், சுவிஸ் விசாவிற்கு 'பைசர்' மட்டுமே அனுமதி என தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கும்போது சொல்லியிருந்தால் எங்களுக்கு இந்த மனக் கஸ்டம் வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நான் இரண்டு ஊசியும் போட்டுட்டன். எனக்கு என்ரை டாக்குத்தர் பரசிட்டமோல் போடச்சொல்லி சொன்னவர். என்ரை டாக்குத்தரிட்டை கொரோனா ஊசி போட்ட ஆக்களுக்கு வலி வேதனையள் இல்லை.

அண்ணை அப்ப அது ஊசியா உப்புத் தண்ணியா என்று சந்தேகமா இருக்கு!🙃

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 11:55, ராசவன்னியன் said:

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

பாவம் நீங்கள் வன்னியரே! உங்களுக்கு ஐரோப்பியரின் வைத்தியம்பற்றி அதிகம் தெரியாது என்று நினைக்கிறேன், ஆசிய மற்றும் ஆபிரிக்கர்களில் தங்கள் வைத்தியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதில் அவர்கள் விண்ணர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

உண்மைதான் சிறீ.

ஜூரிட்சில் உணவகத்திற்குள் வெள்ளைகளாக அனைவரும் இருக்கையில், நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் தடுப்பூசி சான்றிதழைக் கேட்டு, நாங்கள் சினோபாம்+1 டோஸ் பைசர் சான்றிதழை காண்பித்ததை ஏற்க மறுத்தது நெருடலாக இருந்தது.

அப்படிப்பட்டவர்கள், சுவிஸ் விசாவிற்கு 'பைசர்' மட்டுமே அனுமதி என தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கும்போது சொல்லியிருந்தால் எங்களுக்கு இந்த மனக் கஸ்டம் வந்திருக்காது.

நீங்கள் யாழ் களத்தின் கருத்தாடல் தலைப்புக்கள் சிலவற்றை தவறவிட்டுவீட்டிருக்கிறீர்கள். இங்கு இலங்கையில் சினோபாம் போடப்படுகிறது என்ற செய்தியில் பல தகவல்கள் பகரப்பட்டன. அதில்.. ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய நாடுகள்.. சினோபாமை ஏற்காதது பற்றியும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

ஆனால்.. உங்கள் ஆதங்கப்படி.. சுவிஸ் விசாப்பிரிவு.. குறிப்பிட்ட வகை வக்சீன்கள் தான் அங்கீகரிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தால்.. உங்களின் இந்த அவல நிலை தோன்றி இருக்காது. 

பைசர் போட்ட பின் இரண்டு மூன்று நாட்கள் காய்ச்சல்.. உடல்நோ.. தலைவலி.. மந்தநிலை.. வயிற்றுப்போக்கு இருக்கலாம். தொடர்ச்சியாக அன்றி விட்டுவிட்டு இந்த அறிகுறிகள் இருக்கும். தொடர் காய்ச்சல் இருந்தால்.. பரசிற்றமோல்.. எடுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அது ஊசியா உப்புத் தண்ணியா என்று சந்தேகமா இருக்கு!

🤣இந்த உப்பு தண்ணீரை யேர்மனியில் குத்திவிட்டதிற்கே சாந்தி அக்காவிற்கு 5 நாள் கைவலியும் 2 நாள் காச்சலும் வந்து இருக்கிறதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஏராளன் said:

அண்ணை அப்ப அது ஊசியா உப்புத் தண்ணியா என்று சந்தேகமா இருக்கு!🙃

கொரோனாவை பத்தின உண்மை விசயங்கள் ஜேர்மன்காரனுக்கு நல்லாய் தெரியும் எண்டு நினைக்கிறன்.ஜேர்மன்லை கன பெரிய பிரபலங்கள் இன்னும் தடுப்பூசி போடேல்லை எண்டது பரம ரகசியம் கண்டியளோ...... இந்த வருத்தத்திலை எதோ ஒரு சூட்சுமம் இருக்கு.அது ஒரு காலமும் வெளியிலை வராது.ஆனால் கொரோனா எண்டொரு வருத்தம் இருக்கு 😷

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என்னண்ணை எஸ்.ஜே.சூர்யா போல இருக்கு ஆனால் இல்லை என்று சொல்கிறீர்கள்.🤔

உங்கட நாட்டில தானே ஒரு தாதி உப்புத் தண்ணிய ஏற்றி விட்டவ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣இந்த உப்பு தண்ணீரை யேர்மனியில் குத்திவிட்டதிற்கே சாந்தி அக்காவிற்கு 5 நாள் கைவலியும் 2 நாள் காச்சலும் வந்து இருக்கிறதே

உப்புத்தண்ணீர் தானோ ?😊

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தின் வெள்ளியன்று வேலையிடத்தில் நின்றபோது உடல்நிலை கொஞ்சம் அசதியாக இருந்தது. எமது பிரிவுக்கான மேலாளரிடம் போய் வீட்டிற்கு போவதாகச் சொன்னேன். முதலில் போய் ஒரு விரைவுச்சோதனையை செய்துபார்க்குமாறு அவர் சொன்னார். செய்தால் எதிர்மறையென்று காட்டியது. ஏற்கனவே பலருக்குக் கொறோனா வந்துவிட்டதாக அப்போதுதான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேறுபிரிவுகளில் வேலைசெய்பவர்கள். தொற்றாளரில் ஒருவர் எமது பிரிவுக்கும் தேவைகளின் பொருட்டு வருவதுண்டு. நானும் 10:00மணியோடு வேலைமுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். திங்கள் எப்போதுவருமென்று பார்த்திருந்து போய் பரிசோதித்தால் நேர்மறையென்றதும் வேறொருநிலையத்திற்குப் போய் பீசீஆர் எடுக்குமாறு கூறினார்கள். அங்கு இரண்டிற்குமான பரிசோதனை அங்கும் தொற்றென்றே காட்டியதோடு, பீசீஆர் முடிவுகளுக்கு 48மணிநேரத்தின் அழைத்தோ அல்லது இணையத்திலோ அறியாலாமென விவரங்களைத் தந்தார்கள். தாம் சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிப்பதாகவும், அவர்கள் தொடர்புகொள்வார்களென்றும் கூறினார்கள். ஆனால் 10நாட்களின் பின்னரே சிலதரவுகளைப் பெற்றார்கள். 11ஆம் நாள் மீண்டும் இரண்டு சோதனைகளையும் செய்து பார்த்தால் நேர்மறை. மீண்டும் 14நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கூறியுள்ளார்கள். தொடர்கிறது.... எனக்கு இரண்டாவது ஊசிபோட்டு 4மாதங்களின் பின்னர் தொற்று ஏற்பட்டுள்ளது. 
1.    வெள்ளி சோதனை எதிர்மறை 
2.    திங்கள் சோதனை நேர்மறை
3.    9ஆம் நாள் வீட்டில் பார்த்தபோது எதிர்மறை
4.    11ஆம் நாள் சோதனையில்(2) நேர்மறை
5.    11ஆம் வீட்டில் பார்த்தபோது எதிர்மறைளூ அப்படியென்றால் இந்த விரைவுப் பரசோதனைக் கருவிகள் தரமற்றைவையயா? அல்லது எல்லாமே வர்த்தகமா?என்ற வினாவும் எழுகிறது. 

ராசுக்குட்டியையும் கூகுள் ஆண்டவரையும் வாசித்து சிரித்துவிட்டுப் படுத்தா அன்றிரவு எனக்கு தீடீரென இடுப்புவலி மூச்செடுக்கவே முடியவில்லை. அவசரசிகிச்சைக்குக்  கொண்டுசென்றார்கள். அடுத்தநாள் காலை 7மணிக்கு ஓபே என்றார்கள். என்னவென்று பார்த்தால் சிறுநீரகக்கல். யூனில் அதைப்பற்றி எழுத நினைத்து எழுதமுடியவில்லை. 

இதையெழுதியதன் நோக்கம் இது ஒருவேளைபலருக்கும் பயன்படலாம் இதுபோன்ற அனுபவங்களை யாராவது களஉறவுகள் சந்தித்தீர்களா? அல்லது கேள்விப்பட்டீர்களா? என்றும் அறியவிரும்புகின்றேன். 

முன்றாவது தரமும் நேர்மறையாயின் என்று அடுத்த11ஆம் நாள் சோதிக்கப் போகவே பயமாக இருக்கிறது.   
மேலேயுள்ள பரிசோதனை தொடர்பாக மருத்துவத்துறை சார்ந்தோரும் உங்கள் ஆலோசனைகளையும் எழுதுவீர்களென எதிர்பார்க்கின்றேன். 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

நொச்சி, நலமாக மீண்டது மகிழ்ச்சி. 

எனக்கு புரிந்த வரையில்: நீங்கள் வீட்டில் எடுத்துக் கொண்டது rapid antigen test அல்லது lateral flow test எனப்படும் துரித பரிசோதனை. வெளியே சென்று செய்து கொண்டது பி.சி.ஆர் (PCR) பரிசோதனைகள். சரியா?

அடிப்படையில் LFT test இன் நோயைக் கண்டறியும் உணர்திறன் (sensitivity) பி.சி.ஆர் இனை விடக் குறைவு. இது பயன்படும் ரெஸ்ற் கிற் வகையைப் பொறுத்து 38% முதல் 100% வரை இருக்கலாம். இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு தரமற்ற கிற்றை 100 கொரனா தொற்றுள்ளோரில் பாவித்தால், அவர்களுள் 38 பேரை மட்டுமே  தொற்றுள்ளோராக அந்த கிற் அடையாளம் காட்டும்.

இதனால் தான், அனேக நாடுகளில் LFT test செய்து கொண்டோர்- நோய்க்குறிகள் இருந்தால்- பி.சி.ஆர் மூலம் தொற்றை/தொற்றின்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

மேலதிக தகவல்: https://pubmed.ncbi.nlm.nih.gov/34407759/ 

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

யஸ்ரின் அவர்களுக்கு நேரமொதுக்கி பதில் எழுதியமைக்கு நன்றி.

நான் முதலில்(வெள்ளி)செய்தது Rapid Antigen Test Negativ. திங்கள் Rapid Antigen Test. Positiv என்று காட்டியதால் PCR எடுத்து Positiv. 9ஆம் நாள் வீட்டில் Rapid Antigen Test Negativ.11ஆம் இரண்டிலும் Positiv. ஒரு சிலரது தகவலின்படி 14நாட்களிலேயே அவர்களுக்கு சுகமாகியுள்ளது. இப்படி வருவதில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையா? அல்லது இப்படித் தொடர்ச்சியாகப் Positiv வாக வரும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதை அறிய முடியாதுள்ளது. நான் PCR எடுத்து ஒரு மணிநேரத்தில் வீட்டில் பரிசோதிக்க அது Negativ என்று காட்டியது. அப்படியாயின் இந்த Test Kit பிழையானதா?

நன்றி

Edited by nochchi
Test Kitபடமிணைக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

யஸ்ரின் அவர்களுக்கு நேரமொதுக்கி பதில் எழுதியமைக்கு நன்றி.

நான் முதலில்(வெள்ளி)செய்தது Rapid Antigen Test Negativ. திங்கள் Rapid Antigen Test. Positiv என்று காட்டியதால் PCR எடுத்து Positiv. 9ஆம் நாள் வீட்டில் Rapid Antigen Test Negativ.11ஆம் இரண்டிலும் Positiv. ஒரு சிலரது தகவலின்படி 14நாட்களிலேயே அவர்களுக்கு சுகமாகியுள்ளது. இப்படி வருவதில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையா? அல்லது இப்படித் தொடர்ச்சியாகப் Positiv வாக வரும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதை அறிய முடியாதுள்ளது. நான் PCR எடுத்து ஒரு மணிநேரத்தில் வீட்டில் பரிசோதிக்க அது Negativ என்று காட்டியது. அப்படியாயின் இந்த Test Kit பிழையானதா?

நன்றி

நொச்சி, மேலதிக தகவல்கள் நிலையை விளங்கிக் கொள்ள உதவியாக இருக்கின்றன.

கோவிட் நோயின் குறிகள் மறைந்த பின்னரும் சில நாட்களுக்கு கொரனா வைரஸ் சோதனை பொசிரிவாக வருவது சாதாரணமானது. இதன் காரணம், பல்கிப் பெருகாத, அழிக்கப் பட்ட வைரசின் பாகங்களைத் தான் இந்த இரு பரிசோதனைகளும் கண்டறிகின்றன. அனேகமாக பி.சி.ஆர், நோய் போன பின்னும் சில வாரங்கள் பொசிரிவாகக் காட்டும்  (வைரசின் ஆர்.என்.ஏ தொண்டையில் இருப்பதால்). அன்டிஜென் பரிசோதனை பொசிரிவாக காட்டும் வாய்ப்புகள் மிகவும் குறைவு (ஏனெனில் வைரசின் புரதம்  வைரஸ் பெருகும் போது தான் அதிகமாக இருக்கும்). 

நான் கருதுவது: மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பயன்படுத்தும் அன்டிஜென் கிற்றை மாற்றுங்கள். அல்லது அன்டிஜென் சோதனையை முற்றாகக் கைவிட்டு பி.சி.ஆர் மட்டும் பாவிக்க முடியுமா என்றும் கேளுங்கள். ஆனால், பி.சி.ஆர் சில வாரங்களுக்கு பொசிரிவாக வந்தாலும் நோய்க்குறிகள் இல்லாவிட்டால் கவலை கொள்ள வேண்டியதில்லை என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

யஸ்ரின் அவர்களுக்கு நேரமொதுக்கித் தகவலகளை எழுதியமைக்கு நன்றி. அடுத்த பரிசோதனை எப்படி வருகிறது பார்போம். இங்கு(யேர்மனியில்) எனது அனுபவத்தில் கொறொனா நேர்மறையாக இருந்தால் 11ஆம் நாள்பரிசோதிக்கும்போது எதிர்மறையாக இருந்தால் மட்டுமே 14ஆம் நாளின்பின் வெளியே நடமாடமுடியும்.

நன்றி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று மூன்றாவது ஊசி  போட்டுக்கொண்டேன். முதல் இரண்டும் பைசர் பயோன்ரெக்.இன்று  மொடேர்னா.
கொஞ்சம் காய்சல் தன்மையோடு உடல் குளிர்கின்றது. பரசிட்டமோல் போட்டும் சொல்லு கேக்குதில்லை.

அடுத்த ஊசி ஏதும் இருக்கோ எண்டு டாக்குதரிட்டை கேட்டன். சில நேரம் ஆறு மாதத்தாலை எண்டார்......

குத்துங்க எஜமான் குத்துங்க......

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

இன்று மூன்றாவது ஊசி  போட்டுக்கொண்டேன். முதல் இரண்டும் பைசர் பயோன்ரெக்.இன்று  மொடேர்னா.
கொஞ்சம் காய்சல் தன்மையோடு உடல் குளிர்கின்றது. பரசிட்டமோல் போட்டும் சொல்லு கேக்குதில்லை.

அடுத்த ஊசி ஏதும் இருக்கோ எண்டு டாக்குதரிட்டை கேட்டன். சில நேரம் ஆறு மாதத்தாலை எண்டார்......

குத்துங்க எஜமான் குத்துங்க......

மூண்டாவது ஊசிக்கு காச்சல் வராட்டித்தான் யோசிக்கனும்.. காய்ச்சல் வர்ர படியால் உடம்பில் முதல் ரெண்டு ஊசியால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கு உங்களுக்கு.. அப்பா அம்மாவும் மூண்டாவது ஊசிபோட்டவை.. அம்மா டயபிற்றிக் பேசண்ட்.. அவருக்கு பெரிதாக காய்ச்சல் வரவில்லை.. சாதாரண உடம்பு அசதியுடன் போய்விட்டது.. நோய் எதிர்ப்பு சக்தி சலரோகம் காரணமாக ரெண்டு ஊசிபோட்டும் கம்மியாகத்தான் இருக்கு எண்டு நினைக்கிறன்.. ஆனால் அப்பாவுக்கு எந்த நீண்டகால நோய்களும் இல்லை.. அவருக்கு மூண்டுநாள் காய்ச்சல் போட்டு உலைச்சு விட்டுது மூண்டாவது ஊசிக்கு.. சோ உங்களுக்கு கொரோனாவுக்கு எதிரா நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது மகிழ்ச்சியான விடமே..

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.. சொல்ல மறந்து போனன்.

அக்டோபர் கடைசில 3ம் ஊசி போட்டனான். நவம்பர் 19 மகனுக்கு கொரொனா. 21 மனைவிக்கும்( அவ ரெண்டு டோஸ்).

நான்தான் முழு பராமரிப்பும். ஒவ்வொரு நாளும் lateral test. இரெண்டு கிழமையில் 3 PCR.  அவர்களுடன் முழுவதும் நாட்களை செலவிட்டும் ,தொத்தவில்லை.

ஆனால் உடல் நோ, சுவை இழப்பு வந்து போனது.

3ம் டோஸ் இல்லாட்டில் மனைவி போல கஸ்டப்பட்டிருப்பேன் என்றே நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.